சிங்களமும் நம்பிகளும்….
-கரவைதாசன்-
சிங்களம் தோன்றி குறைந்தது ஆயிரம் வருடங்கள் என்பதற்கான ஆதரங்கள் தமிழர்கள் வரலாற்றினிலேயே காணக் கிட்டும்.
ராஜராஜ சோழன் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு, ஆனால் அவரின் தந்தை பராந்தகச் சோழன் பாண்டியர்கள் மீது படை எடுத்துச் சென்றபோது அவர்கள் தங்கள் முடியினையும் செங்கோலினையும் இலங்கையில் தங்களது நம்பிக்கைக்குரிய சிங்களர்களிடம் (சம்பந்திகளிடம்) மறைத்து வைத்திருந்தனர்.
முடியினையும் செங்கோலினையும்தேடி அவர் இலங்கைக்கு படை எடுத்து வந்தபோது அங்கே வாழ்ந்த மறையர்கள் அநுராதபுர காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டார்களாம். வெறுங்கையுடன் பராந்தகச் சோழன் திரும்பிச் செல்ல நேர்ந்தது.
இம்மறையர்கள் வாழ்ந்த பகுதியே மராட்சி ஆகும். பின்னாளில் இப்பகுதி வடமராட்சி, தென்மராட்சியென பிரிந்து போயிட்டு. அங்கிருந்த இராசதானி சிங்கை நகர் என அழைக்கப்பட்டது. அங்கே வாழ்ந்த போருக்குரிய மக்கள் நம்பிகள் என அழைக்கப்பட்டார்கள். அந்த தளபதியின் பெயர் தேவன் மாணிக்கன்.
தேவனுக்கு முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை அவரது இரண்டாவது தாரப் பெண் றண்எல எனும் சிங்களப் பெண். அவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் அந்த ஐந்து பேரும் தளபதிகள். இவர்களை கத்தி நம்பிகள் என அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கத்தி நம்பிகள் நழுவி நளவர்களாகிப் போய்விட்டனர் என்பது ஒரு வரலாற்றுக் கதை.
பின்னாளில் இராஜராஜனின் மகன் இராசேந்திரன் படை நடத்தி வந்து முடியையும் செங்கோலினையும் அபகரித்துச் சென்றதுடன் பொலநறுவையில் ஓர இராசதானி அமைத்து ஆண்டான் என்றும் அவர் கட்டிய பொலநறுவைச் சிவன் கோவில் நற்சான்றாக இன்றும் உள்ளது. இந்நம்பிகளின் வழியின் பால் உறவினன் தான் கதிர்காமப் பகுதியில் வாழ்ந்த தமிழர் கடவுள் முருகக் கடவுளின் மனைவி வள்ளியின் தந்தை நம்பி ஆவார். இவர்கள் மரங்களில் தேன் எடுப்பவர்கள். தேனினை எடுத்து வாழ்ந்து வந்தமையால் அக் குறிஞ்சிநில நம்பிகள் நறுவர்கள் என அழைத்து வரப்பட்டனர்.
தேனுக்கு நறு என நல்ல தமிழ்ப் பெயருண்டு. பின்னாளில் அந் நறுவர்களையும். குறவர்கள் என ஆக்கிப்போட்டார்கள். ஆனால் கண்டிப்பகுதியில் கண்டி அரசனின் போர்ச்சமூகமாக வாழ்ந்தவர்கள் ரதல என்னும் உயர் சமூகமாக சிங்கள சமூகங்களின் மத்தியில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
பண்டாரங்கள்
Suthakar Parameswaran
பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ மரபை பின்பற்றும் வெள்ளாளர் சமூக உட்பிரிவைச் சார்ந்தவர்களாவர்.[1][2][3] ஆண்டிப் பண்டாரம், பண்டராம், யோகிஸ்வரர், வைராவிகள், புலவர், போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
வரலாறு
தமிழக வரலாற்றின் படி 9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.
ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி…காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.
வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.
தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் என்ற சாதியினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல இன்று அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது.
பெயர்க் காரணம்
பண்டாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரல்ல மாறாக சைவ சமயத்தை குறிப்பாக வீரசைவ சமயத்தை பின்பற்றும் மக்களின் சமய சடங்குகளை செய்வதற்கு நியமிக்கப்படும் குருமார்களை குறிக்க பயன்படுத்தும் ஒரு பொதுவான வார்த்தையாகும். சைவ சமயத்தை பின்பற்றும் பல சமூக மக்கள் தங்கள் சொந்த சமூகத்திற்குள்ளேயே குருமார்களை நியமித்து கொள்வர் அவ்வாறு நியமிக்கப்படும் குருமார்களை பண்டாரம் என்று அழைப்பர். மேலும் “பண்டாரம்” என்ற சொல்லானது “அருளநுபவக் கருவூலம்” என்ற பொருளைக் கொண்டது. பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் “பண்டாரம்” என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள். பண்டார வகுப்பினர் அரசாங்க, கல்விப் படிவங்களில் ‘வீரசைவ லிங்கத்தார்’ எனத் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தச் சமூகப்பிரிவில் லிங்கம் அணிந்துகொள்பவர்களும் உண்டு. ஆனாலும் அவர்களில் பெரும்பாலோர் இன்று முருகனடிமைகளே.
Leave a Reply
You must be logged in to post a comment.