சபரிமலை தங்கத்தில் நிக்கல்…’ – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்… மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!

சபரிமலை தங்கத்தில் நிக்கல்…’ – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்… மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!

சிந்து ஆர்

கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கோயிலுக்குச் செல்கிறார்கள். சி.பி.எம் உயர்மட்டத் தலைவர்களுக்குத் தெரிந்தேதான் சபரிமலையில் கொள்ளை நடந்திருக்கிறது.

23 Jan 2026

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

‘சபரிமலை தங்கத்தில் நிக்கல்…’ – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்… மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!

Listen to Vikatan stories on our AI-assisted audio player

’சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத்தைக் கொள்ளையடித்து விட்டு, அதற்கு பதிலாக மின்னும் தன்மைகொண்ட நிக்கல் கலந்து வைத்திருக்கலாம்’ என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் ஆளும் சி.பி.எம்., எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்கு விசாரணை சென்றுவருவதால், கேரள அரசியலில் அதிர்வலைகள் எழுந்திருக்கின்றன!

சபரிமலை ஐயப்பன் கோயிலில், `திருப்பணி’ என்கிற பெயரில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்து விசாரிக்க, ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமை (எஸ்.ஐ.டி) நியமித்தது கேரள உயர் நீதிமன்றம். துவார பாலகர்கள் சிலையிலும், கருவறைத் திருநடையிலும் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகள் கொள்ளையடிக்கப் பட்டதாக ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொடிமரத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக இப்போது கண்டறியப் பட்டிருக்கிறது. சபரிமலை கோயில் கொடிமரம், முன்பு கான்கிரீட்டில் அமைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றிவிட்டு, மரத்தால் ஆன புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. பழைய கொடிமரத்தில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளின் சில பகுதிகள் காணாமல் போயிருப்பதாக இப்போது தெரியவந்திருக்கிறது.

Mobile

4.7 / 5 Rating

3.5M+ Downloads

Audio Magazines

Instant News Summary

Free 500+ Audio Books

Low Data Usage

App Store
Play Store

INSTALL APP & GET 30 DAYS FREE TRIAL

Install App

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

இந்த நிலையில், சபரிமலையில் இப்போது இருப்பவை அனைத்தும் உண்மையான தங்கம்தானா என்பதைக் கண்டறிய, திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டருக்கு (வி.எஸ்.எஸ்.சி) சாம்பிள்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், ‘தங்கத்துக்கு பதில், தங்கத்தைப்போல மின்னும் தன்மைகொண்ட நிக்கல் கலந்து பயன்படுத்தியிருக்கலாம்’ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ‘இது சம்பந்தமாக வி.எஸ்.எஸ்.சி விஞ்ஞானிகளிடம் விரிவான விளக்கம் கேட்டறிய’ உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், ‘கடந்த 20 ஆண்டுகளாக சபரிமலை கோயிலில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

“இந்த வழக்கு, கேரளாவின் மூன்று பிரதான கட்சிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்’’ என்று கூறும் விவரப்புள்ளிகள், “சபரிமலை வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி தொடங்கி அதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், தந்திரி உள்ளிட்ட 12 பேரை எஸ்.ஐ.டி கைது செய்திருக்கிறது. இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை முன்வைத்து சி.பி.எம்-க்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுக்கலாம் என நினைத்திருந்தன காங்கிரஸும் பா.ஜ.க-வும்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கொடிமரத்திலும் மோசடி நடந்ததாகக் கண்டறியப்பட்டிருப்பதால், அப்போது அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் உதறல் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆதரவாளராகக் கருதப்படும் தந்திரி கண்டரரு ராஜீவருவும் கைதுசெய்யப்பட்டிருப்பது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர்.

இது குறித்து சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் அனில்குமாரிடம் பேசியபோது, “கடந்த 20 ஆண்டுகளாக நடந்தவை குறித்து விசாரிக்க வேண்டும் என கோர்ட் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கான்கிரீட் கொடிமரம் சிதிலமடைந்துவிட்டதாகப் பொய்யாகக் கூறி, புதிய கொடிமரம் அமைத்தனர். அது ஒரு நன்கொடையாளரால் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்காகப் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

அதில் ஏற்பட்ட பிரச்னையால், புதிய கொடிமரம் நிறுவப்பட்ட அன்றே பாதரசம் ஊற்றிய செயல் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. அதையும் இப்போது விசாரிப்பார்கள். எனவே, காங்கிரஸ் ஆட்சிக்காலமும் இப்போது விசாரணையின்கீழ் வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் பெண் தலைவர் ஒருவரின் சகோதரர்தான் சபரிமலை தந்திரி. அதனால்தான் 20.01.2026 அன்று கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் 21 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, தந்திரியின் வீட்டுக்குச் செல்லவில்லை. பா.ஜ.க சம்பந்தப்பட்ட நபர்களைத் தவிர்த்துவிட்டு ஒருதலைப் பட்சமாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. சபரிமலை வழக்கில் சி.பி.எம்-க்கு எதிராக உருவாக்கப்பட்ட அனைத்துப் பொய்களும் தகர்ந்து வருகின்றன” என்றார்.

 அனில்குமார்,  ஹரிகிருஷ்ணன்
அனில்குமார், ஹரிகிருஷ்ணன்

இது பற்றி பா.ஜ.க மாநில கமிட்டி உறுப்பினர் ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். “துவார பாலகர்கள் சிலைக் கவசம், திருநடை ஆகியவற்றிலுள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்டபோது சி.பி.எம் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது கொடிமரம் நிறுவப்பட்டதில் மோசடி நடந்திருக்கிறது. அந்த இரண்டு கட்சிகளுக்கும்தான் சபரிமலை கொள்ளை வழக்கில் பங்கிருக்கிறது. சபரிமலை கோயில் நிர்வாகத்தில் உத்தரவிடும் எந்த அதிகாரமும் தந்திரிக்கு இல்லை. அங்கு நடந்த தங்கக் கொள்ளை குறித்து வெளியே சொல்லாமல் இருந்தது மட்டுமே அவர் செய்த தவறு. அதனால் தான் அமலாக்கத்துறை அவர் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை. இதில் அரசியல் தலையீடு இல்லை” என்றார்.

இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் நெய்யாற்றின்கரை சனல் கூறுகையில், “சி.பி.எம் கட்சியினர் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கோயிலுக்குச் செல்கிறார்கள். சி.பி.எம் உயர்மட்டத் தலைவர்களுக்குத் தெரிந்தேதான் சபரிமலையில் கொள்ளை நடந்திருக்கிறது. இந்தக் கொள்ளையில் முழுப் பொறுப்பும் சி.பி.எம் கட்சிக்குத்தான். காங்கிரஸுக்கு எந்தப் பாதகமும் இல்லை” என்றார்.

ஐயப்பனுக்கே விபூதி அடிக்கிறீங்களேப்பா..!

Be the first to comment

Leave a Reply