மகா கவி பாரதியார்

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசை பாரதி பிறந்ததால் கழிந்தது!

நக்கீரன்

(மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)

வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞர் பாரதியார்.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!

என்று மார்தட்டியவர்  பாரதியார்.  பாரதியால் தமிழ் உயர்ந்ததும் தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொண்ட  உண்மை.  தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ பாவலர்களுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக்  கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!

தமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி  புகழ்மாலை சாத்தியவன் பாரதி. தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன் பாரதி. புதிய சுவை, புதிய கற்பனை, புதிய அழகு, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு புதுக் கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் கட்டிச்  செந்தமிழ் அன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.
மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றது. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றது.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!

பாரதி காரிகை கற்றுக்  கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர்.

தமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று எழுந்தன.  இன்று பத்தி எழுத்தாளர்  (Columnist)  எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு பாரதிதான் அறிமுகப்படுத்தினார்.

வடமொழி தேவபாஷை தமிழ் மொழி நீசபாஷை என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான்.  யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசறைந்தான்.

பாரதியாருக்குத்  தமிழோடு வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்புப்  பட்டறிவின் அடிப்படையிலானது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்)
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் பேடிகள் என்றும் பேதைகள் என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.
வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
………………………………………

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து பாரதி,

நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்
நாயெனத் திரியும் ஒற்றர்கள்
வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்

என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்டார்.

வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?

என்றும்

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!

என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.

மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றிற்குப்  புதிய பொருள் சொன்னார்.

ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,
போருக்கு நின்றிடும்போதும் -உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!

மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,

மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய்கையே அறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க!   

பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!

இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா
மெனல் கேளீரோ?

சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா.

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு  மாறானது எதுவோ  அவை அனைத்தையும் செய்தார்.  பிராமணன் மீசை வைக்கக் கூடாது என்ற தடையை உடைத்தெறிந்து பெரிய மீசை வைத்துக் கொண்டார். அதனை எப்போதும் முறுக்கிக் கொண்டே இருப்பார்.  ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர் பாரதியார்!

சிவனும் சக்தியும் ஒன்று . சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு பெண்கள் ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றெல்லாம் பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் 

ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்!

என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் இன்றும் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?

பாரதியார் இயற்றிய கண்ணம்மா பாடல்களுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம். அல்லது அவர் பாடிய பாஞ்சாலி சபதத்திற்குப் பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் 1913 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வங்காளிக் கவிஞர் இரவீந்தநாத் தாகூருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றி இருந்தார்.

பாரதியார் உயிரோடு இருந்த போது அவரது அருமை பெருமை தெரியாது இருந்துவிட்டோம். அவனது இறுதிப் பயணத்தில் 21 பேர்தான் கலந்து கொண்டார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!                                (மகாகவி பாரதியார்)

பாடியது போலவே மகாகவி பாரதியார் நரை திரை, முதுமை தனது 39 ஆவது அகவையில் பூதவுடலை நீக்கிப்  புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882. மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, மூடபக்தி ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பேசாத  பொருளே இல்லை.


மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி பிரமிக்கத் தக்க வரலாறு படைத்தார்
அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை

இ. இராமச்சந்திரா

உலக வரலாற்றில் மிகக் குறைந்த வாழ்நாளில் பிரமிக்கத்தக்க வரலாறு படைத்த சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் சுப்பிரமணிய பாரதியார். அவர் 1882 இல் பிறந்து 1921 இல் அமரத்துவம் எய்தினார்.

அவருள் வானவில்லிலுள்ள வர்ணங்கள் போல் பன்முக ஆளுமை பொதிந்திருந்தது. அவர் தமிழ் ஆசிரியராக, ஊடகவியலாளராக, கவிஞனாக, இந்தியத் தேசிய விடுதலைப் போராளியாக, தேசிய விடுதலைத் தலைவராக ஆற்றிய பணி, அதை செயல்படுத்த உதவிய களநிலை போன்றவை பற்றி மதிப்பீடு செய்தல் எல்லோருக்கும் உபயோகமாகும்.

பாரதி பிறந்த ஊர் எட்டயபுரம். அது வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்குத் துரோகம் செய்து அவரைக் காட்டிக்கொடுத்த வம்சாவளியினரின் ஆதிக்கத்தில் இருந்தது. பாரதியின் தந்தையார் சின்னச்சாமி ஐயர். அவர் ஆங்கில மொழியில் புலமைபெற்றவர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டைப் பின்தங்கிய நிலையில் இருந்து மீட்டெடுத்தல், அறியாமையை அகற்றல், கைத்தொழில் மயமாக்கல், நவீனமயப்படுத்தல் போன்ற தொழிற்பாட்டில் ஆர்வம் உள்ளவர்.

அவர் எட்டயபுர இராசதானியில் பணி செய்தவர். அவர் துணி ஆலையைத் தொடங்குவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவர். அவரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை. அத்துடன், அவரது சொத்துக் கரைந்தது. அவரின் எதிர்பார்ப்பு, பாரதி பொருளியல் துறையில் தேர்ச்சி பெற்று நாட்டு அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும் என்பதாகும்.

ஆனால், பாரதியோ இயற்கையை ரசித்துப் பெறும் அனுபவத்தில் நாட்டம் காட்டினார். அவரின் வாயில் சொற்கள் முயற்சியின்றி தாராளமாக வந்தன. அவரில் புலமைத் தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதை அவதானித்த கல்விமான்கள் அவருக்கு அவரின் 11 ஆவது வயதில் பாரதி என்னும் பட்டத்தை வழங்கினர். இப்பட்டம் மிகவும் பிரபல்யம் அடைந்தது.

பாரதி தனது ஐந்தாவது வயதில் தாய் இலக்குமதியை இழந்தார். தந்தையார் மறுமணம் புரிந்தார். சிற்றன்னை பாரதியிலும் தங்கையிலும் அன்பைப் பொழிந்தார். அவர்களின் சம்பிரதாயப்படி பாரதிக்கு 14 வயதில் 7 வயதுச் சிறுமி செல்லம்மாவுக்கும் திருமணம் நடந்தது. பாரதிக்குத் திருமணம் நடந்து ஒரு வருடத்தின் பின் தந்தை இறந்தார்.

ஆதரவற்று இருந்த பாரதியை அவரது தந்தையின் மூத்த சகோதரி குப்பம்மாவும் அவரது கணவர் சிருஷ்ணசிவனும் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பு விட்டனர். அவர்கள் வாரணாசியில் வசித்தார்கள். பாரதி அவர்களின் அழைப்பையேற்று வாரணாசிக்கு பயணமானார்.

அத்தையின் அரவணைப்பில் வாழ்ந்த பாரதியின் சிந்தனையில் பல குணாம்ச மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் சமூக அரசியல் பார்வை விசாலமானது. அவர் மூடநம்பிக்கைகளைப் புறக்கணித்தார். அவரின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவரின் முடி வெட்டப்பட்டது. மீசை வளர்க்கப்பட்டது. இவ்வாறான புறமாற்றங்கள் மாமன் கிருஷ்ணசிவனுக்கு அவமான உணர்வை ஏற்படுத்தியது.

இருப்பினும், பாரதியின் ஆன்மீக ஆக்கங்கள் அவரை இசைவாக்கம் பெற உதவியது. அவரின் 20ஆவது வயதில் மீண்டும் எட்டயபுரத்துக்கு வந்தார். அவரின் தந்தையார் பணிபுரிந்த அரசதானியில் வேலை கிடைத்தது. அவருக்கு அங்கு நடந்த காலத்துக்கொவ்வாத நடைமுறைகள் வெறுப்பை ஏற்படுத்தியன.

சமிந்தாருக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதைத் தவிர்த்தார். இதன் விளைவு அவர் பணி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 1904ஆம் ஆண்டு ஓகஸ்டில் மதுரையில் உள்ள சேதுபதி உயர் பாடசாலையில் தமிழ்ப் பாடம் கற்பித்தார். இத்தொழில் நீண்டகாலம் நீடிக்கவில்லை. 3 மாத ஆசிரிய சேவையுடன் கற்பித்தல் பணி நிறைவுபெற்றது.

இக்காலத்தில் “சுதேச மித்தி’ரன்” பத்திரிகையின் ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்தார். பாரதியின் நண்பர், பாரதியை அவருக்கு அறிமுகப்படுத்தினார். சுப்பிரமணிய ஐயர் தனது சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இணைக்க முன்வந்தார். பாரதி ஏற்றுக்கொண்டார்.

தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்று இருபது ஆண்டு காலங்கள் கடந்தும் பெரும் மாற்றங்கள் இல்லாமல் தலைமைத்துவம் நகர்த்தியது. இந்திய தேசியத்தின் குறிக்கோளை முன்னெடுக்கும் முதலாவது தமிழ் தினசரிப் பத்திரிகையான சுதேச மித்திரனின் ஆசிரிய பீடத்தில் பாரதி இணைந்த வேளை தேசிய சுதந்திரத்துக்கான எழுச்சியுறும் தறுவாயில் மக்கள் இருந்தனர்.

பாரதியைப் பற்றியும், திலக் போன்றவர்கள் பற்றியும் சுப்பிரமணிய ஐயர் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தாலும், பாரதியின் தீவிரக் கருத்துகள் சுதேச மித்திரனில் வெளிவருவதை அனுமதிப்பதில்லை. பாரதியின் அரசியல் அல்லாத ஆக்கங்கள்தான் சுதேசமித்திரனில் வெளியாகின.

ஊடகத்தை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்குக் கல்வியூட்டி அவர்களை புரட்சிகரமான போராட்டத்திற்கு அணிதிரட்ட சுதேச மித்திரனில் வாய்ப்புக் குறைவு என்பதை பாரதி உணர்ந்தார். அதேபோல் அவரின் சகாக்களும் உணர்ந்தார்கள். என். திருமலாச்சாரி, பாரதியைச் செயல்பாட்டு ஆசிரியராகக்கொண்டு “இந்தியா’ என்னும் பெயரில் வாராந்தப் பத்திரிகையை 1906 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட ஏற்பாடு செய்தார்.

அது தனது மகுட வாசகமாக பிரென்ஸ்ப் புரட்சியின்போது முன்வைத்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் சுலோகத்தை ஏற்றுச் செயற்பட்டது. அது தமிழ் ஊடகத்துறையில் புதிய ஒளியைப் பாச்சியது. பாரதியின் காரமான வாதத்திறனுடனும் விகடம் கலந்த பாணியிலுமான படைப்புகள், குறுகிய காலத்தில் அதன் விநியோக மட்டம் 4 ஆயிரத்தைத் தொட உதவியது.

அது அக்காலத்தில் பெரிய சாதனை. அது தன் புரட்சிகர வாசனையைப் புலப்படுத்தும் வகையில் சிவப்புத் தாளில் பிரசுரமானது. தமிழ் நாட்டில் முதல் தடவையாக அரசியல் கேலிச்சித்திரம் “இந்தியா’ பத்திரிகையில்தான் தோன்றியது.

ஆனால், திருநெல்வேலியில் வ.ஊ.சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் கைது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா பத்திரிகைக் காரியாலயம் 1908ஆம் ஆண்டு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. அதன் பிரகடனப்படுத்தப்பட்ட ஆசிரியரான சீனிவாசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பாரதி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வ.ஊ.சிதம்பரப்பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும், பாரதி கைதாவதைத் தவிர்ப்பதற்காக தப்பிச் செல்லும்படி தகவல் அனுப்பினர். பாரதி தயக்கத்துடன் ஏற்றார். அண்டை மாநிலமான பிரான்ஸ் காலனியான பாண்டிச்சேரிக்கு 1908இல் செப்டெம்பர் மாதம் சென்றார்.

விரைவில் புதிய உறவுகளை யேற்படுத்தி ஒரு மாதத்துக்குள் இந்தியா பத்திரிகையின் அச்சகத்தை இரகசியமாகப் பாண்டிச்சேரிக்கு கடத்திக்கொண்டு செல்லச்செய்தார். ஒக்டோபர் 20 இந்தியா பத்திரிகை பிரசுரம் மீண்டும் ஆரம்பமானது. விற்பனை கூடியது.

பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சக்திக்குட்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து பிரிட்டிஷ் இந்தியாவினுள் பத்திரிகை சென்றடைவதைத் தடுக்க முயன்றனர். இறுதியில் பத்திரிகையைத் தடைசெய்தனர். 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் நாள் கடைசி வெளியீடு பிரசுரமானது. பாரதி புதிதாகத் தொடங்கிய “விஜய’ என்னும் தினசரிப் பத்திரிகைக்கும் அதே கதிதான் ஏற்பட்டது.

1912 பாரதியின் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் கீதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதே ஆண்டுதான் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு என்பன எழுதப்பட்டன.

1918 இல் போர் முடிந்த பின் பாரதி பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வந்தார். அவர் கைது செய்யப்பட்டார். பின் விடுவிக்கப்பட்டார். அவர் சுதேச மித்திரன் பத்திரிகையில் உப ஆசிரியராக ஆசிரிய பீடத்தில் இணைந்து கொண்டார். 1917 இல் புதிய சக்தி ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்தது. அதை வாழ்த்திப் போற்றிப் பாராட்டினார்.

முப்பது கோடி மக்களுக்கு ஒரு பொதுநல அரசு. நாட்டின் சொத்து எல்லோருக்கும் சொந்தம். அது ஒரு ஈடு இணையற்ற சமுதாயம். இவ்வாறான ஏற்பாட்டை முழு உலகமும் வியப்புடன் நோக்கும். அதுதான் அவர் கடைசியாக 1920இல் வெளியிட்ட ஆக்கம்.

1921 ஜூலை மாதம் அவர் கோவில் யானைக்கு உணவூட்டும்போது தூக்கிவீசப்பட்டார். அவரின் நண்பர் காப்பாற்றினார். பின் உடல்நிலை சரியாகத் தேறவில்லை. 1921ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வயிற்றுளைவு நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார்.

பாரதி வேண்டிய அரசியல் சுதந்திரம் கிடைத்த போதும் பாரதி வேண்டிய சமத்துவம், சகோதரத்துவம் பொதிந்த சமூகம் இன்னும் தோன்றவில்லை. (உதயன் 11, 2007)


பாட்டுத் திறத்தாலே- இவ்வையத்தைப் பாலித்திட்ட மகாகவி பாரதியார்! 

நக்கீரன்
(மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)

தேடிச் சோறு நிதந்தின்று –  பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!                 (மகாகவி பாரதியார்)
பாடியதுபோலவே மகாகவி பாரதியார் நரை, திரை, மூப்பு வருமுன் தனது 39வது அகவையில் தனது பூதவுடலை நீக்கி புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882, மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பாடாத பொருளே இல்லை.

வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞன் பாரதியார்.

ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ கவிகளுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குக் கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!

தமிழ்த் தாய்க்குப் பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன். புதிய கற்பனை, புதிய அழகு, புதிய சுவை, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் வடித்து செந்தமிழன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.

மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றன. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றன.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!

பாரதி காரிகை கற்று கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. மகாகவி பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர். தமிழ்த் தாய் அவர் நாவில் நர்த்தனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று ஒலித்தன.

வடமொழி “தேவபாஷை” தமிழ் மொழி “நீசபாஷை” என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான் “”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காண்ம்போம்” பாரதியாருக்கு தமிழைவிட வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரன்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்பு அனுபவபூர்வமானது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடொன்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!                           (செந்தமிழ்)

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் “பேடிகள்” என்றும் “பேதைகள்” என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.

வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா

தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து,

“நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்”
“நாயெனத் திரியும் ஒற்றர்கள்”

“வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்”

என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்கிறார்.

வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?
என்றும்

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!

என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.

மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றிற்கு புதிய பொருள் சொன்னார்.

ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,

போருக்கு நின்றிடும்போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!

மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,

மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய் கையே யறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க!

பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!

இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!

மேலும் கேட்பார்,

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா மெனல் கேளீரோ?

சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,

சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
முமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா!

சிவனும் சக்தியும் ஒன்று. சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு அந்தச் சக்தி ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் –  இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்…

ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தாபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்…
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்

என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்!
(மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)
(நக்கீரன்)


தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
யாங்கணமே பிறந்த தில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை…: 

என்று மகாகவி பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய மாபெரும் புலவர்களான கம்பர், வள்ளுவர், இளங்கோ மூவரையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

“கர்ணனொடு கொடை போயிற்று, உயர்கம்ப நாடானுடன் கவிதை போயிற்று” என்ற கூற்று கல்வியில் பெரிய கம்பரின் கவிதா விலாசத்திற்குச் சான்று பகரும்.

வான் புகழ் வள்ளுவரின் சிந்தனை வளத்திற்கு காலத்தை வென்று நிற்கும் அவரின் திருக்குறள் என்ற பொதுமறை கட்டியங் கூறும்.

இளங்கோ அடிகளின் முத்தமிழ்ப் புலமைக்கு அவர் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

கம்பன், வள்ளுவன், இளங்கோ இவர்களோடு வைத்துப் போற்றக் கூடிய இன்னொரு புலவனும் தமிழில் உண்டு. அவர்தான் மகா கவி பாரதியார். அவரது வார்த்தையில் கூறுவதென்றால்,

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல் வந்த ஓர் மாமணி

மகாகவி பாரதியார். இப் பூமிப்பந்தில் முப்பத்தொன்பது அகவை மட்டும் வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதி அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு தனது முத்திரையைத் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் பதித்துவிட்டு மறைந்த புலவனாவான்.

வேறு யாரிடமும் காணப்படாத கவிதா சக்தி தன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டு கவிதை படைத்தவர் பாரதியார். இல்லாவிட்டால்-

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசை யென்னாற் கழிந்த தன்றே!

மார்தட்டி அவர் சொல்லியிருக்க முடியாது. பாரதியாரின் வாக்கு “உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்பதற்கு அவரது கவிதைகள் அனைத்தும் சாட்சியாக விளங்குகின்றன.

பாரதியாரைப் பல கோணத்தில் இருந்து பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். பாரதியார்-

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்….
என்று பாடிய இந்தியத் தேசியக் கவி.
சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ -பல
பித்த மதங்களி லேதடுமாறிப்
பெருமை யழிவீரோ?
என்று கேட்ட வேதாந்தி.
முப்பது கோடி சனங்களின் சங்கம்,
முழுமைக்கும் பொதுவுடமை…  

என்று உரத்து முழங்கிய பொதுவுடமைவாதி.

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்…… 

என்று பெண் விடுதலைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்த சமத்துவவாதி.

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா!
என்று இடித்து அறிவுரை சொன்ன சீர்திருத்தவாதி.
பூமியிலே, கண்டம் அய்ந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
……………………………………………………………………..
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே…. 

என்று சமயப் பொதுமை பேசிய பொதுமைவாதி.

இவ்வாறெல்லாம் பாரதியின் பல பக்கங்கள் காட்டப்பட்டுள்ளன. அப்படி அவரைக் காட்டியவர்கள் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள். போற்றியிருக்கிறார்கள். உச்சிமேல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் இவை யாவற்றிற்கும் மேலான ஒரு பாரதி இருக்கின்றார்.

அவர்தான் தமிழ்த் தேசியத்திற்கு அடிக்கல் நாட்டிய பாரதி. தமிழ்த் தாய்க்;கு வாழ்த்துப் பாடிய அமர கவி. துரதிட்டவிதமாக பாரதியாரின் மற்றப் பக்கங்கள் அறிமுகமான அளவிற்கு இந்த தமிழ்தேசியக் கவி என்ற பக்கம் அறிமுகமாகாது போய்விட்டது.

பாரதிக்கு முன்னர் எத்தனையோ புலவர்களும், கவிஞர்களும், கவியரசர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். எனக்கு முன்னர் பல சித்தர்கள் இருந்தார்கள் நானும் ஒருவன் வந்தேனப்பா என்று அவரே தன்னைப்பற்றிப் பாடி இருக்கிறார்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன்
உம்பர் விருந்தமுதம் என்றாலும் வேண்டேன்!

என்று இறுமாப்போடு தமிழைக் காதலித்த புலவர் இருந்திருக்கிறார்கள்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே! 

என்று பொன் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை இவற்றைத் துறந்த திருமூலர் என்ற சித்தர்கூட தனது தமிழ் ஆசையை மட்டும் விட முடியாது இப்படிப் பாடிவைத்துப் போயிருக்கிறார். திருமூலர்தான் திருமந்திரத்தை இயற்றியவர். எனவே என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் திருமந்திரம் செய்யுமாறே என்று அவர் பாடியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிப் பாடவில்லை. தமிழ் செய்யுமாறே என்றுதான் பாடுகிறார்.

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்.

என அப்பர் தனது தமிழ்மொழிப் பற்றையும், தமிழிசைப் பற்றையும் அவர் பாடிய தேவாரங்களில் வெளிக்காட்டி இருக்கிறார்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

என்று பாரதிக்கு ஒரு தாசன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் தமிழ்மொழிப் பற்றை ஊரறிய உலகறிய முழங்கி இருக்கிறார்.

ஆனால் இவர்களில் யாருமே பேசும் தமிழ்மொழிக்கும் பிறந்த பொன்னாட்டுக்கும்ஈ அந்த மண்ணின் மக்களான தமிழர்க்கும் லாலி பாடவில்லை.

மகாகவி பாரதியார் மட்டுமே முதன் முதலில் தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடினார். அவர் ஒருவரே தமிழ்நாட்டுக்கு வாழ்த்துப் பாடினார். அவர் ஒருவரே தமிழர்க்கு வாழ்த்துப் பாடினார். மகாகவி பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்துப் பா ஒலிக்காத தமிழ்மேடை இன்று கிடையாது.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!

மகாகவி பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். காரிகை கற்று கவிதை பாடிய கவிஞனல்ல. தமிழ் மொழி அவருக்குச் சேவகம் செய்தது. அதனால் அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உயிர்பெற்று ஒலிக்கின்றன.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”” என்று தமிழைப் போற்றிப் பாடிய கவிஞரும் பாரதியார்தான். பாரதியாருக்கு தமிழைவிட வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரன்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்பு உணர்வு பூர்வமாக இல்லாமல் அறிவு பூர்வமாக இருப்பதாகவே நாம் கொள்ள வேண்டும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடொன்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!                              (செந்தமிழ்)

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய இன்னொருவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் ஒன்று பாடியிருக்கிறார்.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழி லொழுகுஞ் சீராரும் வதனம் எனத்..……..” தொடங்கும் பாடல் அது. மனோன்மணியம் என்று அவர் எழுதிய நாடகத்தில் வருகிறது.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

சுந்தரனாரின் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலின் முதல் சில வரிகள் இவை. பாரதியார் பாடல்போலவே இந்தப் பாடலும் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் படிக்கப்படுகிறது. ஆனால் எளிமை கருதி பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்தே பெரு வழக்கில் இருக்கிறது.

எனவே தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார், மனோண்மணியம் சுந்தரனார் இருவரையும் போற்றி வணங்குவதோடு தமிழ்த் தேசியத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கவும் நாங்கள் உறுதி பூணுவோமாக.                                      (நன்றி: இருப்பின் வேர்கள்)

தான தனத்தன தான தானத்தன
தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே””
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!
 

இந்தக் காலத்தில்கூட “காதல்” என்றால் காதைப் பொத்துகிறவர்கள் இருக்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்னரே பாரதி பாடினார்.

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானிடர்க்கு கவலை தீரும,;
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்,
காதலினாற் சாகாமல் இருத்தல்கூடும்,
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த்தொழிலைக் கருதுவாரோ?
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!


தை 15, 2001
ஆசிரியர்
ஈழமுரசு
வணக்கம். எழுத்தாளனால் கட்டுரையை எழுதத்தான் முடியும். அதனை நல்லமுறையில் வடிவமைத்து வெளியிடுவது பத்திரிகை ஆசிரியரது பொறுப்பு. பாரதிபற்றிய எனது கட்டுரை ஏனோ தானோ என்று வெளியிடப்பட்டுள்ளது. மறியல்காரர்கள் இப்படித்தான் மறியல் இருக்கும் போது வேலை செய்வார்கள்.

கவிதைகள் எப்போதும் தடித்த எழுத்தில் இருக்க வேண்டும். கவிதைக்கும் வாக்கியங்களுக்கும் வேற்றுமை இருக்க வேண்டும்.

நக்கீரன்


பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட்ட மகாகவி பாரதியார்!
நக்கீரன்
(மகாகவி பாரதியாரின் 125ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!                                (மகாகவி பாரதியார்)
பாடியதுபோலவே மகாகவி பாரதியார் நரை திரை, முதுமை எய்தாது  தனது 39 ஆவது அகவையில் பூதவுடலை நீக்கி புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882. மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, மூடபக்தி ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பாடாத பொருளே இல்லை.

வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞன் பாரதியார்.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று மார்தட்டியவா பாரதியார்.

ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ பாவலர்களுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்கு கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை!

தமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன் பாரதி. தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன் பாரதி. புதிய சுவை, புதிய கற்பனை, புதிய அழகு, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள், புதிய உவமை இவற்றைக் கொண்டு புதுக் கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் கட்டி செந்தமிழன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.
மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றன. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றன.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!

பாரதி காரிகை கற்று கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர்.

தமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் சத்திய வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று எழுந்தன.

வடமொழி தேவபாஷை தமிழ் மொழி நீசபாஷை என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான்- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.

பாரதியாருக்கு தமிழோடு வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்பு பட்டறிவின் அடிப்படையிலானது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்) 

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் பேடிகள் என்றும் பேதைகள் என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி. 

வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
………………………………………
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே –
அதைத் தொழுது படித்திடடி பாப்பா

தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து பாரதி,

நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்
நாயெனத் திரியும் ஒற்றர்கள்
வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக்
கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்

என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். சுதந்திரம் ஆரமுது அதை உண்ணுதற்கு ஆசை கொண்டோர் பின்னர் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ எனக் கேட்டார்.

வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும்
ஆரமு துண்ணுதற் ஆசைகொண்டார் பின்னர்
கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?  

என்றும்

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!

என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.

மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றி;ற்கு புதிய பொருள் சொன்னார்.

ஊருக்குழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்,
போருக்கு நின்றிடும்போதும் -உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்!

மேலும் தெய்வம், வீடு, அமிழ்தம், அறம், நரகம் இவற்றிற்கும் பாரதியார் புதிய பொருள் கூறுகிறார்,

மந்திரம் கூறுவோம் …உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு – களியே
அமிழ்தம், பயன்வருஞ் செய்கையே அறமாம்
அச்சமே நரகம், அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க

பாரதியார் தமிழினத்தின் நீடுதுயில் நீக்க பாடிவந்த முழுநிலா! தமிழால் தகுதிபெற்றுத் தமிழுக்குத் தகுதி தேடித் தந்த பாவலன்! பைந்தமிழ்த் தேருக்கு பாகனாய் வாய்த்தவன்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று மீசையை முறுக்கிய முண்டாசுக்காரன்!

இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! – பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா
மெனல் கேளீரோ?

சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,

சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா.

சிவனும் சக்தியும் ஒன்று . சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு பெண்கள் ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றெல்லாம் பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் –  இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.

ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
சாதிக் கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைத்திடும் வையம்

என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் இன்றும் பயன் இல்லாது போயிருப்பது யார் செய்த பாவமோ?

பாரதியார் இயற்றிய கண்ணம்மா பாடல்களுக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம். அல்லது அவர் பாடிய பாஞ்சாலி சபதத்திற்குப் பரிசு கொடுத்திருக்கலாம். ஆனால் 1913 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வங்காளிக் கவிஞர் இரவீந்தநாத் தாகூருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆங்கிலத்திலும் கவிதைகள் இயற்றி இருந்தார்.


பாரதியார்

அவன்
ஆனான் –
ஆண்
அவ்வையாக்
ஆக்கினான் – புதிய
ஆத்திசூடி செவ்வையாக!

பாரதியைப்
பார்த்த பின்புதான்…
அம்புவி
அறிந்து கொண்டது –
அறிவுத் தெய்வம் சரஸ்வதி
ஆண்பால் என்று;
மங்கையு மில்லை –
கொங்கையு மில்லை –
ஆயினும் –
அவனிடம் …
சதா
சுரந்தது
சீம்பால் போலே – செந்தமிழ்த்
தீம்பால் அன்று !

‘னி’வில் நின்றன –
குறில்களும் நெடில்களுமாய்…
தமிழ்ச் சொற்கள் –
தினம் தினம் –
திருவல்லிக்கேணியில் – அவன்
திருமாளிகை முனம்;
‘அகராதியில்
அமராமல் – அய்யா! உன்
அந்தாதியில்
அமர்ந்தால் தான்…
எமக்கெலாம்
ஏற்படும் கனம்!’ என –
ஒவ்வொரு சொல்லும் – அவனிடம்
ஓவாமல் சொல்லும்!

பூஞ்சாணம் பிடித்த
பாத்திரம் போலே…
இருந்தது
இத் தேயம்; எட்டய –
புரத்தான் தான் – அதற்குப்
பூசினான் ஈயம்!
தாகூர் –
தன்னையும் மிஞ்சும் – அவனது
நாகூர்; அந்த
நாவின் கூரால் – வருணம்
நான்கையும் வகிர்ந்தான்;
மேட்டுக் குடியையும் –
ஓட்டுக் குடியையும் –
பாட்டுத் தராசில் –
போட்டு நிறுத்து…
ஓர் எடை – என
ஓர்ந்து – எல்லாவற்றையும்
சகலருக்கும் –
சமமாகப் பகிர்ந்தான்!

பெண் என்பவள் –
புடைவை கட்டிய ஆண்!
அவளுக்கு ஏன் –
அச்சம்; மடம்; நாண்?’
என –
எரிந்து –
மாதரார் முகங்களில் –
மீசை எழுதினான்; அதன்மேல் –
ஆண்; பெண்; நிகர் எனும் – தனது
ஆசை எழுதினான்!
தாழ்ந்து கிடந்தது –
தமிழச் சாதியின் கழுத்து;
தரையைப் பார்த்த –
தாடையைப் பிடித்து – ‘நீள்
வரையைப் பார்!’ என – நிமிர்த்தி
விட்டதவன் எழுத்து!

மோனைக் காலில் –
முத்தமிழை நிறுத்தி – ஒருநாள்
ஆனைக் காலில் –
அடிபட்டுப் போனான்;
போனதுபோல் போய்ப் –
போகாதவன் ஆனான்!

8. பாரதிதாசன்

முண்டாசு
முறுக்கு மீசை;
மூலைக் கச்சம்; இந்த –
மூன்றும் இல்லையே தவிர …
இவன் –
இன்னோர் அவன்தான்;
இருந்தமிழ் –
இயற்றிய தவம்தான்!
அகவை முப்பத்தொன்பதிலேயே –
அவன் முடிந்து போனதால்…
விட்டுப் போன –
விஷயங்களை …
அவன் சொன்னான் –
இவன்மூலம்;
அவன் தானே –
இவன் மூலம்!

பணிகள்
பாக்கியிருந்ததனாலே…
பாரதிதான்
பாரதிதாசனாய் நீண்டான்;
பகுத்தறிவுக் கொவ்வாத
பழம் –
பஞ்சாங்கங்களைப்
பாட்டு நகங்களால் கீண்டான்!
புரட்சிக் கவியாகப் –
பூத்து…
தொய்ந்து கிடந்த
தொன்மைத் தமிழ்க்குடிக்கு –
மைந்து கூட்டினான்; தன்
மானச்சோறு ஊட்டினான்!
சிந்து எனும்
சிலம்பம் சுழற்றினான்;
வந்து தமிழை
விழுங்கத் துணிந்த –
கபோதிகளின்
கபாலம் கழற்றினான்;
தமிழையும் –
தமிழரையும் –
பிறமொழி வெப்பம்
பீடித்து விடாமல்…
கவிதைக்
குடையை
நீள விரித்து –
நாளும் நிழற்றினான்!

விதவைக்குப் பொட்டுவைத்தான்; மத
வெறியர்க்குக் குட்டு வைத்தான்;
தமிழ்த்
துப்பாக்கியில் –
பாட்டுத் தோட்டாக்களைப்
போட்டு நிரப்பி –
பெண்ணடிமை பேணிநின்ற –
பேயரைச் சுட்டுவைத்தான்;
திருந்தாதார்
தம்மைக் – காலம்
திருத்தட்டும் என்று
தண்ணளியால் விட்டுவைத்தான்!

பாதம் முளைத்த
பசுந்தமிழாக – எங்கள்
பாரதி தாசனென்னும்
பாட்டரசு –
உலவிய –
ஊர் என்பதால்…
புதுவை மண்ணைப்
பூசிப்பேன்; விபூதியாய்ப்
புதுவை மண்ணைப்
பூசிப்பேன்!

– இன்னமும் இருக்கின்றார்கள்…

Bharatiyar: bard of freedom, minstrel of human rights

By V.R. Krishna Iyer

Today is Human Rights Day. Let us remember Subramania Bharathi. Never in the contemporary history of free nations did live a celestial composer of revolutionary rage so sublime as Subramania Bharathi. Never, in the annals of living Asian memory, did a literary figure leave his land as a patriotic poet to battle for “swaraj” through pen and song power and use the Muses’ gift to rouse, with lovely lyrics, folk music with poetic passion and daring prose the slumbering populace into vibrant nationalism, like Bharathi. Never from vintage ages, did any Indian literary wonder serve the cause of human progress as, in Rajaji’s measured praise, “Bharathi has served the Tamils in recent times by his writings”. Never did modern Indian literature, to borrow the felicitous diction of Sarojini Naidu, find any men of letters “to rank among those who have transcended all limitation of race, language and continent, and have become the universal possession of mankind” as Bharathi.

Cosmic vision, patriotic mission and nationalist passion for human redemption were his laureate cerebration and celebration. Tamil literature and culture are an ancient storehouse which equal or excel other great Eastern heritages. Thiruvalluvar, the wisest of the East, fills us with pride as an unparalleled paradigm of the Tamil treasury of knowledge. Even so, the 20th century Tamil literature is perhaps the Age of Subramania Bharathi.

The blended literary beauty, militant melody, cultural-political renaissance and modern noetic radicalism he inaugurated have no creative rival in any language. His popular ballads, marching songs, devotional music and prose poems are a minstrel marvel of aesthetic variety, originality and serendipity. His great works such as Panchali Sapatam, Kannan Pattu and Kuyil Pattu are a versatile genius blossoming into rare excellence.

Legends were transformed by him into messages of freedom struggle and his epic poems from the Mahabharat conveyed, with aesthetic magic, philosophical truths de profundis. He gave to his countrymen “the mantra of redemption the religion of patriotism”.

The perspective of Bharathi was political, practical and folk-oriented; his principal proposition was human liberation, material and spiritual, his protean talent had people’s power and folk fascination. Foremost is his moving music, charged with nationalism and humanism, marching as revolution in locomotion and insurrection against foreign subjugation. He died young in 1921 and his soul, every cell, was a commitment to People’s Raj, Bharat Swaraj.

He edited India,inaugurating a national awakening and enriching his literary incarnation as an aesthetic rebel against imperialism. How entrancingly amazing that this uniquely phenomenal spirit burst into ecstatic poetry shortly after the Russian October Revolution! He exclaimed in glorious verse: “O people of the world, Behold this mighty change!”

His compositions thrilled music concerts, his songs moved the youth into the streets, trooping and singing for social equality and poorna swaraj. He soared on the luminous wings of song and flew, with felicity, on ballads and ditties and poems for common country fraternity.

All he wrote were for the human ascent and divine descent, warming up in adoration for a New World Order without hunger, with dignity of labour and for the fulfillment of Freedom for all Creation. What grand spectrum, what panoramic perspective! What sublime thought, folklore and legend transmuted into the golden treasury of literature at its finest hour!

Among his most ecstatic, most exciting, patriotic, popular pieces is one of cosmic dimension and unique humanism. “To none on earth shall we henceforth be slaves!” Four score years and more ago he left his mortal coil, but his undying fire is still with us, his immortal atman still inspires us. Salutations from afar to that deathless star, Bharatiyar, whose presence amongst us is invisibly real and indelibly perennial.

What symphonic movement, harmonic hymn, semantic sweep are thine and what nationalist, yet global Pegasus thou art! You stirred a generation of young and old, awakened vast number of Tamils into the worth of the human person, invested the nation with a holistic persuasion of its destination! Today, the Human Rights Day, remembering you is a national obligation. I devote my thoughts in this brief write-up on your poetised patrimony and seek to audit the process of decline and fall of your dreams bequeathed to us.

Bharathi belongs to Bharat’s lowliest, lost and the last. We shall not betray this grand bequest. But do we stand by that majestic, magnificent estate we call our social order and global harmony? I am a sceptic here.

Human rights now indivisibly include civil and political rights, social, economic and cultural rights, right to peace and security, community integrity and development, to health and education, gender equality, child rights, access to justice, to democracy, freedom from torture by private or State agencies and a host of new but important rights like protection against pollution, killer technology, opium of noxious consumerism, mental-moral degeneracy through global, glitteratti propaganda, plus collective rights sans which individual rights are cipherised.

This holism is quintessential if human rights are not to be a mere rope of sand. What, at present, is the rude, even rabid, reality vis-a-vis development? Growth, without distributive justice, which, in effect, is but “creative destruction” in its over-all impact. The models of globalisation and the “Asian tiger” States are built on debt and corruption. The upheavals of capitalism in the 1930s are writ large now, as the boast of global economy is crumbling in the Third World. People everywhere are suffering from “globophobia” except India’s Finance Minister who still hopes against hope that our country will somehow prosper.

A new International Economic Order, away from the Mammon and Market, but more human and Good Samaritan is the desideratum, if macabre gloom is not to make our future grimy and grim. The U.S. is now the U.N as all nations are expected to be limpets. This is recolonisation Bharathi anathematized. Human Rights for Indians mean defiance of international chicanery and corporate demagogy. If Life should win, Bharathi must be taken more seriously.

Mahakavi Subramaniya Bharathi

Mahakavi Subramaniya Bharathi was born on 11 December 1882. He died on 11 September 1921. In a relatively short life span of 39 years, Bharathi left an indelible mark as the poet of Tamil nationalism and Indian freedom.

Bharathi’s mother died in 1887 and two years later, his father also died. At the age of 11, in 1893 his prowess as a poet was recognised and he was accorded the title of ‘bharathi’ at Ettiyapuram. He was a student at Nellai Hindu School and in 1897 he married Sellamal. Thererafter, from 1898 to 1902, he lived in Kasi.

Bharathi worked as a school teacher and as a journal editor at various times in his life. As a Tamil poet he ranked with Ilanko, Thiruvalluvar and Kamban. His writings gave new life to the Tamil language – and to Tamil national consciousness. He involved himself actively in the Indian freedom struggle. It is sometimes said of Bharathi that he was first an Indian and then a Tamil. Perhaps, it would be more correct to say that he was a Tamil and because he was a Tamil he was also an Indian. For him it was not either or but both – it was not possible for him to be one without also being the other.

Bharathi often referred to Tamil as his ‘mother’. At the sametime, he was fluent in many languages including Bengali, Hindi, Sanskrit, Kuuch, and English and frequently translated works from other languages into Tamil. His yambinft emazikqiEl tmizfemaziEpalf ;[itavT ‘gfKmf kaE]amf, (among all the languages we know, we do not see anywhere, any as sweet as Tamil) was his moving tribute to his mother tongue.

That many a Tamil web site carries the words of that song on its home page in cyber space today is a reflection of the hold that those words continue to have on Tamil minds and Tamil hearts.

His ecnftmizf naed{mf Epati[iEl -;[fptf Et[fvnfT pay<T kati[iEl was Bharathi’s salute to the Tamil nation and many a Tamil child has learnt and memorised those moving words from a very young age – and I count myself as one of them.

Bharathi was a Hindu. But his spirituality was not limited. He sang to the Hindu deities, and at the same time he wrote songs of devotion to Jesus Christ and Allah. Bharathi was a vigorous campaigner against casteism. He wrote in ‘Vande Matharam’ :

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

We shall not look at caste or religion, All human beings in this land – whether they be those who preach the vedas or who belong to other castes – are one.

Bharathi lived during an eventful period of Indian history. Gandhi, Tilak, Aurobindo and V.V.S.Aiyar were his contemporaries. He involved himself with passion in the Indian freedom struggle. His ‘Viduthalai, Viduthalai’ was a clarion call for freedom from alien rule. He saw a great India. He saw an India of skilled workers and an educated people. He saw an India where women would be free. His  poems expressed the depth of his love and the breadth of his vision for India.

He participated in the 1906 All India Congress meeting in Calcutta (chaired by Dadabhai Naoroji) where the demand for ‘Swaraj’ was raised for the first time. Bharathi supported the demand wholeheartedly and found himself in the militant wing of the Indian National Congress together with Tilak and Aurobindo. Aurobindo writing on the historic 1906 Congress had this to say:

“We were prepared to give the old weakness of the congress plenty of time to die out if we could get realities recognised. Only in one particular have we been disappointed and that is the President’s address. But even here the closing address with which Mr.Naoroji dissolved the Congress, has made amends for the deficiencies of his opening speech.

He once more declared Self-Government, Swaraj, as in an inspired moment he termed it, to be our one ideal and called upon the young men to achieve it. The work of the older men had been done in preparing a generation which were determined to have this great ideal and nothing else; the work of making the ideal a reality lies lies with us. We accept Mr.Naoroji’s call and to carry out his last injunctions will devote our lives and, if necessary, sacrifice them.” (Bande Mataram, 31 December 1906)

Many Tamils will see the parallels with the Vaddukoddai Resolution of 1976 which proclaimed independence for the Tamils of Eelam – the work of older men determined to have ‘this great ideal and nothing else’ and the later determination of Tamil youth to devote their lives, and ‘if necessary sacrifice them’ to make that ideal a reality.

Bharathi served as Assistant Editor of the Swadeshamitran in 1904. In April 1907, he became the editor of the Tamil weekly ‘India’. At the sametime he also edited the English newspaper ‘Bala Bharatham’. He participated in the historic Surat Congress in 1907, which saw a sharpening of the divisions within the Indian National Congress between the militant wing led by Tilak and Aurobindo and the ‘moderates’. Subramanya Bharathi supported Tilak and Aurobindo together with ‘Kapal Otiya Thamilan’ V.O.Chidambarampillai and Kanchi Varathaachariyar. Tilak openly supported armed resistance and the Swadeshi movement.

These were the years when Bharathi immersed himself in writing and in political activity. In Madras, in 1908, he organised a mammoth public meeting to celebrate ‘Swaraj Day’. His poems ‘Vanthe Matharam’, ‘Enthayum Thayum’, ‘Jaya Bharath’ were printed and distributed free to the Tamil people.

In 1908, he gave evidence in the case which had been instituted by the British against ‘Kappal Otiya Thamizhan’, V.O.Chidambarampillai. In the same year, the proprietor of the ‘India’ was arrested in Madras. Faced with the prospect of arrest, Bharathi escaped to Pondicherry which was under French rule.

From there Bharathi edited and published the ‘India’ weekly. He also edited and published ‘Vijaya’, a Tamil daily, Bala Bharatha, an English monthly, and ‘Suryothayam’ a local weekly of Pondicherry. Under his leadership the Bala Bharatha Sangam was also started. The British waylaid and stopped remittances and letters to the papers. Both ‘India’ and ‘Vijaya’ were banned in British India in 1909.

The British suppression of the militancy was systematic and thorough. Tilak was exiled to Burma. Aurobindo escaped to Pondicherry in 1910. Bharathi met with Aurobindo in Pondicherry and the discussions often turned to religion and philosophy. He assisted Aurobindo in the ‘Arya’ journal and later ‘Karma Yogi’ in Pondicherry. In November 1910, Bharathi released an ‘Anthology of Poems’ which included ‘Kanavu’.

V.V.S. Aiyar also arrived in Pondicherry in 1910 and the British Indian patriots, who were called ‘Swadeshis’ would meet often. They included Bharathi, Aurobindo and V.V.S.Aiyar. R.S.Padmanabhan in his Biography of V.V.S.Aiyar writes:

“All of them, whether there was any warrant against them or not, were constantly being watched by British agents in Pondicherry. Bharathi was a convinced believer in constitutional agitation. Aurobindo had given up politics altogether… and Aiyar had arrived in their midst with all the halo of a dedicated revolutionary who believed in the cult of the bomb and in individual terrorism.”

In 1912, Bharathy published the Bhavad Gita in Tamil as well as Kannan Paatu, Kuyil and Panjali Sabatham.

After the end of World War I, Bharathi entered British India near Cuddalore in November 1918. He was arrested. He was released after three weeks in custody. These were years of hardship and poverty. (Eventually, the General Amnesty Order of 1920 removed all restrictions on his movement). Bharathy met with Mahatma Gandhi in 1919 and in 1920, Bharathy resumed editorship of the Swadeshamitran in Madras.

This was one year before his death in 1921. Today, more than seventy five years later, Subaramanya Bharathy stands as an undying symbol not only of a vibrant Tamil nationalism but also of the unity that is India.


பாரதி ஒரு சூப்பர்மேன்:  கல்யாணசுந்தரம்

நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் இப்போதும் மாறாத பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி தன் நினைவுகளின் நதியில் நீந்திக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம் என்ற 92 வயது வாலிபர். வயோதிகம் பற்றிய உடல் என்றாலும் பேச்சு உடையவில்லை. ஞாபகம் சீராகப் பாய்கிறது. பாரதியாரோடு பழகிய தன் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டேயிருக்கிறார். பேச்சு இளைஞரின் உற்சாகத்தோடும், ஈர்ப்போடும் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘சுப்பிரமணிய பாரதி’ விவரணப் படத்தில் தன் நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார் கல்யாண சுந்தரம். அவரை நேரில் சந்தித்து ‘ஆறாம்திணை’ க்காகப் பிரத்தியேகமாகப் பேசிய நினைவுப் பெருக்கிலிருந்து சில துளிகள்…..

கே. பாரதியாரை எப்போது சந்தித்தீர்கள்?

‘1919 ம் வருஷம் அவர் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.’

கே.  அப்போ பாரதி எப்படியிருந்தார்?

‘ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரி போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு… அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு… அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க.”

கே.  அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்களேன்?

” ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதை குட்டியோடு படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதி உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு அதைக் கொஞ்சிகிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை.”

கே. உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்?

‘பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா… நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமதான் போயி பார்ப்போம். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து ஏதாவது இடத்தில உட்கார்ந்துகிட்டு பேசிகிட்டு இருப்பாரு. அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க.. . அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப் பேசுவார்.

பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அவருக்கு லஹரி வஸ்துகள் உபயோகிக்கிற பழக்கம் இருந்துச்சு. அதைப் புகைக்க ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண வீட்டுக் கிணற்றில இருக்க கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. அவர் கண்ணு அப்போ துடிச்சுக்கிட்டேயிருக்கும்.

எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரி பாடுவாரு”.

கே. அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா?

”ஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு இது போன்ற புஸ்தகங்களை எல்லாம் நாலணா, எட்டணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடி சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது.”

கே. தினசரி பார்ப்பீங்களா?

ஒரு ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, ‘பிரஷ்டன்… பிரஷ்டன்’ னு சொல்ல விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க.

ஒரு நாள் பாரதியார் இன்னைக்கு ‘சாகாமல் இருப்பது எப்படி?’ ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போட்டாங்க. அவர் வீட்டு முன்னால கூட்டம் நடந்தது. பாரதியார் வந்தாரு. கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ‘ ஜெயபேரிகை கொட்டடா’ பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான். அப்பிடி வீரமா பாடுவாரு.

அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.”

கே. அவரோட பழக்கமெல்லாம் எப்படியிருந்தது?

‘யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் ‘அம்மா… சக்திந்னு உரக்க சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிற மாதிரிதான் சொல்வாரு.

அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே எட்டணா குடுத்துட்டு ‘யானையைத் தொட்டுப் பாக்கட்டா’ ன்னு கேப்பாரு. அவன் ‘அதுக்கு என்ன! பாருங்க சாமி’ ன்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதை கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது.விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. குழந்தை மாதிரி.”

கே. உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க?

” நான் ‘குற்றாலக் குறவஞ்சி’ எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். மண உறவுகள் வழியா அது தொடர்ந்துச்சு. நான் நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல ‘கண்ணா மூச்சி’ங்கற என் கதை பரிசு வாங்கிச்சு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் ?”

கே. புதுமைப்பித்தனைத் தெரியுமா?

‘அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு.’

கே. இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

‘அவர் ஒரு சூப்பர்மேன். அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம்.”

சந்திப்பு : ஹரிகிருஷ்ணா
நன்றி: இணையத் தமிழ்த் தொகுப்பு


இரு மகாகவிகள்

க. கைலாசபதி

ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் எத்தனையோ இலக்கிய வகைகளைப் படைத்திருக்கிறார். கட்டுரைகள், சிந்தனைச் சிதறல்கள், குட்டி நாடகங்கள், சிறுகதைகள் நாவல்கள் மொழிபெயர்ப்புகள், கவிதைகள் என்றெல்லாம் அவர் பேனா ஓய்வொழிவின்றிப் படைத்துக்கொண்டிருந்தது. எனினும் மகாகவி என்னும் அடையே அவருக்கு நீங்காத புகழைக் கொடுத்தக் கொண்டிருக்கிறது. பாரதியார் என்று கூறும்போது மக்கள் அமரகவி பாரதியாரையே எண்ணிக் கொள்கின்றனர். தனது காலத்தின் தலையாய கவிஞராகவே பாரதியார் இலக்கிய வரலாற்றில் இடந்தேடிக் கொண்டுள்ளார். இதில் வியப்பெதுவுமில்லை. பாரதியாரும் தமது கவிதைகளையே உன்னதமான படைப்புக்களாகக் கொண்டார். 1919 -ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி எட்டயபுரம் மகாராஜாவிற்குப் பாரதியார் அனுப்பிய ஓலைத் தூக்கில் (சீட்டுக்கவி) பாரதியாரின் இந்த நம்பிக்கையை நாம் காணலாம். சம்பிரதாயபூர்வமாக அமைந்துள்ள அந்தச் சீட்டுக் கவியில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்ததன்றே!
சுவைபுதிது; பொருள் புதிது; வளம் புதிது;
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை’ என்று நன்கு.
பிரான்ரஸன்னும் சிறந்த புகழ்நாட்டிலுயர்
புலவோரும் பிறருமாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்; பாரோரேத்துந்
தராதிபனே! இளசை வெங்கடேசு ரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன்!

என்று பாடிய பாரதியார் நமது படைப்புகளில் கவிதைகளையே சிறந்தவையாகக் கொண்டார் என்பதற்கு வேறு பல சான்றுகளும் உள்ளன. ‘பாரதி’ என்னும் பட்டத்தைப் பதினோராவது வயதிலேயே பெற்றுவிட்ட பாரதியார் “தமது ஏழாவது பிராய முதல் அருமையான தமிழ்க் கவிகளை விளையாட்டாக வரைந்து கவனஞ்” செய்தார் என்று கவிஞரின் இளமை காலத் தோழரான நாவலர் சோமசுந்தர பாரதியார் கூறியுள்ளார்.

இவ்வாறு கவிதா வாழ்க்கைக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர் பாரதியார் கவிதையைப் பற்றியும், கவிதைக் கலையைப் பற்றியும் அதிகம் எழுதினாரல்லர். தமது குறுகிய வாழ்நாளில் ‘முன்னிக் கவிதை வெறி மூண்டேநன வழியப் பட்டப் பகலில் பாலலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவு’களாகப் பாடிய பாரதியார் ஆறஅமர இருந்த கலைகளுக்கு அரசியாம் கவிதை பற்றி எழுத அவகாசம் பெற்றாரல்லர். தமது கவிதை பற்றியோ, பொதுவாகக் கவிதை பற்றியோ, பாரதியார் எபதியவை அருகியே காணப்படுகின்றன. அவர் பூரணமாக கவிதா வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார் என்பது “எமக்குத் தொழில் கவிதை” என்று தொடங்கும் அவரது பாட்டாலேயே தெரிகின்றது.

நன்றி: இரு மகாகவிகள்


என் கணவர்
செல்லம்மாள் பாரதி
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் என் கணவர் என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது
வ.உ. சிதம்பரம் பிள்ளை

சுப்பிரமணிய பாரதி என்னும் பெரியார் திருநெல்வேலி ஜில்லா எட்டயபுரம் சமஸ்தானம் எட்டயபுரத்தில் பிறந்தவர். அவர் தகப்பனார் பெயர் சின்னச்சாமி அய்யர். அவர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஓர் உத்தியோகம் புரிந்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் என் தகப்பனாரும் அந்த சமஸ்தானத்தின் வக்கீலாயிருந்தனர். என் தகப்பனாருடன் அவர் என் சொந்த ஊராகிய ஒட்டபிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அக்காலத்தில் என் ஊரில் தாலுகாக் கச்சேரியும், தாலுகா மேஜிஸ்டிரேட்டுக் கோர்ட்டும் இருந்தன. அவ்விரண்டில் ஒன்றில் ஏதேனும் ஒரு ஜோலியாக அவர் என் ஊருக்கு வருவர். என்னூருக்கு வந்த காலங்களில் அவர் என் வீட்டிலாவது, என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குரிச்சித் தானாபதிப் பிள்ளை வீட்டுக் கூடத்தின் மாடியிலாவது தங்குவர். அப்போது எனக்கு வயது 15 அல்லது 16 இருக்கும். அவர் என்னோடும் மற்றையாரோடும் பேசிய மாதிரியிலிருந்து அவர் ஒரு பெரிய மேதாவியென்று நான் நினைத்தேன். அவரிடம் நான் சென்ற சமயங்கள் சிலவற்றில் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலியென்றும், அவன் சிறு பிள்ளையாயிருந்தும் தமிழில் சுயமாகப் பாடுவானென்றும் என் தகப்பனார் என்னிடம் சொல்வதுண்டு. அச்சிறு பிள்ளைதான் சுப்பிரமணிய பாரதி என்று இப்போது உலகமெல்லாம் புகழப்பெற்று விளங்கும் பெரியார்.

இப்பெரியாரை நான் முதல் முதலாகப் பார்க்கப் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில் இந்தியா என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்து அதனை நடத்தி வந்த காலத்தில்தான். அது 1906 ஆம் வருஷ ஆரம்பமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அப்போது நான் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன். திருவல்லிக்கேணியில் சுங்குராம செட்டி தெருவில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் போகிற வருகிற வழியில் கண்ட ஒரு பெரிய வீடு இந்தியாவின் அதிபர் திருமலாச்சாரியார் வீடு என்று தெரிந்தேன். ஒரு நாள் மாலை 4 மணி சுமாருக்கு நான் இந்தியாவின் அதிபரைப் பார்க்கக் கருதி அவர் வீட்டுள் புகுந்தேன். அங்கிருந்தோர் அவர் மாடியில் இருக்கிறார் என்றனர். நான் மாடிக்குச் சென்றேன். இளவயதுள்ள ஓர் அய்யங்காரைக் கண்டேன். அவர்தான் இந்தியாவின் அதிபர் என்று நினைத்து அவரை உசாவினேன். அவர் ஆம் என்றார். அவரிடம் என் ஊரும் பேரும் சொன்னேன். உடனே அவர் மாடியின் உள்ளரங்கை நோக்கி, “பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கின்றார்” என்று கூறினர்.

உடனே அங்கிருந்து பாரதியும் வேறொருவரும் வந்தனர். அய்யங்கார் “இவர்தான் இந்தியாவின் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி”” என்றார். அவர் என் ஊரையும் பெயரையும் உசாவினர். “ஓட்டப்பிடாரம் வக்கீல் உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம் பிள்ளை” என்றேன்.

“உங்கள் தகப்பனார் என் தகப்பனாரின் அதியந்த நண்பர். அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்” என்றார் பாரதியார். நால்வரும் பெரும்பாலும் பாரதியாரும் நானும் சிறிது நேரம் தேச காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. நால்வரும் மாலை 5 மணிக்குத் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றோம். அங்கிருந்து வங்காளத்தின் காரியங்களையும் பெபின் சந்திரபாலர் முதலியோரின் பிரசங்கங்களையும் செயல்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அச்சமயம் கடற்கரை விளக்குகளும் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. நால்வரும் வீடு திரும்பினோம். பின்னர், நாள்தோறும் நான் இந்தியா அதிபர் வீட்டிற்கும், இந்தியா ஆபீஸ்க்கும், கடற்கரைக்கும் செல்லலானேன். அதிபரும் ஆசிரியரும் நானும் பேசலானோம். ஆசிரியரும் நானும் முறையே கம்பரும் சோழனுமாகி, மாமனாரும் மருமகனும் ஆயினோம்.

ஒருநாள் மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரையில் வங்காளத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த காலையில், அங்குக் காளிதேவிக்கு வெள்ளாடு பலி கொடுப்பதைப் பற்றிப் பாலர் பேசிய பேச்சிற்கு என் மாமனார் ஓர் வியாக்கியானம் செய்தார். அவ்வியாக்கியானத்தைக் கேட்டதும் நான் கொழுத்த தேசாபிமானியாய் விட்டேன். அது முதல் அவர் என் வீட்டிற்கு வரவும், என்னோடு உண்ணவும் உறங்கவும், நான் அவர் வீட்டிற்குப் போகவும், அவரோடு உண்ணவும் உறங்கவும் ஆயிருந்தோம். பிரான்ஸ் தேசத்துச் சரித்திரமும், இத்தாலி தேசத்துச் சரித்திரமும், அவைபோன்ற பிறவும் அவர் சொல்லவும் நான் கேட்கவுமானோம். இத்தாலி தேசாபிமானி மிஸ்டர் மாஸினியின் தேசவூழிய யௌவன இத்தாலி சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்வதுவந்த பிரமாணச் செய்யுளை ஆங்கில பாஷையில் என் மாமனார் எனக்குப் படித்துக் காட்டினார். அதனைக் கேட்டதும் நான் சொக்கிப் போனேன்.

அச்செய்யுளைத் தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தரவேண்டுமென்றேன். அவர் அதனை அன்றே தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தந்தார். அதுதான் “பேரருட் கடவுள் திருவடியாணை” என்று தொடங்கும் பாட்டு. தேச ஆட்சியைச் சீக்கிரம் கைக் கொள்ளுதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றி பேசினோம். பிரசங்கம் செய்தோம். தேசாபிமானத்தின் ஊற்றென விளங்கும் திருவல்லிக்கேணிக் கோவிற்பக்கத்திலுள்ள மண்டையன் கூட்டத்தாராகிய திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாஸச்சாரியார் முதலியவர்களோடு அடிக்கடி பேசலானோம். ஆலோசிக்கலானோம். அவ்வாலோசனையின் பயனாகத் திருவல்லிக்கேணியில் சென்னை ஜன சங்கம் என்று ஒரு தேசாபிமானச் சங்கத்தை ஸ்தாபித்தோம். பின்னர், நான் தூத்துக்குடிக்குத் திரும்பினேன். தேச அரசாட்சியை மீட்டும் வேலைகளில் ஈடுபட்டேன்.
(வி.ஒ.சி கண்ட பாரதியில் இருந்து ஒரு பகுதி)

நன்றி: வி.ஓ.சி. கண்ட பாரதி


புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்,
உண்மைகள் வேதங்கள் என்போம் – பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினினைத் தாவும் குரங்கும் – வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே – தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்
நதியி னுள்ளேமுழு கிப்போய் – அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த – திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் – ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் – அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் – அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.


‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

7 05 2010

பாரதி பெண்கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பரப்புரை செய்தது, மகளிருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோருவதை எதிர்ப்பவர்களைப்போல தன் குலத்துப் பெண்டிரை மனதில் வைத்துதான் என்று எண்ணுகுகிறீர்களா?

இது பாரதி குறித்தான என் எண்ணமில்லை. பாரதி அப்படித்தான் இருந்து இருக்கிறார், என்பதை அவர் எழுத்து உதாரணங்களோடு நீரூபித்து இருக்கிறேன.

பாரதியின் கட்டுரைகளை பார்த்தால் அது தமிழ் கட்டுரைதானா எனும்  அளவிற்கு சமஸ்கிருதம் நிறைந்து இருக்கிறது. கவிதைகளிலும் சமஸ்கிருதம் காணப்படுகிறது. இது காலத்துக்கேற்ற எழுத்து என்று ஏற்பதா அல்லது தன் காலத்தை தாண்டி புரட்சி செய்த கவிஞனின் தவறுகள் என்று ஏற்பதா?

பாரதிக்கு தமிழ் மீது விரோதம் இல்லை. ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார். சமஸ்கிருத கலப்போடு எழுதுவது, தமிழை மேம்படுத்தும் என்றும் உறுதியாக நம்பினார்.

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?

பாரதி, பாரதிய ஜனதாவின் முன்னோடி என்று எழுதிய உங்கள் நூலுக்கு மறுப்பு புத்தகங்கள் வந்திருக்கிறதே. அவைகள் உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

இல்லை. அந்த புத்தகங்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அவை என் கவனத்தை கவரவில்லை.

என் புத்தகம் பாரதியை ஆதரிக்கிற முற்போக்காளர்களை நோக்கிதான். என் புத்தகத்தால் பாதிக்கப்பட்ட தன்னை முற்போக்காளர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற பாரதி ஆதரவாளர்களில் சிலர் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் அவை.

தமிழர் தொலைநோக்கு இதழுக்காக எழுதிய பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரிக்க இருக்கிறேன்.

தொடர்புடையவைகள்:

பாரதியின் நேர்மை!

`பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ – Via English

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

`பாரதி’ ய ஜனதா பார்ட்டி:  முன்னுரை

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்

‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி?

பாரதியின் நேர்மை!

7 05 2010

ஜோ அமலன் ராயன் பெர்ணாண்டோ (07:45:36) :

“ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார்”
’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணேம்
இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை’ என்றும்,

‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே,அதை தொழுது படித்திட பாப்பா’என்றும்

எழுதிய சுப்பிரமணிய பாரதி, எப்படி உங்கள் கண்ணுக்கு வேறு மாதிரி தெரிகிறார்?

விளக்கினால் நல்லது.

பி.கு: நான் பாரதி காதலன் அல்ல. எனக்கு எவரும் ஹீரோ அல்ல.

www. thirumullaivaayil.blogspot.com

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?

கால்டுவெல் தவிர்த்து தமிழ் தனித்தன்மையானது என்று பேசாத ஒருகாலத்தில் பாரதி வாழ்ந்தார். கால்டுவெல்லின் தமிழ் குறித்தான பேச்சு மிசனெறியில் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதாக பரப்பட்டு கால்டுவெல்லின் கூற்றுகள் புறம் தள்ளப்பட்ட காலத்தில் பாரதி வாழ்ந்ததால் அவ்வாறு சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு, பாவாணரின் ஆய்வுகளுக்கு பிறகே தமிழுக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை, சமஸ்கிரதம் வந்து கலந்தது என்பதை பலரும் ஒப்புக் கொண்டனர். எனவே பாரதியார் வாழ்ந்த காலத்தின் பொது புத்தியின் படித்தான் பாரதியும் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவே அதைக் குற்றமாக என்னால் பார்க்க இயலவில்லை.

பாரதி ஏன் விதவை மறுமணம் குறித்து பேசவில்லை, குழந்தை திருமணம் பற்றிப் பேசவில்லை என்றெல்லாம் கூட உங்களால் குற்றம் சொல்ல முடியும். ஆனால் அவ்வாறு சொல்லுவதற்கு அவை எதிர்கப்பட்ட காலத்தில் ஒருவர் அதுபற்றி பேசாமல் இருந்தால் மட்டுமே குற்றம். விழிப்புணர்வு அற்ற காலத்தையும் இன்றைய காலத்தையும் அன்றைக்கு வாழ்ந்தவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவனெல்லாம் அறிவாளி இல்லை ஏனெனில் அவர்களில் யாரும் சந்திரமண்டலத்திற்கு செல்லும் தொழில் நுட்ப அறிவு பெற்றவர்கள் இல்லை என்று வாதிடுவது போல் இருக்கிறது உங்கள் கூற்று.


7 05 2010

அத்திவெட்டி ஜோதிபாரதி

கோவியின் கூற்றை வழிமொழிகிறேன்!

பாரதியின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து வைக்கலாம்.

அவர் ஏன் அதை சொல்லவில்லை, எழுதவில்லை, பாடவில்லை என்று கேட்பது தேவையில்லை.

ஈழத்தில் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்து இனப்படுகொலையில் உக்கிரத்தை சிங்களன் காட்டியபோது, தமிழ் இலக்கிய உலகம் யாருக்கு பூப்பறித்துக் கொடுத்து புகழ்ந்துரைத்தது என்பதை நாம் நம் கண் கூடாகப் பார்த்தாயிற்று. அது சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி வெளியிட்டு பாராட்டு விழா நடாத்திக் கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளன், முதல் நிலை எழுத்தாளன் என்று இப்போது சொல்லிகொள்பவன் யாரும் இது பற்றி எழுதியதாக நினைவில்லை.

ஆனால் அன்று பாரதி பிஜியிலும், தென்னாப்பிரிக்காவிலும் வெதும்பிய தமிழரை எண்ணி வேதனைப் பட்டிருக்கிறான். அவன் கிந்து மாதர் தம் அப்படின்னு சொல்லி இருக்கானேன்னு கேக்கலாம். அப்போதைய பொது புத்தி அதுவாக இருந்திருக்கும். மற்றபடி எனக்கும் பாரதியிடம் நிறைய விமர்சனங்கள் உண்டு.

ஆனால் பாரதியை பற்றி விமர்சிக்க அவர்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் படைப்புகளையும் நாட வேண்டியுள்ளது.

அதற்கு அப்போதைய பொது புத்தி, பகுத்தறிவு நிலை அனைத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

ப.திருமாவேலன்


சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

மிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி! எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17  ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேகரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படு வார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

”மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்” என்று இவர் சொன்னபோது, ”கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?” என்று கேட்டார் காந்தி. ”அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி” என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதி யைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. ”இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின் றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில் எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 க்கும் குறைவானவர்களே!

பாரதி  “யாம் அறிந்த புலவர்களிலே வள்ளுவனைப் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே
பிறந்ததில்லை” என்று பாடினான். ஆனால் பாரதி இவர்களையும் விஞ்சியவன். இவர்களைவிட பாரதி தமிழ்மொழி மீதும் தமிழ்மக்கள் மீதும் ஒரு தாக்கத்தை தன் எளிய கவிதைகள்  மூலம் ஏற்படுத்தியவன். அதனால்தான் அவர் மக்கள் கவி எனப் போற்றப்படுகிறான். பாரதியின் தன்னம்பிக்கை போற்றத்தக்கது. அதனால்தான் துணிந்து பாடினான்

“புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்ததன்றே!
சுவைபுதிது; பொருள் புதிது; வளம் புதிது;
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை’

ஏனைய புலவர்களால் இப்படிப் பாடமுடியவில்லை.


மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 129வது பிறந்த நாள்!

டிசெம்பர் 11.2011

டிசம்பர் 11.1882 ஆம் ஆண்டு பிறந்த பாரதியார் தனது 39 வயதில் செப்ரம்பர் 11.1921 ஆம் ஆண்டு இறந்தார். பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியெடா என்னுமளவுக்கு அவர் தமிழ்க் கவிதா உலகின் யுக புருஷனாகத் திகழ்கிறார்.

தமிழ் மீது கொண்ட பற்றால் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடினார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அவர் பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தார்.

தமிழக் கவிதை நடை, உள்ளுடன், பாடு பொருள் ஆகியவற்றில் காலத்தால் அழியாத மாற்றத்தைக் கொண்டு வந்தவர். அவரை அடியொற்றுவது இன்றைய மரபாகிவிட்டது. தமிழ்க் கவிதையிலும் உரை நடையிலும், தமிழிசையின் ராகம் தாளத்திலும் அவர் அசாத்திய திறமை பெற்றவர்.

தமிழ், தமிழர் நலன், மனிதகுல விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு ஆகியன பற்றிக் கவிதையும் கட்டுரையும் எழுதினார். இவர் கவித் திறமைக்குப் பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. கவிஞர், எழுத்தாளர், இசை அறிஞர், சிந்தனையாளர், பத்திரிகையாசிரியர், சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலை வீரர் என்ற பல பரிமாணங்களில் அவரைப் பார்க்கலாம்.

அவர் மிகச் சிறந்த தத்துவஞானி. நானும் ஒரு கனவோ, இந்தக் காலமும் பொய்தானோ என்ற பாரதியின் வரி பிரபஞ்சம் பற்றிய சர்ச்சைக்கும் காலம் என்றால் என்னவென்ற இயற்பியல் கேள்விக்கும் அடிகோலுகின்றன. தத்துவ சிந்தனை கொண்ட இந்த மாமேதை உலகின் தலை சிறந்த கவிஞர்களோடு வைக்கப்பட வேண்டியவர்.

விடுதலைப்பெற்று விட்டதாகப் பாடிய தீர்க்கதரிசி விடுதலையைக் காண முன்பே அமரராகி விட்டார். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த முதலாவது தமிழ் கவிஞர் பாரதிதான். பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை தீருதல் முயற் கொம்பே என்ற அவருடைய அமர வாக்கியம் அவரை இனங் காட்ட உதவுகிறது.

பாரதி பிறந்த எட்டயபுரத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. இதனுள் பாரதியின் ஏழு அடி உயர உருவச் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சுவடிகளும் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மெல்லச் சாகும் என்று சொன்ன பாரதி தமிழுக்காக வாழ்ந்து அதை வாழ வைக்கிறார்.

நன்றி – ஈழம் பிரஸ்


Thursday, September 11, 2008

மாபாவலர் பாரதியார்

இன்று 11.9.2008ஆம் நாள் மாபாவலர் பாரதியாரின் 126ஆம் ஆண்டு நினைவுநாள். அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

**********************************

கடந்த 126 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஓப்புயர்வற்ற பாவலரை.. சிந்தனையாளரை.. சீர்திருத்தவாளரை.. புரட்சியாளரைச் சுப்பிரமணிய பாரதி என்னும் பெயரில் தமிழ்நாடு இந்த உலகிற்கே உவந்து அளித்தது. 1882 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11 ஆம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தார் பாரதியார்.

அப்போது, அந்தக் குழந்தை பின்னாளில் உலகமே போற்றும் மாபாவலனாக (மகாகவியாக) உருவாகும் என பெற்றாரும் உற்றாரும் மற்றாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், 39 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த அந்தத் தமிழ்ப்பாவலர் தம்முடையப் பாட்டுத் திறத்தாலே தமிழர் உள்ளமெல்லாம் நாட்டு உணர்வையும் தமிழ் உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்துச் சென்றுவிட்டார்.

அந்தப் பாரதி “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று ஒரு கருத்தைச் சொன்னதாக பலரும் பேசி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும்,

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே” என்றும்,

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”

என்றெல்லாம் தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் பாரதி பாடியிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பாரதியாரே தம்முடைய ஒரு பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று பாடியிருக்கிறார் என்கின்ற கூற்று உண்மையா?

தமிழ் சேமமுற வேண்டும் தமிழ் செழித்திட வேண்டும் தமிழ் உலகமெலாம் பரவ வேண்டும் என்றெல்லாம் தமிழுக்கு உரமூட்டி தமிழருக்கு உணர்வூட்டிய பாரதி “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற நம்பிக்கையின்மையை கருத்தைச் சொல்லியிருப்பாரா?

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற முடிவினை அறிவிக்கும் அளவுக்குப் பாரதியாருக்கு என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்? அல்லது தமிழுக்குத்தான் என்ன வகையில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்?

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று பாரதி சொன்னதாகச் சொல்லப்படும் அந்த வரிகள் வருகின்ற பாடல் இதுதான்.

“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு – பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் – முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் – என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் – இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.”

புதிய எழுச்சி.. புதிய சாதனை.. புதிய வரலாறு படைக்க வேண்டித் தன் மக்களை; தமிழரைப் பார்த்து தமிழ்த்தாயே கேட்பதாக அமைந்த இந்தப் பாடலில்தான் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்ற வரி வருகின்றது.

தமிழ் இறந்துபோகும்.. தமிழ் அழிந்துபோகும்.. தமிழ் செத்துப்போகும் என்ற பொருளில் பாரதியார் எழுதவே இல்லை. மாறாக, சில பேதைகள்.. சில அறிவிலிகள்.. சில மூடர்கள் “தமிழ் இனிச் சாகும்” என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் பாரதி சொல்லியிருக்கிறார்.

தமிழ் வழக்கிழந்து; வாழ்விழந்து போகும் என்று சொல்லும் சிலரைப் பார்த்து பாரதி ‘பேதைகள்’ என்று மிகக் கடுமையாக உரைக்கின்றாரே தவிர, பாரதி ஒருபோதும் தமிழுக்கு எதிராக நம்பிக்கையின்மையை விதைக்கவில்லை என்பது தெளிவு.

“தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு. எட்டுதிக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று” என்று மிக உரத்தத் தொனியில் தமிழருக்கெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் மாபாவலன் பாரதி.


இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

இலக்குவனார் திருவள்ளுவன்      14 செப்தம்பர் 2014

இம்மூவரும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை. பாரதியார் புத்துலகச் சிற்பியாக விளங்கினார் ‘தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடிபாப்பா’ என்றும் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்றும் ‘பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடேபோற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே என்றும் ‘சேதமில்லாத இந்துத்தானம் இதைத் தெய்வமென்று கும்பிடடிபாப்பா’ என்றும் பாடி நம்மக்களிடத்தில் நாட்டுப் பற்றைத் தோன்றுவித்தார்.

அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை இழிவாகக் கருதி அதனைப் புறக்கணித்திருந்த காலத்தில் ஆரியத்துக்கு நிகரானது தமிழ் என்று சொல்லி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று அம்மொழியின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டி, “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று அறிவுறுத்தியதோடு “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று தமிழ் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் வேதியராயினும் ஒன்றே. வேறுகுலத் தினராயினும் ஒன்றே” என்று சாதியை வெறுத்துப் பாடியதோடு, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பெண்ணடிமையை ஒழிக்க முழங்கினார். ஆனால் இவர் வேதவழி நின்று சமரச மனப்பான்மையுடன் பராசக்தியை முழுமுதல் தெய்வமாக வழிபட்டு வந்தார். இவர் பொருளாதார விடுதலைக்கும், அரசியல் விடுதலைக்கும் சமுதாயத்தில் காணப்படும் உயர்வு தாழ்வு ஒழிப்புக்கும், பெண்ணடிமைத் தீர்வுக்கும் அரிய கருத்துகளைத் தம் பாடல்களில் வெளியிட்டார்.

தமது சிறு கதையில் விதவை மறுமணத்தையும் ஆதரித்தார். நல்ல காதல் மணத்தையும் விரும்பினார். இவ்வாறு சீர்திருத்தக் கருத்துக்களைச் செப்பிய, தம்பாடல்களில் முழக்கிய புத்துலகச் சிற்பி நம்பாரதியாராவார். இச்செப்டம்பர் திங்களிற்றான் இவர் மண்ணுலக வாழ்வை விட்டு மறைந்தார்.இதில் உண்மை இல்லாமல் இல்லை. சமயத்தின் பேராலும் சடங்குகளின் பெயராலும் மூடக் கொள்கைகளின் பெயராலும் பொருளாதார அழிவு ஏற்படுவது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையன்றோ? இவரது சீர்திருத்தச் சொற்பொழிவுகளால் தமிழகம் பெருநன்மை அடைந்திருக்கிறது. தமக்கு ஏற்றது எது என்று சிந்தித்து முடிவு கட்டியதை அஞ்சாது வெளியிடும் பெருவீரர் பெரியார் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. அவர் கொள்கைக்கு ஓரளவு மாறுபட்டிருந்தாலும் நாம் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? முடியாது. இவர் பிறந்த நாள் இச்செப்டம்பரில் வருகிறது.  வெவ்வேறு நிலையில் தொண்டு செய்த, செய்து வருகிற இந்நாட்டு மும்மணிகளான பாரதியாரும், பெரியாரும், அறிஞரும் நம்மதிப்புக்கு என்றும் உரியவர்கள். இவர்களது தொண்டை இம்மாதத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து பாராட்டுவோம். பாரதியார் திருப்பெயர் நிலைத்திருப்பதாக! பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீடு வாழி!

குறள்நெறி

  பெரியார் பள்ளியில் மாணவராக இருந்து படித்து அவருடன் சீர்திருத்தங்களைத் தமிழகத்தில் பரப்பிச் சில காரணங்களால் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் பெருநாவலராய், அரசியலைக் கற்றுத் துறை போகிய பேரறிஞராய், இன்று தமிழ் காக்கும் பெருவீரராய்த் திகழ்பவர் அறிஞர் அண்ணா என்றால் மிகையாகாது. இவர் சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் சட்டசபையில் எதிர்க்கட்சியை அமைக்கும் பெருமையையும் செல்வாக்கையும் பெற்றுவிட்டவர். இந்நாட்டுக் கற்ற இளைஞர்கள் பல்லோரின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவர். இவர் நாவசைந்தால் நாடசையும் அளவு சிறப்புப் பெற்றுள்ளவர். இவரது சொற்பொழிவுகளினால் தமிழகம் இல்லை தென்னகமே பெரும்பயனை அடைந்து வருகிறது. இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாதே. இன்று இந்தி வந்து புகுவதை எதிர்த்துப் போராடுகிறார். இந்தி வந்தால் தமிழ் சாகும் என்று உணர்ந்தவர்களும் பற்பல காரணங்களால் வாளா இருக்கின்றனர். இந்தி நுழைந்தால் தமிழிளைஞர் வாழ்வு நலியும் என்று தெரிந்தவர்களும் பற்பல காரணங்களால் செயலற்றுக் கிடக்கிறார்கள். ஆங்கிலம் வந்து ஆட்சிமொழியாக இருந்த போது தமிழ் மொழி கரந்துறை வாழ்வை அடைந்திருந்ததை என்னைப் போன்ற வயதானவர்கள் நன்கறிவார்கள்.

இப்போதுதான் தமிழ் வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் ஓரளவு ஆட்சி மொழியாயிருக்கிறது. இன்னும் வழக்கு மன்றங்களிலும் கல்லூரிகளிலும் நடைமுறைக்குத் தமிழ் வருதல் வேண்டும். இதற்குள் இந்தி, தேர்வு மொழியாகவும் அனைத்திந்திய இணைப்பு மொழியாகவும் வந்து விட்டால் தமிழிளைஞர் வாழ்வும் வளமும் என்னாகும்? பாழ்படாமல் இருக்குமா? சிந்தித்துப் பாருங்கள். ஆதலால், அறிஞர் அண்ணா இந்தியை நுழைவதைத் தடுக்கிறாரேயன்றி இந்தியை வெறுக்கிறார் இல்லை என்றறிக. ஒரு கடவுட்பற்றுள்ள அறிஞர் அண்ணா மூடக்கொள்கைகளை வெறுப்பதும், அதை ஒழிக்கப்பாடுபடுவதும் தவறாகா. இத்தகைய செம்மல் பிறந்த நாள் விழா செப்டம்பர் 15இல் வரவிருக்கிறது.

சுப்பிரமணிய பாரதியார் பாடல்களில் வெளியிட்ட அத்தனைச் சீர்திருத்தக் கருத்துகளையும் நடைமுறையில் கொண்டு வரத் தூண்டிப் பன்னெடுங்காலமாகத் தொண்டு செய்து வருபவர் – ஏன்? இந்தத் தள்ளாத வயதிலும் தொண்டு புரிந்து வருகிறவர் ஈ.வே. இரா. பெரியார் ஒருவரே ஆவார். பட்டிதொட்டிகளிலும் இவர் நுழைந்து மூடக் கொள்கைகளைச் சாடியொழித்தார். மக்கள் உள்ளத்தில் சிந்தனையைத் தூண்டினார். சமுதாயத்தில் காணப்படும் குறைகளைக் கண்டுகொதித்து நீண்ட நேரச் சொற்பொழிவுகளைப் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறார். இவர் தொண்டு வீணாகவில்லை. பயனற்றுப் போகவில்லை. படித்த மக்கள் இல்லை. பாமர மக்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். கடவுள் கொள்கையைக் கைவிட வில்லையெனினும் கணக்கற்ற மூடக் கொள்கைகளக் கைவிட்டுவிட்டார்கள். அறிஞர்களும், கவிஞர்களும் சீர்திருத்தங்களைச் சொல்லளவில் எழுத்தளவில் சொல்லி நின்றார்கள்.

பெரியாரோ சீர்திருத்தங்களைச் செயலளவில் காட்டிவிட்டார்; சமயம் சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பது பெரியாரது ஆழ்ந்த நம்பிக்கை.

தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் காக்கும் தனிவீரராகத் திகழ்பவர்.


பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே”

by Subramaniya Bharathiyaar (11 December 1882-11 September 1921)

Padlock unbolting key held by the hand
Prudence key to win heart and mind

Melody key for song to become hit
Woman holds key to blissful home

Book is dusted off with hand
Mind is cleansed off being honest

Hunt with bow hitting prey
Flirt with words hitting fortress of love

Breath be held with mind
Body protected only with deed

Mouth is rendering to scoff off rice
Mother is reason the soul being spirited

“பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே”

பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,

வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,

சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே”

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply