கீழடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு ஒரு காட்சித் தொகுப்பு!

கீழடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு ஒரு காட்சித் தொகுப்பு!

சென்னை: மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடைநிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பியதில் அது 2200 ஆண்டுகளுக்கும் முந்தியது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெறும் 50 செண்ட் அளவில் தோண்டிப் பார்த்ததில் வெளிப்பட்ட பழந்தமிழரின் வைகைக்கரையில் வாழ்ந்த மனிதரின் நாகரிகம், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து புரட்டி எழுத வேண்டிய காலம் வந்துள்ளது… [செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள்தான் கீழடி…!] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சென்னையில் நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் கீழடி குறித்த கண்காட்சி வைக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீரசா (இரவிக்குமார்) அவர்களால் தயார் செய்யப்பட்ட கீழடி குறித்த கண்காட்சித் தொகுப்பு நமது வாசகர்களுக்காக…! Related Videos 01:57 நம்ம ஊரு டிரைவராலதான் இப்படியெல்லாம் ஓட்ட முடியும்-வீடியோ.. 01:09 விவசாயிகளுக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம்-வீடியோ.. 00:40 கவிஞர் நா.காமராசன் இறுதிச்சடங்கு-வீடியோ.. கீழடி கண்காட்சி கீழடி நாகரீகம் குறித்த கண்காட்சிப் படங்களின் தொகுப்பு.

தமிழர்களின் தொன்மை நாகரீகம் தமிழர்களின் தொன்மை நாகரீகம் குறித்த விரிவான ஆதாரச் சான்றுதான் கீழடி. புதைந்த நிலையில் தமிழர்களின் நாகரீகம் குறித்த சான்றுகள் ஹரப்பாவிலும் மொகஞ்சதராவிலும் புதையுண்ட நிலையில்தான் கிடைத்தன. சிந்து வெளி நாகரீகம் சிந்துவெளி நாகரீக மக்களின் ஊர்கள், பெயர்கள் தமிழர்களை ஒத்துள்ளன. Central Government Reaction On Keezhadi Excavation கீழடி நாகரீகம் 1974ம் ஆண்டு கீழடியில் மாணவன் ஒருவன் மூலம் தற்செயலாகவே முதல் பொறி கிடைத்தது. தாழிகள், மண்டை ஓடுகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின்போது மண்டை ஓடுகள், எலும்புகள், நாணயங்கள், தாழிகள் கிடைத்தன. கலெக்டருக்கு கடிதம் இதையடுத்து கீழடி பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி தகவல் தெரிவித்தார். பள்ளியில் தஞ்சம் புகுந்த தொன்மை கீழடியில் கிடைத்த பொருட்களை பள்ளியிலேயே ஹிஸ்டரி கார்னர் என்ற பகுதியை ஏற்படுத்தி பாதுகாத்து வைத்தனர். பின்னர் சென்னை அருங்காட்சியகத்துக்கு அது இடம் மாறியது. 37 ஆண்டுகள் கழித்து இப்படியாக 37 ஆண்டுகள் கழிந்த நிலையில்தான் 2013ம் ஆண்டு புதிய வெளிச்சம் பாய்ந்தது கீழடியை நோக்கி. வரலாற்று ஆய்வு 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசின் அனுமதியுடன் இங்கு ஆய்வுகள் தொடங்கின.

சங்க காலக் கட்டடங்கள் கீழடியில் நடந்த ஆய்வின்போது 10க்கும் மேற்பட்ட சங்க காலக் கட்டடங்கள் நமக்குக் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நகர நாகரீகம் இங்கு கிடைத்த கட்டமைப்புகள், நகர அமைப்புகளைப் பார்க்கும்போது சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை தகர்ப்பதாக அது அமைந்துள்ளது. செழுமையான வாழ்வியல் சான்றுகள் இங்கு கிடைத்துள்ள பொருட்களையும், பெயர்களையும் பார்க்கும்போது நமக்குக் கிடைத்திருப்பவை செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள் என்பது தெரிய வரும். வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்! செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள்தான் கீழடி…! மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை – அமைச்சர் மகேஷ் சர்மா கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.. மத்திய அரசு ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/know-the-history-keeladi-tamils-history/articlecontent-pf254703-291067.html

 

 

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply