மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் காணி விடுவிப்பு
தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், ஒரு தொகுதி காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையால் விடுவிக்கப்பட்ட பொது மக்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணி கையளிக்கும் நிகழ்வு, உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொது மக்களுக்குச் சொந்தமான, விடுவிக்கப்பட்ட காணிகளது உறுதிப்பத்திரங்கள் இராணுவ கட்டளைத் தளபதியால் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் மேலும் பொதுமக்களுக்குச் சொந்தமொன மேலும் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஹர்ஷன ஹெட்டியாராய்ச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் காணி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
மயிலிட்டி காணி விடுவிப்பு என்பது ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இன்றைய காணி விடுவிப்பானது முதற்படியே என்றும் மிகுதிக் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டர்.
https://news.ibctamil.com/ta/internal-affairs/Relieve-the-Port-of-Mayilty
Leave a Reply
You must be logged in to post a comment.