Where Thai-Brahmins chant Tamil hymns

Where Thai-Brahmins chant Tamil hymns

Neeraja Ramesh| Nov 8, 2016

Coronation ceremony of Thai crown prince to incorporate rituals having origins in Tamil Nadu
The upcoming coronation ceremony of Thailand‘s crown prince Maha Vajiralongkorn (following the Thai king’s demise) will have priests chanting hymns in Tamil and Sanskrit. The fact that these hymns form a vital part of the ceremony shows the way the two countries share similarities deeply entrenched in their cultures.

,” says Thailand’s consul general Krongkanit Rakcharoen, who is in charge of the south Indian states.Rakcharoen attributes the similarities in Tamil and Thai culture to the migration of Brahmin priests to ‘Suvarnabhumi’ (South East Asia) during the Chola and Pallava periods.

“These priests went there in search of work and were embraced by the royalty in Thailand. They taught Sanskrit and Tamil hymns, including Thiruppavai and Thiruvempavai, to their Thai counterparts and over a period of time, these hymns formed a salient feature of Thai rituals. The monarchy in Thailand reveres the descendants of these Indian priests and no ritual is performed without their presence,” she says.

An ardent admirer of Tamil culture and architecture, Rakcharoen says she had opted to be posted in Chennai to be able to study more about Tamil culture and its relation to Thai culture. “As a kid, I was taught to chant prayers which had a lot of Tamil and Sanskrit words and after coming here I was amused to see how much our cultures had in common. This goaded me to explore more similarities between the two cultures,” she says.

Rakcharoen gives instances of cultural practices that are similar to both countries. “Our festival ‘Songkran’, celebrated in April is very similar to Holi. During the festival, people spray water on one another like Indians do during Holi. Like Indians, we also fold our hands and say ‘Wai’ to greet people.

Wai is the Thai equivalent of namaskaram. Besides, there are deep similarities in ancient architecture. During a recent visit to Kancheepuram, I was surprised by the striking resemblance Kailasanathar temple bore to some of the ancient temples in Thailand. So similar were the tombs and murals that I almost thought I was actually in Thailand and not in India,” she says.

Stating that even the languages have similarities, she cites a few Thai words that are similar to Tamil words. “Thangam (gold) in Tamil is Thongam in Thai while Malai is Male (garland), appa is pa (father) guru is guru (teacher), pattan is puttan (great-grandfather) and puthran is puthru (son).”

The Indian influence is marked in religious practices too. “Like India, the Shiva Lingam finds a prominent place in Thai temples too. In Thai culture, it is believed that praying before the lingam will bring happiness, success, and abundance in farm produce. Devasthana has three lingams and their origin is traced back to Rameswaram, the birthplace of brahmin priests who migrated to Siam or Thailand,” she adds.

TOP COMMENT

In October 2009 I took a Thai Airlines flight from Singapore to Tokyo. Airborne, meals were served. Two of the colorful hostesses, both charming, tall and wide-eyed, had a name tag tucked on their be… Read MoreSachidhanantha Narayanan

Rakcharoen says the Thai people also observe a nine-day fast during the month of Navaratri. “They abstain from meat, alcohol and sexual encounters as they believe it cleanses them physically and spiritually. Other highlights of the festival are fire-walking, climbing knife-blade ladders and a street procession where people have their bodies pierced with sharp objects – something which is still prevalent in interior parts of Tamil Nadu.”

Another strong proof of the influence of Tamils during the Chola period is the Ramayana. The Ramakian, an epic of Thailand, derived from Indian epic Ramayana is similar to the Kamba Ramayanam written during the 12th century. “The Mayirab story of Thais is also similar to Mayil Ravanan story in south India. “This may be the tip of the iceberg. I plan to explore and learn more about the cross cultures,” Rakcharoen adds.

கம்போடியாவில் அடுத்த மாதம் தமிழ் மாநாடு நடத்தப்படும் : உலக தமிழ் வம்சாவழி அமைப்பினர் பேட்டி

சென்னை : கம்போடியா நாட்டில் தமிழ் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உலக தமிழ் வம்சாவழி அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். தமிழர்களின் வாழ்வியல் அமைப்பை உயர்த்துவதற்காகவே இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்களுக்கு உலகத்தில் உள்ள தமிழர்கள் உதவி செய்து அவர்களது வாழ்வாதரத்தை அதிகரிக்க இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
முதன்முதலாக இரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ மன்னர்கள் கம்போடியாவில் ஆட்சி அமைத்திருந்த நிலையில், தொடர்ச்சியாக சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு 1017ம் ஆண்டில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் இலங்கையை வெற்றி கொண்டார்.

அதன்பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளையும் வெற்றி கொண்டார். இந்த வரலாற்று குறிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் எகிப்தில் தமிழர்கள் ஆட்சி அமைத்திருந்ததற்கான ஆதாராங்களை திரட்டியுள்ளதாக உலக தமிழ் வம்சாவழி அமைப்பினர் கூறியுள்ளனர். தமிழர்களுடைய பண்டைய வரலாற்றுகளை உலகறிய செய்யவே கம்போடியாவில் மே 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய கோவில் கம்போடியா நாட்டில் உள்ள அந்தோர்வாட்டில் உள்ளது. அந்தோர்வாட் கோவில் வளாகத்தில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் என 153 நாடுகளை சேர்ந்தவர்கள் வர உள்ளதாக உலக தமிழ் வம்சாவழி அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர்.


உலக தமிழ் மாநாடு, செம்மொழி அந்தஸ்து என்ன பயன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி

பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் தாக்கல் செய்தார். அதில், ‘இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ரூ.50 முதல் ரூ.200 வரை வசூலித்து தொலைதூர இந்தி மொழிப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. அதுபோல, தமிழ் தெரியாத பிற மாநில மக்களுக்கும், வெளிநாட்டவருக்கும் தொலைதூர கல்வி மூலம் தமிழ் மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2013ம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்களை தமிழக அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்து தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பின் நகல் அண்மையில் வெளியானது. அதில், தமிழை வளர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கடுமையாக நீதிபதிகள் சாடியுள்ளனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “அடுத்த தலைமுறையினருக்கு தமிழை எடுத்துச் செல்லாமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று சொல்லிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்பட போகிறது? ஆதி காலம் முதல் வழக்கத்தில் இருந்து வரும் தமிழுக்கு நீண்ட பாரம்பரியமும், இலக்கண இலக்கியமும் உண்டு. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு. 1-ம் நூற்றாண்டை சேர்ந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் ஆதிச்சநல்லூரில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. சமண மலையில், கி.மு. 2-ம் நூற்றாண்டு தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன.

பாண்டிய மன்னர்கள் 3 தமிழ் சங்கங்களை நடத்தி தமிழ் இலக்கியத்தை வளர்த்துள்ளனர். கி.பி. 6-ம் நூற்றாண்டில் சைவ மதம் தொடர்பாக எழுதப்பட்ட 11 ஆயிரம் ஓலைசுவடிகளை கண்டு எடுக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம், பிரஞ்ச் மொழி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையினரால் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில், 55 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழில் எழுதப்பட்டவை ஆகும். இதுமட்டுமல்ல தமிழ் பிராமி எழுத்துகளை கொண்ட கல்வெட்டுகள் இலங்கை, எகிப்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் கடலோரத்தில் எடுக்கப்பட்ட உடைந்த ஜாடியில், கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளன. இலங்கையில் சீன மொழியுடன், தமிழ் மொழியும் அலுவல் மொழியாக உள்ளது. சிங்கப்பூரில் ஆங்கிலத்துடன் தமிழும் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மழலையர் பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கனடா நாட்டில் ஜனவரி மாதத்தை, ‘தமிழ் பாரம்பரிய மாதமாக’ கொண்டாடுகின்றனர். உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்கள் தமிழ் பேசுகின்றனர். அதிகம் பேசப்படும் மொழியில் தமிழ் மொழி 15-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியை போல, தமிழையும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று தமிழக அரசை மனுதாரர் கடந்த 2013ம் ஆண்டு முதல் வேண்டுகோள் விடுத்து வருகிறார். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம். குறைந்த கட்டணத்தில் தமிழை தொலை தூரக்கல்வி முறையில் பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் திட்டத்துக்கு தமிழ் வளர்ச்சித்துறை செயலர் 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். ஒருவேளை இந்த கல்வி முறைக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டால், அதற்கும் அவர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

மேலை நாட்டவர் எல்லாம், தமிழை உலக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், தமிழ் வளர்ச்சி துறை எதையும் செய்யாமல் உள்ளது. மத்திய அரசும் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய மொழிகளிலேயே செம்மொழி என்ற அந்தஸ்தை தமிழுக்கு முதலில் கொடுத்துள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட அரியானாவில், தமிழ், இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி உள்ளனர். எனவே, தமிழை கண்டிப்பாக பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் தமிழின் பெருமையையும், தமிழ் இலக்கியத்தையும் புரிந்துகொள்ள முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும். மேலும், மத்திய, மாநில அரசுகள், செம்மொழியான தமிழை வெளிநாட்டவருக்கும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வழிவகை செய்யவேண்டும். எனவே, தமிழ் மொழியை காக்கவும், அதை ஊக்குவிக்கவும், தமிழக அரசின் கவனத்துக்கு கீழ் கண்ட பரிந்துரைகளை பரிந்துரைக்கின்றோம்.

தமிழை வளர்க்க, தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் உதவி தொகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ் மொழி இலக்கியங்களை வேறு மொழிகளுக்கும், வேறு மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ் மொழிக்கும் மொழி பெயர்க்க பெரும் தொகையை ஒதுக்கவேண்டும். தமிழை வளர்க்க ஆய்வுகள் பல செய்யும் தமிழ் அறிஞர்களை அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கவும், தமிழை ஆராய்ச்சி செய்வதற்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுடன் கலந்து பேசி, அடுத்த தலைமுறையினருக்கும் தமிழை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளனர்.






About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply