கேரள சாமியார் பற்றி அம்பலமான தகவல்

கேரள சாமியார் பற்றி அம்பலமான தகவல்

இளம் பெண்ணின் தாக்குதலுக்கு ஆளான சாமியார் பற்றிய உண்மை தகவல் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த கங்கேசானந்த தீர்த்தப்பதா என்ற ஹரிசுவாமி, பெட்டா என்ற நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் ஆறு ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்துள்ளார்.

அப்போது, அந்த நபரின் மகளை, 12ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தற்போது கல்லூரியில் படிக்கும் அந்த 23 வயது பெண்ணிடம், கடந்த வெள்ளிக் கிழமை இரவும் பூஜையின் போது அத்தகைய செயலில் ஈடுபட சாமியார் முயன்றபோது, அதை எதிர்த்து கடுமையாக போராடிய அந்த இளம் பெண், இறுதியில் ஹரிசுவாமியின் ஆணுறுப்பை கத்தியால் துண்டித்துள்ளார்.

துணிச்சலாக செயல்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் போலி சாமியார் எனத் தெரிய வந்துள்ளது. இவர் மீது வழக்குப் பதிந்துள்ள பொலிசார், அவருக்கு எந்தெந்த வழியில் நிதி உதவிகள் கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://news.lankasri.com/india/03/125645?ref=rightsidebar-tamilwin


சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்தது ஏன்? மாணவியின் கதறல்! பாராட்டிய முதல்வர்

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் மர்ம உறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் ஹரிஸ்வாமி(54).

இவரது ஆணுறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே எனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.

தந்தையை குணப்படுத்துவதாக கூறி ஹரிஸ்வாமி வீட்டிற்குள் நுழைந்தார், அடிக்கடி வந்து பூஜைகள் செய்வார்.

தந்தையின் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட சாமியார், எனது தாயுடன் தவறாக பழகினார்.

ஒருகட்டத்தில் என்னையும் பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார், கடந்த 8 ஆண்டுகளாக வேதனையை அனுபவித்தேன்.

இதுதொடர்ந்து கொண்டே இருந்தது, நேற்றும் தவறாக நடக்க முயன்ற போது கூரிய கத்தியால் ஆணுறுப்பை துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

வலியால் அலறிய ஹரிஸ்வாமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர், எனினும் 90 சதவிதம் சேதமடைந்ததால் மீண்டும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒரு தைரியமான செயல், இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்த மாணவியை பாராட்டியுள்ளார்.

எனினும் இந்த புகாரை மறுத்துள்ள சாமியார், தன்னைப் போன்ற சாமியாருக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை என்பதால் தானே வெட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.

http://news.lankasri.com/india/03/125539?ref=youmaylike1

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply