யார் திராவிட சிசு ?
கால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் “ஆரியர், திராவிடர்” என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே இல்லை என்றும், இன்று
“ஆரியர்” என்று சொல்வதற்கு அலறி துடிக்கும் இவர்கள் தான், ஒருகாலத்தில் “ஆரியர்” என்பது தனி இனம் என்றும் பெருமைக் குறிய இனம் என்றனர், ஆரியர்களே பிரம்மன் முகத்தில் பிறந்த பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் பார்பனர்கள். இப்போதும் பிராமணர்கள் என்றே பார்பனர்கள் தங்களுக்குள் அழைத்துக் கொள்கின்றனர். பார்பனர்கள் அனைவருமே ஆரியர் அல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. பிரம்ம முகத்தில் பிறந்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள பார்பனர்களாக தங்களை மாற்றிக் கொண்ட முன்னாள் திராவிடர்கள் கூட தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இதற்கெல்லாம் ஆதாரம் ? இராமனுஜரின் வைணவ சேவையை படித்திருந்தாலே தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சொல்லிக் கொண்ட முன்னாள் திராவிடர்களான (அப்படித்தான் தேவநேய பாவாணர் குறிப்பிடுவார்) இன்னாள் பார்பனர்கள், ஆரியர் – திராவிட இனமெல்லாம் கால்டுவெல் என்னும் கிறித்துவ வெறியனின் சூழ்ச்சி என்று ஏன் அலறவேண்டும் ? காரணம் உண்டு. ஏனென்றால் ஆரியர்களின் நான்கு வேதங்களில் புழங்கி இருந்த வடசொற்களின் பொருளும், ஒலியும் கிரேக்கம், இலத்தீனை ஒட்டி இருப்பதால், ஆரியர் என்போர் இந்தியாவிற்கு வெளியில் இருந்துவந்தவர்கள் என்று சொல்லி, அதற்கான ஆராய்ச்சிகளில் கைபர் போலன் கனவாய் பெயரெல்லாம் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆரியர் என்றாலே கணவாய் ஞாபகம் வந்துவிடுவதால் ஆரியர் – திராவிடர் என்பது மிசெனறிகளின் சூழ்ச்சி என்கின்றனர்.
தமிழ்சைவ சமய குரவர்கள் மூவர் (அப்பர்-சுந்தரர்-ஞான சமபந்தர்) இந்தில் ஞான சம்பந்தர் மட்டுமே 16 ஆயிரம் பாடல்கள் வரையில் தமிழில் பாடி இருக்கிறார். சிவ வழிபாடு, சிவ சமயம், ஐந்தெழுத்து மந்திரம் இவையே இம்மூவர்களின் மூச்சு, இதற்காக இவர்களால் பலி/பகை வாங்கப்பட்டது சமண / பவுத்த சமயங்கள் என்பது நாம் அறிந்தவையே. ஞான சம்பந்தரும் பார்பனர் தான் 16 வயது வரை வாழ்ந்தார்.
ஆதிசங்கரின் காலம் கிமு என்று பலர் கூறுவதுண்டு, ஆனால் ஆதிசங்கரர் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டது ஞான சம்பந்தரைத்தான் என்றும் சொல்கின்றனர், ஞான சம்பந்தர் என்று பொதுவாக குறிப்பிடுவது திருஞான சம்பந்தரை என்றாலும் இன்னும் இரு ஞான சம்பந்தர்கள் இருந்ததாக சைவ அடியார்கள் சொல்லுகின்றனர். ஞான சம்பந்தர் தனது அனைத்து பதிகங்களையும் தமிழில் பாடியதால் அவரை சாடுவதற்காக ‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டதாகச் சொல்கின்றனர். ஏனென்றால் மலையாள தேசம் என்று பிரித்து அறியப்படாத நாட்களில் ,தென்னகத்தில் இருக்கும் காலாடியில் (தற்போதைய கேரளா) பிறந்தவராக நம்பப்படும் ஆதிசங்கரர் தனது பாடல்களில் தமிழை மருந்துக்குக் கூட சுட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். தமிழ் சூத்திர பாசை, தமிழ் பேசுபவர்கள் திராவிடர் என்று இவர்காலத்தில் வலியுறுத்தல் இருந்திருந்ததோ அல்லது இவரே அப்படி வலி யுறுத்தினாரா என்றும் தெரியவில்லை.
சைவ சமயங்களில் வேதசார்ப்புகள் இருந்தாலும், சிவன் தென்னாட்டைச் சேர்ந்தவனாக (தென்னாடுடைய சிவனே போற்றி) வழியுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தமிழ் சைவர்கள் காசிக்கு சென்றது போல் குறிப்புகள் எதுவுமே இல்லை. ஆனால் நாயன்மார்களில் பலர் கைலாயம் சென்றதாக கதைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது, அதுவும் பாதயாத்திரையாக சென்றது போல் சொல்லப்படாமல், பறக்கும் குதிரையிலும், ஐராவதம் என்னும் பறக்கும் வெள்ளையானையின் மீது அமர்ந்து சென்றதாக (சுந்தரர்) சென்றதாக கதை இருக்கிறது. வடக்கின் எல்லையில் இருக்கும் பனிமலை எப்போது முதல் கைலாயம் என்று சொல்லப்படுகின்றது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.
தமிழ் சைவர்கள் ஏன் வடவேதங்களை தமிழ் சைவ வேதத்தில் கலக்க வேண்டும் ? காரணம் உண்டு. கிமு 12 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஒழிப்பிற்கு பிறகு கல்வி கற்றுக் கொடுப்பவர்கள், இருமொழி வித்தர்களாக இருந்தவர்களில் பெரும்பகுதியினர் பார்பனர்களே. அவர்களின் மாணாக்கர்களுக்கு பெரும்பாலும் இருமொழிகளுடன் வடவேதங்களையும் போதித்தனர். அன்றைய காலத்தில் வேதத்தில் இருக்கும் சங்கரன் என்கிற நெருப்புக் கடவுளும் சைவ சமயத்தின் சிவனும் ஒன்றே என்பதாக சொல்லிக் கொடுத்தனர். சிவனுக்கு படங்களில் காட்டப்படுவது போல் பார்வதி என்கிற மனையாட்டியும், முருகன், பிள்ளையார் போன்ற பிள்ளைகளோ கிடையாது, இவை வடபுலத்து கதைகளை இணைத்த கந்த புராணத்து இடைச் சொருகல்கள் மட்டுமே. சிவனை உருவாகக் காட்டியதால் திருவிளையாடல் புராணங்கள் புணைந்து ‘அற்புதங்கள்’ நடத்தியதாக நம்பவைக்க வேண்டிய நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர் சைவ மூவர்கள்.
அப்போதும் தமிழ் – வடமொழி எது உயர்வு ? என்கிற போட்டி நடை பெற்றுக் கொண்டி இருக்கிறது, தமிழ் பக்தி இயக்கமே வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததால், அதில் ஆர்வம் காட்டியதால் அதாவது தமிழ் மீட்புக்கு ஆர்வம் காட்டியதால் ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் ‘திராவிட சிசு’ என்று அழைத்தார் என்கிறார்கள். ஆதிசங்கரரின் காலம் கிமுவில் இல்லை ஞானசம்பந்தரை அவர் குறிப்பிட்டு இருப்பதால், ஆதிசங்கரரின் காலம் சம்பந்தர் வாழ்ந்த அதே 7 ஆம் நூற்றாண்டை (களப்பிரர் ஆட்சிக்கு பிந்தைய காலம்) சார்ந்ததே என்று இதன் வழியாகச் சொல்கின்றனர்.
“திராவிட” என்ற சொல்லை கிறித்துவ மிசெனறிகள் முதன் முதலாக பயன்படுத்தவே இல்லை. அதற்கு முன்பே ஆதிசங்கர் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் “ஆரிய – திராவிட பிரிவு இந்தியாவில் இருந்தது இல்லை, அவை மிசனெறிகளின் சூழ்ச்சி” என்று இன்றைய பார்பனர்களும், இந்துத்துவாக்களும் மெசனிறிகளின் (கால்டுவெல் ஐயர், ஐயுபோப் ஐயர்) மீது அவதூறு சொல்லுகின்றனர். ஆதிசங்கர் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்று சொல்லிவிட்டு, ஆரியர் – திராவிடர் என்பது மிசெனெறிகளின் சூழ்ச்சி என்றால் ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம்.
நூலை வாசிக்க – https://www.tamilvu.org/…/library-lA46P-html-lA46Pind…

Leave a Reply
You must be logged in to post a comment.