கால்கோள் விழா முன்னிட்டு சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று காலை காரைதீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளதுடன், காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், காரைதீவு பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், சுவாமி விபுலானந்தருக்கு மலர்மாலை சூட்டி, திருவுருவப்படத்துடன் ஊர்வலம் செல்லப்பட்டு பின்னர் காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும், அங்கு நந்தி கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல், மாணவிகள் வரவேற்புரை, அறிமுகவுரை, தலைமையுரை, ஆகிய நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/145294?ref=view-lat
est

Leave a Reply
You must be logged in to post a comment.