இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 53,54,55

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 55
சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்?

முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.

சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍பார்வதி விலகிக் கொள்ள… சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.. முடிவு?? !! அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்… பரமசிவன் – பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 55

சைவத்தில் இது மட்டுமல்ல மொழி பேதமும் உண்டு. முருகன் அழகான தமிழ்ப்பெயர். இச்சொல்லின் பொருளே அழகு என்றுதான் அர்த்தம். சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்… பரமசிவன் – பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

சமஸ்கிருதக்காரர்கள்.அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா? இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில்.

எப்படி என்று கேட்டால் பெயர்க்காரணங்களை வைத்தே எளிதில் கூறிவிடலாம். முருகன் என்றால் அழகன். அதாவது தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

சரவணபவ, கந்தன்… இவையெல்லாம்…? அர்த்தம் சொல்கிறேன். பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை முருகன். இது தமிழ் பதில் என்று சொன்னேன்.அப்படியென்றால் சமஸ்கிருத பதில் என்ன? கந்தன், சரவணபவ என்றெல்லாம் சொல்கிறோமே? என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது. பரமசிவனும், பார்வதியும் தங்களது லோகத்தில் லயித்திருக்கிறார்கள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது… பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.
பார்வதிக்கு அப்போது என்ன வேலையோ? இல்லை ஸ்வாமி… இப்போது வேண்டாம். நான் தயாரில்லை… என்கிறார்.

பரமசிவனுக்குள்ளோ மன்மதப்புயல், பார்வதியை பார்க்கப் பார்க்க சுற்றிச் சுழன்று அவரை தாக்குகிறது. பார்வதி மீது மன்மத தாண்டவம் ஆடிட மிகத்தயாராக இருக்கிறார். ஆனால்… சக்திக்கு சம்மதமில்லை.பார்வதியை துரத்துகிறார் பரமசிவன். நாதனின் வேட்டையிலிருந்து தப்பிக்க நழுவி ஓடுகிறார் பார்வதி. பரமசிவனாயிற்றே… விட்டு விடுவாரா? பார்வதியை வளைத்து தன் கைகளின் எல்லைக்குள் இழுத்து விட்டார்.

`தேவி… உன்னை சுகிக்க சித்தமாயுள்ளேன்… தேக சம்பந்தம் கொள்ள தாகமாயிருக்கிறேன். ஏன் நீ விலகிச் செல்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ – பார்வதியை ஒரு கொடிபோல சுற்றிக்கொண்டு பரமசிவன் விரகதாபத்தோடு வினா கேட்கிறார்.

`இல்லை நாதா… இப்போது வேண்டாமே…’ – மறுபடியும் அவளது பதில் இதுதான்.பகவானாக இருந்தாலும் தன் பாகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாக பார்வதியை இறுக்கி கட்டியணைத்தவர்… அவளது ஆடைகளையும் அகற்ற ஆரம்பிக்கிறார்.

`ஸ்வாமி… நாதா…’ கெஞ்சுகிறார் பார்வதி. ஆனால்… இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகத்துக்கான போருக்கு தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.

பார்வதியின் ஒவ்வொரு பாகங்களையும் தன் கட்டுக்குள் பரமசிவன் வைத்திருக்க… இப்போதும் சக்தி சம்மதிக்கவில்லை. சிவனுக்கோ தாங்க முடியவில்லை. மன்மதக் கோபம் அவருக்குள் கொந்தளித்தது. பார்வதி மீது பாய்ந்து படர்ந்தார்.

ஆனால்… பார்வதியோ… சரியாக அந்த க்ஷணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள… பரமசிவனின் உயிர்த்துளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.

பார்வதி விலகிவிட்டதால் பரமசிவனின் ரேதஸ் (இந்த்ரிய துளிகள்) அப்படியே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தன. அந்த உயிர்த்துளிகள் அப்படியே கங்கையில் வந்து விழுந்தன. சிவபெருமானின் சொத்தாயிற்றே…. கங்கை நீரோட்டத்தோடு வேக வேகமாக பயணித்தன.

கங்கா மேலே சவாரி செய்த அந்தத் துளிகள்… கங்கைக்கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க…அப்படியே அது குழந்தையாக அவதரித்தது.

நாணலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சரம். காட்டுக்கு வனம். சரவனம்… – நாணல் காட்டில் பின் உருவானவன் – என்பதால் சரவணன் – இப்போது சரவணன் என்று அழைக்கப்படுகிறான் முருகன்.சமஸ்கிருதத்தின்படி, சரவணன் இப்படித்தான் அவதரித்தான். பெயர் தரித்தான்.

கந்தன் என்றால்…? அதை கந்தன் என்று சொல்லக்கூடாது. உண்மையான சரியான சமஸ்கிருதப் பெயர் ஸ்கந்தன்.சரி… ஸ்கந்தன் என்றால்? இப்போது ஒரு வடமொழி கதை வாசித்தீர்களே… அதற்குள் வரும் மூலப் பெயர்தான் இது.

அதாவது… ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்… அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

முதலில் ஸ்கந்தன். அதன் பிறகுதான் சரவணன்… இப்படித்தான் சிவனுக்கு சரவணன் `பிறந்தான்’ என்கின்றன சமஸ்கிருத காவ்யங்கள். ஆனால்… அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி.

முருகனை ஸ்கந்தன், சரவணன் என கருத தமிழ் இடம் கொடுக்காது.  தவிரவும் ஆபாசமான காரணங்களை வரையறுத்திருக்கிறது சமஸ்கிருதம்.

இப்படிப்பட்ட ஸ்கந்தன், சரவணனுக்கு சுப்ரமணியர் எனவும் ஒரு பெயர். இதன் அர்த்தம் உயர்ந்த பிராமணன். இப்போது புரிகிறதா? முருகனை சிவனின் மகனாக்கியது போலவே… கணபதியையும் மகனாக்கி விட்டார்கள். கணபதி யார்? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ( தொடரும் )


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 54. தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

பகுதி 56-1 பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 54

“அதை” காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட… சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி… சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.

பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.

இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்… மிகப்பழைய காலத்தின் அழகான நாள்… சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?

பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.

இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.

சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை…பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?

அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா… சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்… இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்… தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.

நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்… இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக… சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?…வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்

சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.

ஆனால், சிவபெருமான்… தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக… சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து… ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.

இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி… ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே…?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்… பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்கமொழி பேதமும் பின்பற்றப்பட்டிருக்கின்றன.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

வருகிறது …
பாகம் 56 ல் பார்வதி குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்த சிவன்.!!!! முடிவு?? விநாயகர் . யானை தலை ஏன் ?

பகுதி 53. பகவானின் சாப்பாட்டுப் பட்டியலை பார்த்தீர்களா?

பகுதி 55 சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍ பார்வதி விலகிக் கொள்ள… சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.. சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்? முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 53 

பகவானின் சாப்பாட்டுப்பட்டியலை பார்த்தீர்களா?

பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?… பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை.

மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை.

பகவானின் போஜனப் பட்டியலை பார்த்தீர்களா?… காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நித்யப்படி (தினந்தோறும்) சாப்பிடும் இஷ்டமான போஜனம் இட்லி நாம் சாப்பிடும் சாதாரண இட்லியல்ல.

குடலை இட்லி, அப்படியென்றால்?…பெருமாள் கோவில்களில் துளசி பறிப்பதற்கென்றே ‘குடலை’ என அழைக்கப்படும் ஒரு நீண்ட கூடை வைத்திருப்பார்கள். நீண்ட உருளை வடிவில் இருக்கும் இந்த கூடை…இதே போன்று ஒரு பாத்திரம் செய்து… அதில் மாவை ஊற்றி வேகவைத்து வெளியே எடுத்தால் அதுதான் குடலை இட்லி.சரி… இவ்வளவு நளபாகங்களை சொல்லியாகிவிட்டது.

இத்தனை நளபாகங்களும் நிர்மால்யம் என்றது ஆஹமம்

அப்படியென்றால்?…பாஞ்சராத்ர ஆகமம் சொன்னது…

“சொரூபாம் பிரதிமாம் விஷ்ணோஹோப்ரஸன்ன வதனே க்ஷணாம் க்ருத்துவாஆத்மன ப்ரீதிகரீம் சொர்ண ரஜதா திபிதாமர்ச்சயேது தாம்ப்ரணமேது தாமே விசிந்தேதுவிஷதீ அபாஸ்த தோஷஸ்துதாமேவ ப்ரம்ம ரூபிணிம்….”

வேத வழிமுறைகளை கர்மாக்களை புத்தர் வேகமாக வீரியமாக அடித்து புரட்டி போட்ட காலத்துக்குப் பிறகு…“உனக்கொரு புதுவழி சொல்கிறேன் கேள்.

விஷ்ணுவை பிரதானமாக்கி உனக்கு பிடித்தமான உருவத்தை சிறிய அளவில் தயார் செய்து கொள். அது கல்லாக இருக்கக்கூடாது. தங்கத்திலேயோ வெள்ளியிலேயோ செய்ததாக இருக்கவேண்டும். அதை நீ தனியே வைத்து பூஜை செய்து கொள்…” என்றது.

இதன் பிறகு தென்னாட்டில் பெரிய பெரிய கோவில்களையும்… சிலைகளையும் பார்த்தவர்கள் ‘இது நன்னா இருக்கே… இதுக்கும் நாங்களே பூஜை பண்றோம்…’ என்று வந்தனர். பிறகுதான் பகவானுக்கும் பசிக்கும் அவனுக்கு நைவேத்யம் செய்யணுமே என்று சொல்லி… இவ்வளவு நளபாகங்களை கண்டுபிடித்தனர்.

சரி… நிர்மால்யம் என்றால் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே?… பகவானுக்கு இத்தனை விதம் விதமான பட்சணங்கள், பலகாரங்கள் இத்தியாதிகளை நைவேத்யம் பண்ணுகிறீர்களே…

அவன் அதை சாப்பிடுகிறானா?… அவன் முன்னால் வைத்துவிட்டு அதை கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வந்து விடுகிறீர்களே?… அதற்குள் அவன் அதை ஸ்வீகரித்துக் கொண்டிருப்பானா?…எடுத்துக் கொண்டு போய் என்ன செய்கிறோம்?

பகவானின் பேரைச் சொல்லி நாம் சாப்பிடுகிறோம். இன்றும் கூட பெருமாள் கோவில்களில் உத்ஸவத்தின் போது புளியோதரையில் காரமில்லை, உப்புமாவில் உப்பில்லை என்று பெரிய சண்டையே நடக்கிறது.

இதெல்லாம் எதற்கு?…. பகவான் சாப்பிட்டதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?… அது எச்சிலாயிற்றே?… அவன் எச்சில் செய்ததை நான் சாப்பிடுவதாவது… அதை தூக்கிப் போடுங்கள். தூர தூக்கிப்போடுங்கள். அதை உபயோகப்படுத்தாதீர்கள். இதுதான் நிர்மால்யம்.

அதாவது ‘எச்சிலை சாப்பிடாதே’ சாப்பிட்டால் உனக்கு நிர்மால்ய தோஷம். ஆகமம் சொன்னபடி சிலை செய்து, பூஜித்தவர்கள் இந்த விஷயத்தை கேட்டவுடன் ‘அடிமடியில் கைவைக்கிறதே’ என்று நினைத்தார்கள்.

அப்படியென்றால் நாம் எப்படி பிழைப்பது?… யோசித்தனர்அதெல்லாம் முடியாது என்றனர். பகவானின் எச்சில்தானே அதை சாப்பிட்டு விட்டுப் போகிறோம். விடுங்கள் என்று அன்னக்கொடி பிடித்தனர்.

இதைத்தான் வேதாந்த தேசிகன் தனது ‘பாஞ்சராத்ர ரட்சை’யிலே சொல்லியிருக்கிறார். இவ்வளவு பட்சணம் பலகாரம் பண்ணி பகவானுக்கு படைத்துவிட்டு அதை நிர்மால்யம் என்று தூக்கிப் போட்டால் எப்படி?…

அது சரிப்பட்டு வராது.எனவே பெருமாள் கோவில்களில் இந்த நிர்மால்யம் சரிப்பட்டு வராது. பெருமாளுக்கு படைத்தவற்றை சாப்பிடுவதால் நிர்மால்ய தோஷம் வராது.

சிவன் கோயில்களில் வேண்டுமானால் நிர்மால்ய (எச்சில்) தோஷம் இருக்கட்டும். இங்கே வேண்டாம்…” என்கிறார் வேதாந்த தேசிக ஸ்வாமி… அதாவது இதன் உள்ளர்த்தம் என்ன?

பெருமாள் கோவில்களில் தான் வகை வகையாய் நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

சிவன் கோவில்களில் இப்படி வகை வகையாய் சுவை சுவையான பதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

எனவே சிவன் கோவில்களில் வேண்டுமானால் எச்சில் தோஷம் என கருதி அதிகபட்சம் சம்பா சாதம்தான். அதை ஒதுக்கி விடலாம்.

ஆனால் சுவையான ‘சப்பு’ கொட்டி சாப்பிடும் பெருமாள் கோவில் பதார்த்தங்களை எப்படி நிர்மால்யம் என்று தூரப் போட முடியும்?… இப்போது புரிகிறதா?

சரி… எதற்கு இதைச் சொல்ல வந்தேன். நாம் தெய்வங்களிலும் பெண் தெய்வங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி பார்த்து வருகிறோம் அல்லவா?… சாப்பாட்டு விஷயத்தில் கூட அது பின்பற்றப்படுகிறது என்பதை சொல்லத்தான் இவ்வளவு விஷயங்களையும் விளக்கினேன்.

அதாவது பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் நைவேத்யத்தை பிராட்டிக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. அது ஆண் தெய்வமான பெருமாளுக்கு மட்டும்தான். அவர் சுவைக்க மட்டும்தான்.

பிராட்டிக்கு தனித்தளிகைதான். இன்றும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு போய்ப் பாருங்கள்.

பெருமாளுக்கு செய்த தளிகையை தாயாருக்கு அதாவது பெண் தெய்வமான பிராட்டி பக்கம் கூட கொண்டு போக மாட்டார்கள். பொருளாதார வசதியில்லாத பெருமாள் கோவில்களில் மட்டும்தான் தவிர்க்க முடியாமல் பெருமாளுக்கும் தாயாருக்கும் சாப்பாட்டு சமாச்சாரம் சமமாக இருக்கிறது.

பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை. மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை. பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?… –அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 52 – 2. பகவானுக்கு குளிரும். அதனால் குளிர்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை
பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். பகவானுக்கு திருஷ்டி படும். திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’

பகுதி 54. தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply