விடுதலைப் புலிகள் தொடர்பான சுமந்திரனின் கருத்திற்கு சம்பந்தன் பகிரங்க ஆதரவு

விடுதலைப் புலிகள் தொடர்பான சுமந்திரனின் கருத்திற்கு சம்பந்தன் பகிரங்க ஆதரவு

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின் போது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Image result for R Sampanthan MP
திரு இரா சம்பந்தன்

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்லின, பல்கலாச்சார, பன்மைத்துவ சமூகமொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக கணிசமானளவு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் ஆர்.பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, பிரதமமந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பெருமளவு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.செவ்வியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும் நடைமுறையை குழப்புவதாகும். எனவே அத்தகைய தீயமுயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி 70 ஆண்டுகளுக்கு மேலாகநீடிக்கும் தமிழ் அரசியல் போராட்டம் போன்ற சமத்துவத்திற்கும் நீதிக்குமான ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றின் போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் போராட்டம் தொடங்கியபோது அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது. ஜனநாயக வழியிலானதும் சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டுகாலப் பகுதியின் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 70களின் பிற்பகுதியிலும் 80களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் மூன்று தசாப்தங்களின் போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வுகாணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது.

அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வீ.செல்வநாயகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது. 2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

நீதிமற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சிலவிடயங்கள் மீது அவர் தனதுசொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

நீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வொன்றின் மூலம் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் அடிப்படையில் தேசியப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கும் அதன் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றமும் செழிப்பும் ஏற்படமுடியும்.

அத்தகைய தீய முயற்சிகளினால் தவறாக வழி நடத்தப்பட வேண்டாமெனவும் பெரும் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றைக் காணும் முயற்சியின் மீது கவனத்தைச் செலுத்துமாறு சிங்களவர், தமிழர் மற்றும் ஏனைய அனைத்து இனத்தவர்கள் ஆகிய அனைத்து மக்களையும் தாம் கேட்டுக்கொள்வதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடாத விடயங்கள்மீது முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக, இத்தகையதொரு நிலைப்பாட்டின் பின்னால் ஒன்றுபட்டு நிற்பதிலேயே நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமானதொரு தீர்வினை அடைவதற்கான எமது வலிமை தங்கியுள்ளது என்பதை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பலதசாப்தங்களாக தமிழ் மக்கள் பலவழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு ஆளாகியிருந்தனர்.

ஒருபெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளனர். தமக்கு நிகழ்ந்தவற்றைத் தமிழ் மக்கள் தவிர்க்கமுடியாதவாறு வேதனையோடு நினைவுகூர்வர்.எனினும் முக்கிய பிரச்சினை தொடர்பிலான அவர்களது சிந்தனையோட்டத்தை அது சிதறடித்துவிடக்கூடாது. தேசியப் பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வுமாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும், நிம்மதியையும் முழு நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் நிரந்தரசமாதானத்தையும் செழிப்பையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

———————————————————————————————————————

சம்பந்தனின் தீர்ப்பு

கடந்த ஒரு வார காலத்துக்கு மேல் தமிழர் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சுமந்திரனின் சிங்கள மொழி மூல செவ்வி குறித்து தமது கருத்தையும் முடிவையும் வெளிப்பட அறிவித்து,

அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தி ருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தமது அறிக்கை ஊடாக சிலவிடயங்களை சம்பந்தன் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்திருக்கின்றார். அவை புதிய சர்ச்சைக்களுக்கு வழிப்படுத்தப் போகின்ற னவா அல்லது புதிய சர்ச்சைகள் ஏற்படாமல் அவற்றை அடக்கப் போகின்றனவா என்பதே கேள்வி. சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்துக்குப் பின்னால் புதைந்து கிடந்த இலக்கையும் நோக்கையும் புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் சம்பந்தனின் தீர்ப்பு.

அது எத்தனை தரப்புகளுக்கு ஏற்புடையது என்பது தெரிய வில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நாட்டில் நீதி, சமத் துவம், சுயமரியாதை மற்றும் கெளரவம் ஆகியவற்றின் அடிப் படையிலான தீர்வொன்றின் மூலம் தேசியப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேணவா; அபிலாசை, எதிர்பார்ப்பு எல்லாமுமே என்கிறார் சம்பந்தன்.

அப்படி ஒரு தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே தமிழர்கள் உட்பட இந்தத் தீவின் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றமும் செழிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும் என்ற சம்பந்த னின் முடிவு – தீர்மானம் – தீர்க்கதரிசனம் – அவரின் நீண்ட அரசியல் பட்டறிவின் வெளிப்பாடு அல்லது பிரதிபலிப்பு. அத்தகைய தீர்வை எட்டுவதற்கு இந்தச் சமயத்தில் தமிழர் தரப்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந் தச் சர்ச்சைக்குரிய தீர்ப்பில் கோடி காட்டியிருக்கின்றார் அரசியல் பிதாமகர் சம்பந்தன்.

கடந்த பல தசாப்தங்களாகத் தமிழர்கள் இனவழிப்புக்கும், துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர். தமிழினத்தின் அடி ஆன்மாவையே ரணப்படுத்திய அந்தக் கொடூரங்களின் வலி,நோவு ஆழமானது. அவற்றைத் தமிழர்கள் நினைவு கூர் வதும், இரைமீட்டு வெஞ்சினம் கொள்வதும் தவிர்க்க முடி யாத கட்டாயங்கள்தாம். அந்தப் பின்புலத்தில் கடந்த காலங்களின் மறக்கவே முடி யாத நினைவுகளில் மூழ்கியவாறு, நிகழ்காலத் தீர்வுக்கான வாய்ப்புகளைக் குழப்பாதீர்கள் என்பதுதான் சம்பந்தனின் அறிக்கையில் நடுமையமாக இழையோடும் முக்கிய விடயமா கும்.

சுமந்திரனை சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டியில் சிக்க வைத்தவர்களின் நோக்கம் சிங்களவர் மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்று வரும் நடைமுறையை – அதாவது சமாதானத் தீர்வை உருவாக்கும் சூழ்நிலையை – குழப்புவதுதான் என்பதை அறுதியிட்டுத் தமது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சம்பந்தன். ஆனால் தமது வெளிப்படையான, நேர்மையான பதில்கள் மூலம் சுமந்திரன் அந்த முயற்சியை முறியடித்துள்ளார் என்று நற்சான்றிதழ் தந்திருக்கின்றார் சம்பந்தன்.

அதுவல்ல விடயம். சம்பந்தனுக்கு மிக நெருக்கமான நம்பிக்கை உரிய தளபதி சுமந்திரனே. அவர் தொடர்பில் சம் பந்தனின் சான்றிதழ் புதுமையானதல்ல. “வேலிக்கு ஓணான் சாட்சியம்’ என்று கூட இந்த நற்சான்றை யாரும் கூற முடியும். ஆனால், சம்பந்தனின் அறிக்கையில் “தோன்றா எழுவாய்’ போலத் தோன்றாக் கருத்து ஒன்று புதைந்துள்ளது.

இப் பேட்டியின் நோக்கம் தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலான தீர்வு முயற்சிக்கான சூழலைக் குழப்புவது என்றால் அதை சுமந்திரன் தமது நேர்மையான, வெளிப்படையான பதில் மூலம் முறியடித்துள்ளார் என்றால் சுமந்திரனின் அந்தப் பேட்டியை வைத்துக் கொண்டு நமது தமிழ்க் கட்சித் தலைவர்கள் – மாவை சேனாதிராஜா உட்பட – நடத்திய “திருக்கூத்து’ எந்த வகையறாவைச் சேர்ந்தது?

பேட்டியை முன்னெடுத்தவரின் நோக்கத்தை – தமிழ் சிங்கள மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இலக்கை – தோளில் சுமந்து மேற்கொண்டவர்களாகவே இந்தத் “திருக் கூத்தை’ முன்னெடுத்த ஒவ்வொருவரின் நடவடிக்கையும் அமைந்துள்ளது. அதுதான் சம்பந்தனின் தீர்ப்பு. செம்மணச்செல்விக்காகப் புட்டுக்கு மண் சுமந்த சிவனாருக்கு விழுந்த அடிபோல, சம்பந்தனின்

இந்தத் தீர்ப்பு மாவை தொடக்கம் சரவணபவன் வரை அனைவருக்கும் முதுகில் விழுந்த ஒரு தட்டுத்தான். இதைப் புரிந்தும் புரியாதவர்கள் போல அவர்கள் சமாளிப் பார்கள். அதுதான் நடக்கும். (காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம்)

—————————————————————————————————————-

தமிழ் ஊடகம் பொய்யாக திரித்து மொழிபெயர்ப்பு செய்து பரப்புகின்றது.

Discussion with M.A.Sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் பங்கேற்ற கேள்விகளால் ஒரு வேள்வி

Posted by Globe Tamil on Monday, 11 May 2020


சொன்னது என்ன?
https://www.facebook.com/watchparty/167247584714435/

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை.
நான் ஒரு அஹிம்சாவாதி, ஆயுதப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவது எப்படி மன்னிக்க முடியாத குற்றமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://lankasee.com/2020/05/12/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/?fbclid=IwAR2_Fay9_FEPRX_GCet2JtEiZhTh0dvz_aoXvBHqauOEc_ipwSzsqtG2L5I

சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல –சம்பந்தர்
https://lankasudar.com/2020/05/12/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/?fbclid=IwAR3I2zgi11V6HucLUwPMVkQVwXkrd0RMVZr8gosuEJVUBl-mfR6TI3Zkv54

சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் #கருத்தாகது – மாவை சேனாதிராஜா
https://www.facebook.com/groups/1137733632904666/permalink/3256615581016450/

புலிகளிற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை; கூட்டமைப்பை உருவாக்கியது யாரென தெரியாது: சுமந்திரன் விளக்கம்!
http://www.pagetamil.com/123428/?fbclid=IwAR0xTk2EBBA3EpN-09YUJQ9r8wcoTuP5r_yBezEv-UY_wjYo-lkiD0nNTNM

சிங்கள ஊடகத்திற்கு சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு
https://www.facebook.com/akkinichsiragukal/videos/257526515653769/
https://samugammedia.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/?fbclid=IwAR1JIEKtyBrdR_KMan6pEbF_He5vsifwva_QCXBFC3z8EdaQFKGzByZThfY

வீடியோ; மாவை சேனாதிராஜா
Yêu cầu kiểm tra bảo mật

Sampanthan Defends Sumanthiran, Says Sumanthiran Has Been Frank And Forthright

By R. Sampanthan –

My attention has been drawn to the interview said to have been given to the media by Mr. M. A. Sumanthiran, President’s Counsel, former Member of Parliament Jaffna District, and Spokesman for the Tamil National Alliance

Mr. Sumanthiran has been frank and forthright in his answers to questions that have been asked with the deliberate purpose of promoting mischief and disunity amongst the people of this country particularly amongst the Tamil people with the ulterior purpose of sabotaging efforts to find a resolution to the National Question within the framework of a single united undivided and indivisible Sri Lanka. 

Over the past 30 years after the signing of the Indo Sri Lanka agreement and the enactment of the 13th Amendment to the Constitution much work has been done by successive Presidents and Governments, under the leadership of President R. Premadasa, President Chandrika Bandaranaike Kumaratunga, President Mahinda Rajapaksa, President Maithiripala Sirisena and Prime Minister Ranil Wickeremesinghe to bring about a resolution to the National Question based upon substantial consensus catering to the needs of a multiethnic, multilingual, multicultural pluralistic society all of which are matter of record. 

The questions posed to Mr. M.A. Sumanthiran are intended to promote confusion amongst all people, both the Sinhala and Tamil people. The purpose of this interview is to disturb the ongoing process amongst all people both Sinhalese and Tamils. The people should not get confused and misled by such mischievous endeavors.

During the history of a long political struggle for equality and justice such as the Tamil political struggle which commenced in 1949 and has lasted over 70years various events have taken place. The Tamil struggle when it commenced was democratic, peaceful and non-violent. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) commenced their armed struggle in the late 70s and early 80s, after a period of 30years since the commencement of the democratic peaceful and non – violent Tamil struggle. 

If there had been a reasonable resolution to the Tamil Question in the first three decades, the LTTE would never have emerged on the scene. It was the failure of the majority leadership to implement pacts and agreements entered into with Tamil Leader Mr SJV Chelvanayakam who was committed to non-violence that resulted in the emergence of LTTE.  Even during the time of the armed struggle which lasted till 2009, the peaceful Tamil political struggle continued and continuous up to date. 

The people of this country need to look at how the future can be bright for all people, on the basis of justice equality. Mr Sumanthiran whose ultimate interest is in a just and acceptable resolution has answered questions from this perspective. He has also expressed his own views on some issues. There can be progress and prosperity in Sri Lanka and for all its people only if the National Question is resolved on the basis of permanent peace evolved through a resolution based on justice, equality, self-respect and dignity.  

I would appeal to all the people in this country, the Sinhalese Tamils and all others not to be misled by such mischievous endeavors and to concentrate on the efforts to find a reasonable and acceptable resolution to the National Question based on a substantial consensus. 

I would like to communicate to the Tamil people of the Northern and Eastern Provinces that our strength to achieve a reasonable and acceptable resolution lies in your being united behind such a position rather than giving expression to contradictory views on issues that are perhaps not strictly related at present to the resolution of the National Question.

The Tamil people have suffered immensely in several ways during the past several decades. The Tamil people were subjected to racial pogroms even before the emergence of the LTTE. A very substantial number of Tamil people have fled the country. Tamil people will inevitably remember with pain what happened to them, but this should not confuse their thinking in relation to the main issue. 

It is only an acceptable political resolution to the National Question that can provide permanent peace and relief to the Tamil people and permanent peace and prosperity to the whole country and all its people.    

It will be the duty of every citizen to strive unitedly to the achievement of this objective. 

*R Sampanthan – Leader Tamil National Alliance  https://www.colombotelegraph.com/index.php/sampanthan-defends-sumanthiran-says-sumanthiran-has-been-frank-and-forthright/

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply