நேற்று திருத்தணியில் வேல்பூஜை முடித்து விஸ்வஹிந்து பரிஷத் கூட்டத்தினர் ஐம்பதுபேர்கள் வேலுடன் கோவிலின் சிறப்புத்தரிசனம் வழியாக செல்ல முயன்றபோது இசையமைப்பாளர் . கங்கை அமரன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கங்கை அமரன் இந்துக்கள் லிஸ்டில் இல்லையா..

இந்துக்களே ஒன்று கூடுங்கள்னு சொல்றவங்க ஏன் கோவிலில் கடவுள் தரிசனத்தை பக்கத்தில் நின்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதுன்னு கேட்டு சொல்லுங்க..

எவ்வளவுதான் காவிகட்டிக் கொண்டாலும் உனக்கு கடவுளை அருகில் சென்றுபார்க்க அனுமதி இல்லையென சொல்லும் சனாதனத்தை எதிர்க்கும்போது நீங்களும் உடன் நிற்பதுதானே நியாயம்.

நம்மை நம் மண்ணில் சமமாய் பார்க்கவிடாமல் செய்தது யார் என்கிற கேள்வியை ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்தால் புரியும்.

“தமிழன் மரபில் சாதியில்லை

தீண்டாமைச் சுவரில்லை

இடையில் வந்த ஆரியம்

கூறுபோட்ட காரியம்

பிரிந்து நின்றோம்

நம் உறுதி குலைந்தோம்

மரபை மறந்து பழியாவதா

மனிதம் மறந்த கதையாவதா “

-பா.மகாலட்சுமி-

Be the first to comment

Leave a Reply