21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் – ஓர் அலசல்

 பாண்டி  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 06 பிப்ரவரி 2025

மனித பண்பாட்டின் வளர்ச்சியானது விலங்குகளை அவன் வடிவமைத்த கருவியால் வேட்டையாடி நெருப்பில் சுட்டு உணவை உண்ட காலகட்டத்தில் இருந்து தொடங்கலாம். அதோடு வட்ட வடிவில் சுழலும் ஓர் கருவியை உருவாக்கி அதன் மூலம் நகரும் ஓர் போக்குவரத்து மூலத்தை கண்டறிந்தான்.

பறவைகள் போல ஏன் நாமும் பறக்க முடியவில்லை என்ற சிந்தனை தோன்றியிருந்தாலும், நமக்கு ஆதாரமாக இருப்பது பண்டைய கிரேக்க எகிப்திய பண்பாட்டின் சிற்பங்கள், ஓவியங்களே. மனிதனுக்கு இறக்கை இருப்பது போலவும் பறப்பது போலவும் பல சிற்பங்கள் ஓவியங்கள் நம்மிடம் இன்று உள்ளன.spacex satellite 700கிரேக்க எகிப்திய பண்பாட்டில் இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி மனித வளர்ச்சியை மேம்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை தோற்றம் அதோடு நின்றுவிடவில்லை. கிரேக்க வானியல் அறிஞர்கள் பலர் வானில் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய தொடங்கினார்கள்.

கிரேக்க தத்துவ ஞானி ஃபிளாட்டோ பூகோளம் தட்டை வடிவில் இல்லை அது வட்ட வடிவில் உள்ளது எனவும் அது சுழன்று கொண்டிருக்கிறது அவர் சொன்னபோது கத்தோலிக்க மதத் தலைவர்கள் அவரை கொலை செய்யவும் வகை தோண்டினார்கள்‌.

17 -ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் பெசோ நகரில் பிறந்த வானியல், இயற்பியல் அறிஞர் கலிலியோ விண்வெளியை பல கோணங்களில் ஆய்வு செய்தார். அவர் உருவாக்கிய தொலைநோக்கியில் கோள்களை கண்டறிந்து வரைந்து காட்டினார். அண்டவெளியில் பூகோளம் நடுவில் இல்லை, சூரியனை தான் பூகோளம் சுற்றி வருகிறது என்று ஆணித்தரமாக கருத்துக்களை வைத்தார். அவரது கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னாளில் கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோரியது என்பது தனிக்கதை. பின் அறிவியல் வானியல் ஆய்வுகளின் தந்தை என்று கலிலியோ அறியப்பட்டார்.

புதிய அறிவியல் வளர்ச்சியின் காலம் 18 -ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதன் விளைவாக அந்நூற்றாண்ணிடின் இறுதியில் தொழிற்புரட்சி ஏற்பட காரணமாக அமைந்தது. 19 -ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடக்ககால வளர்ச்சி தொழிற்புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. சில ஐரோப்பிய நாடுகளில் பொறியியல் அறிஞர்கள் வானூர்தி இயந்திரம் படைப்பில் கவனம் செலுத்தினார்கள்.

1900 ஆண்டின் தொடக்கத்தில் ரைட் சகோதரர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய இயந்திர வடிவமைப்பு பறக்கும் திறனை பெற்றது, பின்னாளில் அதுவே முதல் பறக்கும் வானூர்தி என்று வரலாற்றில் எழுதப்பட்டது.

அவர்களின் சிந்தனையில் உருவான இயந்திர வடிவமைப்பு வானூர்தி படைப்பிற்கு உந்துதலை கொடுத்தது. இறக்கைகள் கொண்ட தேவதூதர்கள் பற்றிய புனைவுகளை படித்த காலகட்டத்தில் மனிதனை பறக்க வைக்க 1903 -ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் முதல் வானூர்தியை வானத்தில் பறக்க விட்டார்கள். அது மனித சிந்தனையில் உருவான அறிவியலின் அபார வெற்றி.

இன்று நாம் உலகம் முழுவதும் குறைந்த நேரத்தில் எளிதாக பயணம் மேற்கொள்ள வானூர்தியின் சேவை இன்றியமையாததாக உள்ளது. நாளுக்கு நாள் வானூர்தியின் வடிவமைப்பில் மாற்றங்கள் காண்கிறோம்.

 20 ஆம் நூற்றாண்டை தொழிற்புரட்சியின் 2.0 என்று அழைத்தால் அது மிகையாகாது. மாபெரும் தொழிற்சாலைகள், இருப்பூர்தி சேவைகள், வாகன உற்பத்திகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதே நூற்றாண்டில் தான் விண்வெளி துறையிலும் மனிதர்கள் கால்பதிக்கத் தொடங்கினார்கள்.

விண்வெளித் துறையில் 20 -ஆம் நூற்றாண்டு என்பது விண்வெளியின் தொடக்ககால நிலை என்று தான் சொல்ல வேண்டும்.

முதன் முதலில் விண்வெளி துறையில் கால்பதித்தது சோவியத் ஒன்றியத்தின் அரசு. சோவியத் ஒன்றியம் விண்வெளி ஆய்வுக்கு தனியே துறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவும் விண்வெளி துறைக்கான தனித் துறையை உருவாக்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள தொடங்கினார்கள்.

அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளி துறையில் கோலோச்சிய காலத்தில் அந்நாடுகள் மாறி மாறி வானில் விண்கலம் ஏவி செயற்கை கோள்களை நிறுத்தவும் செய்தார்கள். விண்வெளியில் பிற கோள்களை ஆய்வு செய்த நேரத்தில் இந்தியாவும் தனக்கென்று விண்வெளித் துறையை உருவாக்கியது அதில் போதிய வெற்றியையும் பெற்றது.

1960 -களுக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் தனக்கென்று ஓர் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்கள். விண்வெளியை ஆய்வு செய்ய புவியீர்ப்பு விசை இல்லாத சுற்றுவட்டப் பாதையில் பன்னாட்டு விண்வெளி (International Space Station) நிலையம் அமைத்தார்கள். தொடர்ச்சியாக விண்கலம் மூலம் விண்வெளி அறிஞர்களை அனுப்பி சோதனைகள் செய்தார்கள். ஆய்வுகள் முடிந்ததும் மீண்டும் விண்வெளி அறிஞர்கள் பூகோளம் திரும்பினார்கள். இவ்வாறான விண்வெளி போக்குவரத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது.

விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டமாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்களை கால் பதிக்க செய்தது அமெரிக்கா. தனது கொடியை பறக்கவிட்டு புகைப்படங்கள் எடுத்தது.

ஒருபுறம் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் யார் ஆதிக்கத்தை செலுத்துவது என்று போட்டி போடத் தொடங்கினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நிலவை கவிதை வரிகளால் பிடிக்கும் மற்றோர் போட்டி

நம் கவிஞர்கள் சிந்தனையில் ஓடியது என்றால் அதற்கு நம்மிடம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

“அந்த நிலாவத் தான் நான்

கையில பிடிச்சேன்”

என்று தொடங்கிய வரிகள்

“அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு வீடு செய்வேன்”

என்று அறிவிலை கவிதையில் கொண்டு வந்தார் கவிப்பேரரசு.

விண்வெளித் துறையின் 2.0;

 இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு காலத்தை வாழ்ந்து கடந்து வந்திருக்கிறோம். பல துறைகளில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அது விண்வெளி துறையிலும் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள நாசா வடிவமைத்து செயல்படுத்திய விண்கல வானூர்தியான (Space Shuttle) – Enterprise, Endeavor, Discovery, Challenger, Atlantis, Columbia போன்றவைகள் மாறி மாறி விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. முறையே அனைத்து பயணங்களும் வெற்றியுடன் முடிவடையவில்லை.

2003 சனவரி 16 ஆம் நாள் STS-107 என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு பயணத்தில் இந்திய குடும்ப வழி வந்த விண்வெளி அறிஞர் (Astronaut) கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்ல Space Shuttle Columbia -ல் பீறிட்டுக் கொண்டு விண்ணை நோக்கி ஏவப்பட்டது. முறையே STS -107 என்பது நாசாவின் 113 -ஆவது Space Shuttle program ஆகும், அதோடு இதே விண்கல வானூர்தியின் (Space Shuttle Orbiter Flight) 28 ஆவது பயணம் ஆகும்.

 பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் தங்கியிருந்து சோதனைகள் மேற்கொண்டார்கள். திட்டமிட்டபடி பிப்ரவரி முதலாம் நாள் பூமியின் நிலப்பரப்பில் விண்கல வானூர்தி தரையிறங்க பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பயணம் தொடங்கியது. தரையில் இறங்க வெறும் 16 நிமிடங்கள் மீதி இருந்த நேரத்தில் டெக்சாஸ் – லூசியானா வான் பரப்பில் அது வெடித்துச் சிதறியது.

அந்த நிகழ்வு உலகையே உலுக்கியது. வெடித்துச் சிதறிய பாகங்களை பல மாதங்களாக தேடப்பட்டு அதில் சில சிதைந்த பாகங்கள் மட்டுமே கிடைத்தது.

நாசா இதற்கென தனி விசாரணை ஆணையம் அமைத்து எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை அறிய முழுவீச்சில் இறங்கியது.

விபத்து நடந்து இரண்டாண்டுகளுக்கு மேலாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை. சரியாக 29 மாதங்கள் கடந்த பிறகு மீண்டும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் முடிவினை எடுத்தது நாசா. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாள் STS-114 என்றழைக்கப்பட்ட வரிசையில் Space Shuttle Discovery மூலம் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள். வெற்றிகரமாக மீண்டும் தரையில் வந்து இறங்கினார்கள்.

ஆனால் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி (Space Shuttle Orbiter Flight) சேவையை விரைவில் நிறுத்த முடிவு செய்திருந்தது நாசா. அதற்கு சரியான நேரமாக 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

STS-135 என்று அழைக்கப்பட்ட விண்வெளி பயணத் திட்டத்தில் Space Shuttle Atlantis விண்கல வானூர்தி தனது இறுதி பயணத்தை 2011 சூலை 8 ஆம் நாள் மேற்கொண்டது. முறையே இதிலும் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்று 12 நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டு சூலை 21 ஆம் நாள் நிலப்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுவே இத்திட்டத்தின் கடைசி விண்கல வானூர்தி என்று அருங்காட்சியகத்தில் அதனை காட்சிப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

வணிக விண்வெளி போக்குவரத்தை ஊக்குவித்த நாசா 

 மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி திட்டத்தை நாசா நிறுத்தி இருந்தாலும் நாசாவின் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் Soyuz Capsule உதவியுடன் அங்கு சென்று கொண்டிருந்தார்கள். இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவினாலும் விண்வெளி துறையில் அறிவியல் ஆய்வுகளில் ஒருவருக்கொருவர் உதவினார்கள் என்பது தான் உண்மை.

ஆனால் ரஷ்யா உதவியுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி அறிஞர்களை செலுத்துவதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தான் நாசா தனியார் வாடகை விண்கல சேவையை அமெரிக்காவில் தொடங்க திட்டம் தீட்டியது.

2010 -ஆம் ஆண்டே தனியார் விண்வெளி விண்கல வானூர்தி திட்டத்தை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர்களை செலவிட்ட இருக்கிறது . Commercial Crew Program என்ற பெயரில் அந்த திட்டம் அமைக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் நிதியுதவி பெற்று பங்கெடுத்தது. அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்லவும் எதிர்காலத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வருதல் என்பதே அத் திட்டத்தின் நோக்கம். இதில் Blue Origin, Boeing, Paragon Space Development Corporation, Sierra Nevada Corporation, and United Launch Alliance இந் நிறுவனங்கள் பங்கெடுத்தன.

திரைப்படங்களில் இரண்டாம் பாதியில் புதிய நாயகன் உருவாகுவது போல அமெரிக்க விண்வெளி துறையில் புதிய நாயகனாக ஈலான் மாஸ்க் பிறந்து வந்தார். சொல்லப்போனால் நாசா அவரது நிறுவனத்தை ஊக்கப்படுத்தியது.

அமெரிக்காவில் தனியார் விண்கலம் ஏவுதல் முறை தொடங்கப்பட்டது. பல நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து முயற்சிகள் மேற்கொண்டனர்.

 விண்வெளி துறையில் தனிப்பட்ட விருப்பங்கள் கொண்டிருந்த ஈலான் மாஸ்க் 2002ல் தொடங்கிய Space Exploration Technologies Corporation சுருக்கமாக ‘SpaceX’ நிறுவனம் விண்வெளிக்கு விண்கலம் ஏவுதல் மூலம் செயற்கைக்கோள்களை நிறுத்தும் வேலைகளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தது. அப்போதே செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியிருப்பு அமைப்பது பற்றி ஈலான் மாஸ்க் பேசியிருக்கிறார்.

ஒரே பாடலில் உச்சகட்ட வெற்றி என்பது போல ஈலான் மாஸ்க் அண்ணாச்சிக்கு எட்டப்படவில்லை. 2008 -ல் SpaceX நிறுவனம் மூடப்படும் நிலைக்கு போனது. அதாவது ஆய்வுகளுக்கு நிதிப் பற்றாகுறை ஏற்பட்டது. பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கருவிகள் கொண்டு செல்ல விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அவசியம் என நாசா அப்போது $1.6 பில்லியன் டாலர்களுக்கு Spacex உடன் ஒப்பந்தம் செய்து நிதியுதவி செய்ததும் ஒரு புதிய தொடக்கம். 

2010 ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் SpaceX உருவாக்கிய Falcon – 9 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சோதனைக்காக ஏவப்பட்ட முதல் விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.

“We got our falcon 9 rocket to orbit” – Elon Musk. தங்களின் வெற்றியை அந்நாளில் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் ஈலான் மாஸ்க்.

2012 -ல் Falcon 9 விண்கலம் ஏந்திச் சென்ற சோதனை Dragon Capsule வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தொட்டு நிலை நிறுத்தப்பட்டது.

இதே ஆண்டின் இறுதியில் நாசாவின் விண்வெளி கருவிகளை SpaceX விண்கலம் மூலம் அங்கு (Cargo Delivery) கொண்டு சென்றார்கள். 2013 மார்ச் 26 -ல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 600 கிலோ கிராம் எடையுள்ள பல்வேறு கருவிகளை சுமந்து கலிபோர்னியா அருகே பசுபிக் பெருங்கடலில் (Splashdown) இறங்கியது Dragon Capsule.

இதற்கு பிறகு SpaceX தொழில்நுட்ப காட்டில் மட்டும் தங்க மழை பெய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. (https://www.spacex.com)

பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு போயிங் நிறுவனமும் விண்வெளி பயணம் மற்றும் சேவைகள் வழங்க துடிப்புடன் செயல்பட்டது. இதற்காக போயிங் நிறுவனத்திற்கு நாசா 2014ல் $2.6 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகள் சோதனைகளுக்கு பிறகு 2020 டிசம்பர் மாதத்தில் தான் Boeing’s Starliner Capsule விண்ணில் ஏவ சரியான நேரம் கிடைத்தது. டிசம்பர் 20 ஆம் நாள் Starliner Capsule வெற்றிகரமாக United Launch Alliance -ன் விண்கலத்தில் பொருத்தி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏனோ அது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்லவில்லை. இருந்தாலும் அது போயிங் நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. இரண்டு நாட்களில் கழித்து மீண்டும் Starliner Capsule அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில பாலைவனத்தில் அது தரையிறங்கியது.

இதற்கிடையில் SpaceX நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது 2020 ஆம் ஆண்டு மே மாதம் 30 அன்று அமெரிக்க விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பொருத்தப்பட்ட Falcon 9 விண்கலம் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 19 மணி நேர பயணத்திற்குப் பிறகு இருவரும் வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்கள். அன்றைய நாள் அமெரிக்கா நாடே பெருமிதம் கொண்டது.

இதே ஆண்டின் இறுதியில் நவம்பர் 15 ஆம் நாளில் மேலும் நான்கு விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது அவர்கள் ஆறு மாத காலம் அங்கு பணியாற்றினார்கள். மீண்டும் அதே Crew 2 Dragon Capsule – வழியே ஜப்பானிய விண்வெளி அறிஞர் உட்பட நான்கு அறிஞர்களை 2021, மே 2 ஆம் நாள் இரவு 8;35 க்கு கிளம்பியது. சுமார் ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு அது மெக்சிகோ வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் விழுந்தது (Splashdown). (குறிப்பு – Gulf of Mexico is now called Gulf of America)

SpaceX நிறுவனம் ஈலான் மாஸ்க் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. நாசாவின் பிற தேவைகளை அது முழுமை செய்வதாக அமைந்தது.

மற்றொரு புறம் Boeing நிறுவனத்தின் Starliner Capsule பல சோதனைகளுக்கு பிறகு இந்திய வழி வந்த விண்வெளி அறிஞர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு அமெரிக்கா விண்வெளி அறிஞர் Butch Wilmore இருவரையும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள முழு அளவில் தேர்ந்திருந்தது. சொல்லப் போனால் SpaceX என்ற ஒற்றை நிறுவனத்தை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை, இன்னொரு நிறுவனமும் வேண்டும் என்பதற்காக தான் இரு அறிஞர்களையும் மேலே அனுப்ப திட்டம் தீட்டியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2024 சூன் 5 ஆம் நாள் இருவரும் விண்ணை நோக்கி சென்றனர். இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்கள் இருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் வந்தடைந்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே Starliner Capsule வழியே பூமிக்கு திருப்புவது தான் அவர்கள் திட்டம். ஆனால் Starliner Capsule ல் ஏற்பட்ட ஹீலியம் கசிவால் அவர்கள் திரும்புவது தாமதம் ஏற்பட்டது.

பல மாதங்கள் ஆகியும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனினும் நாசா Starliner Capsule ஐ ஆளில்லாமல் பூமிக்கு திரும்ப கட்டளை பிறப்பித்தது. செப்டம்பர் 6ஆம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ஆளில்லாமல் பூமிக்கு திரும்பியது Starliner.

அவர்கள் இருவரையும் மீண்டும் கொண்டு வர SpaceX நிறுவனத்தின் Dragon Capsule செலுத்தப்படும் என்றது நாசா. 2025 பிப்ரவரி மாதத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்வார்கள்.

2024ல் SpaceX நிறுவனம் மேலும் ஓர் புதிய அறிவியல் உச்சத்தை எட்டியது. இதுவரையில் விண்ணில் ஏவப்படும் விண்கலத்தின் சில பகுதிகள் (Super Heavy Booster) எல்லாம் ஒரு கட்டத்தில் எரிந்து ஒரு கட்டத்தில் சிதறி விழுந்து விடும். அதன் பாகங்கள் மறுபடியும் பயன்படுத்த முடியாது. இதனை முறியடித்து காட்டியது SpaceX.

2024 அக்டோபர் 13 ஆம் நாள் சோதனை வடிவில் Starship Vehicle விண்ணில் ஏவப்பட்டு அது மீண்டும் தான் ஏவிய இடத்திற்கு திரும்பியது. இந்த முயற்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு வரை விண்வெளி துறையில் நிகழ்ந்த ஓர் புதிய முயற்சி நீண்டு கொண்டே போகிறது.

பூமியில் வாழும் மனிதர்களுக்கும் பிற கோள்களில் ஒருவேளை உயிர் வாழு வழி இருந்தால் அல்லது அங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்துவது கவிதைகள் மட்டுமே. ஆம் கடந்த ஆண்டு நாசா விண்ணில் ஏவிய SpaceX Falcon விண்கலம் ஒன்று ஜூபிடர் கோளின் யுரோப்பா என்ற நிலவுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலவில் முழுவதும் பனி சூழ்ந்து இருக்கிறது. அதில் அமெரிக்க கவிஞர் (அமெரிக்க மெக்சிகர்) Ada Limon எழுதிய “In Praise Of Mystery” கவிதைகளை மடித்து உள்ளே வைத்திருக்கிறார்கள்.

Source: (https://www.npr.org/2024/10/13/nx-s1-5151788/spacex-starship-booster-caught-first-launch)

21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் ஓர் அலசல் – 2

 பாண்டி  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2025

விண்வெளியில் மனிதர்கள் சுற்றிப்பார்க்க பூகோளத்திற்கு அருகில் இருக்கும் ஒரே இடமென்றால் அது நிலவு மட்டுமே. 1960 காலகட்டத்திற்குப் பிறகு சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் நிலவில் காலடி வைத்து காலனி அமைக்க முயன்று கொண்டிருந்தனர். அமெரிக்கா அப்பல்லோ திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது, சோவியத் ஒன்றியம் லூனா (Luna – என்பதற்கு லத்தீன் மொழியில் நிலவு என்று பொருள்) என்ற திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது. இவ்விரண்டு வல்லரசு நாடுகளுக்கும் நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்ற புவிசார் அரசியல் போட்டி அப்போது நிலவியது. ஒருவகையில் ‘நான் தான் முதலில் செல்வேன்’ என்ற மேன்மை (prestige) மிகுந்த போட்டியும் அவர்களின் பனிப்போருக்கு நடுவில் சூடுபிடிக்க நடந்தது.space shuttleஅப்போட்டியின் விளைவாக மனிதன் வடிவமைத்த கருவி (Probe) ஒன்று 1959 -ல் நிலவில் தரை தொட்டு இறங்கியது, அதனை முதலில் செய்து காட்டியது அன்றைய சோவியத் ஒன்றியம்.

இதுவரையில் அமெரிக்க விண்வெளி அறிஞர்கள் மட்டுமே நிலவில் காலடி வைத்திருக்கிறார்கள். 1969ல் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தார் அவரைத் தொடர்ந்து Buzz Aldrin இறங்கினார், Michael Collins என்பவர் கட்டுப்பாட்டு பெட்டகத்தின் உள்ளே இருந்தார். அங்கே அவர்கள் புகைப்படங்கள் எடுத்து அமெரிக்க கொடியை நட்டு இருக்கிறார்கள்.

“We choose to go to the Moon” மிகவும் புகழ்பெற்ற இந்த சொற்றொடரை கூறினார் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி. உலகெங்கும் 650 மில்லியன் மக்கள் நிலவில் இறங்கிய காட்சியை தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.

ஆனால், அமெரிக்கா அறிஞர்கள் நிலவில் தரையிறங்கிய காட்சிகளை ரஷ்யா நம்ப மறுக்கிறது என்பது வேறு விடயம். ஹாலிவுட்டில் ஏதோ செட் போட்டு படம் எடுப்பது போல எடுத்து விட்டார்கள் என்ற நம்பிக்கை ரஷ்யா மக்களிடையே இருக்கிறது.

 இன்றளவும் சில அமெரிக்க மக்கள் கூட இதனை நம்ப மறுக்கிறார்கள். காற்று இல்லாத ஓரிடத்தில் எப்படி கொடி பறக்க முடியும், நிலவில் அவர்கள் எடுத்த புகைப்படத்தில் ஒரு விண்மீன் கூட ஏன் தெரியவில்லை? என்பது சிலரது கேள்விகளாக இன்றும் உள்ளது. நிலவில் எடுத்த புகைப்படத்தில் அமெரிக்க கொடி காற்றில் அசைவது போல எடுக்கப்பட்டிருக்கும். (உண்மை சரிபார்ப்பு தகவல்கள் – BBC/ conspiracy theories.)

நிலவை முதலில் தொட்டது ஆம்ஸ்ட்ராங் இல்லை என்று நம் தமிழ் கவிஞர்கள் கூட வேறு விதத்தில் நம்ப மறுத்தார்கள்.

“சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்டராங்கா?

சத்தியமாய் தொட்டது யார்

நான் தானே!”

என்று கதாநாயகியை நிலவாக கற்பனை செய்து கதாநாயகன் நிலவைத் தொடுவது போல் சத்தியம் செய்து பாடல் வரிகள் எழுதினார் கவிப்பேரரசு.

நிலாவில் மனிதன் காலடி வைப்பதற்கு முன் நிலாவில் ஆயா வடை சுட்ட புனைவு கதைகள் நம்மூரில் இருந்தது.

நடிகர் விவேக் வேடிக்கையாக காதல் கிசு கிசு திரைப்படத்தில் இவ்வாறு பேசுவார்.

“வெளிநாட்டுக்காரன் நிலாவுல கால் வச்ச நேரத்துல, ஒரு ஆயா நிலாவுல கால் நீட்டி உக்கார்ந்து வடை சுட்டுக்கிட்டு இருக்கு ன்னு சொல்லி கொடுத்து தான் எங்களுக்கு சோறு ஊட்டி விட்டாங்க.

அமெரிக்கா கார்ன் கம்யூட்டர் கண்டுபிடிச்ச அதே நேரத்தில நாங்க நோட்புக்குல மயில் இறக்கைய வச்சி அது குட்டி போடுமா ன்னு பாத்துக்கிட்டு இருந்தோம் ஐயா”

அன்றைய 80, 90 -களின் காலகட்டம் நமக்கு அப்படி தான் இருந்தது என்பது ஆணித்தரமான உண்மை.

 உலகெங்கும் நாடு பிடிக்கும் போட்டியில் ஆதிக்கத்தை சொலுத்திய அக்மார்க் ஆண்டப் பரம்பரை ஐரோப்பிய நாடுகள் தங்களின் காலனியை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா என் அனைத்து கண்டங்களிலும் விரிவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஏனோ நிலவில் மட்டும் ஓர் காலனியை ஏற்படுத்தும் போக்கு அவர்களுக்கு எடுபடவில்லை என்பது இன்றுவரை நமக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

கடைசியாக டிசம்பர் 14,1972 -ல் நிலவில் இருந்து மனிதர்கள் வெளியேறினார்கள். அதாவது அமெரிக்காவின் அப்பல்லோ-17 விண்கல வானூர்தி நிலவில் இருந்து பூகோளத்திற்கு திரும்பிது. இதற்கு பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை.

எழுபதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகள் வரை மாறி மாறி நிலவுக்கு விண்கலம் செலுத்திய அமெரிக்காவும், ரஷ்யாவும் சற்றே ஓய்ந்திருந்தார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக உலகில் எந்த நாடும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளை நிலவுக்கு ஆய்வுகள் செய்ய அனுப்பவில்லை.

21ஆம் நூற்றாண்டில் வேகமெடுத்த நிலா தொடும் போட்டி;

 விண்வெளித் துறையில் தனக்கென்று தனியே ஆய்வுகளைச் செய்ய விண்வெளித் துறையை உருவாக்கிய சீனா (China Academy Of Space Technology சுருக்கமாக CAST.) யாருமே எதிர்பார்க்காத வகையில் நிலவைத் தொடும் திட்டங்களை தொடங்கி இருந்தது.

அக்டோபர் 24, 2007 -ல் சீனா ஏவிய Chang’e-1 probe என்ற விண்கல கருவி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பறந்து புகைப்படங்கள் எடுத்தது.

சீன விண்வெளி அறிஞர்கள் அனுப்பிய சீன பாடல்களை அங்கு ஒலிக்க விட்டது. Chang’e 1 probe என்பது நிலவில் தரையிறங்கும் திட்டம் கிடையாது. இரண்டு மாதங்கள் கழித்து அந்த கருவி நிலவின் மேற்பரப்பில் முட்டி விழுந்தது. அந்நேரத்தில் சீனாவின் அம்முயற்சி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்போது அத்திட்டத்தின் மதிப்பு 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 சீனா ஒருபுறம் நிலவின் ஆய்வுகளை செய்ய தொடங்கிய நேரத்தில் இந்தியாவும் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இஸ்ரோ சந்திராயன் (Chandrayaan-1) திட்டத்தை தீட்டியது. (சந்திராயன் என்பது சமஸ்கிருத சொல்)

22, அக்டோபர் 2008 -ல் இந்தியா ஏவிய விண்கலம் நிலவில் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. பல இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். சந்திராயன் திட்டம் உலகெங்கும் பேசு பொருளாக மாறியது. சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குனராக தமிழ் வழியில் பயின்ற டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இருந்தார் என்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.

 இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் ’21ஆம் நூற்றாண்டின் விண்வெளி தொடக்கம்’ என்றே கருதினார்கள். சந்திராயன்-1 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. இதே ஆண்டில் இந்தியா ஏவிய விண்கலம் ஒன்று 10 செயற்கை கோள்களை ஏவிச் சென்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இந்தியாவில் விண்வெளி திட்டத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதி ஒதுக்கியது இந்திய ஒன்றிய அரசு.

இந்தியாவில் மக்கள் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையில் உள்ளார்கள், மனித கழிவுகள மனிதர்களே அகற்றும் நிலை உள்ள நாட்டில் அதற்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை. கழிவுநீர் வடிகால்களை தூய்மை செய்ய இன்றளவும் மனிதர்கள் உள்ளே இறங்கி வேலை செய்யும் நிலை இருக்கிறது. ஆனால், விண்வெளித் துறைக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

சந்திராயன்-1 விண்கல வானூர்தியில் (Spacecraft) இந்திய அறிஞர்கள் செலுத்திய கருவிகள் மட்டும் பயணம் செல்லவில்லை. அதில் நாசாவின் அளவிடும் கருவியான Moon Mineralogy Mapper உட்பட 11 அறிவியல் கருவிகளை ஏந்திச் சென்றது. இக் கருவிகள் எடுத்த புகைப்படங்கள், மற்றும் நிலவின் மேற்பரப்பை அளவிட்ட மாதிரிகளை ஆய்வு செய்த அறிஞர்கள் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் (Hydroxyl Molecules) இருக்கிறது என்பதை உறுதி செய்தார்கள். அதாவது நிலவின் மேற்பரப்பில் மிகவும் நுண்ணிய அளவில் தண்ணீராக இல்லாமல் மூலக்கூறு படிவங்களாக உள்ளது.

இதற்கு முன்னர் அப்பல்லோ மற்றும் லூனா திட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிலா ஒரு வறண்ட நிலப்பரப்பு என்றே கருதினார்கள். அந்த ஆய்வுகளின் போக்கை மாற்றிக் காட்டியது சந்திராயன் திட்டம். சில‌ மாதங்கள் கழித்து அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சீனாவின் முயற்சி நீண்டு கொண்டே போனது. Chang’e என்ற திட்டத்தின் பெயரில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. டிசம்பர் 14, 2013ல் Chang’e 3 probe நிலாவில் மிகவும் மென்மையாக (Soft Landing) தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. கிட்டத்தட்ட இது 40 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சாதனையை முறியடிக்கப்பட்டது.

சந்திராயன்-1 திட்டத்தைத் தொடர்ந்து அதன் அடுத்தகட்டமாக நிலவில் தரையிறங்கும் திட்டமிடலாக Orbiter, Lander and Rover போன்ற இயந்திர ஊர்தி கருவிகளுடன் சந்திராயன்-2 திட்டம் முழு வீச்சில் நடைபெற்றது.

இறுதியாக சந்திராயன்-2 நிலவில் கால் பதிக்கும் திட்டமாக 22 சூலை 2019 -ல் விண்ணில் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் அரசியல் நிலையும் மாறி இருந்தது. சந்திராயன்-1 ன் மனநிலையை விட சந்திராயன்-2 க்கு சமூக வலைத்தளங்களிலும் வரவேற்பு உயர்வாக இருந்தது. சந்திராயன்-2 விண்வெளியில் ஏவப்பட ஒரு வாரத்தில் அதன் பயணத்தை நிறுத்தி இருந்தது இஸ்ரோ. சரியாக ஒருமாத கால பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் நாளில் நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக நிலவில் இறக்குவது என பரபரப்பான நிலையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாடு நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் பொறியாளர்கள்.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே இந்தியாவின் நிலவைத் தொடும் காட்சிகளை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் கட்டுப்பாடு அறையின் பார்வையாளர்கள் பகுதியில் அவரது புகைப்பட கலைஞர்கள் புடைசூழ நேரடியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் Lander தனது கட்டுப்பாட்டை இழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஏதோ ஒன்றை இழந்ததை போன்ற மனநிலையை அடைந்தது. இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கண்ணீர் விட்டு சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்தது என்றார். அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அன்றைய நாளில் சந்திராயன்-2 சரியாக நிலவில் தரையிறங்கி இருந்தால் அது நிலவில் இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை அடைந்திருக்கும்.

நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. நிலவுக்கு பூகோளம் போல் வளிமண்டல அழுத்தம் கிடையாது. ஆதலால் அங்கே காற்றழுத்த வான்குடை மிதவை (parachute) மூலம் எதையும் இறக்கிவிட முடியாது. ஆதலால் நிலவில் தரையிறங்கும் ஊர்தியை மிகவும் குறைந்த வேகத்தில் மெதுவாக இயக்க வேண்டும் இதனை ஆங்கிலத்தில் Powered descent அழைக்கபடுகிறது. மேலிருந்து கிடைமட்டமாக ஊர்தி இயக்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் விழுந்து நொறுக்கியது என்பது குறித்த தகவல் அப்போது யாருக்கும் தெரியாது. இரண்டு மாதங்கள் கழித்து நம் சென்னைய சேர்ந்த IT guy சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவின் நிலவு புகைப்படங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ரம் லேண்டர் கிடக்கிறது என்றார். அதனை நாசாவும் உறுதி செய்தது.

சந்திராயன்-2 திட்டத்தின் செலவு 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் பார்வையில் இந்த செலவு என்பது மிகவும் குறைந்த செலவு. ஹாலிவுட்டில் ஒரு விண்வெளித் திரைப்படம் எடுக்கவே 140 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு ஆகும்.

சந்திராயன்-2 தோல்வியில் இருந்து பல தகவல்களை சேகரித்து கொண்டு உடனடியாக சந்திராயன்-3 திட்டத்தை தொடங்கிவிட்டது இந்தியா.

நிலவில் மனிதர்களை மீண்டும் தரையிறங்க வைக்கும் நாசாவின் புதிய Artemis திட்டம்;

 விண்வெளியில் உள்ள பிற கோள்களில் உயிர் வாழ வழி இருக்கிறதா, அண்டவெளியில் வேறெங்காவது பூகோளம் போல அமைப்பு உள்ளதா என்ற சிந்தனை விண்வெளி ஆய்வில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு இல்லாமல் இருந்ததில்லை.

சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலவுக்கு மீண்டும் மீண்டும் விண்கலம் ஏவ தொடங்கிய காலத்தில் அமெரிக்காவும் தனது பழைய திட்டத்தை தூசி தட்டி புதுப்பிக்க தொடங்கியது. அப்பல்லோ திட்டம் நிறைவடைந்து 50 ஆண்டுகள் கழித்து நிலவில் நகரும் ஊர்திகள் மற்றும் மனிதர்களை மீண்டும் அழைத்துச் செல்லும் திட்டத்தை தீட்டியது.

21ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நிலவுத் திட்டத்திற்கு Artemis என்ற புதிய பெயரை வைத்தது நாசா. Artemis என்பது கிரேக்க புராணத்தில் வேட்டையாடும் ஓர் பெண் கடவுளின் பெயர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் செயல்பட தொடங்கியது நாசா. எடுத்த எடுப்பிலேயே நிலவில் மனிதர்களை கால் பதிக்கும் திட்டம் தற்போது இல்லை. Artemis I, II, III, IV என நான்கு கட்டங்களாக செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது.

முதலாவதாக Artemis-I திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும். அது ஆளில்லா விண்கல வானூர்தி சோதனை திட்டம் என்று அழைக்கப்படும்.

பிறகு இரண்டாவதாக Artemis-II திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule உள்ளே விண்வெளி அறிஞர்கள் அமர்ந்து பயணம் செய்வார்கள் ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இது நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும் என்பது தான் திட்டம். இவ்விரண்டாவது திட்டம் 2025ல் ஏவப்படுவதாக இருந்தது ஆனால், தற்போது அது 2026 -க்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக Artemis -III திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule -ல் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி அறிஞர்கள் SpaceX வடிவமைத்து கொடுக்கும் ‘Starship Human Landing System’ மூலமாக நிலவின் தென் துருவத்தில் காலடி வைப்பார்கள் (Moonwalk) மீண்டும் அதே Starship Human Landing System மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிற்கும் Orion Spacecraft Capsule திருப்பி விடுவார்கள். பிறகு அங்கிருந்து பூகோளப் பயணம் மேற்கொள்ளப்படும்.

நான்காவதாக ஏவப்படும் Artemis-IV திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft ல் செல்லும் அறிஞர்கள் சில காலம் நிலவில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தற்போது நடப்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படும்.

Artemis திட்டத்தில் நிலவுக்குச் செல்ல நான்கு விண்வெளி அறிஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறது நாசா.

Artemis-II Commander Reid Wiseman

Artemis-II Pilot Victor Glover

Artemis-II Missions Specialist Christina Koch and Canada’s Jeremy Hanson.

அந் நால்வரில் ஒருவர் பெண், ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக Space Launch System – SLS என்ற மிகப்பெரிய திறன்மிக்க விண்கலத்தை (Rocket) வடிவமைத்தது நாசா. இதன் மூலம் நிலவுக்கு மட்டும் இல்லாமல் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளுக்கும் (Deep Space Exploration) இதனை பயன்படுத்த முடிவு செய்தது.

SLS (Space Launch System) திறன் வாய்ந்த விண்கலத்தின் உற்பத்திக்கு பல தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்தன. மொத்தம் 1,100 தனியார் நிறுவனங்கள் (Rocket Assembly and Configuration) இதற்காக வேலை செய்தன. “ஆயுர்வேத மூலிகையாலே உள்நாட்டிலே தயாரானது” என்ற விளம்பர பாடல் வரிகளுக்கு ஏற்ப நாசா பெருமை கொண்டது.

நாசாவின் Space Launch System கீழ்க்கண்டவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

Core Stage

RS-25 Engines

Boosters

Integrated Spacecraft/Payload Element

Exploration Upper Stage

The SLS Team

இதன் முதன்மை பாகங்கள Core Stage -ஐ போயிங் நிறுவனம் செய்து கொடுக்கிறது. இதில் 4 விண்கல உந்துவிசை இயந்திரங்களை (RS-25 Engine) L3 Harris Technologies நிறுவனம் வடிவமைத்தது. இவ்வகை இயந்திரங்கள் தரையில் இருந்து ஏவப்பட்ட எட்டாவது நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சென்றுவிடும்.

Orion Spacecraft Capsule -ஐ வடிவமைத்து வழங்குவது Lockheed Martin நிறுவனம் ஆகும். (அமெரிக்காவின் பிரபல போர் வானூர்திகளான F-35 -ஐ உற்பத்தி செய்யும் நிறுவனம்)

 Artemis -I திட்டத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடித்தப் பின், பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 2022 செப்டம்பர் மாதத்தில் Artemis -I விண்ணில் ஏவப்பட நாட்குறிப்பிடப்படது.

கடைசி நிமிடத்தில் திரவ நைட்ரஜன் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டது அதனால் விண்கல ஏவுதல் தள்ளிப் போனது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு செல்வதால் இதனை மிகவும் நேர்த்தியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் நாசா உறுதியாக இருந்தது.

நவம்பர் 16, 2022 அதிகாலை 1:47 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Artemis-I. விண்வெளிப் பயணத்தை தொடங்கிய ஆறாவது நாளில் Orion Spacecraft Capsule ஆனது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பல கோணங்களில் நிலவை புகைப்படங்கள் எடுத்து நாசாவின் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பியது. விண்கல வானூர்தி செல்ல வேண்டிய உச்சகட்ட தொலைவு 268,563 மைல்கள் வரை சென்றது.

நிலவின் சுற்றுப்பாதையில் ஏதேனும் விண்வெளி கதிர்வீச்சு இருக்கிறதா என்பதை அளவீடு செய்ய 34 Radiation Sensor -களை உள்ளே வைத்திருந்தார்கள்.

25 நாட்கள் நிலவின் அருகில் சுற்றிக்கொண்டிருந்த Orion Spacecraft -ஐ பூகோளம் திரும்ப டிசம்பர் 5ஆம் நாள் கட்டளை பெறப்பட்டது.‌ எந்தவித பாதிப்பும் இல்லாமல் டிசம்பர் 11 நாளில் பாஜா கலிபோர்னியா பசுபிக் பெருங்கடலில் (Splashdown) விழுந்து இறங்கியது.

Artemis -I திட்டத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறது நாசா.

(தரவுகள்; https://www.nasa.gov/mission/artemis-i/)

நிலவில் வெற்றிவாகை சூடிய சந்திராயன்-3 

சந்திராயன்-2 தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்திராயன்-3 திட்டத்தின் நிலவு பயணம் சூலை 14, 2023ல் குறிக்கப்பட்டது. இஸ்ரோ விண்கலம் ஏறுவதற்கு முன்னர் இஸ்ரோ அறிஞர்கள் ராகு கேது பெயர்ச்சி காலம் கூட பார்த்தார்கள் என்ற செய்தி கூட உலவியது.

விண்ணில் ஏவப்பட்ட நாற்பதாவது நாளில் ஆகஸ்ட் 23, 2023ல் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மிகவும் மென்மையாக தரையிறங்கியது.

சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் சில கருவிகளையும் ஏந்திச் சென்றது. நிலவின் வெப்பநிலையை அளவிடும் Chandra Surface Thermophysical Experiment sensor.

நிலவு அதிர்வுகளை கண்டறியும் கருவியான Instrument for Lunar Seismic Activity.

நிலவில் உள்ள காலநிலையை அளவிட Langmuir Probe

மற்றும் நாசாவின் விண்வெளி கருவியான Laser Retroreflector Array அதனுடன் சென்றது.

இந்தியாவின் சாதனை உலகெங்கும் பேசுபொருளாக மாறியது. நிலவில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை சேர்த்தது இந்தியா.

சந்திராயன்-2 திட்டத்தை விட சந்திராயன்-3 திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தனமான ஆதரவு கூடியிருந்தது. சந்திராயன்-2ஐ நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி சந்திராயன்-3 நிலவைவ் தொட்ட நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

“India is on the Moon” என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி. மாநாடு முடிந்த கையோடு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேரடியாக இஸ்ரோ தலைமையகம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் இஸ்ரோவின் வெற்றிக்காக “Thank You Modi Ji” என்று பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சந்திராயன்-3 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. 

கவிஞர்கள் தங்களின் கற்பனையில் பலவகையான கவிதைகள்/பாடல் வரிகள் நிலவைப் பற்றி எழுதலாம். ஆனால் மனிதர்கள் அங்கு வாழவே தகுதியற்ற இடம் என்பது விண்வெளி ஆய்வுகள் செய்யும் நாடுகளுக்கு தெரியும். அங்கு பெரும் பாறைகளும் பள்ளங்களும் தான் உள்ளன. சூரியன் முழுமையாக தெரியும் நேரத்தில் நிலாவின் பகல் பொழுதின் வெப்பநிலை 127°C எட்டும். இரவு வேளையில் அங்கு வெப்பநிலை -173C° எட்டும். ஆனாலும் அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து செய்வதன் மூலமே அது இவ்வுலகிற்கு தெரிய வரும்.

வணிக அடிப்படையில் பார்த்தால் நிலவுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்வது தேவையற்ற பெரும் செலவு என்றே பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். இன்னொரு வகையில் பார்த்தால் நிலவில் மனிதர்கள் அனுப்பிய விண்வெளி கலன்கள் ஆங்காங்கே உடைந்து நொறுக்கி (debris) குப்பை போல் கிடக்கின்றது.

தங்கள் நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு வெளிக்காட்டும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதி தான், நிலாவுக்கு செல்லும் போட்டி விண்வெளியில் நடக்கிறது.

(References; Space.com, Wikipedia, NPR news, NASA, ISRO.)

தொடரும்.

– பாண்டி

கூரை ஏறி வானம் படிக்கும் விஞ்ஞானிகள்

 சிதம்பரம் இரவிச்சந்திரன்  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 06 செப்டம்பர் 2023

இங்கிலாந்து கெண்ட் (Kent) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தேவாலயங்களின் கூரை மேல் ஏறி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து விண்கற்கள், வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு வந்த காஸ்மிக் தூசுக்களை சேகரிக்கின்றனர். இவை யாராலும் சேதப்படுத்தப்படாமல் இருப்பவை. வான்வெளிச் செயல்களின் வரலாற்றை அறிய இவை பற்றிய ஆய்வுகள் விஞ்ஞானிகளுக்கு உதவும்.

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த துகள்களின் அளவை அறிவதன் மூலம் புவியின் வளிமண்டலத்தில் இவற்றின் அளவு பற்றி அறிய முடியும். டாக்டர் பென்னி வாஸ்னி அக்குயிக்ஸ் (Dr Penny Wozniakiewicz) மற்றும் டாக்டர் மத்தாயா ஸ்வேன் ஜினக்கன் (Dr Matthias van Ginneken) ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள எல்லா பழமையான தேவாலயங்களின் கூரைகளிலும் இது பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

இவற்றின் மிகச் சிறிய அளவு மற்றும் தேவாலயங்களின் கூரைகள் சாதாரணமாக பொதுமக்களால் சென்றடைய முடியாத இடம் என்பதால் காஸ்மிக் துகள்களைத் தேட இந்த இடங்கள் மிகப் பொருத்தமானவை என்று கருதப்படுகிறது. இந்த துகள்கள் எல்லா இடங்களில் இருந்தும் வருகின்றன. ஆனால் கூரைகள் இவற்றை ஒன்றுதிரட்ட சரியான இடங்கள். கூரைகள் மேலேறி இவற்றை யாரும் சேதப்படுத்துவதில்லை.வானத்தில் இருந்து பூமிக்கு வந்து விழும் நுண் துகள்கள்

விண்கற்கள், வால் நட்சத்திரங்களில் இருந்து இவை பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்து வருகின்றன. இவற்றில் பல துகள்கள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உருவாகும் வெப்பத்தால் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால் சில துகள்கள் உருகி, குளிர்ந்து மறுபடியும் திட நிலையை அடைந்து நுண்ணிய, தனிச்சிறப்பு மிக்க வட்ட வடிவப் பொருட்களாக மாறுகின்றன. இவை பூமியின் தரைப்பரப்பில் சிதறிக் கிடக்கின்றன. விண்ணில் இருந்து வரும் பிற நுண் பொருட்கள் பற்றி அறிய இத்துகள்கள் உதவுகின்றன.

பூமிக்கு வரும் இத்துகள்களைப் பயன்படுத்தி வளிமண்டலத்தின் மேற்பகுதிக்கு வரும் துகள்களின் எண்ணிக்கையை தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இதன் மூலம் பூமியின் உருவாக்கத்தில் இத்துகள்களின் பங்கு பற்றி அறிய முடியும். அதனால் காஸ்மிக் துகள்களைப் பற்றிய தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கேண்ட்டபரி (Canterbury) தேவாலயத்தின் பழமையான பரந்த பரப்புள்ள கூரை மீது படிந்துள்ள துகள்களை சேகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் பிறகு ராச்செஸ்ட்டர் (Rochester) மற்றும் இங்கிலாந்தில் உள்ள மற்ற பழமையான தேவாலயங்களின் கூரைகளை ஆராயும் திட்டம் உள்ளது.

கூரைகளில் இருந்து காற்று மற்றும் மழை இத்துகள்களை அடித்துச் சென்றாலும் மிச்சமிருப்பவை ஆராயப் போதுமானதாக உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்படும் இடங்களின் கூரைகள் பல்வேறு சமயங்களில் பூமியில் வந்து விழுந்த துகள்களை சேகரித்து ஆராய உதவுகின்றன. மேற்பகுதியின் பல இடங்கள் பழுது பார்க்கப்படும்போது அந்தந்த காலத்திற்குரிய துகள்கள் பற்றிய விவரம் கிடைக்கிறது.

கெண்ட் விஞ்ஞானிகளின் இந்த புதிய முயற்சி காஸ்மிக் துகள் பற்றி பல புதிய தகவல்களைத் தரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jul/30/the-kent-scientists-who-collect-cosmic-dust-from-cathedral-roofs?

– சிதம்பரம் இரவிச்சந்திரன்

நாகரிக வளர்ச்சி – வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..!!!

 வி.சீனிவாசன்  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2018

மனிதன் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து அதனின் ஊடே தன்னை மிக சக்தி வாய்ந்த மற்றும் நன்கு முன்னேறிய நாகரிக மற்றும் தொழில்நுட்ப இனமாக கருதிக் கொண்டு இருக்கிறான். வேற்றுகிரகவாசிகளைத் தேடி பல விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் தொலைநோக்கிகளை விண்வெளியில் செலுத்திக் கொண்டு இருக்கிறான்.

Nikolai Kardashevசோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் மற்றும் வான் இயற்பியலாளர் நிகோலாய் கார்டாஷேவ் என்பவர் 1964 இல் நாகரிகங்களை அதன் ஆற்றலை உள்வாங்கும் திறன் மற்றும் அதனை சரிவர பயன்படுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார்.

கர்தாஷேவ் அளவீடு ஒரு நாகரிகத்தின் நுண்ணறிவு அளவை அளவிடுவதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த இந்த அளவுகோள் அனுமானம், மற்றும் ஒரு அண்ட அளவிலான ஆற்றல் நுகர்வு குறித்து விவாதிக்கிறது. இந்த அளவின் பல்வேறு நீட்டிப்புகள் பின்வருமாறு முன்மொழியப்பட்டுள்ளன, இதில் பரந்த அளவிலான ஆற்றல் மட்டங்கள் (வகைகள் 0,I ,II ,III, IV ,V, VI மற்றும் VII) மற்றும் தூய சக்தியைத் தவிர வேறு அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

வகை I நாகரிகம் – ஒரு கோள்களின் நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது-அதன் தாய் நட்சத்திரத்திருலிருந்து கிரகத்தை அடையும் அனைத்து ஆற்றலையும் பயன்படுத்தவும் மற்றும் சேமிக்கவும் இயலும் (வெப்பம், ஹைட்ரோ, காற்று, போன்றவை). கர்தாஷேவ் அதை “பூமியில் தற்போது அடைந்த அளவில் நெருக்கமான தொழில்நுட்ப நிலை” என்று விவரித்தார்.

பூகம்பங்கள், வானிலை மற்றும் எரிமலைகள் போன்றவற்றை ஒரு கிரக நாகரிகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று இயற்பியலாளர் Michio Kaku நினைக்கிறார், “மேலும் கடல் நகரங்களைக் கட்டும். அப்படியானால், நாம் இன்னும் அங்கு இல்லை. வகை 1 நிலை பெற எங்களுக்கு மற்றொரு 100-200 ஆண்டுகள் எடுக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மனித இனம் இப்போதைக்கு வகை 0.7 என வகைப்படுத்தலாம்” எனக் கூறுகிறார்.

நாம் வகை 1 நிலையை அடைந்து விட்டோம் எனக் கொள்வோம் , அடுத்தது என்ன? மற்ற கிரகங்களிலிருந்து எரிசக்தி வரையறையைப் பார்ப்பதற்கு, பூமியை விட்டு வெளியேறலாம். ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆற்றலைப் பயன்படுத்தக்கூடிய ஒரு பரஸ்பர நாகரிகத்தை நாம் உருவாக்கினால், நாம் ஒரு வகை 2 நாகரிகத்தை அடைவோம்.

வகை II நாகரிகம் – நட்சத்திர நட்சத்திர நாகரிகம் என்றும் அழைக்கப்படுகின்றது-அதன் தாய் அதன் நட்சத்திரத்தின் மொத்த ஆற்றலையும் முழுமையாக உபயோகிக்க இயலும்.

ஒரு நட்சத்திரத்தின் ஆற்றலைக் கட்டுப்படுத்த ஒரு வழி, டிஸன் கோளம் எனப்படும் ஒரு மெகாஸ்டார் கட்டமைப்பை உருவாக்குவதாகும். இது 1960 ஆம் ஆண்டில் இயற்பியல் மற்றும் கணிதவியலாளர் ஃப்ரீமேன் டைசன் ஆகியோரின் ஆரம்ப யோசனை. அத்தகைய அமைப்பு பூமியின் பரப்பளவை விட சுமார் 600 மில்லியன் மடங்கு அதிகமாகும். இந்த ட்யசோன் கோளத்தைப் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாகப் பாப்போம்.

வியக்கத்தக்க வகையில், டிஸன் கோளம் வேற்று கிரக வாழ்க்கைக்கு தேடலில் ஒரு முக்கிய அம்சமாகிவிட்டது. உங்களால் விண்வெளியில் ஒரு டிஸன் கோளம் கண்டுபிடிக்க முடியும் என்றால், வேற்று கிரகவாசிகள் மிகவும் தொலைவில் இல்லை என்று குறித்துக் கொள்ளுங்கள்.

universe 209வகை III நாகரிகம் – இது ஒரு கேலடிக் அல்லது அண்ட நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது-அதன் முழு அண்ட மண்டலத்தின் ஆற்றலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஒரு வகை 3 நாகரிகம் என்பது பரிணாமத்தின் மற்றொரு ஒழுங்குமுறையாகும், அநேகமாக 100,000 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் எடுக்கும். கர்தாஷேவ் அதை “தனது சொந்த விண்மீன் அளவிலான ஆற்றல் கொண்ட ஒரு நாகரிகம்” என்று இதனை கூறுகிறார். ஆம், இந்த முன்னேற்றத்தை பெற முழு விண்மீன் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

நாம் ரோபோக்கள் டிஸ்ஸான் ஸ்பெரெஸ் கட்டமைக்கின்ற காலகட்டத்தினைப் பற்றி இங்கு பேசுகிறோம், எல்லா விண்மீன்களுக்கும் மேலாக, இன்னும் அசைக்கமுடியாத விண்வெளி உந்துவிசை தொழில்நுட்பத்தை பற்றியும் இங்கு கூற வேண்டும். ஒருவேளை, இத்தகைய ஒரு நாகரிகம் கருந்துளைகளிலிருந்து எரிசக்தி பெறுதல் அல்லது ஆற்றல் உற்பத்தி செய்ய கூடிய நட்சத்திரத் தோற்றத்தை உருவாக்க முடியும்.

அத்தகைய முன்னேற்றத்திற்கு அடுத்தது என்ன? கர்தாஷேவ் இதன் பிறகு எந்த நாகரிகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதினார், ஆனால் பின்னர் முன்கணிப்பு செய்தவர்கள், வகை 4 நாகரிகம் ஒரு முழு பிரபஞ்சத்தின் ஆற்றலைக் கையாள முடியும் என்று முன்மொழிந்திருக்கிறார்கள், அதே நேரத்தில் வகை 5 பன்மையில், பல பிரபஞ்சங்களில் இருந்து ஆற்றலைக் கையாள முடியும் என்று கூறுகிறார்கள்.

வகை 6 பற்றி என்ன? நாம் இங்கே கடவுள் பொருட்களை பேசிக் கொண்டு இருக்கிறோம், நேரம் மற்றும் விண்வெளியை கட்டுப்படுத்தும் திறனும், விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரபஞ்சங்கள் உருவாக்கும் திறனையும் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம்.

வகை 7? நாம் கற்பனை கூட செய்து பார்க்கக்கூடாது.

– வி.சீனிவாசன்

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

 ஜெயச்சந்திரன்  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 16 மே 2013

ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.

அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் ‘நட்சத்திரம்’ தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.

நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.

உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.

மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.
 
இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப் போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர்.

ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.

இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?

நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?

நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரிய‌னில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.

எப்படி என்று பார்க்கலாமா?

சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.

எப்படி?

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.

நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து ‘பெரிலியம்’ என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் ‘கார்பன்’ உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு ‘மெக்னீசியம்’ அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.

நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.

தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது.

பிறகு எப்படி அவை உருவாகின?

அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை ‘நேபுல்லா’ என்றழைப்பர்.

இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.

பிரசவ மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும் தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக்கூட்டத்தில் ‘நட்சத்திரங்கள்’ பிறக்கப் போகின்றன என்று தெரியும்

காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப்போல தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும் பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும், பயிர்களையும் உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி ‘நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்’ என்று கூறலாமல்லவா?

நட்சத்திரத்தின் உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?

ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா?

ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய் உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் ‘படித்த முட்டாள்கள்’ எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

– ஜெயச்சந்திரன் (jayachandranc2@gmail.com)

சோதிடம் என்பதும் அறிவியலா?

 பேரா.சோ.மோகனா  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 11 மே 2010

நாம் எல்லோரும் தினமும் வானைப் பார்க்கின்றோம். வானைப் பார்க்காத மனிதர்கள் உண்டா? இரவு பகல் எந்த நேரத்திலும் வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வால்மீன்கள், மேகங்கள் என பார்க்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல் தான் சோதிடமும். அதன் தோற்றமும், உண்மை பொய் பற்றியும் தெரியாது. எந்த விஷயமாக இருந்தாலும் பத்துபேர் சேர்ந்து சொல்லி விட்டாலோ, எழுத்துக்களில் வந்துவிட்டாலோ நம்மில் பெரும்பாலோர் 100 சதவீதம் உண்மையென்றே நம்பி விடுகின்றனர். வானியலையும். சோதிடத்தையும் பாலையும், காப்பியையும் ஒன்றாகக் கலப்பது போல் கலந்து குழப்பி விடுகின்றனர். தன் கைக்கு எட்டாத கண்ணில் படுகின்ற, தொலைவில் உள்ள பொருட்களின் மேல் செலுத்தும் கற்பனையும் விருப்பக்கருத்தும் அரைகுறையாளர்களின் புருடாவும் தான் சோதிடம்.

வானியல் என்றால் என்ன?

வானவியல் என்பது வானில் காணப்படும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் தவிர வானில் காணப்படும் கணக்கு தெரியாத ஆழ்வானின் பொருட்களைத்தான் நாம் அறிவோம். நம் குழந்தைகட்கு பூமி பற்றி சொல்லும்போது கண்டம், கடல், நிலம், தாவரம், விலங்கு, பாறை போன்ற விசயங்களையும் சேர்த்துத்தானே சொல்லுகின்றோம். அதுபோல்தான் வானியலும், வான் பொருட்களும். பூமிக்கு வெளியே வளிமண்டலம் தாண்டி என்ன இருக்கிறது? காற்றில்லாத வெற்றிடம், அது தாண்டி கோள்கள், விண்மீன், அதனைச்சார்ந்த கோள்கள் எல்லாம் உள்ளன. அதுமட்டுமா, புவியின் துருவங்களில் உண்டாகும் துருவ ஒளி, வெகு தொலைவில் பிரபஞ்ச கதிர்வீச்சு என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. இவை இயற்பியல், வேதியியல், கணிதம் தொடர்பானவைதான்.

பழங்கால வான்நோக்கு இடங்கள்

 நாம் வானை நோக்குவது என்பது காலம்காலமாய் கடைப்பிடித்துவரும் பொழுது போக்குகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் தான் பார்த்துத் தெரிந்த தகவல்களை குகைகளிலும், களிமண் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் மிகப்பாதுகாப்பாக பதிவு செய்துள்ளான். முற்காலத்தில் சாதாரணமாய் கண்ணுக்குப் புலப்படும் வான்பொருட்களின் நகர்வு கண்டு காலம், நேரம் கணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் முன்பு வளைய வடிவில் அமைக்கப்பட்ட நீண்ட நெடும் கற்பாறைகள் வான்நோக்கு கற்கள் என அழைக்கப்பட்டன. இதன் இடைவெளி வழியே சூரியனைப் பார்த்து நேரம் காலம் அறியப்பட்டது.

சோதிடத்தின் பிறப்பு…

 நவீன வானவியல் என்பது சோதிடத்துடன் ஒன்றாக சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டு குழம்புவதோ குழப்புவதோ இல்லை. சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். இதன்பொருள் விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே. (Astro-Star : Logy – belief / study). சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. உலகில் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வான்பொருட்கள் நகர்வதே காரணம் என கற்பனை செய்துகொண்டான். வானவியல், சோதிடம் இரண்டும் வேறு வேறு துறைகள் தான். ஆனால் இரண்டும் வான் பொருட்களை ஆதாரமாகக்கொண்டே உருவானவை. இரண்டிற்கும் பொதுவான துவக்க அம்சங்கள் உண்டு. சோதிடம் சூரியன், சூரியனைச்சுற்றும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சூரியக்குடும்பத்தின் பிற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடுவதே இல்லை. அதுமட்டுமல்ல, சோதிடக்கட்டத்தில் நம் குடும்பத்தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கும் கோளின் பதவி தரப்படுகிறது. பாம்பு என்ற ஒன்றைப் புகுத்தி அதன் தலையை வெட்டி தனியாக்கி தலைக்கும், பாம்புக்கும் தனித்தனியாக ராகு, கேது என்று பட்டமும் கொடுக்கின்றனர். ராகு, கேது என்ற கோள்கள் வானவியலில் கிடையாது. இவை சோதிடரின் கற்பனையே…

பழங்கால வானவியல்

 சோதிடமும், வானவியலும் பழங்கால நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன. நாகரிகம் வளர வளர பாபிலோனியா, பெர்சியா, எகிப்து பழங்கால கிரிஸ், இந்தியா, சீனா போன்ற நாகரிகங்களில் வான்நோக்கு கூடங்கள் கட்டப்பட்டன. எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமீடுகளின் வழியே வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சிரியஸ் விண்மீன்களைப் பார்க்கலாம். அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர். பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. கோள்களின் நகர்வு சூரியன், சந்திரன், பூமியின் தன்மை பற்றி அறியப்பட்டது. நாம் ஊர் ஊராக அழைந்து கொண்டு இருப்பவரை பரதேசி என்று குறிப்பிடுவோமே… அதேபோல நிற்காமல் அலைந்து கொண்டிருக்கும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை கோள்கள் என்றே அழைத்தனர்.

ஒண்டவந்த பிடாரி

 அண்டம் போகட்டும். ஜோதிடம் எப்படி, காலம் காலமாக தனக்கு தெரிந்த விஷ‌யங்களை மனிதன் வானில் பார்க்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன. அக்காலகட்டத்தில் வாழ்ந்த அறிவு ஜீவிகள் இரண்டையும் தொடர்புபடுத்தி சாதாரண பாமர மக்களிடம் தெரிவிக்கின்றனர். மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் நிகழ்வுகளும், நகர்வுகளும் காரணம் என்பது சுவையாகமிருந்தது. ஆனால் வெளிச்சப்பொருட்களான சூரியன் சந்திரனுக்கான காரணங்கள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நம் ஊருக்கு யாராவது தெரியாதவர் வந்து நடமாடினால் அவரைப்பற்றி நமக்குத்தோன்றியதெல்லாம்.. சும்மா எடுத்துவிடுவதில்லையா, அதுபோல் தான் இதுவும். எனவே வானில் சூரியன், சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்க தொடங்கினர். பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் பின்னணி. சோதிடம் முக்கியமாக மன்னர்களின் வாழ்நாள், வழித்தோன்றல்களுக்கு காரண காரியம் மற்றும் குறிசொல்லத்தொடங்கி பாமர மக்களிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இவ்வாறு தான் இன்று அதுபோக வீடுகட்டுதல். சமையலறை, கழிப்பறை, நடந்துபோதல் போன்றவைகளுக்கும் கூட வாஸ்து, தாஸ்து என பார்க்க ஆரம்பித்துவிட்டனர். முயற்சியை ஒதுக்கும் போலிமையின் நிகழ்வுகள் இவை.

கதை சொல்லவா..

 சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிக குறைவாக உள்ளதால் இதனை போலி அறிவியல் என்றே அழைக்கிறோம். இந்த நம்பிக்கை பழங்கால நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்தது. நம் பிரச்சனைக்கு யாராவது வழி காட்டமாட்டார்களா, உதவிக்கரம் நீட்டமாட்டார்களா என்ற பரிதவிப்பிலும் நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை, யாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கை குறைவாலும், செழிப்புடன் வளர்ந்தது சோதிடம். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் இந்த இடத்தில் இருந்தபோது இந்த நிகழ்வு நடந்ததது என்ற தற்செயல் நிகழ்வாலும் உருவானதுதான் சோதிடம் ஆனதால் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாம் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்தனர். பலவகை நாகரிகங்களிலும் அவர்களின் கணிப்புப்படியே சோதிடம் உருவாக்கப்பட்டிருந்ததது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் அவற்றில் கணிப்பு ஒன்றையொன்று சார்ந்ததில்லை; தனித்தனியே உருவானவையே. வான்பொருட்கள் பற்றிய கணிப்பு மட்டும் எல்லா நாகரிகங்களிலும், எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. சீன சோதிட உருவாக்கமும் அதன் பரிணாமமும் வேறு விதமானவை.

இந்திய சோதிடம்

 இந்தியாவில் வானில் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும் பிரித்துள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டுள்ளது. தமிழ் சோதிடத்தில் உள்ள ஒரு விண்மீன் என்பது வானில் பல விண்மீன் தொகுதிகளைக்கூட குறிக்கிறது. (உதாரணம் உத்திராடம்) வானில் தெரியும் விண்மீன்களை கிழக்கில் இருந்து மேற்காகவே நாம் ராசிமண்டலத்தில் சேர்க்கிறோம். இது ராசி மண்டல வளையம் எனப்படுகிறது. இவை தெரிவதை சூரிய விதி என்றும் சொல்கிறோம். இது நிலநடுக்கோட்டிலிருந்து 23 ½ பாகை சரிந்துள்ளது. சூரிய வீதியும், நிலநடுக்கோடும் சந்திக்கும் இடத்தில் சமகால நாட்கள் அமைந்துள்ளன. வருடத்தில் அவை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 என 2 நாட்களில் நிகழும். தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்று கூறுகிறோம். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் கணிப்புப்படி வானின் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாக பிரித்துள்ளனர். இவற்றின் முக்கியமானவை வடதுருவ பெருங்கரடிக்கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச்சிலுவை ஆகியவை. இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தை சுற்றிவருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மேற்காக உள்ள விண்மீன்கள் பூமியின் சூழற்சியால் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல தோன்றுகிறது.

நீங்கள் முன்னிரவில் அடிவானில் தோன்றும் விண்மீன் ஒன்றின் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் கவனியுங்கள். அந்த விண்மீன் 4 நிமிடம் தாமதமாகவே வானில் தெரியும். காரணம் நம் பூமியின் சூழற்சியால்தான். மேலும் விண்மீன்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் என்றோ பார்த்த விண்மீன்களை கணக்கில் கொண்டு சோதிடர்கள் சோதிடம் கணிக்கின்றனர். அனைத்து விண்மீன்களும் தங்களின் இடத்திலிருந்து என்றோ இடம் பெயர்ந்துவிட்டன. சோதிடர்கள் கணிக்கும் விண்மீன்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. உதாரணமாக திருவாதிரை விண்மீன் 640 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நனவும், நினைப்பும் வேறு வேறாக உள்ளது நண்பா! தமிழ் சோதிடத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை 3ம் சேர்ந்தது மேஷ‌ராசி. ஆனால் 3 நட்சத்திரங்களும் தனித்தனி விண்மீன் தொகுதிகள். கார்த்திகை விண்மீன்தொகுதியில் ஆறு பெரிய விண்மீன்களும் அதற்குள் ஏராளமான விண்மீன் திரள்களும் உள்ளன.

பேரா.சோ.மோகனா (mohanatnsf@gmail.com)

சூரியக் குடும்பம்

 நல்லான்  பிரிவு: விண்வெளி வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010

நாம் இருக்கும் அண்டவெளி மிகவும் பரந்தது என்று முன்பே நாம் பார்த்தோம். பால் வீதிகளும், விண்மீன்களும், கோள்களும், சூரியன்களும் கொண்ட இந்த அண்ட வெளியின் அளவை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. நாம் காணும் அண்டத்தின் ஒரு பகுதியே சுமார் 25,000 கோடி ஒளியாண்டுகள் தூரம் உடையது.

இந்த அண்டவெளி தோன்றிய விதத்தை முன்பே நாம் பேசியிருக்கிறோம். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அபே லெமைட்ரோ என்பவர், தனது பெரு வெடிப்புக் கொள்கையால் அதை விளக்கியிருக்கிறார். (Big Bang Theory). பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழுந்தி சுருங்கிய நிலையில் இருந்த இந்த அண்டம் வெடித்துச் சிதறியதால் விரிவடையத் தொடங்கியது என்பதுதான் இக்கொள்கை கூறும் கருத்து. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அப்படி நடந்தது. அண்ட வெளியில் உள்ள விண்மீன்கள் எரிகற்கள் போன்றவற்றையெல்லாம் நாம் முன்னரே பார்த்தோம்.

சூரியக் குடும்பம் : இந்த அண்டவெளியில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் சூரியனையும் அதை சுற்றிவரும் கோள்களையும் சேர்த்து நாம் சூரியக் குடும்பம் என்கிறோம். இதில் 1500 வகையான சிறு கோள்களும் (Asteroids), எரிகற்களும், வால் விண்மீன்களும் கூட அடங்கும். இந்த சூரியக்குடும்பம் எப்படி தோன்றியது என்பதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனை நோக்கி ஒரு விண்மீன் நெருங்கி வந்தது. இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் விளைவாக கதிர் அலைகள் எழுந்தன. பின்னர் சூரியனிலிருந்து பிரிந்த சில துண்டுகள் தனித்தனியே துகள்களாக, குளிர்ந்து, உருண்டு கோள்களாயின, துணைக் கோள்கள் தாம் பிரிந்த கோள்களையும், கோள்கள் சூரியனையும் சுற்றிவரத் தொடங்கின என்று ஒரு கருத்து இருக்கிறது.

ரஷ்ய அறிவியலாளர் ஆட்டோ ஷ்மிட், வேறு ஒரு கருத்தைச் சொன்னார். சூரிய மண்டலத்திலுள்ள திடப் பொருட்களும், துகள்களும், தூசுகளும் திரண்டு கோள்கள் உருவாயின என்றார். இந்த கோள்கள் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு சுமார் எட்டு பில்லியன் மைல் அகலத்துக்கு பரந்து விரிந்து இருக்கின்றன. சில கோள்களுக்கு இடையிலே ஒரு பில்லியன் இடைவெளி கூட உண்டு.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன. முன்னர் இந்த வரிசையில் புளுட்டோ என்ற ஒன்றும் ஒன்பதாவது கோளாக இருந்தது. அது ஒரு கோள் அல்ல என்று அண்மையில் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து நீக்கி விட்டனர். இந்தக் கோள்கள் எல்லாமே ஓர் ஒழுங்கான இடைவெளிகளில் தள்ளித் தள்ளி சூரியனைச் சுற்றி வருகின்றன. இக்கோள்களை சூரியனுக்கு அருகில் இருப்பவை, சூரியனுக்கு தொலைவில் இருப்பவை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உள்கோள்கள், வெளிகோள்கள் என்றும் கூட சொல்லலாம்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள். இவற்றில் பூமிதான் பெரியது. இக்கோள்கள் அனைத்துமே அடர்த்தியானவை; பாறைகளால் ஆனவை. அதனால் இவைகளை புவிக் கோள்கள் என்றும்கூட அழைப்பதுண்டு. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிக் கோள்கள். இவை அனைத்தும் உருவத்தில் பெரியவையாகும். பல துணைக்கோள்களும் கூட இவைகளுக்கு உண்டு. இந்தக் கோள்களின் பெரும்பகுதி ஹைட்ரஜன் (நீர்வளி), ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனவை. இவைகளின் சுழற்சி வேகமும் மிக அதிகம்.

இந்த கோள்கள் அனைத்துமே ஒரே சீரான இடைவெளியில் சுழல்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை ஓர் அலகாகக் கொண்டால் புதன் 1/3 தூரத்திலும், வெள்ளி 2/3 பங்கு தூரத்திலும், செவ்வாய் 1.5 மடங்கு தூரத்திலும்,வியாழன் 5 மடங்கு தூரத்திலும், சனி 10 மடங்கு தூரத்திலும், யுரேனஸ் 20 மடங்கு தூரத்திலும், நெப்டியூன் 30 மடங்கு தூரத்திலும் உள்ளன. இந்தக் கோள்கள் அனைத்தும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)

பார்ப்பனியத்தில் இருந்து முருகனை மீட்டெடுப்போம்! சங்கிகளை அம்பலப்படுத்துவோம்!!
செ.கார்கி பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 23 ஜூன் 2025

ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும்போது ‘இந்த உலகில் இது போன்ற நிலைமை யாருக்குமே வரக்கூடாது’ என்று கடவுளை வேண்டிக் கொள்வான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுளும் எங்களைப் போன்ற அவல நிலை யாருக்குமே வரக்கூடாது என்று மற்ற நாட்டு கடவுள்களைப் பார்த்து கதறும் சூழ்நிலைதான் உள்ளது!.

ராமன், கிருஷ்ணன், ஐயப்பன் என்று யாரையும் விடாமல் ஆன்மீக அரசியலின் பேரால் அவர்களை அரசியல் பலத்காரம் செய்த அயோக்கியர்கள் இன்று தமிழ்நாட்டிலும் முருகனை அரசியல் பலாத்காரம் செய்யக் கிளம்பியிருக்கின்றார்கள். மூத்திரச் சந்தில் மாட்டிக் கொண்ட வடிவேலுவின் கதையாக மாறியிருக்கின்றது முருகனின் கதை.murugan manadu maduraiபன்னெடுங்காலமாக தமிழ்நாட்டில் முருக வழிபாடு இருந்தாலும் அது சாமானிய மக்களின் எளிய வழிபாட்டு முறையாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தமிழரின் பன்பாட்டு மரபோடு அதற்கு இருந்த நெருக்கம்தான்.

களவு மணத்தைக் கொண்டாடிய ஆதித்தமிழரின் மிச்ச சொச்சம்தான் முருக வழிபாடு. இன்று முருகனிடம் கார் வேண்டும், பைக் வேண்டும், ஐ போன் வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்ளும் வழிபாட்டு முறை அன்றிருந்த மக்களிடம் இல்லை. அவர்கள் முருகனை காதல் நோயைத் தீர்க்க வந்த மருத்துவனாகவே பார்த்தார்கள்.

வேலன் என்பவன் முருகனின் பூசாரி ஆவான். அவன் வேலெடுத்து ஆடி குறி சொல்வதால் வேலன் எனப்பட்டான். சங்க இலக்கியங்கள் முருக வழிபாட்டைப் பேசும்போது ஆட்டு ரத்தத்தில் திணை மாவைப் பிசைந்து படையலிடும் முறையையே குறிப்பிடுகின்றன.

ஆனால் இன்று முருகன் பார்ப்பனக் கடவுளாக வடநாட்டு ஸ்கந்தனாக பூணூல் அணிவிக்கப்பட்டு தயிர்சோறு முருகனாக மாற்றப்பட்டிருக்கின்றான்.

சரி, ஏன் சங்கிகள் முருகனுக்கு ஆறு படை வீடுகள் இருந்தும் திருப்பரங்குன்றத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அது ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம்தான் முதன்மையானது என்பது மட்டுமல்லாமல் இங்குதான் தமிழனின் களவு மணப் பண்பாட்டை காலி செய்துவிட்டு அவனுக்கு பாப்பாத்தியான தெய்வானையை மணமுடித்து வைத்தார்கள்.

தமிழனின் வரலாற்றை, பண்பாட்டை பார்ப்பனர்கள் அழித்த இடமென்பதால் தமிழின துரோகிகளின் கூட்டம் திருப்பரங்குன்றத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றது.

மலை வாழ் மக்களின் கடவுளான முருகனுக்கு எப்படி ஒரு பாப்பாத்தியை மணம் முடித்து வைத்தார்கள் பார்ப்பனர்கள்? இங்குதான் முருகனுக்கு ஒரு புராணக் கதையை பார்ப்பனக் கூட்டம் கட்டிவிட்டது.

தேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) தொல்லை கொடுத்துவந்த சூரபத்மனையும் அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பாற்றியதால் மகிழ்ச்சியடைந்த இந்திரன் தனது நன்றியைச் செலுத்தும் வகையில் தன் மகளாகிய தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். இந்தத் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

ஆக பார்ப்பனர்கள் சும்மா எல்லாம் தெய்வானையை முருகனுக்குக் கொடுக்கவில்லை. பார்ப்பனக் கூட்டத்தையே அடித்து உதைத்து ஊரைவிட்டே ஓட ஓட விரட்டத் துடித்த ஒருவனை பார்ப்பன கைக்கூலியாக மாறிய முருகன் அழித்ததற்காகத்தான் வெள்ளைத்தோல் பாப்பாத்தியை முருகனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றார்கள்.

அப்படியே திருமணம் செய்து வைத்தாலும் அது மநு தர்மத்தின் படி பிரதிலோம சங்கரமாகும். அதாவது ஒரு கீழ்சாதி ஆணுக்கும் ஒரு மேல்சாதி பெண்ணுக்கும் நடக்கும் திருமணமாகும். சங்கரம் என்றால் முறைதவறிய என்று அர்த்தம். அதனால்தான் இன்றளவும் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு பார்ப்பனன் கூட தன் மகனுக்கு முருகன் என்று பெயரிடுவதில்லை.

இது பார்ப்பனர்கள் தமிழ் முருகனை அபகரிக்கச் செய்த அப்பட்டமான புராணப் புளுகு என்பதால்தான் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களில் யாரும் முருகன் என்ற பெயரை வைத்துக் கொள்வதும் இல்லை. முருகனுக்கு கோயிலும் இல்லை.

இப்போது நம்முன் இருக்கும் பெரிய கேள்வி எப்படி தமிழ் முருகனை சங்கிகளிடம் இருந்து மீட்டெடுப்பது என்பதுதான்.

இதற்கு ஒரே வழி பாலை நிலத்துக் கொற்றவையின் மகனான முருகனை அவனது மரபான ரத்தபலி வழிபாட்டுக்கு மாற்றுவதுதான். ஆனால் அதைச் செய்ய இங்கே ஒருவனுக்கும் திராணி இல்லை என்பதும் இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதும்தான் உண்மை.

இன்று தமிழ்நாட்டில் முருகனை துக்கிப் பிடிப்பதில் முதன்மையான நபர் சீமான். ஆனால் முருகனை அவர் மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கின்றார்?. பார்ப்பனர்கள் எப்படி முருகனுக்கு பூணூல் போட்டு சைவமாக மாற்றினார்களோ அதையேதான் சீமானும் செய்துகொண்டு இருக்கின்றார்.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் சீமான் துவங்கினார். ஆனால் பழனியில் பண்டாரங்களிடம் இருந்த பூசை செய்யும் உரிமையைப் பார்ப்பனர்கள் பறித்துக் கொண்டதைப் பற்றியோ அதை மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியோ சீமான் அன்று மட்டுமல்ல இன்று வரையிலும் பேசவில்லை.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என்று சொல்லும் சீமானால் ஏன் அங்கே கிடா வெட்டி பூசை செய்ய வேண்டும் என சொல்லத் துப்பில்லை.

இன்றும் நாட்டார் தெய்வக் கோயில்களை பார்ப்பன சங்கி கும்பலும் அதன் அடிவருடிகளும் தொட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுதான். அப்படி என்றால் நாட்டார் தெய்வ வழிபாட்டில் வரும் முருகனை மட்டும் எப்படி சைவமாக சீமான் முன்னிறுத்துகின்றார்?

பார்ப்பன கும்பல் செய்யும் அதே வேலையைத்தான் சீமானும் செய்து கொண்டிருக்கின்றார்.

2015 ஆண்டு மார்ச் மாதம் விகடனுக்கு சீமான் அளித்த பேட்டியில் முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் அவரை எப்படி மொத்தத் தமிழர்களுக்கும் கடவுளாக முடியும்? என்ற கேள்விக்கு “தமிழனின் ஐந்து திணைக் கடவுள்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் 50 ஆயிரம் மாவீரர்களின் படங்களுக்குப் பதிலாக நடுகல் வழிபாட்டை ஒரு குறியீடாக தலைவர் கொண்டுவந்தது போல நாங்கள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகனை முதன்மைப்படுத்துகிறோம். ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைத்த சூழ்ச்சியில் இருந்து வெளியேறி வந்தவன் என் முப்பட்டான். எனக்கென ஓர் உலகம், என் நாடு, என் மக்கள்’னு அவன் தனியா வந்ததைப் பார்க்கணும்!”. என்று கூறியிருக்கின்றார்.

இதைவிட சீமான் பார்ப்பன அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும். இந்த ஞானப்பழக் கதையை ஏற்றுக் கொண்டால் முருகனுக்கு அப்பன் சிவன் என்பதையும், அம்மா பார்வதி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது முற்பட்ட சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் பிம்பத்திற்கு நேர் எதிரானது ஆகும்.

அது மட்டுமல்ல ஓம் போன்ற பார்ப்பனிய சொற்களையும் பயன்படுத்துகின்றார். இந்த ‘ஓம்’ எங்கிருந்து தமிழுக்கு வந்தது? இந்த ஓம் பற்றி உபநிடதங்கள் , பகவத் கீதை போன்றவை விரிவாக பேசுகின்றன. தமிழில் பார்ப்பன திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பேசுகின்றார். தன்னுடைய கையில் சீமான் பிடிக்கும் வேலில் உள்ள ‘ஓம்’ எங்கிருந்து வந்தது என்பதை வரலாற்று அறிஞரான அவர்தான் சொல்ல வேண்டும். பார்ப்பனியத்தின் அத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்குப் பெயர் வீரத்தமிழர் முன்னணி என்று வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்.

மேலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு சிவன் காட்சி தந்ததார் என்று சொல்லப்படும் புராணக் கதையை ஏற்றுக் கொண்டு தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என கேட்டார். இதுதான் சீமான் தமிழர் மெய்யியலை மீட்டெடுக்கும் யோக்கியதை.

அது என்னமோ தெரியவில்லை – முருகனை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எல்லோருமே பார்ப்பனிய பாதந்தாங்கிகளாகவே இருக்கின்றார்கள்.

மதுரையில் பாஜக நடத்திய முருக பக்தர்கள் மாநாடானது எந்தளவிற்கு பாஜகவுக்கு ஓட்டுவங்கியாக மாறும் என்பதெல்லாம் தேர்தல் முடிந்தவுடன்தான் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டப் பார்க்கும் பாஜக கணிசமான அளவிற்கு இந்துமத வெறியர்களை உருவாக்கி வைத்திருக்கின்றது என்பதை நாம் மறுத்துவிட்டு கடந்து போக முடியாது.

மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தாலே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாஜக காலிகள் பெரிய மதக்கலவரத்திற்குத் திட்டமிடுவது நன்றாகத் தெரியும்.

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவே முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

இதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் நடைபெற்று வந்த விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காகும். ஏற்கெனவே இதை வைத்து மதுரையில் இந்து முன்னணி பாஜக காலிகள் கலவரம் செய்ய முயன்று தோற்றிருக்கின்றார்கள்.

அதே போல தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பாஜக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதும், அதற்கு முக்கிய காரணம் ஆளும் திமுக மற்றும் ஆண்ட அதிமுக என்பதும்தான் உண்மை.

இந்த இரண்டு ஓட்டுப்பொறுக்கி கார்ப்ரேட் கட்சிகளிடமும் எந்த நேர்மையோ, யோக்கியதையோ கிடையாது. ஆனால் இவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்சிகள் என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டு மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.

தேர்தல் களத்தில் ஊறுகாயாக தொட்டுக் கொள்ள மட்டுமே இவர்கள் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் மூலம் லட்சக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளாக மாறினார்கள். இவர்கள் அடிக்கும் அனைத்துக் கொள்ளைகளுக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழாதபடி பாசிச பூச்சாண்டி காட்டினார்கள்.

ஆனால் பாசிசம் வளர்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்த அயோக்கியர்களே இவர்கள்தான். பகுத்தறிவு வழியில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டியதுதான் ஒரு அரசின் கடமையாகும். ஆனால் தமிழ்நாட்டிலோ முருகனை வைத்து எப்படி எல்லாம் அரசியல் பலாத்காரம் செய்யலாம் என்ற போட்டிதான் நடந்து கொண்டு இருக்கின்றது.

இருக்கும் மலத்தில் எது நல்ல மலம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே ஓட்டு போடும் மக்களுக்கு இருக்கின்றது. வேறு எந்த வழியும் இல்லை.

செ.கார்கி

Be the first to comment

Leave a Reply