த.தே.கூ. தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28) வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு கொள்கைப் பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
மாவை சேனாதிராஜா எம்.பியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதன் பின்னர், இரா. சம்பந்தனினால் கட்சித் தலைவர்களுக்கு அவ்விஞ்ஞானபனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன்,, சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. சிறிகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(வவுனியா விசேட நிருபர் – கே. வசந்தரூபன்)
https://nakkeran.com/wp-admin/post-new.php
Leave a Reply
You must be logged in to post a comment.