இலங்கை அரசியல் யாப்பு உறுப்புரை 9 ம் சட்டத்தின் ஆட்சியும் ஒன்றுக்கொன்று முரணானவை!
நக்கீரன்
சென்ற வாரம் (20-02-2026) கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை பவுத்த காங்கிரஸ் (All Ceylon Buddhist Congress) வளாகத்தில் “மகா சங்க மாநாடு” நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தேரர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, புத்த சாசனம், புத்த பிக்குகள் மற்றும் புத்த கலாச்சாரம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தார்கள்.
முதலில் இந்த மாநாட்டில பல்லாயிரக்கணக்கான பிக்குகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த எண்ணிக்கை 3,000 ஆகக் குறைக்கப்பட்டது. முடிவில் மாநாட்டில் கலந்து கொண்ட பிக்குகளின் எண்ணிக்கை 300 க்கு முன்பின்னாக இருக்கக் காணப்பட்டது.
பவுத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட சனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என கொட்டபிட்டிய இராகுல தேரர் தெரிவித்திருந்தார். அகில இலங்கை பவுத்த மகா சங்க சம்மேளனத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலம் கூறுகையில்,
“நாட்டில் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கிடையிலும் பிரச்சினை இல்லை சிலர் பகிரங்கமாக இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அந்த பட்டியலில் ஜனாதிபதியும் பிரதமரும் முன்னிலை வகிக்கின்றனர். யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை என்பது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவே பவுத்த தேரர்கள் அங்கு செல்கின்றனர்.
எனினும், பவுத்த வைராக்கியத்தை பரப்புவதற்காகவே தேரர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அரசியலமைப்பில் பவுத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே அல்லது வீழ்த்துவதற்காகவோ நாங்கள் ஒன்றுக் கூடுவதில்லை. பவுத்த மதத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சுருக்கமாச் சொன்னால் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் கூறியபடி, தற்போது புத்த சாசனம் மற்றும் புத்த கலாச்சாரம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்ற உணர்வு உருவாகியுள்ளது. “ அதற்காக சனாதிபதியும், பிரதமரும் மன்னிப்புக் கோர வேண்டும். அரசாங்கம் உரிய பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம். புத்த மதத்தின் சமூக நிலை பாதுகாக்கப்பட வேண்டும். பிக்குகளின் மரியாதை மற்றும் அதிகாரம் காக்கப்பட வேண்டும். கலாச்சார அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.”
இலங்கை ஒரு பவுத்த நாடு. அங்கு பதிவு செய்யப்பட்ட பவுத்த பிக்குகளின் மொத்த எண்ணிக்கை 42,122, பவுத்த விகாரைகள் (கோவில்கள்) 12, 235, தேவாலயங்கள் 38 ஆகும்.
இலங்கையின் மக்கள் தொகை 22 மில்லியன் (2.2 கோடி) அதில் 68 விழுக்காட்டினர் பவுத்த சிங்களவர்கள். அதாவது 15 மில்லியன். இந்த பவுத்த பிக்குகள் புத்தரின் போதனைகளை பரப்புவதில் முழுநேரம் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவை, உறையுளை மக்கள் வழங்குகிறார்கள். உடை மற்றும் மானியங்களை அரசு வழங்குகிறது.

இப்படியான சங்க மாநாடுகள் அவ்வப்போது நடப்பது உண்டு. 2024 ஓகஸ்டில் இல் ஞானசேகர பிக்கு ஒழுங்கு செய்திருந்தார். அது நடந்ததா என்பது தெரியவில்லை. இந்த மாநாட்டுக்கு நாட்டின் முக்கிய பவுத்த மத பீடங்களான அஸ்கிரிய- மல்வத்தை நேரடியாக ஆதரவு நல்கவில்லை. ஆனால் பிக்குகள் அதில் கலந்து கொள்வதைத் தடுக்கவும் இல்லை.
2010 இல் மகிந்த இராபச்ச சனாதிபதியாக இருந்த காலத்தில் இராணுவ தளபது சரத் பொன்சேகாவின் பதவி பறிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதனை எதிர்த்து அஸ்கிரிய – மல்வத்தை பவுத்த பீடங்கள் போர்க் கொடி தூக்கின. 2010 பெப்ரவரி 18 அன்று கண்டியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க “சங்க சபை” யை (பிக்குகளின் மாநாடு) நடத்த மகாநாயக்க தேரர்கள் அழைப்பு விடுத்தனர். அதனை இராசபக்ச அரசாங்கம் பின் வரும் வழிகளில் இரும்புக் கைகள் கொண்டு ஒடுக்கியது.
குண்டு வீச்சு மிரட்டல்கள்: அந்த மாநாட்டிற்கு வரும் துறவிகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அநாமதேய மிரட்டல்கள் விடுக்கப் பட்டதால், அந்த மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பவுத்த பீடங்களைப் பிளவுபடுத்தும் மிரட்டல்: அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள், முக்கிய பவுத்த பீடங்களிலிருந்து சுமார் 500 விகாரைகளைத் துண்டித்து, இராசபக்சக்களின் சொந்தப் பிரதேசமான தென்னிலங்கையை மையமாகக் கொண்டு ஒரு புதிய பீடத்தை உருவாக்கப் போவதாக மிரட்டின.
அமைச்சர்களின் அழுத்தம்: அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து, அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும், மாநாட்டைக் கைவிடுமாறும் கடும் அழுத்தம் கொடுத்தனர்.
துறவிகள் மீதான தாக்குதல் மற்றும் கைது: கொழும்பில் பொன்சேகாவுக்கு ஆதரவாகப் போராடிய துறவிகள் மீது பொலிசார் பலப் பிரயோகம் செய்தனர். 2010 ஏப்ரலில், போராட்டத்தில் ஈடுபட்ட 12 பவுத்த துறவிகள் பொலிஸாரால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
துறவிகளுக்கு எதிராக துறவிகளைத் தூண்டுதல்: அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட துறவிகளைப் பயன்படுத்தி, பொன்சேகாவுக்கு ஆதரவளித்த மகாநாயக்க தேரர்களை “பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்கள்” என முத்திரை குத்தி, அவர்களைப் பகிரங்கமாக விமர்சிக்கச் செய்தது.
இந்தத் திட்டமிட்ட மிரட்டல்கள் மற்றும் அடடுக்குமுறைகள் காரணமாக, இராசபக்ச அரசாங்கத்திற்கு எதிராகத் மேற்கொண்டபவுத்த பீடங்களின் பாரிய எதிர்ப்பு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
எனவே பலர் நினைப்பது போல அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர மற்றும் ராமண்ண பவுத்த பீடங்கள் அரசாங்கங்களை தமது இச்சைக்கு ஏற்ப ஆட்டி வைக்கும் சகல வல்லமை வாய்ந்த அதிகார பவுத்த பீடங்கள் இல்லை.
ஆட்சிக்கு வரும் சனாதிபதிகள், பிரதமர்கள் கண்டிக்குச் சென்று பவுத்த பீடாதிபதிகளின் காலில் விழுந்து வணங்குவது உண்மைதான். அதற்கு இப்போதுள்ள இடதுசாரி சனாதிபதி அனுர குமார திசநாயக்காவும் விதி விலக்கல்ல. பதவிக்கு வந்து இந்தக் குறுகிய காலத்தில் பத்து முறைக்கு மேல் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று பவுத்த பீடாதிபதிகளின் காலில் விழுந்து எழுந்து இருக்கிறார்.
இருந்தும் இலங்கையில் புத்த மதம் வெறும் ஆன்மீக மரபாக மட்டுமல்ல; அது தேசிய அடையாளத்தின் முக்கிய கூறாகவும் பார்க்கப்படுகிறது. வரலாற்று காலத்திலிருந்து புத்த சங்கம் சமூக ஒழுங்கு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் அரசியல் கருத்து வடிவமைப்பில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. பல காலகட்டங்களில் அரசியல் தலைவர்கள் புத்த பிக்குகளின் ஆதரவைப் பெற முயன்றுள்ளனர்.
சிங்கள புத்த தேசிய உணர்வு அரசியல் இயக்கங்களில் முக்கிய பங்காற்றியதால், புத்த மதத்தின் பாதுகாப்பு என்ற கேள்வி பொதுவாக அரசியல் ஆதரவை இயக்கும் சக்தியாக மாறியுள்ளது.
மாநாட்டின் நோக்கமும் செய்தியும்
மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் கூறியபடி, தற்போது புத்த சாசனம் மற்றும் புத்த கலாச்சாரம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்ற உணர்வு உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில்:
புத்த மதத்தின் சமூக நிலை பாதுகாக்கப்பட வேண்டும்
பிக்குகளின் மரியாதை மற்றும் அதிகாரம் காக்கப்பட வேண்டும்
கலாச்சார அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பன வலியுறுத்தப்பட்டன.
இந்த மாநாட்டுக்கு அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி இன் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி சரத் வீரசேகரா இருவருமே அங்கு காணப்பட்டனர். அண்மைக் காலமாக சஜித் பிரேமதாச தன்னை ஒரு தீவிர பவுத்தனாக காட்டிக் கொண்டு வருகிறார். பவுத்தத்துக்கு அரசியல் யாப்பில் முன்னுரிமையும் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பவுத்த பீடாதிபதிகளைக் கலந்தாலோசித்தே எதையும் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
“புத்தசாசனத்தின் காவல் தெய்வமாகச் செயற்படும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் புத்த பிக்குகளை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. புத்தசாசனத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு பவுத்த மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார். மேலும், “சனாதிபதி தலைமையில் பவுத்த மதத் தலைவர்கள், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய நல்லிணக்க சபையை (National Reconciliation Council) நிறுவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாரஹேன்பிட்டிய அபயராமயாவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மத மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பவுத்த மதத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் ஏனைய மதங்களின் சுந்திரத்தையுசும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்
இந்த மாநாட்டில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரர், கொட்டபிட்டிய இராகுல தேரர் மற்றும் பெங்கமுவ நாலக தேரர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் அரசாங்கம் புத்த மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என கருதப்படுபவர்கள்.
மாநாட்டில் உரையாற்றிய வெ. முருத்தெத்துவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கம் புத்த பிக்குகளுக்கு எதிராக செயல்படுவதாககக் குற்றம் சாட்டினார். அவர், சளாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்கள் பிக்குகளை விமர்சிக்கும் அரசியல் உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த குற்றச்சாட்டு, பவுத்த மதத் தலைமைக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையே உருவாகும் நம்பிக்கைச் சிதைவின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எவை?
அமைச்சகங்கள் தொடர்பான வதந்திகள் மற்றும் பவுத்த சாசன அமைச்சு நீக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் முக்கியமானவை. இதனை அரசாங்கம் மறுத்துள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி (Prof. Himduma Sunil Senevi) பேசும் போது “கொள்கை அடிப்படையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அமைச்சு கலைக்கப்படவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் சுனில் வட்டகல போன்றோர், தேசிய மக்கள் சக்தியே பவுத்த மதத்தின் உண்மையான பாதுகாவலர் என்று கூறி இக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர். அத்துடன், அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் கீழ் பவுத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் போற்றி வளர்ப்பதற்கும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதையும் அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
உண்மையில் பவுத்த பிக்குகளின் இலக்கு வேறுயாருமிலலை. சாட்சாத் சனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களே! சென்ற மாதம் பொங்கல் விழா தொடர்பாக திசநாயக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அப்போது தையிட்டியில் சட்டத்துக்கு மாறாக இலங்கை இராணுவத்தால் கட்டப்பட்ட மகா திஸ்ச விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றிருந்தது. அதனை மனதில் இறுத்தி சனாதிபதி திசநாயக்க பேசும் போது பின்வருமாறு கூறியிருந்தார்.
“…they come to Jaffna after passing the … to perform the Poya. What is there is not the Poya, but hatred…” — meaning that some people were using religious pilgrimages not purely for religious worship but in ways that he said reflected racial or political agendas, not genuine devotion
“…அவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் போது, பவுத்த போயா (Poya) நாளைக் கொண்டா வருகிறார்கள். ஆனால் அங்கே உள்ளது போயா , வெறுப்பு தான்…”
இதன் பொருள் என்னவென்றால் சிலர் முழுமையாக ஆன்மீக நோக்கத்திற்காக வரவில்லை
அவர்கள் யாத்திரைகளை சில இடங்களில் இனவாதம் அரசியல் நோக்கங்கள், அடையாளக் சின்னங்கள் போன்றவற்றுக்காக பயன்படுத்துகிறார்கள். உண்மையான பக்தி அல்ல, பண்பாட்டு/அரசியல் நிகழ்சி நிரல் (agenda) அடையாளம் கொண்ட நடவடிக்கைகள்.
அதே சமயம் சனாதிபதி திசநாயக்க தையிட்டி திஸ்சா மகா விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தமிழர் தரப்பை இனவாதிகள் என அழைத்தார்.
கொழும்பில் கூட்டப்பட்ட மகா சங்க மாநாடு பிழையான நேரத்தில் கூட்டப்பட்டதாக பலராலும் கருதப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இது ஒரு குறுகிய காலம். நாட்டு மக்கள் இப்போதுள்ள ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்திக்கு முன்னரைவிட இப்போது கூடிய ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளிவந்த ஒரு கருத்துக் கணிப்பின்படி இலங்கை நாட்டின் எதிர்காலம் பற்றி மக்களிடையே அதிகரித்த நம்பிக்கை காணப்படுகின்றது. அரசாங்கத்திற்கு வலுவான ஆதவு கிடைத்துள்ளதுடன், பொருளாதார நம்பிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்த தகவல்கள் அண்மையில் Verité Research நிறுவனம் நடத்திய “Mood of the Nation” கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டவை ஆகும். இந்த ஆய்வின் கருத்துக்கணிப்பு கூட்டாளி Vanguard Survey (Pvt) Ltd ஆகும்.
கடந்த 2025 பெப்ரவரி தொடக்கத்தில் அரசுக்கான ஆதரவு விழுக்காடு 62% ஆகும். இது இப்போது 65% ஆக அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்பின் நான்கு ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, தற்போதைய பொருளாதார நிலையை “நன்று” அல்லது “மிகச் சிறந்தது” என மதிப்பிட்டோர், “மோசமானது” எனக் கூறியவர்களை விட அதிகமாக இருந்தனர். பொருளாதாரம் “மேம்பட்டு வருகிறது” எனக் கூறியோர்: 64% (கடந்த ஆண்டின் 55% இலிருந்து உயர்வு) “மோசமாகிறது” என்ற கருத்து பெரிதாக மாறவில்லை.
இதன் பொருள் மக்கள் நிர்வாகத்தின் போக்கை நம்பத் தொடங்கியுள்ளனர். பொருளாதாரம் மேம்படுகிறது என்ற உணர்வு செலவினம் மற்றும் முதலீட்டையும் ஊக்கு விக்கலாம். கடந்த சில ஆண்டுகளின் நெருக்கடிகளுக்குப் பின், மக்களின் மனநிலை கவலையிலிருந்து எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கைக்குத் திரும்பி வருகிறது. ஆனால் இந்த நம்பிக்கை நிலைத்திருக்க, வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்பு, வருமான நிலைத்தன்மை போன்ற துறைகளில் உண்மையான முன்னேற்றம் அவசியமாகும்.
பவுத்த பிக்குகள் நினைப்பது போல அவர்களது செல்வாக்கு பெரிதாக இல்லை. அதற்கு சான்று இராணுவ தளபதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக சங்க மாநாட்டை கண்டியில் கூட்டியபோது அதனை அன்றைய இராசபக்ச அரசு அசுர பலம் கொண்டு முறியடித்தது.
இருந்தும் பவுத்த பிக்குகளில் பெரும்பான்மையோர் தாங்கள் சட்டத்துக்கு அப்பால் பட்டவர்கள் என உண்மையாக நம்புகிறார்கள். இது பௌத்தத்தை அரச மதமாக (State Religion) பிரகடனப்படுத்தா விட்டாலும், அதற்கு ஒரு தனித்துவமான அரச அந்தஸ்தை வழங்கப்பட்ள்ளது.
அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமை என்றும் குறிப்பிடுகிறது. இந்த உறுப்புரை சட்டத்தின் ஆட்சி (Rule of law), சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before law) மற்றும் உட்புகுத்தும் அரசியல் (inclusive governance) என்ற சனநாயகக் கோட்பாடுகளை – மதசார்பற்ற விழுமியங்களைத் தகர்க்கின்றன. நாடு இன, மத அடிப்படையிலும் பிளவுபடமம் போது பொருளாதார மேம்பாடு சாத்தியம் இல்லை. நாடும் உருப்படாது.

Leave a Reply
You must be logged in to post a comment.