இந்தியாவில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் மாநிலம் குஜராத்தா? தமிழ்நாடா?
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நாட்டிலேயே மற்றெந்த பகுதியையும்விட குஜராத்தில்தான் முஸ்லிம்களின் நிலை சிறப்பாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். இதற்கு உதாரணமாக சச்சார் கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
சமூக பொருளாதார நிலை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
உண்மையில் 2006 சச்சார் கமிட்டியின் அறிக்கையின்படி மற்ற மாநிலங்களிலும் குஜராத்திலும் முஸ்லிம்களின் நிலை குறித்து குறிப்பிடப்பட்டுளள்து என்ன என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
கல்வி
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி (2006 சச்சார் கமிட்டி இதன் அடிப்படையில் தயாரிக்கப்ட்டது) இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வியறிவு 59.1 சதவீதம். ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கல்வியறிவு 65.1 சதவீதம்.
குஜராத்தில் மொத்தமாக கல்வியறிவு விகிதம் 69% ஆனால் இஸ்லாமியர்களின் கல்வியறிவு 73.5%. இந்துக்களின் கல்வியறிவைவிட முஸ்லிம்களின் கல்வியறிவு குஜராத்தில் 4% கூடுதல்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் கல்வியறிவு இன்னும் உயர்ந்தது. இந்துக்களின் கல்வியறிவு 77 சதவீதமாக இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் கல்வியறிவு 81% ஆனது.
மாநில வாரியாக கல்வியறிவு சதவீதம்
ஆனால் மேலே சொன்ன ஒரு புள்ளிவிவரம் மட்டும் வைத்து நாட்டிலேயே குஜராத்தில் தான் முஸ்லிம்களின் கல்வியறிவு சதவீதம் அதிகம் எனக்குறிப்பிட முடியாது.
ஏனெனில் கேரளாவில் இஸ்லாமியர்கள் கல்வியறிவு 89.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 82.9 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 83 சதவீதமாகவும் உள்ளது.
குஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா?
இந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்?
7-16 வயதில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை கணக்கில்கொண்டால் கேரளாவும், தமிழகமும் குஜராத்தை வீழ்த்திவிடுகின்றன.
இவ்விரு மாநிலங்களில் மேற்கூறிய வயதிலுள்ள முஸ்லிம்கள் சராசரியாக 5.50 ஆண்டுகள் பள்ளியில் செலவிடுகின்றனர். குஜராத்தில் முஸ்லிம் குழந்தைகள் ஆண்டுக்கு 4.29 ஆண்டுகளே செலவிடுகின்றனர்.
குஜராத்தில் மதரஸாக்களில் குறைவான முஸ்லிம்களே கல்வி பயில்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம்கள் 25%.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது படித்த முஸ்லிம்களின் அளவை கணக்கில் கொண்டால் குஜராத் இந்தியாவில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி தேசிய சராசரியை(23.9%) முந்தியிருக்கிறது குஜராத் (26.1%).
ஆனால் ஆந்திராவில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்த முஸ்லிம்களின் அளவு அதிகம் (40%). மேற்கு வங்காளம்தான் (11.9%) இப்பட்டியலில் கடைசியில் உள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் 64.4% மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக 2006 சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. இந்துக்களில் 65.8 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் 54.9 சதவீதத்தினர் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
குஜராத்தில் வேலை வாய்ப்பு பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களில் 71 சதவீதத்தினரும் இஸ்லாமியர்களில் 61 சதவீதத்தினரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இருப்பினும், இங்கும் குஜராத்துக்கு முதலிடமில்லை. ஆந்திராவில் 72% முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் 71 சதவீதம். குஜராத் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

குறிப்பிட்ட மாநில அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு எவ்வளவு எனப் பார்த்தால், குஜராத்தில் 5.4 சதவீத இஸ்லாமியர்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தியாவில் அசாமில்தான் அரசு துறைகளில் 11.2 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர். மேற்கு வங்கம் (2.1%) கடைசி இடத்தில் உள்ளது.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்துக்களின் சடலத்தை சாப்பிடுகிறார்களா? பிபிசி ஆய்வு
“சொந்த கிராமத்தில் தொழுகை செய்வதற்கு தடை” – முஸ்லிம்கள் புகார்
குஜராத் மாநில அரசுத்துறைகளில் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் நிலையானது, இந்திய அளவில் கடைசி நிலையில் இருக்கிறது.
https://www.bbc.com/tamil/india-46703725
இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.
இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்து மக்களுக்கு அடுத்தபடியாக, சீக்கியர்களின் எண்ணிக்கை விகிதம் 0.2 என்ற அளவிலும் பௌத்தர்களின் எண்ணிக்கை 0.1 என்கிற அளவிலும் சரிந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைன மக்களின் மக்கள் தொகையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.
இந்தியாவில் உள்ள 121.09 கோடி மக்கள் தொகையில், 96.63 கோடிப் பேர் இந்துக்களாவர். 17.22 கோடிப் பேர் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடியாகும்.
இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், ஜைனம் என ஆறு மதங்களையே மக்கள் பெருமளவில் பின்பற்றுவதாக இந்தக் கணக்கீடுகள் கூறுகின்றன.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் துவங்கி, சிறிய நகரங்கள் வரையிலான மதரீதியிலான மக்கள் தொகை விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
https://www.bbc.com/tamil/india/2015/08/150825_cencus_religion
மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு: அதிகரித்தது இஸ்லாமியர் மக்கள் தொகை!

புதுடெல்லி: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011 ஆம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்து மக்கள் தொகை சதவீதம் குறைந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடியாக உள்ளதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில், இந்துக்கள் 96.63 கோடி பேர் உள்ளனர், முஸ்லிம்கள் 17.22 கோடி பேரும், கிறிஸ்தவர்கள் 2.78 கோடி பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு அடுத்து சீக்கியர்கள் 2.08 கோடி பேரும், பவுத்த மதத்தினர் 84 லட்சம் பேரும், சமண சமயத்தினர் 45 லட்சம் பேரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் 79 லட்சம் பேரும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 29 லட்சம் பேரும் உள்ளனர்.
மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் எண்ணிக்கையானது 0.7 குறைந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது 96.63 கோடியாக உள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் ஆகும். முஸ்லிம்கள் 17.22 கோடி (சதவீதம் 14.2), கிறிஸ்துவர்கள் 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), புத்த மதத்தினர் 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் 0.45 கோடி (0.4 சதவீதம்), மற்ற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது 0.79 கோடி (0.7 சதவீதம்) என்ற அளவில் உள்ளனர்.
எந்த ஒரு மதத்தையோ அல்லது நம்பிக்கையோ பின்பற்றாதவர்கள் அல்லது தங்கள் மதங்களை பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை 0.29 கோடி (0.2 சதவீதம்) உள்ளது என இந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 102 கோடியாக இருந்தது. 2001-2011 இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் மதங்கள் வாரியான மக்கள் தொகை அதிகரிப்பு இந்துக்கள் 16.8 சதவீதம், முஸ்லிம் 24.6 சதவீதம், கிறிஸ்துவர் 15.5 சதவீதம், சீக்கிய 8.4 சதவீதம், புத்தம் 6.1 சதவீதம், ஜெயின் 5.4 சதவீதம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்திய மக்களின் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான நிலவரங்கள் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜாதி வாரியான புள்ளிவிபரங்களை வெளியிட வேண்டுமென, தி.மு.க., பா.ம.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனாலும், அந்த விபரங்கள் வெளியிடப்படாத நிலையில், தற்போது மத வாரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 6 கோடியே 31 லட்சம் இந்துக்கள்
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இதில் இந்துக்கள் 6 கோடியே 31 லட்சத்து 88,168 பேர் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் 42 லட்சத்து 29,479 பேரும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 18,331 உள்ளனர்.புத்த மதத்தினர் 11,186 பேரும், ஜைன மதத்தினர் 89,265 பேரும் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகை 12 லட்சத்து 47 ஆயிரத்து 953 ஆகும்.இதில் இந்துக்கள் – 10,89,409இஸ்லாமியர்கள் – 75,556கிறிஸ்தவர்கள் – 78,550புத்த மதத்தினர் – 451ஜைன மதத்தினர் – 1,400 பேர்.
https://www.vikatan.com/social-affairs/miscellaneous/51527-
Leave a Reply
You must be logged in to post a comment.