மறைந்த அமரர் ஆசிரியர் சிவப்பிரகாசம் ஒரு ஆளுமைமிக்க பத்திரிகையாளர்
நினைவேந்தல் நிகழ்ச்சியில் புகழாரம்
நேற்றைய நாள் (ஞாயிற்றுக் கிழமை) கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் மறைந்த வீரகேசரி நாளேட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்களுக்க ஒரு நினைவேந்தல் நி்கழ்ச்சி நடத்தியது.
கடந்த சிலமாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவர் சென்ற ஏப்ரில் 14 அன்று தனது அகவை 83 இல் இயற்கை எய்தினார். 1983 இல் கொழும்பில் நடந்த இனக் கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதன் பின் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.
அங்கு நீண்ட காலம் பொஸ்ரன் மாநிலத்தில் வசித்து வந்தார். அவருடைய துணைவியாரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசத்துக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இவர் இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வந்தவர். திரு.சிவப்பிரகாசம் முதலில் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் திரு.எஸ்மன்ட் விக்கிரமசிங்க வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதையடுத்து வீரகேசரி நாளேட்டின் உதவி பிரதம ஆசிரியராக அவரை நியமித்தார்.
.
அக்காலத்தில் திரு.கே.வி.எஸ்.வாஸ் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் அவரது இடத்தில் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பினைு திறம்பட நடாத்தி வந்தார்.
இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் வீரகேசரி முதல் இடத்தைப் பிடித்த நாளேடு என்ற பெயரினையும், புகழையும் பெற்றது. அத்துடன் மித்திரன் என்ற மாலை வெளி
யீட்டினையும் தொடங்கினார். அந்த வெளியீடு இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.
யாழ்ப்பாணம் மாதகலில் பிறந்த சிவப்பிரகாசம் 1958 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அவர் கொழும்பு ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனத்தில் சேர்ந்து ஓப்சேர்வர் பத்திரிகையில் 1958 முதல் 1962 வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பேராசிரியர் க. கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தினகரன் நாளேட்டின் துணை ஆசிரியர் பணியில் சேர்ந்தார். செருமனி, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கியக் கட்டுரைகளை எழுதினார்.
1975 ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் நாட்டுக்குச் சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்து கொண்டார்.
இந்தப்பயணக்கதை பின்னர் சிரித்தன செம்மலர்கள் என்ற பெயரில் 1976 யூலையில் வீரகேசரி வெளியீடாக வெளியானது.
இனக்கலவரகாலத்தில் தமது அனுபவங்களையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.
1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்த சில மாதங்களிலேயே மாலை நாளேடாக மித்திரனை சிவப்பிரகாசம் அறிமுகப் படுத்தினார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்தினார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக் கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.
யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடாகக் கொண்ட சிவப்பிரகாசம், பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரி ஆனார். அக்கால கட்டத்தில் பிரதான தமிழ் பத்திரிகைகளாக கொழும்பிலிருந்து வீரகேசரியும், தினகரனும் வெளிவந்து கொண்டிருந்தன. இவர் ஏரிக்கரை நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
அமரர் சிவப்பிரகாசம் அவர்களது இருமொழிப் புலமை, ஆளுமைபற்றி திரு து. .சிவப்பிரகாசம், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் சிவநேசச்செல்வன், தகவல் மாத இதழ் ஆசிரியர் திரு திருச்செல்வம், செந்தாமரை வார ஏட்டின் ஆசிரியை ராஜி அரசரத்தினம், நக்கீரன் தங்கவேலு, தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் உரையாற்றினார்கள்.
அமரர் சிவப்பிரகாசம் அவர்களது பிள்ளைகள் சஞ்சயன், பிரதீபா நேரில் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். சஞ்சீவன் அமெரிக்கா நாசா நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தொடக்கத்தில் இசைக் கலைமாமணி மனோரஞ்சிதம் நித்தியானந்தனின் மாணவ, மாணவிகள் அருட்பாக்களை படித்தார்கள்.
அமரர் சிவப்பிரகாசம் அவர்களின் ஆத்தமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியை திரு வீரசுப்ரமணியம் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
https://www.facebook.com/V.T.NakKeeran
Leave a Reply
You must be logged in to post a comment.