தமிழில் 247 எழுத்துக்கள்

 தமிழில் 247 எழுத்துக்கள்

Mon Jan 29, 2018

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42
எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம், இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக
பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்,
அ    ………..>  எட்டு
ஆ    ——-> பசு
ஈ———>   கொடு, பறக்கும் பூச்சி
உ ———> சிவன்
ஊ ——–> தசை, இறைச்சி
ஏ ———> அம்பு
ஐ ——–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ ———> வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
கா —– –> சோலை, காத்தல்
கூ ——–> பூமி, கூவுதல்
கை ——> கரம், உறுப்பு
கோ —–> அரசன், தலைவன், இறைவன்
சா ——-> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ ——–> இகழ்ச்சி, திருமகள்
சே ——> எருது, அழிஞ்சில் மரம்
சோ —–> மதில்
தா ——> கொடு, கேட்பது
தீ ——-> நெருப்பு
து ——-> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ ——> வெண்மை, தூய்மை
தே ——–> நாயகன், தெய்வம்
தை ——-> மாதம்
நா ——–> நாக்கு
நீ ———> நின்னை
நே ——-> அன்பு, நேயம்
நை ——-> வருந்து, நைதல்
நொ ——> நொண்டி, துன்பம்
நோ ——> நோவு, வருத்தம்
நௌ —–> மரக்கலம்
பா ——–> பாட்டு, நிழல், அழகு
பூ ———-> மலர்
பே ——–> மேகம், நுரை, அழகு
பை ——-> பாம்புப் படம், பசுமை, உறை
போ ——> செல்
மா ——-> மாமரம், பெரிய, விலங்கு
மீ ——–> ஆகாயம், மேலே, உயரம்
மு ——–> மூப்பு
மூ ——-> மூன்று
மே ——> மேன்மை, மேல்
மை ——> அஞ்சனம், கண்மை, இருள்
மோ —–> முகர்தல், மோதல்
யா ——> அகலம், மரம்
வா ——> அழைத்தல்
வீ ——–> பறவை, பூ, அழகு
வை —–> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ —> கௌவுதல், கொள்ளை அடித்த

இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன . அவற்றைத் தெரிந்து
கொள்வோம். பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்.

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply