பிச்சை புகினும் கற்கை நன்றே
சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 56. வேறு எந்த மொழியிலும் இத்தனை பெண்புலவர்கள் இருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்துக் காட்டாக சமற்கிருத மொழியில் ஒரு பெண் புலவரேனும் இருக்கவில்லை. காரணம் வேதம் மற்றும் மனு ஸ்மிருதிகள் போன்றவை பெண்கள் படிக்கக் கூடாது என தடை விதித்துள்ளன. படித்தால் பாவம் எனச் சொல்லப்பட்டன.
பிற்காலத்தில் வேதமதம் தமிழ்நாட்டில் தளைத்து ஓங்கிய போது கல்வி சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியர்களின் கல்விநிலை படு மோசமாக இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரீக காலத்திலோ சங்க காலத்திலோ அனைவருக்குமானதாக இருந்த கல்வி எப்படி இவ்வளவு அதள பாதாளத்தில் வீழ்ந்தது? அங்குதான் ஆரிய நுழைவும் பார்ப்பனீய கலாச்சாரப் பரவலும் அதன்வழி வர்ணாசிரம கோட்பாடும் வருகிறது.
திராவிட நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த பொ.ஆ.மு 15 ஆம் நூற்றாண்டில் (பொது ஆண்டுக்கு முன் (கிமு 1500]) வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் ஆதிக்க அதிகாரத்தை பெறத்துவங்கினர். ஆரியர்கள் ஷ்ருதிகளும் ஸ்மிருதிகளும் இயற்றினார்கள். அவை மனிதர்களை பல அடுக்குகளாக பிரித்தன. மனு ஸ்மிருதி மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து கல்வியை பார்ப்பனர்கள் மட்டுமே கற்க வேண்டும் எனக் கூறியது. இதைப் பரவலாக மக்களிடம் கதை வடிவில் கொண்டு சேர்க்க புராணங்களும் இதிகாசங்களும் இயற்றப்பட்டன.
இதன் விளைவாக கல்வி பெரும்பாண்மை மக்களிடமிருந்து படிப்படியாக பிரிக்கப்பட்டது. புள்ளி விவரத்தின்படி 18ஆம் நூற்றாண்டில் வெறும் 3% எனும் அளவிற்கு குறைந்துபோனது. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இருந்தது குருகுலக் கல்வி. குருகுலம் எங்கு இருக்கும்? சேரிகளிலா இருக்கப் போகிறது? கோவிலிலோ அல்லது அக்ரஹாரத்திலோ இருக்கும். அங்கு யார்யார் நுழைய முடியும் என்பது தெரியும். குருகுலத்தின் வழித் தோன்றல்தான் திண்ணைப் பள்ளிகள். 1813 பட்டயச் சட்டத்தின்படி (Charter Act 1813) இந்தியாவுக்குள் ஆங்கிலேய கிறித்துவ மிஷனரிகள் அனுமதிக்கப்பட்டன. மிஷனரிகளின் நோக்கம் இந்தியர்களிடம் கிறித்துவ மதத்தை பரப்புவதுதான் என்றாலும் அவை கல்விச் சேவைகளின் மூலமாகவும் மருத்துவச் சேவைகளின் மூலமாகவும் பார்ப்பனீயத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட மக்களை அனுகியது. பார்ப்பனீயம் நலமுடன் இருப்பவர்களை தொட்டாலே தீட்டு என்றபோது மிஷனரிகள் நோய்வாய்ப் பட்டவர்களை தொட்டுத் தூக்கி ஆறுதலளித்தன. மிஷனரிகளால் அக்ரஹாரத்துக்கு வெளியிலும் பள்ளிகள் செயல்படத் துவங்கின.
இதனால் கல்வி பாப்பனர்களைத் தவிர மற்றவர்களையும் சென்றடைய வழி ஏற்படுத்தப்பட்டது ஆங்கிலேய ஆட்சியிலேதான். முக்கியமான சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப் பட்டவை. தமிழ்நாட்டில் எல்லா நகரத்திலும் ஏதாவது ஒரு மிஷனரியால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற கல்லூரியோ பள்ளியோ இருக்கும்.
இதனால் ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவில் கல்வியை வளர்த்தார்களா என்றால் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு இந்தியர்கள் மேல் அவ்வளவு அக்கறை இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலேய ஆட்சியின் முடிவில் இந்தியர்களின் கல்வி பெற்றோர் ஏறக்குறைய 13 சதவீதமாகத்தான் இருந்தனர். ஆனால் புதிய கல்வி நடைமுறைகளை ஏற்படுத்தியதிலும் கல்வியை எளிய மக்களும் அணுகலாம் என்ற பாதையை வகுத்ததிலும் ஆங்கிலேய ஆட்சியின் பங்கும் மிஷனரிகளின் பங்கும் மிக முக்கியமானவை.பின்வரும் புள்ளி விபரம் என்ன சொல்கிறது?

இன்றைய உலகில் ஒரு இனத்தின் உயர்வுக்கு கல்விதான் அளவு கோல். தமிழர்கள் இருக்கிற கோயில்கள் போதாது என்று தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தில் கோயில் கட்டுகிறார்கள். புலத்தில் வாழும் ஒரு தமிழர் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த ஊரில் ஒரு கோடி செலவில் ஒரு கோயிலைக் கட்டி முடித்திருக்கிறாராம். இந்தப் பணத்தில் ஒரு தொழில் நுட்பக் கல்லூரி கட்டியிருந்தால் தமிழர் வாழ்வு செழித்திருக்கும். இந்த அறக்கட்டளைக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
சரி இப்படியெல்லாம் எழுதுகிறாயே? நீ செய்தது என்ன என்று கேட்பது தெரிகிறது. நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 65 இலட்சம் முதலீட்டில் ஒரு புலமைப் பரிசுத் திட்டத்தை தொடக்கியுள்ளேன். எனது சொந்த ஊரில் இருந்து யாழ்பல்கலைக்கு தேர்வு பெறும் ஒவ்வொரு மாணவனுக்கு ம் படிப்பை முடிக்கும் வரை மாதம் உரூபா 5,000 கொடுக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு படிப்பை முடிக்கும் வரை மாதம் உரூபா 2,000 வழங்கப்படும். இந்தத் திட்டம் 2022 இல் தொடங்கப்பட்டாலும் பலத்த இழுபறிக்குப் பின்னர் இந்த ஆண்டு முதல் இந்த உதவிநிதி வழங்கப்படும். இவ்வளவிற்கும் நான் ஒரு தொழில் அதிபர் இல்லை. ஓய்வூதியன்.
Leave a Reply
You must be logged in to post a comment.