சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்தினரா?
இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை ‘திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது…..
இது உண்மைதானா என்று அறியவேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…
அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் ‘திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ளன.
அதில் 1080 பார்ப்பனர்கள் (எட்டு பேர் தவிர அனைவரும் வைணவர்கள்) எவரும் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை.
ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன.
அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது.
அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன), அதிலுள்ள ஊர், பிறகு கிராமம், பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன்( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது), இயற்கைப் பெயர், பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள்தான்.
அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்.
இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.
அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)….
1.”ராஜேந்திரசிம்ம வளநாட்டு தனியூர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்து பரத்வாஜ கோத்திரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து இறையானரை சூர் மதிசூதன் யக்ஞப் பிரிய பட்டனுக்குப் பங்கொன்று”
என்று ஒரு அந்தனனுக்கு வழங்கப்பட்ட விபரங்களுடன் தொடங்குகிறது.
அதாவது,
‘ராஜேந்திரசிம்ம’ என்ற வளநாட்டின்
‘தனியூரில்’ உள்ள
‘வீரநாராயண சதுர்வேதி மங்கலம்’ என்னும் ஊரைச் சேர்ந்த
‘இறையானரை சூர் மதிசூதன்’ என்ற இயற்பெயரையும்
‘யக்ஞப் பிரியப் பட்டன்’ எனும் பட்டப்பெயரைக் கொண்டவனுக்கு ஒரு பங்கு நிலமும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த 7 முதல் 10 நபர்களின் பெயர்கள் என 1080 பார்ப்பனர்களின் பெயர்கள் உள்ளன.
அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில….
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்.
சமஸ்கிரிதத்தில் ஏதாவது பெயர்கள் வந்துவிட்டால் இது பிராமனர்களுடையது என கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பிராமன காதல் கதை, நாவல் எழுதுபவர்கள் மற்றும் 1910–30 ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு உதவிய பிராமன ஊழியர்கள் முடிவு செய்து எழுதிவிடுவர். ஏனென்றால் அக்காலங்களில் பிராமனர்களே படித்தவர்கள். ஆங்கிலேயனுக்கு வரலாறுகளை ஆராயும் உதவியாளர்கள். பல வரலாற்று ஆசிரியர்கள் நாகசாமி ஐயர், ஐயங்கார், சாஸ்திரி, ஷர்மா போன்றோரும் பிராமனர்கள். இவர்கள் தங்களது சொந்தக் கருத்துக்களை வரலாறுகளாக திணித்துவிடுவார்கள். பின்னால் வருபவன் தலைமுடியை பிய்த்துக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். இப்போதைக்கு பொய்களை திரித்து விடு. இதுதான் தமிழ்நாடு சோழர்களின் வரலாறுகள். 1960க்கு பின் வந்த பலசாதி வரலாற்று ஆசிரியர்கள் உண்மைகளை ஆராய்ந்து திருத்துவதற்குள் , பழைய பொய்களே நிலைத்துவிடுகிறது.
பிற்கால , கடைசிக்கால சோழமன்னர்களை, மக்களை இவ்வாறு சொல்லி ஏமாற்றினர். இதனால் பிராமனர்களுக்கும் வரிவசூல் மந்திரி, மன்னர்களுக்கிடையில் தகராறுகள் ஏற்பட்டு பிராமனர்கள் கொலைகளைச் செய்திருக்கின்றனர். யார் அந்தச் சோழன் ? ஆதித்ய கரிகாலன்.
அக்ரஹாரம் என்பது ஒரு உதாரணம். பெங்களூர் சில்க் போர்டு ஜங்ஷனிலிருந்து 4 கிமீ தொலைவுகளில் பரப்பன அக்ரஹாரா (சிறைச்சாலை), ரூபன அக்ரஹார, ஹொன்னன அக்ரஹாரம், கலீன அக்ரஹாரம் என இன்னும் பல 10 அக்ரஹாரம் என்ற கிராமங்கள் உண்டு. இவை பிராமன அக்ரஹாரம் மட்டும் அல்ல. எல்லா சாதியினரும் வசிக்கும் இடம், கிராமம். இங்கு ஓரிரு பிராமனக் குடும்பங்களும் வசித்தன. இவர்களின் பெயர் வைக்கப்பட்டன.
இதேபோல கோரமங்கலா, நெலமங்கலா, கெளமங்களா , என பல கிராமங்கள் இருக்கின்றன.
இராஜாஜி பிறந்த இடம் தொரப்பள்ளி. இதனுடன் ஆற்றோரம் அக்ரஹாரம் எனச் சேர்த்துவிட்டனர்.
அதனால் சமஸ்கிரிதப் பெயர் வந்துவிட்டால் பிராமனருடையது எனக்கருதுவது தவறு.
சதுர்வேதி மங்கலம் :
https://vaettoli.blogspot.com/2018/07/blog-post_28.html
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும்
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் பற்றிய பொய்யும் உண்மையும் பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர். மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர். இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாயின் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக ஆக்கி தானமாக வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர், கணி, காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்களும் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில்’ இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில் உள்ளது. “வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று” “நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை” “ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று” “அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை” “அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி” “தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி” என்றவாறு கூறப்பட்டுள்ளது…. மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும். யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை. பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு. அவற்றின் உரிமையாளர் அரசு தான். மேற்கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும், இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும், மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம். நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது. அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும். “….யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்” என்று கூறுகிறது. ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது. ”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” சி.கோவிந்தராசன், சி.கோ.தெய்வநாயகம். – பதிப்புத்துறை: துரை காமராசர் பல்கலைக்கழகம். நன்றி: பாண்டிய ராசன் சட்டத்தரணி படம்: கரந்தை செப்பேடுகள் தொகுதியில் மூவேந்தர் சின்னங்களுடன் கூடிய அரசேந்திர சோழனின் முத்திரை
இதையே கூகுளில் டைப் செய்தாலும் விரிவான தெளிவான பதில் கிடைக்கும்.
சோழர்களின் சதுர்வேதி மங்கலம் , பார்ப்பனர்களுக்கு இராஜேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாகவும், பார்ப்பனர்களுக்கு மட்டுமே இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பொய்களை பரப்பி தற்போதும் தொடருகின்றனர்.
முழுவதும் தவறான கருத்து, ஆராய்ச்சி.
இராஜேந்திர சோழன் கிபி 1020 ஆம் ஆண்டில், கீழ்த்தஞ்சைப் பகுதிகளில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓருராக்கி, தன் தாயின் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்ம தேயமாக ஆக்கி தானமாக வழங்கினான்.
அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல. சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர், கணி, காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்களும் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில் இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57வது செப்பேட்டில் உள்ளது.
பார்ப்பனர்கள் உட்பட்ட அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு. அவற்றின் உரிமையாளர் அரசுதான்.
மேற்கொண்ட நிலங்களுக்கு முழுவரிவிலக்கு அளிக்கப்படவில்லை.
முதலாம் ஆண்டில் வரியில் 4ல் 1 பங்கும்
இரண்டாம் ஆண்டில் 4ல் 2 பங்கும்
மூன்றாம் ஆண்டில் 4இல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்.
நான்காம் ஆண்டிலிருந்து வரிச்சலுகை முடிகிறது…
ஆனால் கம்மாளச்சேரி, பறைச்சேரிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறுதான் பிற சமஸ்கிரிதப் பெயர்களை தமக்கு சாதகமாக , வரலாறுகளை திரித்து எழுதுகின்றனர். ஆங்கிலேயனை முட்டாளாக்கினர்.
11ஆம் நூற்றாண்டு இராஜேந்திர சோழன் காலங்களில் சோழப்பேரரசு கன்னட, தெலுங்கு, கலிங்கம் வரை பரவியிருந்ததால் பிராமனர்களின் குடியிறுப்புகள் மற்றும் இம்மக்கள் பல இடங்களில் குடிமாறினர். வட இந்தியாவிலிருந்து சோழர்கள் காலங்களில் பிராமனர்கள் வரவில்லை. பல்லவர் காலங்களில் வந்து குடியேறினவர்கள் தீக்ஷிதர்கள் போன்றோர்.
சோழர்கள் வடநாட்டு பிராமணரைக் குடியமர்த்திசதுர்வேதி என்றால் ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் ஓதி உணர்ந்து கற்பிப்பவர்.இப்படிப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிலம் சதுர்வேதி மங்கலம்.
பிராமணர்களுக்கு வேதம் ஓதும் செயலை இடையூறின்றி செய்து வர தாணமாக வழங்கப்பட்ட நிலம் பிரமதேயம்.
கோயில் காரியங்கள் சிறப்பாக தொடர்ந்து நடைபெற கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் தேவதேயம்.
List of Chaturvedimangalams
by
Dr. R. Nagaswamy
| Caturvedi Mangalam | Village-modern | Taluk | District | State | Dynasty | Cent | |
| 1 | Adiyaraiya-mangalam | Thiruvadikai | Cudalore | S.Arcot | Tnadu | Pallava | 6th |
| 2 | Akalimnangalam | Cakkarappalli | Papanasam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 3 | Akilanayaka Caturvedimangalam | Thiruvalanjuli | Kumbakonam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 4 | Alakiyaa chola Caturvedimangalam | Alattur | Thirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 10th |
| 5 | Amani narayana Caturvedimangalam | Thirupparkadal | Kanchipuram | Chenglepet | Tnadu | Pallava | 9th |
| 6 | ArinjikaiCaturvedimangalam | Nangavaram | Kulithalai | Trichy | Tnadu | Chola | 10th |
| 7 | ArumolidevaCaturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 8 | Avaninarayana caturvedimangalam | Kaveripakkam | Arakkonam | Chinglepet | T.Nadu | Pallava | 9th |
| 9 | Bhulokamanikka Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 10 | Bhuvaloka Manikka Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 11 | CholakulamanikaCaturvedimangalam | Mahadhanapuram | Kulithalai | Trichy | Tnadu | Chola | 11th |
| 12 | Cholakulantaka Caturvedimangalam | Pakanur | Pandimandalma | Madurai | Tnadu | Pandya | 13th |
| 13 | Cholakulasundari | Ohai | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 14 | CholendrasingaCaturvedimangalam | Maramangalam | Srivakundam | Tirunelveli | Tnadu | Chola | 11th |
| 15 | Citrantka Caturvedimangalam | Pullaputankudi | Papanasam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 16 | Danatonga Caturvedimangalam | Kottur | Nannilam | Tanjavur | Tnadu | Chola | 10th |
| 17 | Danatonga Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 18 | Dayamukha mangalam | Tandantottm | Kumbakonam | Tanjore | T.Nadu | Pallava | 8th |
| 19 | DevendravallavanCaturvedimangalam | Maramangalam | Srivaikundam | Tirunelveli | Tnadu | Pandya | 13th |
| 20 | Dharmasura | Viluppuram | Viluppuram | S.Arcot | Tnadu | Chola | 11th |
| 21 | Ekadihira mangalam | Near Karaikkal | Karaikkal enclave | Pondicheri | Tnadu | Pallava | 8th |
| 22 | Elunurruva Caturvedimangalam | Thirumalpur | Chenglepet | Chenglepet | Tnadu | Pallava | 9th |
| 23 | Gangeya raya Caturvedimangalam | Virkudi | Nannilam | Tanjavur | Tnadu | Chola | 13th |
| 24 | Gunacilamangalam | Piccandar koyil | Thirucchi | Thirucchi | Tnadu | Chola | 9th |
| 25 | Isanamangalam | Thirucchenturai | Thiruccy | Thirucci | Tnadu | Chola | 10th |
| 26 | JananathaCaturvedimangalam | ||||||
| 27 | Jaymkonda chola Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tajnore | Tnadu | Chola | 11th |
| 28 | Kalikadinta Caturvedimangalam | Tetiyur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 29 | Kalingaraya Caturvedimangalam | Kampayyanallur | Arur | Daharmapuri | Tnadu | Pandya | 14th |
| 30 | Kerala mahadevi Caturvedimangalam | Injikkudi | Nannilam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 31 | Kerkulasani Caturvedimangalam | Vadakadu koyilur | Thirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 13th |
| 32 | Komangalam | Panriyur | Papanasam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 33 | Kshatriya skhamani Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 34 | Kuladipamangalam | Kirakkalur | Tirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 12th |
| 35 | KulasekaraCaturvedimangalam | Tirunelveli | Tirunelveli | Tirunelveli | Tnadu | Pandiya | 14th |
| 36 | Kulottunga Caturvedimangalam | Thirukkalar | Chola | 12th | |||
| 37 | Kulottunga chola Caturvedimangalam | Thirunaraiyur | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 12th |
| 38 | Kulottunga chola Caturvedimangalam | Thiruppampuram | Nannilam | Tanjavur | Tnadu | Chola | 11th |
| 39 | Kumanamangalam | Tirunelveli | Tirunelveli | Tirunelveli | Tnadu | Pandiya | 14th |
| 40 | Lokaditta Caturvedimangalam | Kirakkalur | Thirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 12th |
| 41 | Madhuranaki Caturvedimangalam | Thirumakalam | Thirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 13th |
| 42 | Mahendramangalam | Mahedramangalam | Musiri | Trichy | Tnadu | Pallava | 7th |
| 43 | Manikka Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 44 | Miladamadevi Caturvedimangalam | Nenmeli | Thirukkoyilur | S.Arcot | Tnadu | Chola | 13th |
| 45 | Nandipanma mangalam | Uyyakkondan Thirumalai | Thiruchi | Thirucci | Tnadu | Pallava | 8th |
| 46 | Nandipanma Mangalam | Uyyakkondan Thiumalai | Thirucchi | Thirucchi | Tnadu | Pallava | 8th |
| 47 | Narasinga mangalam | Anaimalai | Melur | Madurai | Tnadu | Pandya | 8th |
| 48 | Nicca vinita Caturvedimangalam | Anbil | Thirucchi | Thirucchi | Tnadu | Chola | 10th |
| 49 | Nrayana Caturvedimangalam | Udaiyarkoyil | Papanasam | Tanjore | Tnadu | Chola | 14th |
| 50 | Pancavanmadevi Caturvedimangalam | Papanasam | Papanasam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 51 | Pancavanmadevi Caturvedimangalam | Thrunallur | Papanasam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 52 | Paramesvaramangalam | Paramesvaramangalam | Madurantakam | Chinglepet | Tnadu | Pallava | 7th |
| 53 | Parantaka Caturvedimangalam | Siyapuram | Kanchipuram | Chenglepet | Tnadu | Chola | 10th |
| 54 | ParantakaCaturvedimangalam | Tiribuvanai | Pondicherry | Pondicherrry | Tnadu | Chola | 10th |
| 55 | Pattattal-mangalam | Pattattal mangalam | Pttattalmangalam | Thirutturai pundi | T.Nadu | Pallava | 8th |
| 56 | Pavirimangalam | Pullaputan kudi | Papanasam | Tanjore | Tnadu | Chola | 14th |
| 57 | Pavitra manikka Caturvedimangalam | Enkan | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 58 | Ponmeynta Caturvedimangalam | Near Chidambaram | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 12th |
| 59 | Pukkatturai Vallava Caturvedimangalam | Thirumalisai | Sriperumpudur | S.Arcot | Tnadu | Chola | 13th |
| 60 | Pullamangalam | Pullamangai | Papanasam | Tanjore | Tnadu | Chola | 10th |
| 61 | RaanadhiraCaturvedimangalam | Tiruvadhigai | Cudalore | S.Arcot | Tnadu | Pallava | 8th |
| 62 | Rajadhiraja Caturvedimangalam | Enkan | Nannnilam | Tanjavur | Tnadu | Chola | 11th |
| 63 | Rajagambhira Caturvedimangalam | Srivanchiyam | Nannilam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 64 | RajakesariCaturvedimangalam | Koyildevarayanpettai | Papanasam | Tanjore | Tnadu | Chola | 10th |
| 65 | Rajamartanda Caturvedimangalam | Takkolam | Arakkonam | Chenglepet | Tnadu | Palllava | 9th |
| 66 | Rajanarayana Caturvedimangalam | Munnur | Tindivanam | S/Arcot | Tnadu | Pallava | 13th |
| 67 | RajanarayanaCaturvedimangalam | Udaiyarkoyil | Papanasam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 68 | Rajaraja Caturvedimangalam | Brahmadesam | Viluppuram | S.Arcot | Tnadu | Chola | 10th |
| 69 | Rajaraja Caturvedimangalam | Near Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 70 | Rajaraja Caturvedimangalam | Thirumandangudi | Papanasam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 71 | RajendraCaturvedimangalam | Srivaikundam | Srivaikundam | Tirunelveli | Tnadu | Chola | 11th |
| 72 | Ramadeva mangalam | Near Chidambaram | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 13th |
| 73 | Sendamangalam | Sendamangalam | Thindivanam | S.Arcot | Tnadu | Pallava | 13th |
| 74 | Simhavishnu Caturvedimangalam | Tnadu | Pallava | 6th | |||
| 75 | Sivapada sekharaCaturvedimangalam | Accyutamangalam | Nannilam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 76 | Skanda sishya mangalm | Rayakkottai | Krishnagiri | Dharmapuri dist | Tnadu | Pallava | 8th |
| 77 | Somanatha Caturvedimangalam | Accyutamangalam | Nannilam | Tajnore | Tnadu | Chola | 13th |
| 78 | Sri Mudikonda chola Caturvedimangalam | Thiruppuhalur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 79 | Sri Tongamangalam | Sitakkamangalam | Nannilam | Tanjore | Tnadu | Chola | 12th |
| 80 | SrikandharathithaCaturvedimangalam | Thirumalapadi | Udayarpalayam | Trichy | Tnadu | Chola | 10th |
| 81 | Srikantamangalam | Pullamangalam | Papanasam | Tanjore | Tnadu | Chola | 10th |
| 82 | Srivallabamangalam | Gangaikondan | Tirunelveli | Tirunelveli | Tnadu | Pandiya | 13th |
| 83 | Srivasishtakudi | Tittakudi | Tanjore | Tnadu | Vijayanagar | 14th | |
| 84 | SuttamaliCaturvedimangalam | Kalappal | Thirutturaipundi | Tanjore | Tnadu | Chola | 11th |
| 85 | Tayium nalla karuvur | Pattur | Nannilam | Tanjore | Tnadu | Tnadu | 12th |
| 86 | Thiruccirrambala -mangalam | Near Chidambaram | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 12th |
| 87 | ThiruchirrambalaCaturvedimangalam | Tittaikudi | Virudhachalam | S.Arcot | Tnadu | Chola | 12th |
| 88 | Thiruttondatokai mangalam | Near Thiruppanaiyur | Nannilam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 89 | Tribhuvanamahadevi Caturvedimangalam | Thiruaikavur | Papanasam | Tanjore | Tnadu | Chola | 10th |
| 90 | Tribhuvanamahadevi Caturvedimangalam | Udaiyar koyil | Papanasam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 91 | Tribhuvanamahadevi Caturvedimangalam | Thiruvaikavur | Papanasam | Tanjore | Tnadu | Chola | 11th |
| 92 | Tyagasamudra Caturvedimangalam | Udaiyar koyil | Papanasam | Tanjore | Tnadu | Chola | 13th |
| 93 | Udayachandra mangalam | Udayendram | Gudiyattam | N.Arcot dist | Tnadu | Pallava | 8th |
| 94 | Ulakalanta chola Caturvedimangalam | Omampuliyur | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 12th |
| 95 | Uttama sili Caturvedimangalam | Thirupalatturai | Thiruchi | Tnadu | Chola | 10th | |
| 96 | Uttarameru Caturvedimangalam | Uttramerur | Kanchipuram | Chenglepet | Tnadu | Pallava | 8th |
| 97 | VijayankuraCaturvedimangalam | Thiruparaithurai | Trichy | Trichy | Tnadu | Pallava | 8th |
| 98 | Vikkiramachola Caturvedimangalam | Erumbur | Tnadu | Chola | 12th | ||
| 99 | Viranarayana Caturvedimangalam | Mukiaiyur | Chidamabaram | S.Arcot | Tnadu | Chola | 10th |
| 100 | ViruddharajabhayankaraCaturvedimangalam | Thiruchendurai | Trichy | Trichy | Tnadu | Chola | 12th |
| 101 | ViruddharajabhayankaraCaturvedimangalam | Thiruchendurai | Trichy | Trichy | Tnadu | Chola | 12th |
https://www.kamakoti.org/kamakoti/articles/ChaturvediMangalam.html

Leave a Reply
You must be logged in to post a comment.