ஆய்வு; நக்கீரன்
இதைத்தான் சொல்வது தலையிருக்க வால் ஆடுது என்று. தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு தேவைப்படுகிறது. ஆனால் ஐ.நா.ம.உ பேரவைக்கு கடிதம் எழுத தமிழரசக் கட்சியின் அனுமதி தேவையில்லை. இது என்ன நியாயம்?
ஒரு கட்சியில் இருப்பவர்க்கு சில உரிமைகள் உண்டும். அதே போல் சில கட்டுப்பாடுகளும் உண்டு. கட்சித் தலைமையோடு மாறுபடலாம். ஆனால் அதனை முறையாக செய்ய வேண்டும்.
ஐ.நா.ம.உ பேரவைக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 3 நா.உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஐநாமஉ பேரவை கால அவகாசம் கொடுக்கவில்லை என்றால் அதனால் யாருக்கு இலாபம்?
சிறிலங்கா அரசுக்குத்தானே இலாபம். அதன் பின் ஐநாமஉ பேரவையின் பிடியில் இருந்து சிறிலங்கா நழுவ முடியும். இந்த சின்ன விடயத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி நா.உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. “மக்களைப் பேய்க் காட்ட முடியாது” என்று ஒருவர் சொன்னார். யார் சொன்னார்கள் தமிழ்மக்களைப் பேய்க்காட்ட வேண்டும் என்று? எமது மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.
இன்னொரு நா.உறுப்பினர் “அப்படியென்றால் கட்சி என்மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்” என்கிறார். இவர் “நான் தமிழரசுக் கட்சியில் அதிக காலம் நீடித்திருக்க மாட்டேன்” எனத் தன்னைக் காண வருபவர்களிடம் சொல்லி வருபவர். எனவே அந்த விருப்போடு இருப்பவர் கட்சி என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் ” என்று சொல்வதில் வியப்பில்லை.
தலைவர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். உண்மையில் கால அவகாசம் கொடுப்பது ஐநாமஉ பேரவையல்ல. கால அவகாசம் கொடுப்பது ஐநாமஉ பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள்.
குறிப்பாக சொன்னால் ஐநாமஉ பேரவையின் எண் 30-1 தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்கா, மொன்ரேநீக்றோ(Montenegro) ஹேஸ்கோவின(Herzegovina) போன்ற நாடுகள். கடந்த 18 மாதங்களில் சிறிலங்கா தீர்மானம் 30-1 இல் குறிப்பிட்ட எதனையும் முழுமையாக செய்யவில்லை.
இருந்தும் சிறிலங்கா அரசு ஒரு சில தொடக்க நகர்வுகளை எடுத்துள்ளது. பயங்கரவாதச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கையில் உள்ள தனியார் காணிகளில் ஒரு பகுதி விடப்பட்டுள்ளது. சம்பூரில் முற்றாக விடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.