Sathurukondan massacre: 185 Tamils slaughtered by Sri Lankan Army remembered in Batticaloa  10 September 2017

Sathurukondan massacre: 185 Tamils slaughtered by Sri Lankan Army remembered in Batticaloa

On September 9th 1990, Tamil men, women and children from Sathurukondan and surrounding villages were taken to an army camp and slaughtered by Sri Lankan soldiers, with the help of Muslim Home Guards. Victims of the Sathurukondan massacre were remembered in Batticaloa on Saturday in an event organised by the World Tamil Students Union and local organisations.

Of the 185 killed in the massacre were five children less than a year old, 42 children under 10, 9 pregnant women and 28 adults over 68 years of age. 38 were from Sathurukondan, 37 from Panichchaiyady, 62 from Pillaiyaradi and 47 from Kokuvil.

The massacre came just days after the Vantharumoolai round-up, from which 158 Tamils seeking refuge at the Eastern University campus were arrested by Sri Lankan soldiers and never seen again.

The mass killings, which were carried out during the presidency of the UNP’s Ranasinghe Premadasa, were investigated in a probe established by then-president Chandrika Kumaratunga in 1997. The probe identified three captains in the Sri Lankan army as being responsible for the killings. The retired judge who led the inquiry, K Palakidnar said that there was strong evidence for the massacre and urged Ms Kumaratunga to hold the perpetrators to account, however, no action was taken by the government.

கண்ணீரும் கம்பலையுமான செப்டெம்பர் 05

நக்கீரர்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 வது ஆண்டு நினைவேந்தல் கடந்த புதன்கிழமை (05) பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப் பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் க்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலநதுகொண்டனர்.

காணமால் ஆக்கப்பட்டவர் களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான
பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அங்கு செப்டம்பர் 5ஆந் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவ தினமன்று காலை 6மணிக்கு முன்னரே கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இயங்கிய அகதி முகாம் இராணுவத்தினர் மற்றும் அவ்வேளை இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ்ஆயுதக்குழுக்களாலும் சுற்றிவளைக்கப் பட்டது.

கொம்மாதுறை இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினரே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பில் அவ்வேளை இராணுவ புலனாய்வில் செயற்பட்ட கப்டன் முனாஸ்; (றிச்சட் டயஸ்) கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, மேஜர் மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்ததாக காணாமல் போனோர் பற்றிய
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையின் போது சாட்டசியமளித்தவர்கள் தெரிவித்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி த.ஜெயசிங்கம்,
கலாநிதி வி.சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

அகதிமுகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு முகமூடியினால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பஸ் வண்டிகளில்
அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை வருடங்கள் 28 கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூறுகிறார்கள்.

இந்த இராணுவ சீருடையில் காணப்பட்ட முகமூடி நபர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுதக்குழு உறுப்பினர்கள் மற்றும் வேற்றினங்களாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களிடம்
காணப்படுகிறது.

இளைஞர்கள் விசாரணைக்கென அழைத்￾துச் செல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கிழக்குப் பலகலைக்கழக அகதிமுகாம் அல்லோல கல்லோலப்பட்டது. எங்கும் அழுகைக் குரல்களையே கேட்க முடிந்தது. அவ்வேளை அந்த
பிரதேசத்திலும் மாவட்டத்திலும் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அவர்களைத் தேடிச் செல்ல முடியாதவாறு உறவினர்களும் முகாமுக்குள் முடங்கிக் கிடந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது.

செப்டம்பர் 5ஆம் திகதி அன்றைய தினம் 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது அழைத்துச் சென்றதாகவும் 24மணிநேரத்திற்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராப் பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ இதற்கான பதிலை அனுப்பியிருந்தார். இந்த
பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது.

விசாரணைக்கென அழைத்துச் செல்லப் பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக
இருந்த ஜெரி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர். இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்து சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும்தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணமல் போனவர்களின் விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்￾குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆந் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990 ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி
முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன
உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்￾தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன.

கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது.1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசபடைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி
போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கை￾களை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்￾தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ்
துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்
கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 158 இளைஞரை தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள்.

உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறி
னர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப்
பற்றி விசாரித்தோம். எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது. பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர்
பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரி
விக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83

ஆனாலும் அவர்கள் பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர்.
இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர் களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு
செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது. குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனம்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் நடைபெற்று 28 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.


Eastern University Massacre: Missing, Missing, Missing For 25 Years

By Thangamuthu Jayasingam – 

Dr. Thangamuthu Jayasingam

Dr Thangamuthu Jayasingam

Officer in charge of the Vantharumoolai refugee camp, 1990

Many may not know that, when 5th September 2015 dawns, it will be 25 years of waiting for 158 families, who ‘lost’ a member or two on that day of 5th September 1990 from the VANTHARUMOOLAI REFUGEE CAMP at EASTERN UNIVERSITY. They did not go missing as usual, where no one knew where they went. In this case these 158 were ‘handed over’/ ‘taken over’ by the Sri Lankan Military in front of a population of nearly 40,000 people. They were forced into buses and were driven away in the direction of Valaichenai. This was the last time anyone saw any of them, to date.

Unfortunately, I was the lead officer of the camp at that time and stay witness to this, to date. I have made my comments to various national and international persons regarding these facts. I presented myself to the Presidential Commission on Missing Persons in 2004. I gave them the names of all the army officers who came for the operation that day and also gave the name of the Army Major General who came three days after on 8th September to the camp. I am not aware whether there had been any inquiries to this day. Two colleagues who were managing the camp with me, Prof. Mano Sabaratnam and D.Sivalingam, are no more. I went again to the Presidential Commission in 2014, at the request of relatives of the people who went missing. I gave them a letter stating that I had given all what I had, the documents, and all what I knew, which is already in the report of the previous Commission, published in 2007. I told the commissioners that I want to know what happened to all those? There was no answer. I told them the next time when another commission comes looking for these facts, I won’t be there and you won’t be there and we will be talking of stories of 1990. Perhaps all relevant parties may have died when the next commission comes around.

sri_lanka_tamil_womanI have people asking me whether they are alive or not, to which I have no answer. I have people telling me that they are in place X, place XX etc. and I have no confirmation. I am traumatized as any person who went through the ordeals of the war. I wake up at night at times when the missing persons’ memory and the camp come back to haunt me in dreams….

I am not sure whether this will end, but I wish this will never be repeated.

I am not sure what happened to them? But surely, there must be many soldiers who would be knowing what happened to them. I am sure the Major General who visited our camp on 8th September 1990, and who went on to become the Army Commander would be aware of the case and its follow-ups. Will anyone have the face to say to the world that this is what happened? It is not about a war crime, it is about humanity. It is about the truth. Does anyone have the courage to face the truth and say ‘this is the ‘truth’? Many do not understand what the families of missing people want? They want an answer. Not compensation, not punishment, but an answer. Could those who took them away from a refugee camp give that?

Does anyone realize that there are kids who do not know their fathers and are waiting for them all these years? I attended a wedding recently where the fathers of both the groom and the bride were those who went missing on 5th September 1990. As parents can we imagine what would have gone through in their minds on one of the happiest days of their lives?

My hope is that the President who pledged that there would be justice and good governance would end this saga of missing people, especially when the full list of the missing persons is known. My hope is also that after 25 years some who have knowledge of this would summon enough courage to speak up and get it out of their chest for their own peace of mind. I am sure this unfortunate event would haunt them too.

It is my wish that before my lifespan is over I would have the satisfaction of having received an answer on behalf of the 158 families who were with me that fateful day in the refugee camp in Vantharumoolai.

It was the largest refugee camp in Sri Lanka at that time and housed around 10,000 families with around 40,000 people within the four walls of the premises. There were 28 births in the camp and 15 deaths and all buried mostly within. There were shops and markets in the camp, post and water supply. ICRC and MSF were caretakers. The Grama Sevakas worked for the management of the refugee camp administration. It was a mini-government within, people feeling secure though worried and desperate seeing smoke at distances, the burning of ……, hearing bullets that travel the sky day and night, yet willing to stay under trees and in open hoping for the day to return home. Following this event on 5th September 1990 and another incident shortly thereafter where 18 more were taken away, the population dissipated slowly from the camp which was closed on 30th September 1990. I was the last person to leave the premises on that day, haunted with heavy heart and memories of the missing 158+ which remains to date.

https://www.colombotelegraph.com/index.php/eastern-university-massacre-missing-missing-missing-for-25-years/

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply