பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழர்களின்
வண்ணமயமான பண்பாட்டுக் கோலங்கள்!Can you straighten the lines pl?

— நக்கீரன்
தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டொரொண்டோவில் பொங்கல் விழா மிக அருமையாகவே கொண்டாடப்பட்டது. இன்று பொங்கல் விழாவை பத்துக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சில அமைப்புக்கள் தை மாதம் பிறக்க முன்னரே பொங்கல் கொண்டாடி விட்டன.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள், கிழமை மற்றும் மாத சஞ்சிகைகள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை.

ஆனால் திராவிட தேசிய உணர்வு துளிர்த்துத் தழைத்து பெருமரமாக வளர்ந்த பின்னர் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்று உலகளாவிய அளவில் பொங்கல் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ் மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழாவோடு தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், திருவள்ளுவர் பிறந்த நாள் எனச் சேர்த்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது.

தூய தமிழ்ப் பெயர்களுக்கு பொற்கிழி அளித்தல் பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாகும். குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தூய தமிழ்ப் பெயருக்கு 1,000 வெள்ளிகள் முதற்பரிசாக அளிக்கப்படுகிறது. இரண்டாவது பரிசு, ஆறுதல் பரிசு ஆகியவையும் அளிக்கப்படுகின்றன.

தமிழ்ப் பெயர்கள் தமிழாக இருந்தால் மட்டும் போதாது. அதில் பொருளும் இனிமையும் இருக்கிறதா எனப் பார்த்தே பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்தப் பரிசுத் திட்டத்தின் பயனாக பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்கள் வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஓரளவாவது பிறந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் “பண்பாட்டு கையேடு” என்ற சிறு நூலை வெளியிட்டுள்ளது. அதில் ஆண், பெண் குழந்தைகளுக்குரிய தூய தமிழ்ப் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரியில் படித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை (தமிழ்) படிப்பில் பட்டம் பெற்ற 25 பட்டதாரிகளுக்கு சான்றிதழும் பொற்பலகையும் கொடுத்து மதிப்பளிக்கப்படும். அதேவண்ணம் பல்கலைக்கழக நுழைவுக்கு தமிழில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

தமிழர்களின் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற சொற்போர் தொடர்ந்து நடைபெறுகிறது.

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்:

  1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
  2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
  3. திருவள்ளுவர் காலம் கிமு 31.

(வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்.)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவிக்கும் சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியது.இப்படியான விழாக்களை தமிழர்கள் கொண்டாட மறந்தால், அவற்றை அவர்கள் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமஸ்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.

தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக ‘தமிழ் மொழி’ தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே ‘கிரெம்ளின் மாளிகை’ என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள், பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர் வையுங்கள் என்பதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியுள்ளது!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. “தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி!” என்பன அதன் முழக்கமாகும்.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது.

பிறக்கும் குழந்தைகளுக்கு பைந்தமிழில் பெயரிட வேண்டும். திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.

உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க, டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள்.

திருநாவுக்கரசர் இறைவனை “அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ” என்று பாடியிருப்பதை கவனியுங்கள்.

தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும்.

சிவனார் “அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியிருக்கிறார்.

சுந்தரர் “இறைவன் தமிழை ஒத்தவன்” என்றும், நாவுக்கரசர் “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்” என்றும், “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்றும், சேக்கிழார் “ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்” என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.

வள்ளலார் “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிழில் அழகும் இனிமையும் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இப்படிச் செய்வது தமிழ்மக்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும்.

தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம், நாள், நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவது காரணமாகும்.

தமிழனைத் தமிழன் என அடையாளங்காட்ட முடியாத பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழுக்கு பெற்றோர்கள் தெரிந்தே செய்யும் மிகப்பெரிய இரண்டகமாகும்.

அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருள் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அஸ்வின், அஸ்வினி, ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், கஜீஜன், லவீசன், அபிஷா, ஷர்மிளா, ஷர்மினி, ஷாமியா, ஷாமியன், ஷாலினி, டில்ஷன், டில்ஷி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.

நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.

மேலும் அபர்ணா, தூஷிகா, வாசுகி, மகிஷன், சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப் பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது, வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும்.

மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமல்ல. அஃது ஓர் பழம்பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம். கருவூலம்.

மூவாத் தமிழில் அழகும் இனிமையும் பொருளும் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ள வேண்டும். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எந்தத் தட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதித் தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைக்க அணியமாகவுள்ளது.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு.

“தமிழில் என் இருக்கிறது? தமிழ் சோறு போடுமா?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக் கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? மரபு யாது?

போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்களின் வாழ்வில் விடியலில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து இடைத்தங்கல் முகாம்களிலும் தறப்பாள் கொட்டில்களிலும் உண்ண போதிய உணவின்றி, உடுக்க உடையின்றி, கல்வியின்றி, மருத்துவமின்றி, தொழிலின்றி அல்லல்படுகிறார்கள்.

வடக்குக் கிழக்கில் இராணுவத்தின் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழர்களுக்குச் சொந்தமான மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவம் பாரிய தளங்கள், குடியிருப்புக்கள், உல்லாசவிடுதிகள், நினைவுத்தூண்கள், பௌத்த விகாரைகள், புத்த சிலைகள் நிறுவியுள்ளது.

சிங்கள தேசிய கீதம் ஆயுதமுனையில் தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கப்படுகிறது. வடக்கில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் என மக்கள் வதைக்கப்படுகிறார்கள்.

வேலியே பயிரை மேய்வது போல யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளின் புலனாய்வுத் துறையே இத்தகைய கொலை, கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகிறது.

இவை யாவும் போரில் வெற்றி பெற்றுவிட்டோம், இலங்கை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற பேரினவாதக் கோட்பாட்டை எதிரொலிக்கிறது.

பிறக்கப் போகும் இந்தத் தைப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பிடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எமது தாயகக் கனவு கைகூடும். அப்போது அங்கு வாழும் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள். அந்த நம்பிக்கையோடு திருவள்ளுவராண்டு 2044 இல் காலடி எடுத்து வைப்போம்.

I’ve straightened and cleaned up the lines into properly formatted Tamil paragraphs from your uploaded file. 

இப்படியான விழாக்களை தமிழர்கள் கொண்டாட மறந்தால், அவற்றை அவர்கள் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமஸ்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.

தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக ‘தமிழ் மொழி’ தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே ‘கிரெம்ளின் மாளிகை’ என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள், பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர் வையுங்கள் என்பதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியுள்ளது!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. “தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி!” என்பன அதன் முழக்கமாகும்.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது.

பிறக்கும் குழந்தைகளுக்கு பைந்தமிழில் பெயரிட வேண்டும். திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.

உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க, டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள்.

திருநாவுக்கரசர் இறைவனை “அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ” என்று பாடியிருப்பதை கவனியுங்கள்.

தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும்.

சிவனார் “அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியிருக்கிறார்.

சுந்தரர் “இறைவன் தமிழை ஒத்தவன்” என்றும், நாவுக்கரசர் “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்” என்றும், “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்றும், சேக்கிழார் “ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்” என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.

வள்ளலார் “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிழில் அழகும் இனிமையும் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இப்படிச் செய்வது தமிழ்மக்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும்.

தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம், நாள், நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவது காரணமாகும்.

தமிழனைத் தமிழன் என அடையாளங்காட்ட முடியாத பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழுக்கு பெற்றோர்கள் தெரிந்தே செய்யும் மிகப்பெரிய இரண்டகமாகும்.

அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருள் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அஸ்வின், அஸ்வினி, ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், கஜீஜன், லவீசன், அபிஷா, ஷர்மிளா, ஷர்மினி, ஷாமியா, ஷாமியன், ஷாலினி, டில்ஷன், டில்ஷி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.

நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.

மேலும் அபர்ணா, தூஷிகா, வாசுகி, மகிஷன், சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப் பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது, வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும்.

மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமல்ல. அஃது ஓர் பழம்பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம். கருவூலம்.

மூவாத் தமிழில் அழகும் இனிமையும் பொருளும் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ள வேண்டும். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எந்தத் தட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதித் தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைக்க அணியமாகவுள்ளது.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்க

About nakkeran 222 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply