மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயயங்களுக்கு சென்று வாங்கி கொடுத்து வருகின்றன. இன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.
ஏகாதசி போல் மிகவும் உத்தமமான விரதம் சிவராத்திரி விரதம் ஆகும்.இன்றைய நாள் இரவு முழுவதும் சதுர்த்தசி திதி நடப்பில் இருப்பது சிறப்பு. இன்று இரவு அமாவாசை கலப்பு இருந்தால் அதை குஹூ தோஷம் என்பர். திரயோதசி கலப்பு இருப்பது சிறந்தது. மேலும் சதுர்தசியுடன் திருவோணம் நட்சத்திரம் சேருவது மிகவும் சிறப்பு.
சிவராத்திரி முகூர்த்தம்
இந்த வருடம் திருக்கணித பஞ்சாங்கப்படி திரியோதசி திதி இரவு சுமார் 09-39 மணி வரை இருக்கிறது சதுர்த்தசி திதி வெள்ளி இரவு 12-00 மணிக்கு இருப்பதால் வெள்ளிக் கிழமை இரவு சனிக் கிழமை காலை மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தின நாள் சிவராத்திரி என சிவன் கோயில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.