மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்த நாள் அனுட்டிப்பு
தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும், தமிழரசுக் கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம், இன்று சனிக்கிழமை (31) மன்னார் நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நினைவு கூறப்பட்டது.
மன்னார் மாவட்ட தந்தை செல்வநாயகம் அரங்காவல் சபை தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர், மன்னார் தமிழரசுக்கட்சியின் தலைவர் பரஞ்சோதி,உற்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பொது மன்னார் நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து அவரது 121 ஆவது பிறந்ததினம் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 120 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு
Leave a Reply
You must be logged in to post a comment.