இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்?
(நக்கீரன்)
முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது என்பது பழமொழி. இலங்கைத்தீவின் பூர்வீக குடிமக்கள் யார்? தமிழரா அல்லது சிங்களவரா? என்ற கேள்வி இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.
இலங்கைத் தீவின் வரலாறு கிமு 483 இல் இன்றைய கலிங்கம் அல்லது வங்காளத்திலிருந்து வந்து குடியேறிய விஜயனும் அவனது எழுணூறு தோழர்களோடு தொடங்குகிறது என்றும் இலங்கைத்தீவு அவன் பரம்பரையினரான சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பது சிங்கள – பவுத்த தீவிரவாதிகளது திரிபுவாதமாக இருந்து வருகிறது.
அதுமட்டும் அல்லாது தமிழர்கள் வந்தேறு குடிகள்இ காலத்துக்கு காலம் இலங்கைமீது படையெடுத்து வந்த பாண்டிய சோழ மன்னர்களால் கொண்டுவந்து குடியேற்றப் பட்டவர்கள் அவர்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களது தயவில் வாழுகின்றவர்கள் என்பதும் இந்த சிங்கள – பவுத்த இனவாதிகளது வாதமாகும்.
இந்த வாதத்துக்குத் துணாயாக மகாவம்சம்இ சூழவம்சம் போன்ற பவுத்த இதிகாசங்கள்இ சிங்கள – பவுத்த தேசியத்தின் முன்னோடியென கொண்டாடப்படும் அநகாரிக தர்மபால போன்ற சிங்கள தேசியவாதிகளது எழுத்துக்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
‘போர் என்பது வேறுவழிகளில் முன்னெடுக்கப்படும் அரசியல்'(‘றயச ளை யn நஒவநளெழைn ழக pழடவைiஉள டில ழவாநச அநயளெ’) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய தமிழர் – சிங்களவருக்கு இடையிலான ஈழப்போரை இலங்கைத் தீவு யாருக்குச் சொந்தம் என்ற அரசியல் கேள்விக்கு வேறு வழிகளில் பதில் காண முனையும் முயற்சி என்று வர்ணிப்பதில் தவறில்லை என்றே சொல்லலாம்.
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவின் மக்கள். எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கும் தமிழர்களுக்கும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்களுக்கும் நாட்டில் ஒத்த உரிமைஇ சொந்தம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் இனச் சிக்கல் இருக்காது. வடக்கும் – கிழக்கும் தமிழ்மக்களது தாயக பூமிஇ தெற்கும் மேற்கும் மத்தியும் சிங்களமக்களது தாயக பூமி என்ற யதார்த்தம் ஒப்புக் கொள்ளப் பட்டால் ஒரு தீவில் இரண்டு நாடுகள் இரண்டு மக்கள் சமாதானமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த யதார்த்தத்தைச் சிங்கள – பவுத்த இனவாதிகள் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையோ அவர்களுக்கும் சிங்களவர் போன்றே ஆட்சியுரிமையில் பங்கு இருக்கிறது என்பதையோ இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகள் ஒத்துக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகளில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டை சேராதவர்கள் எப்படி தனிநாடு கோரமுடியும் என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். இதில் அதிசயம் எதுவும் இல்லை. அநகாரிக தர்மபாலஇ எஸ். டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா ஏ.இ.குணசிங்கா கோனார் இராசரத்தினாஇ மேத்தானந்தாஇ சிறில் மத்தியூஇ ஜே.ஆர். ஜெயவர்த்தனாஇ டி.பி. விஜயதுங்க போன்றவர்கள் எழுதியும் பேசியும் வந்ததையே சனாதிபதி சந்திரிகாவும் சொல்லியிருக்கிறார். கொஞ்சக் காலத்துக்கு முன் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று சந்திரிகா அனுராதபுரத்தில் நடந்த ஒரு வைபவத்தில் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று கூறியதையிட்டு கொழும்பில் அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி மறுப்புத் தெரிவிக்கவில்லைஇ ஏனைய தமிழ்க் குழுக்கள் எதுவும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. நக்கினார் நாவிழந்தார் என்பது போல இந்தத் தமிழ்க் குழுக்களின் தலைவர்கள் வாயைத் திறக்காமல் மவுனிகளாக இருந்துவிட்டார்கள்.
அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குமார் பொன்னம்பலம் ஒருவரே சனாதிபதியின் கூற்றை மறுத்து அறிக்கை விட்டுள்ளார்.
ஒரு நாடும் அந்த நாட்டு மக்களும் பொருளாதாரத் துறையில்இ நவீன தொழில் நுட்பத்துறையில் முன்னேற வேண்டுமென்றால் இனஇ மதஇ மொழி வேறுபாடுகளை மறந்து எல்லா மக்களும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒத்த உரிமைஇ ஒத்த நிறைஇ ஒத்த விலை உடையவர்களாக வாழ்வதற்குரிய அரசியல் ஆட்சிமுறை இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் சமாதானம்இ செழுமைஇ அரசியல் கட்டுப்பாடு நிலவும். இதற்கு கனடா நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதற்கு முற்றிலும் மாறாக ஸ்ரீலங்கா விளங்குகிறது. நல்லாட்சிக்குப் பதில் காட்டாச்சியே அங்கு நடைபெறுகிறது. செங்கோல் ஆட்சிக்குப் பதில் கொடுங்கோல் ஆட்சியே இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த நாடு குட்டிச்சுவராக நாளும் பொழுதும் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
சிங்கள – பவுத்த இனவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது என எண்ணி நடக்கிறார்கள். ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர்இ இயக்கர் அரக்கர் புலிந்தர் இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும்; கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.
மகாவம்சம் 6ம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரர் ஒருவரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம் என்றால் ‘பெருங்குடியினர்’ என்பது பொருளாகும். வம்சம் தமிழ்ச் சொல்லாகும். இது இலங்கைபற்றிய கர்ணபரம்பரை கதையோடு ஆரம்பித்து மகாசேனன் ஆட்சியோடு(கி.பி. 334- 362) முடிவுறுகிறது. இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற புத்ததேரலால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டகைமுனுவென்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். ( கி.பி. 1137 – 1186).
தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் ‘புன்னெறி’ கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் – கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் – துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
இலங்கைத் தீவுக்கு புத்தபெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.முதல்முறை வந்தபோது ஆட்சியுரிமைபற்றி தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்க அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார் என்று குறிப்பிடுகிறது.
இரண்டாவதுமுறை வந்த போது புத்தர் நாகதீவில் இறங்கி அரசுரிமைபற்றி தங்களுக்குள் போர்புரிந்த இரண்டு நாகவரசர்களது பிணக்கைத் தீர்த்துஇ அந்த அரசர்கள் உரிமைவேண்டிப் போர்புரிந்த மணித்தவசில் அமர்ந்து மூன்று கோடி நாகர்களுக்கு புத்த தருமத்தைப் போதித்தாரென மகாவம்சமும் புத்தமத காப்பியமான மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.
மூன்றாவது முறை புத்தர் வந்தபோது இன்று களனி என்று அழைக்கப்படும் கல்யாணியில் அரச உரிமைக்காக சண்டைபிடித்துக் கொண்டிருந்த இரண்டு நாகவரசர்களுக்கிடையில் நிலவிய பிணக்கைப் போக்கினார் என்று மகாவம்சம் கூறுகிறது.
மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர்லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு) பாலிபோஜகர் (காகம்) மோரியர் (மயில்) புலிங்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்த புனைந்துரையை புகுத்தியுள்ளார். வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என’ இலங்கையின் பழைய வரலாறு’ என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச்சிங்களவர் தென்புலத்தோர்க்கு படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.
இந்த நாகர்கள்இ இயக்கர்கள்இ வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. (சங்ககாலப்புலவர்களில் சிலர் வேடர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.)
இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில் அதாவது கிறித்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம்இ மணிநாகதீபம்இ மணிபுரம் மணிபல்லவம் என்னும் பெயர்களால்வழங்கப்பட்ட பெருந்தீவும்இ கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.
இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு அனலைதீவு மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.
கி.மு. வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும்இ அந்த நாட்டு நாகவரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளை திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் – சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடியென்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.
இந்தச் சிங்கக் கொடியே விஜயனின் சந்தததியோடு நாகர்கள் மணவுறவு வைத்து இரண்டறக் கலந்தபோது சிங்களவரின் கொடியாகப் பின் மாறியது.
குவேனியை மணந்த விஜயன் அவளைக் கைவிட்டு பின் பாண்டிய இளவரசியை மணந்து கொண்டான் என்று மகாவம்சம் குறிப்பிட்டாலும் குலப் பின்னணி எதுவும் இல்லாத விஜயனுக்கு மூவேந்தர்களில் ஒருவனாகிய பாண்டியன் பெண் கொடுத்திருக்க மாட்டான் என்றும் நாககன்னிகை ஒருத்தியையே விஜயன் மணமுடித்திருக்க வேண்டும் என்று முதலியார் சி. இராசநாயகம் அவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்றும் நூலில் கூறியுள்ளார்.
நாகர்இ இயக்கர் அரக்கர்இ வேடர் இவர்கள் எல்லோரும் முன்குறிப்பட்டது போல் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்த கலிங்கர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர்இ இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் சிங்களவரே ஆதிக்குடியென்ற மாயயை தோற்றுவிப்பதற்கேயாகும்.
விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள ஐந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம்இ நகுலேசுவரம்இ திருக்கோணேசுவரம் மாமாங்கேசுவரம் மற்றும் முன்னேசுவரம் போன்ற சிவாலயங்கள் அப்போதும் இருந்திருக்கின்றன. இவற்றில் திருக்கேதீசுவரமும் கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார்இ சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோவில்களாகும்.
மேல்குறிப்பிட்ட ஐந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம் தேவேந்திரமுனையில் சந்திரமௌவீசுவரர் போன்ற சைவசமய ஆலயங்களும் மத்தியில் சிவனொளிபாத மலையும் இருந்திருக்கின்றன.
இலங்கையை ஆண்ட இயக்கர்குல மன்னனான இராவணன் மிகச் சிறந்த சிவபக்தனாக விளங்கியவன். திருஞானசம்பந்தர் ‘இராவணன் மேலது நீறு’ என்று திருநூற்றுப் பதிகத்தில் இவனை போற்றிப் பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இராவணனின் பட்டத்தரசியை ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேயபிரானை சீரியவாயால் குயிலே தென்பாண்டிநாடனைக் கூவாய் என குயில்பத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார். ‘பெருந்துறை மேயபிரான்’ என்று தூய தமிழில் நாளும் தமிழ்வளர்க்கும் ஞானசம்பந்தர் குறிப்பிட்டது மாதோட்டத்து திருக்கேதீசுவரத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனையே. மா என்றால் பெரியது என்று பொருள். தோட்டம் என்றால் துறை என்று பொருள். இந்த மாதோட்டமே பன்னெடுங்காலமாக இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்காளக்குடாக் கடலுக்கூடாக கீழைத்தேசங்களுக்குப் பயணம் செய்யும் மரக்கலங்களும்இ சீனதேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் மாதோட்டம் வழியாகவே போய்வந்தன.
திருக்கோணேசுவர மலையில் காணப்படும் ஆழமான பெரிய வெட்டு இராவணன் வெட்டென்றே இன்றும் அழைக்கப்படுகிறது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள கன்னியாவில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இராவணன் தனது தாயாரின் நினைவாக வெட்டினான் என்ற ஐதீகமும் இன்றுவரை தமிழ்மக்களிடையே இருந்துவருகிறது.
இராமாயண காலத்தில்இ இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் இப்போது மாதோட்டம் (மன்னார்) என்று அழைக்கப்படும் மாந்தை என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டுநாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும்இ தேவசிற்பியுமாகிய விசுவகர்மாவின் வம்சத்தவராகிய கம்மியர் ஆட்சிசெய்து வந்தார்கள். இலங்கை வேந்தன் இராவணன் தேவி மண்டோதரியும்இ அவன் சிறிய தந்தையாகிய குபேரன் தேவி சித்திரரேகையும்இ இம்மாந்த நகரைஆண்ட தேவகம்மிய அரசகுல வம்சத்துப் பெண்களே. முருகக் கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்கோனாகிய சூரபதுமனுடைய தேவி பதுமகோளையும் மாந்தை நகரத்தவளே.
மாந்தையை ஆண்ட அரசர் காந்தக்கோட்டையென்று பலதேசத்தாரால் போற்றப்பட்டதும் தூங்கெயில் என்று புறநானூற்றில் சிறப்பிக்கட்டதுமான இரும்புக் கோட்டையை உடையவர்களாகவும்இ வாணிபச் செழிப்புற்றவர்களாகவும்இ வீரம் கொடை இசை சிற்பம்ஓவியம் போன்றவற்றில் சிறப்புற்றவர்களாகவும் விளங்கினார்கள்.
மாந்தையில் வாழ்ந்த ஓவியகுலத்தாரின் சித்திரத் தொழிலின் சிறப்புக்காரணமாகவே ஓவியம் என்ற சொல் தமிழில் வழங்குகிறது.
எபிரேபிய மொழியில் யானையின் தந்தத்துக்கும் குரங்குக்கும்அகிலுக்கும் மயிலுக்கும் உரிய சொற்கள் இபம் கபி அகில் தோகை என்னும் தமிழ்ச் சொற்களே. இதேபோல் கிரேக்க மொழியில் அரிசி இஞ்சிவேர் கறுவா என்னும் பண்டங்களைக் குறிக்கும் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.
ஓவியரல்லாத மறுநாகர் வம்சத்து அரசர்கள் கதிரமலை இன்று முல்லைத்தீவு என்று அழைக்கப்படும் எருமைமுல்லைத்தீவிலும் குதிரைமலையிலும் இருந்து அரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும் எழினியும் பிட்டங்கொற்றானும்இ குமணனும் குதிரமலையிலும் ஆந்தைஆதனழிசி நல்லியக்கோடன் வில்லியாதன் என்பார் மாந்தையிலும்இ எருமையூரன் எருமைமுல்லைத்தீவிலும் அரசாண்டதாக புறநானூறு – அகநானூற்றுப் பாடல்களால் அறிய முடிகிறது.
இந்தக் கதிரமலையே போத்துக்கேயர் கபலத்தில் கந்தர்குடை என்றும் ஒல்லாந்தர் காலத்தில் கந்தரோடை என்றும் ஓடைக்குறிச்சி என்றும் திரியலாயிற்று.
விஜயன் ஒன்றில் மாந்தையில் அல்லது கீரிமலையில் கரைவந்து இறங்கியிருக்க வேண்டும். யாழ்ப்பாண வைபமாலை விஜயன் கதிரமலையில் வந்திறங்கியதாகவே சொல்கிறது. ‘கதிரமலையில் வசித்த நாகவரசனுடன் நட்புக் கொண்டு இலங்கையில் பாழடைந்துகிடந்த கோவில்களைப் புதுப்பித்தும் புதிய கோவில்களைக் கட்டிவித்தும் வந்தான்” என்னும் கர்ணபரம்பரக் கதையைத்தான் மயில்வாகனப் புலவர் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
விஜயனுக்குப்பின் சில தலைமுறைக்குள் இலங்கையரசர்கள் கலிங்ககுலம் நீங்க நாகர் குலத்தவரானார்கள். அதாவது தமிழர்களானார்கள்.
அசோகச் சக்கரவர்த்தி (கி.மு. 274 – 237) இலங்கையில் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிய அவனது மகள் சங்கமித்தையும்இ மகன் மகிந்தனும் வந்திறங்கிய இடம் இன்றைய கீரிமலையாகும். அப்போது அனுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னனான தேவநம்பிய தீசன் (கி.மு.247 – 207) நாகவம்சத்து அரசனாவான். அவன் சிங்கள அரசனல்லன். அவனது பெயர் சிங்களப் பெயரன்று. தேவநம்பிய தீசன் என்றால் தேவனை நம்பிய தீசன் என்பது பொருளாகும். தீசன்இ நாகன் நாகவம்சப் பெயர்களாகும். அவனது தந்தையின் பெயர் மூத்தசிவன். சுத்தமான தமிழ்ப் பெயர். தேவநம்பியதீசனின் பின் அரியணை ஏறிய அவனது சகோதரர்களது பெயர்கள் முறையே உத்தியன் மகாசிவன் என்பதாகும். இவர்களுக்குப் பின் சோரநாகன் இளநாகன் அபயநாகன் ஸ்ரீநாகன் குட்டநாகன் மகாநாகன் எனப் பல நாகர்குல அரசர்கள் இலங்கையை ஆண்டிருக்கிறர்கள்.
நாகவணக்கம் தமிழர்கள் மத்தியில் (சிங்களவர்களும் நாகர்களின் பரம்பரையாதலால் அவர்கள் மத்தியிலும் நாகவணக்கம் பரவலாக இருந்திருக்கிறது. நாகர்கோவில்இ நாகதம்பிரான் கோவில்கள் நாகவழிபாட்டோடு தொடர்புடைய சைவ ஆலயங்களாகும். தமிழர்களது பெயர்கள் பல நாகத்தோடு தொடர்புடையதாக இருப்பது அவதானிக்கத்தக்கது. நாகநாதன் நாகராசாநாகம்மாநாகேசுவரி போன்ற பெயர்கள் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க வானியலாளர் தொலமி நாகர்களை குறிப்பிடும்போது பின்வருமாறு வர்ணிக்கிறார்-
‘ஆண்களதும் பெண்களதும் காதுகள் பெரிதாக இருக்கும். இவர்கள் (நாகர்கள்) இரண்டு காதுகளிலும் பெரிய துளை போட்டு முத்துக்கள் பதித்த தோடுகளை அணிவார்கள் ‘ பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காதுக்குத் தோடு போடும் வழக்கம் மிக அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. (நானும் ஆங்கிலப்பள்ளிக்குப் போன பின்னரும் காதில் தோடுபோட்டிருந்தேன்.)
இதே தொலமி தான் வரைந்த உலகப் படத்தில் இலங்கையையும் வரைந்துள்ளார். மேற்கே சிலாபம் தொடக்கம் கிழக்கே திருகோணமலைக்குக் கீழேயுள்ள பிரதேசத்தை அவர் ‘நாகதீப’ (Nagadipa) என்றே குறிப்பிடுகிறார்! வடமேற்குப் பகுதியை தமிழ் சொல்லான தாமிரபரணி அரபு மொழியில் ஒலிமாற்றம் செய்யப்பட்ட தப்பிரபேன் என்ற பெயரால் குறிக்கிறார். கரையோர நகரங்களை தமிழ்ப் பெயரான பட்டினம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மேலும் இலங்கையை சாலிகே (சாலியூர்) என்றும் சிவனொளி பாதமலையை ழுரடipயனய என்றும் குறிப்பிடுகிறார். ஏனைய ஊர்ப்பெயர்கள் தமிழில் அல்லது அதன் நேரிடையான கிரேக்க மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கும் ஈழத்துக்கும் இடையில் நிலவிய வாணிக உறவை தெளிவாக்குகிறது.
‘நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலி;ன் வந்த கருங்கறி மூட்டையும்
வட மலைப் பிறந்த ஆரமும் அகிலும்
…………………………………………….
கங்கைவாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி’ (பட்டினப்பாலை 185-193)
மேலும் தமிழகம் – ஈழம் இரண்டுக்கும் இடையிலான உறவை உறுதிசெய்வதுபோல சங்கப் புலவர்கள் பட்டியலில் ஈழத்துப்பூதந்தேவனார் என்ற புலவர் பெயரும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
கி.மு.483 ல் இருந்து கி.பி. 896 வரை அதாவது விஜயன் முதல் காசியப்பன்வரை சுமார் 1இ400 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட மன்னர்களில் யாருமே தனிச் சிங்களவர் இல்லை. காரணம் சிங்கள இனமும் சிங்களமொழியும் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டளவிலேயே உருவாக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது. இதனாலேயே இலங்கைத் தீவுக்கு சிங்களத்தில் பெயர் யாதும் இல்லை. ஸ்ரீலங்கா என்பது கிரந்த (திருந்தாத சமஸ்கிருதம்) மொழிச் சொல்லாகும். சிங்களதீப என்ற சொல் மகாவம்சத்தில் இருமுறையும் சூழவம்சத்தில் ஒரேயொருமுறையும் இலங்கையைக் குறிக்க அதன் ஆசிரியர்களால் எடுத்தாளப்படுகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இலங்கை எப்போதும் மூன்று அல்லது அதற்கு மேலான பகுதிகளாகப் உருகுணரட்டை யாழ்ப்பாணம்) பிரிக்கப்பட்டு அரசர்களால் ஆண்டுவந்தபடியால் ”ஏகஇலங்கை” என்ற உணர்வு பிறக்க வழியில்லாது போயிற்று. துட்ட கைமுனு முதலாம் பராக்கிரமபாகுமுதலாம் விஜயபாகு இவர்கள் மட்டுமே முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது.
விஜயபாகு கி.பி. 1038ல் இராஜாதிராஜன் என்ற சோழமன்னலால் கொல்லப்பட்ட சிங்கைநகர் அரசனான மானபரணனின் மகளான திலகசுந்தரியைத் திருமணம் செய்து தனது பட்டத்தரசியாக்கினான். மானபரணின் மகனே முதலாம் பராக்கிரமபாகு ஆவான். தவனது தாயார் பெயர் இரத்தினவல்லி. அவன் சி;ங்கபுரத்தில் பிறந்ததாக இராட்சதகுளத்தருகே அவனால் வெட்டப்பட்ட சாசனம் கூறும். யாழ்ப்பாண சிங்கையாரிய சக்கரவர்த்திகள் இராமேசுவரத்தை ஆண்ட பிராமண குலத்தரசருடன் சம்பந்தம் செய்து ஆரிய அரசப் பெயர் புனைந்து உபவீதமுந்தரிந்திருந்தார்கள். அது போலவே பராக்கிரமபாகுவுக்கும் உபநயனச் சடங்கு செய்யப்பட்டது. எனவே பராக்கிரமபாகு தந்தைவழியிலும் தாய்வழியிலும் தமிழனும் சைவனும் ஆவான்.
பண்டைக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் ‘எலு’ என்ற மொழியையே பேசினார்கள். இது பின்னர் ‘ஈழு’ என வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே இலங்கைக்கு ‘ஈழம்’ என்ற பெயர் உண்டாயிற்று. ‘ஈழம்’ ‘சீழம்’ என மருவிச் பின் ‘சிஹழம்’ ‘சிங்களம்’ என மாறியது. ‘சிஹ’ என்ற பாலிமொழிச் சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். விஜயன் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பதால் அவன் சந்ததியினர் சிங்களவர் என்று அழைக்கப்பட்டார்கள் என மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடுவது அவரது கற்பனையே.
சிங்கள மொழியின் தாய்மொழியான ஈழமொழி பேசிவந்தபடியாற்றான் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊர்களின் பெயர்களும்இ காணித் தோம்புகளின் பெயர்களும் ‘சிங்களப் பெயர்களாக’ தோற்றமளிக்கின்றன. அப்பெயர்கள் விஜயன் இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கு முன்னரே வழக்கில் இருந்தன என்பதில் எந்த அய்யமும் இல்லை. இதே சமயம் குருநாக்கல் கேகாலை போன்ற சிங்கள ஊர்களின் தோம்புகள் தமிழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிங்களமொழி பாலிஇ சமஸ்கிருதம் தமிழ் எலுமொழிகளின் கலப்பினால் உருவாகிய ஒரு கதம்ப மொழியாகும். சிங்கள மொழியில் காணப்படும் சொற்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்ச் சொற்களை வேராகக் கொண்டவையே. சிங்கள மொழியின் எழுத்து வடிவம் பெரும்பாலும் தெலுங்கு கன்னட மொழிகளை ஒத்து இருச்கிறது. காரணம் சிங்கள மொழிக்கு எழுத்து வடிவமும் அமைத்தவர்கள் தென்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நாகார்க்சுனர்போதிதத்துவர் போன்ற திராவிட புத்த தேரர்களே.
பாண்டுவாசனது ஆட்சியில் மகதநாட்டிலிருந்து வந்த அனுராதன் என்ற அரசகுமாரன் என்பவனே தனது பெயரால் அனுராதபுரியை தலைநகராக்கினான்.
அனுராதபுரத்து அரசர்கள் கதிரமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த யாழ்ப்பாண அரசர்களோடு நட்புரிமை கொண்டு வாழ்ந்ததோடு மணவுறவும் வைத்துக் கொண்டார்கள். சில சிங்கள அரசர்கள் சைவசமயிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அது போலவே தமிழ் மக்கள் சிலரும் பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள். 1946 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி 2. 6 விழுக்காடு இலங்கைத்தமிழர் தங்களைப் புத்தசமயத்தினர் என தெரிவித்து இருந்தார்கள்.
மேலே குறிப்பிட்டதுபோல் தேவநம்பியதீசனின் தாயாரும் மூத்தசிவனின் பட்டத்தரசியும் நாகவம்சத்தவளே. அக்காரணம் பற்றியே ‘நாகன்’ ‘திஸ்ஸன்’ என்னும் பெயர்கள் மூத்தசிவனின் பிள்ளைகளுக்கு இடப்பட்டது.
மகதநாட்டு அசோகனும் தேவநம்பியதீசனும் சமகாலத்தவராவார். புத்தமதத்தை இலங்கையில் பரப்ப அசோகன் தனது மகள் சங்கமித்தைஇ மகன் மகிந்தன் ( அசோகனது வரலாற்றுப்படி அவனுக்கு மகன் இருந்ததற்கு ஆதாரம் இல்லை) இருவரையும் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையோடு அனுப்பி வைத்தான். அவர்களை ஏற்றிவந்த கப்பல் யாழ்ப்பாணத்து வடகரையில் இப்பொழுது சம்புத்துறையென அழைக்கப்படும் சம்பு கோளத்தில்தான் வந்திறங்கின.
தேவநம்பியதீசனைப் போன்றே கதிரமலையை ஆண்ட அரசர்களும் புத்தமதத்தைத் தழுவி புத்த பள்ளிகளையும் தாதுகர்ப்ங்களையும் கட்டுவித்தார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தமத வழிபாட்டுச் சின்னங்கள் இந்த அரசர்களாலும் அதற்குப் பின்னரும் கட்டப்பட்ட விகாரைகளின் அழிபாடுகளே.
தமிழர்கள் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு காலமாக சமண புத்தசமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சங்ககாலப் புலவர்கள் பலர் சமணஇ புத்தமதத்தவராவர். கோவலன் அநியாயமாகக் கொல்லப் பட்டபின் மாதவியும்இ அவளது மகள் மணிமேகலையும்இ கோவலன் தாய்தந்தையரும் (மாநாய்க்கன்) புத்தமதத்தை தழுவினார்கள் என மணிமேகலை கூறுகிறது. அதே சமயம் கண்ணகியின் பெற்றோர் (மாசாத்தான்) சமண மதத்தை தழுவினார்கள்.
தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் புத்தமத காப்பியங்களாகும். சிந்தாமணி சமணமத காப்பியம். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமணமுனிவராவர். வளையாபதி அழிந்தொழிந்து போனதால் அதன் ஆசிரியர் பற்றிய குறிப்பு எதுவும் தெரியவில்லை.
அனுராதபுரத்தரசர்கள் வலிமை குன்றிய காலத்தில் சுயாதீனமாகவும்இ வலிமை மிக்க காலத்தில் திறைசெலுத்தியும் அரசுபுரிந்து வந்தார்கள். அனுராதபுரம் கதிரமலையன்றி மேற்கே கல்யாணியிலும் (களனி)இ கிழக்கே கொட்டியாராத்திலும்இ தெற்கே திசமகாரமையிலும் மாத்தளைக்கு வடக்கே லேனதொறை என்னும் இடந்திலும் நாக இராகதானிகள் இருந்தன.
அனுராதபுரத்தில் விஜயனின் சந்ததி ஐந்து தலைமுறைக்குள் அற்றுப்போக கலிங்கரும் நாகரும் கலந்த மிசிரகுலத்தவரே அதன்பின் அரசாண்டு வந்தார்கள். பாண்டி நாட்டிலிருந்து பலதடவை படையெடுத்து வந்த தமிழரசர்களும் அனுராதபுரத்தை கைப்பற்றி அரசாண்டு வந்தார்கள். அப்போது மேலும் பல தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின.
நாகரும் இயக்கரும்கலிங்கரும் வேடரும் தமிழரும் கலந்தே சிங்கள இனம் உருவாகியது. தெற்கே மாத்தறை தொடக்கம் வடக்கே சிலாபம்வரை வாழுகின்ற கரையோர மக்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து நாளடைவில் சிங்களவர்களான தமிழர்களேயாவர். அண்மைக் காலத்தில்கூட நீர்கொழும்பு சிலாபத்தில் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்த பரவர் மதமாற்றம் காரணமாக தமிழை விடுத்து சிங்களத்தை கற்கை கொழியாகப் புகுத்தியதினால் சிங்களவர்களாக மாறினவர்களே. இதேபோல் வாணிக நிமித்தமாக கொழும்புக்கு வந்து குடியேறிய தமிழ்நாட்டு செட்டிமார்இ நாளடைவில் கொழும்புச் செட்டிகளாக மாறி இன்று முழுச் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள்.
சிங்கள அரசர்கள் தங்களுக்குள் அரியாசனத்துக்கு மோதிக் கொண்ட போதெல்லாம் பாண்டிய சோழநாட்டு மன்னர்களின் உதவியையே நாடினார்கள். அங்கிருந்து பெரும் படைகளை திரட்டி ஆட்சியில் இருந்தவர்களைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்கள் இவர்களால் கொண்டுவரப்பட்ட படையினர் இலங்கையில் தங்கி நாளடைவில் சிங்களவர்களாகவும் பவுத்தர்களாகவும் மாறினார்கள்.
சாளுக்கிய மன்னனான ஆறாவது விக்கிரமாதித்தனுக்கு விஜயபாகுவால் அனுப்பப்பட்ட தூதுவர்களை சோழர்கள் அவமதித்தார்கள் என்பதற்காக சோழர்மீது படையெடுக்க விஜயபாகு முனைந்தபோது அவனது வேளக்காரப்படை அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது.
சிங்கள அரசர்கள் காலத்துக்கு காலம் பாண்டிய சோழ இளவரசிகளை திருமணம் செய்து கொண்டதால் அந்த இளவரசிகளைத் தொடர்ந்து பிராமணர்படைத்தலைவர்கள் வேலைக்காரர்கள் குடிபெயர்ந்தார்கள். இவர்களும் நாளடைவில் சிங்கள சமூகத்தோடு சங்கமமானார்கள்.
கண்டிராஜ்யத்தின் கடைசி நான்கு நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட படைத்தளபதிகள்இ மந்திரிபிரதானிகள் காலப்போக்கில் சிங்களவர்கள் ஆனார்கள். கண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கண்டிய தலையாரிகளில் அரைவாசிப்பேர் தமிழிலேயே கையெழுத்திட்டார்கள்.
இன்றைய கண்டிய பிரபுத்தவ குடும்பங்களான ரத்வத்தைஅலுவிகாரை எகலபொலமொன்றாவெல பிலிமத்தலாவ கெப்பட்டிப்பொல அசல் தமிழ்ப் பெயர்களின் திரிபே.
அலுவிகாரை என்பது அளவுகாரன் அதாவது நிலத்தை அளப்பவன்.
எகலபொல என்பது எல்லைப் பாதுகாவலனைக் குறிக்கும். ரத்வத்தை என்பது ரதவாதயன் என்ற சொல்லை அடியாகக் கொண்டது. அதாவது அரசனின் கட்டளைப்படி கசையடித் தண்டனையை நிறைவேற்றுபவன். மொன்றாவல தமிழ்ச்சொற்களான மண்வேலை என்பதன் திரிபாகும். மண்வேலைக்குப் பொறுப்பாக இருப்பவன். புலவர் சக தலைவன் சமன் பிலிமத்தலாவ . தலைமைப்புலவர். இதே போல் கெப்பெட்டிப்பொல கல் சக வேலை சக பாலன் – அதாவது கல்லாலான கட்டிட வேலையை மேற்பார்வை (பாலனம்) செய்பவன்.
பண்டாரநாயக்க என்ற பெயர் அரண்மனை பொக்கிஷத்துக்கு தலைவனாக இருப்பவனைக் குறிக்கும்.
சிங்களவரின் பரம்பரையை பின்னோக்கிப் பார்த்தால் அது ஒரு தமிழன் அல்லது தமிழச்சியின் தொடக்கத்தில் போய் முடிவதைப் பார்க்கலாம்.
எனவே நாகர் இயக்கர் இயம்பர் வேடர் தமிழர் போன்ற திராவிட இனத்தவரே வரலாற்று அடிப்படையிலும்இ இதிகாச அடிப்படையிலும் இலக்கிய அடிப்படையிலும் இலங்கையின் பூர்வீக குடிமக்களாவர். ஆட்சித்தலைவர் சந்திரிகாவும் மற்றும் சிங்கள – பவுத்த இனவாதிகள் கூறுவதுபோல் வந்தேறு குடிகளான சிங்களவர் அல்ல.
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்?
(நக்கீரன்)
முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது என்பது பழமொழி. இலங்கைத்தீவின் பூர்வீக குடிமக்கள் யார்? தமிழரா அல்லது சிங்களவரா? என்ற கேள்வி இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.
இலங்கைத் தீவின் வரலாறு கிமு 483 இல் இன்றைய கலிங்கம் அல்லது வங்காளத்திலிருந்து வந்து குடியேறிய விஜயனும் அவனது எழுணூறு தோழர்களோடு தொடங்குகிறது என்றும் இலங்கைத்தீவு அவன் பரம்;பரையினரான சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பது சிங்கள – பவுத்த தீவிரவாதிகளது திரிபுவாதமாக இருந்து வருகிறது.
அதுமட்டும் அல்லாது தமிழர்கள் வந்தேறு குடிகள், காலத்துக்கு காலம் இலங்கைமீது படையெடுத்து வந்த பாண்டிய சோழ மன்னர்களால் கொண்டுவந்து குடியேற்றப் பட்டவர்கள் அவர்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களது தயவில் வாழுகின்றவர்கள் என்பதும் இந்த சிங்கள – பவுத்த இனவாதிகளது வாதமாகும்.
இந்த வாதத்துக்குத் துiணாயாக மகாவம்சம், சூழவம்சம் போன்ற பவுத்த இதிகாசங்கள், சிங்கள – பவுத்த தேசியத்தின் முன்னோடியென கொண்டாடப்படும் அநகாரிக தர்மபால போன்ற சிங்கள தேசியவாதிகளது எழுத்துக்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
‘போர் என்பது வேறுவழிகளில் முன்னெடுக்கப்படும் அரசியல’ (‘றயச ளை யn நஒவநளெழைn ழக pழடவைiஉள டில ழவாநச அநயளெ’) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய தமிழர் – சிங்களவருக்கு இடையிலான ஈழப்போரை இலங்கைத் தீவு யாருக்குச் சொந்தம் என்ற அரசியல் கேள்விக்கு வேறு வழிகளில் பதில் காண முனையும் முயற்சி என்று வர்ணிப்பதில் தவறில்லை என்றே சொல்லலாம்.
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவின் மக்கள். எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கும் தமிழர்களுக்கும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்களுக்கும் நாட்டில் ஒத்த உரிமை, சொந்தம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் இனச் சிக்கல் இருக்காது. வடக்கும் – கிழக்கும் தமிழ்மக்களது தாயக பூமி, தெற்கும் மேற்கும் மத்தியும் சிங்களமக்களது தாயக பூமி என்ற யதார்த்தம் ஒப்புக் கொள்ளப் பட்டால் ஒரு தீவில் இரண்டு நாடுகள் இரண்டு மக்கள் சமாதானமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த யதார்த்தத்தைச் சிங்கள – பவுத்த இனவாதிகள் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையோ அவர்களுக்கும் சிங்களவர் போன்றே ஆட்சியுரிமையில் பங்கு இருக்கிறது என்பதையோ இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகள் ஒத்துக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
இந்த சிங்கள – பவுத்த தீவிரவாதிகளில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டை சேராதவர்கள் எப்படி தனிநாடு கோரமுடியும் என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். இதில் அதிசயம் எதுவும் இல்லை. அநகாரிக தர்மபால, எஸ். டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க போன்றவர்கள் எழுதியும் பேசியும் வந்ததையே சனாதிபதி சந்திரிகாவும் சொல்லியிருக்கிறார். கொஞ்சக் காலத்துக்கு முன் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று சந்திரிகா அனுராதபுரத்தில் நடந்த ஒரு வைபவத்தில் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று கூறியதையிட்டு கொழும்பில் அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி மறுப்புத் தெரிவிக்கவில்லை, ஏனைய தமிழ்க் குழுக்கள் எதுவும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. நக்கினார் நாவிழந்தார் என்பது போல இந்தத் தமிழ்க் குழுக்களின் தலைவர்கள் வாயைத் திறக்காமல் மவுனிகளாக இருந்துவிட்டார்கள்.
அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குமார் பொன்னம்பலம் ஒருவரே சனாதிபதியின் கூற்றை மறுத்து அறிக்கை விட்டுள்ளார்.
ஒரு நாடும் அந்த நாட்டு மக்களும் பொருளாதாரத் துறையில், நவீன தொழில் நுட்பத்துறையில் முன்னேற வேண்டுமென்றால் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து எல்லா மக்களும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒத்த உரிமை, ஒத்த நிறை, ஒத்த விலை உடையவர்களாக வாழ்வதற்குரிய அரசியல் ஆட்சிமுறை இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் சமாதானம், செழுமை, அரசியல் கட்டுப்பாடு நிலவும். இதற்கு கனடா நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதற்கு முற்றிலும் மாறாக ஸ்ரீலங்கா விளங்குகிறது. நல்லாட்சிக்குப் பதில் காட்டாச்சியே அங்கு நடைபெறுகிறது. செங்கோல் ஆட்சிக்குப் பதில் கொடுங்கோல் ஆட்சியே இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த நாடு குட்டிச்சுவராக நாளும் பொழுதும் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
சிங்கள – பவுத்த இனவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது என எண்ணி நடக்கிறார்கள். ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும்; கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.
மகாவம்சம் 6ம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரர் ஒருவரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் (நுpiஉ) ஆகும். மகாவம்சம் என்றால் ‘பெருங்குடியினர்’ என்பது பொருளாகும். வம்சம் தமிழ்ச் சொல்லாகும். இது இலங்கைபற்றிய கர்ணபரம்பரை கதையோடு ஆரம்பித்து மகாசேனன் ஆட்சியோடு(கி.பி. 334- 362) முடிவுறுகிறது. இதன்; இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற புத்ததேரலால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டகைமுனுவென்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். ( கி.பி. 1137-1186).
தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் ‘புன்னெறி’ (கயடளந டிநடநைகள) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் – கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் – துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
இலங்கைத் தீவுக்கு புத்தபெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.முதல்முறை வந்தபோது ஆட்சியுரிமைபற்றி தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்க அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார் என்று குறிப்பிடுகிறது.
இரண்டாவதுமுறை வந்த போது புத்தர் நாகதீவில் இறங்கி அரசுரிமைபற்றி தங்களுக்குள் போர்புரிந்த இரண்டு நாகவரசர்களது பிணக்கைத் தீர்த்து, அந்த அரசர்கள் உரிமைவேண்டிப் போர்புரிந்த மணித்தவசில் அமர்ந்து மூன்று கோடி நாகர்களுக்கு புத்த தருமத்தைப் போதித்தாரென மகாவம்சமும் புத்தமத காப்பியமான மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.
மூன்றாவது முறை புத்தர் வந்தபோது இன்று களனி என்று அழைக்கப்படும் கல்யாணியில் அரச உரிமைக்காக சண்டைபிடித்துக் கொண்டிருந்த இரண்டு நாகவரசர்களுக்கிடையில் நிலவிய பிணக்கைப் போக்கினார் என்று மகாவம்சம் கூறுகிறது.
மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்த புனைந்துரையை புகுத்தியுள்ளார். வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என’ இலங்கையின் பழைய வரலாறு’ என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச் சிங்களவர் தென்புலத்தோர்க்கு படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.
இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. (சங்ககாலப்புலவர்களில் சிலர் வேடர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.)
இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறித்;து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால்வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.
இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.
கி.மு. வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும், அந்த நாட்டு நாகவரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளை திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் -சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடியென்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.
இந்தச் சிங்கக் கொடியே விஜயனின் சந்தததியோடு நாகர்கள் மணவுறவு வைத்து இரண்டறக் கலந்தபோது சிங்களவரின் கொடியாகப்பின் மாறியது.
குவேனியை மணந்த விஜயன் அவளைக் கைவிட்டு பின் பாண்டிய இளவரசியை மணந்து கொண்டான் என்று மகாவம்சம் குறிப்பிட்டாலும் குலப் பின்னணி எதுவும் இல்லாத விஜயனுக்கு மூவேந்தர்களில் ஒருவனாகிய பாண்டியன் பெண் கொடுத்திருக்க மாட்டான் என்றும் நாககன்னிகை ஒருத்தியையே விஜயன் மணமுடித்திருக்க வேண்டும் என்று முதலியார் சி. இராசநாயகம் அவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்றும் நூலில் கூறியுள்ளார்.
நாகர், இயக்கர் அரக்கர், வேடர் இவர்கள் எல்லோரும் முன்குறிப்பட்டது போல் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்த கலிங்கர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் சிங்களவரே ஆதிக்குடியென்ற மாயயை தோற்றுவிப்பதற்கேயாகும்.
விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள ஐந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம் மாமாங்கேசுவரம் மற்றும் முன்னேசுவரம் போன்ற சிவாலயங்கள் அப்போதும் இருந்திருக்கின்றன. இவற்றில் திருக்கேதீசுவரமும் கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோவில்களாகும்.
மேல்குறிப்பிட்ட ஐந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌவீசுவரர் போன்ற சைவசமய ஆலயங்களும் மத்தியில் சிவனொளிபாத மலையும் இருந்திருக்கின்றன.
இலங்கையை ஆண்ட இயக்கர்குல மன்னனான இராவணன் மிகச் சிறந்த சிவபக்தனாக விளங்கியவன். திருஞானசம்பந்தர் ‘இராவணன் மேலது நீறு’ என்று திருநூற்றுப் பதிகத்தில் இவனை போற்றிப் பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இராவணனின் பட்டத்தரசியை ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேயபிரானை சீரியவாயால் குயிலே தென்பாண்டிநாடனைக் கூவாய் என குயில்பத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார். ‘பெருந்துறை மேயபிரான்’ என்று தூய தமிழில் நாளும் தமிழ்வளர்க்கும் ஞானசம்பந்தர் குறிப்பிட்டது மாதோட்டத்து திருக்கேதீசுவரத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனையே. மா என்றால் பெரியது என்று பொருள். தோட்டம் என்றால் துறை என்று பொருள். இந்த மாதோட்டமே பன்னெடுங்காலமாக இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்காளக்குடாக் கடலுக்கூடாக கீழைத்தேசங்களுக்குப் பயணம் செய்யும் மரக்கலங்களும், சீனதேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் மாதோட்டம் வழியாகவே போய்வந்தன.
திருக்கோணேசுவர மலையில் காணப்படும் ஆழமான பெரிய வெட்டு இராவணன் வெட்டென்றே இன்றும் அழைக்கப்படுகிறது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள கன்னியாவில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இராவணன் தனது தாயாரின் நினைவாக வெட்டினான் என்ற ஐதீகமும் இன்றுவரை தமிழ்மக்களிடையே இருந்துவருகிறது.
இராமாயண காலத்தில், இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் இப்போது மாதோட்டம் (மன்னார்) என்று அழைக்கப்படும் மாந்தை என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டுநாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும், தேவசிற்பியுமாகிய விசுவகர்மாவின் வம்சத்தவராகிய கம்மியர் ஆட்சிசெய்து வந்தார்கள். இலங்கை வேந்தன் இராவணன் தேவி மண்டோதரியும், அவன் சிறிய தந்தையாகிய குபேரன் தேவி சித்திரரேகையும், இம்மாந்த நகரைஆண்ட தேவகம்மிய அரசகுல வம்சத்துப் பெண்களே. முருகக் கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்கோனாகிய சூரபதுமனுடைய தேவி பதுமகோளையும் மாந்தை நகரத்தவளே.
மாந்தையை ஆண்ட அரசர் காந்தக்கோட்டையென்று பலதேசத்தாரால் போற்றப்பட்டதும், தூங்கெயில் என்று புறநானூற்றில் சிறப்பிக்கட்டதுமான இரும்புக் கோட்டையை உடையவர்களாகவும், வாணிபச் செழிப்புற்றவர்களாகவும், வீரம் கொடை, இசை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் சிறப்புற்றவர்களாகவும் விளங்கினார்கள்.
மாந்தையில் வாழ்ந்த ஓவியகுலத்தாரின் சித்திரத் தொழிலின் சிறப்புக்காரணமாகவே ஓவியம் என்ற சொல் தமிழில் வழங்குகிறது.
எபிரேபிய மொழியில் யானையின் தந்தத்துக்கும், குரங்குக்கும், அகிலுக்கும், மயிலுக்கும் உரிய சொற்கள் இபம், கபி, அகில், தோகை என்னும் தமிழ்ச் சொற்களே. இதேபோல் கிரேக்க மொழியில் அரிசி, இஞ்சிவேர், கறுவா என்னும் பண்டங்களைக் குறிக்கும் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.
ஓவியரல்லாத மறுநாகர் வம்சத்து அரசர்கள் கதிரமலை, இன்று முல்லைத்தீவு என்று அழைக்கப்படும் எருமைமுல்லைத்தீவிலும், குதிரைமலையிலும் இருந்துஅரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும், எழினியும், பிட்டங்கொற்றானும், குமணனும் குதிரமலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக்கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமையூரன் எருமைமுல்லைத்தீவிலும் அரசாண்டதாக புறநானூறு – அகநானூற்றுப் பாடல்களால் அறிய முடிகிறது.
இந்தக் கதிரமலையே போத்துக்கேயர் கபலத்தில் கந்தர்குடை என்றும் ஒல்லாந்தர் காலத்தில் கந்தரோடை என்றும் ஓடைக்குறிச்சி என்றும் திரியலாயிற்று.
விஜயன் ஒன்றில் மாந்தையில் அல்லது கீரிமலையில் கரைவந்து இறங்கியிருக்க வேண்டும். யாழ்ப்பாண வைபமாலை விஜயன் கதிரமலையில் வந்திறங்கியதாகவே சொல்கிறது. ‘கதிரமலையில் வசித்த நாகவரசனுடன் நட்புக் கொண்டு, இலங்கையில் பாழடைந்துகிடந்த கோவில்களைப் புதுப்பித்தும் புதிய கோவில்களைக் கட்டிவித்தும் வந்தான்’ என்னும் கர்ணபரம்பரக் கதையைத்தான் மயில்வாகனப் புலவர் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
விஜயனுக்குப்பின் சில தலைமுறைக்குள் இலங்கையரசர்கள் கலிங்ககுலம் நீங்க நாகர்குலத்தவரானார்கள். அதாவது தமிழர்களானார்கள்.
அசோகச் சக்கரவர்த்தி (கி.மு. 274-237) இலங்கையில் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிய அவனது மகள் சங்கமித்தையும், மகன் மகிந்தனும் வந்திறங்கிய இடம் இன்றைய கீரிமலையாகும். அப்போது அனுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னனான தேவநம்பிய தீசன் (கி.மு.247-207) நாகவம்சத்து அரசனாவான். அவன் சிங்கள அரசனல்லன். அவனது பெயர் சிங்களப் பெயரன்று. தேவநம்பிய தீசன் என்றால் தேவனை நம்பிய தீசன் என்பது பொருளாகும். தீசன், நாகன் நாகவம்சப் பெயர்களாகும். அவனது தந்தையின் பெயர் மூத்தசிவன். சுத்தமான தமிழ்ப் பெயர். தேவநம்பியதீசனின் பின் அரியணை ஏறிய அவனது சகோதரர்களது பெயர்கள் முறையே உத்தியன், மகாசிவன் என்பதாகும். இவர்களுக்குப் பின் சோரநாகன், இளநாகன், அபயநாகன், ஸ்ரீநாகன், குட்டநாகன், மகாநாகன் எனப் பல நாகர்குல அரசர்கள் இலங்கையை ஆண்டிருக்கிறர்கள்.
நாகவணக்கம் தமிழர்கள் மத்தியில் (சிங்களவர்களும் நாகர்களின் பரம்பரையாதலால் அவர்கள் மத்தியிலும் நாகவணக்கம் காணப்படுகிறது)பரவலாக இருந்திருக்கிறது. நாகர்கோவில், நாகதம்பிரான் கோவில்கள் நாகவழிபாட்டோடு தொடர்புடைய சைவ ஆலயங்களாகும். தமிழர்களது பெயர்கள் பல நாகத்தோடு தொடர்புடையதாக இருப்பது அவதானிக்கத்தக்கது. நாகநாதன், நாகராசா, நாகம்மா, நாகேசுவரி போன்ற பெயர்கள் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க வானியலாளர் தொலமி நாகர்களை குறிப்பிடும்போது பின்வருமாறு வர்ணிக்கிறார்-
‘ஆண்களதும் பெண்களதும் காதுகள் பெரிதாக இருக்கும். இவர்கள் (நாகர்கள்) இரண்டு காதுகளிலும் பெரிய துளை போட்டு முத்துக்கள் பதித்த தோடுகளை அணிவார்கள.;’ பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காதுக்குத் தோடு போடும் வழக்கம் மிக அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. (நானும் ஆங்கிலப்பள்ளிக்குப் போன பின்னரும் காதில் தோடுபோட்டிருந்தேன்.)
இதே தொலமி தான் வரைந்த உலகப் படத்தில் இலங்கையையும் வரைந்துள்ளார். மேற்கே சிலாபம் தொடக்கம் கிழக்கே திருகோணமலைக்குக் கீழேயுள்ள பிரதேசத்தை அவர் ‘நாகதீப’ (யேபயனiடிi) என்றே குறிப்பிடுகிறார்! வடமேற்குப் பகுதியை தமிழ் சொல்லான தாமிரபரணி அரபு மொழியில் ஒலிமாற்றம் செய்யப்பட்ட தப்பிரபேன் (வுயிசழடியநெ) என்ற பெயராhல் குறிக்கிறார். கரையோர நகரங்களை தமிழ்ப் பெயரான பட்டினம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மேலும் இலங்கையை சாலிகே (சாலியூர்) என்றும் சிவனொளி பாதமலையை ழுரடipயனய என்றும் குறிப்பிடுகிறார். ஏனைய ஊர்ப்பெயர்கள் தமிழில் அல்லது அதன் நேரிடையான கிரேக்க மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கும் ஈழத்துக்கும் இடையில் நிலவிய வாணிக உறவை தெளிவாக்குகிறது.
‘நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலி;ன் வந்த கருங்கறி மூட்டையும்
வட மலைப் பிறந்த ஆரமும் அகிலும்
…………………………………………….
கங்கைவாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி’ (பட்டினப்பாலை 185-193)
மேலும் தமிழகம் – ஈழம் இரண்டுக்கும் இடையிலான உறவை உறுதிசெய்வதுபோல சங்கப் புலவர்கள் பட்டியலில் ஈழத்துப்பூதந்தேவனார் என்ற புலவர் பெயரும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
கி.மு.483 ல் இருந்து கி.பி. 896 வரை அதாவது விஜயன் முதல் காசியப்பன்வரை சுமார் 1,400 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட மன்னர்களில் யாருமே தனிச் சிங்களவர் இல்லை. காரணம் சிங்கள இனமும் சிங்களமொழியும் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டளவிலேயே உருவாக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது. இதனாலேயே இலங்கைத் தீவுக்கு சிங்களத்தில் பெயர் யாதும் இல்லை. ஸ்ரீலங்கா என்பது கிரந்த (திருந்தாத சமஸ்கிருதம்) மொழிச் சொல்லாகும். சிங்களதீப என்ற சொல் மகாவம்சத்தில் இருமுறையும் சூழவம்சத்தில் ஒரேயொருமுறையும் இலங்கையைக் குறிக்க அதன் ஆசிரியர்களால் எடுத்தாளப்படுகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இலங்கை எப்போதும் மூன்று அல்லது அதற்கு மேலான பகுதிகளாகப் (ராஜரட்டை, மாயரட்டை, உருகுணரட்டை, யாழ்ப்பாணம்) பிரிக்கப்பட்டு அரசர்களால் ஆண்டுவந்தபடியால் ‘ஏகஇலங்கை’ என்ற உணர்வு பிறக்க வழியில்லாது போயிற்று. துட்ட கைமுனு, முதலாம் பராக்கிரமபாகு, முதலாம் விஜயபாகு இவர்கள் மட்டுமே முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது.
விஜயபாகு கி.பி. 1038ல் இராஜாதிராஜன் என்ற சோழமன்னலால் கொல்லப்பட்ட சிங்கைநகர் அரசனான மானபரணனின் மகளான திலகசுந்தரியைத் திருமணம் செய்து தனது பட்டத்தரசியாக்கினான். மானபரணின் மகனே முதலாம் பராக்கிரமபாகு ஆவான். தவனது தாயார் பெயர் இரத்தினவல்லி. அவன் சி;ங்கபுரத்தில் பிறந்ததாக இராட்சதகுளத்தருகே அவனால் வெட்டப்பட்ட சாசனம் கூறும். யாழ்ப்பாண சிங்கையாரிய சக்கரவர்த்திகள் இராமேசுவரத்தை ஆண்ட பிராமண குலத்தரசருடன் சம்பந்தம் செய்து ஆரிய அரசப் பெயர் புனைந்து உபவீதமுந்தரிந்திருந்தார்கள். அது போலவே பராக்கிரமபாகுவுக்கும் உபநயனச் சடங்கு செய்யப்பட்டது. எனவே பராக்கிரமபாகு தந்தைவழியிலும் தாய்வழியிலும் தமிழனும் சைவனும் ஆவான்.
பண்டைக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும், இயக்கரும் ‘எலு’ என்ற மொழியையே பேசினார்கள். இது பின்னர் ‘ஈழு’ என வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே இலங்கைக்கு ‘ஈழம்’ என்ற பெயர் உண்டாயிற்று. ‘ஈழம்’ ‘சீழம்’ என மருவிச் பின் ‘சிஹழம்’ ‘சிங்களம்’ என மாறியது. ‘சிஹ’ என்ற பாலிமொழிச் சொல்லின் பொருள் ‘சிங்கம்’ என்பதாகும். விஜயன் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பதால் அவன் சந்ததியினர் சிங்களவர் என்று அழைக்கப்பட்டார்கள் என மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடுவது அவரது கற்பனையே.
சிங்கள மொழியின் தாய்மொழியான ஈழமொழி பேசிவந்தபடியாற்றான் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊர்களின் பெயர்களும், காணித் தோம்புகளின் பெயர்களும் ‘சிங்களப் பெயர்களாக’ தோற்றமளிக்கின்றன. அப்பெயர்கள் விஜயன் இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கு முன்னரே வழக்கில் இருந்தன என்பதில் எந்த அய்யமும் இல்லை. இதே சமயம் குருநாக்கல், கேகாலை போன்ற சிங்கள ஊர்களின் தோம்புகள் தமிழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிங்களமொழி பாலி, சமஸ்கிருதம், தமிழ், எலுமொழிகளின் கலப்பினால் உருவாகிய ஒரு கதம்ப மொழியாகும். சிங்கள மொழியில் காணப்படும் சொற்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்ச் சொற்களை வேராகக் கொண்டவையே. சிங்கள மொழியின் எழுத்து வடிவம் பெரும்பாலும் தெலுங்கு கன்னட மொழிகளை ஒத்து இருச்கிறது. காரணம் சிங்கள மொழிக்கு எழுத்து வடிவமும் அமைத்தவர்கள் தென்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நாகார்ச்;சுனர், போதிதத்துவர் போன்ற திராவிட புத்த தேரர்களே.
பாண்டுவாசனது ஆட்சியில் மகதநாட்டிலிருந்து வந்த அனுராதன் என்ற அரசகுமாரன் என்பவனே தனது பெயரால் அனுராதபுரியை தலைநகராக்கினான்.
அனுராதபுரத்து அரசர்கள் கதிரமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த யாழ்ப்பாண அரசர்களோடு நட்புரிமை கொண்டு வாழ்ந்ததோடு மணவுறவும் வைத்துக் கொண்டார்கள். சில சிங்கள அரசர்கள் சைவசமயிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அது போலவே தமிழ் மக்கள் சிலரும் பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள். 1946 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி 2. 6 விழுக்காடு இலங்கைத்தமிழர் தங்களைப் புத்தசமயத்தினர் என தெரிவித்து இருந்தார்கள்.
மேலே குறிப்பிட்டதுபோல் தேவநம்பியதீசனின் தாயாரும் மூத்தசிவனின் பட்டத்தரசியும் நாகவம்சத்தவளே. அக்காரணம் பற்றியே ‘நாகன்’ ‘திஸ்ஸன்’ என்னும் பெயர்கள் மூத்தசிவனின் பிள்ளைகளுக்கு இ;டப்பட்டது.
மகதநாட்டு அசோகனும் தேவநம்பியதீசனும் சமகாலத்தவராவார். புத்தமதத்தை இலங்கையில் பரப்ப அசோகன் தனது மகள் சங்கமித்தை, மகன் மகிந்தன் ( அசோகனது வரலாற்றுப்படி அவனுக்கு மகன் இருந்ததற்கு ஆதாரம் இல்லை) இருவரையும் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையோடு அனுப்பி வைத்தான். அவர்களை ஏற்றிவந்த கப்பல் யாழ்ப்பாணத்து வடகரையில் இப்பொழுது சம்புத்துறையென அழைக்கப்படும் சம்பு கோளத்தில்தான் வந்திறங்கின.
தேவநம்பியதீசனைப் போன்றே கதிரமலையை ஆண்ட அரசர்களும் புத்தமதத்தைத் தழுவி புத்த பள்ளிகளையும் தாதுகர்ப்ங்களையும் கட்டுவித்தார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தமத வழிபாட்டுச் சின்னங்கள் இந்த அரசர்களாலும் அதற்குப் பின்னரும் கட்டப்பட்ட விகாரைகளின் அழிபாடுகளே.
தமிழர்கள் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு காலமாக சமண புத்தசமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சங்ககாலப் புலவர்கள் பலர் சமண, புத்தமதத்தவராவர். கோவலன் அநியாயமாகக் கொல்லப் பட்டபின் மாதவியும், அவளது மகள் மணிமேகலையும், கோவலன் தாய்தந்தையரும் (மாநாய்க்கன்) புத்தமதத்தை தழுவினார்கள் என மணிமேகலை கூறுகிறது. அதே சமயம் கண்ணகியின் பெற்றோர் (மாசாத்தான்) சமண மதத்தை தழுவினார்கள்.
தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் புத்தமத காப்பியங்களாகும். சிந்தாமணி சமணமத காப்பியம். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமணமுனிவராவர். வளையாபதி அழிந்தொழிந்து போனதால் அதன் ஆசிரியர் பற்றிய குறிப்பு எதுவும் தெரியவில்லை.
அனுராதபுரத்தரசர்கள் வலிமை குன்றிய காலத்தில் சுயாதீனமாகவும், வலிமை மிக்க காலத்தில் திறைசெலுத்தியும் அரசுபுரிந்து வந்தார்கள்.
அனுராதபுரம் கதிரமலையன்றி மேற்கே கல்யாணியிலும் (களனி), கிழக்கே கொட்டியாராத்திலும், தெற்கே திசமகாரமையிலும், மாத்தளைக்கு வடக்கே லேனதொறை என்னும் இடந்திலும் நாக இராகதானிகள் இருந்தன.
அனுராதபுரத்தில் விஜயனின் சந்ததி ஐந்து தலைமுறைக்குள் அற்றுப்போக கலிங்கரும் நாகரும் கலந்த மிசிரகுலத்தவரே அதன்பின் அரசாண்டு வந்தார்கள். பாண்டி நாட்டிலிருந்து பலதடவை படையெடுத்து வந்த தமிழரசர்களும் அனுராதபுரத்தை கைப்பற்றி அரசாண்டு வந்தார்கள். அப்போது மேலும் பல தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின.
நாகரும், இயக்கரும், கலிங்கரும், வேடரும், தமிழரும் கலந்தே சிங்கள இனம் உருவாகியது. தெற்கே மாத்தறை தொடக்கம் வடக்கே சிலாபம்வரை வாழுகின்ற கரையோர மக்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து நாளடைவில் சிங்களவர்களான தமிழர்களேயாவர். அண்மைக் காலத்தில்கூட நீர்கொழும்பு, சிலாபத்தில் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்த பரவர் மதமாற்றம் காரணமாக தமிழை விடுத்து சிங்களத்தை கற்கை கொழியாகப் புகுத்தியதினால் சிங்களவர்களாக மாறினவர்களே. இதேபோல் வாணிக நிமித்தமாக கொழும்புக்கு வந்து குடியேறிய தமிழ்நாட்டு செட்டிமார், நாளடைவில் கொழும்புச் செட்டிகளாக மாறி இன்று முழுச் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள்.
சிங்கள அரசர்கள் தங்களுக்குள் அரியாசனத்துக்கு மோதிக் கொண்ட போதெல்லாம் பாண்டிய, சோழநாட்டு மன்னர்களின் உதவியையே நாடினார்கள். அங்கிருந்து பெரும் படைகளை திரட்டி ஆட்சியில் இருந்தவர்களைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்கள் இவர்களால் கொண்டுவரப்பட்ட படையினர் இலங்கையில் தங்கி நாளடைவில் சிங்களவர்களாகவும் பவுத்தர்களாகவும் மாறினார்கள்.
சாளுக்கிய மன்னனான ஆறாவது விக்கிரமாதித்தனுக்கு விஜயபாகுவால் அனுப்பப்பட்ட தூதுவர்களை சோழர்கள் அவமதித்தார்கள் என்பதற்காக சோழர்மீது படையெடுக்க விஜயபாகு முனைந்தபோது அவனது வேளக்காரப்படை அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது.
சிங்கள அரசர்கள் காலத்துக்கு காலம் பாண்டிய சோழ இளவரசிகளை திருமணம் செய்து கொண்டதால் அந்த இளவரசிகளைத் தொடர்ந்து பிராமணர், படைத்தலைவர்கள், வேலைக்காரர்கள் குடிபெயர்ந்தார்கள். இவர்களும் நாளடைவில் சிங்கள சமூகத்தோடு சங்;கமமானார்கள்.
கண்டிராஜ்யத்தின் கடைசி நான்கு நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட படைத்தளபதிகள், மந்திரிபிரதானிகள் காலப்போக்கில் சிங்களவர்கள் ஆனார்கள். கண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கண்டிய தலையாரிகளில் அரைவாசிப்பேர் தமிழிலேயே கையெழுத்திட்டார்கள்.
இன்றைய கண்டிய பிரபுத்தவ குடும்பங்களான ரத்வத்தை, அலுவிகாரை, எகலபொல, மொன்றாவெல, பிலிமத்தலாவ, கெப்பட்டிப்பொல அசல் தமிழ்ப் பெயர்களின் திரிபே.
அலுவிகாரை என்பது அளவுகாரன் அதாவது நிலத்தை அளப்பவன்.
எகலபொல என்பது எல்லைப் பாதுகாவலனைக் குறிக்கும்.
ரத்வத்தை என்பது ரதவாதயன் என்ற சொல்லை அடியாகக் கொண்டது. அதாவது அரசனின் கட்டளைப்படி கசையடித் தண்டனையை நிறைவேற்றுபவன்.
மொன்றாவல தமிழ்ச்சொற்களான மண்வேலை என்பதன் திரிபாகும். மண்வேலைக்குப் பொறுப்பாக இருப்பவன். புலவர் சக தலைவன் சமன் பிலிமத்தலாவ . தலைமைப்புலவர்.
இதே போல் கெப்பெட்டிப்பொல கல் சக வேலை சக பாலன் – அதாவது கல்லாலான கட்டிட வேலையை மேற்பார்வை (பாலனம்) செய்பவன்.
பண்டாரநாயக்க என்ற பெயர் அரண்மனை பொக்கிஷத்துக்கு தலைவனாக இருப்பவனைக் குறிக்கும்.
சிங்களவரின் பரம்பரையை பின்னோக்கிப் பார்த்தால் அது ஒரு தமிழன் அல்லது தமிழச்சியின் தொடக்கத்தில் போய் முடிவதைப் பார்க்கலாம்.
எனவே நாகர், இயக்கர், இயம்பர், வேடர், தமிழர் போன்ற திராவிட இனத்தவரே வரலாற்று அடிப்படையிலும், இதிகாச அடிப்படையிலும் இலக்கிய அடிப்படையிலும் இலங்கையின் பூர்வீக குடிமக்களாவர். ஆட்சித்தலைவர் சந்திரிகாவும் மற்றும் சிங்கள – பவுத்த இனவாதிகள் கூறுவதுபோல் வந்தேறு குடிகளான சிங்களவர் அல்ல.
இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன்
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.
சிங்கள இனவாதம்
1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள் இருந்தார்கள். இவர்கள் ஆங்கிலேயரால் தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல் மலையாளிகளது தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம், தொழிற்சாலை, தேநீர் கடைகள், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர். இவர்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தொழிற் சங்கவாதியாக இருந்த ஏ.இ. குணசிங்கா தலைமை தாங்கினார்.
மலையாளிகளது தேநீர்க் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என கொழும்பு நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறினர். சிலர் தமிழ் அல்லது சிங்களப் பெண்களை மணந்து இலங்கையில் தங்கி விட்டனர். பண்டாரநாயக்காவின் முதல் அமைச்சரவையில் பவுத்தமத கலாசார அமைச்சராக பதவி வகுத்தவர் இந்த மலையாளிகளில் ஒருவரான ஜெயவீர குருப்பு ஆவர்!
1939 ஆம் ஆண்டு ஏ.இ. குணசிங்கா 15,000 தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனக் கேட்டுச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு அண்மையில் அரச பணியில் சேர்ந்த தமிழர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை டி.எஸ். சேனநாயக்கா கொண்டு வந்தார்.
இலங்கையில் 1860 முதல் தோட்டத் தொழிலாளர் போராட்டம் நடத்திய போதும் 1899 இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு தோற்றம் பெற்ற போதிலும் 1920 இல் மட்டுமே இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.
ஒன்று ஊடகவியலாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் மற்றது ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கம்.
1925 இல் நடேசய்யர் தனது அமைப்பை குணசிங்காவினுடைய தொழிற் சங்கத்தோடு இணைத்தார். ஆனால் 1928 ஆம் ஆண்டளவில் குணசிங்கா இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அதனால் நடேசய்யர் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.
கூலி வேலைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்
மலையகத் தமிழர் 1,800 முற்பகுதி தொடங்கி தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயரால் கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். வெள்ளைத் துரைமார்களால் கூலிகள் என அழைக்கப்பட்டவர்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நுழைந்த சில சொற்களில் இந்தக் கூலி என்ற சொல்லும் ஒன்று. மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு அதிக நேரம் தேயிலை, இரப்பர், கோப்பித் தோட்டங்களில் வேலை செய்தார்கள். லயம் என்று சொல்லுகிற தகரக் கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சமையல், சாப்பாடு. படுக்கை எல்லாம் இந்த லயத்தில்தான். இறந்த பின் இவர்களது உடல்கள் தோட்டங்களில் புதைக்கப்பட்டு தேயிலைச் செடிகளுக்கு உரம் ஆகின.
இவர்களின் குடிப்பெயர்வு மிகவும் சோகமானது. பயணம் செய்ய வேண்டிய நாளில் கையில் இரண்டொரு துணிமணியோடு வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள். கங்காணிகள் இவர்களை கால் நடையாக இராமேஸ்வரம் வரையும் கூட்டி வருவார்கள். அதற்குப் பிறகு தோணிகளில் மன்னார் கொண்டு வரப்படுவார்கள். மன்னாரை அடைந்ததும் அங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி இடங்களுக்கு கால் நடையாகக் காடு, மலைகள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நீண்ட, கரடு முரடான பயணத்தில் நாலில் ஒரு பகுதியினர் நோய் காரணமாக சாவை அணைத்துக் கொண்டார்கள். ஏழ்மையும் வறுமையுமே இந்த மக்களைத் தாம் பிறந்த தாய் நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. ஏழ்மைக்குக் காரணம் கல்வி இன்மையே. சமூக ஏணியின் கடைசிப் படியில் இருந்த இந்த மக்களை சமூகம் மக்களாகவே கணிக்கவில்லை. இந்து மதம் இவர்களைத் தீண்டாதார் என்று முத்திரை குத்திச் சேரிகளில் ஒதுக்கி வைத்தது. சாமி கும்பிடக் கூட இந்த மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. இன்று கூட தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் உலகத்தில் மிக மோசமாகச் சுரண்டப் படும் தொழிலாளர்களாக எண்ணப்படுகிறார்கள்.
1827 இல் மட்டும் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இது 1877 இல் 1,46,000 ஆக உயர்ந்தது (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). 1946 குடிமக்கள் கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,589 ஆக உயர்ந்திருந்தது.
ஏ.இ. குணசிங்கா தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் ‘இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?’ எனச் சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.
இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு அகவை 78 நிறைந்திருந்தது. (பக்கம்1791 சட்டமன்றப் பதிவேடு மூன்று-1928)
சிங்கள மொழி
சிங்களம் ஓர் இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றாலும் அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏனைய இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த குடும்ப மொழிகளில் காணப்படவில்லை. காரணம் சிங்களம் ஒன்று மட்டுமே இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்தோ – ஆரிய மொழியாகும்.
சிங்களம் மற்றும் தமிழ் இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் சிங்களம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்று கூறும் புலமையாளர்களும் இருக்கிறார்கள். சிங்கள புலமையாளர்களில் ஒருவரான டபுள்யூ. எவ். குணவர்த்தன தாம் எழுதிய சித்தாந்த பரிஸ்சானய என்ற நூலில் பின்வருமாறு கூறகிறார்.
‘சிங்களமொழி இலக்கணத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் ஆரிய மொழி இலக்கணத்துக்கு மாறாக உள்ளன. சிங்கள மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ்மொழியோடும் திராவிட மொழிவழக்கோடும் ஒத்துப் போகின்றன. இதில் இருந்து நான் ஒரு முடிவுக்குக் கட்டாயமாக வரவேண்டியிருந்தது. அதாவது சிங்களத்தின் கட்டுமான அடித்தளம் திராவிடமாகவும் அதன் கட்டுமான மேல்தளம் அதாவது அதன் சொற்றொகுதி ஆரியமாகவும் காணப்படுகிறது என்பதுதான்.’ சிங்கள மொழியை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துடன் இணைத்து மாக்ஸ்முல்லர் குறிப்பிட்டார். திராவிட மொழிக் குடும்பத்துக்குள் சிங்களம் வராது என கால்டுவெல் சொன்னார். இதனால் சிங்களம் ஒரு இந்தோ – ஆரிய மொழி என்ற கருதுகோளே மேலோங்கிக் காணப்படுகிறது.
மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யும் சமூக – மொழியியலாளர்கள் இரண்டு வௌ;வேறு மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் போது அவை பல வழிகளில் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றன எனக் கூறுகிறார்கள். இதில் எந்த மொழி வல்லமை மற்றும் பெருமை படைத்ததோ அந்த மொழி அன்பளிப்புச் செய்யும் மொழியாகவும், இரண்டாவது மொழி அன்பளிப்பை வாங்கும் மொழியாகவும் மாறிவிடுகிறது. சிங்கள – தமிழ் ஊடாடத்தில் தமிழ் கொடுக்கும் மொழியாகவும் சிங்களம் அதனை வாங்கும் மொழியாகவும் இருக்கின்றன.
சிங்களத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை சிங்கள பாஷேவய தெமிள வாசன அகராதிய என்ற நூலில் தொகுத்துள்ளார்கள்.
தமிழ்மொழி சிங்களமொழியின் மீது செல்வாக்குச் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் மற்றும் உன்னதமான இடத்தைக் காலத்துக்குக் காலம் வகுத்தமையே.
அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள்
கிமு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 247) கிமு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்துள்ளனர்.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு தமிழர்கள் (பாலி மொழியில் தெமிள) – சேனன், குத்திகன் – அனுராதபுரத்தைப் பிடித்து 22 ஆண்டுகள் ஆண்டதாக மகாவம்சம் சொல்கிறது. அடுத்ததாக எல்லாளன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் (கிமு 145 – 101) ஆட்சி செய்தான்.
ஆயினும் இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் பவுத்த மதத்துக்கு பெருமை தேடித் தந்த வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகைமுனுவின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.
எல்லாளனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் புன்நெறியைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனக் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும் தன் பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் குறை கூறுகிறது.
‘எல்லாளன் – துட்டகைமுனு இடையிலான போர் சிங்களவர் – தமிழர் போர் என மகாநாம தேரர் கெட்ட எண்ணத்தோடு சித்திரிக்கிறார். கைமுனுவின் குடிவழியைக் கவனமாக ஆராய்ந்தால் எல்லாளனைப் போலவே அவனும் ஒரு தமிழனே. ஒரேயொரு வேறுபாடு. கைமுனு பவுத்தன். எல்லாளன் இந்து. எல்லாளன் பவுத்தத்தின் எதிரியல்ல. உண்மையில் அவனைப் பவுத்தர்கள் நேசித்தார்கள். கைமுனுவிடம் காணப்பட்ட பலமான இந்து மரபுவழி காரணமாக அவன் கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான்.’
(The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist , while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle. Dr.S.K. Vadivel – Tamil Canadian)
எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்தற்குக் காரணம் தனது மூதாதையர் ஆண்ட அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும். மகாநாம தேரர் துட்டகைமுனுவின் போர் முழக்கம் ‘இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு’ என்ற கதையைப் புனைந்துள்ளார்.
துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் என்றொரு இனம் இருக்கவில்லை. அவன் தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். மேலும் மகாநாம தேரர் காலத்திலும் (6 ஆம் நூற்றாண்டு) சிங்களவர் இருக்கவில்லை. சிங்களமொழியும் இருக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே இன அடையாளம் இன உணர்வு இருக்கவில்லை. சாதி, சமய பிரிவுகளே இருந்தன. இனம் (சுயஉந) என்ற சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்த ஒன்றாகும். தமிழில் இனம் என்ற சொல் சுற்றத்தை அல்லது குலத்தைக் குறிக்கும்.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்பது திருக்குறள். இந்தக் குறள் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் வருகிறது.
இனம் என்ற சொல் அபிராமி அந்தாதியில் சுற்றம் அல்லது நட்பு என்ற பொருளில் பாடப்பட்டிருக்கிறது. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் … என்பது பாடல்.
அண்மையில் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அந்தோனி தெரிவித்திருந்தார்.
இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பவுத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக எண்பிக்க ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் மகிந்த இராசபக்சேக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
ஜக்சன் இலங்கையின் தொடக்க கால வரலாறு பற்றித் தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் படி சனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே ஜக்சன் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்ற மகாவம்ச கூறும் கதையின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார். துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தாம் என்று எண்பிக்கும் வகையில் இப்போது அனுராதபுரம் முழுதும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி வருகிறார்கள்!
மகாவம்ச கதையின் அடிப்படையில் கவுதம புத்தர் தொட்டு மகிந்த இராசபக்சே வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கவுதம புத்தரின் தந்தை – சுத்தோதனன்
சுத்தோதனனின் உடன்பிறப்பு – அமிதோதனன்
அமிதோதனனின் மகன் – பாண்டுசாக்கிய
பண்டுசாக்கியாவின் மகள் – பட்டககச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவாசுதேவனை மணக்கின்றாள். அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் – பாண்டுகாபயன்
பண்டுகாபயவின் மகன் – மூத்தசிவன்
மூத்தசிவனின் மகன் – தேவநம்பிய தீசன்
தேவநம்பிய தீசனின் உடன்பிறப்பு – மகாநாகன். இவனே உருகுணைக்கு தனது மனைவியோடு தப்பிச் சென்று புதிய இராசதானியை உருவாக்கியவன்.
மகாநாகவின் உடன்பிறப்பு – யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன – கோத்தபாய
கோத்தபாயாவின் மகன் – காகவண்ண தீசன்
காகவண்ண தீசன் மகன் – துட்டகைமுனுதுட்டகைமுனுவின் தந்தை – காகவண்ண தீசன்
மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது. (வளரும்)
மகாவம்சம் உண்மைகளும் கற்பனைகளும். – நக்கீரன்
[Thursday 2014-09-18 11:00]
|
தேவநம்பிய தீசன் (கிமு 247 – 207) ஆட்சிக் காலம் தொடக்கம் பவுத்தம் இலங்கைத் தீவில் பெரும்பான்மை மக்களது மதமாக இருந்து வருகிறது. சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். அது சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் கை கோர்த்து நிற்கின்றன எனலாம். |
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.
ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது தெரிந்திருக்கவில்லை. 1837 இல் யோர்ஜ் ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் (Ceylon Civil Service) இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1912 இல் வில்ஹெம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை Mabel Hay ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே அப்படி ஒரு நூல் ஒன்று இருப்பது பெரும்பாலான சிங்களவர்க்குத் தெரியவந்தது. இலங்கையில் பவுத்த மதம் பரவியிருந்த காலத்தில் பவுத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த தேரர்கள் சமய மரபுகள் குறித்தும் மன்னர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் வெட்டிய குளங்கள், கட்டிய விகாரைகள் குறித்தும் ஏடுகளில் எழுதி வைத்ததோடு அவற்றை வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இப்படிக் காலம் தோறும் சேகரிக்கப்பட்ட குறிப்புக்கள் “அட்டகதா” என்று அழைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இவை ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா – மகாவம்சம்’ என்று அழைக்கப்பட்டது. அட்டகதா – மகாவம்சத்தைத் தழுவி கிபி 4 ஆம் நூற்றாண்டளவில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. தீபவம்சத்தை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. காலத்திற்குக் காலம் பல பவுத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ செம்மைப் படுத்தி முழுமை பெற்றிருக்க வேண்டும். இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலை முதல் நூலாகக் கொண்டுதான் மகாநாம தேரர் 5 ஆம் நூற்றாண்டளவில் பாளிமொழியில் செய்யுள் வடிவில் மகாவம்சம் என்ற நூலை எழுதினார். இது வங்காளத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கையின் தாமிரபரணியை (தம்பபாணி) அடைந்த விஜயனது வருகையோடு (கிமு 483 -445) தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது. இதன் இரண்டாவது பாகம் சூளவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பவுத்ததேரரால் எழுதப்பட்டது. இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 – 77) வருணிக்கப்படுகிறான். மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம் துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க மகாவம்சம் அதே கதையை 12 அத்தியாயங்கள் (21-32) மகாநாம தேரர் பாடி முடிக்கிறார். அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான். மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். எனவே மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல். பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது. இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. இலங்கை வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள மகாவம்சம் ஒரு கால அளவு நூலாக விளங்குகிறது. மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வாழந்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார். மகாவம்சம் இலங்கைத் தீவுக்கு புத்தர் (ததாகதர்) மும்முறை வந்ததாக முதல் அத்தியாயம் குறிப்பிடுகிறது. இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர். புத்தர் இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் – குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் பயப்பீதி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் – தர்மம் – சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார். இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார். கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார். கவுதம புத்தர் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி என்ற ஊரில் கிமு 566 இல் சாக்கிய குலத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர், தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய நினைவுத் தூண் சின்னத்தால் புகழ் பெற்று விளங்குகிறது. “புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிருவாணம்” அல்லது “நிருவாண நிலை” என்று அழைக்கப்படுகிறது. ஞானம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் “மான் பூங்கா” என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் இராகுல், மகா பிரஜாபதி ஆகியோரைத் தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பவுத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பவுத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், “நான்கு அதிசய சத்தியங்களையும்”, “எண் வகை வழிகளையும்” கூறினார். பிறகு தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார். புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் வரவில்லை. இயக்கர்களை பயமுறுத்தி அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் தென்மேற்கு கல்யாணி என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளைப் பேரளவு மகாவம்சம் உறுதிசெய்கிறது. (1) கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன். (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85) துட்ட கைமுனு – எல்லாளன் போர் சிங்கள – தமிழ் இருசாராருக்கும் இடையிலான போரல்ல. அது பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த சமயப் போர். இரண்டு அரசர்களது படைகளிலும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும். வங்கம், கலிங்கம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் காலத்துக்குக் காலம் குடியேறிய வந்தேறுகுடிகள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், வேடர், பவுத்த தமிழர் ஆகியவர்களோடு கலந்து சிங்களவர் எனத் தோற்றம் பெற்றனர். மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் (வேடர்) இவர்களைக் குறிப்பிடுகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனான இராவணன் ஆண்டான் என்ற இராமாயண இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. மகாவம்ச ஆசிரியர் ஆதிக் குடிகளைக் குறிப்பிடும் போது தமிழர்களை வேண்டும் என்றே விட்டுவிட்டார். மகாவம்சத்தின் ஆறாவது அத்தியாயம் விஜயன் முடிசூட்டிக் கொண்டதைக் கூறுகிறது. ஏழாவது அத்தியாயம் விஜயன் புனிதனாக்கப்படுவது பற்றிக் கூறுகிறது. விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள் தவறானது. இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. இராமாயணத்தில் (கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது. கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி இல்லாததால் தீபவம்சம், மகாவம்சம் என்ற பவுத்த புராணங்களை பாளிமொழியில் எழுதினார்கள். இலங்கையைச் சுட்ட சிங்களத்தில் சொல் இல்லை. லங்கா என்பது சமற்கிருதச் சொல்லாகும். பவுத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் போன்றோரால் பேசப்பட்ட எலு மொழியுடன் இணைந்து பவுத்த மதத்தினைப் பின்பற்றுவோருக்கு மொழி அடிப்படையில் ஒரு அடையாளத்தை வழங்க 8 ஆம் நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள். தமிழில் உள்ள உறவுப் பெயர்கள் சிங்களத்தில் புகுந்துள்ளன. தாத்தா, தாத்தி, அப்பாச்சி – அப்பா, அம்மே (மலையாளத்திலும் அம்மேதான்!)) – அம்மா ஆச்சி – அம்மம்மா அல்லது அப்பம்மா, சீயா – அப்பப்பா அல்லது அம்மப்பா, அய்யா – அண்ணா, அக்கா – அக்கா, மல்லி – தம்பி, நங்கி – தங்கை, சகோதரயா – சகோதரன், புத்தா – மகன் துவ – மகள், பேனா – மருமகன், மல்லி கே புத்தா – தம்பியின் மகன், அக்கா கே துவ – அக்காவின் மகள், லொக்கு அம்மா – பெரியம்மா, லொக்கு தாத்தா – பெரியப்பா, மாமா – மாமா மசினா – மச்சான், பவுத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த மொழி வடிவத்தினைப் பின்பற்ற பவுத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர். அதனால் பவுத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பவுத்தர் – பவுத்தர் அல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது. பல்லவர் காலத்தில் (கிபி 6 – 7 ஆம் நூற்றாண்டளவில்) தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்து சமய எழுச்சியின் தாக்கம் காரணமாக அங்கு வாழ்ந்த தமிழ் பவுத்தர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள். இதனால் இலங்கையில் பவுத்தர் – பவுத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும் அதிகரித்தது. தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை அழைத்து “லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக” எனக் கட்டளை இட்டார். (மகாவம்சம் – அத்தியாயம் V11) (Buddha, seated on a throne on which nibbana was achieved the great divine sage, addressed this celebrated injunction to Sakka, the king of gods and the divine protector of the sasana (the dhamma doctrine as taught by Buddha) and instructed him “One Vijaya, son of Sinhabahu, king of the land of Lala together with his 700 officers of state has landed on Lanka. O Lord of devas! My religion will be established in Lanka. On that account thoroughly protect together with his retinue, him and Lanka.” (Mahavamsa –Ch.V11) இந்தப் புனைந்துரை பின்னர் எழுதப்பட்ட மதசார்பு சிங்கள வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பவுத்த சடங்குகளிலும் (சூளவம்சம், புஜவாலியா, தூபவம்சா, இராஜவாலியா….) மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு வருகின்றன. இதனால் அவை இன்றைய சிங்கள – பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன. சிங்கள அறிஞர்கள் இந்தக் கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் இலங்கையின் தொன்மை வரலாறாகச் சித்திரிதுள்ளனர். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும். முன்னர் குறிப்பிட்ட நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் (வேடர்) ஆகியோர் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தவர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே. நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும். விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள அய்ந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில தொண்டீசுவரமும் இருந்தன என யாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகிறது. தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை அவ்விடத்தைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர். திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களாகும். மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய கோயில்களும் நடுவில் சிவனொளிபாத மலையும் இருந்தன. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் இந்தச் சொல் இரண்டு முறை குறிக்கப்படுகிறது. மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோத்தபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவண்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்ட கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்ட’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது. எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். எனவே அவனும் எல்லாளனும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பவுத்த சமயத்தவன். தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் “புன்னெறி” (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் – கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட கைமுனு நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் – துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் எல்லாளன் – துட்ட கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – தமிழர் அல்லாதா பவுத்தர் இடையிலான போராக வேண்டுமென்றே சித்திரித்து இருக்கிறார். துட்ட கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கடவுளின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது. இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு ‘இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் – அதிகாரம் 25) ஆனால் மகாவம்சத்தின் முதல் நூலான தீபவம்சத்தில் எல்லாளன் – துட்டகைமுனு போர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தீபவம்சம் எல்லாளனை “ஷத்ரிய வம்ச இளவரசன்” எனக் குறிக்கிறது. மகாவம்சம் எல்லாளன் உயர்குலத்தில் பிறந்தவன் என்றும் சோழ நாட்டில் இருந்து வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், இவன் நீதி தவறாது ஆட்சி செய்தான் என்றும் கூறுகிறது. ஆனால், பூஜாவலி என்னும் வரலாற்று நூலின் ஆசிரியர் மயூரதேரர் எல்லாளனை மிகவும் கொடூரமானவனாகவும் அநீதியான ஆட்சியாளனாகவும் மடங்களையும் பெளத்த நிறுவனங்களை அழித்தவனாகவும் கூறுகிறார். தீபவம்சத்தில் துட்ட கைமுனு பற்றிப் பத்துப் பாடல்களே காணப்படுகின்றன. பிக்குணி சங்கமித்தை வெள்ளரசோடு இலங்கை வந்த கதையும் தீபவம்சத்தில் காணப்படவில்லை. எனவே எல்லாளன் – துட்ட கைமுனு இடையிலான போர் பற்றிய கதை தமிழகத்தில் எழுச்சிபெற்ற பக்தி இயக்கத்திற்கு எதிராக புனையப்பட்ட கதையாக இருக்கலாம். அந்தக் கதையை உண்மையென்று எடுத்துக் கொண்டால் துட்ட கைமுனு எல்லாளன் மீது படையெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. (1) எல்லாளன்தான் அசேலனைக் கொன்று அனராதபுரத்தைக் கைப்பற்றி ஆண்டான். இந்த அசேலன் மூத்தசிவனின் மகனாவான். எனவே தந்தை வழியில் அவன் துட்ட கைமுனுவின் பாட்டன் ஆவான். (2) அனுராதபுரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் முழு இலங்கைக்கும் மன்னன் ஆகவேண்டும் என்ற ஆசை. துட்ட கைமுனு – எல்லாளன் போரில் பவுத்தத்தை தழுவிய தமிழர்கள் துட்ட கைமுனுவின் படையில் இருந்தார்கள். அதே போல் பவுத்தத்தைத் தழுவிய தமிழர்கள் எல்லாளன் படையிலும் இருந்தார்கள். எல்லாளனது படைத்தலைவன் நந்தமித்தன் என்பவனின் உடன்பிறப்பின் மகனான மித்தன் ஆவான். ஆனால் இன்றைய சிங்கள – பவுத்தர்கள் எல்லாளன் – துட்டகைமுனு போரை தமிழர்களுக்கு எதிரான இனப் போர் என்று காட்டி தமிழர்களைத் தமது எதிரிகளாகவும் பார்க்கிறார்கள். இன்று மகாவம்ச சிந்தனையே சிங்கள ஆட்சியாளர்களை வழி நடத்துகிறது. கைமுனுவின் தந்தை பவுத்தபிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து உருண்டையாக்கி துட்ட கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று. அந்த உணவினைத் தூக்கி வீசிய துட்ட கைமுனு வேகமாகப் போய் படுக்கையில் குறண்டிக் கொண்டு படுக்கிறான். துட்ட கைமுனுவின் தாயார் அவனிடத்தில் “மகனே, கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே?” என்கிறாள். அதற்குத் துட்ட கைமுனு பின்வருமாறு பதில் அளிக்கிறான்: “மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?” துட்ட கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவண்ணதீசன் “மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதுமானது” (“Let Tamils rule that side of the Maha Ganga (now Mahaweli Ganga) and the districts this side of the Maha Ganga are more than enough for us to rule.”) எனப் பதில் இறுத்தது கவனிக்கத்தக்கது. இப்போது மகாவம்சம் ஒரு மீளாய்வு மற்றும் Mahavamsa A Review என்ற நூலை திரு தம்பு கனகசபை இரு மொழிகளிலும் ஒரு நூலாக எழுதயுள்ளார். இதற்கு முனனர் அவர் “ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூல் மகாவம்சத்தில் காணப்படும் உண்மைகளையும் கற்பனைகளையும் ஆராய்கிறது. மகாநாப தேரர் எழுதிய மகாவம்சத்தை ஒரு மாறுநிலைக் கோணத்தில் இருந்து நூலாசிரியர் திறனாய்வு செய்கிறார். இந்த நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய வட மாகாணசபை முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “திரு தம்பு கனகசபை எழுதிய “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் தகுந்த நேரத்தில் வெளிவந்துள்ளது. பல சிங்கள பவுத்தர்கள் மகாவம்சம் உண்மையான வரலாறு என நம்புகிறார்கள். அதனால் அவர்களது பழைய வரலாறும் இன்றைய வரலாறும் இயற்கையாகவே பிழையானதாகும். வரலாற்றாசிரியர்கள் மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் எனக் கருதவில்லை. நூலாசிரியர் திரு கனகசபை மகாவம்ச ஆசிரியரின் பவுத்தமதப் பற்றையும் இனப் பற்றையும் (மகாவம்ச ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் ‘பவுத்தர்களது மன எழுச்சிக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்துக்குமாக எழுதப்பட்டது எனச் சொல்கிறது) விளங்கப்படுத்துகிறார். நூலின் உள்ளடக்கம் உண்மையல்லாத கற்பனைகளைக் கொண்டது. இருப்பினும் மகாவம்சத்தில் சில வரலாற்று உண்மைகளும் தரவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் மகாநாம தேரர் தனது அதீத கற்பனைகளை அதில் கலந்துள்ளார். எடுத்துக்காட்டாக ‘சிவ’ ‘பிராமணன்’ ‘பிராமண கோயில்’ போன்ற சொற்கள் மகாவம்சத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட மக்களது பின்னணி பற்றியோ, சமூகத்தில் அவர்களது வகுபாகம் பற்றியோ, அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டு பற்றியோ, அவர்களது சமயம் பற்றியோ, அவர்களது மொழிபற்றியோ எந்தத் தரவும் நூலில் இல்லை. மேலும் மகாவம்சத்தில் அரசர்கள் பேசிய மொழி பற்றியோ அல்லது அவர்களது இனம் பற்றியோ எவ்வித குறிப்புகளும் இல்லை. தமிழர்கள் மட்டும் விதிவிலக்கு. மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடும் ‘சிவ’ ‘பிராமணன்’ ‘பிராமண கோயில்’ போன்ற சொற்கள் இலங்கையில் தமிழர்கள், பிராமணர்கள் ஆதிதொட்டு வாழ்ந்ததையும் சைவம் நிலவியதையும் உறுதிப்படுத்துகிறது. மகாவம்சத்தில் காணப்படும் இவ்வாறான வரலாற்றுச் செய்திகள் இந்த சிறு நூலில் விளக்கப்பட்டுள்ளன. அதற்காகவே இந்த நூலை ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் வைத்திருப்பது விரும்பத்தக்கது. அது புத்திசாலித்தனமும் கூட என்பது எனது எண்ணமாகும். நூலாசிரியர் திரு கனகசபை நீண்டகாலம் நோய்நொடியின்றித் தனது பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்தும் இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்தெம்பர் 19 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு 150 Borough Drive. Scarborough இல் உள்ள நகர நடுவத்தில் (Scarborough Civic Centre Chambers) நடைபெற இருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், தேசியப் பற்றாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். நூலினைப் பெற்று பயன் அடைய வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.