இந்தியாவை கடல்வழி கண்டு பிடிக்க மேற்குப் பக்கமாகப் புறப்பட்ட கொலம்பஸ்

Arumugam Saravanan

“இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று கிளம்பிய ஐரோப்பிய இத்தாலியன் கொலம்பஸ்… 1492ல் அமெரிக்க தீவுகளை கண்டுபிடித்துவிட்டு… அதுதான் ‘இந்தியா’ என்று கூற…

அது ஐரோப்பியாவில் பிரபலம் அடைய…

அதன் வழியே பல ஐரோப்பியர்கள் பயணித்தனர்.

நாளடைவில் ஐரோப்பியர்கள்… ‘அது இந்தியா அல்ல’ என்கிற முடிவுக்கு வந்தனர். காரணம்… இந்தியாவில் வர்த்தகம் செய்கிற அரேபியர் மற்றும் பாரசீகர் மூலமாக துருக்கியின் இஸ்தான்புல் சந்தை வழியே தமக்கு கிடைத்துவந்த… மிளகு உள்ளிட்ட இந்திய இறக்குமதி நறுமணப் பொருட்கள் எதுவுமே கொலம்பஸ் கண்டுபிடித்த நிலத்தில் இல்லை..!

பின்னர், 6 ஆண்டுகள் முயற்சித்து… உண்மையான ‘இந்தியா’வுக்கு… ஐரோப்பிய போர்ச்சுகீஸ் வாஸ்கோடாகாமா கடல்வழி கண்டுபிடித்த பின்னர், கண்டுபிடித்த நிலத்தில் மிளகு இருக்க… “இதுதான்டா இந்தியா” என்று ஐரோப்பியருக்கு புரிந்த பின்னர்… இந்தியா என்கிற பெயரில் பிரபலமாகி விட்ட…

கொலம்பஸ் முன்பு கண்டுபிடித்த தீவுகளின் பெயரை… ‘வெஸ்ட் இண்டீஸ்’ (மேற்கு இந்திய தீவுகள்) என்று பெயர் மாற்றி சூட்டினர்.

வாஸ் கோடா கமாவால் 1498ல் அவர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான இந்தியாவை… ‘#ஈஸ்ட்_இந்தியா‘ (கிழக்கு இந்தியா) என்று பெயர் சூட்டினர் ஐரோப்பியர்கள்.

அதனால்தான்… 1500க்கு பிறகு இங்கே உருவாகிய ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் பெயர்கள் யாவும் ‘கிழக்கு இந்தியா கம்பெனி’ எனப்பட்டது.

அதே நேரம்…அமெரிக்காவில் பின்னர் உருவாகிய வணிக நிறுவனங்களின் பெயர்கள் யாவும்.. ‘மேற்கு இந்தியா கம்பெனி’ எனப்பட்டது.

காரணம், அமெரிக்காவே “#மேற்கு_இந்தியா” என்றுதான் அழைக்கப்பட்டது.

நாளடைவில்… 1500, 1600, 1700களில் ஐரோப்பியர்கள் ஏராளமாக அமெரிக்காவில் குடியேறினார்கள். அமெரிக்கா முழுக்க அவரவர்க்கு ஒரு நிலப்பரப்பை வளைத்து எடுத்துக்கொண்டு ஆட்சி செய்தனர். அதிலுள்ள அமெரிக்க வாழ் பூர்வகுடிகளை “#செவ்விந்தியர்கள்” என்று பெயர் சூட்டினர். இந்தியர்கள் என்போர்… ஒரிஜினல் இந்தியாவில் வசிப்போர்… அதாவது கிழக்கு இந்தியர்கள். வந்தேறி ஐரோப்பியர்களின் கண்ணில் படும்போது எல்லாம் செவ்விந்தியர்களை, ஆபத்தானவர்கள் என்று நினைத்து ஐரோப்பிய குடியேறிகள் சுட்டுக்கொன்றனர்.

பதிலுக்கு அமெரிக்க பூர்வகுடி செவ்விந்திய மக்களும்… ஐரோப்பிய வந்தேறிகள் மீது தங்கள் உருவாக்கி வைத்திருந்த வில் மூலம் அம்பெய்து… ஈட்டி எறிந்து… அவ்வப்போது போரிட்டு தங்கள் உயிரை காப்பற்றிக் கொண்டனர். ஆனால், ஐரோப்பிய வெள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பீரங்கி கொண்டு வந்து இறக்கினார்கள். நாளடைவில்… ஐரோப்பிய வந்தேறிகள்…. அமெரிக்காவில் உள்ள வளமான அடலாண்டிக் கடலோர பகுதிகளில் எல்லாம் கூட்டம் கூட்டமாக குடியேறி… அமெரிக்க மண்ணில் வெள்ளையர்கள் பெரும்பான்மை ஆகி… பூர்வகுடி செவ்விந்தியர்கள் சிறுபான்மை ஆகிவிட்டனர். தங்களின் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து பூர்வக்குடி மக்களை மேற்கு நோக்கி விரட்டினர்.

அவர்களில் ஒருவரை பூர்வக்குடி மக்கள் எதிர்த்தால் கூட… ஒட்டுமொத்த செவ்விந்திய கூட்டத்தையே வந்தேறி ஐரோப்பிய குடியேறிகள் கொன்று விடுவதால்… இந்த வெள்ளையர்களின் கண்ணில் படாமல்… மேற்கேயுள்ள பாலை வனத்தில்… நடுவேயுள்ள பாறைக் குன்றுகளில்… குகைகளில்… ஒளிந்து வாழ்ந்தனர்… செவ்விந்தியர்கள் எனப்பட்ட அமெரிக்க வாழ் பூர்வகுடி மக்கள்.

ஐரோப்பியர்கள் அனைவருமே இடுப்பில் 2 துப்பாக்கிகள் வைத்துள்ளதால்…

வெறும் வில் அம்பு ஈட்டி மூலம் அவர்களை தாக்குவதை செவ்விந்தியர்கள் நிறுத்தி விட்டுவிட்டனர்.

ஆனாலும், ஐரோப்பியர் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க…

வந்தேறிகள் மேற்கு நோக்கி ஆக்கிரமிப்பை அதிகரிக்க அங்கே வாழ்ந்த பூர்வகுடி அமெரிக்கர்கள் தொடர்ந்து துப்பாக்கி, பீரங்கி மூலம் தாக்கப்பட்டு மேற்கு நோக்கி விரட்டப்பட்டனர்.

அந்த செவ்விந்தியர்களுக்கு அன்று இந்தியர்களைப் போன்று ஐரோப்பாவுக்கு இணையான பெரிய மக்கள் தொகை இல்லை. நிறைய மன்னர்கள் இல்லை.

ஐரோப்பியர்கள் மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியம் கொள்ளும்படியான… கற்கோட்டைகள் இல்லை. பெரும் படைகள் இல்லை. முக்கியமாக… நவீன ஆயுதங்கள் இல்லை.

அன்று ஐரோப்பியர்களிடம் இருந்த அத்தனை நவீன ஆயுதங்களையும் இந்தியர்கள் வைத்திருந்தனர். மேலும்… அன்று உலகிலேயே அதி நவீன போர்க்கருவி ஆகிய ராக்கெட் ஏவுகணை எல்லாம் இந்திய மன்னர்கள் ஹைதர் அலி & திப்பு சுல்தான் ஆகியோரிடம் மட்டுமே இருந்தன. ஐரோப்பியர்களிடம் அவை கிடையாது. ஆகவே, ஐரோப்பியர்கள் இந்தியாவில் குடியேறுவதை தவிர்த்தனர். முக்கியமான விஷயம்… வருடத்தில் 10 மாதங்கள் இந்தியாவில் கடும் வெப்பம்..!

பின்னர், மஹாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தோன்றி… செவ்விந்தியர்களை அணி திரட்டி….”வெள்ளையனே வெளியேறு” இயக்கம் எல்லாம் அமெரிக்காவில் நடத்தவில்லை.

ஆகவே, தமது துப்பாக்கிகள் விரும்பிய அளவுக்கு… தோட்டாக்கள் தீரும் அளவுக்கு.. அடுத்த… சில நூற்றாண்டுகளில்… ஒரு கோடி பூர்வகுடி அமெரிக்க மக்களுக்கு அதிகமானோரை… வந்தேறி ஐரோப்பிய குடியேறிகள் கொன்றனர். அப்போதெல்லாம் உலக மக்கள் தொகையே… வெறும் 80 கோடிதான். அதில்… 1 கோடி என்பது… இன்றைக்கு 10 கோடி மக்களை கொன்றதற்கு சமம்..! 😢

அமெரிக்க பூர்வகுடி மக்கள்… ஐரோப்பிய வந்தேறிளை விடவும் சிறுபான்மை மக்களாக குறைந்து போன பின்னர்… ஜனநாயகம் மக்களாட்சி தேர்தல் ஆகியவை எல்லாம் அமெரிக்காவில் தோன்றிய பின்னர்… இனவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பின்னர்… சட்டம் இயற்றப்பட்டு… சட்டப்படியான ஆட்சி நடைபெறத் துவங்கிய பின்னர்… பூர்வகுடி அமெரிக்க மக்களை கொல்வது சட்ட விரோதமாக கருதப்பட்ட பின்னர்… ஐரோப்பிய வந்தேறிகள்… பூர்வகுடி அமெரிக்க மக்களை… அதாவது செவ்விந்தியர்களை கொல்வதை நிறுத்தி விட்டனர். 😊👍👌💐

1830ல்…

“இந்தியர்களை வெளியேற்றும் சட்டம்” மற்றும்,

1834ல்…

“இந்தியன் இன்டெர்கோர்ஸ் சட்டம்” (?!)

என்றெல்லாம்….

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு… அமெரிக்க பூர்வகுடி மக்களான செவ்விந்தியர்களை… “#இந்தியர்கள்” என்றே அழைத்து… ஐரோப்பிய வந்தேறிகள் வாழும் வளமான கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு இடங்களில் இருந்தும்… கடற்கரை கூட இல்லாமல்… தூரமாக நடு பாலை நிலம் நோக்கி கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். “அவர்களும் வாழட்டும்” என்று பெரிய மனத்துடன்…. சில இடங்களை பிரித்துக் கொடுத்து… அதற்கு #இந்தியநாடு என்று பெயரிட்டு… மேப்பில் சிகப்புக் கோடு போட்டு… “இந்த கோட்டை தாண்டி உள்ளே வரக்கூடாது” என்றும் கட்டளை இட்டு பூர்வகுடி செவ்விந்தியர்களை… சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஒடுக்கி & ஒதுக்கி வைத்தனர். (பார்க்க மேப்)

இதனால், பூர்வகுடி செவ்விந்தியர்கள் மக்கள் தொகை… முற்றாக அழியாமல்… தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாகாணத்தில் தப்பிப் பிழைத்தது.😊👍👌💐

அமெரிக்காவில்… தற்போதைய பூர்வகுடி மக்களாகிய… செவ்விந்தியர் (ஒரிஜினல் அமெரிக்கர்கள்) மக்கள் தொகை… 29 லட்சம் மட்டுமே. கொலம்பஸ் அங்கே வருவதற்கு முன்… அதாவது 1492க்கு முன்… 80 லட்சம் முதல்… 1 கோடியே 20 லட்சம் வரைக்கும் செவ்விந்தியர் அமெரிக்காவில் வாழ்ந்திருப்பார்கள்… என்று… அமெரிக்கர் எனப்படுகின்ற… ஒரிஜினல் ஐரோப்பிய வந்தேறிகள் கணித்துள்ளனர்..!

Mohamed Ashik பதிவு

About VELUPPILLAI 3406 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply