சோதிட மூடநம்பிக்கை

சோதிட மூடநம்பிக்கை

சோதிடம் அறியாமையா? பித்தலாட்டமா? பிழைக்கும் வழியா? கிரகங்களால் பாதிப்பா?

உண்மையில் ஞாயிறு பெயர்ச்சி, வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி எனக் கூறப்படுவவை வெறும் தோற்ற மயக்கமே.  புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஞாயிறையும் ஒரு நீள்வட்டப் பாதையில் (Ecliptic)  சுற்றி வருகிறது. ஆனால் புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion)  ஏற்படுகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். ஞாயிறின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகரசங்கராந்தி) வானியல் அடிப்படையில் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்ளலாம். 

சூரியனை, கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆற்றல் மிக்க சக்தியினால் கிரகங்கள் அனைத்தும் அதன் கட்டுப் பாட்டில் கொஞ்சம்கூட விலகாமல் சுற்றி வருகின்றன. எனவே இதை சூரிய குடும்பம் என்பர்!

சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னர் 1000 சூரிய னுக்குச் சமமான தூசியும் வாயும் கொண்ட ஒரு மேகத் திரள் உள் அழுத்தத்தால் அண்டத்தில் வெடித்துச் சிதறியது. அதில் ஒரு துண்டு மேலும் வெடித்து சிதைந்து சூரிய குடும்பமாகத் தோன்றியிருக்கக் கூடுமென்று ஆய்வுகள் கூறுகிறது.

கிரகங்கள் அனைத்தையும் அணைத்து அணி வகுத்து கட்டுப்படுத்திச் செல்லும் ஆற்றல் மிக்க தலை வனாக சூரியன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சூரியனின் பேராற்றலே காரணம்! ஈர்ப்பு விசை!கிரகங்களுக்கும் துணைக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு!

அவைகளின் ஈர்ப்பு விசை அளவு ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபடும். பூமிக்கு மிக நெருக்கமாக துணைக் கிரகம் சந்திரன் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை பூமியில் சில பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவைகளின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது!

பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்!

அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும்.எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை!

பூமியும் ஒரு கிரகம்தான்! அதுவும் துடிப்பான உயிர்க் கிரகம். மற்றக் கிரகங்களில் கடுங்குளிர், கடும் வெப்பம், கரியமில வாயு என்றுதான் இருக்கிறது.

அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!

கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! என்று தில்லி பல்கலைக் கழக விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற் படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல!

பூமியில் ஒரு கிரகம்! பூமி ஒரு உயிர்க்கிரகம். இந்த உயிர்க்கிரகத்தால் மற்றக் கிரகங்களுக்கு எப்போதாவது எந்த காலத்திலாவது தீங்கு ஏற்பட்டதா!

உயிர்க்கிரகமான பூமியால் மற்றக் கிரகங்களுக்கு தீங்கேதும் ஏற்படாத போது வறண்டு கிடக்கும் மற்றக் கோள்களால் பூமி கிரகத்திற்கும் மக்களுக்கும் நன்மை தீமை ஏற்படுமென்று கூறுவது அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

பூமியின் இன்ன ஆற்றல் அல்லது சக்தி மற்றக் கிரகங்களை இப்படியெல்லாம் பாதிக்கிறதென்றோ அல்லது மற்றக் கிரகங்களின் இன்ன சக்தி பூமியை இப்படியெல்லாம் பாதிக்கிறதென்றோ சொல்லட்டும்!

எனவே சோதிடம் என்பது இல்லாத ஒன்றைச் சொல்லி பிழைப்பு நடத்தப்படுகிறது என்பதை சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் உணர வேண்டும்!

சில அதிர்வுகள் பூமியில் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வாதிடு வோரும் உண்டு! அதிர்வு என்பது இரண்டு பொருட்கள் மோதினாலோ அல்லது உயராய்வதாலோ ஏற்படும். பூமியுடன் எந்தக் கிரகமும் மோதாதபோது அதிர்வு ஏற்பட வாய்ப்பேயில்லை!பூமி வினாடிக்கு சுமார் 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

அதனால்கூட பூமியில் எந்த அதிர்வும் ஏற்பட வதில்லையே! எனவே அதிர்வு பூமியில் மாற்றத்தை உண்டாக்குமென்பது அர்த்தமற்றது.

குறுங்கோள்கள் சூரியனுடைய கட்டுப்பாட்டை மீறி சில குறுங் கோள்கள் விண்கற்கள் விண் வெளியில் சுற்றி வருகிறது. இவைகள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வரும்போது பூமியைத் தாக்கக் கூடும். சுமார் 26 கோடி ஆண்டிற்கு முன் ஒரு முறை குறுங்கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் டைனோசர் விலங்கினம் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆண்டிற்கு 150 டன் விண்கற்கள் பூமியில் விழுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நமது சோதிடர்கள் குறுங்கோள் பற்றிக் கூறவில்லை.

பூமிக்கிரகம் நீக்கி மற்றக் கிரகங்களில் ஐந்தை மட்டுமே கணக்கிலெடுத்து மனித வாழ்வை நிர்ணயிப்பதாகக் கூறுகிறார்கள்.

சோதிடர்களின் கூற்று எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல!

இத்தனை அறிவியல் ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுக்களையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் கிரகங்களால் அங்கிருந்து வரும் காந்த விசைகளினால் மனித வாழ்வில் நன்மை தீமை நடக்குமென்று நம்பிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு சொல்லிக் கொள்வது என்ன வென்றால்,

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறது!

இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே பூமியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது நீங்கள் நம்புவது போல வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

காற்று மண்டலம் ஒரு வடிகட்டி! அதை மீறி நல்ல சக்தியோ தீய சக்தியோ பூமியை வந்தடைய முடியாது என்பதை சோதிட அன்பர்கள் உணர வேண்டும்!- தி. பொன்னுசாமி (தரவு: சோதிட மறுப்பும் வானவியல். SOURCE: viduthalai.com மே 28 குருப்பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு எப்படி பலன்கள் மாறுகின்றன?)

இந்தியச் செய்திகள் | செய்திகள் Saturday, May 25, 2013 

மனிதர்க்கு வாழ்க்கையை சாதகமாகவும், பாதகமாகவும் உருவாக்கி வழிநடத்துபவர்கள் நவக்கிரகங்கள் என்று ஜாதக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் குரு என அழைக்கப் படும் வியாழ பகவான் எதிர்வரும் மே 28ம் திகதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

ஒவ்வொருவரின் ஜாதக நிலவரப்படி பன்னிரெண்டு ராசிக்கு உரியவர்களின் அவரவர் வீடுகளில் குருபகவான் எப்படி இடம்பெயர்ந்து அவர்களூக்கு எப்படியான பலன்களைத் தரப்போகிறார் எனப்பார்ப்போம். அதற்கு முன் குருவைப் பற்றிப் பார்ப்போம் :

குரு பார்த்தால் கோடி நன்மை என்று குருபகவானைத் துதி செய்வர். மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மாதாவின் வயிற்றில் பிறந்து, பிதாவால் வளர்ந்து, குருவினால் ஆறறிவை விருத்தி செய்து, தெய்வத்தின் வழி காட்டலில் நெறிமுறை தவறாது வாழ வழி காட்டுவது குருவேயாகும். எல்லோர்க்கும் குரு இருப்பார். சிலருக்கு தாய் குருவாகவும், சிலருக்கு தந்தை குருவாகவும், சிலருக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் குருவாகவும், சிலருக்கு சகோதரர் குருவாகவும், சிலருக்கு மதத்தலைவர்கள் குருவாகவும், சிலருக்கு வயதில் மூத்தவர்கள் குருவாகவும், அமைந்து விடுகின்றனர். ஆனாலும் எல்லாம் அறிந்தவர்,எங்கும் நிறைந்தவர் உள்ளேயும், வெளியேயும் கலந்து நிற்பவர் குருவுக்கு குருவானவர். அவர் ஆலமர் கடவுள் என்றும் குருந்த மரநிழலில் தெற்கு நோக்கி வீற்றிருந்து சின்முத்திரை காட்டி அருளி நான்மறைகளை சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கு போதித்தருளியவர்.

மெளனமான விளக்கத்தினால் பரப்பிரம்ம தத்துவத்தை பிரதிபலித்துக் கொண்டு, இந்த யுகங்களின் வடிவினராக, பிரம்மநிஷ்டர்கள், ரிஷிகள் சீடர்களாகச் சூழ்ந்திருக்க ஆனந்தரூபியாக, தன் ஆன்மாவினூடாக ரசிக்கக்கூடியவராக புன்னகை தவழும் தஷிணாமூர்த்தியைப் போற்றுகிறேன் என்பதாகும்.

வியாழ பகவான் பொருட் செல்வம், குழந்தைச் செல்வம் ஆகியவற்றை மனிதர்க்கு கொடுப்பதற்கு காரணமானவர். அதனால்தான் தனகாரகன், என்றும் புத்திர காரகன் என்றும் வியாழகுருவை அழைப்பர். அவர் பெயர்ச்சி அடைகிற போது அவர் இருக்கும் வீட்டைப் பொறுத்தே நன்மைகள் தீமைகள் பன்னிரண்டு ராசிக்கும் நடக்கின்றன.

எதிர்வரும் மே 28ம் திகதிக்கு பின்னர் மேஷராசிக்கு 3ம் வீட்டிலும், இடப ராசிக்கு 2ம் வீட்டிலும், மிதுனராசிக்கு 1ம் வீட்டிலும் கடகராசிக்கு 12ம் வீட்டிலும், சிம்மராசிக்கு 11ம் வீட்டிலும் கன்னிராசிக்கு 10ம் வீட்டிலும் துலா ராசிக்கு 9ம் வீட்டிலும், விருச்சிகராசிக்கு 8ம்வீட்டிலும், தனுசுராசிக்கு 7ம் வீட்டிலும் மகரராசிக்கு 6ம் வீட்டிலும் கும்ப ராசிக்கு 5ம் வீட்டிலும், மினராசிக்கு 4ம் வீட்டிலும் பெயர்ச்சி அடைந்து குரு பகவான் வீற்றிருக்கப் போகிறார்.

மே. 28 குரு இடப்பெயர்சியினால் உங்கள் ராசிகளுக்குரிய பலன்கள் எவ்வாறு மாற்றமடையப் போகின்றன என இங்கு பாருங்கள் :


யோனி பொருத்தம் என்றால் என்ன?

ஜாதகப் பொருத்தத்தில் யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன? சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள். – பொருத்தமில்லையே!

யோனி என்றால் பெண்குறி. திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது என்கின்றார்கள்.

10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.

தேர்வுகளில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியவை என்று சில கேள்விகள் இருக்கும், அதைப்போல சில சாதிகளுக்கு சில கல்யாணப் பொருத்தங்கள் கட்டாயம்.

பார்ப்பனர்களுக்கு தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு கணப் பொருத்தம், வைசியர்களுக்கு ராசிப் பொருத்தம், சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்.

அசுவனியும் சதயமும்              – குதிரை யோனி,
பரணி,ரேவதி                           – யானை யோனி,
பூசம்,கார்த்திகை                     – ஆடு யோனி,
ரோகினி,மிருகசீருடம்           – சர்ப்பம்(பாம்பு ) யோனி,
மூலம், திருவாதிரை                – நாய் யோனி,
இப்படியே பிரித்திருக்கின்றார்கள்.

இதிலும் மூலமும் திருவாதிரையும் நாய் யோனி என்றால் முதலில் வரும் மூலம் ஆண் நாய் எனக் கொள்க, இரண்டாவதாக வரும் திருவாதிரை பெண் நாய் எனக் கொள்க. இப்படி இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

சரி,இதோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை- எதிரி மிருகம் – நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள்.

அசுவனிக்கும் சதயத்திற்கும் எருமை பகை.
அசுவனி, சதயத்திற்கு – சுவாதியும் கஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. அசுவனி,சதயம் சுவாதியும் கஸ்தம் என்கின்றார்கள்.

உலக வழக்கப்படியே பார்த்தால் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றையொன்று பார்த்தால் மோதவா செய்கின்றன- சண்டையா போடுகின்றன- எருமை எருமையாக நிற்கின்றது, பார்த்துக் கொண்டே குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் ஜாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் ஜாதகம் பொருந்தவில்லையாம் – திருமணம் நடக்கக் கூடாதாம்!

ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள் என்று எந்த ஜோதிடக்காரனிடமும் போகலாமா?

எப்படி நட்சத்திரத்தையெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.?

குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பெருச்சாளி, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 14 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, கழுதையைக் காணவில்லை. காளை மாட்டைக் காணவில்லை? ஜோதிடக்காரர்கள் ஒன்றும் செய்வதில்லை. — வா. நேரு.  SOURCE: viduthalai.com


எமகண்டம், ராகு காலம்

ஒரு நாளைக்கு 16 முகூர்த்தம் உண்டு. ஒரு முகூர்த்தம் 1.30 மணி நேரமாகும். உத்தி, அமிர்தம், லாபம், தனம்,சுகம் என்ற வேளைகளில் சுப காரியம் செய்யலாம். மற்ற நேரங்களில் செய்ய கூடாது. ராகு காலம் மற்றும் எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்ய கூடாது.

எம கண்டம்

ஞாயிறு எமகண்ட நேரம்                        – பகல் மணி – 12.00 – 1.30
திங்கள் எமகண்ட நேரம்                         – காலை மணி – 10.30 – 12.00
செவ்வாய் எமகண்ட நேரம்                    – காலை மணி – 9.00 – 10.30
புதன் எமகண்ட நேரம்                            – காலை மணி – 7.30 – 9.00
வியாழன் எமகண்ட நேரம்                     – காலை மணி – 6.00 – 7.30
வெள்ளி எமகண்ட நேரம்                        – பகல் மணி – 3.00 – 4.30
சனி எமகண்ட நேரம்                              – பகல் மணி – 1.30 – 3.00

ராகு காலம்

ஞாயிறு ராகு                     –               காலம் – மாலை மணி – 4.30 – 6.00
திங்கள் ராகு                     –               காலம் – காலை மணி – 7.30 – 9.00
செவ்வாய் ராகு காலம்     –                பகல் மணி – 3.00 – 4.30
புதன் ராகு காலம்            –                பகல் மணி – 12.00 – 1.30
வியாழன் ராகு காலம்      –                 பகல் மணி – 1.30 – 3.00
வெள்ளி ராகு காலம்       –                காலை மணி – 10.30 – 12.00
சனி ராகு காலம்             –              காலை மணி – 9.00 – 10.30

எமகண்டத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி கொடுக்கலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு உத்தமம்.

சேரன் செங்குட்டுவனையும், இளங்கோவடிகளையும் அரசவையில் பார்த்த நிமித்தன் மூத்தவன் சேரன்செங்குட்டுவனை விட இளையவனான இளங்கோ அடிகள்தான் அரசாள்வார் என்று குறி சொன்னான்.

மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் என்பதை ஏற்காத இளங்கோவடிகள் மூத்தவனுக்கு வழி விட்டு துறவியானார் என்பது கதை.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கி இருக்கிறது. இளங்கோவடிகள் துறவு கோலம் பூண்டு கண்ணகி காப்பியம் எழுதியதால் தான் சேரன் செங்குட்டுவனையே நமக்கு தெரியும்.

சேரன்செங்குட்டுவன் புகழ் நிலைக்க இளங்கோவடிகள்தான் காரணமானார். ஒரு விதத்தில் பார்த்தால் நிமிதன் கூற்று பொய்யாகி விட்டதாகவும் சொல்ல முடியாது.

ஏனெனில் இன்றுவரை மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அரசனாக கொலு வீற்றிருப்பவர் இளங்கோவடிகள்தானே தவிர சேரன்செங்குட்டுவன் இல்லை.

மனிதனுடைய பார்வையில் இருந்து அவனுடைய எதிர்காலம் மறைக்க பட்டு இருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. அதே சமயம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுவது இயல்பு.

ஜோதிடக்கலை அதை கண்டு பிடித்து சொல்ல கூடிய ஒரு சாதனம் என்பதால் உலகெங்கும் உள்ள மக்கள் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைபடுகிறான்.

பொதுவாக தங்களுடைய கஷ்டங்களுக்கு ஜோதிடத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் சொன்னால் தான் காரியம் செய்வது என்ற சங்கல்பத்தோடு இருக்கிறார்கள்.

ஜோதிடக்கலை விஞ்ஞான கலையா என்பதை ஆராயும்முன் ஜோதிடக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்து வருவதற்கு என்ன காரணம் என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்.

பயனில்லாத எதையும் மக்கள் தொடர்ந்து வைத்து கொள்வதில்லை. பயனற்ற பொருட்கள் வீட்டில் இருக்குமானால் அவற்றை அழித்து விடுகிறோம். பயனில்லாமல் சேர்ந்து விடுகிற குப்பை கூளங்களை தினமும் கூட்டி அப்பறபடுத்தி விடுகிறோம்.

பயனற்ற எதையுமே போற்றி பாதுகாக்கிற பழக்கம் மனித இனத்திற்கு இல்லை.இந்த அடிப்படையில் பார்க்கும் போது, ஜோதிடம் முற்றிலும் மூட நம்பிக்கையாக இருக்குமானால், மனிதர்கள் இவ்வளவு காலம் அதை போற்றி பாதுகாத்து வைத்திருக்க மாற்றார்கள்.

ஒரு சில ஜோதிடர்கள் போலித்தனமான நம்பிக்கையை ஏற்படுத்துவதால் ஜோதிடகலையே தவறானது என்று ஆகி விடாது. மருத்துவம் போன்ற துறைகளிலும் போலிகள் இருப்பது போலவே, ஜோதிட துறையிலும் இருக்கிறார்கள்.

ஜோதிடத்தை ஒரு வழிகாட்டியாக ஏற்று கொள்கிற வரை அதை நம்புகிறவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

P .C . கணேசன் எழுதிய ஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா? என்ற நூலில் இருந்து எடுக்க பட்டது இந்த கட்டுரை. சுரா புக்ஸ் ( பிரைவேட் ) லிமிடெட் இன் நூலை வெளியிடு செய்திருக்கிறது.

வடமொழியில் ‘ஜ்யோதிஷம்’ என்று கூறப்படுவதே தமிழில் ஜோதிடம் என்று கூறப்படுகிறது. “அறிவைத் தரும் ஒளி” என்பது இதன் பொருளாகும். இதே பொருளிலேயே இது தமிழிலும் சோதி + இடம் = ‘சோதிடம்’ என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் மேல் நாட்டவர்கள் ‘சாயன முறை’ என்பதைப் பின்பற்றுகிறார்கள். நம் இந்திய நாட்டில் பின்பற்றப்படும் முறை ‘நிராயன முறை’ என்பதாகும். இந்த ஜோதிடத்தில் பல்வேறு உட் பிரிவுகளும் உள்ளன. பராசரர், ஜைமினி, வராகமிகிரர் என பல மகரிஷிகள் பல்வேறு முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். காலமாற்றத்திற்கேற்ப வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல்வேறு முறைகளிலும் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு அயனாம்ச முறைகளும் எபிமெரீஸ் போன்றவைகளைப் பயன்படுத்தியும் ஜாதகங்கள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பலன்கள் கூறப்பட்டு வருகின்றன.
Astro ChartImage result for Astro Chart
பொதுவாக படித்தவர், பாமரர் என்றின்றி அனைவராலும் அணுகப்படும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது. சாதாரண மனிதர் முதல் நாட்டின் தலையாய மனிதர்கள் வரை அனைவருமே பெரும்பாலும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் எதிர்காலம் பற்றி அறிவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஜோதிடத்தைப் பார்த்து பலன் அறிந்து கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறையாகும். மற்றும் கை ரேகை சோதிடம், எண் கணித சோதிடம், கிளி சோதிடம், பிரசன்ன சோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் புழக்கத்தில் உள்ளன.

ஜோதிட நம்பிக்கை இல்லாத பிராமணர்கள் பூணுல் அணியாத பிராமணர்களைவிடக் குறைவாக இருப்பார்கள் என்ற கருத்து விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால் ஜோதிடம் என்ற சிவனின் சக்தியாக விளங்குபவர்கள் பிராமணர்கள்தான் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இருக்க முடியாது.

இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் ஜோதிட நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஜோதிட நம்பிக்கைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டது. இந்திய அல்லது பிராமண ஜோதிட நம்பிக்கைகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய ஜோதிட முறைகளும் நம்பிக்கைகளும் தொடர்பு இல்லாத இரு துருவங்களாகத் திகழ்கின்றன.

மேற்கத்திய முறையில் ஜோதிடத்தைக் குறிக்கும் Astrology என்ற பதம் Astron + Logos என்ற இரண்டு இலத்தீன் சொற்களின் தொகுப்பாகும். நட்சத்திரம் என்ற பொருள்படும் Astron என்ற சொல்லும் பற்றிய அல்லது தொகுப்பு என்ற பொருள்படும் Logos என்ற சொல்லும் நட்சத்திரம் பற்றிய ஆய்வு Astrology என்பதை தெளிவாக்குகிறது. இந்திய மற்றும் மேற்கத்திய முறைகள் இரண்டிற்கும் பொதுவான அடிப்படையில் ஜோதிட நம்பிக்கைகள் இயங்குகின்றன. வானில் உள்ள கோள்கள் (கிரகங்கள்) நட்சத்திரங்கள் மற்றும் இயற்கை சக்திகளால் பூமியில் உள்ள நீர்நிலைகள், நிலப்பரப்பு, தட்பவெப்பம், பருவகாலங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்கள் எல்லாமே சில மாற்றங்களை அடைவது போலவும் இயல்புகள் பாதிக்கப்படுவது போலவும் மனிதர்களும் அவர்களது நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்பதே இரு வித ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.Image result for zodiac sign chart

மேற்கத்திய ஜோதிட முறை “Geo Centric” எனப்படும் பூமியை மையப்பொருளாகக் கொண்டு பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் செல்லும் சுழற்சி பாதையில் அமைந்திருக்கும் நட்சத்திரங்களின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் அவனுடைய ராசியாகக் (Zodiac sign) கொள்ளப்பட்டு பொதுவான குண இயல்புகளும் பலன்களும் சொல்லப்படுகின்றன.

சீன ஜோதிட முறையில் பிறந்த வருடம் கணக்கில் வைத்துக்கொள்ளப்பட்டு முன்பே தீர்மானிக்கப்பட்ட (பிராணிகள் பெயரில் அமைந்த) வருடப் பலன்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால், மற்ற எல்லா ஜோதிட முறைகளிலும் மேம்பட்டதாகவும் தொன்மையானதாகவும் கருதப்படும் இந்திய ஜோதிட முறையில் சூரியன், சந்திரன் மற்றும் மற்ற நட்சத்திரக் கூட்டங்கள் (கிரகங்கள்) எல்லாம் ஒருவர் பிறந்த குறிப்பிட்ட வினாடியில் இருக்கும் இடங்களை தனித்தனியே துல்லியமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் ஜாதகங்கள் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்படுகின்றன. கிரகங்களின் வலிமை அது பூமிக்கு எதிராக சுற்றும் தூரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. மேலும் கிரகங்களின் சுழற்சி வட்டமாக இல்லாமல் சாய்வாக இருப்பதால் ஒவ்வொரு கிரகத்தின் சாகை அளவு சரியான 30 டிகிரியாக அமையாது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 12 ராசிகளின் பலன்கள் கூறப்படுகின்றன.

“Neither Proved, Nor Disproved” என்ற வகை சார்ந்த இந்த வாதம் சிலரின் பிடிவாதமாக விளங்குவதும் மற்ற சிலருக்கு அபவாதமாக விளங்குவதும் அல்ல நமது இக்கட்டுரையின் சாராம்சம். எல்லாவித விஞ்ஞான முறைகளாலும் உறுதி செய்யப்பட்டுச் சந்தேகமில்லாமல் இன்றும் பதிவு செய்யப்படுகின்ற வானவியல் (Astronomy) அம்சங்களின் அடிப்படையில் எழுகின்ற அல்லது எழுப்பப்படுகின்ற ஜோதிட கருத்துகள் எவ்வாறு பிராமணர்களால் சமூக பிரயோகம் செய்யப்பட்டன? திருமணம் முதல் பெரும்பான்மையான சமஸ்காரங்கள், ஜோதிட இணைப்பின் மூலம் எவ்வாறு பிராமணர்களால் முறைப்படுத்தப்பட்டன? பிராமணர்களுக்கும் ஜோதிடத்துக்கும் உள்ள தொடர்பின் அடிப்படை என்ன? ஒரு கலை என்ற முறையில் அதைப் பயின்று அடைந்த தேர்ச்சியின் பயன் என்ன? போன்ற வினாக்களின் விடையாகவே இக்கட்டுரை விளங்கும்.

நட்சத்திரங்கள் உட்பட வானில் உள்ள எல்லாக் கோள்களும் ஒரு மனிதன் பிறந்த நேரத்தில் இருக்கும் ஸ்தானத்தைக் கணித்து அந்த நேரத்தில் பூமியும் மற்ற கிரகங்களும் இருக்கும் வெளியில் (Space) உள்ள புள்ளியைக் “கணம்” கோட்பாட்டின் அடிப்படையில் தொகுத்து அதன் அடிப்படையில் லக்னம் ராசி சக்கரம் நவாம்ச சக்கரம் திசை போன்ற பல கணித கோட்பாடுகளின் மூலம் ஒவ்வொரு கிரகமும் அந்த மனிதருக்குச் செய்யும் அல்லது செய்யாத நன்மை, தீமைகளாகப் பலவற்றை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த எளிய செயல்முறைகள் அல்ல.

ஆயிரக்கணக்கான அறிஞர்கள் லட்சக் கணக்கான மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை பல நூறு ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகே இது சாத்தியமாகி இருக்கக் கூடும். பாரம்பரிய இசை, இயற்கை மருத்துவம் போன்று ஜோதிடமும் தொன்மையானதாகவும் நுண்கலையாகவும் இருந்ததனால்தான் வேதங்களின் அங்கமான 4 வேதங்களுக்குப் பிறகு குறிப்பிடப்படும் 6 அங்கங்களின் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது. சமூகத்திற்குப் பயன் அளிக்கும் இசை, மருத்துவம் போன்று ஜோதிடமும் விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலேதான் ஜோதிடம் பிராமணர்களால் ஆட்கொள்ளப்பட்டது. சுயநலம் கருதாது பொன், பொருள், பெண் ஆசை இல்லாமல் சமூக நலனை மட்டுமே சாஸ்வதமாகக் கொண்டிருக்கும் பிராமண தர்மத்திற்குள் ஜோதிடம் உட்புகுந்ததின் ஒரு விளக்கமாகவே இக்கருத்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

நேரம் காட்டும் கடிகாரம் போல, மாறாமல் தினம் உதிக்கும் சூரியன் போல, யாராக இருந்தாலும் ஜோதிட விதிகளின் அடிப்படையில் முடிவுகள் முன்வைக்கப்படும் என்ற முழு நம்பிக்கையில் ஜோதிடமும் பிராமணர்களும் இணைந்து வளர்ந்தது எங்கும் இல்லாத சிறப்பு நிகழ்வாகும். உண்மை, பொய், உரைகல் விடுத்து சமூக நன்மைக்கு ஜோதிடம் பயன்படுத்தப்பட்ட சில பதிவுகளைப் பார்ப்போம்.

தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்ற இயற்கை விதி இந்துமத அடிப்படைக் கோட்பாடாக அமைந்திருப்பதுபோல பாப கிரகங்களின் பலனை மனிதர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்ற கோட்பாட்டில் இயங்கும் ஜோதிடத்தைப் பிராமணர்கள் முழுவதும் நம்புவதின் மூலமே மற்றவர்களை நம்பவைக்க முடிந்தது. சமூகக் கடமையாக இதை சாஸ்வதப்படுத்தியதின் பொதுநல நோக்கம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முயற்சிகள் பல செய்தும் முழுமையான உழைப்பைக் கைக்கொண்டும் முன்னேற்றம் அடையாத சில தருணங்களில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக ஜோதிடம் பயன்பட்டது.

கிரகம் படுத்துவதால் தான் சிரமம் என்று கூறுவதும் பரிகாரமாய்ப் பத்து கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யச் சொல்வதும் கஷ்டப்படும் வேலையில் மனம் இஷ்டப்படும் விதம் சார்ந்தது. இந்த உளவியல் பணியை உண்மையான சிரத்தையுடன் செய்துவந்த பிராமணர்கள் நாடு முழுவதும் பல்வேற அடையாளப் பெயர்களுடன் அழைக்கப்பட்டார்கள்.

ஜோஷி என்ற பொதுவான பெயரில் வடஇந்தியா முழுவதும் அழைக்கப்பட்ட ஜோதிட பிராமணர்கள்போல் இல்லாமல் தென் இந்தியாவில் சாஸ்திரிகள், கனபாடிகள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற அனைத்து பிராமணர்களும் ஜோதிடர்களாகவே திகழ்ந்தார்கள்.

கோத்திரம் இல்லாத மற்றும் உட்பிரிவுகள் அடிப்படையில் திருமணங்கள் நிச்சயக்கப்படும் பொழுது பையனின் ஆயுள் போன்ற சில முக்கியமான அம்சங்களை, அவன் பிறந்த நேரங்களில் இருந்த கிரக நிலையில் ஆராய்ப்பட்டு அமைக்கப்பட்ட ஜாதகங்கள் இன்று சுலப திருமணங்களுக்கே முட்டுக்கட்டையாக முன் நிற்பது எதிர்பாராமல் விளைந்த எதிர்மறை விளைவு ஆகும்.

படிக்கும் படிப்பு, பார்க்கும் வேலை, எடுத்து நடத்தும் தொழில், முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் என ஒவ்வொன்றுக்கும் ஜோதிடத்தின் உதவியை நாடுவது பிராமணர்கள் செய்யும் தவறா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சுயநல, பணத்தாசை பிடித்த சில ஜோதிட வல்லுநர்கள் தங்கள் திறமையின் மூலம் நடத்தும் அத்துமீறல்கள் ஜோதிடத்திற்கும் அதன் ஆதரவாளர்களான பிராமணர்களுக்கும் பெருமை சேர்க்கும் செயல் அல்ல.

பணம் வாங்கிக்கொண்டு சொல்லும் ஜாதகப் பலன்கள் பயனற்றவை, பலிக்காதவை மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்ற நம்பிக்கை இருந்தவரை ஜோதிடம் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் தூற்றிக்கொள்ள தகுந்ததாக இல்லை. போற்றுதலுக்குரிய பல்வேறு கணித அம்சங்களின் அடிப்படைகளைக்கொண்ட ஜோதிடத்தை ஏமாற்றுதலுக்கும் எள்ளி நகையாடுவதற்கும் உரியதாக மாற்றாமல் இருப்பதற்கு நம் பிராமண ஜோதிட உடன்பிறப்புகள் ஒத்துழைக்க வேண்டும்.

மனம் கலக்கம் அடையும் மாந்தர்களுக்கு இதம் தரும் விதமாக எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று மட்டும் சொல்லும் விதமாக ஜோதிடங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். திருமண விஷயத்தில் ஜாதகங்கள் பார்க்கப்படும் பொழுது மற்ற சாதக பாதகங்களையும் மனதில் கொண்டு கிரகங்களை அணுக வேண்டும். கட்டங்கள் சொல்வது பெரும் நட்டம்தான் என்பதை ஜோதிடர் தீவிரமாக நம்பினால் திட்டவட்டமாக அதைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் நடப்பது நடந்தே தீரும் என்ற விதியை இயற்கையாகவோ அல்லது அவ்வித இயற்கையை விதியாகவோ நாம் கொண்டால் ஜோதிடம் பிராமணர்களை விட்டு ஒரு போதும் அகலாது.

நம்புகிறவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் அவர்கள் வம்புக்குப் போகாமல் வாய்மூடி இருக்கட்டும் என்பதே பிராமின் டுடேயின் ஜோதிடக் கொள்கை. பிராமணர்கள் விட்டுவிடக் கூடாத விஷயமாக இதைத் தொடரும் அதே வேளையில் மிகவும் நெருங்கிச் சென்று அதை கட்டிப் பிடித்து எப்போதும் உறவாடும் அவசியமும் இல்லை. நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கடமையைச் கொண்டிருக்கும் பிராமணர்கள் அவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் மகோன்னத சேவையாக ஜோதிட பிரயோகத்தை தொடர்ந்து செய்து வரத்தான் வேண்டும். இத்துடன் எல்லாம் இறைவன் விருப்பப்படியும் அவன் அனுமதியுடன் மட்டுமே நடைபெறும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொண்டு இயங்குவது மிகவும் அவசியம்.

வானியல் மற்றும் ஜோதிட திறமைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய காரணத்திற்காக, நம் செயற்கைக்கோள் ஒன்றுக்கு நாமகரணம் செய்யப்பட்ட, ஆரியபட்டர் என்ற ஜோதிடர் மகளின் திருமணம் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட முகூர்த்தத்தில் நடந்தும் வெற்றி பெறாமல் மிக விரைவிலேயே விதவையானாள் அவரின் செல்ல மகள். மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு முகூர்த்த நேரம் கணக்கிடுவதில் சிறு பிழை நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“அந்த காலத்தில் நாழிகையைக் கணக்கிட பயன்படுத்தப்பட்ட மணல் கடிகாரத்தின் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மகளின் மூக்குத்தி விழுந்து ஏற்படுத்திய சிறிதுநேர மணல் அடைப்பே தவறான முகூர்த்தத்திற்கு வழிவகுத்து அவளின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது”. (ஆதாரம்: ஆரியபட்டர் எழுதிய ஜோதிட நூல்கள்)

ஜோதிட வல்லமையையும் தாண்டி, இறை சக்தி மூலமே எதுவும் நடைபெறும் என்பதை புரிந்துகொண்ட ஆரியபட்டரும் அவரது புத்திரியும் ஜோதிட நிபுணர்களாகத் திகழ்ந்து பல நூல்களை எழுதி புகழ்பெற்றது வரலாறு. ஜோதிடர்களிடமும் சில முரண்பாடுகள், அவரவர் கணிக்கும் முறை என்று – நகைச்சுவையும் , சுவாரஸ்யத்துக்கும் குறைவில்லாமல் நன்றாகவே நடந்து கொண்டு இருந்தது.

வெறுமனே ராசியை மட்டுமே வைத்துக் கொண்டு – அவரவருக்கு இந்த மாதிரி நடக்கும், நடக்காது என்று அவர்கள் சொல்வதை வைத்து வேடிக்கையாகத் தான் இருந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு ஜோதிடர் கடைசியில் போட்டு உண்மையை உடைத்தார். “இவங்க சொல்ற எதுவுமே சரி இல்லை. லக்கினம் எதுன்னு தெரியாம – ராசியை மட்டும் வைச்சுக்கிட்டு பலன் சொல்லக் கூடாது. இது இங்கே வந்து இருக்கிற எல்லா ஜோதிடர்களுக்கும் தெரியும்”. எல்லா ஜோதிடர்களும் ஒரு நிமிடம் அரண்டு போயிட்டாங்க.. அவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு அடிப்படை விஷயம்தான்… ஆரம்பத்துலேயே சொல்லி இருந்து இருக்கலாம்.

சார், எந்த ஜோதிடரும் பலன் சொல்வது – முதலில் அவர் லக்கினம் , மற்றும் பிறந்த ஜாதகம் வைத்து அங்கு இருக்கும் நவ கிரக நிலைகளை வைத்து – தற்போது கோசார ரீதியாக கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து மட்டுமே. நாள் இதழ்களில் வரும் ராசி பலன்கள் – அனைத்தும் பொதுவான பலன்களே.

நம் வாசகர்களுக்கு இதை பலமுறை நான் நினைவுப் படுத்தி இருக்கிறேன். நடப்பு தசா , புக்தி மோசமாக இருந்து – பேப்பரில் நல்ல விதமாக போட்டு இருக்கிறார்களே….என்று உடனடியாக எந்த ஒரு அவசர முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல தசை ஓடிக்கொண்டு இருந்தால் – கோச்சார ரீதியாக மோசமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.

அதைப் போலவே மோசமான தசை நடந்தாலும் – கோச்சார ரீதியாக நல்ல விதமாக இருந்தால் , ஓரளவுக்கு அந்த காலம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும்.

எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு, ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் – உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்.

பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் – ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் , நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும் – வழி நடத்துவார்கள்.

கெட்ட பலன்கள் நடக்கும் என்று தெரிந்தாலும், அதை பட்டவர்த்தனமாக உடைத்து சொல்ல மாட்டார்கள். இந்த கால கட்டத்தில கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று பொத்தாம் பொதுவாக கோடிட்டு காட்டுவர்.

நேற்று வந்து இருந்த ஒவ்வொரு ஜோதிடரும், மிக நல்ல முறையில் பலன்கள் சொல்லி, அவரவர் இருக்கின்ற ஏரியாவில் அவ்வளவு பிரபலமானவர்கள். ஆனால் , விவாதத்தில் பங்கு கொண்டு இருந்த பொது ஜனங்கள் எல்லோரும் – ஜோதிட நம்பிக்கை மட்டும் கொண்டவர்கள் இல்லை. ஜோதிடர் வேண்டாம்னு சொன்னாலும், என் மனசு வீடு கட்டுன்னு சொன்னா, நான் கட்டுவேன் சார்னு ஒரு அம்மா சொன்னாங்க….!

மிக சரியான வார்த்தை…

ஐயா, TV ல் ஒரு டாக் ஷோ – புத்தாண்டு ஸ்பெசல் நிகழ்ச்சி- கலந்துக்கிட கையை பிசஞ்சுக்கிட்டு , கண்ணீர் விட்டு , கலங்கி – வாழ்க்கையில திக்கு தெரியாம நிற்க்கிறவங்க யாரும் இந்த புரோகிராமுக்கு போகப் போறது இல்லை.

சரி, நிஜமாவே இந்த ஜோதிடம் , ஜாதகம் எல்லாம் உண்மை தானா? நம்மோட வாசகர்களுக்கு, என்னுடைய பதில் என்னன்னு நான் சொல்லாமலே தெரியும்.

என்னுடைய பழைய பதிவுகளை படிச்சு இருக்கிறவங்களுக்கு தெரியும்….

ஒருவரது ஜாதகம், வாழும் வீடு, சுய எண்ணங்களும் அவற்றின் செயல்வடிவமும் – இந்த மூன்றும் தான் ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது…

இதில் ஜோதிடமும், வாஸ்துவும் – பெரிய பம்மாத்து விஷயங்களாக மாறிவிட்டது – ஜோதிடம் அரை குறையாக தெரிந்த ஜோதிடர்களால் தான்.

ஒழுங்க படிக்க முடியாம, வேற எந்த வேலையும் செய்ய திறமை இல்லாம, ஒரு ஏமாத்து வேலையா ஜோதிடம் பக்கம் வந்தவங்க கூட அதிகமா இருக்கிறாங்க…!

ஒன்று – இவற்றை சரியாக கணிக்க கூடிய வல்லுனர்களை நாட வேண்டும்… இல்லையா…. நீங்களே இவற்றின் அடிப்படையை தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்… அதன் பிறகு உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்… சுய ஜாதகம், தங்கி இருக்கும் வீட்டின் வாஸ்து – இதில் ஒன்று நன்றாக இருந்தாலே , மீதி இரண்டையும் நல்ல விதமாக மாற்றும் சக்தியாக அது இருக்கிறது….

ஜோதிடமோ, வாஸ்துவோ கூட வேண்டாம்… இறைவனை முழு மனதுடன் நம்பி – நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் கவனத்துடன் எடுத்து வந்தாலும், நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.

ஆனால் இதில் ஜோதிட மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் செயல் இங்கே நடைபெறுகிறது.

தன்னம்பிக்கையை முன்னிலைப்படுத்தி ஜோதிட மூடநம்பிக்கையை விட்டொழிக்க வீரேந்திர சேவாக் பாராட்டுக்குரியவராக மட்டுமின்றி, இளைய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுபவராகவே விளங்குகிறார்.ஜோதிடத்தை ஆதரித்துப் பேசும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்றேன். எங்கள் நெற்றியைப் பார்த்தாலே தெரியவில்லையா? நாங்களெல்லாம் பழுத்த பக்தர்கள்! என்றனர்.

ஆனால், நீங்கள்தான் சுத்த நாத்திகர்கள் தெரியுமா? என்று கேட்டேன். அனைவரும் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் என்னைப் பார்த்தனர். ஆம், ஜோதிடத்தை யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள்தான் அசல் நாத்திகர்கள் என்று ஆணித்தரமாய் மீண்டும் சொன்னேன்.

அதெப்படி? அனைவரும் சேர்ந்து கேட்டனர்.

உண்மையான கடவுள் தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவன் வாழ்வை, தலையெழுத்தாக நிர்ணயித்து, அவனைப் பிறக்கச் செய்து, அவனை வாழச் செய்கிறது கடவுள் என்கின்றது. அதன்படி பார்க்கின், ஒருவனது வாழ்க்கை அவன் சென்ற பிறவிகள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப, இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பது பொருள்.

ஆனால், ஜோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.

அப்படியாயின் ஒருவன் வாழ்வை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது. அதன்படி பார்த்தால் கடவுளுக்கே வேலை இல்லை. அப்படியாயின் கடவுளே இல்லை என்று ஆகிறது.

ஆக, ஜோதிடத்தை மறுக்கிறவன் கடவுளை மறுக்கிறான். எனவே அவன் நாத்திகன்தானே!

வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசக்காலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால் வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை. கிரகங்களும் தீர்மானிப்பதில்லை, வாசலும் ஜன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் கடவுளையும் மறுக்கிறான். ஜோதிடத்தையும் மறுக்கிறான் என்றுதானே பொருள்?

எல்லோரையும்விட இராசிக்கல்காரன் மகாபெரிய நாத்திகன். காரணம், வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை; கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாஸ்துவும் தீர்மானிப்பதில்லை; அணிகின்ற கல்லைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்கிறான்!

எனவே, எல்லாமே ஒன்றுக்கொன்று முரண். முரண்பட்டவை எதுவும் உண்மையல்ல என்பது பொருள். ஆக கடவுளும் இல்லை; ஜோதிடமும் பொய்; வாஸ்து சுத்தப் பொய்; இராசிக்கல் இணையில்லாப் பொய் என்பது விளங்குகிறது அல்லவா?

எனவே, பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றைக் கொஞ்சம் சிந்தித்தாலே மடமையில் இருந்து மீண்டு அறிவு வழியில் செம்மையாய் வாழலாம்; சிந்திக்கலாம்! பெரியவர்கள்கூட இதனை ஆழமாகச் சிந்தித்தால் மடமை நீங்கி அறிவுடன் வாழலாம்! அச்சம் தவிர்க்கலாம்!

அன்புள்ள ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம்.

நான் கடந்த 6 ஆண்டுகளாக ஜோதிடம் பயின்று வருகிறேன்.

ஆனாலும் எனக்கு ஜோதிடத்தின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் என்னவென்றால்,
புலிப்பாணி 300 ல் 46 வது பாடலில் கீழ்க்கண்டபடி கூறப்பட்டுள்ளது.

பாரப்பா பரமகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும் லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு.
செந்திருமால் தேவியுமே பதியில் வாழ்வாள்
கூறப்பா குடினாதன் கண்ணுற்றாலும்
குவளயத்தில் வேகுபேரை ஆதரிப்பான்
ஆரப்பா ஆறெட்டு பன்னிரண்டு
அறைகின்றேன் தின்பலனை அன்பால்கேளே.

அதாவது குரு 4,7,10,1,5,9,2,11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு யோகம் சொல்லு. குடினாதன் பார்த்தால் இந்த பூமியில் வேகுபேரை ஆதரிப்பான். 6,8,12 ல் நின்ற பலனை கூறுகிறேன் அன்பாய் கேளே, என்று பொருள் பட புலிப்பாணி முனிவர் கூறுகிறார்.

இதில் குடினாதன் என்பதன் பொருள் என்ன?

மேலும் இந்தப் பாடலில் குரு 7 ல் நின்றால் யோகம் உண்டு என்று கூறுகிறார்.

ஆனால் வீமகவியில் 117 வது பாடலில் கீழ்க்கண்டபடி கூறப்பட்டிருக்கிறது.

மந்திரி ஏழில் நிற்க மனைகட்டி இருந்தாலுந்தான்
சுந்தரமான செல்வந்துலைப்பது நிசமதாகும்.
இந்துவும் பாவரோடே இருந்திடில் புதல்வரில்லை
சந்ததியில்லாமற்றான் சந்நியாசியாவான்பாரே.

அதாவது குரு 7 ல் நிற்க அந்த சாதகன் வீடுகட்டி வாழ்ந்தாலும் செல்வங்கள் அனைத்தும் தொலைப்பது நிஜம். சந்திரன் பாவர்களோடு கூடி இருந்தால் சந்ததியில்லாமல் சந்நியாசியாவான், என்றும் கூறப்பட்டிருக்கிறது.

குரு 7 ல் நிற்பதன் பலனை புலிப்பானியில் ஒருவிதமாகவும், வீமகவியில் ஒருவிதமாகவும் கூறப்பட்டிருக்கிறது.

நாம் எதை எடுத்து பலன் சொல்லுவது?

நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

சில மூல நூல்களை படித்த பொழுது இப்படி சில குழப்பங்கள் தோன்றியது. இதற்கு விளக்கம் கேட்டால் யாரும் திருப்தியான விளக்கம் தரவில்லை.

எனக்கு விளக்கம் தந்து, உதவுங்கள்.

நன்றியுடன்
நரேந்திரன்



ஜோதிட நம்பிக்கை என்றுதான் ஒழியுமோ?

மைசூர் இராஜ்யத்தை அரசாண்ட திப்பு சுல்தானுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் 1799 ஆம் வருடம் மே திங்கள் 4 ஆம் தேதி சண்டை நடந்தது. அந்தச் சண்டையில், அன்று சாயங்காலம் திப்பு சுல்தான் குண்டினால் கொல்லப்பட்டு இறந்தார்.

அவர் சண்டைக்குப் புறப்படுமுன் அன்று காலையில் சோதிடர்களை வரவழைத்து சகுனம் கேட்டார். இந்தச் சோதிடர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். அவர்கள், அன்றைய தினம் கெட்ட நாள் ஆகையால் திப்பு சண்டை செய்யக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், ‘தோஷ நிவர்த்தி’ செய்தால் அந்தக் குற்றம் நீங்கிப் போய்விடும் என்றும், பிறகு சண்டை செய்யலாம் என்றும் சொன்னார்கள். திப்பு சுல்தான் ‘தோஷத்தை’ எப்படி நிவர்த்தி செய்வது என்று கேட்டபோது சுபகாரியப் புலிகளாகிய அந்தப் பார்ப்பன சோதிடர்கள் கறுப்பு நிறமுள்ள எருமை, கறுப்பு எருது, கறுப்பு ஆடு, கறுப்புத் துணி, கறுப்புத் தலைப்பாகை, 90 ரூபாய் (இது மாத்திரம் வெள்ளை நிறம்), எண்ணெய் நிறைந்த இரும்புக் குடம் இவைகளைத் தானம் செய்தால், அந்தக் கெட்டநாள் நல்ல நாளாய் மாறிவிடும் என்று சொன்னார்கள்.

திப்பு சுல்தான் அவர்கள் சொல்லியபடியே மாடு, எருமை, துணி, ரூபாய் முதலியவைகளை அந்தப் பார்ப்பனருக்குத் தானம் செய்தார். எண்ணெய்க் குடத்தை தானம் செய்வதற்கு முன், எண்ணெய் குடத்தில் திப்பு தன் முகச் சாயலைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவரும் எண்ணெய்க் குடத்தில் தன் முகச் சாயலைப் பார்த்து தோஷத்தை நீக்கிக்கொண்டதாக நினைத்துக் கொண்டார். பிறகு, பார்ப்பனர்கள் தங்கள் புரட்டு வார்த்தையினால் கிடைத்த வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இவ்வளவு சோதிடம் பார்த்தும், தோஷத்தை நீக்கியும் பார்ப்பனருக்கு தானம் செய்தும் அந்தக் கெட்ட நாள் நல்ல நாளாக மாறவே இல்லை. கெட்ட நாள் கெட்ட நாளாகவே இருந்து விட்டது. எப்படி என்றால் சோதிடம் பார்த்து தோஷத்தை நீக்கிக் கொண்ட அன்றைய தினம் சாயங்காலமே திப்பு குண்டுபட்டு இறந்து போனார். இங்கிலீஷ்காரர்கள் அன்றைய தினமே திப்பு ராஜ்யத்தையும் சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஜோதிடப் புரட்டர்களின் வார்த்தை பொய்யாகிவிட்டது. சோதிடப் புரட்டர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கெட்ட நாள், நல்ல நாள், தோஷம், பரிகாரம் என்று ஜனங்களை மயக்கி தங்களுக்குப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறார்கள். இவைகைள எல்லாம் பாமர ஜனங்கள் நம்பி கைப்பொருளை இழந்து நஷ்டமடைகிறார்கள்.

திப்பு சுல்தான் மகமதியராய் இருந்தும் இந்தச் சோதிடப் புரட்டர் வார்த்தைக்கு ஏமாந்தார் என்றால், மூட நம்பிக்கை நிறைந்த இந்துக்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்த ஜோதிட நம்பிக்கை, ஜனங்களிடமிருந்து என்றுதான் ஒழியுமோ?

————- “குடிஅரசு” 8-5- 1932 இதழில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியது



Posted by புரட்சியாளர் பெரியார் at 08:36

தகங்களைச் சேர்க்கும்போது பல அபவாதங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

  1. மூல நட்சத்திரத்தின் மாமியார் மூலையிலே; பெண்மூலம் நிர்மூலம்.

  2. கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது.

  3. விசாக நட்சத்திரம் இளைய மைத்தினருக்காகாது.

  4. ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்காகாது.

  5. பூராடம் கழுத்தில் நூலாடாது.

மூல நட்சத்திரம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் காலமாகி விடுவார். அதன் காரணமாக பெண்ணின் மாமியார் விதவையாகி விடுவாள். ஆகவே மூல நட்சத்திரப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. இன்னும் சிலர் மூல நட்சத்திரத்தில் முதல் பாதம் தான் சேர்க்கக் கூடாது என்றும் மற்ற பாதங்கள் சேர்க்கலாம் என்றும் கூறுவார்கள்.

  • கேட்டை நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் அவள் கணவனின் தமையனுக்காகாது என்று கூறுவர்.  ஆகவே கேட்டை நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது.

  • பூராடம் நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் கணவன் காலமாகி விடுவான். ஆகவே அவள் கழுத்தில் தாலி தங்காது. எத்தனை பெண்கள் பூராடம் நட்சித்திரத்தில் பிறந்து தீர்க்க சுமங்களிகளாக இருக்கிறார்கள்.

  • ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால் மாமியார் மறித்துப் போவாள். ஆகவே ஆயில்யம் அறவே கூடாது. என் தாயார் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர், என்னுடைய தகப்பனாரின் தாயார் கடந்த முப்பதைந்து ஆண்டுகளாக மிகவும் நன்றாகவே இருக்கிறார். அவருக்கு இப்போது 90 வயதாகிறது. இதனை வைத்து மேற்ச் சொன்ன கூற்று தவறு என்று தெளிவாக தெரிகிறது.

நம்புவர்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளும் இருக்கும்

இவைகளல்லாம் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது வெறும் வெற்று  வார்த்தைகளாகத்தான் தெரிகின்றது. இவைகளில் உண்மை இல்லை.  இதை அனுபவ பூர்வமாக இப்படி இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும் என் தாயாரின் நட்சத்திரம் ஆயிலயம் என்பதாலும், என் பாட்டி இன்னமும் நலமாக இருக்கிறார் என்பதால்.

ஜோதிடம் ஜோதிஷம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது .வேதத்தின் பயன் எதுவோ அதுவேதான் ஜோதிட சாஸ்திரத்தின் பொருளும் ஆகும் .அறிவைத்தேடும் பயணத்தில் ஜோதிடமும் ஒரு கருவியாகும். இதில் மனிதனின் ஆன்மீக பயணத்திற்கு வானசாஸ்திரத்தை எங்கனம் பயன் படுத்துவது என்பதன் விளக்கமும் அறிவும் தான் உள்ளது .இது குறித்து ரிஷிகளும் சித்தர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையை ஊன்றி கவனித்து இயற்கையின் மாறுதல்கள் பூமியை எவ்வாறு பாதிக்கிறது என கண்டுணர்ந்து அவைகளில் கண்ட உண்மைகளை ஒரு சாஸ்திரம் ஆக்கினார்கள் .

வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை. ஒருபகுதி .இகலை புரிந்துகொள்ள கணிதம் மேம்பட்டது .இது ஒரு அங்கம் இதில் திரி கோணம் பல உயர் கணிதங்களும் வளர்ந்தன இத்தகைய கணித அறிவின் மூலமே கோள்களின் இயக்கத்தியும் அசைவுகளையும் பண்டைய அறிஞர்கள் கண்டறிந்தனர்.

ஜோதிடத்தின் முக்கிய அடுத்த அங்கம் கால அளவிடுதல் முறை காலக் கணக்கு முறைகள் தாங்கள் காணும் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன.

இத்தகைய பாரம்பரிய அறிவு பஞ்சாங்கம் என்ற பொதுப் பெயரிலே தொகுக்கப்பட்டது.

இவ்வாறு பிருமத்தைத் தேடும் பயணத்திற்காக முறைபடுத்தப்பட்ட வானியல் அறிவும் கணித அறிவும் பல நூற்றாண்டுகளாக கவனித்து பதிவு செய்யப்பட பிரபஞ்ச நிகழ்வுகளும் அது குறித்த ஆராயய்ச்சியின் ஒட்டு மொத்த பெயரே ஜோதிடம் என்பதாயிற்று.

தற்போது கூடபத்தில் விண்ணியல் ஆராய்ச்சியின் போது அந்தகைய ஆராய்ச்சின் போக்கிலே வேறுபல கண்டுபிடிப்புகளும் ஏற்ப்படும் அவைகள் பல ஆயுதங்கள் நாம் செய்வதற்கும் இன்னும் சொல்லப்போனால் மனிதனின் செயற்கை கால் செய்வதற்கு கூட தொழில் நுட்பம் விண்வெளி ஆராயய்சி செய்யும் போது கிடைத்ததாக அப்துல் கலாம் கூறியிருக்கிறார். இவ்வாறே ஜோதிடம் எனும் வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத்

திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் இவைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் அறியியல் திரட்டில்

விளைந்த ஒரு சிறிய பொருள்தான் நாம் இப்போது கூறும் எதிர்காலத்தை பற்றி மட்டும் கூறுவதாக நினைக்கும் ஜோதிடம் ஒருகாலத்தில் ஒவ்வரு பிராமணரும் ஜோதிடம் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது .காலப்போக்கில் இது எதிர்காலத்தை கூறும் ஒரு கலையாக இதையே தொழிலாகக் கொண்ட சிலரால் மாற்றியமைக்கப்பட்டது

எனவே ஜோதிஷம் அல்லது ஜோதிடம் என்பது வேதத்தில் ஆறு அங்கத்தில் ஒன்று .சித்தர்களால் அர்த்தத்துடன் பேணி வளர்க்கப்பட்ட கலை .ஆனால் எதிர்க்காலம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல .இதின் பல உபயோகத்தில் எதிர்க்காலம் அறிவதும் ஒன்று .ஆனால் தற்போது இந்த சாஸ்திரம் இந்த எதிர்க்காலம் அறிவதிலேயே தேங்கிப் போய் நின்றுவிட்டது .காரணம் அனைவருக்கும் தெரிந்ததே.

இனி அதன் தொடர்ச்ச்யை விரிவாக காண்போம்
குறிப்பு
இது ஒரு குறுந்தொடர்தான்

ஜோதிடம் கூறும் போது எவைகளால் பலன்கள் மாறிவிடுகின்றன என்பதைப்பற்றி சிந்திப்போம் .
எனக்கு ஜோதிடம் நன்றாகவே தெரியும் .பல ஆண்டுகள் உழைத்து கற்றுக்கொண்டு இப்போது அதில் இருந்து ஒதுங்கிவிட்டேன். எனவே இதை எந்த மண்டபத்தில் வாங்கியது என்ற கேள்வி வராது என நினைக்கிறேன் .!
அன்புடன்
ஏ சுகுமாரன்


செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்

“செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்” என்ற நூலை படித்தேன். பல ஜோதிட புளுகளுக்கு கேள்விகள் மற்றும் பதில்கள் அறிவியல் ஆதரங்களுடன் விளக்கங்களுடன் எழுதி உள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு இளங்கோவன். அதனை தொகுத்து ஒரு பதிவுதான் இது.

மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணம் ஆகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகத்திற்கு அதே தோசம் உள்ள ஒருவருடன் திருமணம் செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்து. பெண்ணாக இருந்தால் கணவருக்கும் மாமியாருக்கும் ஆபத்து. மேலும் விவகாரத்து, பிரிவு மரணம் போன்ற பல நடக்கும், பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து எனவும் சொல்லுகிறார்கள். இதனை நம்பவும் ஒரு கூட்டம்.

கிலோ கணக்கில் தங்கமும், டன் கணக்கில் சீர்களும் செய்யத் தயாரானால் அதே செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டு போவது எப்படி? நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பார்பனர்கள் வேதம் ஓத நடந்த கண்ணகி கோவலன் வாழ்வில் சோக முடிவுகள் ஏற்படவில்லையா? நடந்த எல்ல விவகாரதுகளும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதக காரர்களுடயாத? விதவைகள் எல்லோருன் செவ்வாய் தோசம் உடையவர்களா? உடல் ஆரோக்கியம் குடும்ப சூழல் என பல காரணிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். அதற்கும் செவ்வாய் தோஷம் என முடிச்சு போடுவது அறிவீனம் இல்லையா?

அதாவது ஜாதகத்தில் லக்கனம், ஜென்மராசி மற்றும் சந்திரன் இருக்கும் இடம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் உள்ள சாதகம் ஆகும். உதாரணமாக மேஷ லக்கன ஜாதககாரருக்கு ரிசபம்,கடகம்,துலாம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் அவர் செவ்வாய் தோஷம் உடையவராவர்.

இப்படி பார்க்கும்போது 12 ராசிகளில் 6 ராசிகள் செவ்வாய் தோஷம் உடையதாகி விடுகிறது. அப்படி என்றால் பிறப்பதில் பாதிப் பேர் (50 சதவீதம்) தோஷம் உடையவர் ஆகிவிடுகிறார்கள். இப்படி பாதிப் பேர் தோஷம் உடையவர் என சொல்லிவிட்டால் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் அல்லவா? ஆகவே இதில் விதிவிலக்குகள் கொடுக்கிறார்கள். சனி,ராகு,கேது,குரு,சூரியன் செவ்வாயுடன் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் இல்லாதது என்பர். மேலும் சிம்மம்,கடகம் ஆகிய வீடுகள் தொசமற்றதாகி விடுகின்றன. இது போல் இன்னும் பல பரிகாரங்கள் உள்ளன. அனால் இதையும் மீறி செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பிறக்கீரார்கள்.

எப்படி பார்த்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தில் பிறக்கிற குழந்தைகள் செவ்வாய் தோஷம் உடயவர்கலகா பிறக்கின்றனர். எப்படி என்றால் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டுமணி நேரம் இருப்பார். அவர் 12 ராசியை கடக்க 24 மணி நேரம் ஆகிறது. ஆக பல நிவர்த்திகள் கிடைத்தாலும் குறைந்தது இரண்டு மணிநேரத்தில் செவ்வாய் தோசம் உடைய குழந்தைகள் பிறப்பார்.

2007 ம் ஆண்டு இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறந்தன. ஒரு மணிக்கு 1815 குழந்தைகளும், ஒரு நாளைக்கு 43560 குழந்தைகளும் பிறந்தன. இதில் குறைந்தது தினமும் 3630 குழந்தைகள் தோசமுடைய குழந்தைகளாகும். ஆனால் உண்மையில் மிக அதிகமானவர்கள் செவ்வாய் தோசம் உடயவர்கலகின்றனர். இதனை பார்க்கும் போது செவ்வாய் தோஷம் இவர்கள் வாழ்கையை கேள்விக்கு உள்ளக்கி விடுகிறது. ஆனால் உண்மையில் செவ்வாய் தோஷம் பற்றி எல்ல ஜோதிட சாஸ்திரங்களும் வலியுறித்தி சொல்லப்படவில்லை என சோதிட ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஜோதிட புளுகுகள் இத்துடன் விட்டுவைக்கவில்லை R .H நெகடிவ் ரத்தத்துடன் இந்த தோசத்தை இன்னைத்து வலு சேர்க்க பார்கிறார்கள். புளுகு மூட்டைகள்.

இரத்த வகைகளில் R.H நெகடிவ் இரதம் உடையவருக்கு அதே இரத்த வகையை சார்ந்தவருடன் தான் திருமணம் செய்ய வேண்டும்.அப்படி இல்லை என்றால் குழந்தை பிறக்காது .அல்லது பிறந்த குழந்தை இறந்து விடும் .ஆனால் தற்போது இதற்க்கு ஊசி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்பட துடன்கிவிட்டது.

ஆனால் ஜோதிடர்கள் ஜோதிடம் உண்மை எனக் கூறுவதற்காக R.H நெகடிவ் இரத்த வகிக்கும்,செவ்வாய் தோசத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறி வருகிறார்கள்.செவ்வாய் கிரகம் இரத்த நிறம் கொண்டது இதற்கும் இரத்தத்திற்கும் தொடர்பு உண்டு செவ்வாய் தோஷம் உடையவர்களுக்கு R.H நெகடிவ் இரத்த வகை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அதற்க்கான ஆதாரம் எதுவும் கூறவில்லை .ஆனால் இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் சுமார் 3 முதல் 4 சதவிதம் பேர் R.H நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர்.செவ்வாய் தோஷம் உடையவர்களோ யார் யார் என ஜோதிடர்கள் கூறினார்களோ அவர்களின் ஜாதகத்தை பெற்று அவர்களுக்கு இரத்த வகையை பரிசோதித்து பார்த்துள்ளனர்.இதில் 99 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு RH இரத்த வகை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைக்கு காரணம் சமுக பொருளாதார பிரச்சனைகள் தாம் என்பது நன்கு ஆலோசனை செய்பவர்களுக்குப் புலனாகும்.நோய்க்கு காரணம் கிருமிகள் தான் என்பதை ஏற்கனவே விஞ்ஞானிகள் நிருபித்துள்ளனர்.அதனால் தான் நோய் வந்தவுடன் மருத்துவரை நாடுகிறார்கள்.

வளர்ந்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை கொண்டு மனிதனின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். பிரச்சனைக்கான காரண காரியங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சிமேர்க்கொள்ள வேண்டும். எந்த செவ்வாய் கிரகத்தால் ஆபத்து, தோஷம் என்கிறோமோ அதே செவ்வாய் கிரகத்தில் மனிதன் தன் கால்களை விரைவில் பதிக்கப்போகிறான். அங்கெ தங்கி ஆய்வு செய்ய ஆய்வகமும் கட்டப்போகிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்று பகுத்தறிவோடு சிந்தித்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்போம்.

– சங்கமித்திரன்



ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Planet           Mass    (10^22 kg)  Distance Gravity
(Moon=1) Tides
(Moon=1)
Mercury            33 92 0.00008 0.0000003
Venus             490 42 0.006 0.00005
Mars                64 80 0.0002 0.000001
Jupiter             200,000 630 0.01 0.000006
Saturn               57,000 1280 0.0007 0.0000002
Uranus             8,700 2720 0.00002 0.000000003
Neptune         10,000 4354 0.00001 0.000000001
Pluto             ~1 5764 0.0000000006 0.00000000000004
Moon             – 7.4 0.384 1.0 1.0
(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட “அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே” என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.

1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது; ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது. அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.


கிரகஙகளுக்கு சக்தி இருப்பதாகவே வைத்துக்கொண்டால், அதன் பாதிப்பு பூமியில் குறித்த இடதில் உள்ள அனைவருக்க்கும் குறித்த நேரதில் சமனாகவே இருக்க வேண்டும். எந்தவோரு பௌதீக கணியமும் பிறந்த நேரதில் தங்கியிருப்பதில்லை.


 

 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply