ஆரியத் தெய்வங்களும், பிராமணீய வருகையும், அவை கொணர்ந்த வழிபாட்டு முறைகளும், வழிபாட்டு மொழியும்

ஆரியத் தெய்வங்களும், பிராமணீய வருகையும், அவை கொணர்ந்த வழிபாட்டு முறைகளும், வழிபாட்டு மொழியும்

(இது பிற் காலம் 12 ஆம் நூற் றாண் டின் பின் ) மட்டக்களப்பில் வீசிய மூன்றவது சமய அலை

Friday  November  30, 2018

மூன்றாம் கட்டத்தில் மட்டக்களப்பில் ஏற்பட்ட சமய வழிபாட்டு மாற்றங்கள் மிக முக்கியமானவையாகும், இதனைப் புரிந்து கொள்ள நாம் தமிழ் நாட்டுச் சமய
வரலாற்றை அறிய வேண்டும்.

தமிழ் நாட்டில் சமயம் கி.பி.600க்கும் 1100க்குமிடையில் தமிழ் நாட்டின் சமயங்களிலும், வழிபாடுகளிலும் பெருமாற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கான சமூகக் காரணிகள் உண்டு,அவற்றைப் பேச இது சமயம் அல்ல.

தமிழ் நாட்டில் கி.பி 600 களில் வைதீக மதங்கள் மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குறுகின்றன. வைதீக மதங்கள் இப்போது சைவம், வைஸ்ணவம் எனப்பெயர் பெறுகின்றன. 700 , 800 , 900 களில் பக்தி இயக்கம் சமண பௌத்த சமயங்களை வெல்கின்றன,

சைவமும் வைஸ்ணவமும் இரு பெருமதங்களாக மேலுழுகின்றன. தேவார திவ்விய பிரபந்தங்கள் எழுகின்றன. சைவ வைஸ்ணவக் கோவில்கள் கட்டப்படுகின்றன. தெய்வ விக்கிரகங்கள் வார்க்கப்படுகின்றன. பிராமணர்களும் ஐயங்கார்களும் இக்கோவில்களில் பூசகர்களானார்கள். பல்லவ மன்னன் மாமல்லன் வாதாபியை வெற்றி கொண்டபோது அங்கிருந்து பிள்ளையார் வணக்கத்தை தமிழ் நாடு கொணர்கிறான்,

பிராமணர்கள் முக்கியஸ்தர்களாக மதிக்கப்படுகிறார்கள், அவர்களே இக்கோவில்களின் பூசகர்களுமானார்கள். பூசை சமஸ்கிருதத்தில் செய்யப்பட்டது.
சமஸ்கிருதம் தேவ பாசை என அழைக்கவும் பட்டது. பல்லவர்கள் காலத்தில் பல்லவ மன்னர்களும் வணிகர்களும் இந்தச் சைவ மதத்தைக் கடல் கடந்து பரப்பினர். 10
ஆம் நூற்றாண்டில் சோழராட்சியில் சிவ வணக்கம் மேலும் வளர்ந்தது. 11 ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் உருவானது. சோழர் காலத் தில் பொலநறுவையில் பல சிவாலயங்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் சிவாலயங்களும் உருவானது.

சோழர் காலத்தில் பொலநறுவையில் பல சிவாலயங்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் சிவாலயங்களு ம் ச ம ஸ் கி ரு த வ ழி பாடுக ளு ம் அ றிமுகமாயின.

அரசரும் பிரபுக்களும் சமூகத்தின் மே ல் நிலையிலிருந்த வ ர்களு ம் இப்புதிய பண்பாட்டால் கவரப்பட்டனர். அதில் இணைந்தனர், சைவ மதம் அரசமதமானது, இதன் தாக்கம் குறிப்பாக இலங்கையிலும் சிறப்பாக மட்டக்களப்பிலும் தெரியலாயிற்று.

சிவனையும் திருமாலை யு ம் பெரும் கடவுளர்களாக்கிய போது அவர்களைப்பாட அவர்களின் செயல்கள் குணாதிசயங்கள் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டன, இத்தகவல்களை அன்று வடமொழியிலிருந்த புராண இதிகாசக் கதைகள் தந்து உதவின.

தமிழர் மத்தியில் முதலாவது பெரும் பண்பாட்டுத்தாக்கம் பெருமளவில் ஏற்படுகிறது. அதுவே வடமொழி புராண, இதிகாசக் கதைகளின் தாக்கமாகும்.

வடநாட்டுத் தெய்வங்கள் பல தமிழ் நாட்டை இடம் கொண்டன. வைதீக மதங்கள் சைவம் வைஸ்ணவமாக தமிழ் நாட்டுள் புகுந்து, தமிழ் நாட்டில் ஏற்கனவே இருந்த உள் நாட்டுத் தெய்வங்களை தம்முடன் இணைத்துக்கொண்டன என்பர் சிலர். இங்கு வந்து சேர்ந்த வடநாட்டுத் தெய்வங்களைத் தமிழ் நாட்டு வழிபாடுகள் தம்வயப்படுத்திக்கொண்டன என்பர் சிலர்,

எனினும் சிறு சமய நெறிகள் பெரு சமய நெறிகளுக்குள் உள்வாங்கப்பட்டன என்பதே யதார்த்தம்.

சங்ககாலத்திலேயே வேலனை சக்தியின் மகனாகப்பார்க்கும் மரபு இருந்தது. திருமுருகாற்றுப் படையில் வேலனும் முருகனும் சுப்பிரமணியனும் இணையும் பாங்கைக்காணலாம், அது ஓர் சமய இணைப்பு மாத்திரமல்ல, ஓர் கலாசார இணைப்புமாகும். முருகன் வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை சிறுவன் என அழைக்கப்பட்டு காளியின் மகனாகின்றான். ஆரியப்பண்பாடு காளியை சிவனின் மனைவியான சக்தி ஆக்கிவிடுகிறது, இதனால் முருகன் சிவனதும் பார்வதியினதும் மகனாக்கப்பட்டுவிடுகிறான், இதற்கு புராண ஆதாரங்கள் கூறப்படுகின்றன. வினாயகர் புராணம் பிள்ளையாரையும் சிவன் –பார்வதி குழந்தையாக்கி விடுகிறது. தமிழ் கடவுளர்கள் ஆரிய மயமான கதை அது.

சோழர்கள் பொலநறுவையை ஆண்டபோது இவ்வணக்க முறைகளும் பிராமணீயச் செல்வாக் கு ம் ம ட்டக்க ள ப் பிலும் பரவியிரு க்க வாய்ப்புண்டு.

இந்தப் பெரும் தெய்வங்களுடன் முன்னரேயே இங்கிருந்த சிறுதெய்வங்கள் இணைக்கப்பட்டன.

மட்டக்களப்பில் நடந்தேறிய சமய இணைப்பு

ம ட்டக்களப்பிலிருந்து பழைய தெய்வங்களான குமார, மாறா போன்ற தெய்வங்கள் முருகனுடன் சம்பந்தப்படுத்தப்பட்டன. காளி, மாரி, கண்ணகி, கடனாச்சியம்மன் போன்றபெண் தெய்வங்கள் சக்தியுடன் தொடர்புபடுத்தப்பட்டன.

நரசிங்கம், சிங்கனாதம் போன்ற தெய்வங்கள் வி ஷ்ணு வு டன் தொடர்புபடுத்தப்பட்டன.

வீரபத்திரன், சுடலை வைரவன், ஐயனார் போன்ற தெய்வங்கள் சிவனுடன் தொடர்புபடுத்தப்பட்டன.

 “பெரும் தெய்வங்கள் இவற்றைத் தம்முடனிணைத்துக் கொள்வதற்குப்பதிலாக சிறு தெய்வங்கள் பெரும் தெய்வ வணக்கத்தைத் தம்மளவில் உள்வாங்கிக் கொண்டன” என்று கூறுவோரும் உண்டு.

இங்கிருந்த சிறு தெய்வ வழிபாடுகளினதும், சமூக அமைப்பினதும் செல்வாக்குமே இதற்குக் காரணங்களாகும். இதனாலேதான் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவ ஒழுக்க நெறிகள் யாழ்ப்பாணத்தில் அதே இறுக்கத்துடன் இங்கு நிலைபெற முடியவில்லை.

பலிகொடுத்தல், மடைவைத்தல் கும்பம் வைத்தல் உருவேறி ஆடல் அனைவரும் இணைதல் பகிர்ந்துண்ணல் என்ற பண்பாடுகளோடு வளர்ந்த ஒரு பல் கலசார சமூகத்தில் மிக இறுக்கமான ஆசாரசீலம்,, “தினம் விரதம்,.மரக்கறி உணவு, சமய ஒழுக்க நெறிகள், சமயக் கட்டுப்பாடுகள்” என்ற கடும் போக்குகள் செல்வாக்குப்பெற வாய்ப்பிருக்கவிலை.

தம்மிடையே இருந்த பழைய சமய சுதந்திரத்தையே மக்கள் விரும்பினர் போலும். சில இடங்களில் கும்பம், அட்சரத்தகடு என்பனவற்றிற்றுக்குப் பதிலாக வெண்கலக்கடவு ள் விக்கிரகங்களை வைக்க முன் வந்தபோது மானிட உடலில் புகுந்து இருந்த காளி, மாரி தெய்வங்கள் அவற்றை வைக்க வேண்டாம் என்று கூறிய கதைகளும் இங்குண்டு. எனினும் என்ன மூன்றாவதாக வந்த இந்த ஆரிய அல்லது சமஸ்கிருத அலை மட்டக்களப்பின் பல பகுதிகளைத் தன்னுள் ஈர்த்துக்கொண்டது.

சிங்களப் பகுதியில் சிங்கள மக்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்த கிராமியச் சமயங்களை வெல்லாது, பெளத்தம் அவற்றினோடு சமரசம் செய்து கொண்டது என்பார் பேராசிரியர் சரச் சந்திரா. இங்கும் அதேதான் நடந்தது.

முழுக்க முழுக்க அந்நிய மதமான ஒரு மதம் சமரசம் செய்து கொள்ள முடியுமானால் பல தொடர்புகளையுடைய இந்து மதம் மட்டக்களப்பிற் கிராமியச் சமயங்களுடன் சமரசம் செய்ததில் வியப்பில்லை.இச் சமய சமரசம் அமைதியாக நடந்தேறியது. சமரசத்தில் பண்டைய வழிபாட்டு முறைகள் சில இடங்களில் வலு இழந்தன. ஆகமம் சார் கோவில்களில் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாகியது.

புரியாத மொழி வழிபாட்டையும் மக்கள் ஏற்றுகொண்டனர். எனினும் தம் பழமையை மட்டக்களப்பு மக்கள் தொடர்ந்தும் பேணினர்.


About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply