18-02-2017
தமிழ்நாட்டில் எல்லோரும் ஊழல் செய்கிறார்கள்
திரு அக்னி
எம்ஜிஆர் மறைந்த போதும் தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை இருந்தது. இப்போது ஜெயலலிதா மறைந்த பின்னரும்
உட்கட்சி மோதலால் ஒரு அசாதாரண சூழ்நிலை இருந்தது. ஆனால் நேற்று நடந்த வாக்கெடுப்பின் மூலம் ஆளும் அதிமுக தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபித்துள்ளது. சபை நடவடிக்கைகளில் அவைத் தலைவர் தீர்ப்பே இறுதியானது.
திமுக இரகசிய வாக்கெடுப்புக் கேட்டது நியாயம். ஆனால் சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க மறுத்து கலகம் செய்தது அநாகரிகம்.
திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் குழப்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தது கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றம், கர்நாடக (பங்களூர் ) சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய பின்னர் பார்ப்பன ஊடகங்கள் ஜெயலலிதாவை விட்டுவிட்டு சசிகலாவை மட்டும் சாடுவதில் கடுமையாக ஈடுபட்டன. “சசி சாம்ராஜ்சியம் சரிந்தது” என யூனியர் ஆனந்தவிகடன் கட்டுரை எழுதி தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டது.
தமிழ்நாட்டில் எல்லோரும் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்து பிடிபட்டவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். பிடிபடாதவர்கள் உத்தமர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அசல் தமிழன் முதலமைச்சராக வந்திருக்கிறார். அதனை நாம் வரவேற்க வேண்டும். புதிய தேர்தல் அவசியமற்றது. 5 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்ய மக்கள் ஆணை கொடுத்த அதிமுக க்கு சட்டசபையில் பெரும்பான்மை இருக்கும் மட்டும் அடுத்த 4 ஆண்டுகள் ஆள உரிமை உண்டு. அப்படியில்லை என்று வாதாடுபவர்கள் சனநாயக விரோதிகள்.
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவர் உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீட்டுக்குப் போகலாம் என்றிருந்த வேளையில் மருத்துவர்கள் எதிர்பார்க்காத மாரடைப்பால் ஜெயலலிதா இறந்தார். இதையே இலண்டர் மருத்துவர் சொல்கிறார். அதனையே சசிகலா சொன்னார். தமிழக பார்ப்பன ஊடகங்கள் ஜெயலலிதாவுக்கு சசிகலா நஞ்சு கொடுத்து கொன்றுவிட்டார், அவரது கால் ஒன்றை மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள் என்று வாய்க்கு வந்தபடி விமரிசனம் செய்தன. தமிழர்களால் நடத்தப்படுகிற சில ஊடகங்களும் இதில் சேர்ந்து கொண்டன.
பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்திருந்த அதிமுக ஆட்சியைப் பிடிக்க நினைத்ததில் தவறில்லை. பெரும்பான்மை இல்லாதபோது ஆட்சியைப் பிடிக்க நினைப்பதுதான் தவறு.
தமிழ்நாட்டு ஊடகங்கள் ஒரு தமிழச்சி ஆட்சியைப் பிடிக்க விடக் கூடாது என்பதில் கொலைவெறியோடு நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நக்கீரன்
வணக்கம்
மெரினாவில் கூடிய மக்களை தடியடி நடத்தி குண்டுகள் வீசி கலைக்கச் சொல்லி கட்டளை போட்டது யார்? அதனால்தான்
வன்முறை வெடித்தது.
காவல்துறை இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டது முழுத்தமிழினத்துக்கும் தலைக் குனிவு.
ஜல்லிக்கட்டு தமிழ் இல்லையே? பின் எப்படி அது தமிழர் பண்பாட்டின் குறியீடாகும்?
சிந்துவெளி எருதின் படத்துக்கும் ஜல்லிக் கட்டுக்கும் என்ன தொடர்பு?
அண்மையில் ஜல்லிக்கட்டின் போது இரண்டு பேர் இறந்து போனார்கள். பருக்குக் காயம். இது தேவையா?
ஜல்லிக்கட்டைப் பார்க்கும் போது அது விலங்கு வதையாகவே எனக்குப் படுகிறது.
வாய் பேசாத ஒருவிலங்கை பலபேர் துரத்திப் பிடித்து அதன் வாலைக் கடித்து, கொம்பை முறிப்பது வீரமா?
தமிழர் பண்பாடு எல்லாவற்றையும் நாம் பேண வேண்டுமா?
பரத்தையர் உறவு, உடன்கட்டை ஏறுதல் ஒரு காலத்தில் தமிழர் பண்பாடாக இருந்தது. ஆனால் இப்போது
அதனைப் போற்றுகிறோமா?
உடன்கட்டை ஏறுதலை வெள்ளைக்காரன் சட்டம் கொண்டுவந்து தடை செய்து விட்டான்.
அந்தத் தடையை உடைத்து போராட யாராவது தயாரா?
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு ஒரேயொரு மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது. பின் எப்படி அது ஒட்டுமொத்த தமிழர்களது பண்பாடாக இருக்க முடியும்.
இன்று மனித உரிமைகள் மட்டுமல்ல ஏனைய விலங்குகளது உரிமைகளும் போற்றப்பட்டு வருகின்றன.
சர்க்கஸ்யில் யானைகளை பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாக எனக்குப் படவில்லை. வாய் பேசாத ஒரு விலங்கை வதை செய்யும் காட்டுமிராண்டு விளையாட்டாகவே
எனக்குப் படுகிறது. இது தொடர்பாக கீற்றில் நந்தன் எழுதிய கட்டுரையை பார்க்கவும். (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14)
நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.