Political Column 2009 (5)

நாங்கள் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கிறோம் எங்களைக் காப்பாற்றுங்கள்!

நக்கீரன்

ஒரு பாவி மனிதன் பட்ட அவலத்தை ஒரு புலவர் பழம்பாடல் ஒன்றில் படம்பிடித்துக் காட்டுகிறார்.  விவேகசிந்தாமணி என்ற நூலில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதோ:

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்த ருழுதண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவிமகள் படுந்து யரம் பார்க்கொணாதே. (விவேக சிந்தாமணி 7-7 )

பசு கன்றை ஈன
மழை விடாது பொழிய
வீடு இடிந்து விழ
மனைவி உடல் வேதனைப்பட
வேலைக்காரன்  இறந்துவிட
ஈரம் காய்ந்துவிடுமென்று விதைக்க விதை கொண்டு ஓட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
உழுது வாழ்வதற்கான தீர்வையை அரசர் கேட்க
குருக்கள் வந்து குறுக்கே நின்று தட்சணை கேட்க
பாடகர் கவிகள் பாடி பரிசு கேட்க
பாவிமகன் படுகின்ற துயரம் பார்க்க இயலாதே.

இந்தப் பாடலைப் பாடிய புலவர் இன்றிருந்தால் வன்னியில் மக்கள் படும் பாட்டை ஒரு காவியமாகவே பாடியிருப்பார்.

உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் நாற்பதினாயிரம் மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய குருதியால் வன்னி மண் இன்னமும் சிவந்து கிடக்கிறது.  அங்கு வீசும் காற்றில் சாவாடை மணக்கிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஜெனீவா உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்ட  கொத்துக் குண்டுகள், நேப்பாம்  குண்டுகள், உடலில் பட்டாலே பற்றி எரியும் பொஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள இராணுவம் தாராளமாகப் பயன்படுத்தியது. உடலெங்கும் எரிந்த காயங்களுடன் கிடந்த சடலங்கள் இதை உறுதி செய்தன. தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு சிங்கள இராணுவத்தினரின் கொலைவெறி நிற்கவில்லை. போரின் போது மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவை குண்டு வீசி திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

போர் முடிந்து பதினேழு மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இடப்பெயர்வுக்கு ஆளான எமது மக்கள் படும் பாட்டை எழுத்தில் வடிக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் அவர்கள் சொல்லும் கண்ணீர்க் கதைகள் நமது நெஞ்சைப் பிளக்கின்றன. வன்னியில் முள்வேலி முகாம்களுக்குள் ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வெளியில் விடப்பட்டாலும் அவர்களில் அநேகர் இன்னமும் பள்ளிக் கூடங்களிலும் திறந்த வெளியிலும் விடப்பட்டுள்ளார்கள். தலைக்கு 6 தகரம், 4 கம்பு,  காசு அய்யாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து அந்தரத்தில் விடப்பட்டுள்ளார்கள்.

போதிய உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, நோய்க்கு மருந்தில்லை, வேலை வாய்ப்பு இல்லை, கல்வி கற்க பள்ளிக்கூடங்கள் இல்லை என்ற ‘இல்லை’ புராணம் எமது மக்களிடம் இருந்து கேட்கிறது.

வன்னியில் உள்ள தாய் ஒருவர் காலையில் தேநீர் வைத்துக் குடிக்க தேயிலை, சீனி வாங்கக் கூட காசில்லை என்று அழுகிறார்.

மீள் குடியமர்த்தப்பட்டவர்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்படவில்லை. அவர்களது காணிகள் சிங்கள இராணுவத்தினால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. வன்னியில் 10,000 ஏக்கர் நிலம் பாரிய இராணுவ  தளங்கள், கடற்படைத் தளங்கள், இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் உருவாக்க அரசு கையகப்படுத்தியுள்ளது. இவற்றை சீனாவே கட்டிக் கொடுக்கிறது. முல்லைத்தீவில் இராணுவ தலைமையகம் கட்டி முடித்தாகிவிட்டது. ஒரு தொகுதி வீடுகளும் கட்டப்பட்டு விட்டன.

வி. புலிகளுக்கு எதிரான போர் முடிந்தாலும் பாதுகாப்புச் செலவுக்கு சிறிலங்கா அரசு அடுத்த ஆண்டுக்கு (2011)  ரூபா 21,500 கோடி (ரூபா 21.5 பில்லியன் அல்லது டொலர் 1.92 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. இதில் சரிபாதி இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த தேசியச் செலவில் அயந்தில் ஒரு பங்காகும்.  இராணுவததினரின் எண்ணிக்கை 200,000 எட்டியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் பற்றாக்குறை மொத்த உள்ளுர் உற்பத்தியில் 9.7 விழுக்காடாக  உயர்ந்துள்ளது.  காரணம் போர்க்காலத்தில் மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவுக்கு செலுத்த வேண்டிய  கொடுக்குமதியில் ஒரு பகுதி இந்த ஆண்டு கொடுக்க வேண்டியிருக்கிறது.

2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புக்குச் செலவு 6 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2010  ஆண்டின் பாதுகாப்புச் செலவு ருபா 20,400  கோடியாக இருந்தது. விடும் தொகை மொத்த தேசியச் செலவில் அயந்தில் ஒரு பங்காகும்.  வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் பற்றாக்குறை மொத்த உள்ளுர் உற்பத்தியில் 9.7 விழுக்காடாக  உயர்ந்துள்ளது.

பாதுகாப்புக்கு தாராளமாக செலவு செய்யும் சிறீ லங்கா அரசு மீள்குடியேற்றத்துக்கும் மீள்கட்டுமானத்துக்கும் வெறுமனே ரூபா 200 கோடியை ( பாதுகாப்புச் செலவில் ஒரு விழுக்காடு) மட்டும் ஒதுக்கியுள்ளது.

போரினால் அழிந்த வீடுகளை அரசு கட்டிக் கொடுக்காது என்றும் வீட்டுச் சொந்தக்காரர்களே கட்ட வேண்டும் என்று அமைச்சர் பசில் இராசபக்சே திருவாய் மலர்ந்துள்ளார்.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு போதிய உணவு, உடை, உறையுள், மருந்து, குடிதண்ணீர், கல்வி தொழில் வாய்ப்பு இல்லாது அல்லல்படுகிறார்கள்.

இந்த மக்களுக்கு உதவி செய்ய அரசு சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிக் முகாமில் இருக்கும் மக்களைப் பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. உள்ளுர் ஊடகங்கள் சரி, பன்னாட்டு ஊடகங்களுக்கும் சரி இரண்டுக்கும் வன்னி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சிறிலங்கா அரசு வைக்கல் பட்டடை நாய்போல் நடந்து கொள்கிறது. மக்களுக்கு உதவ அரசிடம் பணம் இல்லை. உதவ  முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை போடுகிறது.

வடக்கிலும் கிழக்கிலும் பருவ மழை தொடங்கி விட்டது. கட்டிய சிறு கொட்டில்கள் மழை வெள்ளத்தில் மிதக்கப் போகின்றன!

மொத்தத்தில் வன்னி மக்கள் “நாங்கள் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று புலம்பெயர் மக்களைப் பார்த்து கண்ணீர் மல்கக் கேட்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் எமது மக்களைக் காக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களது  தோள்களில் விழுந்துள்ளது.

பற்றை பற்றிப் போயுள்ள காணிகளைத் துப்பரவு செய்ய கத்தி இல்லை.

நிலத்தை வெட்ட மண்வெட்டி இல்லை.

கிணறு துப்பரவாக்க  தண்ணீர் இறைக்கும் யந்திரங்கள் இல்லை.

தொழில் இல்லை. உண்ணப் போதிய உணவில்லை.

படிக்கப்  பள்ளிகள் இல்லை. புத்தகங்கள் இல்லை.

போக்கு வரத்து இல்லை. மிதி வண்டிகள் இல்லை.

எனவே இந்த  மக்களுக்கு உதவப் புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும்.  புலம்பெயர் மக்கள் நினைத்தால் இந்த மக்களது அடிப்படைத்  தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

புலம்பெயர் மக்களில் ஒரு சிறு பகுதியினர் வன்னி மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்கிறார்கள்.  ஆனால் அது போதாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுவாழ்வு என்ற புதிய தொண்டு அமைப்பை உருவாக்கியுள்ளது. அதன் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைமையகத்தின் மேற்தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சிறீலங்காவில் தடைசெய்யப்பட்டுள்ளதால் இந்த மறுவாழ்வு அமைப்பின் கிளைகளைப் புலம் பெயர்ந்த நாடுகளில் நிறுவி நிதி சேகரிக்கலாம்.

திருகோணமலை நலன்புரிச் சங்கம் வேறு எந்த ஊர்ச்சங்கங்களையும் விட  தமிழ்த் தேசியத்துக்கு பெரும் பங்களிப்பு அளித்துவருகிறது. மல்லிகைத் தீவில் உள்ள சிறுவர் இல்லத்துக்கு மாதந்தோறும் டொலர் 3,000  அனுப்பி உதவுகிறது.

எல்லா மதங்களும் அறம் செய்வதை வற்புறுத்துகிறது. பவுத்த காப்பியமான மணிமேகலை மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனச் சொல்கிறது.

அறம் எனப்படுவது யாதெனக் கேட்டபின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  (பாத்திரம் பெற்ற காதை:92:96)

மக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலே
சிறந்த அறம்.

இஸ்லாம் அறம் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.  ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் இரண்டரை விழுக்காடு ஏழை, எளியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கதாவர்கள் தங்களை  இஸ்லாமியர்கள் என்று சொல்ல முடியாது.

எனவே புலம்பெயர் மக்கள் செய்யும் ஆடம்பரச் செலவுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  திருமணங்கள், அரங்கேற்றம், பூப்பு நீராட்டு விழா போன்ற சமூக நிகழ்ச்சிகளுக்கு இருபதாயிரம் முப்பதாயிரம் எனச் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். கோயில் திருவிழா, தேர், தீர்த்தம், அருச்சனை, அபிசேகம் எனப் பணத்தை விரயம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் பசியோடு இருக்கத் தான் மட்டும் உண்பவன் பாபத்தைச் சாப்பிடுகிறான் என விவிலியம் செப்புகிறது.  பாரதியாரும் தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்துவிடுவோம் என்று சூளுரைத்தார்.

படமாடும் கோயில் பரமர்க்கு ஈவதிலும் நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுத்தால் அது பரமர்க்குச் சென்று சேரும் என திருமந்திரத்தில் திருமூலர் அறிவுறுத்துகிறார்.

படமாடும்  கோயில்  பரமர்க்கொன்று  ஈயில்
நடமாடும்  கோயில்  நம்பர்க்  கங்கா
நடமாடும்  கோயில்  நம்பர்க் கொன்று  ஈயில்
படமாடும்  கோயில்  பரமர்க் கங்காகும்       (திருமந்திரம்)

குறைந்த பட்சம் புலம்பெயர் மக்கள் தங்கள் வருவாயில் 2 விழுக்காட்டை ஆவது அறப்பணிக்குச் செலவழிக்க முன்வரவேண்டும். வன்னியில் வாடும் மக்களைக் கிணற்றில் இருந்து தூக்கிவிடுகிற வரையாவது இந்த அறப்பாணியை செய்ய வேண்டும்.  பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட  கொடுக்கும் கையே மேலானது என்பதை மறக்க வேண்டும்.


Dear Jesuthasan,

When the White Paper on Soulbury constitution was put to vote it was carried by  48 to 3. The three who voted against – 2 Thamils and  one Sinhalese.

C.Suntheralingam was one of those who  voted for the Soulbury draft  constitution  after getting assurance from  his friend D.S.Senanayake. . No one knows what the assurance was about. The Secretary for Colonies  insisted on the acceptance of the draft constitution by 3/4th majority, but it turned out it got 4/5th majority. C.Suntheralingam who won the Vavuniya seat as an independent was appointed as the Minister of Commerce by D.S.Senanayake. Later he resigned (earlier he voted  for the  Citizenship bill) ostensibly in protest against the disenfranchisement of Hill Country Thamils.  It is at this stage D.S.Senanayake  started casting his net for  G.G.Ponnambalam, the leader of the All Ceylon Thamil Congress and the farther of  famous 50:50 balanced represeentatation who was itching to bag a Ministerial post!

On November 8, 1945  Seananayake moved in the State Council:

“The House express disappointment that His Majesty’s government has deferred the admission of Ceylon to full dominion status, but in view of the assurance contained in the White Paper of October 31, 1945, that His Majesty’s government will cooperate with the people of Ceylon so that such status may be attained by this country in a comparatively short time, this House resolves that the constitution offered in the said White Paper be accepted during the interim period.”

While the debate over the White Paper was on, “The Singhalese leaders in the State Council mustered all their powers of persuasion to urge the acceptance of the constitutional proposals. Speaker after speaker, D S Senanayake, S W R D Bandaranaike, A F Molamure [who later became the first Speaker of the House of Representatives], George E De Silva, and many others, made fervent appeals for cooperation with the Singhalese to work out the new constitution. They appealed, pleaded and cajoled. Almost parrot-like they all begged: ‘Please trust us and give us a chance to prove that we are worthy of your trust.’ – ‘Please have faith in us and see whether we are worthy descendants of the mighty Singhalese race or not.’ – ‘Please let us work the constitution and see whether we cannot overcome its shortcomings.’ – ‘Please let us give the constitution a trial, and we will prove to you that your fears are unfounded.’ D S Senanayake even cited history to say that the Tamil kings had ruled the Singhalese and Singhalese kings had ruled the Tamils, but the people had always lived in amity.” The Fall and Rise of the Tamil Nation by V Navaratnam – pages 38-39

When introducing the motion for the acceptance of the White Paper, D S Seananayake said. “Before I explain why I recommend that the new proposals be accepted, I must pay tribute to the Donoughmore Commission … We must not forget that it was the Donoughmore Constitution which first gave us a measure of responsibility, which enabled us to show that we were capable of self-government, and which gave us the power to tackle some of the social and economic problems of the country.”

Seananayake in his address further said, “The accusation of Sinhala domination has thus shown to be false. I hope that verdict will be accepted by all sections of the community and that we can now go forward with the trust and mutual confidence upon which the welfare of the Island depends. I do not normally speak as a Sinhalese, and I do not think that the leader of the council ought to think of himself as a Sinhalese representative; but for once, I should like to speak as a Sinhalese and to assert with all the force at my command that the interests of one community are the interests of all. We are one of another, whatever our race or creed. These accusations of rabid communalism were no doubt inevitable, but they hurt, because they seemed to us to be manifestly untrue. The recommendations of the Soulbury Commission show that in the opinion of three eminent and distinguished persons from outside, they were untrue. What the White Paper really means is that if the new constitution works well and it proves unnecessary to use the restrictive powers, full equality of status would be accorded to us.” Senanayake urged Tamils and other minority communities to accept the constitution and assured them:

“Do you want to be governed from London or do you want, as Ceylonese, to help govern Ceylon? … On behalf of the Congress and on my own behalf, I give the minority communities the sincere assurance that no harm need you fear at our hands in a free Lanka.” Sri Lanka – The National Question and the Tamil Liberation Struggle by Satchi Ponnampalam – page 65.

In conclusion, Senanayake queries, “The question before the House is whether it wants the White Paper with its promise of dominion status in a comparatively short space of time, or the Donoughmore Constitution and another long period of agitation?”

At the conclusion of the debate, the speaker moved that the council resolve that the constitution offered by the White Paper be accepted. The State Council overwhelmingly voted for the motion, with 51 votes in favor and three against it. Those who voted against the motion were W W Dhanayake, the Sinhalese and the member representing the bible constituency in the south, and two Indian Tamils, K R Natesa Iyer and I X Pereira, while S Vaitilingham, another Indian Tamil, was absent. Also, G G Ponnampalam and S Dharmaratnam were away from the island, but Subbiah Natesan, Sir Arunachalam Mahadeva and Tiyagarajah,were the noteworthy Jaffna Tamil members along with J G Rajakulendran who represented the Tamils of the Indian origin, and who voted in favor of adoption of the motion.

Sir John Kotelawala in his An Asian Prime Minister’s Story, wrote, “The Tamil Congress leader was away from Ceylon at the time; but his wife was present in the State Council gallery to frown on what looked like a betrayal of the 50-50 cause by the three Tamil councilors.” – Page 66.

Sir Ivor Jennings, the constitutional advisor to D S Senanayake, later wrote, “The motion was thus carried by 94.4 percent of those present and voting or 89.5 percent of the whole council less the Speaker; but it was in fact supported by 91.2 percent of the whole council less the Speaker. His Majesty’s government had asked in the declaration of 1943 for a 75 percent vote of the whole council less the speaker, but had waived this requirement by the White Paper.” – Constitution of Ceylon, page 12.

The Soulbury Comnission expected 58 Sinhalese and 43 Non-Sinhalese members (Ceylon Thamils 15,  Indian Thamils 13,  Muslims 11, Burghers 4 ) in a parliament consisting of 101 members (95 elected and 6 nominated). But when elections to parliament was held in 1947 the number of Sinhalese MPs numbered  68,  Ceylon Tamils 13, Indian Tamils 8 and Muslims 6!

According to V.Navaratnam ” this so-called ratio 58 to 43 was deliberately put forward in order to get the 3/4 Majority in the State Council that the Secretary of State insisted and to mislead and deceive the Soulbury Commissioners who were only too willing to be deceived in return for the promise of the Trincomalee Naval Yard and the Katunayake Air Base.”

At this time G.G.Ponnambalam was in London  canvassing the Colonial Office against accepting Soulbury proposals. But back home all Thamil members of state council like A.Mahadeva, S.Nadesan, C.Suntharalingam   voted with the Sinhalese on behalf of the Tamils for the acceptance of the Soulbury draft.  Later a series of anti-Tamil policies and legislative Acts of Parliament by both the UNP and SLFP governments under that Constitution exposed the calculated deceit of the “trust us” mantra.

The Cambridge educated  Bar – at – Council was out maneuvered and out-witted by  the 8th standard educated  D.S.Senanayake the “evil genius” who was  shrewd and calculating.

The Thamil members of the State council was easily duped  and manipulated by D.S.Senanayake with promise office and perks! Even G.G.Ponnambalam fell for the guiles of D.S.Senanayake  who deprived  one  million Hill Country  Thamils first stateless and later deprived their franchise. He also launched state sponsored colonization schemes in the east to change the demography  with G.G.Ponnambalam undcer his pocket!.

Sorry for the long winding reply. I thought I should put the record straight.

 

Thangavelu


My dear Mr. Thangavelu,

Could you please enlighten me.

It was said that it was C. Suntheralingam who sent a telegram to G.G.Ponnambalam who was in Britain at that time negotiating our cause with British authorities and recalled GG saying that DS has agreed for a fair settlement.

Kindly clarify the correct position.

Thank you and with regards.

Jesu


The author of this article is a typical bureaucrat with the mind-set of his class. While I agree that we should send more educated and learned, they will be useless if they don’t have a grounding in our history and armed struggle.  A critical look at parliamentary politics will reveal the fact that super eminent politicians like G.G.Ponnambalam, C.Sutheralingam, A.Amirthaligam, M.Tiruchelvam and a few others failed the Thamil people. G.G.Ponnambalam threw principles to winds to find a berth in D.S.Senanayaake’s cabinet. This will go down in history as the greatest betrayal of the Thamil race. The Cambridge educated  lawyer  capitulated to an   8th standard  educated D.S.Senanayake for the lure of office. So education alone is not a criteria to select candidates. One’s  commitment,  honesty,  placing people’s interests before his own, willingness to stand  for principles he ardently beliefs should be  the  criteria  for selection. As far as development is considered no Sinhala government is going to do that for us. Only self-rule and the ability to  manage your own affairs will usher in economic prosperity. The quote from  the treatise on Tamil grammar, Nannool which says  says “Palaiyana kalithalum puthiyana puhuthalum valuvala, kaala vahaiyinane” should be the exception and not the rule. Change cannot be implemented for change sake. TNA leadership should take this type of unsolicited advice from educationists living in ivory towers with a pinch of salt.


The challenge before the Tamils

By S. Sivathasan

In the context of a presidential election just concluded and a general election in the offing, there lies a great challenge before the Tamils. Throwing up a leadership enlightened in every respect and sensitive to what the Tamils look forward to, is the immediate imperative. Their political ideas are crystallising in a situation totally without precedent. The future will be distinctly different from the past. Will the leadership measure up to the challenges that have changed dramatically after the end of the war and consequent to the presidential election?

From 1931 to 2009, a multitude of weapons was used by the Tamils as their political stance. At times they were adversarial and at times conciliatory. Boycott politics, lukewarm collaboration, nonviolent non-cooperation and violent direct action were among them. With objectives unrealized, what is left in the armoury of options is the politics of pragmatism.

At the presidential election, an assortment of political formations disagreeable for all appearance came together as a strange amalgam. It was an incredible phenomenon and yet a visible reality. The country would look forward to this medley growing in cohesiveness. It is in such a situation that the Tamil leadership has to fashion its strategies so as to make itself effective and wanted. What is the primary prerequisite to realise this?

The new leadership that emerges to meet the new challenge should be able to match its strength against all other formations. This would mean that those in parliament representing the Tamils should stand preeminent in intellectual calibre and erudition. With confidence deriving from superior knowledge they should be able to stand their ground against their peers in other parties. Their credentials should be so unimpeachable that the Tamil voter should unreservedly support their candidature. The leadership of the Tamil party has the responsibility of judicious selection of its candidates to meet such norms.

May 18th 2009 is a watershed in the nation’s history. Politics of the past is totally untenable for the present and the future. What the Tamils need is the authority to shape their destiny. People’s representatives capable of shouldering this responsibility should come to the fore. Churchill won the war in 1945. He lost the elections held immediately thereafter. This was not ingratitude, but political maturity. Sensing unerringly that the challenges of reconstruction were different from war time operations, a new leadership was selected by the British electorate.

The Tamil polity is placed in a similar situation. It has to select a leadership to take on a sustained programme of redevelopment and a rebuilding of relationships both ethnic and political. These needs are at variance with merely echoing the voice of a formation at a time of confrontation. The Tamils have a sense of the practicable. They would want of their representatives to make a serious study of politics, encompassing economic issues, social demands and ethnic compulsions.

Destruction occasioned by war has been highest in the Northern Province. Provincial GDP of the North is the lowest at 2.9 percent. The Eastern Province is a shade better at 5.0%.In contrast, the Western Province has 48.4%. Economic and social infrastructure needed in the North East merely to be on par with the rest of the country as of now, requires a massive resource flow of $ 6 billion in the next 10 years. Development at frenetic speed till 2020, is required to reach Sri Lanka’s level of 2010. To provide the direction for this gigantic leap, the political leadership should demonstrate its capacity and capability convincingly. Both the Tamil electorate as well as the Government should be able to place their trust on such leadership. It is such a leadership that should seek the people’s mandate.

For credibility and acceptability very strong attributes should compose the credentials of the prospective members of Parliament. Character that is steadfast, probity beyond suspicion, intellectual honesty of the highest, capacity for study and objective analysis, a good command of both Tamil and English with at least a smattering knowledge of Sinhalese, a fair understanding of development imperatives and above all empathy for the people are qualities that the people would expect from their representatives. Needless to say the altruistic inclinations together with austere lifestyle of the parliamentary candidates should draw the voter towards them. This is the need of the hour. Do the current MPs fit the bill? A treatise on Tamil grammar, Nannool, written several centuries ago, says “Palaiyana kalithalum puthiyana puhuthalum valuvala, kaala vahaiyinane“. This rule of grammar applies to political leadership very aptly. “There is nothing faulty in the old order yielding place to the new. It is consonant with the times.” So may it be with the Tamils of Sri Lanka and their political transformation.

The presidential election proved a few points. The Tamils destroyed their enemy within. Some versions of disaster were averted. They were calls for miserable boycott, frivolous contest, ballot spoilage and voting for a nonexistent left. Tamils who have incurred the worst have the heaviest share now in the reconstruction effort. Dynamic elements in the community have to come to the fore and take the reconstruction effort relentlessly forward. Population profiles have changed dramatically in the post war world including in Sri Lanka. The younger elements are by far the largest. Representation in parliament reflects the change very poorly. The correspondence is poorer still for the Sri Lankan Tamils. The generational imbalances connote stagnation in political thinking. Redress would demand an induced change for a preponderance of younger elements. A Kamaraj Plan can see the induction of a fresh generation.

Nehru’s first cabinet saw quite a few non-congressmen in the cabinet. This is a lesson for all countries. The French revolutionaries in the Constituent Assembly came forward with a self denial clause, excluding themselves from government office in the new dispensation. If three fourths of our Tamil MPs can voluntarily and happily relinquish their positions in favour of a new generation of learned people, the Tamils can look forward to an era of hope.

The author is Rtd. Secretary, Ministry of Livestock Development.


இராணுவ,  சிங்கள – பவுத்த மயமாக்கல் ஆகியவற்றால் முற்றுகையிடப்படும் தமிழீழம்!

இலங்கை சுதந்திரம் பெற்ற 62 ஆவது ஆண்டு நிறைவை சிங்கள தேசம் கண்டியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. இலங்கையின் வட – கிழக்கு மாகாணங்களை சிங்களப் பேரினவாத அரசு தனது மேலாண்மைக்குள் வேகமாகக் கொண்டு வருகிறது.

இலங்கைத் தீவின் வரலாற்றில் அது என்றுமே ஒரு நாடாக, ஒரே அரசாக இருந்தில்லை.இராசரட்டை, உறுகுணரட்டை, மாயரட்டை என இலங்கை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை வௌ;வேறு குறுநில அரசர்கள் ஆண்டார்கள்.

முதலாவது விஜயபாகு, ஆறாவது விக்கிரமபாகு இவர்கள் காலத்திலேயே இலங்கை ஒரு குடைக்குள் ஆளப்பட்டது எனக் கொள்ளலாம்.

குடியேற்ற நாடுகளில் ஒன்றான போர்த்துக்கேசியர் புயலில் சிக்குண்டு  கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கரை தட்டியபோது இலங்கையில் மூன்று அரசுகள் வரையறை செய்யப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தன.
தெற்கே கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கோட்டை இராச்சியம்.வடக்கே யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம்.மத்தியில் கண்டியைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராச்சியம்.யாழ்ப்பாண இராச்சியம்; கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை யாழ்ப்பாண மன்னர்களால் தனிநாடாக ஆளப்பட்டது. அதன் எல்லைகள்  புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை விரிந்திருந்தது.

ஒல்லாந்தர்; இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.

இலங்கையில் போர்த்துக்கேயரது ஆட்சி 1656 வரை நீடித்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒல்லாந்தருக்குக் கைமாறியது. ஒல்லாந்தரிடம் இருந்து  1796 இல் ஆங்கிலேயர் கைக்கு மாறியது.

1815 இல் மத்தியில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனை ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்து அங்கிருந்து லேலூருக்கு அவனும் அவனது குடும்பமும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை மூலம் அந்த இராச்சியம் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்த ஆங்கிலேயர்  1833 இல் நிருவாக வசதிக்காக மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை) ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது செயற்கையாக அய்க்கியப்படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒன்றுபட்ட இலங்கையில் தங்களை முதலில் இலங்கையர் என்றும் பின்னர் தமிழர் என்றும் கருதிய தமிழர்கள் ஆங்கிலேயரிடம் தங்களது மூதாதையர் போர்முனையில் இழந்த   அரசைப் பிரித்துத் தருமாறு கேட்கத் தவறிவிட்டனர்.

சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் போன்றோர் சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக தேசிய இனங்கள் (Founding Nations) என்றே நம்பினார்கள். தங்களைச் சிறுபான்மை இனம என அவர்கள் நினைக்கவில்லை.  கடைசிக் காலத்தில்தான் சிங்களவர்கள் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்ற திரைக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவரச் சதி செய்தார்கள் என்பதையும் தம்மை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற  உண்மையையும்  உணர்ந்து கொண்டார்கள்.

அண்டை நாடான இந்தியாவில் முஸ்லீம் லீக் தலைவர் மொகமது ஜின்னா மாட்டை வழிபடும் இந்துக்களும் மாட்டை அடித்துச் சாப்பிடும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழமுடியாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு  வாதாடி பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பிரித்து எடுத்துக் கொண்டாhர். “பிரிட்டிஷ்காரரே வெளியேறுங்கள் ஆனால் முதலில் இந்தியாவைப் பிரித்து விட்டு வெளியேறுங்கள்” என்று ஜின்னாவின் முழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் காதில் போட மறுத்துவிட்டார்கள்.

சோல்பெரி ஆணைக்குழு முன் தோன்றி 50 க்கு 50 க்கு வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதில் சிறுபான்மை இனத்தவர்களது நலன்களைப் பாதுகாக்க  சோல்பெரி யாப்பில் விதி 29 சேர்க்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக்கா நிறைவேற்றினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1947 இல் நடந்த தேர்தலில் மலையக மக்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தார்கள்.  இதனை சிங்கள இனவாதியான டி.எஸ். சேனநாயக்காவால் செரிக்க முடியவில்லை. இரண்டாவதாக மலையக மக்களின் வாக்குப் பலத்தால் மேலும் 20 தொகுதிகளில்  இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெற்றிருந்ததை சேனநாயக்கா தனது அரசியல் இருப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நினைத்தார்.

1952 இல் நடந்த தேர்தலில் வாக்குரிமை பிடுங்கப்பட்ட மலையக மக்களால் ஒருவரைக் கூட நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போய்விட்டது. அறுபதுகளில் சிறிமா –சாத்திரி உடன்பாட்டின் கீழ் 525,000 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரிக்கவும் தமிழர் எண்ணிக்கை குறையவும் ஏதுவாயிற்று.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றப் பிரதிநித்துவம் எப்படிச் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் மாறியதை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இனவாரியான பிரதிநித்துவம்

ஆண்டு 1947 1952 1956 1960 1965 1970 1977
மொத்த இருக்கைகள் 95+6 95+6 95+6 151 151 151 168
சிங்களவர் 68 75 76 122 123 124 136
தமிழர் 20 12 18 18 18 18 19
முஸ்லிம்கள் 7 8 7 11 10 9 12

1947 தேர்தல் முடிவுகள்

சோல்பரி ஆணைக்குழு  தொகுதி நிருணயஆணைக்குழு எதிர்கூறல் 1947 தேர்தல் முடிவுகள்
மொத்த இருக்கைகள் 95+6 95+6 95+6
சிங்களவர் 58 66 68
தமிழர் 15 12 13
முஸ்லிம்கள் 7 10 6

காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை  ஆயிரக்கணக்கில் குடியேற்றினர்.

1947  ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 95 இருக்கைகளில்  15  வட  கிழக்குத் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது.  இதில் 11 தமிழர்களுக்கும் 4 முஸ்லிம்களும்  நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

1970 இல் நடந்த தேர்தலில் மொத்தம் 151 இருக்கைகளில்  24 வட கிழக்குத்  தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 19 தமிழர்களும் 4 முஸ்லிம்களும் 1 சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து அந்த சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வழிகோலினார்.

கிழக்கில் 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலம் கல்லோயா மேம்பாட்டு அவையின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 கொலனிகளில்  20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டன. இந்தக் குடியேற்றத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. 1960 இல் அம்பாரை (டிகமடுல்ல) என்ற புதிய தொகுதி சிங்களவர்களுக்கு உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.

எண்பதுகளில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மதுர ஒயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடியேற்றப்பட்டார்கள்.

இதே போல் திருகோணமலை மாவட்டத்தில்  அல்லை – கந்தளாய் என்ற பாரிய குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் இனவாரிஙாந மக்கள்தொகை விழுக்காடு மாறத் தொடங்கியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1827-1981 இடையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இனவாரியான மாற்றங்கள் (1827-1981)

ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள்
தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு
1827 250 1.30 34578 75.65 11533 23.56
1881 5947 4.50 75408 61.35 43001 60.65
1891 7512 4.75 87701 61.55 51206 30.75
1901 8778 4.70 96296 57.50 62448 33.16
1911 6909 3.75 101181 56.20 70448 36.00
1921 8744 4.50 103551 53.50 70409 39.40
1946 23456 8.40 146059 52.30 75992 39.10
1953 46470 13.10 167898 47.30 109024 34.00
1963 109690 20.10 246120 45.10 135322 38.10
1971 148572 20.70 315560 43.90 185750 34.60
1981 243358 24.90 409451 41.90 248567 32.20
1827-1981 – அதிரிப்பு  243108 97243.20  374693 1078.01 303668 2133.04

தென்மாகாணத்தைப் போலவே வடக்கில் மணலாறு (வெலி ஓயா) குடியேற்றத்திட்டம் எண்பதுகளில் துரித மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காணி மேப்பாட்டு அமைச்சர் காமினி திசநாயக்காவால் முடுக்கி விடப்பட்டது. நாற்பத்தெட்டு மணி நேர அவகாசத்தில் ஆயிரக்கணக்கான  தமிழ்க் குடும்பங்கள் அவர்களது பூர்வீக கிராமங்களில் இருந்து சிங்களப் படையால் வலோத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று மகிந்த இராசபக்சே சிங்கள – பவுத்த இனவெறி ஆட்சியில் வட – கிழக்கு மாகாணங்கள்  இராணுவமயப்படுத்தப் படுவதோடு  வேக வேகமாக சிங்கள – பவுத்த மயமாக்கப்பட்டும் வருகிறது.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply