பவுத்தத் மதத்திற்கு சோதனைக் காலம்!

பவுத்த மதத்திற்கு சோதனைக் காலம்!

நக்கீரன்

ஸ்ரீலங்காவின் 13 ஆவது நாடாளுமன்றம் என்ன மூகூர்த்தத்தில் கூடியதோ தெரியாது அது கூடிய ஒவ்வொரு முறையும் அமளி துமளியில் முடிந்துள்ளது.

அமளி துமளி கடந்த ஏப்பிரல் 22 அன்று நாடாளுமன்றம் சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யக் கூடியபோதே தொடங்கிவிட்டது. அவையில் தமிழர் தேசிய முன்னணி நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. இரா சம்பந்தன் ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் பழுதான வாக்குகளைவிட (21,233) குறைவான எண்ணிக்கை வாக்குகளை (18,612) பெற்ற இபிடிபி செயலாளர் டக்லஸ் தேவனந்தாவை அமைச்சராக்கியது யாழ்ப்பாண மக்களை அவமானப் படுத்தும் செயல்’ என்று குறிப்பிட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டது.

பின்னர் அரசுக்கு சார்பாக வாக்களித்த சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு தேரர்கள் பேச எழுந்தபோது அதே கட்சியைச் சேர்ந்த மிகுதி ஏழு தேரர்கள் ஒரே நேரத்தில் பேச முற்பட்டபோது மீண்டும் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் தெரிவில் திரு. லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக வாக்களித்த வண.அத்துரேலியா ரத்தன பேச எழுந்தபோது அவர் மீது ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோப்புக்கள், காகிதங்கள் போன்றவற்றை வீசினர். அவர் பேசி முடிக்கு மட்டும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.

கடந்த செவ்வாய்க் கிழமை (யூன் 8) நாடாளுமன்றம் கூடிய போது சபையில் மீண்டும் அமளி துமளி மட்டுமல்ல காடைத்தனமும் இடம்பெற்றது.

சிங்கள ஹெல உறுமய உறுப்பினரான வண. ரத்தொளுவ ரத்னசீக தேரர் தமது பதவியை இராஜீனாமா செய்து விட்டதால் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட வண. அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறிவித்தார்.

இதனை ஆளுங்கட்சியின் முதன்மை அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.

‘என்னைப் பலவந்தப்படுத்தியே பதவி விலக வைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே அவரது விலகலை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட விலகல் கடிதம் செல்லுபடியாகாது. அவரது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. மேலும் அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது’ என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆளுங்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் சண்டித்தனத்தில் இறங்கினார்கள். ஆளுங்கட்சியினரின் காடைத்தனத்தாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் அமளிதுமளி அல்லோல கல்லோலம் பட்டது.

பின்னர் சிங்கள ஹெல உறுமயவின் புதிய உறுப்பினர் வண. அக்மீமன தயாரத்ன தேரர் உறுதிமொழி எடுக்க வந்தபோது அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்தமாகத் தூக்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர். அமைச்சர்களும் உறுப்பினர்களும் தேரரும் இழுபறிப்பட்டனர்.

அதன் உச்சகட்ட காட்சியாக துச்சாதனன் பாணியில் புதிய உறுப்பிரனரான அக்மீமன தயாரத்ன தேரரின் புனித மஞ்சள் அங்கியை உரிய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டனர். இந்தக் குழப்பம் கூச்சலுக்கு இடையே ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடி அதனை எங்கோ ஒளித்து விட்டார். பிற்பகலில்தான் அது மீட்கப்பட்டது.

இந்த அடிபிடிகளுக்கு மத்தியில் செங்கோல் இன்றியே அக்மீமன தயாரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஆளும்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் மேற்கொண்ட தாக்குதலில் காயம்பட்ட சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு பவுத்த தேரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
இலங்கை நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மிக மிக மோசமான குழப்பம் இது என்று செய்தி ஏடுகள் வர்ணித்துள்ளன.

1959ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சோமராம தேரர் என்பவரால் சுட்டுக் கொண்டதை அடுத்து மஞ்சள் அங்கி அணிந்த பவுத்த தேரர்கள் பலர் சிங்களவர்களால் ஆங்காங்கு தாக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இப்போதுதான் பவுத்த தேரர்கள் மிகவும் கேவலமான முறையில், அதிலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே தாக்கப்பட்டுள்ளார்கள்.

சாதாரணமாக பவுத்த தேரர்கள் பொது மக்களால் மட்டுமல்ல அமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களாலும் மிகவும் பயபக்தியோடு மதிக்கப்படுபவர்கள்.

ஒரு குட்டி பவுத்த தேரரைக் கூட அமைச்சர்கள் தலை சாய்த்து பணிவோடு வணங்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

சிங்கள ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற நுளைவுக்குச் சொல்லப்பட்ட காரணங்களில் பவுத்த தேரர்கள் சபையில் இருந்தால் ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்பது ஒன்றாகும்.

இப்போது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாய் மஞ்சள் அங்கிக்கு இருந்த மரியாதை அடியோடு போய்விட்டது.

‘பச்சை சிங்கள இனவாதத்தை கக்கும் உந்த மொட்டையர்களுக்கு உது வேணும்’ என்று சிலர் நினைக்கலாம். ஏன் ‘உது காணாது’ என்று கூட சொல்லலாம்.

என்ன இருந்தாலும் சமய குருமார்களுக்கு, அவர்கள் எந்தச் சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு குறைந்தளவு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அதுதான் நாகரிகம்.

பவுத்த தேரர்கள் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வது அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு, எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்பது உண்மை.

ஆனால் அவர்கள் சரியாகவோ பிழையாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நடந்து முடிந்த தேர்தலில் சிங்கள ஹெல உறுமய பெற்ற மொத்த வாக்குகள் 555,724 ஆகும்.

யதார்த்தம் என்னவென்றால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு பவுத்த மதம் அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பவுத்த மகா சங்கத்தை தீவிர அரசியலுக்கு முதலில் இழுத்து வந்தவர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார்.

அதற்கு முன்னர் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்களவர் மத்தியில் உள்ள மாற்று சமயத்தவரை வேறுபடுத்தும் முகமாக ‘சிங்கள பவுத்தாய’ என்ற சொல் வழக்கில் வரத் தொடங்கிற்று.

இந்த சொற்றொடரை சிங்கள பவுத்தாய என்னும் பத்திரிகையில் முதன் முதலில் பயன்படுத்தியவர் அநகாரிக தர்மபால என்பவரே. இவர்தான் ‘பவுத்த தேசியத்தின்’ பிதாமகன் ஆவார். இவரே தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியர் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர். ‘இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு ஏனையோர் வந்தேறு குடிகள்’ எனும் கொள்கையை பரப்பியவர்.

‘ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய கீழ் சாதியினர் நாட்டினுள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்’ என்று 1902 இல் அநகாரிக தர்மபால அநாகரிகமாகப் பேசினார்.

திரு. பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பவுத்த சங்கம், தொழிலாளர்கள், விவசாயிகள், சிங்கள மருத்துவர்கள், சிங்கள ஆசிரியர்கள் (பஞ்சசக்திகள்) கொண்ட கூட்டணியை உருவாக்கினார்.

1956 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அரசியல் பவுத்தம் (political Buddhism) சிங்கள பவுத்தம் (Sinhala Buddhism) என்ற புது சொல்லாட்சிகள் அகராதியில் வந்தன. திரு. பண்டாரநாயக்க தேர்தலில் பெற்ற வெற்றியால் சிங்கள பவுத்த தேசியம் என்ற இனமதக் கோட்பாடு நாட்டில் வேரூன்றியது.

1956க்குப் பின்னரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பவுத்த தேரர்களது ஆதரவை பெறுவதில் போட்டி போட்டன. கட்சி மேடைகளில் பவுத்த தேரர்கள் வெட்கமோ துக்கமோ இன்றி பச்சை இனவாத அரசியல் பேசினார்கள். பண்டய சிங்கள அரசர்களது ஆட்சிக் காலம் போல் நாட்டை ஆள்வோர் தங்களது ஆலோசனைப்படிதான் ஆள வேண்டும் என்று பவுத்த தேரர்கள் கோரினார்கள்.
சமய தத்துவங்கள் வேறு. சமய நடைமுறைகள் வேறு. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

பவுத்த தேரர்கள் பிச்சை எடுத்தே ஒரு நாளில் இருமுறை பகலில் உண்ண வேண்டும். இந்த விதியை இன்றைய தேரர்களில் எத்தனை விழுக்காட்டினர் கடைப் பிடிக்கின்;றனர்?

பவுத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் மிகவும் எளிதானவை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப் பட்டதென்று சொன்னர். அவை மனிதர், விலங்குகள், தாவரங்கள் என்பன. இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும்.

மேலும் உலகில் நான்கு வாய்மைகள் உண்டு. அவற்றை அறிந்து அதில் இருந்து விடுபட அட்டாங்க மார்க்கத்தை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும் அப்படி அவன் அட்டாங்க மார்க்கத்தை கடைப்பிடிப்பானேயானால் அவன் மறுபிறப்பை அறுத்து நிர்வாணம் அல்லது வீடுபேறு அடைவான். இதுதான் பவுத்த மதத்தின் அத்திவாரம்.

நான்கு வாய்மைகள் ஆவன:

(1) துன்பம்.

(2) துன்ப காரணம்.

(3) துன்ப நீக்கம்.

(4) துன்பம் நீக்கும் வழி.

பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

அட்டாங்க மார்க்கம் என்பன:

(1) நற்காட்சி (ஸ்ம்மா திட்டி), மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது.

(2) நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ) – தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை அடைவதுதான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல், சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.

(3) நல்வாய்மை (ஸம்மா வாசா) – பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல் அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.

(4) நற்செய்கை (ஸம்மா கம்மதோ) – கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.

(5) நல்வாழ்க்கை( ஸம்மா ஆஜீவோ) – அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப் பிராணிகளை விற்பது, மயக்கந்தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சூதுவாது செய்வது. இவற்றை விலக்கி அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.

(6) நன்முயற்சி (ஸம்மா வியாயாமோ) – தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன்முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

(7) நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) – உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து ஐம்பொறி ஐம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.

(8) நற்றியானம் (ஸம்மா ஸமாது) – மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.

பவுத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மும்மணிகளை வணங்கி பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய முடியாது. துறவறத்தில் நின்றவர்கள் மும்மணிகளை வணங்கி மேலே கூறியவாறு பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப் பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகி, ஞானம், யோகம் இவற்றை அனுட்டித்தால் பிறவா நிலையாகிய அல்லது பேரின்பமாகிய நிர்வாண மோட்சத்தை அடைவார்கள்.

பவுத்த சமயத்தவர், துறவறத்தாரும் இல்லறத்தாரும் புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரண் அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். இந்த திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது.

புத்தம் சரணம் கச்சாமி      (புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன்)

தர்மம் சரணம் கச்சாமி     (புத்தரின் போதனைகளிடம் அடைக்கலம் புகுகிறேன்)

சங்கம் சரணம் கச்சாமி   (பவுத்த தேரர்களின் சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)

இம் மும்மணிகளை மும்முறை வணங்க வேண்டும்.

இல்லறத்தில் இருப்பவர் ஒருவர் பவுத்த சமயியாய் மாறுவதற்கு எந்தவித சடங்கும் இல்லை. ஆனால் பவுத்த துறவியாக வருவதற்கு விதிமுறைகளும் சடங்குகளும் இருக்கின்றன.

புத்த சங்கத்தில் சேர விரும்பும் ஒருவர் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து பவுத்த விகாரை ஒன்றில் இருக்கும் மூத்த தேரரை வணங்கி அவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் கீழே தரையில் அமர்ந்து கைகளைக் கட்டி சம்மணம் கொட்டி உட்கார்ந்து கொண்டு மும்மணிகளை மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் மூத்த தேரர் சொல்ல தசசீலங்களை சொல்லி அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவேன் என சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். இதனை உபசம்பத அல்லது உபநயனம் எனக் கூறுவர்.

இருபது அகவை நிறைந்த ஒருவருக்கே குறைந்தது பத்துத் தேரர்கள் முன்னிலையில் இந்த உபநயனம் நடாத்தி வைக்கப்படும். இருபது வயதுக்குக் குறைந்தவர்கள் மாணாக்க தேரராக சேர்த்துக் கொள்ளப்படுவர். சேரும்போது பாவம் எதுவும் செய்யாதவராகவும் நோயற்றவராகவும் அங்கயீனமற்றவராகவும் கடனாளியாவும் இருக்கக் கூடாது என்பது கேட்டறியப்படும்.

எனவே உண்மையான புத்த மதத்தில் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து துறவு மேற்கொண்ட தேரர்கள் அரசியலில் ஈடுபட இடம் இல்லை. அரசியலில் மட்டும் அல்ல மந்திர தந்திரம், சோதிடம், மருத்துவம், வாணிகம், தொழிற்சங்கம் போன்றவற்றிலும் ஈடுபட முடியாது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மருத்துவ மனைக்கு போகும் அளவிற்கு இரண்டு பவுத்த தேரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனம், தொடுக்கப்பட்ட சொல் அம்புகள் புத்த சமயத்துக்கு ஒரு சோதனைக் காலம் உருவாகி இருப்பதைக் காட்டுகிறது!


பவுத்தமும் தமிழரும்

மயிலை, சீனி. வேங்கடசாமி.

நாடாளுமன்றில் நேற்று காடைத்தனம்!
ஆளுங்கட்சி எம்.பிக்கள் அட்டகாசம்!!
பிக்குவைத் தூக்கிப் பிடித்து பந்தாடிய கேவலம்!
செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினார் துணை அமைச்சர்!

நாடாளுமன்றம் நேற்றுக் கூடியபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்ட துடன் காடைத்தனமும் இடம்பெற்றது.

ஆளுங்கட்சி எம்.பிக்கள் பண்பாடு அற்றமுறையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்று அல்லோலகல்லோலப்பட்டது.

ஹெல உறுமயவின் புதிய எம்.பியாகச் சத்தியப்பிரமாணம் செய்யவந்த வணக்கத்துக்குரிய தேரர் ஒருவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்த மாகத் தூக்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் இந்த அட்டகாசத்தின் போது புதிய எம்.பியான தேரரின் ஆடைகளைக் களையவும் முயற்சிக்கப்பட்டது. இந்தக் களேபரத்தின் நடுவே சபாபீடத்திலிருந்த செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடிய ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை எங்கோ ஒளித்து விட்டார். பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தின் வர லாற்றில் மோசமான குழப்பம் என்று கொள்ளப்படும் இந்த அட்டகாசத்தின் மத்தியில் பிரஸ்தாப தேரர் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமா ணம் செய்துகொண்டார்.

ஆளுங்கட்சியினரின் அடாவடித் தனங்களாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் நேற்று அமளிதுமளிப்பட்டது.

அமைச்சர்களும் உறுப்பினர்களும் முட்டியை முறுக்கிக்கொண்டு இழு பறிப்பட்டனர். பௌத்த மதகுருவின் புனித அங்கியை துச்சாதனன் பாணியில் களைய முயன்றனர் ஆளும் கட்சியி னர். பதவிப் பிரமாணம் செய்யவந்த பௌத்த குருவானவரை பந்தாடுவது போல் அங்கும் இங்கும் தூக்கி இழுத் தடித்தனர் அவர்கள். இந்தக் களேபர நிலையைப் பயன்படுத்திய அமைச் சர் ஒருவர் செங்கோலைத் தூக்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார். இத னால் சபை அமர்வும் ஒத்திவைக்கப் பட்டது.

செங்கோல் இன்றியே தேசிய ஹெல உறுமய உறுப்பினரான அக்மீ மன தயாரத்ன தேரர் – கூச்சல் குழப் பங்களுக்கு மத்தியில் – புதிய எம். பியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நேற்றுக்காலை பத்து மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.கே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது.

வழமையான சபை நடவடிக்கை களின் பின் புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்தது.

அப்போது தேசிய ஹெல உறுமய உறுப்பினரான வண ரத்தொளுவ ரத்னசீத தேரர் தமது பதவியை இராஜி னாமாச் செய்துள்ளதால் அவ்விடத் திற்கு நியமிக்கப்பட்ட வண.அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறி வித்தார்.

இதனை ஆளுங்கட்சியின் பிர தான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.

ஷஷதன்னைப் பலவந்தப்படுத்தியே ராஜினாமாச் செய்யவைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே, இந்த இராஜினாவை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட இராஜி னாமா செல்லுபடியாகாது. எனவே, தனது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. சத்தியப்பிரமாணம் செய்யவும் அனுமதிக்க முடி யாது என அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார்.

நீதிமன்றத்தின் தடை உத்தரவை யும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது; இதனை அனுமதிக்க முடியாது|| என அமைச் சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆட்சேபனை கிளப்பினார்.

ஆனால், நீதிமன்றத்தின் தடை உத்தரவு இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்த ரவு கிடைக்காத வரை தன்னால் எதுவும் செய்ய முடியாது எனச் சபாநாயகர் பதிலளித்தார்.

அப்போது ஆளும் தரப்பினர்கள் கூச்சல் எழுப்பி குழப்பம் செய்தனர்.

இவற்றைப் பொருட்படுத்தாமல் அக்மீமன தயாரத்ன தேரரைப் பதவிப்பிரமாணம் செய்ய அழைத்தார் சபாநாயகர்.

சபாநாயகரின் கட்டளைக்கமைய படைக்கல சேவிதர் அக்மீமன தேரரை சபாபீடம் நோக்கி அழைத்தார்.

அப்போது திடீரென ஆசனத்தில் இருந்து பாய்ந்து வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் குமார துங்க தேரரைக் கட்டிப்பிடித்து மல்லுக் கட்டி இடைமறித்தார். அவருடன் ஜே. வி.பி. உறுப்பினர்களும் சேர்ந்துகொண் டனர். சபை நடுவில் பெரும் கூட்;டம் கூடியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபை நடுவே விரைந்து தேரரைப் பாதுகாப் பாக சபாபீடத்தின் முன் அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையில் இழுபறிகள் ஏற்பட்டன. அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் மைக்கல் ஜோசப் பெரேராவின் சட்டையைப் பிடித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் அடி விழும் சத்தம் ஒன்று கேட்டது.

எங்கே யார் யாருக்கு அடித்தார் என்பது எவருக்கும் புரியவில்லை. இரு தரப்பு இழுபறிகளுக்கு மத்தியிலும் கைப்பரிமாறல்கள் இடம்பெற்றன.

சத்தியப்பிரமாணம் செய்ய வந்த தேரர் இரண்டு பக்கத்திற்கும் நடு வில் சிக்கி இழுபட்டார். அவருடைய காவி உடையும் அலங்கோலமாக இழு பட்டுத் தொங்கியது அமைச்சர்களும் உறுப்பினர்களும் முட்டி மோதிக் கொண்டனர்.

இப்படி சபை அல்லோலகல் லோலப்பட்டபோது முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் எதிர்க்கட்சி ஆச னங்களுக்கு ஊடாக அக்மீமன தயா ரத்ன தேர ரைப் பாதுகாப்பாக சபா பீடத்திற்கு அழைத்து வந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜே.வி.பியினரும் சபாபீடத்தை சுற்றிவளைத்துக் கொண்டு தேரரை சபை பீடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து மல்லுக் கட்டினர். அப்போது கலாசார தேசிய விழுமியங்கள் அமைச்சர் விஜித ஹேரத் (ஜே.வி.பி.) அக்மீமன தேர ரின் காவியைப் பிடித்து இழுத்தார். அமைச்சரின் கைகளில் பாதி தேரரின் உடலில் மீதிஎன்று எப்படியோ காவி உடை களையப்படாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாத்துவிட்டனர். சந்தடிகளுக்கு மத்தியில் தேரர் பதவிப் பிரமாணம் செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல்களைத் தடுப்பதில் படைப் பல சேவிதரும் உதவியாளர்களும் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித்தார்.

இதனைத் தூர இருந்து அவதானித்த பிரதி படைக்கல சேவிதர் பிரதியமைச்சரை விரட்டிச் சென்றார். என்றாலும் அவரால் செங்கோலைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில், சபையில் மேலும் அமளிதுமளிக் குழப்பம் ஏற்பட்டது. செங்கோலை மீண்டும் சபாபீடத்தில் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாய கர் பலமுறை அறிவித்தும் அதனை ஆளும்கட்சியினர் எவரும் ஏற்கவில்லை.

சபாபீடத்தில் செங்கோல் இல்லா மலேயே எதிர்க்கட்சியினரும் படைக் கல சேவிதர், நாடாளுமன்ற செயலா ளர் நாயகம் ஆகியோர் சூழ நிற்க அக்மீமன தயாரத்ன தேரர் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணா நாயக்க, தேரருக்கு பக்கபலமாக நின்றார். அப்போதும் ஆளும்கட்சியி னர் சபை நடுவில் இருந்து ஆரவா ரம் செய்துகொண்டே இருந்தனர்.

சபையில் அமைதி குலைந்தது

செங்கோலைக் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார் பயனில்லை. எனவே, சபையை பத்து நிமிடங்க ளுக்கு ஒத்திவைப்பதாக அறிவித் தார். அப்போது மணி காலை 10.35.

பதினைந்து நிமிடங்களின் பின் சபாநாயகர் மீண்டும் சபைக்கு வந் தார். அப்போதும் செங்கோல் கொண்டு வந்து வைக்கப்படவில்லை. எனவே, மீண்டும் சபையை ஒத்திவைப்பதா கக் கூறி, கட்சித் தலைவர்கள் கூட் டத்தில் இதனைப் பேசித் தீர்க்க லாம் என்று தெரிவித்து சபாநாயகர் எழுந்து சென்றார்.

பிற்பகல் 2.17 மணியளவில் சபை கூடியது. அப்போது செங்கோல் சபை யில் இருந்தது. சபையை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபா நாயகர் அறிவித்தார்.

மேலும், மூன்று புதிய எம்.பிக்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய் வதற்குக் காத்திருந்தனர். ஆனால், முதலாவது பிக்கு எம்.பியின் சத்தி யப்பிரமாணத்தோடு சபை அமளிது மளிப்பட்டு அடுத்த அமர்வு ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டதால் அம்மூவரும் அதுவரைக் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.


இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!

ஈழத் தமிழர்கள் யார்?

இலங்கை சிங்களவர்களின் நாடு, இங்கிருந்து பிழைக்கப்போன இடத்தில் தனி நாடு கேட்டால் சிங்களவன் சும்மா இருப்பானா? ஈழத்தின் வரலாற்றை அறியாதவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளை தமிழகத்தில் எதிரொலிக்கும்போது எழும்பும் சந்தேகம் இது. இந்தச் சந்தேகம் தவறானது. இங்கிருந்து போன தமிழன் அங்கு தனி நாடு கேட்கவில்லை. ஈழத்தின் பூர்வீகக் குடியினர் தமிழர்களே. அந்தத் தமிழர்களே தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்பதை விளக்கும் வரலாற்றுக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.

இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!

கி.மு.5ஆம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்துக்கும், ஒரிசாவுக்கும் இடைப்பட்ட பகுதி) நாட்டின் மன்னன் சிங்கபாருவால் நாடு கடத்தப்பட்டு மரக்கலங்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அவனது மகன் விஜயனும் தோழர்களும் இலங்கையைச் சென்றடைந்தனர். அந்த விஜயன் வழிவந்தவர்களே சிங்கள மக்களாவர். கி.மு. 2ஆம் நூற்றாண்டளவிலிருந்து இலங்கைக்குப் பவுத்தம் நுழைந்தபின் தான் பேச்சு வழக்கிலான சிங்கள மொழி தோன்றிற்று. ஏனெனில் பவுத்த மதத்தோடு தான் இலங்கைக்குப் பாலி மொழி சென்றடைந்தது. அந்தப் பாலி, சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழிச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சிங்கள மொழியாகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பேச்சு வழக்கிலிருந்தபோதிலும் சிங்கள மொழி வரி வடிவம் பெற்று, சிங்கள எழுத்துக்கள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டன.

சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு சென்றதற்கு முன்னிருந்த தமிழர் கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலம் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்த தமிழர்கள் இந்து மதம், கடவுள் என்ற ஆரியர்களின் மாயைகளுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருந்த காலம். வலிமை மிக்க படைகளை வைத்து சேர சோழ பாண்டிய அரசுகள் பல போர்களை நடத்தி வந்த போதிலும் அவர்களின் ஆட்சிச் சிறப்புக்கான ஆதாரங் களோ கட்வெட்டுக்களோ எதுவும் கிடையாது. கரிகாலன் கட்டிய கல்லணையைத் தவிர, அவ்வாறு ஈழத்திலும் அன்று தமிழர் வாழ்ந்ததற்குக் கோயில்கள் தான் சான்றாக உள்ளன.

விஜயன் இலங்கைக்குச் சென்றடைந்த காலத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நடுவேஸ்வரம் என்ற ஈஸ்வர தலங்கள் இருந்ததாகச் சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (கி.மு. 161– 117) 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே எடுத்துக் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைச் சங்கப் பாடல்களில் ஈழத்து புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் பாடல்கள் காணப்படுகின்றன.

கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கை முழுவதையும் சிங்களவர்களும் தமிழர்களும் மாறி மாறி ஆண்டு வந்தனர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்பிய காலனியா திக்க வாதிகளால் இலங்கைத் தீவு கைப்பற்றப் படும்வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்குப் பகுதிகளைத் தமிழர்கள் நிரந்தரமாக ஆண்டு வந்தனர். கி.பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1618ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்ட தமிழ் இராச்சியத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களின் பெயர்களும் அவர்கள் ஆண்ட காலப் பகுதிகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 17ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இலங்கையை கைப்பற்றிய போதிலும் தமிழர்கள் ஆண்டு வந்த பகுதிகளைத் தனியாகவும், சிங்களவர்கள் ஆண்டுவந்த பகுதிகளைத் தனியாகவும் – தனித்தனியான சட்ட விதிகளின் கீழ் ஆட்சி செலுத்தினர். பிரிட்டிசார் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றியதன் பின், 1833ஆம் தமது நிருவாக வசதிக்காக அதுவரை கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, வன்னிக் குறுநில அரசு என இயங்கி வந்த ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து, ஒரே நாடாக ஆக்கினர்.Image result for பண்டார வன்னியன்

தமிழகத்தில் சேர சோழ பாண்டியப் பேரரசுகள் அழிந்ததற்குப் பின்னாலும் பிரிட்டிசாரை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சிக் குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்களும் போராட்டம் நடத்திய காலத்தில், ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழரசு அழிந்ததற்குப் பின்னாலும் வன்னிக்குறுநில மன்னன் பண்டார வன்னியன் பிரிட்டிசாரை எதிர்த்து வீரப் போர் புரிந்தான். 1803 இல் திறை கேட்டு வந்த பிரிட்டிஷ் அமில்தார் எனப்பட்ட அதிகாரியின் தலையைச் சீவி எறிந்ததுடன் பிரிட்டிசாரை எதிர்த்து 9 ஆண்டு காலம் வீரப் போர் புரிந்து 1811இல் வீர மரணமடைந்தான். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றிருந்த சேர சோழ பாண்டிய ஆட்சிகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஏக இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் எப்படி வந்ததோ அதே போல நீண்ட காலமாகச் சிறப்போடு நீடித்த யாழ்ப் பாணத் தமிழ் அரசும், சிங்கள அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிதைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ், இணைக் கப்பட்டது.

தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும். இந்த வரலாற்று உண்மைகளைத் தெரியாதவர்கள்தான் இங்கிருந்து சிங்கள நாட்டுக்குப் போய் அங்கு தனிநாடு கேட்டால் சிங்களவர்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிருந்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர்கள் இங்கிருந்து போனவர்கள் என்று குழம்புகிறார்கள்.

———–நன்றி: “உண்மை” நவம்பர் 1-15 2008

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=22977


The Tamil Buddhists of the Past and the Future

Sri Lanka Guardian

Buddhism in Sri Lanka is monopolized by the Sinhalese and they call it Sinhala-Buddhism which is Theravada Buddhism (Tripitaka) mixed up with the Mahavamsa. Will the Sinhala-Buddhist Maha Sangha accept any Tamil Buddhist monks? Will the Tamils accept Mahavamsa as a part of Buddhism or Buddhist history knowing very well that it is a Sinhala-Buddhist mythology? 

by J.L. Devananda

(October 05, Colombo, Sri Lanka Guardian) In his keynote address at the 2554th Vesak (Vaishakha Purnim) celebrations at the Mahabodhi Society in Chennai, Prof. Sunil Ariyaratne, University of Sri Jayawardenapura said, “As we are nearing 2600 Buddha Jayanthi, as a Sinhala Buddhist, this is my humble dream for the future: Tamil Buddhist temples should come up in Sri Lanka; Tamil children should embrace Buddhist monkhood; Buddhism must be taught in Tamil; preaching and worshipping Buddhism in Tamil; Tamil Bikkus should have Sinhala followers and Tamil Bhikkus must visit Sinhala homes. That togetherness should be there.”

This sounds somewhat similar to the famous speech “I have a Dream” by Martin Luther King, Jr in 1963 from the steps of the Lincoln Memorial during the march for freedom at Washington. The only difference is Prof. Sunil Ariyaratne’s dream of Tamil Buddhism in Sri Lanka in the future had already existed in the past.

Ancient Buddhist links between Tamil Nadu and Sri Lanka

Today, the Palk Strait which lies between Tamil Nadu and Sri Lankan land masses, is seen as a divider, separating two different distinct ethnicities, religions, cultures and political entities but there was a phase in history when Tamil Nadu and Sri Lanka enjoyed very close ties, thanks to a shared interest in Buddhism. During the early period, the Palk Strait was not seen as a divider but it was a unifier. At that time Buddhism was a bridge between Sri Lanka and Tamil Nadu. The fascinating story of the historical links – Golden threads between Buddhism in Tamil Nadu and Sri Lanka was narrated by Dr. Shu Hikosake, Director and Professor of Buddhism, Institute of Asian Studies in Madras in his book 1989 Buddhism in Tamil Nadu: a New Perspective. Dr. Hikosaka’s study is based on his doctoral dissertation.

The earliest inscriptions in Tamil Nadu written in the Brahmi character of the time, on the walls of the natural caves in the Tamil districts of Madura, Ramnad and Tirnnelveli belongs to the third century BC. They are of considerable interest to students of South Indian Buddhism. It is learnt from these Brahmi inscriptions, that Buddhism had come into Tamil Nadu even then. However, the epigraphical evidence seems to confirm that, it was to King Asoka and the missionary monk Mahinda (believed to be his son) that the introduction of Buddhism into Tamil Nadu may be attributed. In his Rock-Edict No. III, King Asoka says that his Dharma Vijaya prevailed in the kingdoms of the Colas, Pandyans and at Tambapanni (Sri Lanka). Particularly the edict number XIII found near Peshawar, there is reference to the Buddhist missions of Asoka. Among the countries referred to are Cola, Pandya, and Tambapanni. This inscription was written in 258 B.C. and is direct evidence of the Buddhist missions of Asoka to the Tamil country and Sri Lanka even though it does not mention about his son Mahinda.

As Buddhist missions to Sri Lanka had to come by way of South India, the spread of Buddhism in Sri Lanka and South India in the 2nd century AD should be considered contemporary events, but it was King Asoka’s son Mahinda who was responsible for the introduction of Buddhism in Tamil Nadu and Sri Lanka. Mahinda is said to have erected seven viharas at Kaveripattinum, the capital of Cola while he was on his way to Sri Lanka. According to Dr. Hikosaka, contrary to the general impression, Buddhism might have gone to Sri Lanka from Tamil Nadu by sea-route, a route by which one can reach Sri Lanka easily. Since there existed very close cultural affinities between Sri Lanka and the Tamil country from time immemorial, the Buddhist activities in India could have easily influenced in some way or other the Buddhism of Sri Lanka, says Dr. Hikosaka.

Even though it is believed that Buddha had visited this region, South India (Andhra) and Sri Lanka, according to historians, Buddhism began to make a strong impact on Tamil Nadu only in the 3rd century AD. During that period Buddhism had spread widely in Tamil Nadu and won the patronage of the rulers. The remains of a Buddhist monastery excavated at Kaveripattinum which could be assigned to the fourth century are believed to be the earliest archaeological relics of Buddhism in Tamil Nadu. The major urban centers of Kanchipuram, Kaveripattinam, Uragapura (Uraiyur), and Madurai were not only centers of Buddhism, but these were also important centers of Pali learning. The other minor towns of Tamil country where Buddhism was active were Buddhamangalam, Sanghamangalam, Kumbakonam, Mayurapattanam, Alamkudipatti, Kuvam, Sanghamangai, Tiruppadirippuliyur, and so on.

Tamil Buddhists contribute to Buddhist scriptures

It was at this time that Tamil Nadu gave some of its greatest scholars (both Theravada and Mahayana) to the Buddhist world. Tamil Nadu boasted of outstanding Buddhist monks, who had made remarkable contributions to Buddhist thought and learning. Three of the greatest Pali scholars of this period were Buddhaghosa, Buddhadatta, and Dhammapala and all three of them were associated with Buddhist establishments in the Tamil kingdoms.

Buddhadatta or Thera Buddhaatta as he is called lived during the time of Accyutarikkanta, the Kalabra ruler of the Cola-Nadu; was a senior contemporary of Buddhaghosa. He was born in the Cola kingdom and lived in the 5th Century AD. Under the patronage of this ruler, Buddhadatta wrote many books. Among his best known Pali writings are the Vinaya-Vinicchaya, the Uttara-Vinicchaya and the Jinalankara-Kavya. Among the commentaries written by him are the Madhurattha-Vilasini and the Abhidhammavatara. In the Abhidhammaratara he gives a glowing account at Kaveripattinum, Uragapuram, Bhutamangalam and Kanchipuram and the Mahavihara at Anuradapura, (Sri Lanka). While he was at Sri Lanka, he composed many Buddhist works such as Uttara-viniccaya Ruparupa Vibhaga Jinalankara etc. Buddhaghosha, contemporary of Buddhadatta also composed many Buddhist commentaries.

Buddhaghosha is a Tamil monk, who made a remarkable contribution to Buddhism in Sri Lanka. He stayed and studied Buddhist precepts at Mahavihara in Anuradhapura. The Visuddhimagga was the first work of Buddhaghosha which was written while he was in Sri Lanka.

After Buddhaghosha, the important Theravada monk from the Tamil country was Dhammapala. Dhammapala lived in the Mahavihara at Anuradhapura. He composed paramathadipani which was a commentary on Buddhaghosha’s work on Khuddaka Nikaya and Paramathamanjusa, which was a commentary on Buddhaghosha’s Visuddhimagga. A close study of the three Buddhist monks viz Buddhadatta, Buddhaghosha and Dhammapala shows that Tamil Buddhists were closely associated with the Sri Lankan Buddhists around the 5th century AD.

The author of Nettipakarana is another Dhammapala who was a resident of a monastery in Nagapattinam, another important Buddhist centre from ancient times. One more example is the Cola monk Kassapa, in his Pali work, Vimatti-Vinodani, this Tamil monk provides interesting information about the rise of heretical views in the Cola Sangha and the consequent purification that took place. There are so many other Tamil monks who are attributed to the Pali works some of them were resident at Mayura-rupa-pattana (Mylapore, Madras) along with Buddhagosha.

The Tamil Buddhist monks used Pali languages in preference to Tamil in their writings. This is because the Buddha spoke in Magadi Prakrit (Pali). Sanskrit is the sacred language of the Hindus, and similarly Pali is considered as the sacred language of the Buddhists. The well known Tamil Buddhist epics found were Manimekalai, Silappadhikaram, Valaiyapathi, Kundalakesi, and Jivaka Cintamani. Manimekalai, a purely Buddhist work of the 3rd Sangam period in Tamil literature is the most supreme and famous among the Buddhist work done in Tamil Nadu. It is a work expounding the doctrines and propagating the values of Buddhism.

The interaction between Tamil Nadu and Sri Lankan monks finds mention in Manimekalai, which is set in the Tamil towns of Kaveipumpattinam, Kanchi, and Vanchi. There is mention about the presence of wondering monks of Sri Lanka in Vanchi, which was the capital of the Chera Kings of Tamil Nadu. The Chinese traveller, Tsuan Tsang, wrote that there were around 300 Sri Lankan monks in the monastery at the Southern sector of Kanchipuram. Ancient Kanchipuram, the capital of Tondaimandalam, ruled by the Tamil Pallava dynasty, an offshoot of Chola rulers was the major seat of Tamil learning and is also known as the city of thousand temples. Even Thirukkural, the ancient Tamil couplets/aphorisms celebrated by Tamils is based on Buddhist principals. Although Buddhism has become almost extinct from Tamil Nadu, it has contributed a great deal to the enrichment of Tamil culture and has exerted a significant influence, both directly and indirectly, on the Tamil religious and spiritual consciousness, present as well as past.

Tamil Buddhism in Sri Lanka

As Buddhism was one of the dominant religions in both Tamil Nadu and Sri Lanka, naturally there were very close relations between the two regions. The monks from Sri Lanka, too, went across to the Tamil kingdom and stayed in the monasteries. As Dr. Leslie Gunawardana says, `The co-operation between the Buddhist Sangha of South India and Sri Lanka produced important results which are evident in the Pali works of this period`. He also says that the Tamil Buddhist monks were more orthodox than their counterparts in Sri Lanka. Indeed, the relations between the Tamil and Sinhala Buddhist monks were so close that the latter sought the assistance of the former in political turmoil.

In Sri Lanka, the Tamil Buddhists who followed Theravada Buddhism shared the common places of worship with the Sinhalese, but there were also Tamil Buddhists who were following the Mahayana Buddhism and they had their own Mahayana temples. There are still some Tamil Mahayana Buddhist establishments (Palli) in the east and possibly in the Jaffna peninsula. The best known was Velgam Vehera (see details below), which was renamed Rajaraja-perumpalli after the Cola emperor. Another was the Vikkirama-calamekan-perumpalli.

Some ten miles northwest of Trincomalee off the Trincomalee – Horowupothana road is an ancient Buddhist shrine with origins dating back to the years before the second century. It is a historical fact that among the many ancient Buddhist shrines in Sri Lanka Velgam Vehera which was renamed Rajaraja-perumpalli, also called Natanar Kovil by the present day Tamils stands out as the only known example of a `Tamil Vihare or Buddhist Palli` or as the late Dr. Senerath Paranavithana described it in his book `Glimpses of Ceylon`s Past` as an `Ancient Buddhist shrine of the Tamil people`. Some of the Tamil inscriptions found at the site record donations to this shrine and are dated in the reigns of the Chola Kings, Rajaraja and Rajendradeva. It was his view that the date of the original foundation of the vihare was no doubt considerably earlier than the reign of King Bhatika Tissa II.

The situation in Tamil Nadu, however, began to change towards the beginning of the 7th Century AD when the rise of Vaishnavism and Saivism posed a serious challenge to Buddhism and Jainism. There was a significant increase in Hindu/Brahmanical influence and soon the worship of Siva and Visnu began to gain prominence. The Buddhist and Jaina institutions in Tamil Nadu came under attack when they began to lose popular support and the patronage from the rulers. One result of this was the migration of Buddhist and Jaina monks and devoted lay members to kingdoms where they could find refuge. While the Jainas and Buddhists (mostly Mahayana) were able to go to Kannada and Andhra/Telugu regions, a large part of the Buddhists (Theravada) turned to Sri Lanka and assimilated with the local Buddhist population.

Mahavihara monks of Anuradapura and the Pali chronicles

Although Buddhism flourished in South India in ancient times, the 5th century AD Pali chronicles such as the Dipavamsa and Mahavamsa written by the Mahavihara monks of Anuradapura (Sri Lanka) remained silent about the introduction of Buddhism to South India. This is because, when Hindu/Brahmanism started reappearing in India and posed a threat to Buddhism, the Mahavihara monks of Anuradapura (Sri Lanka) due to their strong devotion to Buddhism and desire to consolidate and protect this religion in Sri Lanka wrote the Pali chronicles Deepavamsa/Mahavamsa just to glorify Buddhism and the Buddhist kings of Sri Lanka and not to record objectively what happened. The `Lion Ancestry` and the myths about the origin of the Sinhala race as pre-destined, true custodians of the island of Sri Lanka and guardians of Buddhism is a myth of the creative authors to protect Buddhism and is not the common true history.

The ancient Sri Lankan Kingdom (Anuradapura) was ruled by both Buddhist and Hindu kings. There is no evidence what so ever to prove that they were Sinhala. An analysis of the Pali chronicles (Deepavamsa/Mahavamsa) makes it very clear that the Mahavihara monks who authored them in the 5th century AD have created the ethnic identity Sinhala, yoked it with Buddhism and created a new ethno-religious identity in Sri Lanka known as Sinhala-Buddhist to sustain the religion in the country for 5000 years.

The ancient Brahmi inscriptions (before 7th century AD) in Tamil Nadu are in old Tamil where the Tamil names did not end with an ‘N’ or an ‘M’, but were very similar to those Sanskrit/Pali names. It was only after the 7th century AD, that the Tamil language adopted some changes to its Grammar, script, etc. and evolved into the present form. This might have happened after the Tamils developing what is commonly called as the pulli (dot) system which is peculiar to Tamils in particular among the Indian languages and due to this dot system the words/names ending with ‘A’ ends up with ‘N’ and ‘M’. This is the reason why, in the Pali chronicles and in the Brahmi stone inscriptions the names of the Tamil Kings of Anuradhapura were referred to as Sena, Guttika, Elara, Pulahatha, Bahiya, Panayamara, Parinda, Dathiya, etc and not as Senan, Guttikan, Ellalan, etc. Similarly in Tamil Nadu, the names of the ancient kings were referred to as Kulothunga Chola, Vikrma Chola, Aditya Chola, Kulasekara Pandya, Vira Wickrama Pandya, Parakrama Pandya, Sundara Pandya, etc.

It is believed that most of the Tamil Buddhist literary work has been destroyed during religious controversies. The loss of Tamil Buddhist literature was a death blow to Tamil Buddhism. Apart from the Brahmi inscriptions and other archeological evidence found in Tamil Nadu and the available Tamil literary works, the Rock-Edicts of King Asoka also sheds much light on this subject. Even though the Pali chronicles did not mention the ethnic background of the ancient Sri Lankan Buddhists and the Buddhist kings right from Devanampiya Tissa, the Mahavamsa referred to the Non-Buddhist kings as Tamils (invaders). The above facts and the non-existence of Tamil Buddhists during the colonial period (due to the 10th century Chola invasion) led the 19th century European Pali scholars who translated the Pali chronicles to assume and subsequently the present day Sri Lankans to believe that the ancient Buddhists and the Buddhists Kings of Sri Lanka were Sinhalese.

Unfortunately, today there are no Tamil Buddhists in Sri Lanka but the majority of the early Tamils of Sri Lanka (before the 10th century Chola invasion) were Buddhists. The ancient Buddhist remains in the North and East of Sri Lanka are the remnants left by the Tamil Buddhists and not anybody else. They are part of the heritage of Sri Lankan Tamils. Only the Buddhist temples, statues and structures build in the recent past and present in the North and East remain as Sinhala-Buddhist.

Important Questions

The questions still remain, why are the Sri Lankans ignorant of their past or rather, why is the Sri Lanka’s past hidden from its own people? Why does the Sri Lankans believe that the Buddhist sites in Sri Lanka belong only to the Sinhalese (Sinhala heritage) and not to the Tamils? Why are the Sri Lankans ignorant about the early Tamil Buddhists of Sri Lanka and Tamil Nadu? Why do the Sri Lankans think, in Sri Lanka a Buddhist should be a Sinhalese and a Hindu should be a Tamil while the Sinhalese worship most of the Hindu/Brahmanical Gods?

Not only the Indians but even the Sri Lankan Tamils gave up Buddhism and accepted Hinduism. For them to go back to Buddhism, has 2500 years of Buddhism in Sri Lanka (the so called Dhammadveepa) influenced any major changes in the Sinhala society (the so called guardians of Buddhism chosen by none other than the Buddha) in terms of attitude, character, behavior, morality and so on or has it failed miserably? Are the Buddhist monks practicing Ahimsa (non-violence), Karuna (compassion), Metta (affection), and Maithriya (loving-kindness) towards fellow humans (irrespective of race/religion) or are they in the name of Buddhism promoting ethno-religious chauvinism and hatred?

Buddhism in Sri Lanka is monopolized by the Sinhalese and they call it Sinhala-Buddhism which is Theravada Buddhism (Tripitaka) mixed up with the Mahavamsa. Will the Sinhala-Buddhist Maha Sangha accept any Tamil Buddhist monks? Will the Tamils accept Mahavamsa as a part of Buddhism or Buddhist history knowing very well that it is a Sinhala-Buddhist mythology?

Prof. Sunil Ariyaratne’s dream of future Tamil Buddhists is very genuine and apt during this period. As he says, it may recreate the togetherness, the common bond that once existed between the Sinhalese and Tamils. It will not be a surprise if Nanda Malini sings about the Damila Buddhayo of the past and the future but can his dream materialize? Of course, miracles do happen; Martin Luther King Junior’s dream came true so let us have some hope.


வடக்கில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்

கலாநிதி ஜகத் பாலசூரிய.

[Tuesday, 2011-12-13 14:18:03]

வடக்கு , கிழக்குபகுதிகளில்கலாசாரஅழிவுகளைஅரசாங்கம்ஏற்படுத்தவில்லை. சகலமதத்தினரையும் இனத்தினதும் கலாசாரவிழுமியங்களையும்மரபுரிமைகளையும்பாதுகாக்கும்நோக்குடனேயேஅரசுசெயற்படுகிறதுஎனதேசியமரபுரிமைகள் அச்சர்கலாநிதி ஜகத்பாலசூரிய தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில்தொல்பொருள்ஆராய்ச்சியில்ஈடுபடும்போது யாழ்பல்கலைக் கழகத்தின்   பேராசிரியர் புஷ்பராஜா அவர்களின்தலைமையின்     கீழேயே மேற்கொள்ளப்படுகின்றன. சகலஇனமக்களும், இந்தநாட்டில்வாழ்கின்றனர். ஒவ்வொரு இனத்துக்கும்அவர்களது மதத்திற்கும்  தனித்தனியானமரபுரிமைகள் உள்ளன.

அவர்களுக்கு மதிப்பளிப்பதும்அவற்றைபாதுகாப்பதும்எமதுகடமைகளில்ஒன்று. பன்முகத்தன்மைக்கூடாகநாட்டில்ஒருமைப்பாட்டைஏற்படுத்தும்வகையிலேயேநாம் செயற்படுகிறோம்.

இலங்கையில் வடக்கில்தமிழ்பெளத்தர்கள்வாழ்ந்தார்கள்என்பதைநாம்ஏற்றுக்கொள்கிறோம். இந்தியாவின்பேராசிரியர்நீலகண்டசாஸ்திரிஅவர்களும்தமிழ்பெளத்தர்கள்பற்றிநடத்தியஆய்வுநூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தரோடை, வடமராட்சிபகுதியில்இவர்கள்வாழ்ந்தார்கள்என்பதற்கானசான்றுகள்உள்ளன. யாழ்ப்பாணத்தில்தொடர்ந்தும்தொல்பொருள்ஆய்வுகள்நடத்தப்படுகின்றன.

கடந்தகாலயுத்தம்காரணமாகஎமக்குஆய்வுகள்நடத்தஇல்லாமல்போனது. தவிரஇனரீதியாகநாம்பிரித்துப் பார்க்கவில்லை.

யாழ்நகரில் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நாகரிகமான மக்கள் வாழ்ந்துள்ளனரெனவும் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளுக்கு கல்யுக மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோழமன்னர்களால்கட்டப்பட்டசிவன்கோவில்சிதைவடைந்தநிலையில்இன்னமும்இந்துக்களின்மரபுரிமைசின்னமாக பாதுகாக்கப்படுகிறதுஎன்றும்அமைச்சர்ஜகத்பாலசூரியகுறிப்பிட்டார்.தேசியமரபுரிமைகள்அமைச்சுக்கானநிதிஒதுக்கீட்டுகுழுநிலைவிவாதத்திற்குபதிலளித்துப்பேசும்போதேஅமைச்சர்கலாநிதிஜகத்பாலசூரியமேற்கண்டவாறு தெரிவித்தார்.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply