தேர்தலில் நின்று கட்டுக்காசை இழந்த வித்தியாதரன் பழுத்த அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுப்பதா?
நக்கீரன்
நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம். தட்டிக் கேட்க ஆளில்லாவிடில் தம்பி சண்டைப் பிரசண்டன் என்பார்கள். வித்தியாதரன் ஒரு நாளேட்டை வைத்துக் கொண்டு அதன் வாயிலாக சகட்டு மேனிக்கு எல்லோருக்கும் அரசியல் பாடம் எடுக்கிறார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாடம் எடுக்கிறார். இப்படிப் பாடம் எடுக்கும் இவரது யோக்கியதை என்ன? தகைமை என்ன? தகுதி என்ன?
இவர் என்ன தன்னை அறிவில் பிரகஸ்பதி, அரசியலில் சாணக்கியன், வில்லில் விசயன் என நினைக்கிறாரா?
கடந்த ஓகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்குகொள்ள சீமான் வித்தியாதரன் ஒரு கட்சியைத் தொடங்கினார். அதன் பெயர் சனநாயகப் போராளிகள் கட்சி. அதன் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என அறிவித்தார். அத்தோடு நிற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைச் சந்தித்து தனது கட்சிக்கு தேர்தலில் போட்டியிட 9 இடங்களை ஒதுக்கித்தரக் கேட்டார். அது மறுக்கப்பட்டதும் சனநாயக போராளிகள் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிக்கை விட்டார். கட்சியின் முதன்மை வேட்பாளர் தான்தான் என்றும் அறிவித்தார். போராளிகளுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தம் 1979 வாக்குகள் மட்டும் எடுத்து கட்டுக் காசையும் பறிகொடுத்தது. சரி, தோல்விகள் என்பது வெற்றியின் படிக்கட்டுகள் எனச் சொல்லிக் கொண்டு அந்தக் கட்சியை வளர்க்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? ஆள், அணிகளைத் திரட்டினாரா? மெல்ல அந்தக் கட்சியில் இருந்து விட்டனடி கொண்டலடி என்பது போல விலகி விட்டார்.
நடந்து முடிந்த 340 சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் புதிய முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள 58 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகள் 48 ஆகும். புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்ட ததேகூ இன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சபைகளில் எந்தக் கட்சிக்கு அதிக இருக்கைகள் இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் எல்லாச் சபைகளிலும் பிச்சல் புடுங்கல் இல்லாமல் ஒரு உறுதியான ஆட்சியை அமைக்க முடியும் என்றும் சொன்னார். மேலும் இதன் அடிப்படையில் சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை இரண்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க ததேகூ ஆதரவு அளித்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.
ஆனால், எப்போதும் எடுத்தேன் கவிழ்த்தேன் என யோசியாமல் பேசும் திருவாளர் கஜேந்திரகுமார் சாவகச்சேரி மாநகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டில் மட்டும் அல்ல யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை (வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை) போன்ற பிரதேச சபைகளிலும் சைக்கிள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தார். அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். அவரது ஆசையின் படி ஒரு இரகசிய தேர்தல் நடந்தால் ததேகூ இல் இருக்கும் உறுப்பினர்கள் பலர் தனது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றார். இது ஒரு மோசமான முன் எடுத்துக்காட்டு என்பது அவருக்கு விளங்கவில்லை! இந்த விளையாட்டை மற்றக் கட்சிகளும் செய்ய வெளிக்கிட்டால் என்ன நடக்கும்?
சுமந்திரனின் சமரச யோசனையை கஜேந்திரகுமார் அற்ப புத்தி காரணமாக நிராகரித்தார். அவர் சொன்னது போலவே யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டுத் தோற்றுப் போனது. அவரது சைக்கிள் கட்சியில் போட்டியிட்டுத் தெரிவான 13 உறுப்பினர்களே அவர்களது மேயர் தேர்தல் வேட்பாளர் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இரண்டாவது சுற்றில் வாக்கெடுப்பு எடுக்க முன்னரே இபிடிபி சபையை விட்டு வெளியேறியது. இதனால் 18 வாக்குகள் பெற்ற ததேகூ இன் மேயர் வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை) போன்ற பிரதேச சபைகளிலும் சைக்கிள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தார். அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். அவரது ஆசையின் படி ஒரு இரகசிய தேர்தல் நடந்தால் ததேகூ இல் இருக்கும் உறுப்பினர்கள் பலர் தனது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றார். இது ஒரு மோசமான முன் எடுத்துக்காட்டு என்பது அவருக்கு விளங்கவில்லை! இந்த விளையாட்டை மற்றக் கட்சிகளும் செய்ய வெளிக்கிட்டால் என்ன நடக்கும்?
சுமந்திரனின் சமரச யோசனையை கஜேந்திரகுமார் அற்ப புத்தி காரணமாக நிராகரித்தார். அவர் சொன்னது போலவே யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டுத் தோற்றுப் போனது. அவரது சைக்கிள் கட்சியில் போட்டியிட்டுத் தெரிவான 13 உறுப்பினர்களே அவர்களது மேயர் தேர்தல் வேட்பாளர் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இரண்டாவது சுற்றில் வாக்கெடுப்பு எடுக்க முன்னரே இபிடிபி சபையை விட்டு வெளியேறியது. இதனால் 18 வாக்குகள் பெற்ற ததேகூ இன் மேயர் வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் எதிரொலிதான் சைக்கிள் கட்சி சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டையும் பறிகொடுக்க நேரிட்டது. இப்போது சைக்கிள் கட்சி அணிலை ஏறவிட்ட நாய் போல நிற்கிறது.
அரசியலில் சாணக்கியம் வேண்டும். அரசியல் என்பது ஒரு கலை. அடைய முடியும் என்ற கலை. அடுத்த தெரிவு பற்றிய கலை. அது எது சரி அல்லது எது நல்லது என்பதுபற்றிய தெரிவு அல்ல. அது இலட்சியங்களுக்கு மேலாக நடைமுறை (அரசியலை) முன்வைத்து மதிக்கும் தத்துவம்.
(Politics is the art of the possible, the attainable — the art of the next best. It’s not about what’s right or what’s best. It’s about what you can actually get done”. It’s associated with Realpolitik, a political philosophy of setting pragmatism over your ideological goals. .Otto von Bismarck)
தேர்தலுக்கு முன்னர் ததேகூ, இபிடிபி கட்சியிடம் மண்டியிட்டது என வித்தியாதரன் கொட்டை எழுத்தில் முன்பக்கச் செய்தியாக போட்டு அற்ப மகிழ்ச்சி கொண்டார். உண்மையில் என்ன நடந்தது? இபிடிபி தலைவர் டக்ல் தேவானந்தாவோடு தொலைபேசியில் பேசிய தமிழ் அரசுக் கட்சித் தலைவர் ததேகூ க்கு அதிக எண்ணிக்கையான உறுப்பினர்கள் இருப்பதால் மேயர் பதவி தனது கட்சிக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். அவ்வளவுதான்.
ஆனால் வேலணை பிரதேச சபைத் தேர்தலில் ததேகூ, இபிடிபி இரண்டுக்கும் இடையில் நடந்த போட்டியில் இபிடிபி வென்றது. அதன் பின்னரும் ததேகூ – இபிடிபி கூட்டு இருப்பதாக விதியாதரன் பொய் பொய்யாக எழுதுகிறார்.
வேலணை பிரதேச சபையில் இபிடிபி வென்றதற்குக் காரணம் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை தமக்கே சொந்தம் என்று கொண்டாடும் சைக்கிள் கட்சி உறுப்பினர் வாக்கெடுப்பின் போது நடு நிலைமை வகித்துவிட்டார்! தமிழ்த் தேசியத்துக்கு ததேகூ துரோகம் செய்து விட்டதாக வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்ளும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இபிடிபி ஆதரவாக வாக்களித்திருக்கிறார்!
இந்த அலங்கோலம் பற்றி வித்தியாதரன் மூச்சுப் பேச்சே இல்லை. அதுமட்டுமல்ல இபிடிபி டக்லஸ் தேவானந்தா ஒரு seasoned politician (அனுபவப்பட்ட அரசியல்வாதி) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் புகழ்மாலை சூட்டுகிறார். உண்மையில் வித்தியாதரன் விளக்குமாற்றுக்கு குஞ்சம் கட்டுகிற வேலையைச் செய்கிறார்.
தேர்தலில் நின்று கட்டுக்காசை இழந்த ஒருவர் ஊருக்கு உபதேசம் செய்யும் போது தன்னடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கூரையேறி கோழி பிடிக்க முடியாத குருக்கள் எப்படி வைகுண்டத்துக்கு வழிகாட்ட முடியும்?
Leave a Reply
You must be logged in to post a comment.