விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும்
1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன.
இவை
திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இருந்து வந்துள்ளமையை எமது முன்னைய தலைமைகள் கண்டு கொள்ளத் தவறின. ஆனால் இன்று எமது மண்ணின் பெரும் பகுதி பறிபோய் விட்டது.
கஞ்சா
தோட்டம் குடியிருப்பாகிய கதை
1953
ஆம் ஆண்டு காலப் பகுதியில் அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பியோடிய பயங்கரக் கொள்ளைக்காரனாகிய யக்கடேயா தனது தலைமறைவு வாழ்க்கைக்கு மூதூர் வெருசல் பிரதான வீதிக்கு மேற்காக அமைந்துள்ள தற்போது “அலிஒலுவ” என அழைக்கப்படும் அரிப்புச் சந்தியை அண்மித்த காட்டுப் பகுதியைத் தெரிந்தெடுத்தான். மகா வலி ஆற்றங்கரையை அண்டிய இவ் வளமான பிரதேசத்தில் யாழ்ப்பாணம் கம்பர்மலையைச் சேர்ந்த விவசாயிகள் வருடா வருடம் சென்று வெங்காயம், மிளகாய்க்குரிய பருவகாலங்களில் விவ சாயம் செய்து திரும்புவதுண்டு. தலை மறைவாக வாழ்ந்த “யக்கடேயா’ அங்கு பெருமளவில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்தான்.
மெல்ல
மெல்ல அவனது நண்பர்களும் உறவினர்களும் அங்கு காடுகளை வெட்டிக் குடியேறி கஞ்சாச் செய்கையுடன் விவசாய முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி ஒரு பெரும் கஞ்சா உற்பத்தி மையமாகவே விளங்கியது.அதையடுத்து அங்கு ஒரு பவுத்த விகாரை அமைக்கப்பட்டு அது ஒரு தொன்மை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக ஒரு காலத்தில் விளங்கியது எனவும் கூறப்பட்டது. அந்த விகாரையில் பிக்குவின் அனுசரணையுடன் பல சிங்களக் குடியிருப்புகள் “சேருவில” என்ற பேரில் உருவாகின.
சேருவிலவின்
வரலாறு
இப்படியாக
சேருவில, மஹிந்தபுர, சயயபுர, தெஹியோவத்தை, மாவிலாறு சிங்களப் பகுதி எனப் பல குடியேற்றங்கள் புற்றுநோய் போல் எங்கும் துரிதமாக உருவாகின. சட்டவிரோதமாக ஆரம்பிக்கப் பட்ட இந்தக் குடியேற்றங்கள் சிங்கள அரசியல்வாதிகளின் முயற்சி காரணமாக குடியேற்றத் திட்டங்களாக அங்கீகரிக் கப்பட்டுச் சகல அரச உதவிகளும் வழங்கப்பட்டன.
சேருவாவில
என்ற புதிய அரச அதிபர் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் பிரிக்கப் பட்டு மூதூர், சேருவில என இரு தேர் தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இன்று திருமலை மாவட்டத்தில் சேருவில ஒரு சிங்களத் தேர்தல் தொகுதியாக விளங்குகிறது.தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்த போது வவுனியா தொகுதி யாருக்கு என்ற பிரச்சினையில் வவுனியா மாவட்டத்தை வவுனியா, முல்லைத்தீவு என இரண்டாகப் பிரித்து பங்கு போடுவதற்காக மூதூரை இரண்டாகப் பிரிக்க தமிழ்த் தலைமைகள் ஆதரவு கொடுத்த வெட்கம் கெட்ட செயலை யும் நாம் மறந்து விட முடியாது.எப்படியிருந்த போதிலும் திருகோண மலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற பெரும் பகுதிகள் சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கப்பட்டுவிட்டன என்பது உண்மை யாகும்.
முஸ்லிம்களின்
நிலம் பறிப்பு
இவ்வாறே
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனித் தொழிற்சாலையில் பணிபுரியவும் கரும்பு உற்பத்தியில் ஈடுபடவும் எனப் பெருமளவு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்களின் ஏராளமான விளை நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக்கப்பட அம்பாறை என்ற ஒரு சிங்கள மாவட்டமே உருவாகிவிட்டது.
”
திருமாவெலிய” புனித பிரதேசத் திட்டம் போன்றவற்றால் மேலும் மேலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அதாவது மட்டக் களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியும் விழுங்கப் பட்டுவிட்டது. இது ஏற் கனவே எமது தாயகப் பகுதி விழுங்கப்பட்ட கதை மட்டுமன்றி எமது தாயகப் பகுதியின் நிலத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்ட கதையையும் சொல்லும் வரலாறாகும். போர் முடிந்த பின்பு இந்தக் கொடிய ஆக்கிரமிப்புக் கரங்கள் வடக்கு நோக்கி விரிய ஆரம்பித்துவிட்டன.
வடக்கு
நோக்கிவிரியும் ஆக்கிரமிப்பு
ஏற்கனவே
எமது மக்கள் நீண்டகால மாகவே வாழ்ந்து வந்த பகுதிகள் அப கரிக்கப்பட்டும், எமது நீர்ப்பாசனக் குளங்களின் நீரேந்தும் பகுதிகளாக இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது எமது சனத்தொகை விகிதாசாரத்தில் சிங்களவர்களின் தொகையை அதிகரித்து எமது இன தனித்துவத்தைச் சீரழிக்கும் நீண்ட நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். எவ்வாறு கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் தாயகத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதோ அவ் வாறு வெலிஓயா என்ற பெரும் திட்டத் தின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத்தொடர்பைத் துண்டிக்க பெரிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
முல்லையில்
ஆபத்து
தமிழ்
மக்களின் இதயபூமியான மணலாற்றில் தனிக்கல்லு, கென்ற்பாம், டொலர்பாம், ஜனகபுர ஆகிய பகுதி களில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் 1984 இல் மகாவலி அபிவிருத்திச்சட்டம் மூலம் வெளியேற்றப்பட்டு அங்கு சகல வசதிகளுடனும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டனர்.இந்தப் பகுதிகளுடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக் கேணி, புலிபாஞ்ச கல், அளம்பில், குமுழ முனை ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரு புதிய உதவி அரச அதிபர் பிரிவு “வெலி ஓயா” என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுராதபுர மாவட்டத்தில் சில பகுதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளும் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இது
முல்லை மாவட்டத்தை அபகரிக்கும் சதி முயற்சிக்கும் வடக்கு, கிழக்குக்குமிடையேயான நிலத் தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிக்கும் ஒரு சட்டபூர்வ வலிமை வழங்கப்பட்ட பிர கடனமாகும். இந்த ஆக் கிரமிப்பின் இரண்டாவது கட்டம் இப்போது கொக்கிளா யில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1960 இற்கு முன்பு குடியி ருந்தவர்கள் எனக் கூறப்பட்டு 37 சிங்களக் குடும்பங்கள் கொக்கிளாய் முகத்து வாரம் பகுதியில் குடியேற் றப்பட்டுவிட்டன. அதையடுத்து மேலும் 45 குடும்பங்கள் சகல வசதிகளுடனும் குடியேற்றப்படுவதற்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன.
அதாவது
இவர்கள் கொக்கிளாயைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் அவர்கள் இடம்பெயர்ந்து தென்னி லங்கையில் வாழ்ந்தவர்கள் எனவும் கூறப் படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த வர்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் சகல உதவிகளும் முழுமையாக வழங்கப்பட்டுக் கொக்கிளாயில் குடியேற்றப்படுகின்றனர்.
1960
ஆம் ஆண்டை அடுத்த காலப் பகுதியில் நீர்கொழும்பைச் சேர்ந்த சம் மாட்டி ஒருவர் கொக்கிளாயில் கரை வலை மீன்பிடித் தொழிலுக்காக வந்திறங்கினார். அங்கு ஏற்கனவே கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுவரை முல்லைத்தீவு அளம்பில் பகுதிகளைச் சேர்ந்த சம் மாட்டிகளே கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
மீன்பிடியில்
ஆரம்பம்…
இது
பரந்த கடற் படுகையாதலால் முல்லைத்தீவு மீனவர்களும் அவர் களை எதிர்க்கவில்லை. சில வருடங் களில் மேலும் இரு சம்மாட்டிகள் அங்கு வந்து தொழில் தொடங்கவே அந்த மூன்றுபாடுகளும் அவர்கள் பருவகாலத் தொழில் செய்யும் இடங்களாகின. ஆனால் பருவகாலம் தொடங்கும் போது அவர்கள் படகுகள், வலைகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தேவைகளுடனும் வருவதும் பருவகாலம் முடிய அனைவரும் திரும்பிச் செல்வதும் வழமையாக இடம்பெற்றன.
காலப்போக்கில்
கரைவலைத் தொழிலில் கூலித் தொழிலாளிகளாக வருபவர்கள் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். பருவகாலம் முடிந்த பின்பு இவர்கள் கொக்கிளாய் ஏரியில் மீன்பிடித்துத் தொழில் செய்தனர். சில வருடங்களில் இவர்களுக்கு மீனவர் குடியிருப்புகள் என்ற பேரில் வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.
இவ்வாறு
1982ஆம் ஆண்டில் 21 குடும்பங்கள் இங்கு நிரந்தமாகக் குடி யிருந்தன. கொக்கிளாயில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இவர்களுக்குமிடையே சுமுகமான உறவு நிலவி வந்தது. எனினும் இவர்களில் சிலர் சிறிபுரவில் உள்ள சிங்களக் காடையர்களுன் சேர்ந்து கொக்கிளாய்த் தமிழ் மக்களின் மாடுகளைக் கடத்தி இறைச்சிக்காகக் கொழும்புக்கு ஏற்றும் களவுத் தொழி லில் இறங்கிய பின்பு இரு சாராருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இப்படியான சந்தர்ப்பங்களில் கொக்கிளாய் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் தமிழ் இளைஞர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் பல இளைஞர்கள் தலைமறைவாகக் காடுகளில் ஒளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
தமிழர்
வெளியேற்றம்
1984
ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தென்னைமர வாடி, கருநாட்டுக்கேணி, புலிபாய்ஞ் சகல், முந்திரிகைக் குளம், மருதோடை, ஊஞ்சல்கட்டி, ஒதியமலை, மண் கிண்டி, பெருங்குளம், தனிக்கல் போன்ற தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கிராமங்களை விட்டு 24 மணி நேர அவகாசத்தில் வெளி யேற்றப்பட்டனர். இந்த நாள்களிலேயே பெருங்கொடூரமான ஒதியமலைப் படுகொலைகள் இடம்பெற்றன.
இப்போது
சில மாதங்களின் முன்பு தான் இந்தப் பகுதியின் தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அக்கிராமங்களில் சில இருந்த சுவடே இல்லாமற் காணாமற் போய் விட்டன. பல சிங்களக் குடியேற்றங் களால் பெயர் மாற்றம் பெற்று வேறு உரு வம் எடுத்து விட்டன. மீளக்குடி மர்ந்த மக்களோ போதிய வசதிகள் இன்மை யால் மீண்டும் அந்தக் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர். தமிழ் மக்களின் இதயபூர்வ மான மண லாறு கூட “வெலிஓயா” ஆகிவிட்டது.இந்த நிலையில் தான் 1960 இற்கு முன் நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் என்ற பேரில் சகல வசதிகளுடனும் கொக் கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள வர்கள் குடியேற்றப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்பு
விரியும்
கொக்கிளாயின்
ஏனைய பகுதிகள் கருநாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளுக்கும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு பெரும் ஆபத்து கொக்கிளாய் குடியேற்ற உருவத்தில் பல்முக நோக்குடன் எம்மை நோக்கி வருகிறது.
இங்குதான்
நாங்களும் எங்கள் தமிழ் தலைமைகளும் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாடாளு மன்றப் பதவிக்காகவும் எமக்குள் எழுந்த சிக்கலை எமக்குள்ளே தீர்க்க வழியற்று வேறு வழிகளை நாடியதன் மூலமும் எமது முன்னைய தலைமைகள் சேருவில என்ற தொகுதி உருவாகவும் திருமலை மாவட்டத்தின் நிலத் தொடர்பை அறுக்கவும் வழி வெட்டிக் கொடுத்தோம்?இப்போ வடக்கையும் கிழக்கையும் நிலத் தொடர்பால் துண்டிக்கவும் வடக்கை விழுங்கவும் கொக்கிளாயில் தொடங்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்?
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு விரைந்து பயனுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறினால் காலத்தைத் தவறவிட்டுக் கடமை யைச் செய்ய மறுத்த குற்றம் இவர்களைச் சாரும். அதுமட்டுமன்றி இவர்களை ஒதுக்கி விட்டு மக்கள் நேரடியாக நடவடிக்கை களில் இறங்கும் நிலையும் ஏற்படலாம்.
After colonizing the East the Sinhala government is now hell-bent on colonizing the North!
Veluppillai Thangavelu
After the military defeat of the LTTE the Sri Lankan government has opened the flood gates of state sponsored Sinhala colonization of Northeast, especially Trincomalee and Vanni districts with a vengeance. Not a single day passes without news of lands belonging to the Thamils being forcibly grabbed. For more than 25 years the governments attempt to move the border of Manal Aru was successfully thwarted by the LTTE, but the situation has dramatically changed since May 19th.
Even before independence D.S.Senanayake as Minister of Agriculture and Land used state sponsored Sinhala colonization as an instrument of state policy to change the demography of the Northeast provinces. Gal Oya (originally called Paddippalai Aru in Tamil) Allai-Kanthalai and Yan Oya colonization schemes in the Trincomalee district and Maduru Oya in the Batticaloa district colonization schemes were the major colonization schemes launched by D.S.Senanayake and his successors.
In 1949 the government under D.S. Senanayake enacted Act No.51 under which the Gal Oya Development Board was established. It was officially inaugurated by Prime Minister D.S.Senanayake on August 28, 1949 at Ingniyakala. A dam was built at Ingniyakala to divert the Gal Oya river waters. This water reservoir was appropriately named Senanayake Samudra – the biggest man made tank in the whole of Ceylon. Gal Oya Development Board spent a staggering US67.2 million dollars to build the infrastructure and settle the colonists.
All these schemes could easily be described as the single most ‘accomplishment’ of Sinhalese governments since independence in 1948 meant to reduce Thamil majority.
While the government is preventing thousands and thousands Thamil IDPs to settle down in their own homes, it is grabbing swaps of cultivable land in Vanni to build military bases, cantonments and houses for armed forces in Vanni.
Two cantonments with schools, hospitals, living quarters and ten military bases are constructed in Kilinochchi and Mullaitivu under an agreement signed by Basil Rajapaksa, Head of Presidential Task Force with China. About 5000 acres have been acquired for the purpose. China is also constructing 60,000 houses costing $ 110 million for families of armed forces in Jaffna, Kankesanthurai, Mullaitivu and Pooneryn. About 1000 houses in Vanni have already been completed. Chinese Defence Ministry has offered a loan of $ 20 million loan for purchasing equipment needed for building military related installations in the North.
China is underwriting these ventures with liberal credit. The Axim Bank of China has agreed to provide a preferential credit facility of over $ 1 bn for roads and rail projects and construction of military housing projects in the North.
Other Chinese projects include Hambantota port, A Special Economic Zone, a 1000 acre Tapioca farm, 900 MW coal fired Norochcholai power plant, Colombo-Katunayake Expressway, an oil bunkering facility, Palai-Kankesanthurai rail-line, a Performing Arts Centre in Colombo and a host of other projects make the Chinese portfolio envy of export economies in the meltdown.
China remains Sri Lanka’s biggest source of foreign funding in 2009 providing $1.2 billion or nearly triple the $424 million given by the number two overseas lender, the Asian Development Bank. In March, 2010 China pledged another $290m for a new airport and to upgrade the island’s railways.
Although, the war with the LTTE has ended and there is no danger of another LTTE insurgency appearing on the scene in the foreseeable future, yet the government is hell-bent to colonize and militaries the North. For this purpose, the government has allocated a whopping 201.3 billion rupees, 35 billion rupees higher than the defence allocation in the 2009 budget. The lion’s share of the defence budget will be spent on salaries, uniforms, boots and feeding of the oversized Sri Lankan defence forces and police which altogether now number nearly 500,000. That also explains why Sri Lanka has the highest per capita military personnel (18.5 to 1000} in South Asia. The defence budget is so massive that it dwarfs the allocation of just Rs.30 billion (1%) for the Ministry of Resettlement. No wonder the government says the owners of houses destroyed during the war have to rebuild themselves!
Unfortunately, India seems to be oblivious to Chinese geo-strategic involvement in Sri Lanka so close to the Indian shores. The de facto Thamil Eelam kept the China threat via Sinhala Sri Lanka at bay until May 2009. But, China is now well placed to reduce India’s regional dominance supported by Sri Lanka and without the Eelam Thamil deterrence. India’s foreign policy of”over appeasement” of Sri Lanka has led to increased Chinese political and economic dominance.
A Sinhalese Think Tank consisting of intellectuals have advised the government to speed up the colonization of the North to deny Thamils’ claim to the concept of homeland. They have been already reduced to a minority in the East through massive state sponsored Sinhala colonization schemes.
Since May the tempo of settling Sinhalese in Batticaloa and Trincomalee districts have increased. In Kevu’liyaamadu in Paddippazhai Division huts have been constructed to house 170 Sinhalese families. Another 230 Sinhalese have been slated to be settled in this area extending from Kevu’liyaamadu to Kachchakkodi Suvaami Malai. The rule by emergency regulations and Anti-Terrorism law makes legal recourse a tall order. (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30967)
In Trincomalee, Sinhalese are settled on both sides of the road from Habarana to Kanniya with a sprinkling of Buddhist vihares in between. Bus loads of Sinhalese are arriving daily from the south for settlement. The government has asked the Asst. Government Agent Thiriyai to demarcate 3000 acres of land for the Thiriyai Buddhist temple.
The Sri Lankan Navy is clearing 1050 out of a total of 1400 acres of cultivated land in Kajuwatta, Vakarai in Batticaloa district to establish a camp resulting in hundreds of people in the east losing their income. (http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/07/100711_cashew_navy.shtml)
The havoc wrecked by state sponsored colonization of Northeast can be seen from the demographic changes in the Northeast.
The Eastern Province is 3,839 sq. miles in extent. Originally Trincomalee 1,016 sq. miles and Batticaloa 2,823 sq. miles were the districts in this province. According to the 1921 census, the Sinhalese were 4.4% of the population in the Trincomalee District and 4.5% in the combined Batticaloa and Amparai District. The Sinhalese were less than 5% in the whole of Eastern Province.
By 1960 an entirely new electorate called Amparai (now called Digamadulla) was carved out for the Sinhalese colonists on the recommendation of the De-limitation Commission appointed in 1959. On 10th January 1961 the Batticaloa District was divided into the present Amparai District 1,775 sq. miles and Batticaloa District 1,048 sq. miles which sharply escalated the pace of Sinhalese colonization.
The Sinhalese population in the undivided Batticaloa district in 1911 was only 4702. In 1921 it was 7, 243. But after the Gal Oya scheme was launched the Sinhalese population began to increase by leaps and bounds as the following Table 1 shows.
Table 1
Population of Amparai District by ethnic group 1963 to 2007
Year | Sri Lankan Moor | Sinhalese | Sri Lankan Tamil | Indian Tamil | Others | Total | ||||||
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | |
1963 Census | 97,621 | 46.11 | 61,996 | 29.28 | 49,185 | 23.23 | 1,312 | 0.62 | 1,618 | 0.76 | 211,732 | 100 |
1971 Census | 126,365 | 46.35 | 82,280 | 30.18 | 60,519 | 22.20 | 1,771 | 0.65 | 1,670 | 0.61 | 272,605 | 100 |
1981 Census | 161,568 | 41.54 | 146,943 | 37.78 | 77,826 | 20.01 | 1,411 | 0.36 | 1,222 | 0.31 | 388,970 | 100 |
2001 Census | 244,620 | 41.25 | 236,583 | 39.90 | 109,188 | 18.41 | 715 | 0.12 | 1,891 | 0.32 | 592,997 | 100 |
2007 Estimate | 268,630 | 43.99 | 228,938 | 37.49 | 111,948 | 18.33 | 58 | 0.01 | 1,145 | 0.19 | 610,719 | 100 |
Source:2007 Estimate – Department of Census & Statistics Special Enumeration 2007 |
Trincomalee is one of the districts the Tamils have been reduced from a majority of 81.76% in 1827 to just 28.75 in 2007 (Estimate). The district has 10 Ages division and out of that 5 have clear Sinhala majority, 3 mixed and one each Thamil and Muslim majority as the following Table 2 shows.
Table 2
Trincomalee District
No | AGA Division | Demography | % |
1 | Padawisiripura | Sinhalese | 99.7 |
2 | Gomarankadawela | Sinhalese | 98.9 |
3 | Morawewa | Sinhalese | 55.8 |
4 | Kuchchaveli | Mixed | |
5 | Town & Gravets | Thamil | 58.6 |
6 | Tampalagamam | Mixed | |
7 | Kinniya | Muslim | 92 |
8 | Mutur | Mixed | |
9 | Kantalai | Sinhalese | 81.7 |
10 | Seruwila | Sinhalese | 55.3 |
Source: Ministry of Defence |
Table 3
Population of Trincomalee District by ethnic group 1827 to 2007
Year | Sri Lankan Moors1 | Tamils2 | Sinhalese | Others | Total | |||||
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | |
1827 | 3,245 | 16.94 | 15,663 | 81.76 | 250 | 1.30 | 0 | 0.00 | 19,158 | 100 |
1881 Census | 5,746 | 25.89 | 14,304 | 64.44 | 935 | 4.21 | 1,212 | 5.46 | 22,197 | 100 |
1891 Census | 6,426 | 24.96 | 17,117 | 66.49 | 1,105 | 4.29 | 1,097 | 4.26 | 25,745 | 100 |
1901 Census | 8,258 | 29.04 | 17,060 | 59.98 | 1,203 | 4.23 | 1,920 | 6.75 | 28,441 | 100 |
1911 Census | 9,700 | 32.60 | 17,233 | 57.92 | 1,138 | 3.82 | 1,684 | 5.66 | 29,755 | 100 |
1921 Census | 12,846 | 37.66 | 18,580 | 54.47 | 1,501 | 4.40 | 1,185 | 3.47 | 34,112 | 100 |
1946 Census | 23,219 | 30.58 | 33,795 | 44.51 | 11,606 | 15.29 | 7,306 | 9.62 | 75,926 | 100 |
1953 Census | 28,616 | 34.10 | 37,517 | 44.71 | 15,296 | 18.23 | 2,488 | 2.96 | 83,917 | 100 |
1963 Census | 40,775 | 29.43 | 54,452 | 39.30 | 39,925 | 28.82 | 3,401 | 2.45 | 138,553 | 100 |
1971 Census | 59,924 | 31.83 | 71,749 | 38.11 | 54,744 | 29.08 | 1,828 | 0.97 | 188,245 | 100 |
1981 Census | 75,039 | 29.32 | 93,132 | 36.39 | 85,503 | 33.41 | 2,274 | 0.89 | 255,948 | 100 |
2001 Census3 | ||||||||||
2007 Estimate | 152,019 | 45.47 | 96,142 | 28.75 | 84,766 | 25.35 | 1,436 | 0.43 | 334,363 | 100 |
Source:2007 Estimate – Department of Census & Statistics Special Enumeration 2007 |
Eastern province has an area of 9,996 square kilometers (3,859.5 sq mi) and is surrounded by the Northern Province to the north, the Bay of Bengal to the east, the Southern Province to the south, and the Uva, Central and North Central provinces to the west. The province coast is dominated by lagoons, the largest being Batticaloa Lagoon, Kokkilai Lagoon, Upaar Lagoon and Ullackalie Lagoon.
The following Table 4 illustrates the demographic changes that took place in the Eastern province after state sponsored massive Sinhalese colonization by the successive Sinhalese governments since independence.
Table 4
Population of Eastern Province by ethnic group 1881 to 2007
Year | Tamils | Moors | Sinhalese | Others | Total | |||||
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | |
1881 Census | 75,318 | 58.96 | 43,001 | 33.66 | 5,947 | 4.66 | 3,489 | 2.73 | 127,755 | 100 |
1891 Census | 86,701 | 58.41 | 51,206 | 34.50 | 7,508 | 5.06 | 3,029 | 2.04 | 148,444 | 100 |
1901 Census | 96,917 | 55.83 | 62,448 | 35.97 | 8,778 | 5.06 | 5,459 | 3.14 | 173,602 | 100 |
1911 Census | 101,181 | 55.08 | 70,395 | 38.32 | 6,909 | 3.76 | 5,213 | 2.84 | 183,698 | 100 |
1921 Census | 103,245 | 53.54 | 75,992 | 39.41 | 8,744 | 4.53 | 4,840 | 2.51 | 192,821 | 100 |
1946 Census | 136,059 | 48.75 | 109,024 | 39.06 | 23,456 | 8.40 | 10,573 | 3.79 | 279,112 | 100 |
1953 Census | 167,898 | 47.37 | 135,322 | 38.18 | 46,470 | 13.11 | 4,720 | 1.33 | 354,410 | 100 |
1963 Census | 246,059 | 45.03 | 184,434 | 33.75 | 108,636 | 19.88 | 7,345 | 1.34 | 546,474 | 100 |
1971 Census | 315,566 | 43.98 | 247,178 | 34.45 | 148,572 | 20.70 | 6,255 | 0.87 | 717,571 | 100 |
1981 Census | 410,156 | 42.06 | 315,436 | 32.34 | 243,701 | 24.99 | 5,988 | 0.61 | 975,251 | 100 |
2001 Census | ||||||||||
2007 Estimate | 590,132 | 40.39 | 549,857 | 37.64 | 316,101 | 21.64 | 4,849 | 0.33 | 1,460,939 | 100 |
Source:2007 Estimate – Department of Census & Statistics Special Enumeration 2007
|
Table 5
Districtwise/AGA Divisionwise Demography of Eastern Province
Trincomalee District | ||
No | AGA Division | Demography |
1 | Padawisiripura | Sinhalese – 99.7% |
2 | Gomarankadawela | Sinhalese – 98.9% |
3 | Morawewa | Sinhalese – 55.8% |
4 | Kuchaveli | Mixed |
5 | Town & Gravets | Tamil – 58.6% |
6 | Tampalagama | Mixed |
7 | Kinniya | Muslim – 92% |
8 | Muttur | Mixed |
9 | Kantale | Sinhalese – 81.7% |
10 | Seruvila | Sinhalese – 55.3% |
Batticaloa District | ||
No | AGA Division | Demography |
11 | Korale Pattu North | Tamil – 83% |
12 | Korale Pattu | Tamil – 53% |
13 | Eravur Pattu | Tamil – 63% |
14 | Manmunai West | Tamil – 96% |
15 | Manmunai North | Tamil – 62% |
16 | Manmunai South West | Tamil – 99% |
17 | Porativu | Tamil – 97% |
18 | Manmunai South | Tamil – 99% |
Ampara District | ||
No | AGA Division | Demography |
19 | Padiyatalawa | Sinhalese – 98% |
20 | Maha Oya | Sinhalese – 98.4% |
21 | Uhana | Sinhalese – 96.4% |
22 | Samanthurai | Muslim – 68.7% |
23 | Karaivaku | Muslim – 69.6% |
24 | Nintavur | Muslim – 72% |
25 | Addalachenai | Muslim – 86.2% |
26 | Akkaraipattu | Muslim – 61.6% |
27 | Damana | Sinhalese – 97% |
28 | Triukkovil | Tamil – 98.2% |
29 | Pottuvil | Muslim – 67.5% |
30 | Lahugala | Sinhalese – 89% |
The above demographic statistics shows that Thamils have been gradually but systematically reduced from a majority to a minority in the East. The same fate will befall the Thamils in the North if they don’t wake up to the ominous PERIL posed by a government steeped in chronic Mahavamsa mindset!
The de-merger of Northeast has made gibberish the provision in the Indo – Ceylon signed in 1987 that the “northern and the eastern provinces have been areas of historical habitation of Sri Lankan Thamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups.”
Thamil officials have been informed that northeast is a conquered territory by the Sinhala army at the cost of losing thousands of soldiers in the battle front. Therefore, they should take instructions from the Sinhala army generals who hold key positions in the Northeast like Governors, Government Agent, Trincomalee, Chief Secretary and Secretary of Education Eastern province. Though arcane and facile argument it shows that the so called liberators have become predators! (2011)
யூலை 31, 2010
ரொறன்ரோ, கனடா
சிங்கள – பவுத்த – இராணுவ மயப்படுத்தப்படும் தமிழர் தாயகம் (வட – கிழக்கு மாகாணங்கள்)
மாண்புமிகு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு,
வணக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களை அண்மையில் கண்டு பேசியது தொடர்பாக இந்த மடலை வரைகிறோம்.
பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப போர் முடிவுக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்னரும் 400,000 தமிழ்மக்கள் முகாம்களிலும் குடிசைகளிலும் சொல்லொணா அல்லல்களயும் அவலங்களையும் அனுபவித்து வருகிறார்கள். குடிக்கக் கஞ்சி இல்லை, உடுக்க மாற்றுடை இல்லை, தாகத்துக்குத் தண்ணீர் இல்லை, மருந்தில்லை, பிள்ளைகள் கல்வி கற்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இல்லை எனச் சொல்லொணாத் துன்பத்தில் இந்த மக்கள் வாடி, வதங்கி கண்ணீரில் மிதக்கிறார்கள்.
சிங்களப் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 10,000 முன்னாள் போராளிகளைத் தேடி “எனது மகன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?” எனத் தாய் தந்தையர் கண்ணீருடன் கேட்கிறார்கள். அரசு பதில் சொல்ல மறுக்கிறது.
தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு நிதி இல்லை என உலக நாடுகளிடம் பிச்சை கேட்கும் இராசபக்சே அரசு, அரச சார்பற்ற பன்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் வடக்கிலும் கிழக்கிலும் செயல்படத் தடை போட்டுள்ளது.
போர் முடிந்த பின்னரும் பாதுகாப்புக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 20,100 கோடியை ஒதுக்கியுள்ளது. மறுபுறம் மீள்வாழ்வு மீள்குடியேற்றத்துக்கு வெறுமனே ரூபா 200 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது பாதுகாப்போடு ஒப்பிடும் பொழுது மீள்வாழ்வு மீள்குடியிருப்புக்கு ஒதுக்கிய தொகை 1 விழுக்காட்டுக்கும் குறைவாகும்! இதன் மூலம் இராசபக்சே அரசு தமிழ்மக்களது மீள்வாழ்வு மீள்குடியிருப்பில் காட்டும் அக்கறையை மாண்புமிகு முதல்வர் புரிந்து கொள்ளலாம்.
தமிழர்கள் வாழும் வட – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நாற்பதுகளில் இருந்து நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே. இதனால் 1946 இல் கிழக்கு மாகாணத்தில் 8.40 விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை 1981 இல் 33.41 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. சிங்களவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தொகுதிகள் (திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, அம்பாரை மாவட்டத்தில் திகாமடுல்ல) உருவாக்கப்பட்டுள்ளன.
இப்போது சிங்கள அரசு வடக்கையும் சிங்கள – பவுத்த மயப்படுத்த அசுர வேகத்தில் செயல்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் சிங்களமொழி தெரியாவிட்டால் நடமாட முடியாத பரிதாப நிலை எழுந்துள்ளது. குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சேலை உடுத்து வீதியில் செல்லத் தமிழ்ப் பெண்கள் அஞ்சுகிறார்கள்.
தமிழ்மக்களது உயிருக்கும் உடைமைக்கும் உரிய அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்களது சமூக வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அவர்களது அடிப்படை மனிதவுரிமைகள், நடமாடும் சுதந்திரங்கள், பேச்சுச் சுதந்திரங்கள், கருத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன. அவர்களது காணிகளும் சொத்துக்களும் கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கையில் அறிவித்தல் செய்யாத இனவொதுக்கல் (Apartheid) வெறிபிடித்த சிங்கள – பவுத்த அரசினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் “தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது, இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசாலும் இந்திய அரசாலும் மட்டுமே முடியும் இந்த இரண்டு அரசுகளை மட்டுமே நம்பியுள்ளோம்” என உங்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டம் 2,727 ச. கிமீ பரப்பளவைக் கொண்டது. 1827ஆம் ஆண்டில் இந்த மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் (1.3 விழுக்காடு) மட்டுமே வாழ்ந்தார்கள். அப்போது தமிழர்கள் 15, 663 பேராகவும் முஸ்லிம்கள் 3 ,245 பேராகவும் காணப்பட்டனர். அதாவது இந்த மாவட்டத்தின் மொத்த குடித் தொகையில் தமிழர்கள் 81.76 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 16.94 விழுக்காடாகவும் சிங்கள வர்கள் 1.30 விழுக்காடாகவும் காணப்பட்டனர்.
1981 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடித்தொகை முடிவுகள் சிங்களக் குடியேற்றம் மற்றும் முஸ்லிம்களின் குடித் தொகை அதிகரிப்பு என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3 விழுக்காடாக மட்டும் இருந்த சிங்களவர்கள் 1981 இல் 33.41 விழுக்காடாகவும், 1827 இல் 16.94 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 1981 இல் 29.32 விழுக்காடாக அதிகரித்துள்ளார்கள். அதே சமயம் 1827 இல் 81.76 விழுக்காடாக இருந்த தமிழர்கள் 1981 இல் 36.39 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று போரினாலும் புலப்பெயர்வாலும் தமிழர்களது விழுக்காடு மேலும் குறைந்திருப்பதை 2006, 2007 குடித்தொகை மதிப்பீடு எடுத்துக் காட்டுகிறது.
கீழ்க்கண்ட அட்டவணை 1, 1827 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்டக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.
அட்டவணை 1
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007
ஆண்டு | சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண் | % | எண் | % | எண் | % | எண் | % | |
1827 | 250 | 1.30 | 15,663 | 81.76 | 3,245 | 16.94 | 0 | 0.00 | 19,158 | 100 |
1881 | 935 | 4.21 | 14,304 | 64.44 | 5,746 | 25.89 | 1,212 | 5.46 | 22,197 | 100 |
1891 | 1,105 | 4.29 | 17,117 | 66.49 | 6,426 | 24.96 | 1,097 | 4.26 | 25,745 | 100 |
1901 | 1,203 | 4.23 | 17,060 | 59.98 | 8,258 | 29.04 | 1,920 | 6.75 | 28,441 | 100 |
1911 | 1,138 | 3.82 | 17,233 | 57.92 | 9,700 | 32.60 | 1,684 | 5.66 | 29,755 | 100 |
1921 | 1,501 | 4.40 | 18,580 | 54.47 | 12,846 | 37.66 | 1,185 | 3.47 | 34,112 | 100 |
1946 | 11,606 | 15.29 | 33,795 | 44.51 | 23,219 | 30.58 | 7,306 | 9.62 | 75,926 | 100 |
1953 | 15,296 | 18.23 | 37,517 | 44.71 | 28,616 | 34.10 | 2,488 | 2.96 | 83,917 | 100 |
1963 | 39,925 | 28.82 | 54,452 | 39.30 | 40,775 | 29.43 | 3,401 | 2.45 | 138,553 | 100 |
1971 | 54,744 | 29.08 | 71,749 | 38.11 | 59,924 | 31.83 | 1,828 | 0.97 | 188,245 | 100 |
1981 | 85,503 | 33.41 | 93,132 | 36.39 | 75,039 | 29.32 | 2,274 | 0.89 | 255,948 | 100 |
2001* | ||||||||||
2006 மதிப்பீடு | 100,454 | 24.85 | 143,282 | 34.73 | 168,696 | 40.89 | 115 | 0.03 | 412,547 | 100 |
2007 மதிப்பீடு | 84,766 | 25.35 | 96,142 | 28.75 | 152,019 | 45.47 | 1,436 | 0.43 | 334,363 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம் |
* 2001 ஆம் ஆண்டு வட – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில் போர்ச் சூழல் காரணமாக குடித் தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.
சிங்களக் குடியேற்றத்தின் பெருக்கால் 1961 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டதாகும். அதன் நிலப்பரப்பு 4,431 ச.கிமீ ஆகும். 1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 46.11 விழுக்காடாகவும் சிங்களவர் 29.28 விழுக்காடாகவும் தமிழர் 23.85 விழுக்காடாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.49 விழுக்காடாக உயர்வடைந்திருக்கின்றனர். அதேவேளை, தமிழர் 18.3 விழுக்காடாகவும் முஸ்லிம்கள் 44 விழுக்காடாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர். கீழ்க்கண்ட அட்டவணை 2, 1963 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தினால் அம்பாரை மாவட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.
அட்டவணை 2
அம்பாரை மாவட்டம் குடிப்பரம்பல் 1963 – 2007
ஆண்டு | சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
No. | % | No. | % | No. | % | No. | % | No. | % | |
1963 | 61,996 | 29.28 | 49,185 | 23.85 | 97,621 | 46.11 | 1,618 | 0.76 | 211,732 | 100 |
1971 | 82,280 | 30.18 | 60,519 | 22.85 | 126,365 | 46.35 | 1,670 | 0.61 | 272,605 | 100 |
1981 | 146,943 | 37.78 | 77,826 | 20.37 | 161,568 | 41.54 | 1,222 | 0.31 | 388,970 | 100 |
2001 | 236,583 | 39.90 | 109,188 | 18.53 | 244,620 | 41.25 | 1,891 | 0.32 | 592,997 | 100 |
2006மதிப்பீடு | 251,166 | 39.89 | 115,912 | 18.41 | 259.798 | 41.26 | 2768 | 0.44 | 629,644 | 100 |
2007 மதிப்பீடு | 228,938 | 37.49 | 111,948 | 18.34% | 268,630 | 43.99% | 1,145 | 0.19% | 610,719 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளி விபரத் திணைக்களம் |
கிழக்கு மாகாணம் (திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு) முழுவதையும் எடுத்துக் கொண்டால் 1827 இல் 1.30 விழுக்காடாக இருந்த சிங்களவர் எண்ணிக்கை (250) திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் காரணமாக 1981 இல் 24.99 (243, 701) விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழர் எண்ணிக்கை 75.65 (34,758) விழுக்காட்டில் இருந்து 42.06 (410,156) விழுக்காடாகக் குறைந்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.56 (11,533) விழுக்காட்டில் இருந்து 32.34 (315,436) விழுக்காடாக உயர்ந்துள்ளது! கீழ்க்கண்ட அட்டவணை 3, 1827 – 2007 ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகின்றது.
அட்டவணை 3
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் 1827-2007
ஆண்டு | தமிழர் | முஸ்லிம் | சிங்களவர் | ஏனையோர் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண் | % | எண் | % | எண் | % | எண் | % | |
1827 | 34,758 | 75.65 | 11,533 | 23.56 | 250 | 1.30 | ||||
1881 | 75,318 | 58.96 | 43,001 | 33.66 | 5,947 | 4.66 | 3,489 | 2.73 | 127,755 | 100 |
1891 | 86,701 | 58.41 | 51,206 | 34.50 | 7,508 | 5.06 | 3,029 | 2.04 | 148,444 | 100 |
1901 | 96,917 | 55.83 | 62,448 | 35.97 | 8,778 | 5.06 | 5,459 | 3.14 | 173,602 | 100 |
1911 | 101,181 | 55.08 | 70,395 | 38.32 | 6,909 | 3.76 | 5,213 | 2.84 | 183,698 | 100 |
1921 | 103,245 | 53.54 | 75,992 | 39.41 | 8,744 | 4.53 | 4,840 | 2.51 | 192,821 | 100 |
1946 | 136,059 | 48.75 | 109,024 | 39.06 | 23,456 | 8.40 | 10,573 | 3.79 | 279,112 | 100 |
1953 | 167,898 | 47.37 | 135,322 | 38.18 | 46,470 | 13.11 | 4,720 | 1.33 | 354,410 | 100 |
1963 | 246,059 | 45.03 | 184,434 | 33.75 | 108,636 | 19.88 | 7,345 | 1.34 | 546,474 | 100 |
1971 | 315,566 | 43.98 | 247,178 | 34.45 | 148,572 | 20.70 | 6,255 | 0.87 | 717,571 | 100 |
1981 | 410,156 | 42.06 | 315,436 | 32.34 | 243,701 | 24.99 | 5,988 | 0.61 | 975,251 | 100 |
2001* | ||||||||||
2007 மதிப்பீடு | 590,132 | 40.39 | 549,857 | 37.64 | 316,101 | 21.64 | 4,849 | 0.33 | 1,460,939 | 100 |
மூலம்: சிறிலங்கா புள்ளிவிபரத் திணைக்களம் |
* 2001 ஆம் ஆண்டு வட – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் அம்பாரை தவிர்ந்த எனைய 7 மாவட்டங்களில் போர் காரணமாக குடித் தொகைக் கணிப்பீடு நடத்தப்படவில்லை.
அடுத்து மட்டக்களப்பு மாவட்டம். இதன் நிலப்பரப்பு 2,633 ச.கிமீ ஆகும். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், 1961 ஆம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தாவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனறாகலை, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம் (அம்பாரை) உருவாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை மேலும் சிங்கள மயப்படுத்தும் திட்டத்துடனேயே அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக உள்ள மன்னம்பிட்டி உட்பட பல தமிழ் ஊர்கள் மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பகுதிகளிலும் அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய ஊர்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது அய்யமாகவே உள்ளது. (http://www.eelanationnews.com/eelam/108-eelam/1685-arasiyal-kaddurai.html)
இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சொல்லியவற்றையும் சொல்லத் தவறியதையும் கீழே பட்டியல் இட்டுள்ளோம்.
* போரின் போது இடம்பெயர்ந்த 320,000 தமிழ்மக்களில் 50,000 மக்கள் தொடர்ந்து முட்கம்பி முகாம்களுக்குள் போதிய உணவு, உடை, உறைவிடம் இல்லாது சட்டத்துக்கு முரணாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
* இடம்பெயர்ந்து முகாம்களில் வதைபட்டு பின்னர் வெளியே விடப்பட்ட 270,000 மக்களில் பெரும்பாலோர் சிங்கள இராணுவத்தால் இடைத்தங்க முகாம்களில் விடப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு 6 தகரம், 3 பொதி சிமெந்து, 5,000 பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில், கல்வி வாய்ப்பு பெருமளவு மறுக்கப்பட்டுள்ளது.
*போரின் போது சரணடைந்த 11,000 போராளிகள் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சிங்கள இராணுவத்தினர் இவர்களை நாய்கள் எனத் திட்டுகிறார்கள். இவர்கள் போர்க் கைதிகளாகக் கணிக்கப்படாமல் பயங்கரவாதிகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு செஞ்சிலுவைச் சங்க சார்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறிக் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்ப உறவுகள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்.
* பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் இரண்டின் கீழும் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஆண்டுக்கணக்காக சிறைச்சாலைகளில் நீதி விசாரணை எதுவுமின்றி அடைத்து வைக்கபட்டுள்ளனர். கொடுமை என்னவென்றால் கணவனைத் தேடிக் கைக் குழந்தைகளோடு வந்த தாய்மாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளளனர். (http://www.tamilwin.com/view.php?2a2IPBe0dbjog0ecQG174b4D988cd3g2F3dc2Dpi3b436QV3e23ZLu20)
தமிழர் பூமி சிங்கள இராணுவ மயப்படுத்தல்
* தமிழர்களின் பாரம்பரிய தொன்மைகளையும் விழுமியங்களையும் அழித்து வட- கிழக்கை இராணுவ மயப்படுத்தி அதனை முழுமையாகவும் நிரந்தரமாகவும் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பது தான் சிங்கள அரசின் சதித் திட்டம் ஆகும். இதன் மூலம் வடக்கும் கிழக்கும் தமிழர்களது பாரம்பரிய தாயகம் என்ற கோட்பாட்டை உடைத்து எறிய சிங்கள – பவுத்த பேரினவாத அரசு முற்படுகிறது. அதற்கு இசைவாக வடக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இது போலவே கிழக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி மொஹான் விஜவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதன்மைச் செயலாளராக முன்னாள் திருகோணமலை அரச அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரச அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்ட அரச அதிபராக (Collector) மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி சில்வாவும் கிழக்கு மாகாணம் கல்விச் செயலாளராக கேணல் கோகன பணியாற்றுகிறார்கள். மாகாண சபை அமைப்பில் ஆளுநரே சகல நிறைவேற்று அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார். அண்மையில் நூறுவிழுக்காடு தமிழ்மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அடங்கிய பாரிய இராணுவ தளங்கள் (Cantonments) நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக ஏறக்குறைய 4 இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 4,500 ஏக்கர் அரச காணி மட்டுமின்றி இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
* இராணுவத் தேவைக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிருவாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப் பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற விடாது சிங்கள இராணுவம் தடைசெய்துள்ளது. மீள்குடியேற்றத்திற்காக மனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச் செல்ல்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களும் அடங்குவர். கடந்த வியாழக்கிழமை (ஆடி 29) அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் “”எங்களை எங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் அல்லது எங்களைக் கொன்றுவிடுமாறு அரசிடம் கூறுங்கள்’ என ஆற்றாது அழுது குளறி கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லி அரற்றியிருக்கிறார்கள். (http://www.tamilwin.org/view.php?2a0g89DFe2ed1DpiG30ecb6ojV43cd4PZLu02cd3cuIPZd4b42vVQ6ocb40i0G1Ded0e4ZF2g8a0)
*கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் மரமுந்திரிகை வாரியத்துக்குரிய 1400 ஏக்கர் காணியில் 1050 ஏக்கர் காணி சிறிலங்கா கடற்படையினர் தளம் அமைக்க கையகப்படுத்தப் பட்டுள்ளது.
* வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு 110 மில்லியன் டொலர் செலவில் 60,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 4 இலட்சம் சிங்களவர்கள் அரச செலவில் வடக்குப் பகுதியில் குடியமர்த்தப்படுவர். இதனால் நான்கு சிங்களவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.(http://groups.yahoo.com/group/thamilvaddam/pending?view=1&msg=12506)
* வலிகாமம் வடக்கில் தொண்ணூறுகளில் கைப்பற்றப்பட்ட தமிழர்களது வீடு வாசல் மற்றும் காணிகள் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த 17,000 தமிழ்மக்கள் இற்றைவரை மீள் குடியமர்த்தப்படாது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்றம் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப் போய்ப் பார்க்க அனுமதித்தும் சிங்கள இராணுவம் அவர்களைத் தடுக்கிறது.
* வட – கிழக்கு கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு என்றும் சிங்கள இராணுவம் உயிர்களைப் பலிகொடுத்தே அதனைக் கைப்பற்றி இருப்பதால் சிங்கள இராணுவம் இடும் கட்டளைகளைத் தமிழ் உயர் அதிகாரிகள் கேட்டுக் கேள்வியின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள்.
* ஆனையிறவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள அரசு போர் நினைவுப் பூங்காக்கள், தூபிகள் போன்றவற்றை நிறுவியுள்ளது. அதே நேரம் தமிழர்களின் தேசிய அடையாளங்களான மாவீரர் துயிலும் இல்லங்கள், கோயில்கள், சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை முற்றாக அழித்துவிட்டு சிறைச்சாலை கட்டப்படுகிறது.
* ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளது. 1803 ஆம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு அதில் முக்கிய வாசகங்கள் வெட்டப்பட்டிருந்தது.
சிங்கள மயப் படுத்தல்
*தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி “கிரநிக்கா ” முல்லைத்தீவு “மூலதூவ” என சிங்களத்தில் எழுதிவைக்கப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்கள், குளங்கள் சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. மணல் ஆறு வெலி ஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* வடமாகாணப் பள்ளிக்கூடங்களில் சிங்களம் படிப்பிக்க வலுக்கட்டாயமாக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. அய்ந்தாம் வகுப்பு புலமைப் பரிசுத் தேர்வுக்குத் தோன்றும் மாணவர்களிடம் கேட்கப்படும் 25 கேள்விகளில் 5 கேள்விகள் சிங்களத்தில் கேட்கப்படுகிறது.
* எல்லா அறிவித்தல்கள், பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் சிங்களத்தில் மட்டும் எழுதிவைக்கப்படுகிறது. நிருவாகம் பெரும்பாலும் சிங்களத்திலேயே நடக்கிறது. தமிழ் அரச மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எள்முனை அளவு முயற்சியும் எடுக்கப்படவில்லை.
* யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பவுத்தமயப் படுத்தல்
* வடக்கிலும் கிழக்கிலும் பவுத்த விகாரைகளும் பவுத்த தூபிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் – வவுனியா செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒன்பது விகாரைகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சந்திகள் தோறும் புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. புத்தரை வழிபடுமாறும் பவுத்த தேரர்களுக்கு தானம் வளங்குமாறும் தமிழ்மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
* மட்டக்களப்பு, கண்ணகிபுரம் தமிழ் ஊரில் சிறப்பு அதிரடிப் படையினரால் பவுத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.(http://www.tamilwin.com/?page=7)
போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு முந்தியும் இனச் சிக்கலுக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது அரசியல் தீர்வே சரியான வழி என இந்திய அரசு ஓயாது சொல்லிவந்தது. போரை நடத்த இந்திய அரசு ஒல்லும் வகையெல்லாம் சிறிலங்கா அரசுக்கு உதவி செய்தது. இன்றும் தமிழ்மக்களது அரசியல் வேட்கைகளை நிறைவு செய்யும் தீர்வொன்றை சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கிளிப்பிள்ளை போல் சொல்கிறது. ஆனால் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே இந்தியாவை எள்முனை அளவிலும் பொருட்படுத்துவதாக இல்லை.
தமிழக அரசையும் முதல்வர் அவர்களையும் ஏன் இந்திய மைய அரசு அலட்சியம் செய்கிறது என்பது எமக்கு விளங்கவில்லை. தமிழர்கள் இடத்தில் வங்காளிகளோ, பஞ்சாபிகளோ இருந்திருந்தால் இந்திய மைய அரசு இப்படியான அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க முடியுமா? இந்தியா, சிறிலங்கா அரசு சீனா பக்கம் சாயாது தடுக்க அதனோடு ஒட்டி உறவாடும் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. ஆனால் மகிந்த இராசபக்சே தொடர்ந்து சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஒரு நாள் ஏமாறப் போகிறது.
இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் அதன் பூர்வீகக் குடிகள் ஆவர். சங்கப் புலவர் பூதந்தேவனார் ஈழத்தில் வாழ்ந்த காரணத்தால்தான் அவர் ஈழத்துப் பூதந்தேவனார் எனச் சுட்டப் பெற்றார். அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்டம் திசமகாரமா என்ற ஊரில் 2,200 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. (http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32303)
சிறிலங்கா அரசு சிங்கள – பவுத்த வெறிபிடித்த அரசு ஆகும். பெரும்பான்மை சிங்கள – பவுத்த மக்கள் தனக்குக் கொடுத்த ஆணையின் கீழேயே தன்னால் ஆட்சி செய்ய முடியும் என மகிந்த இராசபக்சே வெளிப்படையாகக் கூறுகிறார்.
இராசபக்சே ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை. அண்மையில் ஒரு ஊடக நிறுவனம் காடையர்களால் தாக்கப்பட்டுச் சேதப் படுத்தப்பட்ட்டுள்ளது. 2005 இல் இருந்து 2009 ஆண்டுவரை 34 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 30 பேர் தமிழர்கள்.
நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புக்களை அரச அலட்சியம் செய்கிறது. சிறிலங்கா அரசு மக்களாட்சிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழ் ஒரு கொடுங்கோல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மக்களைக் கண்டு பயப்படுவதற்குப் பதில் தமிழ்மக்கள் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இந்திய மைய அரசோடு பேசி மகிந்த இராசபக்சே தமிழர்களின் தாயகத்தை அழிப்பதற்கு மூர்க்கத்தோடு மேற்கொண்டுள்ள சிங்கள – பவுத்த – இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ மக்கள் சுதந்திரத்தோடும் ஒத்துரிமையோடும் வாழ வழிசெய்யுங்கள். மடல் நீண்டு விட்டது. மன்னிக்கவும்.
மிக்க அன்புடன்
வேலுப்பிள்ளை தங்கவேலு
தலைவர்
Sinhalisation of East
A reply to Minister Champika Ranawaka
by M.I.M. Mohideen, The Island, December 26 and 27, 2007
The objectives of their agenda is to make Sinhala people the single largest ethnic group in the Eastern Province. The master plan envisages demographic changes through state aided settlements, tourism development and a Buddhist revival in Ampara District and agro-business promotion in the Toppigala areas in Batticaloa District…
Under the Accelerated Mahaweli Programme, the land area coming under the Eastern Province is 159,000 acres or 44,312 allotments. More than 100,000 Sinhalese will be settled soon according to the new agenda. When the operation is commenced in the proposed Heda Oya Scheme in Pottuvil, Ampara District, the demography of the East will be changed to 55% Sinhalese…
More than 65% of the people, Tamils and Muslims, [are] living in the coastal area of the Ampara district. But the Ampara kachcheri [government office] continues the administration in Sinhala quite contrary to the constitutional requirement of the language of administration in Tamil…
After de-merging the North and East in October 2006, the Eastern Province administration is being ethnically transformed. Former Trincomalee GAs, Rodrigo and Nelundeniya, are chief Secretary and Public Administration Secretary respectively. Former Matale GA, Udage, is now Secretary of the Provincial Public Services Commission…
Appointing ex-servicemen to key administrative posts has been criticized by members of the administrative service. However, the fact remains that this combination of retired administrative and security officials is well-equipped to implement the ‘Sinhalaisation’ process in the East.
JHU Party Policy-maker and the Minister in the present UPF coalition government had made a statement in a National Newspaper on Thursday December 20, 2007, that the Sinhalisation of the East is a myth scoffing at the allegations regarding the Sinhalisation of the East by some minority politicians. Some facts and figures to prove the fallacy of the statement of the Minister.
The ‘nava pancha bala vegaya‘ has been striving very hard to alter the Eastern demography. It has backing right at the top and involves sections of the Buddhist clergy, security forces, bureaucrats, businessman and politicians.
The objectives of their agenda is to make Sinhala people the single largest ethnic group in the Eastern Province. The master plan envisages demographic changes through state-aided settlements, tourism development and a Buddhist revival in Ampara District and agro-business promotion in the Toppigala areas in Batticaloa District.
Facts and figures about population growth will help to illustrate how demography patterns have been unnaturally altered or distorted through state-aided colonisation, demarcation of new political and administrative units and accelerated irrigation schemes in the Eastern Province.
The Eastern Province is 3,839 sq. miles in extent. Originally Trincomalee 1,016 sq. miles and Batticaloa 2,823 sq. miles were the districts in this province. According to the 1921 census, the Sinhalese were 3% of the population in the Trincomalee District and 4.5% in the combined Batticaloa and Ampara District. The Sinhalese were less than 4% in the whole Eastern Province.
The Batticaloa District was divided into the present Ampara District 1,775 sq. miles and Batticaloa District 1,048 sq. miles in 1961. Details of the 1981 population in the Eastern Province.
Population Increase between 1949 and 1981
Tamil population increased from 136,059 to 411,451 – 302%, Muslim population increased from 109,024 to 315,201 – 289%, Sinhalese population increased from 27,556 to 243,358 – 883%. The National average increase of Sinhalese during this period is only 238%. The sudden increase of Sinhala population is the result of Government-planned Sinhala Colonisation in Gal-oya, Pannal-oya, and Ambalam-oya in Ampara District, and Kanthalai, Allai, Morawewa, Muthalikkulam, Pathaviya (Part), and Mahadiuluwewa schemes in Trincomalee District.
See Table 1
State-aided Sinhala Colonizations
The Land Policies pursued hitherto by successive Governments after Independence have had their far reaching adverse effects.
- The Minorities have been denied their legitimate share of Developed State Land.
- Deprivation of Land, more particularly developed land, to landless people in the Districts of Land alienation.
- Substantial alteration in the Ethnic composition of the Districts in which State Land have been alienated.
This has contributed to the growth of tension and hostilities among different communities resulting in ethnic violence. The victims of such violence have always been the Tamils and Muslims.
When the Gal Oya Development Scheme was inaugurated, the late Hon. D. S. Senanayake stated that at least 50% of the new lands that were to become cultivatable under the Gal Oya Development Scheme would be distributed on a 50 – 50 basis between the local citizens of the Batticaloa district and the would be colonists from outside.
The opening of the Gal Oya Scheme was a great boon to the Sinhala people and this has been used as a device to deprive the Muslims to live and own lands under this scheme.
Muslim Lands forcibly colonised with the Sinhalese in Ampara District
The River Valley Development Board, the successor to the Gal Oya Board, without any notice or compensation to the Muslim cultivators with LDO Permits, handed over the whole area to the Sugar Corporation. Hundreds of Muslims were thrown out on the road.
The land take over from the Muslims proved a dismal failure for sugar cultivation. Later the Government settled Sinhalese brought from the South instead of giving the land back to the Muslims who had developed these lands on LDO Permits.
The Sri Lanka Sugar Corporation at Inguruana, Tile Factory under the Ministry of Industries at Irrakkamam and the River Valley Development Board – the successor to the Gal Oya Development Board, took over the fertile paddy fields of the Muslims without any regard to the provisions of the law relating to acquisition of land.
Muslim lands forcibly colonised with the Sinhalese in Trincomalee District
Before the introduction of the Kantalai and Allai Colonisation Schemes, Kantalai was predominantly Muslim. Muslims cultivated about 4,000 acres of paddy land at a place called Pottanai in Thampalakamam Pattu. When the Kantalai Colonisation Scheme began in 1952, the promise and the policy of the Government was 50% for the locals and 50% for others. Quite contrary to this, the Muslim cultivators who had been in the land for more than 30 years were chased away without any compensation. These lands were given to the Sinhalese in 1954.
The Battukachchi area which is presently called Akbarpura was the pasture land of the people of the area. Here also they chased the Muslims and colonised with Sinhalese. Even now there is a Mosque and a Muslim school, When the Kantalai Sugar Corporation was established in 1958, more Sinhalese came in and occupied the land along Alakantalai Road, depriving the lands of the Muslims. Kantalai, Pottanaikadu, Peraru are a few of the purana villages of the Muslims and Tamils which are now being occupied by the Sinhalese.
Kinniya which is the largest Muslim Village in Trincomalee has a population of 40,000. The poor landless farmers who lost their purana lands to the Sinhalese under Kantalai Colonisaton Scheme, started clearing their immediate neighbouring jungle at a place called Vanaru. About 10,000 acres of land had been occupied by more than 3,000 Muslim farmers from the villages in the area – Vanaru, Sundiaru, Maniarasankulam, Savaru, Kalaruppu, Valamadu, Vannathipalam, Katukuli, Naduluthu etc. In 1967, the Government introduced a scheme called Kusumangada Vanala Scheme and started chasing the Muslims who were in occupation of the land at Vanaru. It was during this time that a Police Station was opened at the heart of the jungle called Van-Ela Police Station to chase away the Muslims and help the Sinhalese to take possession of the lands developed by the Muslims.
The land available between Kinniya-Thampalakamam Road and Alaikanthalai Road was originally reserved for the village expansion of Kinniya, Kurunjankerney Alankerney and Thampalakamarn. When the Tobacco Corporation came in at a place called Chondankadu area, closer to Mudalaimadu, the employees of the Corporation started encroaching these areas.
In the Padavia Colonisation Scheme of the land that falls within the Trincomalee District in the Eastern Province, the entirety of the land was alienated to the Sinhalese. Needless to say that the entirety of the land under the Padavia Scheme that fell within the North-Central Province was also given to the Sinhalese. Today, the Tamil Speaking people, Tamils and Muslims who held land on State Permits within the Trincomalee District very much before the implementation of Padavia, Allai and Kantalai colonisation schemes, on the boundary of such schemes are being compelled to vacate such lands.
Muslim lands forcibly taken over in the name of Buddhist religion and culture
Actions continue to deprive the Muslims owning even the 14% of the land in Ampara [Amparai] District in the name of religion and culture. The Commissioner of Archaeology has identified 43 places of Buddhist Archaeological Interest in the predominantly Muslim areas of Ampara District. It was around 1940 that a Buddhist priest came to reside at the site of the Deegawapi Chaitlya. There were no Buddhist to give Dana. The Muslims in this area helped the priest. The land around the Chaitiya was planted with coconut with the help of the Muslims of the area for the priest. Suddenly in 1960 some Buddhist wanted all the land around the Chaitiya to be taken over by the government for Buddhist purpose.
In 1968 the government appointed a committee headed by Mr. Ratnethunge, the former Surveyor General, to investigate and submit a report. A number of Buddhist organisations made representations and finally the Committee recommended the take over of 500 acres around the Chaitiya. It was agreed that no more land would be taken. Quite contrary to this promise by the Sinhala Buddhists, there was a sudden move to acquire another 1,000 acres of paddy land belonging to the Muslims. The Government, without any regard for Law and Order sent in bulldozers destroying the paddy cultivation in the Periyavisaraikandam owned by the Muslims on Crown Grant Title Deeds.
——————————————————————————-
(Continued from yesterday)
Ampara district is 1,775 square miles in extent. According to the census of 1981, the Sinhalese who were 37.2% are eligible for 660 square miles. But they have 76% or 1,340 square miles in the predominantly Sinhalese areas. Muslims (41.6%) are eligible for 728 square miles. But the Muslims have only 263 square miles which is only 15% of the land in Ampara district.
The political authority and the District Minister in the then government were very keen to grab the already developed paddy fields of the Muslims and settle Sinhalese relatives brought from the South. These are the politically aided settlements of Sinhalese in Muslim areas which is over and above the 38 settlements of Sinhalese colonised under the Gal Oya scheme during 1960-63. This had seriously affected the economy and the political strength of the indigenous Muslim population of Ampara district.
The extent of land available for the 42% Muslims in Ampara district is only 264 sq. miles – only 14%, whereas the extent of the land available in the Sinhalese area for the 37% Sinhalese is 1,340 sq. miles in 76%. According to the 1981 census, there is already a shortfall of 465 sq. miles of land for the Muslims and an excess of 680 sq. miles for the Sinhalese in the Ampara district.
See Table 2
Under the Accelerated Mahaweli Programme, the land area coming under the Eastern Province is 159,000 acres or 44,312 allotments. More than 100,000 Sinhalese will be settled soon according to the new agenda. When the operation is commenced in the proposed Heda Oya Scheme in Pottuvil, Ampara District, the demography of the East will be changed to 55% Sinhalese.
Allocation of land areas in the demarcation of electoral and administrative units
The 1976 Delimitation Commission demarcated the Seruvila Electorate for the Sinhalese covering 700 sq. miles out of the 1048 sq. miles for the 24% Sinhalese in Trincomalee District. The land area for the 76% Tamils and Muslims was the balance 348 acres.
According to 1971 census, the population of Ampara District – 47% Muslims, 30% Sinhalese, and 23% Tamils. The Ampara electorate created for the newly settled Sinhalese under the Gal Oya state aided colonisation is 880 sq. miles. With the 370 sq. miles allocated for the Lahugala and Damana AGA Division, the 30% Sinhalese were given 1,250 sq. miles- 70% land area, whereas the 70% Tamils and Muslims are left with only 30% of land area – 525 sq. miles.
Former Muslim majority Panamapattu DRO Division, 472 sq. miles, population 26,916. When redemarcating the new administrative divisions, 19,831 – 74% Muslim majority Pottuvil AGA Division was given only 22% – 103.9 sq. miles and the balance 78% – 368.2 sq. miles land area was allocated for the 7,085 – 26% Sinhala majority Lahugala AGA division.
In the Sammanthurai Muslim majority DRO division, nearly 50 sq. miles of land area covering the Hendy Institute, Ampara tank and town area was separated and added with the Wewagarnpattu South – Uhana AGA division.
When comparing the land area of Sinhala majority Lahugala AGA division with the Muslim majority Kalmunai AGA division, the Sinhalese are having 208 times more than the land area of the Muslims. When comparing the land areas for the Sinhalese with the land area for the Muslims in the Muslim majority Ampara district, the Sinhalese land area is 13 times more.
More than 65% of the people, Tamils and Muslims, [are] living in the coastal area of the Ampara district. But the Ampara kachcheri [government office] continues the administration in Sinhala quite contrary to the constitutional requirement of the language of administration in Tamil.
Master plan
There is an integrated development master plan for Trincomalee town and other surrounding areas. One of the proposed projects for Trincomalee under this plan is the special economic zone at Kappalthurai. The first phase costs Rs. 4,250 million and the second, Rs. 2,600 million. It will be completed in 2015. There will also be a small and medium industrial zone at Kappalthurai. The first phase costs Rs. 500 million and the second, Rs. 1,000 million. It will be set up in 2008.
A new administrative secretariat will be established for Rs. 300 million in 2008. A new fisheries harbour costing Rs. 1,000 million is to be constructed by 2010 at Pudavaikattu. A new town development scheme for Andankulam-China Bay is to be built by 2010 for Rs. 1,500 million.
A massive road project linking Uppuvely and Eechilampattu is to be constructed by 2010 for Rs. 10.3 billion. This proposed outer circular road will run through Sinhala areas of Seruwila division. This is an extension of a new road constructed in Trincomalee North. Two tourist resorts will be set up by 2010. They will be in Nilaweli and Verugal at a cost of Rs. 800 million and Rs. 1,750 million, respectively.
The other important project is the coal-fired power plant to be set up with Indian assistance. Both phases of the project are expected to cost US$ 500 million each and will be completed by 2012. Originally it was earmarked for Kappalthurai but Colombo wanted to set it up later in Sampur. However, New Delhi has stood firm and it is likely to come up in Kappalthurai.
The groundwork is being laid cleverly for future ‘Sinhalaisation’. The Road Development Authority has begun constructing an inner ring road and an outer ring road for Trincomalee. The inner ring road links Aathimottai on the Trincomalee-Nilaweli-Pulmottai Road, Kinniya on the A 12 (Puttalam-Anuradhapura-Trincomalee Road) and 189km post on A-6 (Kandy-Habarana-Trincomalee Road).
Encroachments
The outer ring road planned will begin at Kuchchaveli on the Trincomalee-Nilaweli-Pulmottai Road, cross A12 near Pankulam and meet A6 between Kantalai and Tamplakamam and proceed to Ilankaiturai-Muhathuvaram and Sampur.
The construction work is being undertaken by the Sri Lanka Army (SLA). The RDA Chief Engineer in Trincomalee works very closely with the SLA. The planning is done in Colombo. The Provincial Director of the RDA, based in Batticaloa is completely in the dark about the two ring road projects.
Arrangements are being made for the Sinhalese ‘encroachers’ to move in between A-6 and A12 on this ring road.
After de-merging the North and East in October 2006, the Eastern Province administration is being ethnically transformed. Former Trincomalee GAs, Rodrigo and Nelundeniya, are chief Secretary and Public Administration Secretary respectively. Former Matale GA, Udage, is now Secretary of the Provincial Public Services Commission.
There are also many ex-servicemen in key positions. The Governor is Rear Admiral Mohan Wijewickrema. The GA is Major General Ranjith de Silva. The Rehabilitation Coordinator is Major General Amaradeva. The Governor’s Secretary is Capt. Patrick Jayasinghe.
Appointing ex-servicemen to key administrative posts has been criticized by members of the administrative service. However, the fact remains that this combination of retired administrative and security officials is well-equipped to implement the ‘Sinhalaisation’ process in the East.
Published: January 1, 2008
இலங்கையில் தமிழர் குடித்தொகை – அறிமுகம்
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான வரலாறும் சமூக- பொருளாதார மதப் பின்னணிகளும் உண்டு. எனினும் மொழியடிப்படையிலே இலங்கை வாழ் மக்கள் தமிழ் மக்களெனவும் பாகுhடுத்தப்படுகின்றனர். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் இலங்கைச் சோனகர் இந்திய சோனகர் என நான்காக வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த வகுப்பு முறை 1911 ஆம் ஆண்டிலிருந்து குடித்கொகைப் புள்ளிவிபர அறிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக ஈழத்திலே வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் இலங்கைத்தமிழர் என்று கருதப்பட்டனர். 19ஆம் 20ஆம் நூற்றண்டுகளில் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் ஜரோப்பியரால் விருத்தி செய்யப்பட்ட கோப்பி தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் மக்கள் இந்தியத் தமிழர் என்று பாகுபடுத்தப்பட்டனர் அவ்வாறே இந்தியத் தமிழர் என்று பாகுபடுத்தப்பட்டனர். அவ்வாறே இலங்கைச் சோனகர் என்றும் இந்தியச் சோனகர் என்றும் தமிழ் மொழி பேசும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் மக்களும் வகைப்படுத்தப்பட்டனர். இவர்களைத் தவிரமலாய் இன மக்களும் இங்குள்ள முஸ்லிம்கனுடன் கொண்டகலாசார உறவின் காரணமாக தமிழை மலாய் சொற்கலப்புடன் பேசி வருகின்றனர்.
இலங்கையில் 1981ஆம் ஆண்டுமார்ச் மாதம் பெறப்பட்டகுடித்தொகை கணிப்பீட்டின்படி இலங்கையில் மொத்தக் குடித்தொகை 14.88 மில்லியனாகவுள்ளது. இதில் சிங்களம்பேசும் மக்களின் எண்ணிக்கை 10.98 மில்லியனகவுள்ளது. இதுமொத்தக் துடித்தொகையில் 74 வீதமாகும். தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை 3.75 மில்லியனாதும். இதுமொத்தக் குடித்தொகையில் 25.3 வீதமாக அமைகிறது. தமிழ்பேசும் மக்களில் இலங்கைத் தமிழ்ர் 1,871,535 பேராகவும் இந்தியத் தமிழர் 825,233 பேராகவும் இலங்கைச் சோனகர் 1,056,972 பேராகவும் காணப்பட்டனர். இவர்களது நூற்று வீதமான முறையே 12.6, 5.6, 7.1 ஆகவுள்ளது. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பின்படி இங்கையில்மொத்தக் குடித்தொகையில் சிங்கள மக்களின் பங்கு 66வீதமாகக் காணப்பட தமிழ் மக்களின் பங்கு 32.2 வீதமாக அமைந்திருந்தது. (இலங்கைத் தமிழ் 12.8 வீதம், இந்தியத் தமிழ்ர் 12.9 வீதம், இலங்கைச் சோனகர் 5.7 வீதம், இந்தியச் சோனகர் 8 வீதம்) 1971 ஆம் ஆண்டு குடித்தொகைக்கணிப்பின்படி இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் சிங்கள மக்களின் பங்கு 72 வீதமாகவும், தமிழ் மக்களின் பங்கு 27.2 வீதமாகவும் காணப்பட்டது. (இலங்கைத் தமிழ்ர் 11.2 வீதம், இந்தியத்தமிழர் 9.3 வீதம், இலங்கை முஸ்லிம்கள் 6.5 வீதம். இந்தியச் சோனகர்0.4)2 1911ஆம் ஆண்டிலும், 1971 ஆம் ஆண்டிலும் பெறப்பட்ட குடித்தொகைத் தரவுகளை 1981 ஆம் ஆண்டுத் தரவுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது நூற்றுவீத அடிப்படையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இதற்குச் சில காரணங்கள் உள. மலைநாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலதலைமுறையாக இந்தநாட்டில் வாழ்ந்துவந்தபோதிலும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தையடுத்து இயற்றப்பட்ட பிரஜா உரிமைச் சட்டங்கள் இம்மக்களை நாடற்றோராக மாற்றின. சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில ஒப்பந்தங்களின் பேரில் நாடற்றோர் பிரச்சனைகள் ஓரளவுக்குத் தீர்த்துவைக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு சிறிமா- சாஸ்திரி -இந்திரா உடன்படிக்கையின்படி இந்திய மக்களில் 5,25,000 பேர் இந்தியா செல்லவும் 3,00,000 பேர் இலங்கை குடியுரிமை பெறவும் வழியேற்பட்டது. இவ்வாறான ஒப்பந்தங்களின் பேரில் இந்தியத் தமிழர் வெளியேறி வருவதால் இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் தமிழர் நூற்றுவீதம் குறைவடைந்து செல்கிறது. இலங்கைத் தமிழரில் 35 வீதத்தினர் நகரங்களில் வாழ்வதால் இவர்களிடையே குடும்பக் கட்டுப்பாடு அதிகளவில் கடைபிடிக்கபடுவதும் பெண்கள் திருமணம் புரிவதற்குப் பெரும் தொகையாகச் சீதனம் கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே நிலவுவதால் பெண்களின் சராசரித் திருமண வயது பின்தள்ளப்படுவதும் அண்மைக் காலங்களில் தமிழ் இளைஞர் வேலைவாய்ப்பு நாடி வெளிநாடுகளுக்குச் செல்வதும் தமிழர் குடித்தொகையை எண்ணிக்கையளவில் குறைக்கும் ஏனைய காரணிகளாக அமைகின்றது.
தமிழர் குடிப்பரம்பல்
தமிழ் பேசும்மக்களில் 55.6 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் 23.83 வீதத்தினர் மலைநாட்டுப் பகுதியாகிய மத்திய ஊவா மாகாணங்களிலும் 11.5 வீதத்தினர் தலைநகர் அமைந்திருக்கும் மேல் மாகணத்திலும் மிகுதி 9.1வீதத்தினரே ஏனைய நான்கு மாகாணங்களிலும் பரந்து வாழ்வதை அவதானிக்க முடிகிறது. தென் இலங்கைப்; பகுதிகளில் தமிழர் பரம்பல் பெருமளவுக்கு நகரப்புறம் சார்ந்தே காணப்படுகின்றது. தமிழ்மக்கள் செறிவாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் பகுதிகள் ஈழத்தின் வடக்குக் கிழக்கு பகுதிகளாகவும் மலைநாட்டுப் பெருந்தேட்ட பகுதிகளாகவும் காணப்படுகின்றன. இந்தியத் தமிழருள் 63.1வீதத்தினர் மலைநாட்டுப ;பகுதியாகிய மத்திய ஊவா மாகாணத்தில் வாழ்வது போன்று இலங்கைத் தமிழரில் 72.6 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அப்பகுதிகளில் வாழ்ந்து வருவதால் அப்பகுதி தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வடக்குக் கிழக்கு மாகாணத்தை விடப் பரந்ததென்றும் இது மேற்கே மாஓயா (வாய்க்கால்ஆறு) தொடக்கம் தெக் கிழக்கே கும்புக்கன் ஆறவரை பரந்துள்ள கரையோர நிலப்பகுதியென்றும் பல குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றது. எனினும் இவ் ஆய்வு வடகிழக்கு மாகணங்களே தமிழர் பாரம்பரியப் பிரதேசமெனக் கொள்கிறது.
தமிழர் வரலாறு
இலங்கையில் தமிழர் குடியிருப்புகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஏற்பட்டு வந்திருக்கின்றன. இவை தமிழகத்திலிருந்தே ஏற்படுத்தப்பட்டன. சிங்கள மக்களின் மூதாதையெனக் கொள்ளப்படும் வியன் எனும் வங்கத்து இளவரசன் தம்பபண்ணியில் (மாதோட்டம்) கி:மு 483 ஆம் ஆண்டில் வந்திறங்கியபோது இலங்கையில் நபகர் இயக்கர் எனும் ஆதிக்குடிகள் இருந்தமை பற்றியும் தம்பண்ணி துறைமுகமாகவும் தலைநகராகவும் விளங்கியமை பற்றியும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.இங்கு காணப்பட்ட ஆதிக்குடிகள் திராவிடர்களென்றே கருதப்படுகின்றனர்;. இலங்கையிலே நாகர் என வழங்கப்பட்ட பழந்திராவிட இனத்தினர் மிகவும் முற்பட்ட காலத்திலே இலங்கையை ஆட்சி புரிந்தனரென அறிய முடிகின்றது நாகம் தொட்பான இடப்பெயர் மக்கட்பெயர்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் நாகதீவு என்றும் முன்பு வழங்கிற்று. முதற் சங்கப்புலவர்களான முடிநாகராயர் இளநாகர் ஈழத்துப் பூதந்தேவனார் நீலகண்டனார் என்பவர்கள் ஈழநாட்iடுச் சேர்ந்த சங்கப்புலவர்களெனக் கருதப்படுகின்றனர். முதற் சங்க காலம் கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் 2ஆம் நூற்றாண்டு வரை நிலவியதென்றும் இக்காலத்தில் குமரிமுனைக்குத் தெற்கில் நெடுந்தொலைவுவரை தமிழக எல்லை பரந்திருந்ததென்றும் அப்படிப் பரவியிருந்த நிலப்பகுதி நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததென்றும் கூறப்படுகின்றது. குறும்பநாடு என வழங்கிய இத் தென்னிலப் பரப்பிற் பெரும்பாகம் கடற்கோள்களினால் அழிவுற்றதென சங்க இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். இவ்வபரங்களைக் கருத்திற் கொள்ளும் போது முன்னர் இலங்கை தமிழகத்தின் ஒருபகுதியாக விளங்கியிருக்கக்கூடும் எனக் கருதலாம். .
புவியல் சார்பாக நோக்குமிடத்து தென்னிந்தியாவிலிருந்து குடிநகர்வு ஏற்படுவதற்குச் சாதகமான பெதிக அமைப்புகளை இலங்கையின் வடபாகம் கொண்டுள்ளது. இலங்கையின் வடமேற்குப் பகுதியும் யாழ்ப்பாணக் குடாநாடும் தென்னிந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதோடு பிரிக்கும் கடலும் ஆழமற்று ஆங்காங்கே தீவுத் தொடர்களைக் கொண்டும் விளங்குகின்றது தென்மேற்கு மொன்;சூன் வடகீழ் மொன்சூன் ஆகியன வீசும் திசையின் வாய்ப்புக் காரணமாக இருநாடுகளுக்குமிடையிலான கடற்பயணம் இலகுவானதாக அமைந்துள்ளது. அத்துடன் வடபகுதியில் குடாக்கள் நிறைந்த பரவைக்கடல் காணப்படுவதும் வடமேற்குப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் காணப்படும் தரைகீழ் நீர்வளமும் மீன்பிடி விவசாயக் குடியிருப்புக்கள் ஏற்படுவதற்குரிய சாதகமான பௌதிகக் காரணிகளாக விளங்குகின்றன. இச்சாதகமான அம்சங்கள் மிகப்பழைய காலத்திலிருந்தே தென்னிந்திய தமிழ் மக்கள் இங்குவந்து குடியேறுவதற்கு வழியமைந்திருக்குமென்பதில் ஐயமில்லை
இந்தியாவில் காணப்படுவது போன்று இலங்கையிலும் திராவிடப் பண்பாட்டீன் பழமையைக் காட்டும் பெருங்கற் புதைவுகாலப் பண்பாட்டின் தடயங்கள் ஆங்காங்கே காளப்படுவதை தொல்பொருள்இயல்ஆய்வுகள்வெளிப்படுத்துகின்ற.6 புத்தளம், மாதோட்டம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ன.7 தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகழ்வாய்வுகளதும் ஏனைய வரலாறு, சமுயவியல், புவியியல், சான்றுகளும் பழந்திராவிடர் குடியேற்றம் பற்றிய அரிய பல உண்மைகளை வெளிக்கொணருமென எதிர்பார்க்கலாம். வுரலாற்றின் ஆரம்ப காலத்தில் இலங்கையை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சிங்களவரே ஆட்சி புரிந்தனரென கூறப்படுகின்ற போதிலும் சில காலங்களில் இங்கு தமிழ் அரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். கி.மு.161 ஆம் ஆண்டில் தென்னிலங்கைக் காட்டினுள் ஒழித்திருந்து படைதிரட்டி வந்து அநுராதபுர ராச்சியத்தைக் கைப்பற்றிய துட்டகாமினியின் ஆட்சிக்கு முன்பு தென்னிந்திய சோழ அரசனான எல்லாளன் என்பவன் அநுராதபுரத்தை நாற்பத்திநான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது. கி.பி.993 முதல் 1071 வரை சோழ சாம்ராச்சியத்தின் மும்முடிச்சோழ மண்டலத்தினுள் இலங்கையின் வடபகுதி ராச்சியம் அடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழ வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் கி.பி.13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. கலிங்கமானது படையெடுப்பின் விளைவாக (கி.பி.1215-1236) பொலனறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உள்ளடக்கியிருந்த அரசு அழிவுற்றது. இக்குழப்ப நிலையின் பின்னர் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே தம்பதெனிய அரசும் ஏனைய வறண்ட காடடர்ந்த பகுதிகளில் வன்னிக் குறுநில அரசுகளும் தோன்றி நிலைபெற்றன. வடஇலங்கையில் யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் அரசு சபுமல் குமாரன் எனும் சிங்கள இளவரசனின் இடையீடு ஏற்பட்டபதினேழு வருடங்களைத் தவிர (கி.பி 1450- 1467) போர்த்துக்கோயர் கி.பி.1618இல் யாழப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனிடமிருந்து அரசைக் கைப்பற்றும்வரை நிலைத்திருந்தது. யாழ்ப்பாண பட்டினமென வழங்கிய தமிழரசிலே யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதி மாத்திரமனறி பிதான நிலப்பகுதியின் வடக்கு வடகிழக்கு வடமேற்குப் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. காடடர்ந்து காணப்பட்ட இவ்வறண்ட பகுதிகள் வன்னி என அழைக்கப்பட்டன. தமிழிலக்கியங்கள் வன்ய என்ற வடமொழிப் பதத்தைக் காடடர்ந்த நிலங்களில் வாழ்ந்த முல்லை நிலத்து மக்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளன. தெற்கே சிங்கள அரசிலும் ஆங்காங்கே வன்னி எனப்பட்ட குறநிலவரசுகள் காணப்பட்டனவெனினும் இலங்கையில் தமிழர் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே இவை அதிகம் பரந்திருந்தன. இவை யாழ்ப்பாண வன்னிமை புத்தளவன்னிமை திருகோணமலை வன்னிமை மட்டக்களப்பு வன்னிமை என வழங்கப்பட்டன. வன்னிப்பிரதேசம் காடடர்ந்த பகுதியாக இருந்தமை ஆட்சிக்கு அரணாக அமைந்தது. இதனால் வன்னிக்குறநில அரசர்கள் பொதுவாக திறை செலுத்திய ஆட்சிப் பிரதானிகளாக விளங்கிய போதிலும் சில சமயங்களில் சுதந்திரமான அரசையும் நிலைநிறுத்த முடிந்தது இலங்கைக்குப் போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டில் வந்தபோது பலம் பெற்றிருந்தன. போர்த்துக்கேயர் வர்த்தக நோக்கம் கொண்டே வந்தனரெனினும் காலகெதியில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டனர். கடல்வலுமிக்க போர்த்துக்கேயர் இயற்கை அரண்களால் சூழப்பட்டிருந்த கண்டி நகரைத் தவிர ஏனைய கரையோரப் பகுதி களில் நிலைபெற்றிருந்த அரசுகளைக் கைப்பற்றிக் கொண்டனர். யாழ்ப்பாணத் தமிழ் அரசும் வன்னிப்பிரசே வன்னிப்பிரதேச குறநில அரசுகளும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் தமது பாரம்பரியப் பிரதேசத்தின் அரசுரிமையை இழந்தனர்.
அண்மைய குடித்தொகைப் பண்புகள்
தமிழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணம் 7068 சதுர மைல் பரப்பை அடக்கியுள்ளது. இலங்கையின் மொத்தநிப்பரப்பில் இது 28.3 விழுக்காடாகும். இவை ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு என்பன வட மாகாணத்தினுள்ளும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன. (அட்டவனை 1 பின்னினைப்பு)
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பீட்டின்படி 2,87,943 பேராகும். இலங்கையில் மொத்தக் குடித்தொகையில் இது 14.1 வீதமாக அமைகிறது. வடகீழ் பகுதியின் மொத்த குடித்தொகையில் வட மாகாணத்தில் 53.2 வீதமும் கீழ் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் ஓரளவு சமமானதாகக் குடித்தொகை அளவு அமைய வட மாகாணத்திலே யாழ்ப்பாணமாவட்டமே கூடிய குடித்தொகையைக் கொண்டு காணப்படுகின்றது. வடமாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 74.8 வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டத்திற் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திலும் யாழ்ப்பாணக் குடாநாடே செறிவான குடித்தொகை கொண்ட பகுதியாகும். தமிழர்பாரம்பரியப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பணக் குடாநாடு 6.1 வீதத்தையே கொண்டிருந்த போதிலும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தினர் குடாநாட்டினுள்ளேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
1983 – பின் ஈழத்தமிழர் அவலங்கள்: இலங்கை, இந்தியா
தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான். அது இறந்தகாலம் தொட்டு நிகழ்காலம் வரையும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் தமிழர் அவலங்கள் என்று பார்பது தமிழர் அவலங்களையும் அதன் காரண காரணிகளையும் சரிவரப்பார்க முடியாது போய்விடும். அந்த வகையிலே தமிழர் அவலங்கள் என்று பார்க்கின்றபோது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரையும் தமிழர் எந்தவகையான சிக்கல்களை, சவால்களை எதிர் நோக்குகினறார்கள், எதில் வெற்றி கண்டுள்ளார்கள், இன்னும் எதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்று பார்பதிலேயே இக்கட்டுரை கவனம் செலுத்துகின்றது.
தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசியல் மாற்றங்களால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களும், இராணுவக்கெடுபிடிகளும் தமிழர் அவலங்களில் முக்கியமானதாகும்.
இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமிழர் பல்வேறு விதமான தாக்கங்களை பெரும்பான்மையின அரசிடமிருந்து எதிர் நோக்கும் நிலை காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்தின் முன்னரே தமிழர்கள் பல பாதிப்புக்களைச் சந்தித்தனர்.
இக்கட்டுரையில் தமிழர் அவலங்கள் என்றவகையில் தமிழர் பிரதேசத்தில் குடியேற்றதிட்டங்கள், சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள், தமிழர்களின் இனப்பிரச்சனையும் அதன் பின்னனியும், கல்வி ஒடுக்குமுறை, பயங்கரவாத தடைச்சட்டங்கள், இன்றைய நிலவரம், இனம் மற்றும் அடையாளம் அழிப்பு போன்றவற்றை முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். இதனைவிட இக்கட்டுரையில் ஆண்டுகள், வீதங்கள், கணக்கெடுப்புக்கள், ஆட்சிக்கால அரசாங்கங்கள், இடப்பெயர் மாற்றங்கள் போன்ற முக்கியமானவற்றை குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட உசாத்துணை நூற்களின் பட்டியலையும் இக்கட்டுரையின் முடிவிலே இணைத்துள்ளேன். நான் மேற்கொண்ட ஆய்வானது மேற்குறிப்பிட்ட உசாத்துணை நூற்களின் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத்திட்டங்கள்:
1948 பெப்ரவரி 04 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்ப்பட்டது. சுதந்திர இலங்கையில் முதல்முதலில் கூடிய பாரளுமன்றம், ஒரு இலட்சம் தோட்டத்தெழிலாளரை நாடற்றவர்களாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதுமட்டுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் கொண்டு வந்தது. இக்குடியேற்றங்களால் தென்மேற்கு பகுதியில் சனச்செறிவு கூடியபகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றப்பட்னர். 1948 இன் பின்னர் இரண்டு முக்கியமான குடியேற்றத்திடடம் அமுல் படுத்தப்பட்டது.
1. கல்லோயாத்திட்டம்
2. துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம்
1949 இல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவால் ‘கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித்திட்டம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டது. பட்டினப்பாளை என்ற பாரம்பரியத் தமிழ்ப்பெயரே “கல்லோயா” என மாற்றப்பட்டது. இந்தப்பிரதேசத்தில் 44 குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 38 சிங்களக்குடியேற்றத்திட்டங்கள் ஆகும். மீதி 6 தமிழ்க்குடியேற்றத்திட்டங்களாகும். இவர்களுக்கு விவசாய நீர்பாசன வசதியற்றவர்களாக இருந்தனர். சிங்களப்பகுதி நீர்ப்பாசன வசதியை நம்பியிருக்க வேண்டிய நிலையில் குடியேற்றப்பட்டனர். இவர்களை 1956, 1958 இல் ஏற்பட்ட இனக்கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்டும், எஞ்சியோர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.
இதனைப்போல வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டவிடம் வவுனியாவாகும். வவுனியா வன்னி மாவட்டத்தின் தென்பகுதியிலிருந்து ஒருகிராமமாகும்.
இங்கு பாவற்குளம் என்ற சிறு கிராமத்தின் குடியேற்றத்திட்டம் முக்கியமானதாகும். 1956 இல் 595 சிங்களக்குடும்பங்களும் 463 தமிழ்க்குடும்பங்களும் அமர்த்தப்பட்டன. இதன் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்க்குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டு இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.
கிழக்கில் 1960 இல் அம்பாறை என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இது 1961 இல் விரிவாக்கப்பட்டு பின்னர் அம்பாறை மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் முழுப்பரப்பளவு 4318 சதுரக்கிலோமீற்றர்கள். 1981 இல் இருந்த மக்கள்தொகை பின்வருமாறு:
தமிழ் பேசும் முஸ்லிம்கள் 46.8%
சிங்களவர்கள் 30%
தமிழர்கள் 22.8%
இம்மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களால் 1994 இல் மேற்கொள்ளப்பட்ட குடிசனக் கணக்கெடுப்பின்போது இந்த மாவட்டம் சிங்களப் பெரும்பான்மையினத்தைக் கொண்டு காணப்பட்டது என கணக்கெடுக்கப்பட்டது. இப்போது இப்பிரதேசம் தமிழ் மாவட்டம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டது. இப்பிரதேசத்தின் அடையாள இழப்பிற்கு முக்கிய காரணியாக மகாஓயா, பத்தியத் தலாவை, தெஹியக்கிண்டிய பகுதிகள் இணைக்கப்பட்டதாகும். இவை தமிழர் அல்லாத பிரதேசமாகும்.
இவற்றைவிட தமிழர்பிரதேசங்கள் “புனித பிரதேசம்” என்ற பெயரினால் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டது. இதனைவிட பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமிழர் வாழ்விடங்களாக பின்வரும் பிரதேசங்கள் காணப்பட்டன.
பெரிய நீலாவணை, கல்முனை, காரைதீவு, நிந்தாவூர், திரைக்கேணி, சம்பாந்துறை, அக்கறைப்பற்று, பொத்துவில், பாண்டிருப்பு போன்ற பிரதேசங்கள் காணப்பட்டன.
தமிழர் அவலங்கள் என்றவகையில் முக்கியமானதாக காணப்படுவது: குடியேற்றங்களும், கலவரங்கள் மூலம் துரத்தப்பட்டமையும், கொலை செய்யப்பட்டமையுமாகும். இதனைவிட முக்கியமாக காணப்பட்டது பெயர் மாற்றமாகும். இந்த வகையிலே தமிழ்ப்பிரதேசங்கள் பல சிங்களப்பெயர்கள் இடப்பட்டனவாகும். இவ்வாறு காணப்படும் பிரதேசங்களாவன பின்வருமாறு.
1. பார்வதி கிராமம் – பதவியா
2. முதலிக்குளம் – மொறவேவா
3. பட்டிப்களை – கல்லோயா
4. பெரியகுளம் – நமல்வத்த
5. புதுவைக்குளம் – சங்கரபுர
6. அம்பாள் ஏரி – அம்பாறை
7. மணல் ஆறு – வெலி ஓயா
8. பெரிய விளான்குளம் – மகாதிவுல்ஓயா
9. பனக்கட்டிமுறிப்பு – பென்னிககெற்யாவ
1977 இல் வவுனியா மாவட்ட எல்லைப்பிரதேசப் பகுதியில் இரண்டு குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டன. இவ்வாறு அமர்த்தப்பட்டவர்களில் முன்னைநாள் சிங்களக் குற்றவாளிகள் குடியமர்த்தப்பட்டனர்.
1987 இல் இலங்கையின் வடகிழக்கில் உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில் துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம் முக்கியமானதாகும். இதற்கு உலக வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடமாகாணம் கிழக்குமாகாணம் இணைக்கப்பட வேண்டும் எனக்கூறியது. இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வரமுன்னர் 1988ல் மணல் ஆறுப்பிரதேசம் அபிவிருத்திக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
1988 ஏப்ரல் 14 இல் விடுத்த அரசாங்க அறிக்கையின்படி முல்லைத்தீவுப்பகுதியில் இருந்த மணல்ஆறு என்றவிடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றப்பட்டது. இது இலங்கையின் 26 ஆவது மாவட்டமாக பிரகடணப்படுத்தப்பட்டது. இக்காலத்தில் காணி அமைச்சராக காமினி திஸாநாயக்கா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் அவசர அவசரமாக 3,364 சிங்களக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இது 1988 லும் 1989லும் நடைபெற்றதாகும். இங்கு குடியேறியவர்களின் விகிதாசரப்படி விபரம் பின்வருமாறு:
சிங்களவர்கள் 85%
முஸ்லீம்கள் 6%
தமிழர்கள் 5%
இதனைப்போன்றே தண்ணிமுறிப்புப் பகுதியில் இருந்து 3000 குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்றினார்கள். அவ்வாறு வெளியேற மறுத்த 29 குடிமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் 25,000 க்கும் மேலான சிங்களக்குடிமக்கள் குடியமர்த்தப்பட்டனர். தண்ணிமுறிப்பு என்ற தமிழ்ப்பெயர் ஐனகபுர என மாற்றப்பட்டது. இக்குடியேற்றத்திற்குப் பொறுப்பாக இருந்த படைத்தளபதி ஐனகபெரேரா என்பவரின் பெயரினாலேயே இது மாற்றப்பட்டது.
1987 நவம்பர் மாதம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது சட்டதிருத்தம் முடிக்குரிய காணிகளை மாகாண அரசுகளின் பொறுப்பில் விட, மகாவலி அபிவிருத்தித்திட்டம் மட்டும் மத்திய அரசிடமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையினால் இதுவோர் அரசால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு குடியேற்றத்திட்டமாகும்.
1990 யூன் மாதம் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போர்க்காலத்தில் தமிழர் நிலங்கள் இராணுவமுகாம் அமைப்பதற்கும், பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலும் அப்பகுதியை அண்டியிருந்த மக்கள் அகற்றப்பட்டனர். இவ்வாறு அகற்றப்பட்ட இடங்களாக பலாலி, லிங்கநகர் போன்றனவாகும்.
தமிழர்களின் நிலம் பல வழியிலும் அபகரிக்கப்பட்டதை விடவும் மோசமான நிலை 1995 அக்டோபரில் யாழ்ப்பாணத்தை விட்டு மொத்தமாக வெளியேறியபோது ஏற்பட்டது. சிங்களப்படைகளின் அட்டூழியங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கிருந்த மக்களில் வயது முதிர்ந்தோர், நோயாளிகள், என்றிருந்த ஒரு சிலரைத்தவிர அனைத்து யாழ்மக்களும் ஒரே நாளில் இடம்பெயர்ந்து சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வன்னிப்பிரதேசத்தை வந்தடைந்தனர். இவர்கள் வன்னிப்பிரதேசத்தில் காடுகளிலும், மரநிழலிலும், மழையிலும், வெயிலிலும், உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் அவலப்பட்டநிலை காணப்பட்டது.
சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள்:
இலங்கை தமிழர், சிங்களவர் என்ற இரு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். 1948ல் இலங்கையடைந்த சுதந்திரம் சிறுபான்மைத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது எனலாம். பாரளுமன்றத்தில் 2:3 பெரும்பான்மைப் பலம் இருந்ததால் அரசியல் சட்டத்தையே தமது வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கும் அதிகாரம் பெரும்பான்மையினருக்கு இருந்தது.
சுகந்திரத்திற்கு பின் பதவிக்கு வந்த டி.எஸ். சேனநாயக்காவின் அரசாங்கம் முதலில் எடுத்த நடவடிக்கையே தமிழர்களினது வாக்குப்பலத்தை பலவீனப்படுத்தியமையாகும்.
1949 இல் முதல்முதலில் கொண்டுவரப்பட்ட “இலங்கைக் குடியுரிமைச் சட்டம்” ஒரே இரவிலேயே மலையகத் தமிழர்கள் பத்து இலட்சம் பேர் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். இவர்கள் தங்களது வாக்குரிமையையும் குடியுரிமையையும் இழந்தனர். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையினால் மத்திய மாகாணத்தில் தொகுதிக்கு 30, 000 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2,500 ஆகக்குறைந்தது. இப்படி நாவலப்பிட்டித் தேர்தற் தொகுதியில் 28, 000 ஆக இருந்துவந்த வாக்காளர்கள் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் 2,000 ஆகக்குறைந்தது. இப்படிப்பட்ட வாக்காளர் குறைப்பினால் 1952 இல் நடந்த தேர்தலில் 1948 இல் இருந்ததை விட 7 நாடாளுமன்ற இருக்கைகள் குறைவாக தமிழர்கள் பெற்றனர். அத்தோடு புதிய சட்ட மூலத்தினால் மேலும் 14 தொகுதிகளில் தமிழர்கள் தமது பலத்தையும் இழந்தனர்.
எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் 1949 இல் இணைப்பாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக “தமிழரசுக்கட்சி” யை தொடக்கினார். இத் தொடக்க காலத்தில் இவர் கருத்துக் கூறுகையில் “தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பேணப்பட்டு அவர்கள் சமத்துவமான பிரஜைகளாக மதிக்கப்படக் கூடிய தன்னாட்சி முறையே தமிழர்களுக்கு ஏற்றது” என்றார்.
1956 யூன் 05 இல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த அரசாங்கம் “சிங்களம் மட்டும் அரசகருமமொழி” என்ற சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்த குடியேற்றத்திட்டங்கள் என்ற பெயராலும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிக்கப்பட்டு சிங்களப்பிரதேசமாக ஆக்கப்பட்டது.
இவ்வாறான பின்னனியின் மத்தியில் பலவகையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கைவிடப்பட்டன. அவ்வாறு கைசாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமானவையாக 1958 யூலை 26 இல் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகவிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையிலான பண்டா – செல்வா ஒப்பந்தம்.
இதனைப்போலவே 1983 – 1984 ஆம் ஆண்டுகளில் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவென சகல கட்சிகளையும் உள்ளடக்கிய மகாநாடுகள் நடத்தப்படடன. இவை எந்த முடிவையும் எடுக்காமலேயே முடிவடைந்தன.
அடுத்து 1985 யூலையில் தமிழ்க்குழுக்களும் (TULF, LTTE, EROS, PLOTE, EPRLF, TELO) இலங்கை அரசாங்கப்பிரதிநிதிகளும் வடஇந்தியாவில் பூட்டானின் தலைநகர் திம்புவில் கூடிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஆவன:
1. தமிழர்கள் ஒரு தேசிய இனமென அங்கீகரிக்கப்பட வேண்டும்
2. தமிழர்கள் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. தமிழர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
4. எல்லாத்தமிழர்களினதும் குடியுருமையும் அடிப்படையும் உரிமைகளும் பேணப்படவேண்டும்.
இவ்வாலோசனைக்கு எதிர்ப்பத் தெரிவிக்கும் நடைவெடிக்கையாக வவுனியாவில் 200 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையால் இவ்வாலோசனை கைவிடப்பட்டது.
1987 யூலை 26 இல் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் செய்து கொண்ட ராஜீவ் – ஜே.ஆர். உடன்படிக்கை எழுதப்பட்டது. இக்காலகட்டத்தில் தமிழீழப்பகுதிகளுக்கு வந்த அமைதிப்படை தனது நோக்கத்திலிருந்து விலத்தி பல அழிவுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய இராணுவம் பல அழிவுகளுக்குப் பின்னர் மார்ச்சு 1990 இல் இந்தியா திரும்பியது.
1989 செப்டம்பர் 13 இல் பிரேமதாசா அரசினால் சர்வகட்சி மாகநாடு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த 21 அரசியல் கட்சியைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது பலவருடங்களாக இழுத்தடிக்கப்பட நிலையில் எந்தமுடிவும் அற்ற நிலையில் முடிவடைந்தது.
1993 இல் பிரேமதாசா இறப்பிற்குப்பின் வந்த விஐயதுங்க தமிழர் பிரச்சனை என்பது வெறுமனே ஒரு பயங்கரவாதப் பிரச்சனை என்றும் இராணுவரீதியில் புலிகளை வென்றுவிட்டால் தமிழர் பிரச்சனை முடிந்துவிடும் என்று செயற்பட்டார்.
இதன்பின்னர் 1994 இல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதாக் கூறிக்கொண்டு வந்த சந்திரிக்கா அரசானது கடிதம் மூலமான பரிமாற்றத்தை ஏற்படுத்தியது. இது 02.09.1994 க்கும் 18.04.1995 க்கும் இடையிலான 6 மாதக் காலத்தில் ஏற்பட்டதாகும். ஆக மொத்தத்தில் 70 கடிதங்கள் பரிமாற்றப்படடன. இத்துடன் நாலு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. ஆனால் எதுவுமே பலன் அழிக்கவில்லை.
டிசெம்பர் 2002 இல் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தது. நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் 2002 ஏப்பிரலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்ப்படட்டனவாகும். இதுவும் எந்தவித பலனும் அழிக்கவில்லை எனவே கூறமுடியும்.
தமிழர்களின் இனப்பிரச்சனைகளின் முக்கிய ஆய்வு
தமிழர்களின் இனப்பிரச்சனைகளின் அவலங்கள் என்றவகையிலே பல கசப்பான அனுபவங்களும், ஏமாற்றங்களும், பாரிய இழப்புக்களும், இனவொடுக்குமுறை, தொடர்ச்சியான பயங்கரவாதம், மற்றும் போர் போன்றனவே முக்கியமானவையாகும். அவற்றில் முக்கியமானவையாக கல்வி ஒடுக்குமுறை முக்கியமானதாகும்.
1960 வரை இலங்கையில் இருந்த பாடசாலைகள் பெரும்பாலும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ அமைப்புக்களின் மேற்பார்வையிலே இயங்கிவந்தது. 1960, 1961 இல் பெரும்பாண்மையான பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டனவாகும். இதனைத் தொடர்ந்து பாடப்புத்தகங்கள், பாடசாலை நிறுவாகம், ஆசிரியர் நியமனம், பாடசாலை நூலக நியமனம் போன்ற பலவிடயங்களில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணியாக சிங்கள மொழி அரசகரும மொழியாக அமைந்ததேயாகும். இதனைவிட பாடப்புத்தகங்களில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை வலுயுறுத்தியும் எழுதப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக 1983 ஐனவரி 1 இல் சனாதிபதியினால் கையளிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் 1948 இல் இலங்கை பெற்ற சுகந்திரம் சிங்களவர்களாலேயே பெறப்பட்டது என்றும் அது சிங்களவரால் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களில் அரசின் அங்கீகாரத்துடன் செயற்படுவது நாட்டின் அமைதிக்குப் பங்கத்தை ஏற்படுத்துவதுடன் இனவாதத்தையும் காட்டிநிற்கின்ற விடயமாகும்.
1970 இல் சிறிமாவோ அரசாங்கத்தினால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவுசெய்யும் முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல். 1971 இல் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தின்படி மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யும் தமிழ் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 400 க்கு 250 புள்ளிகள் தேவையென்றும், சிங்கள மாணவர்களுக்கு 229 போதும் என்றும் சட்டப்படுத்தப்பட்டது. இரு தரப்பும் ஆங்கிலத்தில் தோற்றினாலும் இவ்விதியே பின்பற்றப்படும் எனப்பட்டது.
1972 இல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. அடுத்து 1977 இல் பிரதான பிரச்சனையாக பல்கலைக்கழக அனுமதி அமைந்தது. இவ்வாறன பிரச்சனைகளும் புறக்கணிப்புக்களும் தமிழ் மக்கள் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் கடும்போக்கு 1981 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் யாழ் நூலகத்திற்கு வைத்த தீயில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது. இதனை காணி அபிவிருத்தி, மாகவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்காவின் தலைமையிலான குண்டர்கள் செய்துமுடித்தனர்.
யாழ் மக்களின் பண்பாட்டு கருவூலமாக விளங்கிய இந்த நூலகம், சுமார் 98 ஆயிரம் புத்தகத் தொகுதிகளையும் அரிதான கையெழுத்துப் பிரதிகளையும், பண்டைய ஏட்டுச் சுவடிகளையும் கொண்டிருந்தன. இதில் முக்கியமாக கருதப்படவேண்டியவர்கள் வண. பிதா தனிநாயகம் அடிகளார், வண. பிதா. லோங் அடிகளார், வண. பிதா. தாவீது அடிகளார் (டேவிட்) முதலியோர் ஆவர். இவர்களில் தாவீது அடிகளார் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் 1934 இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் தமிழர்கள் அவலங்களும்
1979 இல் முதல் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் பெயரால் சந்தேகத்தில் கைதாகும் ஒருவரை 18 மாதங்கள் எந்தவித விசாரணையுமின்றி தடுத்துவைக்கப்படவும் அவரைப்பார்பதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்டமானது 1982 இல் நிரந்திரமாக்கப்பட்டது. இதனால் கைதானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே, மற்றும் தமிழ் இளைஞர்களே ஆவர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் எந்தவிதக் காரணமின்றியே சிறைப்படுத்தப்பட்டு சித்திரைவதைக்கு ஆளாகினார்கள்.
இவ்வாறான காலகட்ட தமிழர்களின் அவலங்களில் 1983 ஆம் ஆண்டு முக்கியவிடம் பிடிக்கின்றது. 1983 இல் பாதுகாப்பு படையின் அனுசரனையுடன் அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனப்படுகொலை விடுதலை வேண்டி நின்ற மக்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கையாக அமைந்தது. 1958, 1965, 1971, 1977, 1979, 1981 என கட்டவிழ்தது விடப்பட்ட இனக்கலவரங்கள் பலவும் தமிழர்கள் தமக்கெனவோர் நாடு வேண்டி போராடும் சுழ்நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். 1983 இனப்படுகொலை கலவரத்தின் போது நேரிற்கண்ட சாட்சியங்களாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், அவர்கள் எடுத்த புகைப்படங்கள் முதலியவன ஆவணப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
இவ்வாறான அவலங்களுக்கு மத்தியிலும் தாம் உயிர்வாழ முடியாது என அஞ்சி தமிழ் மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டனர். இவ்வாறான இடப்பெயர்வுகள் மக்களை வெளிநாடுகளுக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு பெரும்பாலான இலங்கை தமிழர்கள் அரசியல் புகழிடம் கோரி வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டமை சிங்கள இனத்திற்கு வாய்பாக அமைந்தது எனலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் பலத்தைக்குறைக்கவும் மட்டுப்படுத்தவும் சிங்கள அரசு வெளிநாடுகளில் தமது தூதரங்கள் கொண்டு, பரப்புரைகள் மூலமும் செயற்பட்டுவருகின்றது.
அவலங்கள் என்ற வகையிலே ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் ஆகும். அந்த வகையில் சுதந்திரப்போராளிகளை பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டி உலக நாடுகளின் அனுதாபத்தையும் கவனத்தையும் பெரும்பாண்மை ஆதிக்கவாசிகள் ஈர்த்து விடுகின்றனர். எவ்வகையிலும் இழப்பு என்பது சிறுபான்மை இனத்தினருக்கேயாகும்.
ஈழத்தமிழர் அவலங்கள் என்பது பொதுவாக உரிமைக்காகப் போராடிய மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டமையே ஆகும். இனப்படுகொலை என்பது இருவகைப்படும். ஒன்று திட்டமிட்ட முறையில் படிப்படியாக ஒரு இனத்தின் அத்திவாரத்தை ஆட்டமிழக்கச் செய்து அந்த இனத்தை ஒடுக்கி அழித்தல். இது அவர்களின் மொழி, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், அவர்கள் பாரம்பரிய நலங்களின் புவியியல் அமைப்பு முதலியவற்றைச் சிதைத்தல். அடுத்து வெளிப்படையான கொலை மூலம் அழித்தல். ஈழத்தமிழர்கள் இவ்விரண்டு வகையான அவலங்களைச் சந்திக்கின்றார்கள். இதனைவிட பொருளாதாரத்தடை போன்றவற்றையும் அரசு மேற்கொள்கின்றது.
1998 நவம்பர் 21க்கும் 27க்கும் இடையில் பாசிலோனா என்றவிடத்தில் சர்வதேச அரசியல் வல்லுனர்களின் மகாநாடு ஒன்று நடைபெறுகின்றது. இந்த மாகாநாட்டில் “சர்வதேசங்களிலும், மனித உரிமைகள் உட்பட்ட இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எல்லாவித சட்டங்களும் உலகளாவியரீதியில் பாராபட்சமற்ற முறையில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்” எனப்பேசப்பட்டது.
இன்று ஈழப்போராட்டமானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் போராட்டமாகப் பரிமாணித்துள்ளது. “உலகெங்கும் 71 நாடுகளில் வாழும் 70 கோடிக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் கவனம் இவ்விடயத்திலேயே ஈர்க்கப்பட்டுள்ளது.” 1956 இல் ஏற்படுத்தப்பட்ட தனிச்சிங்களச் சட்டமே 1972 இல் ஆரம்பித்த தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கான அடித்தளத்தை இட்டது எனலாம்.
ஒப்பந்தங்கள் பலவாறு இருந்தாலும் தமிழர்களது உரிமைகளை முற்றாக நிராகரித்ததொன்றாகவே இருக்கின்றது. கடந்த 30 வருடங்களின் பின்னர் கூட இந்த நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பபடவில்லை. 1987 இல் இலங்கையில் அமைதியும் சமாதானத்தையும் நாட்டவென தீவிர முயற்சிகளின் பின் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்தியா உடன்படிக்கையை தமிழரசுக்கட்சியின் பின்னாள் வடிவமான தமிழர் கூட்டணி ஏற்றுக்கொண்டு முன்னைய தமிழ் அரசியல் வாதிகள் செய்த அதேதவறைத் தொடர்ந்து.
1997 இல் இலங்கை – இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் கூட பொதுஐன ஐக்கிய முன்னணி முன்வைத்த தீர்வுப்பொதி சிங்கள அரசியல் வாதிகளின் சிங்களத் தேசியம் பற்றிய மனநிலையையே பிரதிபலித்தது. கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பார்க்கும் போது சிங்களத்தலைமை எதுவாக இருந்தாலும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை, அதிகாரப்பகிர்வு, அரசமொழி, குடியேற்றங்கள் என்பனவற்றில் ஓரே விதமான கொள்கையையே கடைப்பிடிப்பதன என்பது திண்மம். இலங்கையில் ஈழத்தமிழர்களின் ஆதிக்கததையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள், அவர்களை 1970 – களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள். சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதி;த்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்த்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஸ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள். தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக்குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அல்லலுறும் தமிழ் இனத்தின் பிரச்சனை என்பது வெறும் பெரும்பாண்மை சிறுபான்மைப் பிரச்சனை ஒன்றல்ல. அதற்கும் மேலாக இரு இனங்களுக்கான தேசியப்பிரச்சனை என்பதுதான் உண்மையாகும்.
உசாத்துணை – References:
Balasingam, Anton. The Politics of Duplicity, Surray, England: Fairmax Publishing Ltd.,2000
Rasaratnam, Eela varalattil oru Nokku – Thamil Eelam Naadum Arasum (Tamil), Scarborough: Raja Publications, Canada, 1995
Ehanayakivalli, Sivarasasingam. Ellam the Memories of a Nation, Canada: Students offsets services, 2000
ஏகநாயகிவல்லி சி, ஈழவரலாற்றுப்பதிவுகள், கனடா, Arrowweb publishers, 2003
பாலசுந்திரம் இ, ஈழத்து இடப்பெயர் ஆய்வு (யாழ்மாவட்டம்), கனடா, விவேகா அச்சகம், 2002
Jeyaraj D.B.S, Impact of July 1983 on Tamil armed struggle, The Sunday Leader (July 20, 2003) http://www.tamilcanadian.com
Jeyaretnam, J.S.A. Remembering Black July Of The Failed State, Tamil Canadian – July 12, 2006. ) http://www.tamilcanadian.com
ஈழம், இதழ் 12, 15. 04. 1986: பக்கங்கள் 05 – 18
Leave a Reply
You must be logged in to post a comment.