வேத வித்தகன் இராவணன்
பெருந்தவமும் முதல்வன் முன்நாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த
புயவலியும்
முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளை யெல்லாம் உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே.
இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லானாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. இராவணன் கேட்கும் முன்னாலேயே, முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெல்லப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும் என்றார். இந்த வரத்தை இராவணன் எப்படி எப்பொழுது மறந்தான்?
சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். மண்டோதரியின் அந்தப்புரத்துள் நுழைகிறான். வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே? என்று பதட்டத்துடன் கேட்டாள் பத்தினி. இராவணன், அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி என்றான். என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா? என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.
இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ஆம் தேவி. இப்பொழுது தான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது. அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன். அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா? அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன்பட்டது. வேறெதுவும் இல்லை. சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணி தான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்து விட்டீர்களே சுவாமி! வருத்தினாள் மண்டோதரி.
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் தமிழர்களை பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.
இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசரும் இராவண காவியத்தின் காப்பியத் தலைவனும் ஆவான். இராவணன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறான்.
மேலும் இவன் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிபவன் என்றும் சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. சிவத் தலங்களில் சிவனது வீதியுலாவின் பொழுது பத்து தலைகொண்ட இராவணனது உருவம் சுவாமி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
இராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் – இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன்,விபீடணன் என மூன்று ஆண் பிள்ளைகளையும் காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டான். முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டான். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது
இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலை சிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.
பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப் படுகின்றாரன். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் கலம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.
வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள். அங்கு கோசிகன் போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.
வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள்.
படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன்எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தான்
காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இண்ங்காததால் இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றான்
படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம்வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினான்.
இராவணன் அரசவையில் இராமனை எதி்ர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு விபீடணன்எதிர்ப்பு தெரிவித்தார். சீதையை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். விபீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் விபீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினான்.
இராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகர்ணன் போரில் வீர மரணமடைந்தான். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணனனை அவருடைய மகன் சேயோன் தேற்றினாரன். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தான். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டான்.
இராமனால் இராவணின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டான், விபீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தான். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தான்
இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன – நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது இராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும். இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?
இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும், தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்பட வேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.
அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்.
குடும்பம்
இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர். அட்சயகுமாரன், மாயசுரன், இந்திரசித்து இராவணனின் மகன்கள்.
வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
கைலாயத்தைத் தூக்கும் இராவணன்
இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.
கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டால் ஏது இங்கே பிரச்சினைகள்?
இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக் காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
இராவணன் காலத்து ஆலயங்கள்
இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக் கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.
“வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
இதைவிட… இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.
இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருக்கேதீஸ்வரம்
இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.
திருக்கோணேச்சரம்
(திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.
இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.
இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.
இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.
இராவணன் வெட்டு
படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்
சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.
இராவணன் ஆட்சி
மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்
குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர்.
இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
குமரிக்கண்டம்
சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
சயம்பனின் மருமகன் யாளிமுகன்
ஏதி
ஏதியின் மகன் வித்துகேசன்
வித்துகேசனின் மகன் சுகேசன்
சுகேசனின் மகன் மாலியவான்
மாலியவான் தம்பி சுமாலி
குபேரன்
இராவணன் ஆட்சி
அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிய திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.
இராமாயணத்தில் இராவணன்
இராமனுக்கு நேர் எதிராகவும், இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்குக் கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் வடயிந்திய அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
“இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே”
திருநீற்றுப்பதிகம்
இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு
எண்ணத் தகுவது நீறு – தியானிக்க ஏற்றது திருநீறு
பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு
பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு
தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு
தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே
மண்டோதரி (மந்தோதரி)
வால்மீகியின் மண்டோதரி – இறக்கவில்லை.
கம்பன் மண்டோதரி – இறக்கிறாள்; இறந்தும் இறவாமல் வாழ்கிறாள், நம் உள்ளங்களில்!
இராவணன் மருத்துவம் சம்மந்தமாக இருபத்து ஏழு நூல்களை இயற்றியுள்ளான்
- உடற்கூறு நூல்
- மலை வாகடம்
- மாதர் மருத்துவம்
- இராவணன் – 12000
- நாடி, எண்வகை பரிசோதனை நூல்
- இராவணன் வைத்திய சிந்தாமணி
- இராவணன் மருந்துகள் – 12000
- இராவணன் நோய் நிதானம் – 72 000
- இராவணன் – கியாழங்கள் – 7000
- இராவணன் வாலை வாகடம் – 40000
- இராவணன் வர்ம ஆதி நூல்
- வர்ம திறவுகோல் நூல்கள்
- யாழ்பாணம் – மூலிகை அகராதி
- யாழ்பாணன் – பொது அகராதி
- பெரிய மாட்டு வாகடம்
- நச்சு மருத்துவம்
- அகால மரண நூல்
- உடல் தொழில் நூல்
- தத்துவ விளக்க நூல்
- இராவணன் பொது மருத்துவம்
- இராவணன் சுகாதார மருத்துவம்
- இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
- இராவணன் அறுவை மருத்துவம் – 6000
- இராவணன் பொருட்பண்பு நூல்
- பாண்ட புதையல் முறைகள் – 600
- இராவணன் வில்லை வாகடம்
- இராவணன் மெழுகு வாகடம்
இராவணன் காலத்து சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு (November 20th, 2012)
இராவணன் ஆற்றின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படும் மேற்படி சுரங்கப்பாதையை இராவணன், ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை தோவபன்சலை வரை செல்லப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கல்மலை ஒன்றை வெடி வைத்து அகற்றிய போது, இந்த சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
11 அடி உயரம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையில், கீழ் நோக்கிச் செல்லப்படிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இருபக்கச் சுவர்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராதன இதிகாசங்களின் படி மன்னர் இராவணன், 7 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவுக்குச் சென்று, சீதையைக் கடத்தி வந்து, இராவணன் ஆற்றுக்கு அருகில் மறைத்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இராவணன் ஆற்றில் உள்ள ஒரு சுவரில் இராவணனின் தோற்றம் கொண்ட உருவம் ஒன்றும் வரையப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சுரங்கப் பாதை அமைந்துள்ள பிரதேசத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இலங்கை தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்
பழையநூல்கள்
பரராசசேகரன் உலா
வையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி
கைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்
வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு – மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 – S.Kasishetty
Jaffna Today and Yesterday – 1907 – Duraiyappa Pillai
History of Jaffna – 1912 – Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna – 1926 – Rajanagam
Critiques of Jaffna – 1928 – Njanappiragasar
The Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna – 1978 – Pathmanathan
Early Settlements in Jaffna – Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்
இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?
இராம பக்தர்களே,தயவு செய்து கம்பராமாயணத்தையும்,வால்மீகி இராமாயணத்தையும் ஒரு முறை ஒப்பிட்டு படித்துப் பாருங்கள்.அப்போது தெரியும் கம்பன் என்ன எழுதினான்,வால்மீகி என்ன எழுதினான் என்பதை.இங்கே சொல்வது கற்பனை அல்ல.அதனால் தான் ஆதாரங்களையும் படித்துப் பாருங்கள்.
இராவணன் தங்கை சூர்ப்பனகை பொழுது போக்க செல்கிறாள்.அங்கே இராமனை காணுகிறாள்.அவனை காதலிக்கிறாள்…..இப்படி இராமாயணம் கூறிக் கொண்டு வந்து,
தகாத முறையில் நடக்க முற்பட்டதால் தம்பி இலக்குவன் கொடிய தண்டனை கொடுக்கிறான்,என்று தொடருகிறது இராமாயணம்.
கடவுள் அவதாரம், ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த கொடூர சம்பவத்தை இராவணனுக்கு அவன் தங்கை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட இராவணன் சீதையை சிறை பிடிக்கிறான். அது இராவணனின் தண்டனையே தவிர, இராமனுக்கு உணர்த்துவதற்காகவே தவிர சீதை மேல் காதல் கொண்டல்ல. இவைகள் திரிவு படுத்தப்படுகின்றன.
அனுமன் சீதயை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.
ஆனால் இதை சோ அவ்ர்கள் குறிப்பிடும் போது, இராமன் மதுவல்ல தேனை அருந்தினார் என வக்காலத்து வாங்குகிறார். ஆனால் மாமிசம் பற்றி மறந்து விடுகிறார்.
மது விலக்கை தேன் விலக்கு என்று குறிப்பிடலாமா?
இந்த சமயத்தில் இருக்கு வேதத்தில் மதுவையும் மாமிசத்தையும் பயன்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறதே. தமிழர்களுடன் போர் நடத்தியதையும்,தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி யாகங்கள் நடத்தியதையும் குறிப்பிடுகிறதே, அஸ்வமேத யாகம் சொல்லப்படுகிறதே ஏன் மறைக்கிறார்கள்?
நோக்கம் மூட நம்பிக்கை, சாதி ,இவற்றை தமிழர்களிடம் பரப்பி, அவர்கள் கல்வியை அழிப்பதும்,கல்வி கற்காது தடை செய்வதும் தான்.
வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சுமணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியுமா?
குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம், நீ என்னைப் போலவே இவர்களையும் பாவி என்று கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள்.
வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கம்பன், இதை எல்லாம் மறைத்து விட்டான். ‘சம்பூகன்’ என்ற சூத்திரன் – பார்ப்பனருக்குரிய தவத்தை செய்ததாலேயே – பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ராமன் சம்பூகனைக் கொன்றான்.
இவற்றைச் சொல்ல விரும்பாத கம்பன்,உத்தர காண்டத்தை எழுதாமலேயே விட்டு விட்டான்.
இராமன் ஏகபத்தினி விரதனா?
இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
இது அவரின் கருத்தல்ல,மொழிபெயர்ப்பு
கடவுள் இராமன் சொன்னான், பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. இதுவும் வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100 சொல்கிறது.
கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார்,வால்மீகி இராமாயணத்தை ஆதாரம் காட்டி Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.ஆறு வயதில் அவளும் நோக்கினாள்,அவனும் நோக்கினாள் இது கம்பன் தந்த
இது தவிர அவர் இன்னொரு சங்கடமான, எண்ணியே பார்க்க முடியாத ஒன்றை குறிப்பிட்டு எழுதுகிறார்.தமிழன் நினைத்தும் பார்க்க முடியாத ஆரிய மனுதர்மம் இப்படி சொல்கிறது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்…”
இது என்ன தெரியுமா? எழுதவே கூசும் இந்த வாக்கியம், எட்டு வயதிற்குள் திருமணம் பெண்ணிற்கு செய்து கொடுக்கா விட்டால்,மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை எடுத்து தந்தை குடிக்க வேண்டும், எண்ணிப் பார்க்க முடிகிறதா?
இது தான் ஆரியர்கள் நமக்கு தந்தது. இவற்றை மறைக்க ஆரியத்திற்கு துணை போய், வால்மீகி இராமாயணத்தை கம்பர் மாற்றி எழுதியது ஏன்?
தமிழர்களிடம் இவை எடுபடாது என்பதால் உண்மைகளை மாற்றி எழுதினார்.
இப்படி தமிழர்களின் வரலாறுகளை மறைத்து,தங்கள் போலிகளை புகுத்தி நம்மை போதையில் வைத்திருக்க முடிவு செய்தது ஆரியம்.
நாம் அதைக் கண்டு கொள்ளாது தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறோம். கடலில் நம் நிலம் இருக்கிறது,20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லி பெருமை பேசிக் கொண்டால் போதுமா? நம் வரலாறுகளை மறைத்து ஏமாற்றுவதை இனம் காண வேண்டாமா? உண்மைகளை தெரிந்து கொண்டு இனியும் ஏமாறாமல் இருக்க வேண்டாமா?
பல வரலாறுகள் வட நாட்டவர்களால்,மத்திய அரசால்,ஆரியர்களால் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு விட்டதற்குக் காரணம், 20 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட தமிழனின் நாகரீகம் தெரிந்து விடுமானால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களின் உண்மைகள் தெரிந்து விடும் என்ற அச்சம் தான். அதனால் தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் கூட, கடலில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர் நாகரீக சிதைவுகளை வெளிக் கொணர மத்திய அரசு முன்வரவில்லை.தொல்பொருள் ஆய்வுகளைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள்,நம் நாட்டு நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய, ஒப்படைக்க அல்லது அவர்கள் சுயாதீனமாக ஆய்வுகள் நடத்த ஏன் அனுமதிக்க மறுக்கிறது? சிந்தியுங்கள்.
சிலரின் கருத்துக்கள் இதோ
இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல ஜவஹர்லால் நேரு.
இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்! –இராஜகோபாலாச்சாரியார்.
ஒழிந்திருந்து வாலியை கொன்றது பற்றி,இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால், ராமனின் சமாதானம், வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.
இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம். கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.
வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வேன் றோங்கும்
ஓராளித் தேறும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன? ………..
இது கம்பராமாயணத்தில், இராமன் அனுமனுக்கு சீதையை பற்றி அடையாளம் கூறுகிறான். எந்த ஒரு மனிதனோ வேற்றான் ஒருவனுக்கு தன் மனைவியைப் பற்றி இப்படி வர்னித்து சொல்வானா?
கம்பன் சிறந்த கவி மறுக்கவில்லை.கருணாநிதியும் சிறந்த தமிழ் எழுத்தாளர் தான்…………ஆனால்…….அவரை இன்று ஏற்றுக் கொள்ள தமிழினம் தயங்குகிறதே.
எமன் ஏறும் பரியே முட்ட முட்ட கூரை இல்லா வீடே,
குலராமன் தூதுவனே யாரையடா சொன்னாய்,
என வைகிறாள் ஔவைப்பாட்டி.
லஞ்சம் ஊழலுக்காக ஈழத் தமிழர்களை கை விட்டார் கருணாநிதி. பணத்திற்கும்,ஆடம்பரமான வாழ்விற்காகவும் தமிழனை தூக்கி எறிந்தான் கம்பன். இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறியவை தான்.
இதை விட வேணுகோபாலன் மொழி பெயர்த்த தாய்லாந்து இராமாயணம் இன்னும் வேறு மாதிரியாக எழுதப்பட்டுள்ளது.அங்கே அனுமன் திருமணமானவனாக காட்டப்படுகிறது. படித்திருக்கிறீர்களா?
இவை ஒரு சிறு துழிகளே.
ஆதாரம்……
சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணம்,
Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA),
வால்மீகி இராமாயணம்,
கம்ப இராமாயணம்.
இலங்கையின் காவல் தெய்வங்களான ஸ்கந்த முருகன் மற்றும் கதிர்காமன்
”காடிகாவோவில் (Kataragama) ஆயுதம் ஏந்திய ஐநூறு படை வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள ஆலயத்திற்கு பல ஆண்டுகளாகவே பக்தர்கள் பெரும் அளவில் நன்கொடைகளும் காணிக்கைகளையும் செலுத்தி வந்திருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக விலை மதிக்க முடியாத அளவு தங்கம், வைரக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த நகைகளும் இருந்தன. அந்த சொத்துக்களை நாமே எடுத்துக் கொண்டு விடலாம் என எண்ணி அது பற்றிய தகவல்களைத் தருமாறு பலரிடமும் நாங்கள் பல தடவை கேட்டோம். 1642 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் ‘லாஸ்கரினிய’ (Lascarins) படை வீரர்களுடனும், உள்ளுர் மக்களின் மொழி மற்றும் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருந்தவரும், அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ‘கஸ்பார் பிகூரியா டீ செர்ப்பே’ என்ற தலைவரின் கீழ் (Gaspar Figueira de Cerpe), என்னையும் சேர்த்து 150 போர்த்துகீஸிய படை வீரர்கள் அந்தப் பொருட்களைக் கொள்ளை அடிக்கச் சென்றோம் . அந்த ஆலயம் இருந்த இடத்தின் அருகில் இருந்த ஒருவரிடம் அந்த ஆலயம் பற்றி விவரம் கேட்டோம். அவரும் தனக்கு அந்த ஆலயம் உள்ள இடம் தெரியும் என்று கூறி விட்டு எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு சென்றார் . பல மணி நேரம் காட்டுப் பகுதிகள் நிறைந்து இருந்த மலையை சுற்றி சுற்றி வந்தும் அந்த மலை மீதே இருந்த ஆலயத்தை எங்களால் காண முடியவில்லை . எங்களுடன் வழி காட்டிக் கொண்டு வந்த ஐந்து பேர்கள் ஒருவரை ஒருவர் அவர்களுக்குத் தெரியாதது போல காட்டிக் கொண்டும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டும், எதை எதையோ சம்மந்தம் இல்லாமல் கூறிக் கொண்டும் வழி நெடுக நடந்து வந்ததினால் வேண்டும் என்றே எங்களை திசைத் திருப்ப அப்படி நாடகம் ஆடுகின்றனர் என எண்ணி அவர்களில் மூவரைக் கொன்று விட்டோம். மிஞ்சி இருந்த இருவரும் அப்படியே நடக்கத் துவங்க வேறு வழி இன்றி ‘காடிகோவில்’ இருந்த அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் நாங்கள் வந்த வழிலேயே திரும்ப வேண்டியதாயிற்று.”
அவர்களது செய்கைகளைக் கவனித்தபோது அந்த ஆலயத்தை உள்ளுரில் இருந்த மன்னனும், பக்தர்களும் மிகவும் பக்தி பூர்வத்துடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனத் தெரிந்தது. அதன் பக்கத்தில் உப்பேணி வைத்திருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் ஒரு பங்கினை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம் என்பதைக் கவனித்திருந்த ‘இராபரட் நாக்ஸ்’ (Robert Knox) என்பவர் எழுதி உள்ள குறிப்பும் அந்தக் கருத்தை உறுதி செய்யும் அளவில் உள்ளது”. ‘இராபரட் நாக்ஸ்’ எழுதி இருந்தார்:
“பக்கத்தில் இருந்த நிலங்கள் மூலமோ, கடல்களில் கப்பல்கள் மூலமோ சென்று நெருங்க முடியாதபடி அமைந்து இருந்தது அந்த மலைப் பாங்கானப் பிரதேசம். கடவுள் அருளால் ஏற்பட்டிருந்த ‘கடிக்கிராம்’ என்ற அந்த மலைப் பாங்கான பிரதேசத்தில் உப்பளத்தை வைத்திருந்த எழைப் பணக்காரர் அனைவருமே தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இருந்தது.”
கதிர்காமத்தில் இருந்த அந்த ஆலயத்தைப் பற்றிய செய்தி 19 ஆம் நூற்றாண்டில் ‘சிலோன்’ என்ற பகுதியைப் பற்றி ‘டேவி’ (Davy’s) என்பவர் எழுதி உள்ள நூலில் இருந்து தெரிய வந்துள்ளது. ”அந்த ஆலயம் ஒரு பாழடைந்த இடத்தில், காட்டுப் பகுதிக்கு உள்ளே அனைவராலும் எளிதில் செல்ல முடியாத இடத்தில் இருந்ததாகவும், அந்த இடத்தின் அருகில் குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களும் ஏழ்மை நிலையில் இருந்தவர்களாகவே இருந்தனர்’ எனவும் எழுதி உள்ளார்.
ஸ்ரீலங்காவில் இருந்து மட்டும் அல்ல தொலை தூர இந்தியப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வணங்கிய புனித யாத்திரைப் பகுதியாக கதிர்காமன் இருந்ததாம். அந்த ஆலயத்தைத் தவிற வேறு சில கட்டிடங்களும் ஆலயத்தின் அருகில் இருந்தது. அவற்றைத் தவிற அங்கு கதிர்காம திவாலி (கூடம்) , கணேஷ் திவாலி மற்றும் புத்த விஹார் போன்றவைகளும் கவனிப்பார் அற்று இருக்க அவற்றைத் தவிர ஆறு சிறிய ஆலயங்களும் ‘பட்னி’ மற்றும் பிற ஐந்து தெய்வங்களுக்கு அற்பணிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் நடுப் பகுதியில் சிவன், பைரவர் போன்றவர்களுக்கு சன்னதிகள், பயணிகள் தங்கும் இடம், பிற அலுவலக அறைகள் போன்றவை இருந்தன.
‘கதிர்காம திவாலே’ என்பது இரண்டு பிரிவுகளாக இருந்தன. அவற்றில் வெளியில் இருந்த அறைதான் உள்ளே நுழைய முடியும் நிலையில் இருந்தது. அங்கிருந்த சுவர்களில் வரலாற்று சிறப்பு மிக்கக் காட்சிகள் மற்றும் தெய்வங்களின் சித்திரங்கள் காணப்பட்டன. அதன் மேல்கூரையின் மீது வண்ணம் பூசப்பட்ட விசித்திரமாக துணி காணப்பட்டது. கதிர்காமத்தின் முக்கியமான இடம் அங்குள்ள கல்யாண மடம் ஆகும். அது தரை மட்டத்தில் இருந்து உயரமான நிலையில் உள்ளபடி களிமண்ணினால் கட்டப்பட்டு, கால் இல்லாத ஒரு நாற்காலி போல, ஆனால் பின் புறத்தில் தடுப்பு உள்ள நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் இருக்கை புலித் தோல்களினால் மூடப்பட்டு, ஆலய உற்சவங்களில உபயோகிக்கப்படும் வாத்தியங்களை வைத்துள்ளது போல அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பக்கத்தில் எப்பொழுதும் எரிந்து கொண்டிந்த பெரிய ஹோம குண்டமும் உள்ளது. அங்கு வசிக்கும் பிராமணர்கள் அந்த கல்யாண மடம் கல்யாண நாதா என்பவருக்கு சொந்தமாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
அந்த ஆலயத்தை சுற்றி ஆலயத்திற்கு சொந்தமான பல கிராமங்கள் உண்டு. அந்த இடங்களில் வசித்தவர்கள் அந்த நிலங்களில் வேலை செய்பவர்கள். ஆலயத்தில் உள்ள பண்டிதர்கள், அரசாங்க அதிகாரிகளைத் தவிற பன்னிரண்டு ‘கபூரலாக்கள்’ என அழைக்கப்படுபவர்கள்’ பஸ்னாயகா நிலாமே’ என்ற அதிகாரியின் மேற் பார்வையில் இயங்குகின்றனர். 1815 ஆம் ஆண்டு முதல் பிரிடிஷ் அரசு அந்த நாட்டை தன் கட்டுக் கோப்புக்குள் எடுத்துக் கொண்ட பின் ஆலய யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் அங்கு செல்வது பெரும் அளவில் குறைந்து போயிற்று.
வருடாந்திர யாத்திரை
2. நற்பண்புகள் சங்கமித்த இடம்
2000 வருடங்களுக்கும் மேலாக ஒருங்கிணைந்து ஆனால் தனித் தன்மைகளுடன் வளர்ந்து வந்த இரு மதப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் இடமாக கதிர்காமன் அமைந்தது. அங்கு நடக்கும் அ]னத்து தெய்வ நம்பிக்கையின் அடிப்படையிலான நிகழ்ச்சிகளும் அனைவரினாலும் மிகவும் மதிக்கப்பட்டதினால் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் இருவருமே அங்கு வரலாயினர். புராணக் கதைகளில் இடம் பெற்றுள்ள ‘வேத்தாஸ்’ (Veddahs) என்பவர்களுடன் கதிர்காமனுக்கு தொடர்ப்பு இருந்தது. ‘வேத்தாஸ்’ என்ற பிரிவினர் அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து கொண்டு அவர்களது இனப்ப பழக்கத்தின்படி கதிர்காமனையும் வணங்கி வந்தவர்கள். ஸ்கந்த முருகனின் ஆராதனைக்கு உகந்த இடமாக இந்துக்கள் கதிர்காமனில் இருந்த ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுவது உண்டு. அந்த தீவில், முக்கியமாக வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் வேத முறைகளை பின்பற்றி நடத்தப்படும் வழிபாட்டு முறைகளுக்கு மாறுபட்ட வழிபட்டு முறையைக் கொண்டு அமைந்திருந்தாலும் ஸ்கந்த முருகனின் ஆலயங்களும் கதிர்காமனுடன் தொடர்ப்புக் கொண்டே இருந்தது. முருகனின் இளைய மனைவியான ‘வள்ளி’ அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த ‘வேத்தாஸ்’ என்ற பிரிவினரில் இருந்து வந்தவர் எனவும் தீய சக்திகளுடன் இணைந்து இருந்த சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு ‘வேத்தாஸ்’ இனத்தினரின் வழிபாட்டுத் தலமாக கதிரகாமக் ஸ்கந்த முருகனின் ஆலயம் அமைந்தது. முருகன் மீதான பக்தி கொண்டு அலைந்து கொண்டிருந்த மலை வாழ் மக்களின் தொடர்பினால் கூட அந்த மாதிரியான கதைகள் தோன்றி இருக்கலாம்.
ஸ்ரீலங்காவின் புத்தமத வழிபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு புனித இடங்களில் ஒன்றாக கதிர்காமனின் ஆலயமும் உள்ளது. தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக கருதப்படும் நாதா, பட்டி மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களுடன் கந்த குமரன் அல்லது கதிர்காமனும் சேர்க்கப்பட்டு ஸ்ரீலங்காவின் வணக்கத்துக்கு உரிய கடவுளாக ஏற்கப்பட்டு உள்ளார். அதனால்தான் கண்டியில் நடத்தப்படும் புத்தரின் புனிதப் பல்லை பவனியாக எடுத்துச் செல்லப்படும் புனிதத் திருவிழா ஊர்வலத்தில் இந்த நான்கு கடவுட்களும் இடம் பெற்றுள்ளனர். 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இவர் சிங்கள இனத்தவரிலும் பெரும் புகழ் பெற்றார். அதற்குக் காரணம் 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் மீண்டும் தலை தூக்கிய முருக வழிபாடே ஆகும். சிங்கள புத்த மத வழிபாட்டில் ஸ்கந்தன் வழிபாடும் இணைக்கப்பட்டு இருந்ததின் காரணம் பல நூற்றாண்டுகளாக புத்த-இந்து மதங்கள் ஒன்றிணைந்து வளர்ந்ததே. கதிர்காமனின் புராண, இதிகாச வரலாற்றுச் செய்திகளையும் கதைகளையும் காணும் பொழுது சமூக நடை முறைகளில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு வளர்ந்து வந்த இந்து, சிங்கள, புத்த மற்றும் வேத்தாஸ் இனங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றிணைந்து சங்கமித்துள்ளது போலத் தோன்றும். அந்த மூன்று ஆலய வழிபாட்டு முறைகளையும் கவனிக்கும் பொழுது இந்த எண்ணம் இன்னமும் வலுப்பெறுகின்றது.
கதிர்காமனின் மூன்று ஆலயங்களில் ஆகம முறை இல்லாத வழிபாடும் மற்றக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தனித் தன்மையுடன் உள்ளது மூல ஆலயம். அங்குள்ள கர்பக்கிரகத்திலோ எந்த விதமான சிலையும் இல்லாமல் அங்கு ஒரு திரைசீலையைப் போட்டு மூடி வைக்கப்பட்டு உள்ளது. வருடாந்திர விழாவில் யானையின் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு அலங்கார பேழையை ஊர்வலத்தில் எடுத்துச் செல்கிறார்கள். பரம்பரைப் பரம்பரை நடைமுறைப்படி அந்த பேழைக்கு ‘கபூரலா’ பிரிவினர்தான் பூஜைகளை செய்கிறார்கள். அவர்களை அந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறுக் கூற வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யானையின் முதுகில் ஏற்றப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பேழையை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதும் அந்த சடங்குகளை செய்ய ‘கபூரலா’ என்ற பிரிவினரை நியமிப்பதிலும் செய்யப்படும் சடங்குகள் சிங்கள புத்த மத வழிபாட்டு முறையான தேவாலியைத் தழுவியே உள்ளது போலவே தோன்றுவதால் இவற்றின் இடையே ஒரு ஒற்றுமை எந்த விதத்திலோ விதத்திலோ உள்ளது எனத் தெரிகின்றது. அது மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புத்த ஆலயமும் போதி மரமும் கதிர்காமத்திற்கும் புத்த மதத்திற்கும் பல நூற்றாண்டுகளின் இடைக் காலத்தில் இருந்து இந்நாள் வரை இருந்து வரும் தொடர்புக்களை மேலும் உறுதி செய்கின்றன.
3. இந்துக்களின் பண்டைய பழக்கங்கள்
கிழக்குப் பகுதியில் உள்ள ‘வெருக்கால்’ (Verukal) , ‘சித்தான்தி’ (Cittanti) , மற்றும் ‘திருக்கோவில்’ (Thirukkovil) போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் மிகப் பழமையானவை . அங்கு ‘வேத்தாஸ்’ இனத்தவர் பெருமளவில் வந்து சைவ வழியை சார்ந்த தமிழர்களுடன் கலந்து கொண்டு வருடாந்திர விழாக்கள் சிறப்பாக நடக்க உதவினர். ‘மட்டக்கிளப்பு’த் தேக்கத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் நடைமுறை பழக்கத்தில் இருந்த ‘திருப்பட்டைக்கோவில்’ (Tiruppattaikovil) பொது வழக்க முறைகளைக் கண்டால் அந்த ஆலயங்களுக்கும் கதிர்காமனுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு தெரியவரும். அந்த தீபகற்பத்தின் கதிர்காமனுக்கு தீர்த யாத்திரை மேற் கொண்ட வியாபாரிகளான செட்டியார்களினால் கிழக்குப் பகுதியில் இருந்த ஆலயங்களில் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளைக் கண்டால் கதிர்காமனின் தோற்றமும் வளர்ச்சியும் புரியும். பல்வேறு ஆண்டுகளாக கதிர்காமனுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டதின் விளைவாக ஒருமித்த முருக வழிபாட்டு முறைகள் வளரத் துவங்கின. ‘தேக்காட்டுக் கோவில்கள்’ என்று பெயரிடப்பட்ட முக்கியமான வழிபாட்டுத் தலங்களின் பட்டியலில் உள்ள தேசிய ஆலயங்களில் ஒன்றாக கதிர்காமனும் உள்ளது.
முருக வழிபாட்டு முறைகளை ஆராய்ந்தோம் எனில் ஸகந்த-முருகன் ஆலயங்களில் புகழ் மிக்கதும் புனிதமான ஆலயம் என்ற பெருமையையும் கதிர்காமன் பெறுகின்றது. மற்ற ஆலயங்கள் உள்ளுர்களில் மட்டுமே புகழ் பெற்றிருக்க கதிர்காமனோ தேசிய அளவில் முக்கியம் வாய்ந்த ஆலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ‘கதிரேசன்’, ‘கதிர்காமன்’, ‘கதிரமலை’ போன்ற பெயர்களை சுட்டிக் கொள்வதின் மூலம் ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வரும் சைவத் தமிழர்கள் கதிர்காமனுடன் தங்களுக்கு உள்ள உறவின் ஆழத்தை வெளிப் படுத்துகின்றனர்.
கதிர்காமனை பற்றிய பல பக்தித் தோத்திர நூல்களும் தலப் புராணப் புத்தகங்களும் தமிழில் உள்ளன. அவற்றில் பல புத்தகங்கள் முறையாக எழுதப்படவில்லை என்பதினால் கதிர்காமனை பற்றிய வரலாற்றுச் செய்திகளை முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள முடியவில்லை . அவற்றில் மிகப் பழமையானதும், 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும் கூறப்படும் ‘அருணகிரிநாதரின்‘ பாடல்கள் மூலமே சைவ தமிழர்கள் கதிர்காமனை நன்கு அறிந்து கொண்டிருந்தனர் என்பதையும் அது முருக வழிபாட்டுத் தலமாக இருந்தது என்ற உண்மை நிலையம் தெரிய வருகின்றது.
அருணகிரிநாதரின் ‘திருப்புகழில்’ கதிர்மானனைப் போற்றும் பதினாறு பாடல்கள் (செய்யுட்கள்) உள்ளன. ‘கதிர்காம முதுர்’ (Kathirkama Muttur) எனப்பட்ட கதிர்காமம் மிகப் பழமையானது. முருக வழிபாட்டுத் தலத்தின் யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் மற்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கு முதலில் சென்ற பின்னரே மிக முக்கியமான ஆலயம் என கருதப்பட்ட அந்த ஆலயத்திற்கும் சென்றனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற நூலில் முருகப் பெருமான் கதிர்காமனில் மலை உச்சியில் வசிப்பதாக எழுதப்பட்டு இருந்ததில் இருந்து ‘கதிரமலை’ என்ற அது புகழ் மிக்கத் தலமாக அவருடை காலத்தில் இருந்து இருக்கின்றது என்பது புரியும். திருப்புகழ் இயற்றப்பட்ட காலத்தின் பொழுது முருகன் வேடர் குலப் பெண்ணுடன் அந்த மலையில் இருந்ததாக நம்பப்பட்டது (verpil ariya veticci kalavikur cittira manikka vativane).
திருப்புகழில் முருகனை சிவனின் பிள்ளை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது (arakara civaya campu kuruparakumara). கதிர்காமக் கடவுளை அதில் ‘குமாரப் பெருமான்’, ‘தேவர் பெருமான்’, ‘வீரப் பெருமான்’, ‘குரனாட்டப் பெருமாள்’ எனவும் ‘கதிர்காமப் பெருமாள்’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். பக்தி செய்வதற்கு மூலமும் முடிவுமாக விளங்குபவர் அவர் என அருணகிரிநாதர் கூறி உள்ளார். ஏழை எளியவர்க்கு (elaikku irankum perumal) இரக்கம் காட்டுபவரும் நீதியை நிலை நாட்டுபவரும் அவரே என்கின்றார் (nitip-perumal).
அவர் ஒரு வழிகாட்டி, குரு , நம் துயரை களைபவர் , நோய்களை தீர்த்து தீமைகளை அழிப்பவர், பக்தனுக்கு அளவில்லா மன இன்பம் தருபவர், நல் வாழ்விற்கு தேவையானவற்றைத் தருபவர், சிவனின் அவதாரம், உலக நாயகன், பிரபஞ்சத்தை காப்பவர், தேவையானவற்றைக் கொடுத்து இறுதியில் அழிவற்ற பேரானந்தத்தைத் தருபவர், ஜாதி பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவர் என்றெல்லாம் கதிர்காமனைப் பற்றி அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்த இந்து மத பக்தர்கள் போற்றி வணங்கினர். முருக பக்தி இயக்கம் அகம விதிகளை பின்பற்றி கடை பிடிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை ஒதுக்கி விட்டு ஒரு மாற்று வழிபாட்டு முறை இயக்கமாக இன, மொழி பேதங்களைக் கடந்து உருவாகி வந்தது. அனைவரும் ஓன்றே என்பதைப் பறை சாற்றும் விதத்தில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்து இருந்த கதிர்காமனில் அ]னத்துப் பிரிவினரையும் சார்ந்த பக்தர்களும் வந்து ஒன்றிணைந்து பூஜித்தார்கள். அதனால்தான் கதிர்காமனைப் பற்றி எழுதிய அருணகிரிநாதர் அவரை ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு இரட்சிப்பவர், நீதியின் காவலர் எனவும் போற்றிக் கூறினார்.
‘ஜாப்னா பட்டினம்’ ( Jaffnapatnam) என்ற வன்னியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘கதிரமலைப் பள்ளு’ (Katiraimalaip-pallu) என்ற நூல் கதிர்காம கடவுளைக் குறித்து எழுதப்பட்டதொன்று. கொத்தடிமைகளாக நிலங்களில் வேலை செய்து வந்த ‘பள்ளர்களின்’ வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள பாடல் அது. ஒரு கணவருடன் ஒன்றிணைந்து வாழும் இரு மனைவிகளின் சம்பாஷணையைப் போல அமைந்து உள்ளது அந்தப் பாடல். அதில் ஒருவள் இலங்கையை சேர்ந்தவள், மற்றவள் இந்திய நாட்டவள். இருவரும் தங்களுடைய தாய் நாட்டின் பெருமையைக் கூறும் விதத்தில் அமைந்து இருந்தது அதில் இருந்த பாடல்கள் . ஸ்ரீலங்காவைப் பற்றி எழுதப்பட்டுள்ள உள்ள பாடலில் எல்லா இடங்களை விட சிறப்பானதும் புனிதமுமான இடம் கதிர்காமம் எனவும் அதைத் தொடர்ந்து அமைந்துள்ளவை ‘திருகேட்டீஸ்வரம்’ (Tirukketisvaram) மற்றும் ‘திருக்கோணம்’ (Tirukonam) எனவும் கூறப்பட்டு உள்ளது. கதிர்காமத்தைப் பற்றிக் கூறுகையில் அதை ‘கதிராபுரி’ என்றும் ‘கதிரை’ (Katirai and Katirapuri) என்றும் கூறுகின்றது. ‘கதிரை’ என்றால் தென் பகுதியில் வாழும் வேலன் என்ற பொருளில் ‘தென்கதிர் வேலன்’ என எழுதப்பட்டு உள்ளது. ‘கதிர்காமப் பாட்டு’ என்ற நூலில் ஸ்கந்த முருகனைப் போன்றே அனைத்து சக்திகளையும் கொண்டவர் கதிர்காமன் என்றும் அவரை ‘சங்கரியின் மகன்’ எனவும், ‘வள்ளியின் நாயகன்’ எனவும்; மரங்கள் மீதும் பூங்காக்களிலும் வசிக்கும் தோகை விரித்தாடும் மயில் மீது அமர்ந்து உள்ளவர் எனவும் எழுதப்பட்டு உள்ளது.
மத்திய நூற்றாண்டில் இருந்த ஸ்ரீலங்காவின் நூல்கள் , தென் இந்தியாவில் ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி கந்த புராணத்தில் எழுதப்பட்டிருந்தவற்றை விட சிறிது மாறுபட்டே உள்ளன. ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி இந்தத் தீபகர்பத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத நூலான ‘தஷ்ஷிண கைலாச மான்மியத்தில்’ (Daksina-kailasa manmiyam) எழுதி உள்ளது என்ன எனில் ” குருன்சா மலையை இரண்டாகப் பிளந்து அசுரன் ‘தாருகனை’ தன் வேலால் குத்தி அழித்த பின் ‘தேவகிரிக்கு’ சென்ற ‘முருகன்’ அங்கிருந்துக் கிளம்பி ‘திருச்சைநல்லுர்’ (Tirucceynalur) மற்றும் பிற புனித இடங்களுக்கும் சென்றார். அதற்குப் பிறகு ‘குரு’ பகவான் மூலம் ‘சூரன்’ (Curan) மற்றும் அவன் சகோதரர்கள் செய்து வந்த அக்கிரமங்களைப் பற்றிக் கேட்டறிந்தவர் ‘வீரவாகு தேவர்’ தலைமையில் பெரும் படையுடனும் எண்ணற்ற பூத கணங்களுடனும் கதிர்காமனை அடைந்தார். ‘எம கூடம்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆலயத்தில் முருகன் தங்கி இருக்க அவருடன் சென்றவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த இடங்களில் தங்கினார்கள். அங்கிருந்து ‘மகேந்திரபுரி’ என்ற இடத்தில் இருந்த ‘சூரபத்மனிடம்’ தூதராக ‘வீரபாகு தேவர்’ சென்றார் . அதன் பின் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் கதிர்காமனில் தங்கி இருந்த முருகனும் அவர் படை வீரர்களும் அதையே தங்களுடைய படை வீடாக (Military Camp) மாற்றிக் கொண்டு யுத்தம் செய்தனர். சூரனை வெற்றி கொண்டதும் மீண்டும் அங்கு திரும்பிய முருகன் அதையே தன்னுடைய தங்கும் இடமாக மாற்றிக் கொண்டார்.
தென் இந்தியப் பகுதிகளில் இருந்த பண்டைய வழிபாட்டு வழக்கங்கள் மாறி விட்டன. கதிர்காமனின் வழிபாட்டு முறைகளின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் வழிபாட்டு முறை மாறத் துவங்கி உள்ளன. ஸ்கந்த-முருகனின் புனித ஆலயங்களின் பட்டியலில் கதிர்காமனையும் இணைத்துக் கொள்ளும் வகையில் படைவீடு என்ற வழிபாட்டுத்தலப் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன எனில், தென் இந்தியாவின் புராணக் கதைகளில் இருந்து மாறுபட்டு ஸ்ரீலங்காவில் முருகன்-வள்ளித் திருமணம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படும் இடம் இது ஆகும். கந்த புராணக் கதையின்படி முருகன்-வள்ளி; திருமணம் நடந்த இடம் ‘தொண்டை மண்டலம்’ என்ற பகுதியில் இருந்த ‘வள்ளி மலை’ ஆகும். பண்டைய தமிழ் வழிபாட்டு முறைகளில் இருந்து மெல்ல மாறுபட்டு விளங்கத் துவங்கிய வழிபாட்டு முறைகளுக்குக் காரணம் பல காலத்திற்குப் பிறகு உலக நாடுகளில் பல இனத்தவராலும் ஏற்கப்பட்டு பரவிய முருக பக்தியின் விளைவுகளே . ஸ்ரீலங்காவில் வேத்தாஸ், சிங்களவர், இந்துக்கள் இடையே ஏற்பட்ட இணக்கத்தைக் காணும் பொழுது தக்ஷிண மகாத்மியம் என்ற நூலில் உண்மையில் நிலவிய பழக்க வழக்கங்கள் பற்றிய செய்திகள் முறையாக குறிப்பிடப்பட்டு உள்ளது என நினைக்கத் தோன்றுகின்றது.
4. புத்த ஐதீகம்
“மஹிந்திரா மற்றும் ‘பிக்குணி சங்கமித்ரா’ மற்றும் பிற மன்னர்கள் தத்தம் மக்களுடன் இந்த இடத்தை நோக்கி வந்தார்கள். ‘கஜாரகாமா’ மற்றும் ‘கண்டனகாமா’ போன்ற பெருங்குடி மக்களும் ‘பிரம்மன் திவாகா’ மற்றும் அவருடைய மக்களும் இங்கு வாயு பகவானின் உதவியுடன் வந்தார்கள். அவர்கள் அனைவரும் புனித போதி மர வைபவத்திற்கு இங்கு வந்தார்கள்.”
மகாதேவலே’ எனும் இடத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த ‘காதித்ரலி வேஹிரா’ எனும் பண்டைய கால இடத்தை அமைத்தவர் தத்த காமினி எனும் மன்னனே என்று நம்புகிறார்கள். புத்தர் தமது ஸ்ரீ லாங்கா விஜயத்தின்போது கதிர்காமா என்ற இந்த இடத்துக்கு வந்ததினால் மூன்றாம் நூற்றாண்டில் ‘தேவனாம்பிய திஸ்சா’ இங்கு போதி மரத்தை எடுத்து வந்து நட்டார் என்று நம்புகிறார்கள். மகாவம்சாவின் செய்தியின்படி ‘அகபோதி’ என்ற மன்னன் கதிர்காமாவில் ஒரு புத்த விஹாராவை அமைத்தது மட்டும் இல்லாமல் தம்மசாலாவில் இன்னொரு விஹாராவை சீரமைத்தார் என்றும் தெரிவிக்கின்றது. அதற்காக அந்த மன்னன் ‘மண்டகாமா’ என்ற கிராமத்தை தானமாகத் தந்தார் என்றும் கூறுகின்றது. பதினோராம் நூற்றாண்டில் இந்த இடங்கள் சோழ மன்னர்களின் வசத்தில் வீழ்ந்தவுடன் இலங்கைாவின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதியான ‘ரோகுண’ என்ற இடமும் கதிர்காமனுடன் சேர்ந்து சோழர்கள் வசம் விழுந்தது . அது குறித்து சூளவம்சா எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது என்ன என்றால் ”சோழர்களின் அட்டகாசத்தை அடைக்கியவனும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், மாபெரும் வீரனுமான மன்னன் ‘லோஆகா’ என்பவர் ‘ரோகுணாவை ‘மீட்டு கதிர்காமனில் தங்கி இருந்தார். அதற்குப் பிறகு அந்த இடம் ‘காசப்பா’ என்ற தளபதியின் வசம் வீழ்ந்தது. அதற்குப் பிறகு மீண்டும் ‘விஜயபாஹு’ எனும் ‘கீர்த்தி’ என்ற மன்னனிடம் அந்த இடம் வீழ்ந்தது. ஸ்கந்த முருகனே கதிர்காமத்தைக் காக்கும் நான்கு கடவுட்களில் ஒரு கடவுள் எனக் கருதப்பட்டு அவர் ‘கதர்காம திவாலே’ எனும் புத்த மடாலயத்தில் வணங்கப்பட்டார் . பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த அதற்கான சரித்திர ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதின் காரணம் அப்போது அமைக்கப்பட்டு இருந்த திவாலே என்றக் கட்டிடம் நல்ல நிலையில் கட்டப்பட்டது அல்ல என்பதே.
இந்துக்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே நிலவிய இணக்கத்தினால் புத்தர் ஆலயங்களின் இருந்த திவாலியில் காக்கும் கடவுட்களான நான்கில் ஒன்றாக ஸ்கந்த முருகனும் இடம் பெற்று இருந்துள்ளார். ‘பிராமணி கல்வெட்டு’ 28 ட்டில் காணப்படும் செய்திகளின்படி கிறித்தவர்கள் இந்த தீபகற்பத்துக்கு வருவதற்கு முன்னரே முருகன் அங்கு அறியப்பட்டு இருந்துள்ளார். 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த ‘போலன்னரூவா’ அரசாட்சியினர் மீது ஸ்கந்த முருகனின் ஆதிக்கம் பெருமளவில் இருந்துள்ளது. இந்தக் கல்வெட்டுச் செய்தியின்படி ‘கஜபாஹு II ‘ என்பவர் ‘ஹினாபி’எனும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பூஜைக்கென்றே தயாரித்த விசேஷமான ஸ்கந்தனின் சிலைக்கு லக்ஷார்ச்சனை செய்துள்ளார். 14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்கந்தனை இங்குள்ளவர்கள் காக்கும் கடவுளாகவே வழிபாட்டு வந்துள்ளார்கள் என்பது கல்வெட்டுக்கள் மூலம் தெரிகின்றது. ‘உபுல்வன்’, ‘சமன்’, ‘விபிஷணா’ மற்றும் ‘கன்டகுமரா’ (Upulvan, Saman, Vibhisana and Kantakumara) என்ற நான்கு தெய்வங்களே காக்கும் கடவுளாக கருதப்பட்டு வந்தன. 14 ஆம் நூற்றாண்டு மத்தியில் ‘லங்கதிலக்கா’ மற்றும் ‘கடலடினியா’ (Lankatilaka and Gadaladeniya) போன்ற புத்த ஆலயங்களின் கட்டுமானம் இந்து ஆலய கருத்துக்களோடு அமைந்து உள்ளது. மேல் கூறிய ஆலயங்களில் காக்கும் கடவுட்களுக்கு தனித் தனி சன்னதிகள் இருந்து அவர்கள் வழிபடப்பட்டு வந்துள்ளார்கள். 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறைய ஸ்கந்த முருகன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிகின்றது
‘கண்டியான்’ அரச ஆட்சியில் ஸ்கந்தனை ‘கத்தரகமா தேவியோ’ (Kataragama Deviyo) என அழைத்து பூஜித்ததைப் போலவே ‘தேவினுவாரா’ எனும் சமயமுறையும் இன்னொரு காக்கும் கடவுளாக கருதப்பட்ட ‘உபுல்வன்’ வழிபாட்டில் இருந்தது. புத்தர்களின் கருத்தின்படி ‘கதிர்காமத்தில்’ உள்ள கந்த குமரா என்பவர் நான்கு காக்கும் கடவுட்களில் ஒருவர். ஆனால் அவரையே இந்துக்கள் எங்கும் நிறைந்துள்ள, நமது அறிவெல்லைக்கு அப்பால் உள்ள ஸ்கந்த முருகன் என போற்றி வணங்குகிறார்கள்.
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
கேப்டன். எஸ்.பி. குட்டி.
கேப்டன். குட்டி கடந்த 30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரப் பற்றுடையவர். இந்துத்துவச் செயல்பாடுகளுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது அரசு செயற்பொறியாளர் வேலையை ராஜினாமா செய்தவர். இந்து முன்னணியில் பெரும் பங்காற்றியதோடு, அரசியல் கட்சியான பி.ஜே.பி.-யிலும் மாநில மற்றும் தேசியப் பொறுப்புக்களை வகித்தவர்.
ஸ்ரீராமன் இந்துக்களின் முன்னோர் என்றும், சரித்திர புருஷன் என்றும் ஆர்.எஸ்.எஸ் சொன்னதை உறுதியாக நம்புகின்றவர். ஆனால் கற்பனைகளையும், எதார்த்தத்திற்கு புறம்பானவற்றையும் ஆராயாமல் ஏற்க மறுக்கும் ஒரு பொறியாளர். இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கீதை சொல்லும் உண்மை
நீ இவற்றை மிச்சமில்லாமல் அலசி, ஆராய்ந்து உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய் என்பதுதான். கண்ணன் சொல்லும் இந்த ஸ்லோகம் இந்து மதம் மூடநம்பிக்கையை அனுமதிக்கவில்லை என்பதைச் சொல்லவே இதைச் சுட்டிக்காட்டினேன்.
ஸ்ரீராமன் மனிதனாகப் பிறந்தவன். மனிதனாக வாழ்ந்து புகழ் பெற்றவன். ஸ்ரீராமன் காலத்தில் வாழ்ந்து அவனுக்கு உதவி செய்தவர்கள் குரங்குகளோ, கரடிகளோ அல்லது கழுகுகளோ அல்ல. இவர்கள் அனைவருமே மனிதர்கள். இராவணன், தன் தலையில் கொம்பு முளைத்த அல்லது பத்துத் தலைகளை உடைய விசித்திரப் பிராணி அல்ல. அவன் ஒரு காட்டுவாசி. ஸ்ரீராமனோடு ஒப்பிடும் போது நாகரீகத்தில் கொஞ்சம் பின்தங்கியிருந்தவன். நரமாமிசம் தின்னும் பழக்கம் உடையவன்.
இலக்குவனால் மூக்கறுபட்ட இராவணனின் தங்கை சூர்ப்பனகை லங்காவில் அண்ணனிடம் முறையிட வரும்போது, இராவணன் தனது புஷ்பக விமான இருக்கையில் அமர்ந்திருக்கிறான். புஷ்பக விமானம் என்பது அவனுடைய சிம்மாசனம். இன்றும் கோவில் மூலஸ்தானத்தின் மேலே உள்ள கூரைப் பகுதியை விமானம் என்றுதான் நாம் சொல்கிறோம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூரையை உடைய சிம்மாசனத்தைப் புஷ்பக விமானம் என்று வால்மீகி வர்ணிக்கிறார். அவனிடம் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது என்று சொல்வதெல்லாம் அதீதமான கற்பனை.
மாரீசனைப் பார்க்க வரும்போதும், சீதையைக் கடத்திச் செல்லும்போதும் இராவணன் கோவேறு கழுதைகள் பூட்டிய தேரிலே வந்தான் என்றுதான் வால்மீகி சொல்கிறார். பறக்கும் புஷ்பக விமானத்தை ஏன் பயன்படுத்தவில்லை? போரிலும் கூட ஏன் பயன்படுத்தவில்லை?
மூக்கறுபட்ட சூர்ப்பனகை உதிரம் ஒழுகும் மூக்கோடு தண்டகாரண்யத்திலிருந்து கடலைத் தாண்டி இராவணனைப் பார்க்கப் பதறியபடி ஓடி வருகிறாள். சூர்ப்பனகை கடலை எப்படிக் கடந்தாள்?
சூர்ப்பனகை இராவணனைப் பார்க்க வருமுன்பே அகம்பனன் என்ற ஒற்றன் ஜன ஸ்தானத்தில் இருந்து தப்பிக் கடலைக் கடந்து லங்காவிற்கு வந்து இராவணனிடம் செய்தி சொல்கிறான். இவன் எப்படிக் கடலைக் கடந்து வந்தான்?
பல நேரங்களில் இராவணன் அனுப்பும் ஒற்றர்களும் கடலைக் கடந்து வந்து இராம – லக்குவர்களை வேவு பார்க்கிறார்கள். இவர்களெல்லாம் கடலை எப்படிக் கடந்தார்கள்? இராவணனின் தம்பியான வீடணன் நான்கு சகாக்களோடு கடலைத் தாண்டி இக்கரைக்கு வந்து ஸ்ரீராமனிடம் சரணடைகிறான். இவன் எப்படி கடலைத் தாண்டினான்?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலையே கவிஞர்கள் வைத்திருக்கிறார்கள். அது, அரக்கர்கள் ஆகாயத்தில் பறந்து வந்தார்கள் என்பதுதான். அரக்கர் வம்சத்தில், வந்தவன், போனவன் எல்லாம் புசுக் புசுக்கென்று ஆகாயத்தில் பறந்து கடலைத் தாண்டும்போது, ஸ்ரீராமனைச் சார்ந்தவர்கள் அல்லது இராம – லக்குவர்கள் ஒரு தடவைகூட ஆகாயத்தில் பறக்கவில்லையே, ஏன்?
கற்பனை என்று வந்துவிட்டால் கவிஞர்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். இந்தக் கற்பனைகளை எல்லாம் நாம் நம்புவதாக இருந்தால் இராமாயணத்தையும் ஸ்ரீராமனையும், இராமர் பாலத்தையும் வெறும் கற்பனையாக மட்டுமே பார்க்க முடியும். இப்படி எல்லாமே கற்பனையாகப் போய்விட்ட பிறகு, கற்பனையான ராமன் கட்டிய ராமர் பாலமும் கற்பனையாக மட்டும்தானே இருந்தாக வேண்டும்?
மாறாக, இன்று கடலுக்கடியில் இராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்று சொன்னால், இராமாயணத்தில் வரும் அத்தனைக் கற்பனைகளையும் உண்மை என்று நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் வருமே? அப்படியானால், இராமனே கற்பனைப் படைப்புதானே?
உண்மை என்ன?
ஸ்ரீராமன் சரித்திர புருஷன் : கற்பனைகளைப் புறந்தள்ளிவிட்டு மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் வால்மீகி இராமாயணத்தை ஆராய்ந்தால், ஸ்ரீராமனின் உண்மைச் சரித்திரம் தெளிவாகத் தெரிகிறது.
அயோத்தி – சித்திரக்கூடம் : 225 கிலோ மீட்டர். சித்திரக்கூடம் – பஞ்சவடி : 880 கிலோ மீட்டர். பஞ்சவடி – கிட்கிந்தை : 170 கிலோ மீட்டர். கிட்கிந்தை & மகேந்திரகிரி : 60 கிலோ மீட்டர்.
ராமன் 10 வருடங்கள் சித்திரக் கூடத்தில் தங்குகிறான். அதன் பிறகு விந்திய மலைக்குத் தெற்காக நகர்ந்து பஞ்சவடிக்கு வருகிறான். வனவாசத்தின் 13&வது ஆண்டு சீதை கடத்தப்படுகிறாள். மேலே உள்ள தூரங்கள் எல்லாம் இராமனால் அங்கு தங்கியிருந்த காலங்களில் கால்நடையாகக் கடந்தவை. இது மனித சக்திக்குட்பட்ட செயல்தான்.
கிட்கிந்தையிலிருந்து, காட்டுவாசிப் படைவீரர்கள் அடங்கிய சேனையுடன் மகேந்திர மலையை ராமன் 4 நாட்களில் கடந்தான் என்று வால்மீகி சொல்கிறார். கிட்கிந்தைக்கும் மகேந்திரமலைக்கும் இடைப்பட்ட தூரமான 60 கிலோ மீட்டரை 4 நாட்களில் கடந்து போவதும் சாத்தியம்தான்.
ஆனால் தண்டகாரண்யத்தில் உள்ள கிட்கிந்தையில் இருந்து நேர்கோட்டில் (As a Crow Flying) பயணித்தால்கூட, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கு 1800 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்த 1800 கிலோ மீட்டர் தூரத்தைக் கால்நடையாக ஒரு காட்டுவாசிப் படை 4 நாட்களில் கடந்து விட இயலுமா?
ஆக, அன்றும் இன்றும் மாற்ற முடியாத சாட்சியாக இருக்கும் ஒரிசாவில் மகேந்திர மலையின் அருகில்தான் இராவணனின் லங்கா இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த லங்காவும் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே கடலில் இருந்தது. இராவணன் பலமுறை குதிரைகள் இழுக்கும் தேரில் கடலைத் தாண்ட வேண்டியிருந்ததால், அதற்காக அவன் அங்கு ஒரு மரப்பாலம் கட்டி வைத்திருந்தான். இதன் வழியேதான் அகம்பனனும், சூர்ப்பனகையும், வீடணனும், ஒற்றர்களும் கடலைக் கடந்தார்கள்.
இராமன் படையெடுத்து வரும் நிலைமை உறுதியான பிறகு, போர்க்கால நடவடிக்கையாக இராவணன் தன்னுடைய சிறிய பாலத்தை உடைத்து விடுகிறான். பிற்பாடு கடலைத் தாண்ட முயன்ற இராமனும் அதேபோன்ற பாலம் ஒன்றை 5 நாட்களில் கட்டுகிறான்.
கடற்கரைத் தோப்பு என்ற பெயரில் ஒரிசா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலக் கடற்கரைகளில் இன்றும்கூட சிறிய தீவுகள் (லங்கா) பல இருக்கின்றன. பிக்னிக் போகிறவர்கள் அமைதியான இந்தக் கடல் பகுதியில் காலையில் சென்றுவிட்டுப் பிற்பகல் திரும்பி விடுகின்றனர்.
இராவணனின் லங்காவும் இதுபோன்ற ஒரு கடற்கரைத் தோப்பு மட்டுமே. இன்று இருக்கும் ராஜபக்சேயின் சிலோன் அசோகரின் கல்வெட்டுக்களில் தம்பபாணி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் இதைச் சிங்களம் என்றே சரித்திரம் குறிப்பிடுகிறது. வால்மீகி காலத்தில் இன்றிருக்கும் சிலோனுக்கு அன்று இலங்கை என்ற பெயர் இருந்தது என்பது வெறும் கற்பனை.
மொத்தத்தில் ஸ்ரீராமன் தமிழகத்திற்கோ, இராமேஸ்வரத்திற்கோ வரவில்லை என்பதுதான் அறுதியிட்ட உண்மை. இராமர் பாலம் ராமேஸ்வரத்தில் இருப்பதாகச் சொல்வது வெற்று அரசியல். ஸ்ரீராமனின் பெயரைத் தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துபவரை என் போன்ற இந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இராமர் பாலம்
இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள்வதுதான் நியாயம். கம்பரோ, எழுத்தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப்படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்தக் காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
மத ரீதியாக இராமர் பாலத்தின் மீது நம்பிக்கை வைத்து, அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால், அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?
இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவியங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தைப் புனிதம் என்று நம்புகிறவர்கள் யார் எழுதியதை ஆதாரமாகக் காட்டுவார்கள்?
உதாரணமாக இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத்தார் என்ற செய்தி கம்பராமாயணத்தில் வருகிறது. இதை மிகைப் பாடல் என்றும், இடைச்செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.
இதே அளவுகோலைப் பயன்படுத்தினால் இராமர், இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே, அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.
இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத்தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.
முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால், நாம் முதல் நூலைத்தானே ஆதாரமாக ஏற்க முடியும். மேலும், வான்மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. அதுபோல, தனுஷ்கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக, அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவைப் பார்வையிட்டபோதும் மகேந்திரகிரி மலையில் ஏறி நின்று பார்த்தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது. இதன் உயரம் 2100 மீட்டர்.
இந்த மகேந்திரமலை இராமேஸ்வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத்தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில், வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திரமலை இன்றும், உண்மையிலேயே இந்திய வரைபடத்தில் ஒடிசாவை ஒட்டிய ஆந்திர மாநிலத்தின் கடற்கரையில்தான் உள்ளது. இந்த மலையில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர்களுக்குத் தெரிந்தது.
லங்கா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத்திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்தியமலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில், ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.
வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும், சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு, காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.
சீதையை இராவணன் கடத்தியதாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.
இந்தப் பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும், சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண்யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.
ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் முதலிய இயற்கைக்குப் புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இராவணனது லங்கா இன்றுள்ள ஒடிசாக் கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?
கிட்கிந்தையில் இருந்து காட்டுவழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பதுதான் ஒடிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.
மாறாக, கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1800 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ்வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாட்களல்ல, ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.
பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன், சித்திரை மாதம் சுக்ல சஷ்டியன்று வனவாசம் முடிந்து திரும்பி நந்தி கிராமம் வந்துவிடுகிறார்.
பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன், சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம் முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே.
(ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் ஸாரம், மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு.)
இதனால், இராமன் இராமேஸ்வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப்பாலம் ஒடிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப்பட்டது என்பதும், அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும்தான் உண்மையாக இருக்க முடியும்.
இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர். கேசவ பலிகாரம் ஹெட்கேவார்.
மக்களை மடையர்களாக்கித் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்குவதற்குக் காரணமாக இருந்தவர்கள் கள்ளப் பண்டிதர்களான உயர்ஜாதிப் பூசாரிகள் என்றும், சடங்காசாரங்கள் முதலியவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி, அறியாதவர்களை ஏமாற்றி, வேதாந்தத்திற்குத் தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூசை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர்களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள் என்றும் உயர்ஜாதிப் பூசாரிகளைச் சாடுகிறார், சுவாமி சின்மயானந்தர் அவர்கள். இந்தச் சின்மயானந்தர் சுவாமி, ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங்களில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவர் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இராமனை அற்புதங்கள் செய்யாத, மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்.
ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலைவரின் கொள்கையையே சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு, இராமனைக் கற்பனைக் கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இராமன் கட்டிய பாலம் மரங்களையும், கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்துக் கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மிதவைப்பாலம் அசையாமல் இருக்கக் கற்கள் கீழே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்தக் கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.
மரத்தினாலும், கொடிகளினாலும் ஒடிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட மிதவைப்பாலம் எத்தனை நாட்களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி, தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இயற்கையில் நடக்காத, கற்பனையான கதைகளைச் சொல்லிப் பாமர இந்துக்களைக் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றிச் சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதிப் பூசாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று, இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்துவிடும்.
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.
இராவணன்
வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது.
இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராமாயணத்தில் இராவணன் இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர்.
மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன.
நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.
இராவணன் ஆட்சி எப்படி நடந்தது?
எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள்.
ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான்.
தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின.
கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா. அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு.
அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை.
அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்
குடும்பம்
மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பித்தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார்.
மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?
இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
இராவணன் காலத்து ஆலயங்கள்
“வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது.
சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம். இதைவிட…..இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.
இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருக்கேதீஸ்வரம்
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்)
இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.
இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் (சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.
இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.
இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும்.
இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.
இராவணன் வெட்டு படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்
இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை
இராவணன் ஆட்சி
இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.
புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது.
இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்
மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம் பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது.
அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடும்பர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.
எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து.
இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது.
இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் – சயம்பன் – சயம்பனின் மருமகன் யாளிமுகன் – ஏதி – ஏதியின் மகன் வித்துகேசன் – வித்துகேசனின் மகன் சுகேசன் – சுகேசனின் மகன் மாலியவான் – மாலியவான் தம்பி சுமாலி – குபேரன்
இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும்.
சிவதாசனே இராவணன் என்றும்,
பரமனே கும்பகருணன் என்றும்
பசுபதியே விபீசணன் என்றும்
உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.
இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.
இல.தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்:-
முத்துராசக்கவிராசர் வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு – மயில்வாகனப்புலவர்பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 –
S.Kasishetty Jaffna Today and Yesterday – 1907 –
Duraiyappa Pillai History of Jaffna – 1912 –
Muththuthampy Pillai யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 –
வேலுப்பிள்ளை Ancient Jaffna – 1926 –
Rajanagam Critiques of Jaffna – 1928 –
Njanappiragasar Tha Jaffna Kingdom The Ancient People of Sri Lanka are Tamils யாழ்ப்பாண பூர்வீக வைபவம் யாழ்ப்பாண குடியேற்றம் புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம் Kingdom of Jaffna – 1978 –
Pathmanathan Early Settlements in Jaffna –
Ragupathy யாழ்ப்பாண இராட்சியம் –
சிற்றம்பலம் பூனகரி தொல்பொருள் –
புஸ்பரத்தினம் = பார்த்த சாரதி
நன்றி.
அக்கினி புத்திரன்.
Leave a Reply
You must be logged in to post a comment.