கறுப்பு ஜூலையின் கோரம்; தலைநகரில் தமிழர்களின் தொழிற்பேட்டைகள் சூறையாடப்பட்ட வரலாறு !
கருப்பு ஜூலை என்பது இலங்கையில் ஒரு கறைபடிந்த வரலாற்று பக்கமாகும். இதே திகதிகளில் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்ககளில் அமைந்திருந்த தமிழ் தொழிலதிபர்களின் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்ககளை தீயிட்டு சூறையாடி பல ஆயிரக்கணக்கானவர்களை நடுத்தெருவில் நிறுத்திய வரலாற்றை மறக்க இயலாது.
அருளானந்தம் சாமுவேல் ஞானம் (ஞானம்) இவருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்ட் அந்தோனிஸ் ஹார்டுவேர், சின்டெக்ஸ், ஏசியன் காட்டன் மில்ஸ், ஹென்ட்லி கார்மென்ட்ஸ்: மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் ஸ்டீல் காப்ரேசன் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் நிறுவப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்ககளாகும், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்த நிறுவனங்களாகும். அவற்றில் வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள்தான் ஒரே நாளில் சூறையாடி தீயிட்டு அதற்கு முடிவு கட்டினார்கள் இனவாதிகள்.



கனகசபை குணரட்ணம் (கேஜி )தமிழ் தொழிலதிபரான கே. குணரத்தினத்திற்குச் சொந்தமான ‘ரெனால்ட்ஸ்’ (Reynolds) பேனாக்கள் ,புஜிபிலிம்’ (Fujifilm) பிளாஸ்டிக்” கதிரைகள், வாளிகள் போன்று உற்பத்திகள் , சினிமாஸ் லிமிட்டெட், பூஜி கிராபிக்ஸ் ,போட்டோ கினா லிமிட்டெட்சிலோன் லிமிட்டெட் அத்தனையும்
அழித்தொழிக்கப் பட்டன. இலங்கையில் சிங்கள சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானவையாகும் சுமார் 40 சிங்கள படங்களை தயாரித்துள்ளார். வத்தளையில் அமைந்திருந்த அவருக்கு சொந்தமான திரைப்படங்களை எடுக்கும் விஜயா ஸ்டுடியோவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது சிங்கள திரைப்படங்களின் மூலப்பிரதிகள் அத்தனையும் சாம்பலாகின, அதைவிட பல தியேட்டர்களுக்கும் சொந்தக்காரர் . 1989ஆம் ஆண்டு அவரையும் சுட்டுக்கொன்றார்கள் அதை ஜேவிபியினர்தான் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இராசேந்திரன் மஹாராஜா .
மகாராஜா குழுமம் என்பது மிகப்பெரிய வலையமைப்பு அதன் தலைவர் கிளி மகேந்திரன் அவர்கள்தான் இலங்கை கிரிக்கற் சபைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தவர், கொழும்பில் உள்ள பேங்க்ஷால் வீதியில் அமைந்திருந்த தலைமை அலுவலகம், ரத்மலானாவில் இருந்த பல தொழிற்சாலைகள் மின்கலன் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் அவர்களின் குடும்பத்தினரின் குடியிருப்புகள் ஆகியவை வன்முறைக் கும்பல்களால் முற்றிலுமாகச் அழித்தொழிக்கப்பட்டன.
இதைவிட இந்தியர்களுக்கு சொந்தமான ஹைத்ராமணி குழுமம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களும் தீக்கரையாக்கப்பட்டன. மேலே சொல்லப்பட்டவை அத்தனையும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை மட்டுமல்ல அவர்களுக்கு சொந்தமான மிகப்பெரும் நிறுவனங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி அழிக்கப்பட்டன.
பின்னைய நாட்களில் தமிழர்களின் அனேக வர்த்தக நிலையங்கள் இஸ்லாமியர் கைகளில் சென்றடைந்தன.
அவற்றை கடந்து வந்துவிடுவோம்.
ஆனால் மறந்துவிட கூடாது.
——————————–
The Horror of Black July: The History of the Looting of Tamil Businesses in the Capital
Black July remains one of the darkest chapters in Sri Lanka’s history. During those days, numerous factories and business establishments owned by Tamil entrepreneurs in Colombo and its surrounding areas were looted and set on fire, leaving thousands of people destitute overnight. This is a history that cannot be forgotten.
Arulanantham Samuel Gnanam (A. S. Gnanam) owned major companies including St. Anthony’s Hardware, Syntex, Asian Cotton Mills, Hentley Garments—one of the country’s largest garment manufacturing and export companies—and Steel Corporation. These were among the largest industrial enterprises in Sri Lanka and provided employment to many thousands of people, the majority of whom were Sinhalese. Yet, in a single day, these businesses were looted and burned to the ground by racist mobs, bringing them to ruin.
Kanagasabai Gunaratnam (K. Gunaratnam), another prominent Tamil businessman, owned companies that manufactured Reynolds pens, Fujifilm products, plastic chairs and buckets, as well as businesses including Cinemas Limited, Fuji Graphics, Photokina Limited, and Ceylon Limited. All of them were destroyed. He was also widely credited with helping bring Sinhala cinema to international audiences and produced around 40 Sinhala films. His Vijaya Studios in Wattala was set ablaze, reducing the original film reels of many Sinhala movies to ashes. He also owned several cinemas. In 1989, he was assassinated; there have been allegations that members of the JVP were responsible.
Rajendran Maharajah
The Maharajah Group, headed by Kili Mahendran, was one of Sri Lanka’s largest business conglomerates. Mahendran played a key role in securing international recognition for Sri Lanka’s cricket administration. During the violence, the group’s headquarters on Bankshall Street in Colombo, several factories in Ratmalana, battery and consumer goods manufacturing plants, and family residences were completely destroyed by violent mobs.
In addition, the large Hydramani Group, owned by an Indian business family, also had garment factories that were set on fire.
The above examples illustrate that the attacks were not merely acts of violence against Tamils; they also involved the systematic destruction of major Tamil-owned businesses.
In the years that followed, many commercial properties formerly owned by Tamils came into the hands of Muslim businessmen.
We may move forward from these events, but we must never forget them.
———————————
කළු ජූලියේ භීෂණය: අගනුවර දෙමළ ව්යාපාර කොල්ලකෑ ඉතිහාසය
කළු ජූලිය ශ්රී ලංකා ඉතිහාසයේ අඳුරුම පරිච්ඡේදයකි. එම දිනවල කොළඹ සහ අවට ප්රදේශවල පිහිටි දෙමළ ව්යාපාරිකයන්ට අයත් කර්මාන්තශාලා සහ ව්යාපාරික ආයතන රැසක් ගිනි තබා කොල්ලකෑ අතර, දහස් ගණනක් එක් රැයකින් අසරණ තත්ත්වයට පත් විය. එය කිසිදා අමතක කළ නොහැකි ඉතිහාසයකි.
අරූලානන්දම් සැමුවෙල් ඥානම් (A. S. Gnanam) මහතාට අයත් St. Anthony’s Hardware, Syntex, Asian Cotton Mills, Hentley Garments සහ Steel Corporation වැනි සමාගම් ශ්රී ලංකාවේ විශාලතම කර්මාන්ත ආයතන අතර විය. ඒවා දහස් ගණනකට රැකියා ලබා දුන් අතර, එහි සේවකයන්ගෙන් බහුතරය සිංහලයන් වූහ. එහෙත් ජාතිවාදී කණ්ඩායම් විසින් එක් දිනක් තුළ මෙම ආයතන කොල්ලකා ගිනි තබා විනාශ කළහ.
කනකසබායි ගුණරත්නම් (K. Gunaratnam) මහතාට අයත් Reynolds පෑන්, Fujifilm නිෂ්පාදන, ප්ලාස්ටික් පුටු හා බාල්දි නිෂ්පාදන, Cinemas Limited, Fuji Graphics, Photokina Limited සහ Ceylon Limited ඇතුළු ව්යාපාර සියල්ල විනාශ කරන ලදී. සිංහල සිනමාව ජාත්යන්තරයට ගෙන යාම සඳහා ඔහු විශාල දායකත්වයක් ලබා දුන් අතර සිංහල චිත්රපට 40කට පමණ නිෂ්පාදකයෙකු විය. වත්තල පිහිටි ඔහුගේ Vijaya Studios ගිනි තබා විනාශ කළ අතර, සිංහල චිත්රපටවල මුල් පිටපත් රැසක් ද අළු බවට පත් විය. 1989දී ඔහු වෙඩි තබා ඝාතනය කළ අතර, ඒ සඳහා JVP සංවිධානය වගකිව යුතු බවට චෝදනා එල්ල වී ඇත.
රාජේන්ද්රන් මහාරාජා
මහාරාජා සමූහය, එහි ප්රධානියා වූ කිලී මහේන්ද්රන්ගේ නායකත්වයෙන්, ශ්රී ලංකාවේ විශාලතම ව්යාපාරික සමූහයන්ගෙන් එකකි. ශ්රී ලංකා ක්රිකට් ආයතනයට ජාත්යන්තර පිළිගැනීමක් ලබා ගැනීමට ඔහු වැදගත් දායකත්වයක් ලබා දුන් බව සඳහන් වේ. කොළඹ බැංක්ෂෝල් වීදියේ පිහිටි ප්රධාන කාර්යාලය, රත්මලානේ කර්මාන්තශාලා, බැටරි හා පාරිභෝගික භාණ්ඩ නිෂ්පාදන ආයතන සහ පවුලේ නිවාස ප්රචණ්ඩ කණ්ඩායම් විසින් සම්පූර්ණයෙන්ම විනාශ කරන ලදී.
මීට අමතරව, ඉන්දීය ව්යාපාරික පවුලකට අයත් Hydramani Group හි විශාල ඇඟලුම් කර්මාන්තශාලාද ගිනිබත් කරන ලදී.
ඉහත සිදුවීම්වලින් පැහැදිලි වන්නේ, මෙය දෙමළ ජනතාවට එරෙහි ප්රචණ්ඩත්වයක් පමණක් නොව, ඔවුන් සතු ප්රධාන ව්යාපාර ක්රමානුකූලව විනාශ කිරීමක්ද වූ බවයි.
පසුව, දෙමළ ජනතාවට අයත් බොහෝ ව්යාපාරික ස්ථාන මුස්ලිම් ව්යාපාරිකයන්ගේ අතට පත්විය.
අපට මේ සිදුවීම් පසුකර ඉදිරියට යා හැකිය. එහෙත් ඒවා කිසිදා අමතක නොකළ යුතුය.
See less

Leave a Reply
You must be logged in to post a comment.