கட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் ரத்து செய்கிறது!

கட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் ரத்து செய்கிறது!

கட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் இரத்துச்செய்கிறது! ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணம் கட்டலோனியா பார்சிலோனாவை தலைநகராகக் கொண்ட, வட கிழக்கு ஸ்பெயினில் வளமான பகுதி.

இங்கு ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக் கின்றனர். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இது பெற்றிருக்கிறது.

ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 19 சத வீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அந்நிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் கட்டலோனியாவுக்கு போகிறது. ஸ்பெயினிடம் இருந்து சுதந்திμம் பெற்று தனி நாடாக திகழ வேண்டும் என்ற குμல் அங்கு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.

இதுபற்றி அங்கு கடந்த முதலாம் திகதி பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் 42 சதவீத வாக்காளர்கள் வாக்கு அளித்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மற்றவர்கள் வாக்கெடுப்பை புறக் கணித்தனர். இந்த பொது வாக்கெடுப்பு செல்லாது என ஸ்பெயின் நாட்டின் அரசியல் சாசன நீதிமன்று தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் கட்ட லோனியா நாடாளுமன்றத்தில் சுதந்திரப் பிரகடனத்தின் மீது அண்மையில் நடந்த வாக் கெடுப்புக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிμõக 10 வாக்குகளும் விழுந்தன. எஞ்சிய 50 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 135 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 70 வாக்குகள் ஆதரவாக விழுந்தமையால் சுதந்திரப் பிரகடனம் நிறைவேறியது.

ஆனால், இதை ஸ்பெயின் அரசு ஏற்கவில்லை.

சுதந்திரப் பிரகடனம் வெளியிட்ட அடுத்த சில மணித்தியாலங்களில் கட்டலோனியா பிராந்திய தன்னாட்சி அரசை ஸ்பெயின் அரசு கலைத்து உத்தரவிட்டது. இதற்கான ஒப்புதலை ஸ்பெயின் நாடாளுமன்றம் வழங்கியது. இதை ஸ்பெயின் பிரதமர் மரியானோ
ரஜோஸ் தெரிவித்தார்.

இதையடுத்து கட்டலோனியா, ஸ்பெயின் அμசின் நேரடி கட்டுப்பாட் டின் கீழ் வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அரசிதழ், ஸ்பெயின் துணைப் பிரதமர் சொராயா சாயின்ஸ் டி சாந்தமரியாவிடம் தμப்பட்டது.

டிசெம்பரில் தேர்தல் கட்டலோனியாவில் டிசெம்பர் 21 ஆம் திகதி பிராந்திய தேர்தல் நடத்தப்படும். அதே நேரத்தில் இந்த தேர்தல், கட்டலோனியா பிரச்சினைக்கு தீர்வைத் தேடித்தருமா எனத் தெரியவில்லை.இந்த நடவடிக்கைக்கு, ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டுள்ள அதிபர் கார்லஸ் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கீழ்ப்படியா விட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்பெ யின் அμசு எச்சரித்துள்ளது.

அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டுகிறது

கட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது.

(WASHINGTON) — The United States says Catalonia is an “integral part of Spain” and that it supports Spanish government efforts to keep the nation “strong and united.”
State Department spokeswoman Heather Nauert says the two NATO allies “cooperate closely to advance our shared security and economic priorities.”
Nauert said: “The United States supports the Spanish government’s constitutional measures to keep Spain strong and united.”)

இதுபற்றி அந்த நாட்டின் வெளி யுறவுத்துறை செ#தித் தொடர்பாளர் ஹெதர் நவார்ட், வொஷிங்டனில் கூறும்போது, கட்டலோனியா, ஸ்பெ யின் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. அந்த நாட்டை அரசியல் சாசனப்படி வலுவானதாகவும், ஒன்றுபட்டதா கவும் திகழச்செய்வதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

The Case Against Catalan In dependence

BY DANIEL RUNDE
http://foreignpolicy.com SEPTEMBER 18, 2015

The secessionist movement in Spain has been looking for friends in the United States. Republicans and Democrats alike should remember why Spanish unity is a boon for America. Spain has been a great friend of the United States, as both a NATO member and a trade partner. It is a major net contributor to the rule based global order — more than 2000 Spanish troops are involved with numerous UN missions around the world — and spends around $1.5 billion on foreign assistance annually. Spain also has shared interests in improving democracy in Venezuela, largely supports the goals of a full democracy in Cuba, and has been involved on the security side of things in the Sahel. The current Spanish national government has expre ssed support for the Transatlantic Trade and Investment Partnership (TTIP), a U.S.European free trade agreement. In short, Spain is a reliable partner of the United States.

பிரிவு 155 ஐ அமுல் படுத்துவதானது. மட்ரிட் சர்வாதிகாμத்தை நோக்கித் திரும்புவதற்கு ஆழமான எதிர்ப்புக் கொண்டிருக்கின்ற பரந்த கட்டலோன் மக்களுடன் ஸ்பானிய ஆட்சியை ஒரு வன்முறையான மோதலுக்குள் தவிர்க்கவியலாமல் கொண்டு வருவது ஆகும்.

ஒக்தோபர்  முதலாம் திகதி கட்டலோன் சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்பு அன்று நடந்த கொடூரமான பொலிஸ் ஒடுக்குமுறைக்கு மூன்று வாரங்களின் பின்னர், ஸ்பானிய பிரதமரான  மரியானோ ரஜோய் கட்டலோனியாவின் பிராந்திய  அரசாங்கத்திடம் இருந்து அதன் தன்னாட்சியை பறிக்கின்ற ஸ்பானிய அரசியல் சட்டத்தின் 155 ஆவது பிரிவு கொண்டுவμப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அந்த இடத்தில் ஸ்பானிய இராணுவம், சிவில் கார்ட் துணை இராணுவப் பொலிஸ் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகளின் துணையுட னான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை மட்ரிட் அமர்த்த இருக்கிறது. (தொடரும்)

தொகுப்பு: பொன் வேணு கிருஷ்னா

மூலம்: காலைக்கதிர் (31-10-2017)

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply