மற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது  இந்தியாவிலுள்ள பெரும்பான்மை  இந்துக்கள் மட்டும்

மற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது  இந்தியாவிலுள்ள பெரும்பான்மை  இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு நிற்க  வேண்டுமா?

நக்கீரன்  

உரலுக்கு ஒரு பக்கம் இடி,  மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்ற பழமொழி தமிழில் உண்டு.  பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்.

இந்திய குடியுரிமை  சட்ட திருத்தம் நாடு முழுதும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எதிர்ப்புக்கான காரணங்கள் எதிர்முரணானவை.

அசாம் மக்கள், பாகிஸ்தான், பங்காளதேசம் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய 3 நாடுகள் நீங்கலாக  இந்தியாவிற்குள் 2015 க்கு முன்னர்  சட்ட விரோதமா உள்நுழைந்த  இந்துக்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள், கிறித்தவர்கள் போன்றோருக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திருத்தத்தைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  இந்தத் திருத்தச் சட்டம் கடந்த டிசெம்பர் 12 இல்  நாடாளுமன்றத்தில் சட்டமாகியது.

அசாம் மக்கள் முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்ப்பதற்குக் காரணம் அந்த மானிலத்தில் காணப்படும் இனவாரிப் பரம்பலைப் பாதிக்கும், மாற்றி அமைத்துவிடும் என்ற  அச்சமாகும். 1951 –  1971 காலப்பகுதியில்  சட்ட விரோதக் குடியேற்றத்தால்  மற்ற எந்த மாநிலங்களை விடவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே என்று அசாம் மக்கள் கூறுகிறார்கள். Image result for india citizenship amendment bill

அசாம் என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும்.

அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகள்  பாயும் பள்ளத்தாக்கையும் அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா.

இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காள மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகின்றது. அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன்  பன்னாட்டு  எல்லைகளையும் கொண்டுள்ளது.

இம்மாநிலத்தில் இந்துக்கள்  19,180,759 (61.47 %), இசுலாமியர்  10,679,345 (34.22 %),  சீக்கியர் 20,672 (0.07 %), சமணர் 25,949 (0.08 %),  கிறித்தவர்கள்  1,165,867 (3.74 %), பவுத்தர்கள் 54,993 (0.18 %),  பிற சமயத்தவர்கள் 27,118 (0.09 %)  மற்றும் சமயம் சாராதவர்கள் 50,873 (0.16 %) ஆகவும் உள்ளனர்.

மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் இந்துக்கள் பெருImage result for india citizenship amendment billம்பான்மையாகவும் (61.47 %) 9 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் (34.22%)   வாழ்கிறார்கள். இந்திய குடியுரிமைச் சட்டம் 1.9 மில்லியன் மக்களது குடியுரிமையைப் பறிக்கிறது. இவர்கள் பாகிஸ்தான், பங்காளதேசம் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டத்துக்கு முரணாகக் குடியேறியவர்கள் ஆவர்.

அசாம் மக்கள் வெளியிலிருந்து தங்கள் மாநிலத்துக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் குடியுரிமை வழங்கக் கூடாது என வாதிடுகிறார்கள். மேலே குறிப்பிட்டவாறு வெளியில் இருந்து அசாமிற்குள் நுழைபவர்களால் தங்களது குடிப்பரம்பல், மொழி, கலை, பண்பாடு நலிவடையும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். அது நியாயமான அச்சம் என்பதில் ஐயமில்லை.

இதே நேரம் இந்தியாவுக்கு உள்ளே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு  எதிராகப் பரவலான  ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் பாஜக  ஆட்சி செய்யாத மாநிலங்களிலேயே (தமிழ்நாடு, கேரளா, வங்காளம், மகாஷ்டிரம்)  இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குப் பலத்த எதிர்ப்புக் காணப்படுகிறது. இந்தச் சட்டம் சமய அடிப்படையில் பாகிஸ்தான், பங்காளதேசம் மற்றும் ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து சட்டத்துக்கு முரணாக உள் நுழைந்தவர்களுக்கு  மத அடிப்படையில் குடியுரிமை மறுப்பது  சனநாயகத்துக்கும் இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்புக்கும் எதிரானது   என்கிறார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு எனவே யாரையும் மத அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது என்பது இந்திய காங்கிரஸ், திமுக, பொதுவுடமைக் கட்சிகள், மம்தா பனர்ஜியின்  அகில இந்திய திரிணாமல் காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் பல்கலைக் கழக மாணவ அமைப்புக்கள்  போன்றவற்றின் வாதமாகும். இந்தக் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற  முஸ்லிம் வாக்கு வங்கிகளை நம்பியிருப்பவை.Image result for india citizenship amendment bill

பாஜக இப்படியான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போவதாக எந்த ஒளிவு மறைவுவின்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.  மக்களவை, மாநிலங்கள் அவை  இரண்டிலும் இந்திய குடியுரிமைச் சட்டம்  பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ந்தக் குடியுரிமைச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதத்திலும்  பாதிப்பில்லை. இருந்தும் அந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் இஸ்லாமியர் ஆவர். இங்கே “இஸ்லாமிய சகோதரத்துவம்” கடைப்பிடிக்கப்படுகிறது என்பது வெள்ளிடமலை.

குடியுரிமை மறுக்கப்பட்ட  3 நாடுகளும் இஸ்லாமியர் மிகப் பெரும்பான்மையாக வாழும் நாடுகள். அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுகிறார்கள் என்றால் அது மத அடிப்படையில் இருக்க முடியாது. அது பொருளாதார அடிப்படையாகவே இருக்க வேண்டும். பாகிஸ்தான், பங்காளதேசம், ஆப்கனிஸ்தான் இந்த மூன்றும் இஸ்லாமிய குடியரசுகள். இஸ்லாம் அரச மதமாக  அரசியல் யாப்பில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது!

இன்று உலகில் 7.3 பில்லியன் (703 கோடி) மக்கள்  வாழ்கிறார்கள். இவர்களில்   முதலிடத்தில் கிறித்தவ மதத்தினர் 2.3 பில்லியன் (31.3%),  இஸ்லாம் மதத்தினர் 1.8 பில்லியன்  ( 24.3%)  எந்த மதத்தையும் சாராதவர்கள் 1.2 பில்லியன்   (16.0%) இந்துக்கள் 1.1 பில்லியன்  (15.1%) மற்றும் பவுத்தர்கள் 0.5 பில்லியன் ( 6.9%) இருக்கிறார்கள்.

இன்று உலகில் 53 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இருக்கின்றன. இவற்றில்  (1) 7  இஸ்லாமிய அரசுகள் இஸ்லாம் மதத்தை அரசு மற்றும் அரசியலமைப்பின் கருத்தியல் அடித்தளமாக ஏற்றுக்கொண்ட நாடுகள். (2)   24 நாடுகள்  இஸ்லாத்தை  நாட்டின்  அரச  மதமாகப் பிரகடனப் படுத்திய நாடுகள்.  (3) 22 இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் மத சார்பற்றவை. முஸ்லிம்கள் குடியேறுவதற்கு 150 நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் குடியேறுவதற்கு இந்தியா என்ற ஒரே ஒரு நாடுதான் இருக்கிறது.

இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அதுவொரு மொத்த வாழ்க்கை முறை.  ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு, நீதி அமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதில் பூகோள அரசியல் வேட்கைகளும் அடங்கும் – நாடுகளை வெற்றி கொண்டு அவற்றை ஆட்சி செய்வது ஆகும். ( Islam is a total system of life and contains within itself a particular social system, judicial system, and political system which includes geo-political aspirations – the conquest and administration of territory.)

சீனக் குடியரசில்  உகுர் முஸ்லிம்கள் ( Uighur Muslims) அடக்கி ஒடுக்கப்படுவதற்கு எதிராக இந்தோனேசியாவின் தலைநகரில் உள்ள சீன தூதரகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த கையோடு இந்தோனேசிய மற்றும் உய்குர் கொடிகளைக் கையில் ஏந்திக் கொண்டு அணிவகுத்துச் சென்றனர். நீல நிற தலைக்கவசங்களை அணிந்த பல ஆர்ப்பாட்டக்காரர்கள், “சேவ் உகுர்ஸ்”  , “சீனா வெளியேறு” என்று முழக்கமிட்டனர்.

முஸ்லிம்கள் தங்களுக்குள் கன்னை பிரிந்து மோதிக் கொண்டாலும்  முக்கியமான சமயங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக ஒன்றாகக் குரல் கொடுக்கிறார்கள். இராக் மீது ஆமெரிக்கா படையெடுத்ததற்கு எதிராக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.  இந்த ஒற்றுமையை  கிறித்தவர்களிடம் சிறிது காணப்படுகின்றன. ஆனால் இந்துக்களிடம் இந்த ஒற்றுமை அறவே கிடையாது.

வி.புலிகளுக்கும்  சிங்கள – பவுத்த இராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் அண்டை நாடான இந்தியா தமிழ் இந்துக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பவில்லை. குரல் எழுப்பாதது மட்டுமல்ல இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், “இந்திரா” ரக நவீன ரடார்கள்,  புலனாய்வு, போர் உத்திகளை வாரி வழங்கியது! இந்திய இராணுவம் தொழில்நுட்ப ரீதியாக இலங்கைக்கு உதவி அளித்தது. இலங்கை இந்தியாவின் கைகளை விட்டுப் போவதை ஏற்க முடியாதெனக்கூறி, ஆயுத உதவிகள் வழங்கப் போகின்றோம் என்பதைத் தமிழகத்தில் வைத்தே  அன்றைய மத்திய அரசு அறிவித்து இருந்தது.

2002 இல் இந்தியா  சிறிலங்காவுக்கு ‘மிகவும் இரகசியமாக”  பரிசளித்த’ Mi-17 உலங்குவானூர்திகள்,  சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாகக் கொடுத்த சுகன்யா  ரக  ரோந்துக்  கப்பல்கள்  வி.புலிகளைத் தோற்கடிக்க மெத்தவும் உதவின.

போரில் வெற்றிபெற்றதன் காரணமாக உச்சி குளிர்ந்து போன அன்றைய சனாதிபதி மகிந்த இராசபக்ச “எனது போர் பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். உண்மையில், புலிகளை இராணுவ ரீதியாக அகற்றுவதன் மூலம், நான் இந்தியாவின் போரை நடத்தி முடித்தேன்’   என நவின்றார். (https://www.rediff.com/news/2009/may/29ltte-i-fought-indias-war-rajapakse.htm)

முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றப்பட்ட தமிழ்மக்களது இனப் படுகொலைக்கு அன்று  மத்தியில் பதவியல் இருந்த  இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மாநிலத்தில் பதவியில் இருந்த  திமுக ஆட்சி இரண்டுமே  காரணமாக இருந்தன. மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் இலங்கைப்  பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படாவிட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பதவி விலகுவார்கள் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கூறி இருந்தார். ஆனால் விலகல் கடிதங்களை வாங்கி உரிய இடத்துக்கு அனுப்பாமல் அவர் தனது பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டார்.   வி.புலிகளுக்கு  எதிரான  இறுதிப் போரில் காங்கிரஸ் – திமுக   கட்சிகள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயல் பட்டன. இதனால் கூட்டணியிலிருந்து பா.ம.க, மதிமுக  வெளியேறின.

கண்துடைப்புக்கு முதல்வர் கருணாநிதியைத்  திருப்திப்படுத்த இலங்கை  செல்லும்  வழியில்  அன்றைய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜே சிங் ஆகிய மூவரும்   கருணாநிதியைச் சந்தித்து போர் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதனைச் செவிமடுத்த கருணாநிதி “இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது” என்று ஓத்தூதினார். இன்று திமுக வும் அதன் தலைவர் மு. ஸ்டானினும் வாக்கு வங்கி அரசியலுக்காக – இலங்கை இந்துத்  தமிழ் ஏதிலிகளுக்காக  கண்ணீர் வடிக்கிறார்கள்!

மேற்குறிப்பிட்ட ‘மும்மூர்த்தி’களே சிறிலங்கா தரப்பில் அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இராசபக்ச, லலித் வீரதுங்க மற்றும் பசில் இராசபக்ச ஆகியரோடு போரின் போக்குப் பற்றி அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடினர்.  (Defence Secretary Vijay Singh, Defence Advisor MK Narayanan  and Foreign Secretary Menon while on the Sri Lankan side it was Defence Secretary Gotabaya Rajapaksa, Lalith Weeratunga and President Rajapaksa’s brother Basil Rajapaksa.)

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் 2009 ல் யுத்தத்தின் வியத்தகு இறுதி நாட்கள் மற்றும் வாரங்களில் புலிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தத்தைத் தடுப்பதிலும் இந்தியா முக்கிய பங்கு வகித்தது, விக்கிலீக்ஸ் மூலம் இந்துவால் அணுகப்பட்ட இரகசிய யுஎஸ் தூதரக கேபிள்கள் காட்டின. (https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece)

மதசார்பில்லாத கொள்கை, கோட்பாடு மெத்தமும் நல்லதுதான். மனித குலம் ஒன்று, மக்களிடையே மதம் காரணமாக முறுகல், மோதல், சண்டை இருக்கக் கூடாது என்பது உயரிய சித்தாந்தம்தான். ஆனால் நாடுகள், குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மதத்தின் அடிப்படையில் தங்களை அடையாளம் காட்டும்போது இந்துக்கள்  எம்மதமும் சம்மதம் என்று  வேதாந்தம் பேசுவது நடைமுறை  பூகோள அரசியலுக்குச்    சரிப்பட்டு வருமா என்பது கேள்விக் குறியாகும்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22% இந்துக்கள் வாழ்ந்தனர். தற்போது பலாத்காரங்கள், சித்ரவதைகள், ஒடுக்குமுறைகளால் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின்  எண்ணிக்கை 3% ஆகக் குறைந்துள்ளது. பல துறைகளில் இந்துக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2% ஆகக்  குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் இந்துக்களும் சீக்கியர்களும் வசித்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெறும் 500 ஆக குறைந்துள்ளது. ( https://tamil.oneindia.com/news/india/gujrat-cm-vijay-rupani-s-controversial-remarks-on-caa/articlecontent-pf424393-372329.html)

எப்படி முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு அளிக்கின்றனவோ அதே மாதிரி இந்துக்களுக்குப் பாதுகாப்பாக உலகில் ஒரு இந்து நாடு கூடக் கிடையாது. இருந்த ஒரேயொரு பெரும்பான்மை  இந்து நாடான நேப்பாளம் இன்று மதசார்பில்லாத நாடாகத்  தன்னைப் பிரகடனப்படுத்திவிட்டது.Image result for india citizenship amendment bill

இன்று ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி போல இலங்கை இந்துக்களை சிங்கள – பவுத்த சிறிலங்கா பந்தாடுகிறது!  மொத்தம் 2.2 கோடி குடிமக்களைக் கொண்ட சிறிலங்கா குடியரசில் 1.5 கோடி (70%) மக்கள் பின்பற்றும் பவுத்த மதத்துக்கு அரசியல் யாப்பில் முதன்மையான இடத்தைக் கொடுப்பதோடு புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகும் என எழுதப்பட்டுள்ளது. அதே சமயம் ஏனைய மதங்களுக்கு அரசியலமைப்பு உறுப்புரை 10 மற்றும் 14(1)(இ) கொடுக்கும் உரிமைகள் உறுதிசெய்யப்படும்.  (“The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).”)

இந்த உறுப்புரை கிட்டத்தட்ட பவுத்த மதத்துக்கு அரச மதம் என்ற தகைமையை கொடுக்கிறது. அதன் விளைவு என்ன வென்றால் பவுத்த மதத்தவர் முதல் தர குடிமக்களாகவும் ஏனைய மதத்தவர் இரண்டாம்தர குடிமக்களாகவும் கருதப்படுவார்கள்.

இலங்கையில் பவுத்த சிங்களவர்களுக்கு  ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பவுத்த சிங்களவர்களே  பெரும்பாலும்  அரசில் கட்சிகளின் தலைவர்களாக வரமுடியும். ஒரு பவுத்த சிங்களவரைக் கொண்டே நாட்டின் சனாதிபதி, பிரதமர் போன்ற பதவி கள் நிரப்பப்படுகின்றன.Image result for galagoda aththe gnanasara

கிறித்தவரான இலக்ஷ்மன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது அவரைப் பிரதமராக்க அன்றைய சனாதிபதி சந்திரிகா விரும்பினார்.  ஆனால் அதற்கு சிங்கள – பவுத்த சக்திகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. மகிந்த இராசபக்ச கண்டி  அஸ்கிரிய மற்றும் மல்வத்த  மகாநாயக்கர் இருவரையும் சந்திந்து பவுத்த சிங்களவர் அல்லாத ஒருவர் நாட்டின் பிரமராக நியமிக்கப்படுவதையிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதன்பின் கதிர்காமர் அவர்களைப் பிரதமராக நியமிக்க    எடுத்த முயற்சியை சந்திரிகா கைவிட்டார்.

இன்று இலங்கைத் தீவு  ஒரு சிங்கள – பவுத்த நாடு என்ற கூப்பாடு அதிகரித்துள்ளது. ஒரு பவுத்த தேரருக்கு இருக்கும் செல்வாக்கு ஒரு தமிழ் நா.உறுப்பினர்களுக்கு இல்லை. பவுத்தர்கள் இல்லாத இடங்களில் பவுத்த தேரர்கள் அரச காணியில் விகாரை கட்டுகிறார்கள். அதற்கு காவல்துறை, இராணுவம் அனுசரணை அளிக்கின்றன. இராணுவமே வடக்கில் பாரிய பவுத்த விகாரகளை அரச செலவில் கட்டி வருகிறது.  இராணுவ தளபதிகள்  சிறிலங்கா இராணுவத்தில் இருப்பவர்களில் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்கள் எனப் பகிரங்கமாக அறிவிக்கிறார். அடுத்து பவுத்தம் சிறிலங்காவின் அரசாங்க மதம் எனப் பிரகடனப்படுத்தும் காலம் விரைவில்  வரலாம். சுருக்கமாகச் சொன்னால் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு சிறிலங்காவில்  சிங்கள – பவுத்தம் அதிதீவிரம் அடைந்துள்ளது.

மேலே கூறியவாறு இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்காளதேசம்  இஸ்லாமிய குடியரசுகள். சிறிலங்கா ஒரு பவுத்த மதத்துக்கு முதன்மையான இடத்தையும் பாதுகாப்பையும் அரசியலமைப்பில் வழங்கியுள்ள நாடு. வடக்கேயுள்ள நேப்பாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடென்றாலும் அந்த நாட்டின் அரசிலமைப்பு அதுவொரு மதசார்பில்லாத நாடு என்று கூறுகிறது.

எனவே இப்படி  எல்லோரும்  தாங்கள்  இஸ்லாமியர்கள், பவுத்தர்கள், கிறித்தவர்கள்  எனக் கூறிக்கொண்டு அம்மணமாக நிற்கும் போது  இந்தியாவிலுள்ள பெரும்பான்மை  இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு இருக்க  வேண்டும் என  இந்திய காங்கிரஸ் – திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் முஸ்லிம் கட்சிகளும் சொல்கின்றன.

மதசார்பின்மை மிகவும் உன்னதமான கோட்பாடு. எம்மதமும் சம்மதம் என்ற சமரச சித்தாந்தம் போற்றத்தக்கது. ஆனால் அதனை எல்லோரும், எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும்!


மற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது இந்தியாவிலுள்ள பெரும்பான்மை இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா?

 

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply