தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் சனாதிபதி சந்திரிகா!

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் சனாதிபதி சந்திரிகா!

தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவது போல சனாதிபதி சந்திரிகா அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் அந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைவதற்குத் தன்னாலான முயற்சிகள் அத்தனையையும் கனகச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.
புதிய அரசியல் தீர்வு யோசனைகள் வெற்றியடைய வேண்டும் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிளதும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் கண்டிப்பாகத் தேள்வை. ஆனால் சனாதிபதி சந்திரிகாவோ அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சித் தலைவரை சாடுவதிலேயே குறியாக இருக்கிறார்.
கடந்த 9 ஆம் நாள் சனாதிபதி சந்திரிகாவும் – ரணில் விக்கிரமசிங்காவும் நேருக்கு நேர் சந்தித்து வரைவு அரசியல் யாப்பையிட்டு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்று எல்லோராலும் ஏகமனதாகப் போற்றப்பட்ட இந்தச் சந்திப்பு சுமுகமான சூழ்நிலையில் நடந்து முடிந்ததாக செய்தித்தாள்கள் தெரிவித்தன.
பேச்சு வார்த்தையின் முடிவில் அன்று பேசிய விடயங்கள்பற்றி இரு தரப்பினரும் ஒரு கூட்டறிக்கைகூட விட்டிருந்தார்கள்.
ஆனால் இதனை அடுத்து சனாதிபதி சந்திரிகா அளித்த செவ்வி ஒன்றில் வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறிய கதையாக ரணில் விக்கிரமசிங்காவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும், விடுதலைப் புலிகளையும் சாடியிருக்கிறார்.
இந்த (பங்குனி) மாதம் 16ம் நாள் வெளிவந்த குயச நுயளவநசn நுஉழழெஅiஉ சுநஎநைற  வார சஞ்சிகைக்கு செவ்வி அளித்த சனாதிபதி சந்திரிகா ஐக்கிய தேசியக் கட்சி வி.புலிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கொலை செய்ய எத்தனித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரல பின்வரும் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

“Once again president Chandrika Kumaratunga has proved that the greatest obstacle to peace and bipartisan consensus between the PA and the UNP is herself.

The United National Party categorically denies the allegations levelled by the president in her interview to the Far Eastern Economic Review of March 16th, 2000 that the UNP and the LTTE corroborated to have her assassinated. She has lied yet again and with malicious intent.

The talks with the UNP were held not due to the largesse on her mind and heart in 1997 under the Liam Fox agreement both parties accepted the need for a bipartisan approach to find a political solution to end the North East war. It was the leader of the UNP Ranil Wickremasinghe who wrote to President Kumaratunga on the 10th of January 2000, offering to support the draft constitutional proposals of 1997 since she had no other political solution to end the war.

This statement was made after the President and the leader of our party had agreed to meet. Therefore it raises the question that she is in fact not serious about a bipartisan agreement but rather is working towards a personal agenda of scoring political points.”

“ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணிக்கும் இடையில் சமாதானம்பற்றியும் கருத்தொற்றுமைபற்றியும் பக்க சார்பற்ற இணக்கம் காண்பதற்குத் சனாதிபதி சந்திரிகாவே தடையாக இருக்கிறார் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்த (பங்குனி) மாதம் 16ம் குயச நுயளவநசn நுஉழழெஅiஉ சுநஎநைற  வார சஞ்சிகைக்கு செவ்வி அளித்த சனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி வி.புலிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கொலை செய்ய எத்தனித்ததாகச் சொல்லியிருக்கிறார். சனாதிபதி சந்திரிகா( அரசியல்)உள் நோக்குடன் மீண்டும் பொய் சொல்லுகிறார்.

இந்தப் பேச்சு வார்த்தைகள் சனாதிபதி சந்திரிகாவின் தாராள மனப்பான்மை அல்லது இதய சுத்தி காரணமாக இடம் பெறவில்லை. 1997ல் எழுதப்பட்ட டாக்டர் லியாம் பொக்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பக்க சார்பற்ற முறையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டு இப்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இந்தப் பேச்சு வார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொண்டது.

சனாதிபதியின் செவ்வி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் அவரைச் சந்திக்க சம்மதம் தெரிவித்த பின்னரே இடம்பெற்றுள்ளது. எனவே அவர் இனப்பிரச்சினையை பக்க சார்பின்றித் தீர்த்து வைக்க உண்மையில் விரும்புகிறாரா அல்லது தனது சொந்த நலத்தை மனதில் வைத்து அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.”

இந்தச் சஞ்சிகைக்குக் கொடுத்த செவ்வியில் மட்டும் அல்ல அதற்கு முன்னரும் சனாதிபதி சந்திரிகா வி.புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முடிச்சுப் போட்டு இரு சாராரும் தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாக ரூபவாகினிக்கு அளித்த செவ்வியில் (தை 3 ஆம் நாள்) குற்றம்சாட்டி இருந்தார்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி பா.உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா வன்னிக்குப் போய் வி.புலிகளுடன் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்தியதாக சனாதிபதி சந்திரிகா பகிரங்கமாகக் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். இதனை அடுத்து டாக்டர் ஜெயவர்த்தனா மீது சிங்கள-பௌத்த தீவிரவாதிகளால் கொலைப் பயமுறத்தல்கள் விடுக்கப்பட்டது. அதையடுத்து டாக்கடர் ஜெயவர்த்தன உயிருக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை நடாத்தி வருகிறார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையத்துக்கு டாக்டர் ஜெயவர்த்தனா எழுத்து மூலம் முறையிட்டதை அடுத்து அந்த ஆணையம் ஸ்ரீலங்கா அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

சனாதிபதி சந்திரிகாவின் அண்மைக்கால பேச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் சந்தேகிப்பது போல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு திரிகரண சுத்தியோடு அவர் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த நான் தயாராக இருக்கிறேன் ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வர மறுத்தால் அவர்களுக்கு எதிரான யுத்தம் தீவிரப்படுத்தப் படும்.

அது மட்டும் அல்ல அரசு இராணுவத்தை வட-கிழக்கில் இருந்து திரும்பப் பெறப் போவதில்லை என்றும் வி.புலிகள் தீர்வுத் திட்டத்தை நிராகரித்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு ஏனைய தமிழ்க் கட்சிகளுடைய ஆதரவுடன் அதனை நடைமுறைப் படுத்தப் போவதாகவும் சனாதிபதி சந்திரிகா மிரட்டியுள்ளார். வி.புலிகள் தங்கள் தாயகக் கோரிக்கையையும் கைவிட்டு விட்டதாக சனாதிபதி சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் எதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்பதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு சாதாராண அரசியல்வாதி போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் பேசு முடியாது. அப்படிப் பேசுவது அவருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. ஆனால் இந்த அரசியல் பண்பாடு, நாகரிகம் சனாதிபதி சந்திரிகாவிடம் அடியோடு இல்லாமல் இருக்கிறது.

உண்மையாகச் சொல்லப்போனால் சந்திரிகா தனது நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதவியை தக்க வைக்கவே அரசியல் சதுரங்கப் பலகையில் காய்களை நகர்த்துவதாகத் தெரிகிறது. அதனை உறுதிப்படுததும் வகையில் வரைவ யாப்பில் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதிப் பதவி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்க முயற்சி நடக்கிறது. ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னரே சனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்ற புதிய விதி சேர்க்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் சனாதிபதி சந்திரிகா ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தப் பார்க்கிறார்.

இப்போதுள்ள சட்டத்தில்படி ஒரு சனாதிபதி இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்க முடியாது. சனாதிபதி சந்திரிகாவிற்கு இது இரண்டாவது பதவிக் காலமாகும். ஆனால் புதிய யாப்பில் புதிய விதியைப் புகுத்துவதன் மூலம் இப்போதுள்ள பதவியிலும் பிரதமர் பதவியிலும் ஒரே நேரத்தில் நீடித்து இருக்க வழி திறக்கப்படுகிறது.

ஆறு ஆண்டுகள் முடிந்த பின்னர் சனாதிபதிப் பதவியைத் துறந்து விட்டு பிரதமர் பதவியில் அவர் தொடர்ந்து இருக்கலாம். வீட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் இருக்காது.
ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது. சனாதிபதி சந்திரிகா பேச்சு வார்த்தைக்குப் படியிறங்கி வந்திருப்பதற்குக் காரணம் அவரிடம் ஏற்பட்ட மனமாற்றம் அல்ல. வி.புலிகளுக்க எதிரான யுத்தத்தில் அவரது இராணுவம் தோல்வியைச் சந்தித்து வருவதே அவரைப் பேச்சு வார்த்தை மேசைக்குத் தள்ளியுள்ளது.

இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் ஸ்ரீலங்காவிற்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் நெருக்குதலகள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும் என்ற இந்த நாடுகள் சொல்லாமல் சொல்லி வருகின்றன. 1999ம் ஆண்டுக்கான நிதியுதவி இன்னும் கொடுக்கப்பட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சனாதிபதி சந்திரிகா வி.புலிகளுக்கான போரை நடாத்த இந்த 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத்தான் நம்பி இருக்கிறார்.
எனவே வி. புலிகள் தீர்வு யோசனைகளை நிராகரித்தால், அதற்கான பழியை அவர்கள் மீது போட்டு விட்டு மீண்டும் “சமாதானத்துக்கான யுத்தத்தை” தீவிரப்படுத்தலாம். அதே நேரம் வி.புலிகள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் எனக் குரல் எழுப்பி மேற்குலக நாடுகளிடம் இருந்து நிதியுதவியைப் பெற்று யுத்தத்தைத் தொடரலாம். இதுவே சனாதிபதி சந்திரிகாவின் நீண்ட கால அரசியல்-இராணுவ தந்திரமாக இருக்கலாம். (உலகத்தமிழர் – 1999)



About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply