பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 1 [14-04-2010 ஈழநேசன்(அவுஸ்ரேலியா) இணைய இதழில் வெளியானது]
பஞ்சாங்கமும், ‘பஞ்ச’ அங்கங்களும்.
பகுதி-1
“பிரபலன்”
புது வருடம் பிறக்கிறது. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் இனிவரும் ஆண்டு அளிக்கப்போகும் பலன்களைத் தெரிந்து கொள்ளக் கோவில்களையும், தமக்கு நம்பிக்கையான ‘ஜோதிடர்’களையும் நாடிச்செல்வார்கள்.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் ‘பஞ்சாங்கம்’படிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
உண்மையில் இந்தப் ‘பஞ்சாங்கம் படிப்பது’ என்பது, குறிப்பிட்ட அந்த வருடப் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கும் அவ்வருடத்துக்கான பொதுப் பலன்களை வாசித்து விளக்குவதே ஆகும்.
ஜோதிட பலன்களைக் கூறுவதற்கு சூரியன் முதல் சாயாக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேது வரையிலான நவ கோள்களின் நிலையினைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
எனினும், நமது ‘பஞ்சாங்கங்கள்’ யாவும் நாள்-நட்சத்திரம்-திதி-கரணம் –யோகம் என்னும் ஐந்து அங்கங்கள் பற்றி அறிவுறுத்தும் ஓர் நூல் ஆகும்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான விடயங்கள்; நாம் புதிதாகச் செயல்களில் ஈடுபடும் சமயத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றினை விளக்கும் வழிகாட்டி என்றும் சொல்லலாம்.
இதனை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின், பஞ்சாங்கங்கள் ; நமக்கு ‘நல்ல நாள்’ குறித்துத் தரும் ‘புரோகிதர்க’ளின் ‘கை நூல்’ என்று கூறுவதே மிகவும் பொருந்தும்.
ஆனால், இந்தப் பஞ்சாங்கங்களின் துணையோடுதான் இன்று பலர் ‘ஜோதிடம்’ கூறுவதைக் காண்கிறோம்.
சுப-அசுப காரியங்களுக்கான நேரத்தினையும்,நாளினையும் குறிக்கப் பயன் படுத்தப்படும் பஞ்சாங்கம் பற்றிய விளக்கத்தினை உங்கள் முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
பஞ்ச-அங்கங்கள் எனும் ஐந்து உறுப்புகள்
பெயருக் கேற்றாற்போல் பஞ்சாங்கங்கள் யாவும், நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று; நாள், நட்சத்திரம், திதி, கரணம் ,யோகம் என்னும் ஐந்து விடயங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த ஐந்தும், நவ கோள்களுள், சூரியன்,சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பானவையே. ஏனைய கிரகங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஒன்பது கிரகங்களின் பிரபஞ்ச இருப்புக்கும், பூமியில் பிறக்கும் உயிரின் இருப்புக்கும் இடையேயான தொடர்பினை அடிப்படையாகக் கொண்டது நமது ‘இந்திய ஜோதிடம்’. இதுவே, மேற்குலகில் ராகு-கேது இவற்றுக்குப் பதிலாக யுரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ என்னும் கிரகங்களை உள்ளடக்கி மொத்தம் பத்துக் கிரகங்களதும் நிலையினை ஆராய்ந்து பலன் கூறும் கலையாக நிலைபெற்றிருக்கிறது.
ஆனால், பஞ்சாங்கம் கணிப்பதற்கு சூரியன் மற்றும் சந்திரன் இவை இரண்டினதும் விண்வெளி இயக்கங்களே கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவற்றோடு, நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல‘ஒளி வருடங்கள்’ தொலைவில் நிலை பெற்றிருக்கும் நட்சத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளன.
‘ஜோதிடர்’களுக்குத் தேவையான நவ கோள்களின் பிரபஞ்ச இருப்பினை ஆராய்வதை விட்டுவிட்டு, ‘புரோகிதர்’களுக்குக் கைகொடுக்கும் ‘பஞ்சாங்க’ம் பற்றிய விளக்கத்திற்கு வருகிறேன்.
இதனை விளங்கிக் கொள்வதற்கு நமது பூமி, எமது வெற்றுக் கண்களால் தினமும் நாம் தரிசிக்கும் சூரியன் –சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அடிப்படை வானியல் அறிவு தேவை.
இந்தப் பிரபஞ்சம், பல கோடி விண்மீன் கூட்டங்களால் ஆனது என்கிறது வானியல்!
இவற்றில் நமது சூரியன் இடம்பெற்றிருக்கும் ‘சூரிய மண்டலம்’ சுருள் வடிவப் ‘பால் வீதி’ [Milky Way] ஒன்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு ‘துளி’யே ஆகும் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது! என்றாலும், இதுதான் உண்மை. இச் சுருள் வடிவப் ‘பால் வீதி’’யில் இடம்பெற்றுள்ள நமது சூரிய மண்டலம்; அதில் உள்ள கிரகங்களோடு சேர்ந்து இதன் மையப்பகுதியைச் சுற்றி வருகிறது!
இப் பால்வீதிக்கு அப்பால், பிரபஞ்சத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரக் குவியல்களுள் சிலவற்றை இப் பால்வீதியும் அதனோடு இணைந்துள்ள நமது சூரிய மண்டலமும் ஒவ்வொரு விநாடியும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. அதாவது…… நமது சூரிய மண்டலம் இருக்கும் இந்தப் பால்வீதி யை ஓர் ‘வண்டிச் சக்கரம்’ எனக் கற்பனை செய்து கொள்வீர்களாயின்…. இவ்வண்டிச் சக்கரத்துக்கு அப்பால் பல ஆயிரம் ஒளி வருடங்கள் தொலைவில் தொங்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில நட்சத்திரக் குவியல்களை, இச் சக்கரம் தன் சுழற்சியின்போது கடந்து சென்று கொண்டிருக்கிறது என்று பொருள்!
ஓர் சுற்று அல்லது வட்டம் என்பது 360 பாகைகளை உடையது என்பது, நவீன அறிவியல் கூறும் தகவல்.
எனவே நமது சூரிய மண்டலமும்,அதனோடு சேர்ந்து இயங்கும் ஏனைய கிரகங்களும் தமது ‘மண்டல எல்லை’க்குள் சுழன்றும்,சுற்றியும் வரும் போது; விண்ணில் எங்கோ தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன என்பது புரிகிறதல்லவா?
இனி, நமது சூரிய மண்டலத்துக்கு வருவோம்.
இச் சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள கோள்களுள், நமது இந்திய ஜோதிடம் சுவீகரித்துக் கொண்டவை மொத்தம் ஏழு கோள்கள் மட்டுமே. அதிலும் சூரியன் ஓர் நட்சத்திரமாயினும், அதனையும் ‘கோள்’ என வகைப் படுத்தியே எமது ‘ஜோதிட இயல்’ தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் , புதன், சுக்கிரன்,பூமி, செவ்வாய், குரு,சனி ஆகியவையும் இவற்றுக்கு அப்பால் யுரேனஸ், நெப்டியூன்,புளூட்டோ மற்றும் இக் கோள்களது உப-கோள்கள் யாவும் தமது இயக்கங்களின் போது; விண்ணில் உள்ள விண்மீன் (நட்சத்திரக்) கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.
நமது, ஜோதிடம் எடுத்துக் கொண்ட கோள்களின் வரிசையில்…..
சூரியன் ; பூமிக்குப் பதிலாக அதனைச் சுற்றிவரும் சந்திரன்; செவ்வாய்; புதன்; குரு; சுக்கிரன் மற்றும் சனி இவை ஏழும் இடம் பெறுகின்றன. இவற்றோடு, சாயாக் கிரகங்களான ராகு-கேது க்களோடு சேர்த்து ஒன்பது கிரகங்கள் எனும் கணக்கு உருவாகிற்று.இவ் ராகு-கேது இரண்டும் உண்மையிலேயே சந்திரன் பூமியைச் சுற்றும் வட்டப் பாதையும், பூமி சூரியனைச் சுற்றும் வட்டப் பாதையும் ஒன்றை மற்றையது சந்திக்கும் அல்லது வெட்டும் புள்ளிகள் என்பதே உண்மை. இப் புள்ளிகள் இரண்டும் கண்ணுக்குப் புலப்படாத ‘மாயப் ‘ புள்ளிகளாதலால் இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ (நிழல் கோள்கள்) எனக் குறிப்பிடுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட விபரங்களைத் தெரிந்து கொண்டால், இங்கு நாம் எடுத்துக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ பற்றிய விளக்கத்தினை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்பதாலேயே இத்தனையும் எழுதினேன்.
இனிப் பஞ்சாங்க விளக்கத்துக்கு வருகிறேன்,
நாள்:-
பூமியின் சுழற்சியோடு தொடர்புடையது நாளாகும். நமது பூமி தனது அச்சில் ஒரு தடவை சுழன்று முடிக்கும் நேரம் நாள் எனப் படுகிறது.இந்த நாளினைத் தீர்மானிப்பது சூரியன் ஆகும்.
அதாவது; பூமியின் ஓர் முழுச் சுழற்சி என்பது, சூரியனின் முதல் உதயத்துக்கும், இரண்டாம் உதயத்துக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும்.எனவேதான் இந்திய நாள்காட்டிகளில் சூரிய உதயம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
எனவே, நமது பஞ்சாங்கம் கூறும், நாள் என்பது, பூமி-சூரியன் சம்பந்தப் பட்ட இயக்கத்தினால் ஏற்பட்டதே என்பது இப்போது விளங்கியிருக்கும்.
நட்சத்திரம்:-
பொதுவாக எல்லாக் கிரகங்களும் சூரியனைச் சுற்றிவரும் சமயத்தில், அவற்றின் பின்னணியில் நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.
எனினும், நாம் இங்கு குறிப்பிடும் ‘நட்சத்திரம்’ பூமியில் பிறக்கும் ஒருவரது நட்சத்திரம் என்னும் பொருளிலேயே எடுத்துக்கொள்ளப் படுகிறது.
உண்மையில், இது ஒருவர் பிறக்கும் சமயத்தில் சந்திரன் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரத்தின் அல்லது அக்கூட்டத்தின் பெயரே ஆகும்.
இன்னும் விளக்கமாகக் கூறுவதாயின்……..
பூமியில் ஒருவர் பிறக்கும் சமயத்தில், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரன் எந்த நட்சத்திரத்தினைக் (இவை பெரும்பாலும் பல நட்சத்திரங்களின் தொகுதியாக இருப்பதுண்டு- பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ள இவ்வைந்து அங்கங்களையும் பற்றி விரிவாக எழுதும்போது இது குறித்த விளக்கத்தினைப் பெறலாம்) கடந்து செல்கின்றதோ அதுவே அவரது ‘ஜன்ம நட்சத்திரம்’ என வழங்கப்படுகிறது.
எனவே நமது பஞ்சாங்கம் குறிப்பிடும் நட்சத்திரம் என்பது பூமி-சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் இயக்கங்களோடு, விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பினோடு தொடர்புடையது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
விண்ணில் நாம் கற்பனையாக உருவாக்கி வைத்திருக்கும், இந் நட்சத்திரங்களால் ஆன திரையில் மொத்தம் 27 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்து,
திதி:-
பூர்ணிமை; அமாவாசை;மற்றும் பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான பதின்நான்கும் திதிகள் என்பது எமக்குத் தெரியும்.
இந்தத் திதிகள் அனைத்தும், சூரியன் –சந்திரன் இவை இரண்டின் இயக்கங்களோடு மட்டும் தொடர்புடையவை ஆகும்.
பூமியச் சுற்றி வரும் சந்திரன், அது தன் ஓர் சுற்றுக்குச் சுமார் ஒரு மாத காலத்தினை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு சுற்றிவரும் சமயத்தில், பூமியினைப் பொறுத்த மட்டில்; சில நாள்களில் சூரிய ஒளி அதன் பின்புறத்தில் படும்விதமாகவும், ஏனைய நாள்களில் அதன் முன்புறமாகப் படும் வகையிலும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறான இயக்கத்தின்போது, சந்திரனின் பின் புறத்தில் சூரிய ஒளி படும் போது , பூமியை நோக்கி இருக்கும் அதன் முன் பக்கம் இருள் மயமாகி விடுகிறது. இதனையே நாம் அமாவாசை என்கிறோம்.அதே போன்று, சூரிய ஒளி சந்திரனின் பூமி நோக்கிய முன் புறத்தில் பூரணமாகப் படும்போது அதனை நாம் பூரணை என்கிறோம்.
வானியல் கணிப்பின்படி, சூரியனும் சந்திரனும் பூமியில் இருந்து ஒரே அளவான கோண அளவில் அமைந்திருக்கும் சமயம் அமாவாசை ஏற்படுகிறது.நேரெதிராக நூற்றி எண்பது (180) பாகையில் இவை இடம் பெற்றிருக்கும் சமயத்தில் பூரணை ஏற்படுகிறது. இடையில் உள்ள இந்த 180 பாகைகளையும் 15 ஆல் வகுத்து ஒவ்வொரு 12 பாகைக்கும் ஒரு திதி என்னும் வகையில் திதிகள் பங்கிடப் பட்டிருக்கின்றன.
இதன் படி;அமாவாசையின் போது ஒரே கோணத்தில் ( சுழியம் பாகை) இருக்கும் சூரியனும் சந்திரனும் படிப்படியாக விலகிச் சென்று, பூரணையின் போது 180 பாகை இடைவெளியினை எட்டிவிடும்.
பின்னர், பூரணையில் ஆரம்பித்துப் படிப்படியாக ஒன்றை மற்றையது நெருங்கி வந்து மீண்டும் சுழியம் பாகையை எட்டும். இதனை 360 பாகை எனவும் குறிப்பிடலாம்.இரண்டும் ஒன்றே!
அமாவாசையில் தொடங்கி பூரணை வரை வளர் பிறை எனவும்; பூரணை முதல் அமாவாசை வரை தேய் பிறை எனவும் குறிப்பிடப் படுகிறது.
எனவே, திதிகள் யாவும் சூரியன்- சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் சந்திப்பு மற்றும் பிரிவு தொடர்பான கணிப்பு என்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
அடுத்து;
கரணம்:-
பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இந்தக் ‘கரண’த்திற்கும், இன்றைய அரசியல்வாதிகள் அடிக்கும் குட்டிக்’கரண’த்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையது!
‘திதி’ என நாம் முன்பே வரையறை செய்திருக்கும் பிரிவின் சரிபாதி- அதாவது 12 பாகை அளவினைக் கொண்ட திதியில் இரண்டு கரணங்கள்; ஒவ்வொன்றும் ஆறு (6) பாகை அளவில், இடம்பெற்றிருக்கும்.
கரணங்கள் பதினொன்று எனவும் அவற்றில் நான்கு ;மாதத்தில் ஒரேயொரு தடவைதான் வரும் எனவும், ஏனைய ஏழும் ஒவ்வொன்றும் எட்டுத்தடவைகள் வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாதத்தில் உள்ள 30 திதிகளது பாதிப் பங்கினை உடைய 60 கரணங்களும் அவற்றுக்குரிய ஒழுங்கில் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இனி இறுதியாக;
யோகம்:-
குறிப்பிட்ட சமயத்தில்;சூரியனது பாகை அளவையும் ( இதனை ஸ்புடம் என்பார்கள்); சந்திரனது பாகை அளவையு கூட்டினால் வருவது ‘யோகம்’ ஆகும்
இவ் யோகங்களும், நட்சத்திரங்களைப் போன்று எண்ணிக்கையில் 27 ஆகும்.
மேற்கூறிய நாள்; நட்சத்திரம்; திதி ; கரணம்; யோகம் இவ் ஐந்துமே பஞ்சாங்கத்தின் பிரதான அங்கங்கள் அல்லது உறுப்புகள் ஆகும்.
இவை ஒவ்வொன்றினுக்கும் இடப்பட்டிருக்கும் பெயர்கள், அவற்றுக்கும்-மனித வாழ்வுக்கும் இடையிலான தொடர்புகள் எனத் தமது அறிவினாலும், அனுபவங்களாலும்-எமது ‘ரிஷி’களும், (விஞ்)ஞானிகளும்- உணர்ந்து கூறிய விபரங்கள் என்பன குறித்து, இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்..
வானும் வாழ்வும்!
மனித இனம், படிப்படியாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுவந்த சமயத்தில்… எதிர் காலம் குறித்த கற்பனைகளும்–திட்டங்களும்.. கூடவே ‘பய’ங்களும் வளர ஆரம்பித்துவிட்டன எனலாம்.
தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொருவகையான குண இயல்புகளையும், திறமைகளையும், உடல் வலிமையினையும், வாழ்க்கை முறைகளையும், ஆயுளையும் கொண்டிருப்பதைக் காணும் போது, தனதும் தனது உறவுகளினதும் எதிர்காலம் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவன் மனதில் உருவாகியிருக்கக் கூடும்!
இந்த ஆவலும் தேடலுந்தான் காலப் போக்கில் எதிர்காலம் பற்றி உணரும் திறனாகவும்,அவ்வாறு உணர்ந்ததை உரைக்கும் கலையாகவும் பரிணமித்தது எனலாம்.
இயற்கையோடு வாழ்ந்து–அதன் வளங்களால் தன்னை வளப்படுத்திக் கொண்ட மனிதன்; ஆரம்பத்தில், தனக்கும் முன்னால் ‘இயல்பாகவே’ தோன்றி, ஓரொழுங்கில் இயங்கிவரும் சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களை; அவற்றின் விண்வெளி இருப்பினை–அதாவது விண்ணில் அவை சுற்றிவரும் கட்டொழுங்கினைத் தனக்குத் துணையாக எடுத்துக் கொண்டான்.உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாக ஒளியையும், வெப்பத்தையும் வழங்கும் சூரியன்; இரவு நேரங்களில் இதமான வெளிச்சத்தையும், மன எழுச்சியையும் தூண்டிவிடும் சந்திரன்…; இவையனைத்துக்கும் அப்பால் தூரத்தே ஒளிரும் நட்சத்திரங்கள் என, இயற்கை படைத்தளித்த அனைத்தையும், அவன் வியப்போடு ஆராய முற்பட்டான்.
முதல்படியாக, இவ்விண்பொருட்களின் உதய–அஸ்தமன நிகழ்வுகளும் அவற்றின் இயக்கங்களும், உலகின் தட்ப வெப்ப மாறுபாடுகளும், மழை,புயல்,வறட்சி ஆகியவையும் இவையனைத்துக்கும் இடையிலான தொடர்புகளும் அவனுக்குப் புரிய ஆரம்பித்தன.
வானியலின் ஆரம்பமே இந்த மனித அவதானிப்புகளில் இருந்து உருவானது என்று சொல்லலாம்.
மனித இனத்தின் தோற்றத்திலிருந்து, காடுகளிலும்,மலைகளிலும்,
கட்டாந்தரைகளிலும் அலைந்து திரிந்து, காய்களையும் ,கனிகளையும்; தேவை ஏற்பட்ட போது விலங்குகளையும் வேட்டையாடி உண்ட மனிதன், தனது உணவுத்தேவைக்காக அதனைத் தானே உற்பத்திசெய்யும் காலம் உதயமான சமயத்தில்– அதற்கு உயிர் நாடியாக விளங்கும் வெளிச்சமும், மழையும் பற்றிய கவனம் அவன் மனதில் எழுந்தது.
மழை எப்போது பெய்யும், வெய்யில் எப்போது அடிக்கும் என்பதை அறிய அவன் விண்ணில்–தன் கண்களுக்குக் காட்சி தந்த விண்பொருட்களின் இயக்கங்களைத் துணையாக்கிக் கொண்டான்.
காலப் போக்கில், இவற்றின் இயக்கங்களுக்கும் தனிமனித வாழ்வின் சம்பவங்களுக்கும் இடையேயான தொடர்புகள் அவனது மூளையில் ‘உறைத்த’ போது…. இன்று நாம் ‘ஜோதிடம்’ என்னும் பெயரில் அழைக்கும் ‘எதிர்காலம் உரைக்கும்’ கலை முகிழ்த்தது.
ஆரம்பத்தில் மனித இனம் தனது அறிதல் திறனின் உதவியால் ஏற்படுத்திக்கொண்ட வானியல் தரவுகள், காலப் போக்கில் வாழ்வியலில் துணைசெய்யும் ‘ஜோதிட’மாக; எதிர் காலம் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் துறையாகத்; தன்னை இனங் காட்டிக் கொண்டது..
காலங் காலமாக எமது, பண்டைய ரிஷிகள் ( இவர்கள் யாவரும் ஒரு வகையில் அந்தக் கால விஞ்ஞானிகள் என்றுதான் சொல்லவேண்டும்!) தமது அறிவின் திறனால், புதிய அணுகுமுறைகளைக் காணும் தேட்டத்தின் காரணமாகக் கண்டறிந்தவற்றைச் சுலோகங்களாக வடித்து வைத்தனர்.
அவ்வாறு அவர்கள் கூறிவைத்த அனுபவப் பதிவுகளை , அவர்களின் பின்வந்த சீடர்கள்,ஒழுங்கு படுத்தித் தொகுத்து அவற்றை மனித வாழ்வுக்கு துணைசெய்யும் ‘ஜோதிடக் கலை’யாக உருவாக்கியுள்ளார்கள்.
இந்த ‘ஜோதிடம்’ என்னும் அறிவுக் கலை, முற்றுமுழுதாக; கோள்கள்–நட்சத்திரங்கள் இவற்றின் இயக்கங்களோடு தொடர்புடைய ஓர் ‘வாழ்க்கை வழிகாட்டி’யாகும்.
“பிரபலன்”
இங்கு, பூமி,சூரியனைச் சுற்றிவரும் நீள் வட்டப் பாதை அமைந்துள்ள தளத்திற்கு ( இதனை ஆங்கிலத்தில் Eliptical Plane எனக் குறிப்பிடலாம்) 23.5 பாகை சாய்வாக, அதன் மேல் (வட)முனை எப்போதும் வட துருவ நட்சத்திரக் கூட்டங்களை நோக்கியவாறு (POLARIS) சுழல்கின்றது. இது தன் அச்சில் சுழல்வதால் இரவு-பகல் சேர்ந்த நாளினையும், அதே சமயம் சூரியனைச் சுற்றுவதால் பருவகாலங்களைக் (Seasons) கொண்ட வருடத்தினையும் எமக்குத் தருகிறது.
இதற்கு மற்றொரு இயக்கமும் உள்ளது. தன் அச்சில் சுழலும் பூமி உண்மையில் ஓர் பம்பரம் போன்று செயல்படுகிறது.பொதுவாகப் பம்பரம் சுழலும்போது அதன் மேல் முனையும் ஓர் வட்டப்பாதையை ஏற்படுத்துவதைக் கண்டிருக்கிறோம். அதே போன்று நமது பூமியும், தனது வடமுனை நோக்கிய பகுதியில் மிகப்பெரும் ‘மாய வட்டத்தினை’ உருவாக்கவே செய்கிறது. ஆனால் இதுபோன்ற முழு வட்டம் ஒன்றை உருவாக்குவதற்குச் சுமார் 26,000 வருடங்களை அது எடுத்துக் கொள்கிறது ! அதாவது, இன்று பூமியின் வடமுனை வட துருவத்தில் எந்தப் புள்ளியினை நோக்கியிருக்கிறதோ அதே புள்ளியினை மீண்டும் 26000 வருடங்களின் பின்னர் வந்தடையும்.!
இந்தக் குறை பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டே ‘அயனாம்ச திருத்தத்’தினை உருவாக்கியுள்ளனர். இவ் ‘அயனாம்ச’ அளவுகள் பெரும்பாலும் இந்திய ஜோதிடம் தொடர்பான கணிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், இந்தப் பூமியின் அச்சு ஏற்படுத்தும் இம் மாய வட்டம் எமது அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சூரிய உதய-அஸ்தமன நிகழ்வுகளையோ, வருடத்தின் பருவ காலங்களையோ பாதிப்பதில்லை. எனவே இன்றைய நாளின் சூரிய உதய-அஸ்தமன நேரங்களே பெரும்பாலும் அடுத்த வருடம் இதே நாளில் ஏற்படும்.
மற்றொரு புறத்தில்; பூமி, சூரியனைச் சுற்றிவரும் நீள் வட்டப் பாதையும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதில்லை. அது, சூரியனைச் சுற்றிவர எடுக்கும் கால அளவு மாறுபடுவதில்லை எனினும், அதன் பாதை, ‘சற்று நீள் வட்ட வடிவப் பந்தின்’மீது சுற்றப்பட்டிருக்கும் நூலைப் போன்று தோற்றமளிக்கும்!
மேலும், இயங்கும் பொருட்கள் அனைத்தும், அவற்றின் இயக்கம் சார்ந்தும் அவற்றைச் சுற்றியுள்ள ஏனைய கோள்களின் தாக்கத்தினாலும்,காலப் போக்கில் அவற்றின் பாதைகளில் சிறிய அளவில் மாற்றங்களை அடைகின்றன. இதற்கு, நமது பூமியும் விலக்கல்ல. சுமார் நூறாயிரம் ( அதாவது ஒரு லட்சம்) வருடங்களில் பூமியின் சுற்றுப்பாதை எவ்வாறு அமையும் என்பதை இன்றைய ‘வானியல் அறிவு’மூலமாக நாம் அறிந்து கொள்ளமுடியும்.( பட விளக்கம் பார்க்கவும்)
இன்றைய அறிவியல், சூரியன்-பூமி-சந்திரன் இம்மூன்றினதும் இயக்கங்கள் குறித்த துல்லியமான தரவுகளை எமக்கு அளித்திருக்கிறது.
நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும், நமது பூமி ஒவ்வொருவருடமும் ஜனவரி 3 ம் நாளில் சூரியனுக்கு மிகவும் கிட்டிய தூரமான சுமார் 147,166,462 கி.மீ( 91,445,000 மைல் )தொலைவில் சஞ்சரிக்கும்.அதே போன்று, ஜூலை 4 ந் தேதியன்று, இவ்விரு விண் பொருட்களும் அவற்றுக்கிடையில் மிக அதிக தூரமான சுமார் 152,171,522 கி.மீ அல்லது 94,555,000 மைல் தொலைவில் சஞ்சாரம் செய்யும்.
இவை இரண்டிற்கும் இடையிலான சராசரித் தூரம் 149,597,871 கி.மீ ( 92,955,807 மைல் ) என வரையறை செய்யப்பட்டு அது ”ஒரு வானியல் அலகு” [ 1 AU- one Astronomical Unit ]எனவும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சப் பொருட்களுக்கு இடையிலான தொலைவுகள் யாவும் இந்த வானியல் அலகிலேயே குறிப்பிடப்படுகின்றன.
நமது பூமி, சுமார் 365 நாள் 05 மணி 48 நிமி 46 செக்கன்ட்களில் சூரியனை ஒரு தடவை சுற்றி முடித்துவிடும். எனவே, ஒரு வருடம் என்பது 365.2422 நாள்கள் ஆகும்.
சூரிய ஒளி எமது கண்களை வந்தடைய 08 நிமி 19 செக்கண்ட்கள் ஆகிறது.அதாவது, சூரியன் உதித்துச் சுமார் 8.32 நிமிடங்களின் பின்னரே நாம் சூரிய உதயத்தைக் காண்கிறோம்!
பூமி, சந்திரன் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள சராசரித் தொலைவு சுமார் 384,000 கி.மீ அல்லது 238,855 மைல்கள் ஆகும். இது 0.00257 AU வுக்குச் சமமாகும்.
இவற்றுக்கிடையே உள்ள கிட்டிய தொலைவு- இதனைப் ‘பெரிகி’(Perigee) என்பர்- 363,300 கி.மீ அல்லது 225,700 மைல்கள் [ 0.00243AU].அதே போன்று, மிகக் கூடிய தொலைவு – இதனை ‘அபோகீ’ (Apogee) என்பர்- 405,500 கி.மீ அல்லது 252,000 மைல்கள் [ 0.00271 AU] ஆகும்.
மேற்கூறிய தகவல்கள் யாவும் இன்றைய வானியலின் அடிப்படைப் புள்ளி விபரங்கள் எனலாம். இதனை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கக் கணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், இவற்றோடு இணைந்து சுப, அசுப நேரங்கள் எனவும்; ராகு காலம்-எமகண்டம்-குளிகன் எனவும் சில வாழ்வியல் தொடர்பான குறிப்புகளையும் இப் பஞ்சாங்கங்கள் அளிக்கின்றன.
வானும் வாழ்வும்!
மனித இனம், படிப்படியாக சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுவந்த சமயத்தில்… எதிர் காலம் குறித்த கற்பனைகளும்–திட்டங்களும்.. கூடவே ‘பய’ங்களும் வளர ஆரம்பித்துவிட்டன எனலாம்.
தன்னைச் சுற்றியிருக்கும் ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொருவகையான குண இயல்புகளையும், திறமைகளையும், உடல் வலிமையினையும், வாழ்க்கை முறைகளையும், ஆயுளையும் கொண்டிருப்பதைக் காணும் போது, தனதும் தனது உறவுகளினதும் எதிர்காலம் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவன் மனதில் உருவாகியிருக்கக் கூடும்!
இந்த ஆவலும் தேடலுந்தான் காலப் போக்கில் எதிர்காலம் பற்றி உணரும் திறனாகவும்,அவ்வாறு உணர்ந்ததை உரைக்கும் கலையாகவும் பரிணமித்தது எனலாம்.
இயற்கையோடு வாழ்ந்து–அதன் வளங்களால் தன்னை வளப்படுத்திக் கொண்ட மனிதன்; ஆரம்பத்தில், தனக்கும் முன்னால் ‘இயல்பாகவே’ தோன்றி, ஓரொழுங்கில் இயங்கிவரும் சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களை; அவற்றின் விண்வெளி இருப்பினை–அதாவது விண்ணில் அவை சுற்றிவரும் கட்டொழுங்கினைத் தனக்குத் துணையாக எடுத்துக் கொண்டான்.உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாக ஒளியையும், வெப்பத்தையும் வழங்கும் சூரியன்; இரவு நேரங்களில் இதமான வெளிச்சத்தையும், மன எழுச்சியையும் தூண்டிவிடும் சந்திரன்…; இவையனைத்துக்கும் அப்பால் தூரத்தே ஒளிரும் நட்சத்திரங்கள் என, இயற்கை படைத்தளித்த அனைத்தையும், அவன் வியப்போடு ஆராய முற்பட்டான்.
முதல்படியாக, இவ்விண்பொருட்களின் உதய–அஸ்தமன நிகழ்வுகளும் அவற்றின் இயக்கங்களும், உலகின் தட்ப வெப்ப மாறுபாடுகளும், மழை,புயல்,வறட்சி ஆகியவையும் இவையனைத்துக்கும் இடையிலான தொடர்புகளும் அவனுக்குப் புரிய ஆரம்பித்தன.
வானியலின் ஆரம்பமே இந்த மனித அவதானிப்புகளில் இருந்து உருவானது என்று சொல்லலாம்.
மனித இனத்தின் தோற்றத்திலிருந்து, காடுகளிலும்,மலைகளிலும்,
கட்டாந்தரைகளிலும் அலைந்து திரிந்து, காய்களையும் ,கனிகளையும்; தேவை ஏற்பட்ட போது விலங்குகளையும் வேட்டையாடி உண்ட மனிதன், தனது உணவுத்தேவைக்காக அதனைத் தானே உற்பத்திசெய்யும் காலம் உதயமான சமயத்தில்– அதற்கு உயிர் நாடியாக விளங்கும் வெளிச்சமும், மழையும் பற்றிய கவனம் அவன் மனதில் எழுந்தது.
மழை எப்போது பெய்யும், வெய்யில் எப்போது அடிக்கும் என்பதை அறிய அவன் விண்ணில்–தன் கண்களுக்குக் காட்சி தந்த விண்பொருட்களின் இயக்கங்களைத் துணையாக்கிக் கொண்டான்.
காலப் போக்கில், இவற்றின் இயக்கங்களுக்கும் தனிமனித வாழ்வின் சம்பவங்களுக்கும் இடையேயான தொடர்புகள் அவனது மூளையில் ‘உறைத்த’ போது…. இன்று நாம் ‘ஜோதிடம்’ என்னும் பெயரில் அழைக்கும் ‘எதிர்காலம் உரைக்கும்’ கலை முகிழ்த்தது.
ஆரம்பத்தில் மனித இனம் தனது அறிதல் திறனின் உதவியால் ஏற்படுத்திக்கொண்ட வானியல் தரவுகள், காலப் போக்கில் வாழ்வியலில் துணைசெய்யும் ‘ஜோதிட’மாக; எதிர் காலம் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் துறையாகத்; தன்னை இனங் காட்டிக் கொண்டது..
காலங் காலமாக எமது, பண்டைய ரிஷிகள் ( இவர்கள் யாவரும் ஒரு வகையில் அந்தக் கால விஞ்ஞானிகள் என்றுதான் சொல்லவேண்டும்!) தமது அறிவின் திறனால், புதிய அணுகுமுறைகளைக் காணும் தேட்டத்தின் காரணமாகக் கண்டறிந்தவற்றைச் சுலோகங்களாக வடித்து வைத்தனர்.
அவ்வாறு அவர்கள் கூறிவைத்த அனுபவப் பதிவுகளை , அவர்களின் பின்வந்த சீடர்கள்,ஒழுங்கு படுத்தித் தொகுத்து அவற்றை மனித வாழ்வுக்கு துணைசெய்யும் ‘ஜோதிடக் கலை’யாக உருவாக்கியுள்ளார்கள்.
இந்த ‘ஜோதிடம்’ என்னும் அறிவுக் கலை, முற்றுமுழுதாக; கோள்கள்–நட்சத்திரங்கள் இவற்றின் இயக்கங்களோடு தொடர்புடைய ஓர் ‘வாழ்க்கை வழிகாட்டி’யாகும்.
“பிரபலன்”
பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 2 [21-04-2010 ஈழநேசன் இணைய இதழில் வெளியானது]
பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்- பகுதி-2
“பிரபலன்”
பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும், சூரியன், சந்திரன், பூமி இவற்றின் இயக்கங்களின் தொடர்பினைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதைப் பார்த்தோம்.
இந்தப் பஞ்சாங்கக் கணிப்புகளும், ஏனைய கிரகங்களின் நிலைகளைக் கவனத்தில்கொண்டு கூறப்படும் ‘பலன்’களும் நமது பூமியினை நடுநாயகமாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சூரியமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும், சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றிவருகின்றன என்பதை அடிப்படை வானியல் தெரிந்தவர்களும் அறிவர். இதனைச் சூரிய மைய ( ‘ஹீலியோ சென்ட்றிக்’ Helio-centric) அமைப்பு அல்லது மாதிரி எனக் கூறுவர்.
அதேசமயம், பூமியினை நடுவாகக் கொண்டு, சூரியனுட்பட ஏனைய கோள்கள் யாவற்றினதும் இயக்கங்களைக் கணிக்கும் முறையினை ‘ஜியோசெண்ட்றிக்’ (Geo-centric) அமைப்பு அதாவது ‘புவி மைய மாதிரி’ எனக் குறிப்பிடுகிறார்கள். இது ஒருவகையில் பூமிசார்பாக ஏனைய கிரகங்களது இயக்கங்களைக் கணிக்கும் சார்பு நிலைக் கணிப்பு எனலாம்.
இக்கொள்கையினையே பஞ்சாங்கங்களும், நமது ஜோதிட நூல்களும் பின்பற்றிவருகின்றன.
இதன் அடிப்படையில் தான் சில கோள்கள் சில சந்தர்ப்பங்களில் ‘பின்னோக்கி’ அதாவது ஜோதிடபாஷையில் சொல்வதாயின் ‘வக்ரகதியில்’ செல்வதாயும், வேறு சில சமயங்களில் அதிவேகத்தில் முன்னோக்கி ( அதிசாரம்) செல்வதாயும் குறிப்பிடப்படுகிறது.
எல்லாக் கிரகங்களும் இடமிருந்து வலமாக (வலஞ்சுழி)ச் சஞ்சரிக்கின்றன, ராகுவும், கேதுவும் இதற்கு எதிரிடையாக இடமிருந்து வலமாக இயங்குகின்றன.
இந்த ஆரம்ப விளக்கங்களோடு, பஞ்சாங்கத்தில் முதலாவதாகச் சொல்லப்பட்ட ‘நாள்’ பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
நாள்-வாரம்:-
பூமி தனது சுழற்சியின்போது, அதன் ஓர் புள்ளியில் ஏற்படும் முதல் சூரிய உதயத்துக்கும், அதே இடத்தில் அடுத்த தடவை ஏற்படும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட காலத்தையே நாம் நாள் என்கிறோம். இது, சுமாராக 24 மணித்தியாலங்களாகும்.
பூமியின் அச்சு சாய்வாக இருப்பதன் காரணமாக பகல்-இரவு நேரங்கள், நாளுக்கு நாள் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.. பூமியின் வடதுருவத்தையும், தென் துருவத்தையும் ஒட்டிய பகுதிகளில் ஓர் நாளின் பகல்- இரவு நேரங்களுக்கிடையே இவ்வேறுபாடு அதிகமாக இருப்பதையும் அவதானிக்க முடியும். பொதுவாக ஒரு நாளின் பகல்பொழுதினைப் ‘பகல் மானம்’ எனக் குறிப்பிடுவர்.
இதே போன்று, சூரிய அஸ்தமனத்துக்கும், அதனை அடுத்து நிகழும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட பகுதியை இரவு என அழைப்பது போன்று அதன் கால அளவை ‘இரவு மானம்’ எனவும் குறிப்பிடுவர்.
பஞ்சாங்கத்தில் – சூரிய உதயம்; நண்பகல் ; சூரிய அஸ்தமனம்; பகல் மானம் ( இதனை அகஸ் என்றும் அழைப்பர்) என்பன தரப்பட்டிருக்கும்.
நாள் குறித்த அடிப்படை அறிவு ஏற்பட்டதும், அவற்றுக்குப் பெயரிடும் வழக்கம் உருவாகியிருக்கவேண்டும்.
அவ்வாறு, பெயரிடும் சமயத்தில், தினந்தோறும் புவி மாந்தர்களின் கண்களுக்குக் காட்சி தருவதோடு பகல் பொழுதின் நாயகனாகவும் அமைந்திருக்கும் சூரியனது பெயரை முதலாவதாகச் சூட்டியிருக்கிறார்கள்!
அதனைத் தொடர்ந்து, இரவின் நாயகனாக இருக்கும் சந்திரனது பெயரை அதற்கடுத்த நாளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
இவற்றில், சூரியனையும், சந்திரனையும் குறிக்கும் ஞாயிறு, திங்கள் இவை இரண்டினையும் அடுத்து வருவது செவ்வாய். இது சந்திரனை அடுத்துப் பூமிக்கு மிக அருகில் இடம் பெறும் கிரகமாகும்.
தொடர்ந்து, புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி எனக் கிழமை நாட்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன.
வாரத்தின் ஏழு நாட்களும், சூரிய மண்டலத்தில் உள்ள ஏழு கோள்களினதும் பெயர்களைக் கொண்டிருப்பதானது, ஆரம்ப காலந்தொட்டே மனிதன் தனது அன்றாடச் செயல்களோடு ஏதோவொரு வகையில் கோள்களைத் தொடர்புபடுத்தி வருவதை உணர்த்துகிறது!
ஓரை:-
இவ்வாறு நாள்களது பெயர்கள் அவற்றின் பகல்-இரவுக் கால அளவுகள் என்பன குறித்த அறிதலினைத் தொடர்ந்து, ஓர் நாளினை மேலும் பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குப் பெயரிட்டதோடு அவ்வாறு பிரிக்கப் பட்ட பகுதிகளில் எந்தெந்தப் பகுதிகள் எத்தகைய செயல்களுக்குச் சாதகமானவை என்னும் கணிப்பினையும் உருவாக்கிக் கொண்டனர்.
இதன்படி, ஒரு நாள் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் ‘ஓரை’ என அழைக்கப்பட்டது. இந்த ‘ஓரை’ என்னுஞ் சொல்
வடமொழியில் உள்ள ‘ஹோரா’ என்பதில் இருந்து உருவானதாகும். இதுவே காலப் போக்கில் உலக நேர அளவான ‘HOUR’ ஆக நிலைபெற்றுவிட்டது.
ஓரை என்பது இன்றைய கால அளவில் ஒரு மணித்தியால நேரம் ஆகும்.இதே போல் 24 ஓரைகளைக் கொண்டது ஓர் நாள்.
இந்தியப் பஞ்சாங்க முறைப்படி, இவ் ஓரைகள் யாவற்றுக்கும் கிரகங்களது பெயர்கள் இடப்பட்டு; அவையாவும் ஓரொழுங்கில்-ஒன்றை அடுத்து மற்றொன்றாக- வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
நாள்களுக்குப் பெயரிடும் போது, சூரியனது பெயரினை ‘வார’த்தின் ஆரம்ப நாளுக்குச் சூட்டியதைப் போன்று, சூரியனைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமையின் ஆரம்ப ஓரை ‘சூரிய ஓரை’ எனக் குறிப்பிடப்பட்டது.
இவ்வோரைகள் ; சூரியன்;சுக்கிரன்; புதன் ; சந்திரன்; சனி; குரு; செவ்வாய் என்னும் ஒழுங்கில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்.இவ்வாறு தொடர்ந்து 24 ஓரைகளும் முடிவடையும்போது, அடுத்த நாள் ஆரம்பமாகிவிடும்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெறும் 24 ஓரைகளையும் நாம் மேற்குறிப்பிட்ட சூரியன்…… சுக்கிரன்…… என்னும் வரிசையில் தொடர்ந்துவரின், அதன் மறு நாளான திங்ககிழமையின் ஆரம்ப ஓரை ‘சந்திரன்’( திங்கள் ) என வரும்!
இவ்வாறே ஒவ்வொரு நாளும் அந் நாளின் பெயரைக் கொண்ட ஓரையுடன் ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.
இங்கு, இவ் ஓரைகளைக் கணிக்கும்போது, பகல்மானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அவற்றைப் பகல் நேர ஓரைகளாயும்; அதே போன்று,அன்றைய இரவுமானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அன்றைய இரவு நேரத்துக்கான ஓரைகளாயும் கொள்ளவேண்டும்.
எனவே இவ் ஓரைகளது ‘கால அளவு’ம் இடத்துக்கிடம்- நாளுக்கு நாள் வேறுபட்டிருக்கும் எனபதைக் கவனத்தில் கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட பகல் மானம்; இரவுமனம் என்பனவற்றை விளக்கும் வகையில், சில தரவுகளைக் கீழே தந்துள்ளேன்.
இக் கட்டுரை வெளியாகும் ஏப்ரல் 21,புதன்கிழமையன்று; உலகின் பல நாடுகளில் நிகழும் சூரிய உதயம்,அஸ்தமனம்,நண்பகல் ஆகிய தகவல்களுடன் அன்றைய பகல்மானமும் இங்கு அளிக்கப்பட்டுள்ளது..
நாள்:- 21 ஏப்ரல்- புதன் கிழமை
அவுஸ்ரேலியா/மெல்பேர்ண்/விக்ரோறியா
ஜி.எம்.ரி சூ.உதயம் சூ.அஸ்த நண் பகல் பகல்மானம்
+10:00 06:52 17:46 12:19 10ம 54நிமி 04செ
கனடா/ஒன்ராறியோ/ரொறன்ரோ
-5:00 06:25 20:08 13:16 13ம 43நிமி 05செ
ரஷ்யா/சென்ற் பீற்றர்ஸ்பெர்க்
+3:00 06:25 21:30 13:57 15ம 05நிமி 01செ
ஆர்ஜெண்டீனா/புவனர்ஸ் அயர்ஸ்
-3:00 07:22 18:23 12:53 11ம 01நிமி 34செ
மலேசியா/கோலாலம்பூர்
+8:00 07:06 19:18 13:12 12ம 11நிமி 57செ
தென் ஆபிரிக்கா/கேப் டவுண்
+2:00 07:13 18:16 12:45 11ம 02நிமி 59செ
அமெரிக்கா/டெக்ஸாஸ்/ஹூஸ்டன்
-5.00 06:49 19:52 13:20 13ம 03நிமி 39செ
டென்மார்க்/கொப்பன்ஹேகன்
+1:00 05:51 20:28 13:08 14ம 36நிமி 45செ
இந்தியா/தமிழ்நாடு/மதுரை
+5:30 06:05 18:28 12:16 12ம 23நிமி 36செ
ஒரேநாளில் உலகின் பலபாகங்களில் உள்ள நாடுகளில், சூரியோதயம்,அஸ்தமனம் உட்பட பகல் மானங்களிலும் வேறுபாடுகள் இருப்பதை இந்த அட்டவணை காட்டுகிறது.
இங்கு, ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் பகல்மானத்தின் அளவில் காணப்படும் வேறுபாடுகளும், சூரியஉதய-அஸ்தமன நேரங்களும், ஓரைகளில் மட்டுமன்றிப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இராகு காலம், எமகண்டம், சுப முகூர்த்தங்கள் போன்றவற்றிலும் இடத்துக்கிடம் நேர வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக, நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி, இன்று அவுஸ்த்ரேலியாவில்(மெல்பேர்ண்) பகல்மானம் 10மணி 54 நிமி 04 செக்கன்ட் களாக இருக்கையில்; கனடா (ஒன்ராறியோ) வில் 13 மணி 43 நிமி 05 செக்கன்ட்களாகவும்; இந்தியா/மதுரையில் 12 மணி 23 நிமி 36 செக்கண்ட்களாகவும் இருப்பதைக் காண்கிறோம்.. இவ்விடங்களில் பகல் நேர ஓரைகளின் அளவுகளும் வேறுபட்டிருக்கும்.
குறிப்பிட்ட நாளின் ஆரம்ப ஓரை அதன் சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது. தொடர்ந்து ஏனைய ஓரைகள் யாவும் வரிசைக்கிரமப்படி அன்றைய பகல் மானத்தின் பன்னிரெண்டு சமபாகங்களையும் பூர்த்திசெய்யும் சமயத்தில், அந் நாளின் சூரிய அஸ்தமனம் ஏற்பட்டுவிடும்.பின்னர், அதிலிருந்து, (இரவுமானத்தின்) அடுத்த பன்னிரெண்டு சமபாகங்களையும் நிறைவுசெய்யும்போது மறு நாளின் சூரிய உதயம் ஆரம்பித்துவிடும்.
இதனை விளக்கும் வகையில் இங்கு, அவுஸ்த்ரேலியா; கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இன்று (21 ஏப்ரல் 2010) இடம்பெறும் ஓரை விபரங்கள் தரப்பட்டுள்ளன.. இவை அனைத்தும் அந் நாடுகளின் சூரிய உதய-அஸ்தமன நேரங்கள், பகல்மானம்; இரவுமானம் என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டவையாகும்.
| ஓரை விபரம் | அவுஸ்/மெல்பெர்/விக்ரோறியா | கனடா/ஒன்ராறி/ரொறன்ரோ | மலேசியா/கோலாலம்பூர் |
| புதன் | 06.52—07.46 | 06.25-07.33 | 07.06-08.07 |
| சந்திரன் | 07.46-08.41 | 07.33-08.42 | 08.07-09.08 |
| சனி | 08.41-09.35 | 08.42-09.50 | 09.08-10-09 |
| குரு | 09.35-10.30 | 09.50-10.59 | 10.09-11.10 |
| செவ்வாய் | 10.30-11-24 | 10.59-12.07 | 11.10-12.11 |
| சூரியன் | 11.24-12.19 | 12.07-13.16 | 12.11-13.12 |
| சுக்கிரன் | 12.19-13.13 | 13.16-14.24 | 13.12-14.13 |
| புதன் | 13.13-14.07 | 14.24-15.33 | 14.13-15.14 |
| சந்திரன் | 14.07-15.02 | 15.33-16.41 | 15.14-16.15 |
| சனி | 15.02-15.57 | 16.41-17.50 | 16.15-17.16 |
| குரு | 15.57-16.51 | 17.50-18.58 | 17.16-18.17 |
| செவ்வாய் | 16.51-17.46 | 18.58-20.08 | 18.17-19.18 |
| சூரியன் | 17.46-18.51 | 20.08-20.59 | 19.18-20.17 |
| சுக்கிரன் | 18.51-20.07 | 20.59-21.50 | 20.17-21.16 |
| புதன் | 20.07-21.12 | 21.50-22.43 | 21.16-22.15 |
| சந்திரன் | 21.12-22.18 | 22.43-23.34 | 22.15-23.14 |
| சனி | 22.18-23.23 | 23.34-24.25[00.25] | 23.14-24.13[00.13] |
| குரு | 23.23-24.29[00.29] | 00.25-01.17 | 00.13-01.12 |
| செவ்வாய் | 00.29-01.35 | 01.17-02.08 | 01.12-02.11 |
| சூரியன் | 01.35-02.40 | 02.08-02.59 | 02.11-03.10 |
| சுக்கிரன் | 02.40-03.46 | 02.59-03.51 | 03.10-04.09 |
| புதன் | 03.46-04.51 | 03.51-04.42 | 04.09-05.08 |
| சந்திரன் | 04.51-05.57 | 04.42-05.33 | 05.08-06.07 |
| சனி | 05.57-06.52 | 05.33-06.25 | 06.07-07.06 |
பஞ்சாங்கத்தில், இந்த ஓரைகள் மற்றும் அவை நிகழும் நாள்கள் தொடர்பாகப் பலன்கள் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.
இதே போன்று, நாள்களோடு தொடர்புடைய, ராகு காலம்; எமகண்டம்; குளிகன் மற்றும் சுப முகூர்த்த நேரங்கள் ஆகியனவும் அந் நாளின் சூரிய உதயம், பகல்/இரவு மானங்களோடு தொடர்புடையனவேயாகும்.
தொடர்ந்து மேலும் சில அடிப்படைத் தகவல்களை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.
********************************************************************** à>>
.
பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்-பகுதி 1 [14-04-2010 ஈழநேசன்(அவுஸ்ரேலியா) இணைய இதழில் வெளியானது]
பஞ்சாங்கமும், ‘பஞ்ச’ அங்கங்களும்.
பகுதி-1
“பிரபலன்”
புது வருடம் பிறக்கிறது. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் இனிவரும் ஆண்டு அளிக்கப்போகும் பலன்களைத் தெரிந்து கொள்ளக் கோவில்களையும், தமக்கு நம்பிக்கையான ‘ஜோதிடர்’களையும் நாடிச்செல்வார்கள்.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் ‘பஞ்சாங்கம்’படிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
உண்மையில் இந்தப் ‘பஞ்சாங்கம் படிப்பது’ என்பது, குறிப்பிட்ட அந்த வருடப் பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கும் அவ்வருடத்துக்கான பொதுப் பலன்களை வாசித்து விளக்குவதே ஆகும்.
ஜோதிட பலன்களைக் கூறுவதற்கு சூரியன் முதல் சாயாக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேது வரையிலான நவ கோள்களின் நிலையினைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
எனினும், நமது ‘பஞ்சாங்கங்கள்’ யாவும் நாள்-நட்சத்திரம்-திதி-கரணம் –யோகம் என்னும் ஐந்து அங்கங்கள் பற்றி அறிவுறுத்தும் ஓர் நூல் ஆகும்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான விடயங்கள்; நாம் புதிதாகச் செயல்களில் ஈடுபடும் சமயத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றினை விளக்கும் வழிகாட்டி என்றும் சொல்லலாம்.
இதனை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின், பஞ்சாங்கங்கள் ; நமக்கு ‘நல்ல நாள்’ குறித்துத் தரும் ‘புரோகிதர்க’ளின் ‘கை நூல்’ என்று கூறுவதே மிகவும் பொருந்தும்.
ஆனால், இந்தப் பஞ்சாங்கங்களின் துணையோடுதான் இன்று பலர் ‘ஜோதிடம்’ கூறுவதைக் காண்கிறோம்.
சுப-அசுப காரியங்களுக்கான நேரத்தினையும்,நாளினையும் குறிக்கப் பயன் படுத்தப்படும் பஞ்சாங்கம் பற்றிய விளக்கத்தினை உங்கள் முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
பஞ்ச-அங்கங்கள் எனும் ஐந்து உறுப்புகள்
பெயருக் கேற்றாற்போல் பஞ்சாங்கங்கள் யாவும், நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று; நாள், நட்சத்திரம், திதி, கரணம் ,யோகம் என்னும் ஐந்து விடயங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த ஐந்தும், நவ கோள்களுள், சூரியன்,சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பானவையே. ஏனைய கிரகங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஒன்பது கிரகங்களின் பிரபஞ்ச இருப்புக்கும், பூமியில் பிறக்கும் உயிரின் இருப்புக்கும் இடையேயான தொடர்பினை அடிப்படையாகக் கொண்டது நமது ‘இந்திய ஜோதிடம்’. இதுவே, மேற்குலகில் ராகு-கேது இவற்றுக்குப் பதிலாக யுரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ என்னும் கிரகங்களை உள்ளடக்கி மொத்தம் பத்துக் கிரகங்களதும் நிலையினை ஆராய்ந்து பலன் கூறும் கலையாக நிலைபெற்றிருக்கிறது.
ஆனால், பஞ்சாங்கம் கணிப்பதற்கு சூரியன் மற்றும் சந்திரன் இவை இரண்டினதும் விண்வெளி இயக்கங்களே கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவற்றோடு, நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல‘ஒளி வருடங்கள்’ தொலைவில் நிலை பெற்றிருக்கும் நட்சத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளன.
‘ஜோதிடர்’களுக்குத் தேவையான நவ கோள்களின் பிரபஞ்ச இருப்பினை ஆராய்வதை விட்டுவிட்டு, ‘புரோகிதர்’களுக்குக் கைகொடுக்கும் ‘பஞ்சாங்க’ம் பற்றிய விளக்கத்திற்கு வருகிறேன்.
இதனை விளங்கிக் கொள்வதற்கு நமது பூமி, எமது வெற்றுக் கண்களால் தினமும் நாம் தரிசிக்கும் சூரியன் –சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அடிப்படை வானியல் அறிவு தேவை.
இந்தப் பிரபஞ்சம், பல கோடி விண்மீன் கூட்டங்களால் ஆனது என்கிறது வானியல்!
இவற்றில் நமது சூரியன் இடம்பெற்றிருக்கும் ‘சூரிய மண்டலம்’ சுருள் வடிவப் ‘பால் வீதி’ [Milky Way] ஒன்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு ‘துளி’யே ஆகும் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது! என்றாலும், இதுதான் உண்மை. இச் சுருள் வடிவப் ‘பால் வீதி’’யில் இடம்பெற்றுள்ள நமது சூரிய மண்டலம்; அதில் உள்ள கிரகங்களோடு சேர்ந்து இதன் மையப்பகுதியைச் சுற்றி வருகிறது!
இப் பால்வீதிக்கு அப்பால், பிரபஞ்சத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரக் குவியல்களுள் சிலவற்றை இப் பால்வீதியும் அதனோடு இணைந்துள்ள நமது சூரிய மண்டலமும் ஒவ்வொரு விநாடியும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. அதாவது…… நமது சூரிய மண்டலம் இருக்கும் இந்தப் பால்வீதி யை ஓர் ‘வண்டிச் சக்கரம்’ எனக் கற்பனை செய்து கொள்வீர்களாயின்…. இவ்வண்டிச் சக்கரத்துக்கு அப்பால் பல ஆயிரம் ஒளி வருடங்கள் தொலைவில் தொங்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில நட்சத்திரக் குவியல்களை, இச் சக்கரம் தன் சுழற்சியின்போது கடந்து சென்று கொண்டிருக்கிறது என்று பொருள்!
ஓர் சுற்று அல்லது வட்டம் என்பது 360 பாகைகளை உடையது என்பது, நவீன அறிவியல் கூறும் தகவல்.
எனவே நமது சூரிய மண்டலமும்,அதனோடு சேர்ந்து இயங்கும் ஏனைய கிரகங்களும் தமது ‘மண்டல எல்லை’க்குள் சுழன்றும்,சுற்றியும் வரும் போது; விண்ணில் எங்கோ தொலை தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன என்பது புரிகிறதல்லவா?
இனி, நமது சூரிய மண்டலத்துக்கு வருவோம்.
இச் சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள கோள்களுள், நமது இந்திய ஜோதிடம் சுவீகரித்துக் கொண்டவை மொத்தம் ஏழு கோள்கள் மட்டுமே. அதிலும் சூரியன் ஓர் நட்சத்திரமாயினும், அதனையும் ‘கோள்’ என வகைப் படுத்தியே எமது ‘ஜோதிட இயல்’ தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் , புதன், சுக்கிரன்,பூமி, செவ்வாய், குரு,சனி ஆகியவையும் இவற்றுக்கு அப்பால் யுரேனஸ், நெப்டியூன்,புளூட்டோ மற்றும் இக் கோள்களது உப-கோள்கள் யாவும் தமது இயக்கங்களின் போது; விண்ணில் உள்ள விண்மீன் (நட்சத்திரக்) கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.
நமது, ஜோதிடம் எடுத்துக் கொண்ட கோள்களின் வரிசையில்…..
சூரியன் ; பூமிக்குப் பதிலாக அதனைச் சுற்றிவரும் சந்திரன்; செவ்வாய்; புதன்; குரு; சுக்கிரன் மற்றும் சனி இவை ஏழும் இடம் பெறுகின்றன. இவற்றோடு, சாயாக் கிரகங்களான ராகு-கேது க்களோடு சேர்த்து ஒன்பது கிரகங்கள் எனும் கணக்கு உருவாகிற்று.இவ் ராகு-கேது இரண்டும் உண்மையிலேயே சந்திரன் பூமியைச் சுற்றும் வட்டப் பாதையும், பூமி சூரியனைச் சுற்றும் வட்டப் பாதையும் ஒன்றை மற்றையது சந்திக்கும் அல்லது வெட்டும் புள்ளிகள் என்பதே உண்மை. இப் புள்ளிகள் இரண்டும் கண்ணுக்குப் புலப்படாத ‘மாயப் ‘ புள்ளிகளாதலால் இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ (நிழல் கோள்கள்) எனக் குறிப்பிடுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட விபரங்களைத் தெரிந்து கொண்டால், இங்கு நாம் எடுத்துக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ பற்றிய விளக்கத்தினை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்பதாலேயே இத்தனையும் எழுதினேன்.
இனிப் பஞ்சாங்க விளக்கத்துக்கு வருகிறேன்,
நாள்:-
பூமியின் சுழற்சியோடு தொடர்புடையது நாளாகும். நமது பூமி தனது அச்சில் ஒரு தடவை சுழன்று முடிக்கும் நேரம் நாள் எனப் படுகிறது.இந்த நாளினைத் தீர்மானிப்பது சூரியன் ஆகும்.
அதாவது; பூமியின் ஓர் முழுச் சுழற்சி என்பது, சூரியனின் முதல் உதயத்துக்கும், இரண்டாம் உதயத்துக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும்.எனவேதான் இந்திய நாள்காட்டிகளில் சூரிய உதயம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
எனவே, நமது பஞ்சாங்கம் கூறும், நாள் என்பது, பூமி-சூரியன் சம்பந்தப் பட்ட இயக்கத்தினால் ஏற்பட்டதே என்பது இப்போது விளங்கியிருக்கும்.
நட்சத்திரம்:-
பொதுவாக எல்லாக் கிரகங்களும் சூரியனைச் சுற்றிவரும் சமயத்தில், அவற்றின் பின்னணியில் நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து செல்கின்றன.
எனினும், நாம் இங்கு குறிப்பிடும் ‘நட்சத்திரம்’ பூமியில் பிறக்கும் ஒருவரது நட்சத்திரம் என்னும் பொருளிலேயே எடுத்துக்கொள்ளப் படுகிறது.
உண்மையில், இது ஒருவர் பிறக்கும் சமயத்தில் சந்திரன் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரத்தின் அல்லது அக்கூட்டத்தின் பெயரே ஆகும்.
இன்னும் விளக்கமாகக் கூறுவதாயின்……..
பூமியில் ஒருவர் பிறக்கும் சமயத்தில், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரன் எந்த நட்சத்திரத்தினைக் (இவை பெரும்பாலும் பல நட்சத்திரங்களின் தொகுதியாக இருப்பதுண்டு- பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ள இவ்வைந்து அங்கங்களையும் பற்றி விரிவாக எழுதும்போது இது குறித்த விளக்கத்தினைப் பெறலாம்) கடந்து செல்கின்றதோ அதுவே அவரது ‘ஜன்ம நட்சத்திரம்’ என வழங்கப்படுகிறது.
எனவே நமது பஞ்சாங்கம் குறிப்பிடும் நட்சத்திரம் என்பது பூமி-சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் இயக்கங்களோடு, விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பினோடு தொடர்புடையது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
விண்ணில் நாம் கற்பனையாக உருவாக்கி வைத்திருக்கும், இந் நட்சத்திரங்களால் ஆன திரையில் மொத்தம் 27 நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்து,
திதி:-
பூர்ணிமை; அமாவாசை;மற்றும் பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான பதின்நான்கும் திதிகள் என்பது எமக்குத் தெரியும்.
இந்தத் திதிகள் அனைத்தும், சூரியன் –சந்திரன் இவை இரண்டின் இயக்கங்களோடு மட்டும் தொடர்புடையவை ஆகும்.
பூமியச் சுற்றி வரும் சந்திரன், அது தன் ஓர் சுற்றுக்குச் சுமார் ஒரு மாத காலத்தினை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு சுற்றிவரும் சமயத்தில், பூமியினைப் பொறுத்த மட்டில்; சில நாள்களில் சூரிய ஒளி அதன் பின்புறத்தில் படும்விதமாகவும், ஏனைய நாள்களில் அதன் முன்புறமாகப் படும் வகையிலும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறான இயக்கத்தின்போது, சந்திரனின் பின் புறத்தில் சூரிய ஒளி படும் போது , பூமியை நோக்கி இருக்கும் அதன் முன் பக்கம் இருள் மயமாகி விடுகிறது. இதனையே நாம் அமாவாசை என்கிறோம்.அதே போன்று, சூரிய ஒளி சந்திரனின் பூமி நோக்கிய முன் புறத்தில் பூரணமாகப் படும்போது அதனை நாம் பூரணை என்கிறோம்.
வானியல் கணிப்பின்படி, சூரியனும் சந்திரனும் பூமியில் இருந்து ஒரே அளவான கோண அளவில் அமைந்திருக்கும் சமயம் அமாவாசை ஏற்படுகிறது.நேரெதிராக நூற்றி எண்பது (180) பாகையில் இவை இடம் பெற்றிருக்கும் சமயத்தில் பூரணை ஏற்படுகிறது. இடையில் உள்ள இந்த 180 பாகைகளையும் 15 ஆல் வகுத்து ஒவ்வொரு 12 பாகைக்கும் ஒரு திதி என்னும் வகையில் திதிகள் பங்கிடப் பட்டிருக்கின்றன.
இதன் படி;அமாவாசையின் போது ஒரே கோணத்தில் ( சுழியம் பாகை) இருக்கும் சூரியனும் சந்திரனும் படிப்படியாக விலகிச் சென்று, பூரணையின் போது 180 பாகை இடைவெளியினை எட்டிவிடும்.
பின்னர், பூரணையில் ஆரம்பித்துப் படிப்படியாக ஒன்றை மற்றையது நெருங்கி வந்து மீண்டும் சுழியம் பாகையை எட்டும். இதனை 360 பாகை எனவும் குறிப்பிடலாம்.இரண்டும் ஒன்றே!
அமாவாசையில் தொடங்கி பூரணை வரை வளர் பிறை எனவும்; பூரணை முதல் அமாவாசை வரை தேய் பிறை எனவும் குறிப்பிடப் படுகிறது.
எனவே, திதிகள் யாவும் சூரியன்- சந்திரன் இவையிரண்டினுக்கும் இடையில் நிகழும் சந்திப்பு மற்றும் பிரிவு தொடர்பான கணிப்பு என்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
அடுத்து;
கரணம்:-
பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இந்தக் ‘கரண’த்திற்கும், இன்றைய அரசியல்வாதிகள் அடிக்கும் குட்டிக்’கரண’த்திற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையது!
‘திதி’ என நாம் முன்பே வரையறை செய்திருக்கும் பிரிவின் சரிபாதி- அதாவது 12 பாகை அளவினைக் கொண்ட திதியில் இரண்டு கரணங்கள்; ஒவ்வொன்றும் ஆறு (6) பாகை அளவில், இடம்பெற்றிருக்கும்.
கரணங்கள் பதினொன்று எனவும் அவற்றில் நான்கு ;மாதத்தில் ஒரேயொரு தடவைதான் வரும் எனவும், ஏனைய ஏழும் ஒவ்வொன்றும் எட்டுத்தடவைகள் வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாதத்தில் உள்ள 30 திதிகளது பாதிப் பங்கினை உடைய 60 கரணங்களும் அவற்றுக்குரிய ஒழுங்கில் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இனி இறுதியாக;
யோகம்:-
குறிப்பிட்ட சமயத்தில்;சூரியனது பாகை அளவையும் ( இதனை ஸ்புடம் என்பார்கள்); சந்திரனது பாகை அளவையு கூட்டினால் வருவது ‘யோகம்’ ஆகும்
இவ் யோகங்களும், நட்சத்திரங்களைப் போன்று எண்ணிக்கையில் 27 ஆகும்.
மேற்கூறிய நாள்; நட்சத்திரம்; திதி ; கரணம்; யோகம் இவ் ஐந்துமே பஞ்சாங்கத்தின் பிரதான அங்கங்கள் அல்லது உறுப்புகள் ஆகும்.
இவை ஒவ்வொன்றினுக்கும் இடப்பட்டிருக்கும் பெயர்கள், அவற்றுக்கும்-மனித வாழ்வுக்கும் இடையிலான தொடர்புகள் எனத் தமது அறிவினாலும், அனுபவங்களாலும்-எமது ‘ரிஷி’களும், (விஞ்)ஞானிகளும்- உணர்ந்து கூறிய விபரங்கள் என்பன குறித்து, இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்..ழில் வெளியானது]
பஞ்சாங்கமும் பஞ்ச அங்கங்களும்- பகுதி-2
“பிரபலன்”
பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும், சூரியன், சந்திரன், பூமி இவற்றின் இயக்கங்களின் தொடர்பினைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதைப் பார்த்தோம்.
இந்தப் பஞ்சாங்கக் கணிப்புகளும், ஏனைய கிரகங்களின் நிலைகளைக் கவனத்தில்கொண்டு கூறப்படும் ‘பலன்’களும் நமது பூமியினை நடுநாயகமாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சூரியமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும், சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றிவருகின்றன என்பதை அடிப்படை வானியல் தெரிந்தவர்களும் அறிவர். இதனைச் சூரிய மைய ( ‘ஹீலியோ சென்ட்றிக்’ Helio-centric) அமைப்பு அல்லது மாதிரி எனக் கூறுவர்.
அதேசமயம், பூமியினை நடுவாகக் கொண்டு, சூரியனுட்பட ஏனைய கோள்கள் யாவற்றினதும் இயக்கங்களைக் கணிக்கும் முறையினை ‘ஜியோசெண்ட்றிக்’ (Geo-centric) அமைப்பு அதாவது ‘புவி மைய மாதிரி’ எனக் குறிப்பிடுகிறார்கள். இது ஒருவகையில் பூமிசார்பாக ஏனைய கிரகங்களது இயக்கங்களைக் கணிக்கும் சார்பு நிலைக் கணிப்பு எனலாம்.
இக்கொள்கையினையே பஞ்சாங்கங்களும், நமது ஜோதிட நூல்களும் பின்பற்றிவருகின்றன.
இதன் அடிப்படையில் தான் சில கோள்கள் சில சந்தர்ப்பங்களில் ‘பின்னோக்கி’ அதாவது ஜோதிடபாஷையில் சொல்வதாயின் ‘வக்ரகதியில்’ செல்வதாயும், வேறு சில சமயங்களில் அதிவேகத்தில் முன்னோக்கி ( அதிசாரம்) செல்வதாயும் குறிப்பிடப்படுகிறது.
எல்லாக் கிரகங்களும் இடமிருந்து வலமாக (வலஞ்சுழி)ச் சஞ்சரிக்கின்றன, ராகுவும், கேதுவும் இதற்கு எதிரிடையாக இடமிருந்து வலமாக இயங்குகின்றன.
இந்த ஆரம்ப விளக்கங்களோடு, பஞ்சாங்கத்தில் முதலாவதாகச் சொல்லப்பட்ட ‘நாள்’ பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
நாள்-வாரம்:-
பூமி தனது சுழற்சியின்போது, அதன் ஓர் புள்ளியில் ஏற்படும் முதல் சூரிய உதயத்துக்கும், அதே இடத்தில் அடுத்த தடவை ஏற்படும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட காலத்தையே நாம் நாள் என்கிறோம். இது, சுமாராக 24 மணித்தியாலங்களாகும்.
பூமியின் அச்சு சாய்வாக இருப்பதன் காரணமாக பகல்-இரவு நேரங்கள், நாளுக்கு நாள் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.. பூமியின் வடதுருவத்தையும், தென் துருவத்தையும் ஒட்டிய பகுதிகளில் ஓர் நாளின் பகல்- இரவு நேரங்களுக்கிடையே இவ்வேறுபாடு அதிகமாக இருப்பதையும் அவதானிக்க முடியும். பொதுவாக ஒரு நாளின் பகல்பொழுதினைப் ‘பகல் மானம்’ எனக் குறிப்பிடுவர்.
இதே போன்று, சூரிய அஸ்தமனத்துக்கும், அதனை அடுத்து நிகழும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட பகுதியை இரவு என அழைப்பது போன்று அதன் கால அளவை ‘இரவு மானம்’ எனவும் குறிப்பிடுவர்.
பஞ்சாங்கத்தில் – சூரிய உதயம்; நண்பகல் ; சூரிய அஸ்தமனம்; பகல் மானம் ( இதனை அகஸ் என்றும் அழைப்பர்) என்பன தரப்பட்டிருக்கும்.
நாள் குறித்த அடிப்படை அறிவு ஏற்பட்டதும், அவற்றுக்குப் பெயரிடும் வழக்கம் உருவாகியிருக்கவேண்டும்.
அவ்வாறு, பெயரிடும் சமயத்தில், தினந்தோறும் புவி மாந்தர்களின் கண்களுக்குக் காட்சி தருவதோடு பகல் பொழுதின் நாயகனாகவும் அமைந்திருக்கும் சூரியனது பெயரை முதலாவதாகச் சூட்டியிருக்கிறார்கள்!
அதனைத் தொடர்ந்து, இரவின் நாயகனாக இருக்கும் சந்திரனது பெயரை அதற்கடுத்த நாளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
இவற்றில், சூரியனையும், சந்திரனையும் குறிக்கும் ஞாயிறு, திங்கள் இவை இரண்டினையும் அடுத்து வருவது செவ்வாய். இது சந்திரனை அடுத்துப் பூமிக்கு மிக அருகில் இடம் பெறும் கிரகமாகும்.
தொடர்ந்து, புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி எனக் கிழமை நாட்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன.
வாரத்தின் ஏழு நாட்களும், சூரிய மண்டலத்தில் உள்ள ஏழு கோள்களினதும் பெயர்களைக் கொண்டிருப்பதானது, ஆரம்ப காலந்தொட்டே மனிதன் தனது அன்றாடச் செயல்களோடு ஏதோவொரு வகையில் கோள்களைத் தொடர்புபடுத்தி வருவதை உணர்த்துகிறது!
ஓரை:-
இவ்வாறு நாள்களது பெயர்கள் அவற்றின் பகல்-இரவுக் கால அளவுகள் என்பன குறித்த அறிதலினைத் தொடர்ந்து, ஓர் நாளினை மேலும் பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குப் பெயரிட்டதோடு அவ்வாறு பிரிக்கப் பட்ட பகுதிகளில் எந்தெந்தப் பகுதிகள் எத்தகைய செயல்களுக்குச் சாதகமானவை என்னும் கணிப்பினையும் உருவாக்கிக் கொண்டனர்.
இதன்படி, ஒரு நாள் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் ‘ஓரை’ என அழைக்கப்பட்டது. இந்த ‘ஓரை’ என்னுஞ் சொல்
வடமொழியில் உள்ள ‘ஹோரா’ என்பதில் இருந்து உருவானதாகும். இதுவே காலப் போக்கில் உலக நேர அளவான ‘HOUR’ ஆக நிலைபெற்றுவிட்டது.
ஓரை என்பது இன்றைய கால அளவில் ஒரு மணித்தியால நேரம் ஆகும்.இதே போல் 24 ஓரைகளைக் கொண்டது ஓர் நாள்.
இந்தியப் பஞ்சாங்க முறைப்படி, இவ் ஓரைகள் யாவற்றுக்கும் கிரகங்களது பெயர்கள் இடப்பட்டு; அவையாவும் ஓரொழுங்கில்-ஒன்றை அடுத்து மற்றொன்றாக- வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
நாள்களுக்குப் பெயரிடும் போது, சூரியனது பெயரினை ‘வார’த்தின் ஆரம்ப நாளுக்குச் சூட்டியதைப் போன்று, சூரியனைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமையின் ஆரம்ப ஓரை ‘சூரிய ஓரை’ எனக் குறிப்பிடப்பட்டது.
இவ்வோரைகள் ; சூரியன்;சுக்கிரன்; புதன் ; சந்திரன்; சனி; குரு; செவ்வாய் என்னும் ஒழுங்கில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்.இவ்வாறு தொடர்ந்து 24 ஓரைகளும் முடிவடையும்போது, அடுத்த நாள் ஆரம்பமாகிவிடும்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெறும் 24 ஓரைகளையும் நாம் மேற்குறிப்பிட்ட சூரியன்…… சுக்கிரன்…… என்னும் வரிசையில் தொடர்ந்துவரின், அதன் மறு நாளான திங்ககிழமையின் ஆரம்ப ஓரை ‘சந்திரன்’( திங்கள் ) என வரும்!
இவ்வாறே ஒவ்வொரு நாளும் அந் நாளின் பெயரைக் கொண்ட ஓரையுடன் ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.
இங்கு, இவ் ஓரைகளைக் கணிக்கும்போது, பகல்மானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அவற்றைப் பகல் நேர ஓரைகளாயும்; அதே போன்று,அன்றைய இரவுமானத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து அன்றைய இரவு நேரத்துக்கான ஓரைகளாயும் கொள்ளவேண்டும்.
எனவே இவ் ஓரைகளது ‘கால அளவு’ம் இடத்துக்கிடம்- நாளுக்கு நாள் வேறுபட்டிருக்கும் எனபதைக் கவனத்தில் கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட பகல் மானம்; இரவுமனம் என்பனவற்றை விளக்கும் வகையில், சில தரவுகளைக் கீழே தந்துள்ளேன்.
இக் கட்டுரை வெளியாகும் ஏப்ரல் 21,புதன்கிழமையன்று; உலகின் பல நாடுகளில் நிகழும் சூரிய உதயம்,அஸ்தமனம்,நண்பகல் ஆகிய தகவல்களுடன் அன்றைய பகல்மானமும் இங்கு அளிக்கப்பட்டுள்ளது..
நாள்:- 21 ஏப்ரல்- புதன் கிழமை
அவுஸ்ரேலியா/மெல்பேர்ண்/விக்ரோறியா
ஜி.எம்.ரி சூ.உதயம் சூ.அஸ்த நண் பகல் பகல்மானம்
+10:00 06:52 17:46 12:19 10ம 54நிமி 04செ
கனடா/ஒன்ராறியோ/ரொறன்ரோ
-5:00 06:25 20:08 13:16 13ம 43நிமி 05செ
ரஷ்யா/சென்ற் பீற்றர்ஸ்பெர்க்
+3:00 06:25 21:30 13:57 15ம 05நிமி 01செ
ஆர்ஜெண்டீனா/புவனர்ஸ் அயர்ஸ்
-3:00 07:22 18:23 12:53 11ம 01நிமி 34செ
மலேசியா/கோலாலம்பூர்
+8:00 07:06 19:18 13:12 12ம 11நிமி 57செ
தென் ஆபிரிக்கா/கேப் டவுண்
+2:00 07:13 18:16 12:45 11ம 02நிமி 59செ
அமெரிக்கா/டெக்ஸாஸ்/ஹூஸ்டன்
-5.00 06:49 19:52 13:20 13ம 03நிமி 39செ
டென்மார்க்/கொப்பன்ஹேகன்
+1:00 05:51 20:28 13:08 14ம 36நிமி 45செ
இந்தியா/தமிழ்நாடு/மதுரை
+5:30 06:05 18:28 12:16 12ம 23நிமி 36செ
ஒரேநாளில் உலகின் பலபாகங்களில் உள்ள நாடுகளில், சூரியோதயம்,அஸ்தமனம் உட்பட பகல் மானங்களிலும் வேறுபாடுகள் இருப்பதை இந்த அட்டவணை காட்டுகிறது.
இங்கு, ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் பகல்மானத்தின் அளவில் காணப்படும் வேறுபாடுகளும், சூரியஉதய-அஸ்தமன நேரங்களும், ஓரைகளில் மட்டுமன்றிப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் இராகு காலம், எமகண்டம், சுப முகூர்த்தங்கள் போன்றவற்றிலும் இடத்துக்கிடம் நேர வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக, நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி, இன்று அவுஸ்த்ரேலியாவில்(மெல்பேர்ண்) பகல்மானம் 10மணி 54 நிமி 04 செக்கன்ட் களாக இருக்கையில்; கனடா (ஒன்ராறியோ) வில் 13 மணி 43 நிமி 05 செக்கன்ட்களாகவும்; இந்தியா/மதுரையில் 12 மணி 23 நிமி 36 செக்கண்ட்களாகவும் இருப்பதைக் காண்கிறோம்.. இவ்விடங்களில் பகல் நேர ஓரைகளின் அளவுகளும் வேறுபட்டிருக்கும்.
குறிப்பிட்ட நாளின் ஆரம்ப ஓரை அதன் சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது. தொடர்ந்து ஏனைய ஓரைகள் யாவும் வரிசைக்கிரமப்படி அன்றைய பகல் மானத்தின் பன்னிரெண்டு சமபாகங்களையும் பூர்த்திசெய்யும் சமயத்தில், அந் நாளின் சூரிய அஸ்தமனம் ஏற்பட்டுவிடும்.பின்னர், அதிலிருந்து, (இரவுமானத்தின்) அடுத்த பன்னிரெண்டு சமபாகங்களையும் நிறைவுசெய்யும்போது மறு நாளின் சூரிய உதயம் ஆரம்பித்துவிடும்.
இதனை விளக்கும் வகையில் இங்கு, அவுஸ்த்ரேலியா; கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இன்று (21 ஏப்ரல் 2010) இடம்பெறும் ஓரை விபரங்கள் தரப்பட்டுள்ளன.. இவை அனைத்தும் அந் நாடுகளின் சூரிய உதய-அஸ்தமன நேரங்கள், பகல்மானம்; இரவுமானம் என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டவையாகும்.
| ஓரை விபரம் | அவுஸ்/மெல்பெர்/விக்ரோறியா | கனடா/ஒன்ராறி/ரொறன்ரோ | மலேசியா/கோலாலம்பூர் |
| புதன் | 06.52—07.46 | 06.25-07.33 | 07.06-08.07 |
| சந்திரன் | 07.46-08.41 | 07.33-08.42 | 08.07-09.08 |
| சனி | 08.41-09.35 | 08.42-09.50 | 09.08-10-09 |
| குரு | 09.35-10.30 | 09.50-10.59 | 10.09-11.10 |
| செவ்வாய் | 10.30-11-24 | 10.59-12.07 | 11.10-12.11 |
| சூரியன் | 11.24-12.19 | 12.07-13.16 | 12.11-13.12 |
| சுக்கிரன் | 12.19-13.13 | 13.16-14.24 | 13.12-14.13 |
| புதன் | 13.13-14.07 | 14.24-15.33 | 14.13-15.14 |
| சந்திரன் | 14.07-15.02 | 15.33-16.41 | 15.14-16.15 |
| சனி | 15.02-15.57 | 16.41-17.50 | 16.15-17.16 |
| குரு | 15.57-16.51 | 17.50-18.58 | 17.16-18.17 |
| செவ்வாய் | 16.51-17.46 | 18.58-20.08 | 18.17-19.18 |
| சூரியன் | 17.46-18.51 | 20.08-20.59 | 19.18-20.17 |
| சுக்கிரன் | 18.51-20.07 | 20.59-21.50 | 20.17-21.16 |
| புதன் | 20.07-21.12 | 21.50-22.43 | 21.16-22.15 |
| சந்திரன் | 21.12-22.18 | 22.43-23.34 | 22.15-23.14 |
| சனி | 22.18-23.23 | 23.34-24.25[00.25] | 23.14-24.13[00.13] |
| குரு | 23.23-24.29[00.29] | 00.25-01.17 | 00.13-01.12 |
| செவ்வாய் | 00.29-01.35 | 01.17-02.08 | 01.12-02.11 |
| சூரியன் | 01.35-02.40 | 02.08-02.59 | 02.11-03.10 |
| சுக்கிரன் | 02.40-03.46 | 02.59-03.51 | 03.10-04.09 |
| புதன் | 03.46-04.51 | 03.51-04.42 | 04.09-05.08 |
| சந்திரன் | 04.51-05.57 | 04.42-05.33 | 05.08-06.07 |
| சனி | 05.57-06.52 | 05.33-06.25 | 06.07-07.06 |
பஞ்சாங்கத்தில், இந்த ஓரைகள் மற்றும் அவை நிகழும் நாள்கள் தொடர்பாகப் பலன்கள் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.
இதே போன்று, நாள்களோடு தொடர்புடைய, ராகு காலம்; எமகண்டம்; குளிகன் மற்றும் சுப முகூர்த்த நேரங்கள் ஆகியனவும் அந் நாளின் சூரிய உதயம், பகல்/இரவு மானங்களோடு தொடர்புடையனவேயாகும்.
தொடர்ந்து மேலும் சில அடிப்படைத் தகவல்களை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.

Leave a Reply
You must be logged in to post a comment.