தேவதாசி (பாப்பனின் பாலியல் அடிமைகள்)
முத்துலட்சுமி ரெட்டி
எழுதியவர், பத்மா மீனாட்சி
பிபிசி செய்தியாளர்
20 ஆகஸ்ட் 2020
இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர்.
யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி?
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி மகாராஜா கல்லூரியின் முதல்வர் நாராயணசாமி அய்யருக்கும் சந்திரம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். சந்திரம்மாள் இசைவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

வீட்டிலேயே வைத்து இவருடைய தந்தையும், வேறு சில ஆசிரியர்களும் கல்வி கற்பித்தனர். மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார் முத்துலட்சுமி. இருந்தபோதிலும் பெண்ணாக இருந்த காரணத்தால் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு இடம் தரப்படவில்லை. அவரை பள்ளிக்கூடத்தில் சேர்க்கக் கூடாது என பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா கல்வி உதவித் தொகையுடன் உயர்நிலைப் பள்ளியில் படிக்க இடம் அளித்தார். அந்த காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரே மாணவியாக அவர் இருந்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் படித்த ஒரே இந்திய மாணவியாகவும் அவர் இருந்தார். அந்தக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கமும் பெற்றார் முத்துலட்சுமி.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி 9 முக்கியத் தகவல்கள் – இன்று கூகுள் டூடுல்
’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திய பெண்கள்’
பல துறைகளில் முதலாவது பெண்மணியாக இருந்தார் என்பதோடு, பெண்களின் மீட்சிக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் போராடியவராகவும் இருந்தார் என “முத்துலட்சுமி ரெட்டி – ஒரு சகாப்தம்” என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் டாக்டர் வி. சாந்தா.
முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முத்துலட்சுமி ரெட்டி (கண்ணாடி அணிந்திருப்பவர்)
டாக்டர் டி. சுந்தர ரெட்டி என்பவரை 1914ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய சமூக சேவை தொடர்பான செயல்பாடுகளிலும், உதவி தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி அளிப்பதிலும் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை முத்துலட்சுமி திருமணம் செய்து கொண்டார்

Leave a Reply
You must be logged in to post a comment.