தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

 

தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

எழுதியவர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன (மொழியாக்கம் நக்கீரன்) – அரசியல்

 மகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார்  முறையிடுகிறார்கள்?  அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்?  முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில்  கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ  +  இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  தீர்வில் எல்எல்ஆர்சி  அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார்.  இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள்  (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார்.  மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார்.  முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.

இவற்றை வட மாகாண சபைக்குத் தேர்தல் நடக்கு முன்னரே சொன்னார். எல்லோருக்கும் அவர் சொன்னது தெரியும்.  இவை மகிந்தாவுக்கும் அவரது அமைச்சரவைக்கும்  தெரியும்.  அப்படியிருந்தும் அவர்கள் தேர்தலை நடத்தினார்கள்.   பயங்கரவாதிகளிடம் இருந்து திரும்பக் கைப்பற்றப்பட்ட நிலங்களை கொடுக்கக் கூடாது, காரணம் வாக்குப் பெட்டி அவர்களது கையில் புதிய குண்டாக மாறிவிடும் என இனவாதிகள் அலறினார்கள்.

இப்போது அரசில் இருக்கும் சில கூட்டாளிக் கட்சிகள்  மகிந்தாவும் அவரது அமைச்சரவையும் தடியைக் கொடுத்து அடியை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அழுகிறார்கள். மகிந்தர் தவிர்க்க முடியாத இக்கட்டுக்குள் மாட்டப்பட்டுள்ளார்.  ஆனால்  விமல் ஊடகங்களுக்கு அறிக்கை மேல் அறிக்கை விட்டுத் தன்னை ஒரு பெரிய  வீரவானாகக் காட்டிக் கொள்ளப் பார்க்கிறார்.  யாரை ஏமாற்ற அவர்  முனைகிறார்?   முதல் அமைச்சர் விக்னேஸ்வரன்  செய்வதெல்லாம் மக்கள் எதை

விரும்பினார்களோ அதையே செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

அதற்கேற்ப, அவர் வீதிகளில் இருந்து  அரசு இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்கிறார். இராணுவத்துக்குப் பதில் சட்டம் ஒழுங்குச் சிக்கலைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.  இராணுவ ஆளுநரை அகற்றிவிட்டு அவரது இடத்துக்கு அந்தப் பகுதியில் வேர் பதித்த ஒரு சிவிலியன் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்கிறார்.  முடிவாக அவர் ஒரு பொதுக் கோரிக்கையையும் முன்வைக்கிறார்.  எல்எல்ஆர்சி ஆணைக் குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு போர்க் குற்ற விசாரணை நடத்தப்படாவிட்டால் தான்  போர்க்குற்ற விசாரணையை அய்யன்னா முன்வந்து நடத்த வேண்டும் என்ற பிரசாரத்தை ஆதரிப்பேன் என்கிறார்.

இந்த நிலையில் மகிந்தாவால் எதையும் செய்ய முடியாது.  தன்னை இந்தக் குழப்பத்தில் இருந்து  வெளிவருவதற்கு ஆதரவு தராத எதிர்க்கட்சிகளைத் தான் அவர் குறை  கூட முடியும்.

மகிந்த அரசியல் யாப்பை சாப்பிட வேண்டும். காரணம்  அரசியல் யாப்பைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால்தான் வட மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டி வந்தது!  அவர்கள் சொல்கிறார்கள் “கோத்தபாயாவும் ஹசலக்கா வீரனும் இந்த நாட்டை மீட்டெடுத்தார்கள். ஆனால் மகிந்தா நாட்டைப்  பாழாக்கிவிட்டார். அமெரிக்கா வகுத்த திட்டத்துக்குள்  மகிந்தா அகப்பட்டுப் போனார்.  அதனால் மகிந்தா மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பன்முக பண்பாடு இவற்றின் விசிறியாக மாறிவிட்டார்.”

மார்ச்சு மாதத்தின் பின்னர். மகிந்தா  (தேர்தலில்) வென்றாலும் சரி,  தோற்றாலும் சரி ஒரு புதிய கட்டம் தொடங்கும்.  வடக்கு முழுதும்   இந்த உரிமைகள்,  அங்கோயொரு சுடுகாடு அல்லது ஒரு சிலை உட்பட,  கிளர்ச்சி நடைபெறும். 1950 களிலும் 1960 களிலும் நாகநாதன் நடத்திய சத்தியாக்கிரகம் போன்ற கிளர்ச்சி  ஆக அது இருக்கலாம்.  தெற்கே எதிர்க்கட்சிகள், குறைந்த பட்சம் போராடக் கூடியவர்கள், தங்களது சொந்தக் கிளர்ச்சிகளைத் தொடங்குவார்கள்.  மகிந்த இராசபக்சே கிளர்ச்சியை அடக்கத்  துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் அது அனைத்துலக செய்தியாக மாறி எதிர்வினையை  உருவாக்கும். வரதராசப் பெருமாள் போல் அல்லாது விக்னேஸ்வரன் சென்னைக்கு ஓடமாட்டார். காரணம் எந்த அரசியல் யாப்பு அவரைத் தேர்தலில் போட்டியிட  அனுமதித்ததோ அதற்கு எதிராக இருந்தவர்.

சிலர் சொல்கிறார்கள் உலகில் எந்த மூலையிலும்  இப்டியான புதுமை இடம்பெறவில்லை என்று.  இருந்தும் மகிந்த இராசபக்சே அதனை  அளப்பதில் தோற்றுப் போனார். சட்டச் சிக்கல் எதுவும் இருக்காது. ஆனால் நாட்டுக்குள்ளே அதிகாரத்தைப் பகிருமாறு  கேட்டு மக்கள் சக்தி முழக்கம் எழுப்பும்.

அதாவது, தமிழ்மக்கள் தங்கள் பகுதியில் (தாயகத்தில்)  குறிப்பிட்ட ஒரு உரிமை வேண்டும் என்று கேட்டால் அதனை கொழும்பில் இருக்கும் யாராவது தடுக்க முடியுமா?  மாறாக அமைச்சரவை மட்டத்திலான ஊழல், ஒழுக்கமீறல், சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை வழங்கத் தவறுவது போன்ற காரணங்களுக்காக மகிந்தாவை ஆதரிக்க மாட்டார்கள். மகிந்தாவும்  இரண்டாவது தடவை இராணுவ தலையீட்டுக்கு மக்களது ஆதரவை திரட்ட  முடியாது. 

அதிகாரப் பகிர்வு மூலம் ஒற்றுமையை உருவாக்கும் ஒரு முறைமையே  நாட்டை நீதிக்கும் அமைதிக்கும் இட்டுச் செல்லும். (Daily Mirror -February 05, 2014 –  http://www.dailymirror.lk/opinion/172-opinion/42626-wigneswaran-was-loud-and-clear-in-the-first-place.html )  


 

 

 

 

 

 

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply