ஈழத்து வரலாறு

ஈழத்து வரலாறு

சோக்கிரட்டீஸ் மாணவனாகிய அரிஸ்டோட்டிலின் தி கிரேட் அலக்சான்டர் முரஞ்சியூர் முடிநாகராயர் மாணவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலானிடம் வீழ்ந்த வரலாறு.

ஐரோப்பிய வரலாற்றுக்கு முகவரி தந்த அலெக்சாண்டர் தி கிரேட்’ என உலக வரலாற்றாய்வாளர்களால் போற்றப்படும். கி.மு 323 இல் பாபிலோனில் இறந்ததை வரலாற்றுப் பாட நூல்களில் படித்திருப்போம். அவர் தனது 32 வயதில் இறந்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், அந்த பேரரசரின் கடைசி கால வாழ்க்கையை வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் விவரிக்கிறது இந்த கட்டுரை.

இலங்கையின் பல பெயர்களில் சேரன் தீவு என்பதும் ஒன்று. அப்பெயர் முற்காலச் சேரர்கள் இலங்கையில் இருந்து அரசாண்டதை எடுத்துச் சொல்கின்றது. சங்கப் பாடல்களும் சேரர்களின் நாடாக இலங்கையைக் காட்டுகின்றன. சேர அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஈழத்திலிருந்து அரசாண்டதையும் அவனின் போர்த்திறமையையும்

அவன் தனது கப்பல் படையோடு ஈழத்தின் மாந்தையில் இருந்து சென்று அவர்களை அடக்கினான். இமயமலையில் வில் அடையாளத்தைப் பொறித்தான். அப்போரில் கைப்பற்றிக்கொண்ட பொருட்களை கப்பலில் ஏற்றி மாந்தைக்கு கொண்டு வந்தான். அப்பொருட்களில் இருந்து ஆம்பல் பெறுமதியான அதாவது நூறு திரிலியன் செல்வத்தை மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் அழிந்து போகுமாறு கைவிட்டான் என்பதை மாமூலர்

“வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து

நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்

பொன் செய்பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்று வாய் நிறையக் குவை இ அன்றவன்

நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”

— (அகம்: 127: 3-10)

என அகநானூற்றில் கூறியுள்ளார். இந்தப்படம் இடம்பெற்றது நந்தர்கள் என்ற நன்னர் என்கிற தமிழ் வேளிர்கள் மகதநாட்டை ஆண்டு கொண்டிருந்த கி.மு 327 – 325 இல் ஆகும்.

இப்போருக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய படைகள் மாந்தையில் இருந்து பெரும் கலங்களில் சென்றனராம். சங்ககாலத் தமிழர் பெரிய கப்பல்களைக் கட்டினர். அக்கப்பல் உலகமே சேர்ந்து எழுந்து செல்வது போல் இருந்ததாம். அதனை ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – (அகம்: 255: 1)

எனச் சங்கப்பாடல் சொல்கிறது.

இவ்வாறான கப்பல்களில் உணவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதை பட்டினப்பாலையில் கடியலூர் உத்தரங் கண்ணனார்

“ஈழத்து உணவும் காளகத்து ஆக்கமும்” – (பட்டினப்பாலை: 191)

எனச்சொல்வதால் அறியலாம். அவர்கள் ஈழத்தை ஆண்டதற்கு சங்ககால நூல்களில் நிறையவே சான்றுகள் இருக்கிறன. சேர அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஈழத்திலிருந்து அரசாண்டதையும் அவனின் போர்த்திறமையையும் பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார் “உமது அரசன் யாரென்று கேட்பீராயின் கடல் நடுவே இருக்கும் தீவிலிருந்து பகைவரது இடத்துக்குச் சென்று வெற்றி கொண்டு அவரது காவல்மரமாகிய கடம்பு மரத்தை வெட்டி அழிக்கும் நெடுஞ்சேரலாதன்” என்கிறார்.

அதை பதிற்றுப்பத்து

“ நுஞ்கோ யாரென வினவின் எங்கோ

இருமுந்நீர் துருத்தியுள்

முரணியோர் தலைச் சென்று

கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்

நெடுஞ்சேரலாதன்” – (பதிற்றுப்பத்து:2: 20: 1- 5)

எனச்சொல்கிறது.

பதிற்றுப்பத்து மட்டுமல்ல சங்ககால நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட தொகைநூலாகிய முத்தொள்ளாயிரமும் மன்னாரில் உள்ள மாந்தையை சேரனின் மாந்தையாகச் சொல்கிறது.

“புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை

நன்னாகம் நின்றலரு நல்நாடன் – என்னாகம்

கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்

எங்கொல் இவரறிந்த வாறு” – (முத்தொள்ளாயிரம்: 5)

இப்பாடலை இயற்றிய சங்ககாலப் புலவரின் பெயர் நரிவெரூஉத் தலையனார்.

அவர்பாடிய

ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்

தமியர் உறங்கும் கௌவை இன்றாய்

இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே!

முனாஅ தியானை உண் குருகின் கானலம்

பெருந்தோட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்

குட்டுவன் மாந்தை அன்னஎம்

குழைவிளங்காய் நுதற்கிழவனும் அவனே”

– (குறுந்தொகை: 34)

மாதோட்டத்தில் வாழ்ந்த மள்ளர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டதால் எழும் ஆரவாரச் சத்தம், பார்ப்போரை பயம் கொள்ள வைக்கின்ற குட்டுவனின் மாந்தை என, ஈழத்தின் மாந்தை நகர் இந்தப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. சங்கப்புலவரான கொல்லிக்கண்ணன் சொன்ன பெருந்தோட்டத்தை – மாதோட்டமாகக் கொள்ளாமல் ‘பெருந்தோடு அட்ட’ என்று மாற்றியும் மாந்தை என்பதை மரந்தை என்னும் ஊராக மாற்றியும் எழுதி பொருள் கொள்கிறார்கள். இப்பாடலோ இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே மாந்தைநகரின் மாதோட்டத்தில் மள்ள மள்ளர்கள் போர் பயிற்சி செய்ததை வரலாறாக பொதிந்து வைத்துள்ளது. இந்த மள்ளர்கள்தான் நெடுஞ்சேரலாதனுடைய படைகளில் அலக்சாண்டருடைய படைகளோடு போரிட்டார்கள். அக்காலத்தில் பழந்தமிழகம் எனப்படுவது

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமய மாகத்

தென்னங் குமரியொ(டு) ஆயிடை அரசர்

முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்

சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10

போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ , என்கிறார் சேரன் செங்குட்டுவனை பாடிய பரணர். இதனை பிற்கால பனம்பரனாரே வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகு என தொல்காப்பிய விளக்கவுரையிலேயே கூறியது எவ்வளவு பாரிய வரலாற்று திரிபு ,

இனி வரலாற்றை நோக்குவோம் அலக்சாண்டர் தனது தந்தை பிலிப்பின் மரணத்துக்குப்பின் கி.மு. 335-ல் இருபதாவது வயதில் மாசிடோனியாவின் மன்னரானார் . ஏற்கனவே கிரேக்கம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருந்தது மாசிடோனிய அரசு. உலகம் முழுவதையும் வென்று தனது அதிகாரத்தை நிறுவ வேண்டும், கிரேக்க நாகரிகத்தின் பெருமையை பரப்ப வேண்டும் என்ற பேராவல் அலெசாண்டருக்கு ஏற்பட்டது. அப்போது வல்லமை மிகுந்த பேரரசாக பாரசீகம் விளங்கியது. மத்திய தரைக்கடல் முதல் இந்தியா வரை பரவியிருந்த பாரசீக பேரரசை வென்று அதிகாரத்தை நிலைநாட்ட ஆவல்கொண்ட அலெக்சாண்டர் கி.மு.334-ல் பாரசீகத்தின் மீது படையெடுத்தார். நன்கு பயிற்சிபெற்ற, கட்டுப்பாடு மிகுந்த மாசிடோனிய படைகள் அலெக்சாண்டரின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தொடர்ந்து வெற்றியை ருசிக்க ஆரம்பித்தது. ஆசியா மைனர், சிரியா, லெபனான், பாலஸ்தீனம், எகிப்து, ஈரான் என பாரசிகத்தின் ஆளுக்கைக்கு உட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக வென்ற அலெக்சாண்டர், கி.மு.328-க்குள் பாரசீகப் பேரரசை முழுவதுமாக வென்று ஆட்சியை நிலைநாட்டினார். லட்சக்கணக்கான வீரர்கள் அடங்கிய பாரசீகப்படைகளை வெறும் 35,000 வீரர்களை கொண்டு வீழ்த்தினார்.

தொடர்ந்து கிழக்கு நோக்கிச் சென்று இந்தியாவை வெல்ல முடிவு செய்தார் அலெக்சாண்டர். அன்றைய இந்தியாவில் சிந்து நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்தவை அனைத்தும் சிற்றரசுகள். நன்னர் எனும் தமிழ் வேளிர்கள் ஆண்டுவந்த மகதம் மட்டுமே அப்போது பெரிய அரசாக இருந்தது. இந்திய அரசர்கள் தமக்குள் பகைமை கொண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர். அப்போதுதான் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு நடைபெறுகிறது.நந்தர் என்ற தமிழ் வேந்தர்களாகிய நன்னர் ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் வட- மேற்கு இந்தியா மீது கி.மு. 327-325 இல் பலவகைகளில் அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். ஏனெனில் பழந்தமிழகமாக திகழ்ந்த அந்த இந்திய படையெடுப்பே முதன்முதலாக பழந்தமிழக இந்தியா மீது போலான் கணவாய் வழியாக இடம்பெற்ற அந்நிய படையெடுப்பு ஆகும். இதனையே ஆரிய புராண கதைகளுக்கு அப்பால் ஓர் வரலாற்று ரீதியான படையெடுப்பாக கருதுகிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.இமயம் முதல் தென்அம் குமரி எனப்படும் ஈழத்தீவு வரையிலும் கி. மு. 7000 தொடக்கம்

வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மழவர்கள் எனப்பட்டனர். இவர்களே கி. மு. 3200 இடையில் சிந்து ஆற்றின் மேற்குப்புறத்தில் விளங்கிய உழவு நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள்.‘மழவர்கள்’ அல்லது ‘மள்ளர்கள்’ (Malava/Malloi/Mallis)எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த மழவர்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டு விளங்கி வந்தனர். இவர்கள்

கி. மு. 326 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் சிந்து ஆற்றுப்பகுதியின் மீது படையெடுத்தது வரையில் அங்கே வாழ்ந்து வந்தவர்கள்,அப்போது வடஇந்தியா முழுவதும் தமிழ்தான் பேசப்பட்டு வந்தது. அந்த தமிழ் எழுத்து வடிவத்தையும் கொண்டிருந்தது. அந்த மழவர்கள் கி.மு 1200 வரையிலும் பயன்படுத்திய தமிழ் மொழிக்குரிய வரிவடிவமாக திகழ்ந்து ஆனைக்கோட்டை முதல் செம்பியன் கண்டி கற்கோடாரி ஈறாக சிந்துவெளி ஹரப்பா வரை பரவிக்காணப்படுகின்ற எழுத்துருக்கள் ஆகும். இவை சிந்துவெளி,ஹரப்பா போன்ற பண்டைய மழவர்களுடைய நகர அழிபாடுகளுள் நிறைந்து காணப்படுகின்றமையால் அவை சிந்துவெளி குறியீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை சிந்துவெளிக்குரிய குறியீடுகள் மாத்திரமல்ல அல்ல, அவை ஒரு காலத்தில் சிந்துவெளி தொடக்கம் ஆனைக்கோட்டை வரையான ஈழத்தீவு வரை பரந்துவிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மழவர்களுடைய பண்டைய தமிழ் வரிவடிவமாகும். எனவே இந்த போரே பழந்தமிழமாக திகழ்ந்த இந்தியாவைபிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் மாற்றத்திற்கும் பல்வேறு புராண, இதிகாச தோற்றத்திற்கும் வித்திட்டது. எனினும், அவருடைய படையினர் கிழக்கின் மாபெரும் பேரரசரைப் (நந்தர்) பற்றியும், அவருடைய பெரிய ராணுவத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால், அத்தகைய வலுவான எதிரியுடன் போரில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.கி.மு.326இல் பாரசீகர்களைத் தோற்கடித்துவிட்டு, அலெக்சாண்டர் இந்தியத் துணைகண்டத்திற்குள் நுழைந்தபோது தட்சசீலத்தின் அரசரான அம்பி அவரிடம் சரணடைந்து, அவரது மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் இமயவரம்பனுடைய போரில் வீரமிகு மழவர் வீசிய ஈட்டி அலக்சாண்டருடைய முன்னேற்றத்தை தடுத்து விட்டது.போரின் தோல்வியையும் பறைசாற்றிவிட்டது.போரினால் களைப்படைந்த அவரது வீரர்கள் மேலும் அணிவகுத்துச் செல்ல மறுத்தார்கள். இராணுவம் தயங்கும்போது மேற்கொண்டு செல்ல அலெக்சாண்டர் விரும்பவில்லை. நாடு திரும்பும் வழியில் அலெக்சாண்டர் அப்படுகாயத்தின் விளைவால் கடும் காய்ச்சலில் வீழ்ந்து பாபிலோனில் இறந்தார். ஆப்கானிஸ்தான், பாக்டீரியா போன்ற அரசுகளை வென்று கி.மு.327-ல் இந்துக்குஷ் மலைத்தொடரை கடந்து இந்தியா நோக்கி அணிவகுத்து வந்த உலகப்புகழ் பெற்ற சாக்ரட்டீசுவின் மாணவனான அடிஸ்டோட்டிலின் மாணவன் த கிரேட் அலக்சாண்டர்

“மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வலியும், தெறலும், அளியும், உடையோய்!

நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்

யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!

வான வரம்பனை! நீயோ பெரும! என பாடிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற ஈழத்து புலவர் மாணவனிடம் தோற்றே போனார்.

Facebook

Be the first to comment

Leave a Reply