கவிப்பேரரசு வைரமுத்து – ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’

கவிப்பேரரசு வைரமுத்து – ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’

கவிப்பேரரசு வைரமுத்து - ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’சாதாரண கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த கவிஞர் வைரமுத்து இன்று இந்திய திரையுலகம் முழுவதும் அறியப்பட்ட முக்கியமான பாடலாசியராக உள்ளார். திராவிட இயக்கச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்து பால்யம் முதலே தமிழ் மீது ஆர்வத்துடன் வளர்ந்தார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியை தன்னுடைய ‘தமிழ் ஆசான்’ என்று விளிக்கும் வைரமுத்து, கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்பட வசனத்தால் தமிழ் மீது தீரா பற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் முதல் கவிதை நூல் ‘வைகறை மேகங்கள்’. கண்ணதாசனைப் போல எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் எழுதிய படைப்பே வைகறை மேகங்கள் என்று வைரமுத்துவே குறிப்பிட்டுள்ளார்.

கவிதை, நாவல்கள், சிறுகதை தொகுப்பு என வைரமுத்து இதுவரை 37 படைப்புகளை வெளியிட்டிருக்கிறார். புதுக்கவிதை மரபை தமிழில் தொடங்கி வைத்தாக போற்றப்படும் மகாகவி பாரதியாருக்கு புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்தும் வகையில் வைரமுத்துவால் எழுதப்பட்ட ‘கவிராஜன் கதை’ புத்தகம் தமிழின் முதல் கவிதை வழி வாழ்க்கை வரலாற்று நூலாகும். எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்கிற மூன்று தலைமுறை திரையிசைப் பாடல்களையும் தாண்டி இன்றளவும் வைரமுத்துவின் திரையிசைப்பாடல் ஆதிக்கம் தொடர்கிறது.

தேசிய விருது பெற்ற பாடல்கள்:

1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடல்.

1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடல்

1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடல், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காக சேர்த்து.

2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கிள்ளி பார்த்தேன்’ என்ற பாடல்

2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல்.

2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடல்

2017ல் தர்மதுரை படத்திலிருந்து, ‘எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்றே’ பாடல்.

வைரமுத்துவின் சாதனைகள்:

7 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இந்திய பாடலாசிரியர்

6 தமிழ்நாடு அரசு திரைப்பட விருது பெற்ற பாடலாசிரியர்

பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருது பெற்ற கவிஞர்

7,500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள் எழுதியுள்ளார்

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்

வைரமுத்து பற்றி தலைவர்கள்

மகா சமுத்திரத்தில் துளியைத் தேடுவது போன்றது, வைரமுத்து கவிதையில் சிறந்தவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது – முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்

கவி சாம்ராட் என்று வைரமுத்துவிற்கு பட்டமளித்தார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்

’இந்த கருப்பு மனிதனுக்குள் நெருப்புப் பிழம்பா?, இதய பைக்குள்ளே எத்தனை கர்ப்பப்பைகள்’ – முன்னாள் முதல்வர் கருணாநிதி.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-entertainment-important/13/7/2017/kavi-vairamuthu-celebrates-64th-birthday

 

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply