இலங்கை வேந்தன் இராவணன் பற்றிய உண்மைகள்
August 22, 2018
வேத வித்தகன் இராவணன்
இராவணன் நீர்வீழ்ச்சி
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும் முதல்வன் முன்நாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த
புயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளை யெல்லாம் உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே.இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லானாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. இராவணன் கேட்கும் முன்னாலேயே, முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெல்லப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும் என்றார். இந்த வரத்தை இராவணன் எப்படி எப்பொழுது மறந்தான்?சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். மண்டோதரியின் அந்தப்புரத்துள் நுழைகிறான். வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே? என்று பதட்டத்துடன் கேட்டாள் பத்தினி. இராவணன், அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி என்றான். என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா? என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.
இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ஆம் தேவி. இப்பொழுது தான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது. அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன். அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா? அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன்பட்டது. வேறெதுவும் இல்லை. சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணி தான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்து விட்டீர்களே சுவாமி! வருத்தினாள் மண்டோதரி.
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் தமிழர்களை பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.
இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசரும் இராவண காவியத்தின் காப்பியத் தலைவனும் ஆவான். இராவணன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களின் இராவணன் அழைக்கப்பெறுகிறான்.
மேலும் இவன் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிபவன் என்றும் சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. சிவத் தலங்களில் சிவனது வீதியுலாவின் பொழுது பத்து தலைகொண்ட இராவணனது உருவம் சுவாமி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.இராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் – இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன்,விபீடணன் என மூன்று ஆண் பிள்ளைகளையும் காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டான். முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டான். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது
இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலை சிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.
பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப் படுகின்றாரன். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் கலம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.
வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள். அங்கு கோசிகன் போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.
வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள்.
படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன்எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தான்
காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இண்ங்காததால் இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றான்
படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம்வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினான்.
இராவணன் அரசவையில் இராமனை எதி்ர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு விபீடணன்எதிர்ப்பு தெரிவித்தார். சீதையை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். விபீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் விபீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினான்.
இராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகர்ணன் போரில் வீர மரணமடைந்தான். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணனனை அவருடைய மகன் சேயோன் தேற்றினாரன். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தான். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டான்.
இராமனால் இராவணின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டான், விபீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தான். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தான்
இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன – நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது இராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.
இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?
இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும், தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்பட வேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.
அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம்.
வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்.குடும்பம்
இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர். அட்சயகுமாரன், மாயசுரன், இந்திரசித்து இராவணனின் மகன்கள்.
வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
கைலாயத்தைத் தூக்கும் இராவணன்
இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டால் ஏது இங்கே பிரச்சினைகள்?
இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக் காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
இராவணன் காலத்து ஆலயங்கள்
இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக் கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.
“வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.
இதைவிட… இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.
இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருக்கேதீஸ்வரம்
இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.
திருக்கோணேச்சரம்
(திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.
இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.
இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.
இராவணன் வெட்டு
படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.சிகிரியாக் குன்றம்
சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.இராவணன் ஆட்சி
மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.
புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர்.
குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரி கண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது. குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர்.
இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
குமரிக்கண்டம்
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.
எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
சயம்பன்
சயம்பனின் மருமகன் யாளிமுகன்
ஏதி
ஏதியின் மகன் வித்துகேசன்
வித்துகேசனின் மகன் சுகேசன்
சுகேசனின் மகன் மாலியவான்
மாலியவான் தம்பி சுமாலி
குபேரன்
இராவணன் ஆட்சி
அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிய திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.
இராமாயணத்தில் இராவணன்
இராமனுக்கு நேர் எதிராகவும், இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்குக் கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் வடயிந்திய அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.”இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே”
திருநீற்றுப்பதிகம்
இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு
எண்ணத் தகுவது நீறு – தியானிக்க ஏற்றது திருநீறு
பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு
பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு
தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு
தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே
மண்டோதரி (மந்தோதரி)
ராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். இலங்கைக்கு சென்ற அனுமன், முதலில் இவளை பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன்.
மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. சம்சுகிருதத்தில் மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். கணவனின் உயர்வில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள். கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பாக இணைந்து முழுமை பெறுவதுதானே வாழ்வின் இலக்கணம்! கால ஓட்டத்தில், இன்னல்கள் பலவற்றில் சிக்கினாலும், எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று, தனக்கும் தன்னுடைய கணவனுக்கும் பெருமை சேர்த்தவள்.
வால்மீகியின் மண்டோதரி – இறக்கவில்லை.
கம்பன் மண்டோதரி – இறக்கிறாள்; இறந்தும் இறவாமல் வாழ்கிறாள், நம் உள்ளங்களில்!
இராவணன் மருத்துவம் சம்மந்தமாக இருபத்து ஏழு நூல்களை இயற்றியுள்ளான்
- உடற்கூறு நூல்
- மலை வாகடம்
- மாதர் மருத்துவம்
- இராவணன் – 12000
- நாடி, எண்வகை பரிசோதனை நூல்
- இராவணன் வைத்திய சிந்தாமணி
- இராவணன் மருந்துகள் – 12000
- இராவணன் நோய் நிதானம் – 72 000
- இராவணன் – கியாழங்கள் – 7000
- இராவணன் வாலை வாகடம் – 40000
- இராவணன் வர்ம ஆதி நூல்
- வர்ம திறவுகோல் நூல்கள்
- யாழ்பாணம் – மூலிகை அகராதி
- யாழ்பாணன் – பொது அகராதி
- பெரிய மாட்டு வாகடம்
- நச்சு மருத்துவம்
- அகால மரண நூல்
- உடல் தொழில் நூல்
- தத்துவ விளக்க நூல்
- இராவணன் பொது மருத்துவம்
- இராவணன் சுகாதார மருத்துவம்
- இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
- இராவணன் அறுவை மருத்துவம் – 6000
- இராவணன் பொருட்பண்பு நூல்
- பாண்ட புதையல் முறைகள் – 600
- இராவணன் வில்லை வாகடம்
- இராவணன் மெழுகு வாகடம்
இராவணன் காலத்து சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு (November 20th, 2012)
இராவணன் காலத்து. மிகவும் பழைமையான சுரங்கப்பாதை ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்ல வெள்ளவாய வீதியில் 10 ஆம் கட்டை பிரதேசத்தில் சாதின்னாகலகந்த ஊடாக உமா ஓய திட்டத்துக்கான ஆய்வுகள், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இராவணன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இராவணன் ஆற்றின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படும் மேற்படி சுரங்கப்பாதையை இராவணன், ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை தோவபன்சலை வரை செல்லப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கல்மலை ஒன்றை வெடி வைத்து அகற்றிய போது, இந்த சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
11 அடி உயரம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையில், கீழ் நோக்கிச் செல்லப்படிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இருபக்கச் சுவர்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராதன இதிகாசங்களின் படி மன்னர் இராவணன், 7 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவுக்குச் சென்று, சீதையைக் கடத்தி வந்து, இராவணன் ஆற்றுக்கு அருகில் மறைத்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இராவணன் ஆற்றில் உள்ள ஒரு சுவரில் இராவணனின் தோற்றம் கொண்ட உருவம் ஒன்றும் வரையப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சுரங்கப் பாதை அமைந்துள்ள பிரதேசத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இலங்கை தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்
பழையநூல்கள்
இராசமுறை
பரராசசேகரன் உலா
வையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி
கைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்
வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு – மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 – S.Kasishetty
Jaffna Today and Yesterday – 1907 – Duraiyappa Pillai
History of Jaffna – 1912 – Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna – 1926 – Rajanagam
Critiques of Jaffna – 1928 – Njanappiragasar
The Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna – 1978 – Pathmanathan
Early Settlements in Jaffna – Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்
இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?
இராம பக்தர்களே,தயவு செய்து கம்பராமாயணத்தையும்,வால்மீகி இராமாயணத்தையும் ஒரு முறை ஒப்பிட்டு படித்துப் பாருங்கள்.அப்போது தெரியும் கம்பன் என்ன எழுதினான்,வால்மீகி என்ன எழுதினான் என்பதை.இங்கே சொல்வது கற்பனை அல்ல.அதனால் தான் ஆதாரங்களையும் படித்துப் பாருங்கள்.
இராவணன் தங்கை சூர்ப்பனகை பொழுது போக்க செல்கிறாள்.அங்கே இராமனை காணுகிறாள்.அவனை காதலிக்கிறாள்…..இப்படி இராமாயணம் கூறிக் கொண்டு வந்து,
தகாத முறையில் நடக்க முற்பட்டதால் தம்பி இலக்குவன் கொடிய தண்டனை கொடுக்கிறான்,என்று தொடருகிறது இராமாயணம்.
கடவுள் அவதாரம், ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த கொடூர சம்பவத்தை இராவணனுக்கு அவன் தங்கை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட இராவணன் சீதையை சிறை பிடிக்கிறான். அது இராவணனின் தண்டனையே தவிர, இராமனுக்கு உணர்த்துவதற்காகவே தவிர சீதை மேல் காதல் கொண்டல்ல. இவைகள் திரிவு படுத்தப்படுகின்றன.
அனுமன் சீதயை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.
ஆனால் இதை சோ அவ்ர்கள் குறிப்பிடும் போது, இராமன் மதுவல்ல தேனை அருந்தினார் என வக்காலத்து வாங்குகிறார். ஆனால் மாமிசம் பற்றி மறந்து விடுகிறார்.
மது விலக்கை தேன் விலக்கு என்று குறிப்பிடலாமா?
இந்த சமயத்தில் இருக்கு வேதத்தில் மதுவையும் மாமிசத்தையும் பயன்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறதே. தமிழர்களுடன் போர் நடத்தியதையும்,தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி யாகங்கள் நடத்தியதையும் குறிப்பிடுகிறதே, அஸ்வமேத யாகம் சொல்லப்படுகிறதே ஏன் மறைக்கிறார்கள்?
நோக்கம் மூட நம்பிக்கை, சாதி ,இவற்றை தமிழர்களிடம் பரப்பி, அவர்கள் கல்வியை அழிப்பதும்,கல்வி கற்காது தடை செய்வதும் தான்.
வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சுமணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியுமா?
குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம், நீ என்னைப் போலவே இவர்களையும் பாவி என்று கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள்.
வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கம்பன், இதை எல்லாம் மறைத்து விட்டான். ‘சம்பூகன்’ என்ற சூத்திரன் – பார்ப்பனருக்குரிய தவத்தை செய்ததாலேயே – பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ராமன் சம்பூகனைக் கொன்றான்.
இவற்றைச் சொல்ல விரும்பாத கம்பன்,உத்தர காண்டத்தை எழுதாமலேயே விட்டு விட்டான்.
இராமன் ஏகபத்தினி விரதனா?
இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார்.இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
இது அவரின் கருத்தல்ல,மொழிபெயர்ப்பு
கடவுள் இராமன் சொன்னான், பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. இதுவும் வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100 சொல்கிறது.கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார்,வால்மீகி இராமாயணத்தை ஆதாரம் காட்டி Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.ஆறு வயதில் அவளும் நோக்கினாள்,அவனும் நோக்கினாள் இது கம்பன் தந்த
இது தவிர அவர் இன்னொரு சங்கடமான, எண்ணியே பார்க்க முடியாத ஒன்றை குறிப்பிட்டு எழுதுகிறார்.தமிழன் நினைத்தும் பார்க்க முடியாத ஆரிய மனுதர்மம் இப்படி சொல்கிறது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்…”
இது என்ன தெரியுமா? எழுதவே கூசும் இந்த வாக்கியம், எட்டு வயதிற்குள் திருமணம் பெண்ணிற்கு செய்து கொடுக்கா விட்டால்,மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை எடுத்து தந்தை குடிக்க வேண்டும், எண்ணிப் பார்க்க முடிகிறதா?
இது தான் ஆரியர்கள் நமக்கு தந்தது. இவற்றை மறைக்க ஆரியத்திற்கு துணை போய், வால்மீகி இராமாயணத்தை கம்பர் மாற்றி எழுதியது ஏன்?
தமிழர்களிடம் இவை எடுபடாது என்பதால் உண்மைகளை மாற்றி எழுதினார்.
இப்படி தமிழர்களின் வரலாறுகளை மறைத்து,தங்கள் போலிகளை புகுத்தி நம்மை போதையில் வைத்திருக்க முடிவு செய்தது ஆரியம்.
நாம் அதைக் கண்டு கொள்ளாது தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறோம். கடலில் நம் நிலம் இருக்கிறது,20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லி பெருமை பேசிக் கொண்டால் போதுமா? நம் வரலாறுகளை மறைத்து ஏமாற்றுவதை இனம் காண வேண்டாமா? உண்மைகளை தெரிந்து கொண்டு இனியும் ஏமாறாமல் இருக்க வேண்டாமா?
பல வரலாறுகள் வட நாட்டவர்களால்,மத்திய அரசால்,ஆரியர்களால் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு விட்டதற்குக் காரணம், 20 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட தமிழனின் நாகரீகம் தெரிந்து விடுமானால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களின் உண்மைகள் தெரிந்து விடும் என்ற அச்சம் தான். அதனால் தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் கூட, கடலில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர் நாகரீக சிதைவுகளை வெளிக் கொணர மத்திய அரசு முன்வரவில்லை.தொல்பொருள் ஆய்வுகளைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள்,நம் நாட்டு நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய, ஒப்படைக்க அல்லது அவர்கள் சுயாதீனமாக ஆய்வுகள் நடத்த ஏன் அனுமதிக்க மறுக்கிறது? சிந்தியுங்கள்.
சிலரின் கருத்துக்கள் இதோ
என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல- மகாத்மா காந்தி. இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல ஜவஹர்லால் நேரு.
இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்! –இராஜகோபாலாச்சாரியார்.
ஒழிந்திருந்து வாலியை கொன்றது பற்றி,இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால், ராமனின் சமாதானம், வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.
இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம். கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.
வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வேன் றோங்கும்
ஓராளித் தேறும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன? ………..
இது கம்பராமாயணத்தில், இராமன் அனுமனுக்கு சீதையை பற்றி அடையாளம் கூறுகிறான். எந்த ஒரு மனிதனோ வேற்றான் ஒருவனுக்கு தன் மனைவியைப் பற்றி இப்படி வர்னித்து சொல்வானா?
கம்பன் சிறந்த கவி மறுக்கவில்லை.கருணாநிதியும் சிறந்த தமிழ் எழுத்தாளர் தான்…………ஆனால்…….அவரை இன்று ஏற்றுக் கொள்ள தமிழினம் தயங்குகிறதே.
எமன் ஏறும் பரியே முட்ட முட்ட கூரை இல்லா வீடே,
குலராமன் தூதுவனே யாரையடா சொன்னாய்,
என வைகிறாள் ஔவைப்பாட்டி.லஞ்சம் ஊழலுக்காக ஈழத் தமிழர்களை கை விட்டார் கருணாநிதி. பணத்திற்கும்,ஆடம்பரமான வாழ்விற்காகவும் தமிழனை தூக்கி எறிந்தான் கம்பன். இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறியவை தான்.
இதை விட வேணுகோபாலன் மொழி பெயர்த்த தாய்லாந்து இராமாயணம் இன்னும் வேறு மாதிரியாக எழுதப்பட்டுள்ளது.அங்கே அனுமன் திருமணமானவனாக காட்டப்படுகிறது. படித்திருக்கிறீர்களா?
இவை ஒரு சிறு துழிகளே.
ஆதாரம்……
சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணம்,
Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA),
வால்மீகி இராமாயணம்,
கம்ப இராமாயணம்.
https://nakkeran.com/index.php/2019/10/17/ravanan-an-exponent-of-vedhas/

tulpen
கருத்துக்கள பார்வையாளர்கள்
Tell a friend
Love கருத்துக்களம்? Tell a friend!
Topics
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025யாழ் ஆடுகளம்யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025கந்தப்பு · 53 minutes agoஈழப்பிரியன்
- விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!தமிழகச் செய்திகள்விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!goshan_che · 2 hours agoவாலி
- மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்ஊர்ப் புதினம்மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்ஏராளன் · 51 minutes agoஏராளன்
- இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஉலக நடப்புஇனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுகிருபன் · 9 hours agoவிசுகு
- 2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!ஊர்ப் புதினம்2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!தமிழ் சிறி · 9 hours agoஏராளன்
Posts
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025எங்கே கூகிள் சீற்றைக் காணவில்லை?
முதலாவது கேள்விக்கு சகலருக்கும் புள்ளி வழங்கப்படும் போல.
By ஈழப்பிரியன் · - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025போட்டி விதி 1 இல் குறிப்பிட்டு இருக்கிறேன். பார்க்கவில்லையா?சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.
By கந்தப்பு · - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025@கந்தப்பு அண்ணை எத்தனையாம் திகதிக்கு முன் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்ற தகவலையும் போடுங்கோ.
By ஏராளன் · - விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!உண்மையான (முதல்) மனைவியிடம் மன்னிப்புக் கேட்க என்ன வெட்கம்.?
கமோன் கமோன் செண்ட் டமிழன் சீமான் அண்ணா! ஒரு மன்னிபோடு விஜி அண்ணியையும் வீட்ட கூட்டீட்டு வந்திடுங்க!
பேபி அய் டோண்ட் நீட் டொலர் பில்ஸ் டு ஹவ் பfன் டுநைட்By வாலி · - 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்By கந்தப்பு ·
Featured Content
- காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலைகாலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலைகாலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலைPhoto: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தில் கற்பிட்டி தொடங்கி கிழக்குக் கரையோரமான திருகோணமலை வரை உள்ள 14ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம் இராசதானியின் பிரதேச எல்லைகளாக இருந்த பகுதியையே அவர் அவ்வாறு மேற்கோளிட்டார். இந்த மண்ணுக்காகவும், அதனை ஆளும் வல்லமைக்காகவும்தான், இலங்கை அரசுக்கும் பிரிவினைவாத தமிழ் சக்திகளுக்கும் இடையில் இடம்பெற்ற இருபத்தாறு வருடகால ஆயுதப் போராட்டத்தில் எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் போராடி உயிர்துறந்தனர். ஒரு முக்கியம் வாய்ந்த தமிழ் தேசிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் “போருக்குப் பிறகும், எங்களது இறைமையையும் விடுதலையையும் மீளப்பெற நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்” என என்னிடம் கூறினார். இந்நெருக்கடிநிலைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் மேலதிகமாக இன்னுமொரு பிரச்சினை பிறந்திருக்கிறது: எந்த நிலத்தைப் பாதுகாக்க தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, எந்த நிலத்தில் அவர்களது அடையாளம் ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அதே நிலம் ஒரு புதிய, மாறுபட்ட அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.சுவிஸ் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்னிடம் தெரிவித்ததாவது, “இது இனிமேலும் வெறும் காலநிலை மாற்றம் அல்ல. இது ஒரு காலநிலை நெருக்கடி.” பல வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் போல இலங்கையும் காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் அநீதிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு உயர் காபன் உமிழ்வை மேற்கொள்ளாத போதும், உலகளாவிய காபன் இடர் குறியீட்டுப் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி இலங்கையின் அதிகூடிய காலநிலை வெப்பநிலைத் தளங்களாக வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் பகுதிகளாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களே காலநிலை இடர்பாட்டினால் அதிகூடிய பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் மாவட்டங்களாக கருதப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்கள் – நீண்டகால இனப் பாகுபாடு மற்றும் அரச வன்முறைகளுக்குள்ளான மாவட்டங்கள் – இக்காலநிலை இடரை எதிர்கொள்வதற்கான வளங்கள் மற்றும் வழிமுறைகளை அதிகுறைந்த அளவில் கொண்டிருக்கின்றன.பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் நடாத்தப்படும் காலநிலை மற்றும் அறிவியல் ஆய்வு மதிப்பீடுகளுடன் கூடிய கலந்துரையாடல்கள், தமிழ் தாயகத்தின் காலநிலை அவசர நிலையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்நிலைத் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. கடல்நீர்மட்ட உயர்வு, நிலம் உப்பாதல், வெள்ளம், வரட்சி, கரையோர மண்ணரிப்பு, பவள வெழுக்கம், வானிலையின் நிலையற்ற தன்மை மற்றும் தீவிர வெப்பம் போன்றவை ஏற்கனவே விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வண்ணம் உள்ளதோடு அந்நிலத்தின் தன்மை மற்றும் உற்பத்தித் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட தமிழர்களும் அவர்களது தலைமைத்துவங்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் இவ்வச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே அவற்றை கடந்துசெல்லவே தயாராக உள்ளனர்.நீர்வளமும் அதன் ஊடுருவலும் “ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மழை இல்லாதபோது வயல் நிலங்களில் உப்புப் படிமங்கள் உருவாக்கியிருப்பதை காணலாம்” என மன்னார் மாவட்டம் விடத்தல் தீவைச் சேர்ந்த சூழலியலாளரான எடிசன் மேரிநாதன் என்னிடம் குறிப்பிட்டார். நிலம் மற்றும் நிலக்கீழ் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கின்ற, உப்புப் படிவாக்கம், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஏற்கனவே யாழ். குடாநாட்டின் 43 சதவீதமான விவசாய நிலங்களின் நிரந்தரமான கைவிடப்படலுக்கு காரணமாக இருந்ததோடு, அது அப்பகுதி முழுவதுமான பயிர்ப்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 2020 இல் நிலக்கீழ் நீர்வளத்தின் உடனடி பரிபாலானத்தை வலியுறுத்தும்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, குறித்த ஆண்டில் யாழ். குடாநாட்டில் இருந்த கிட்டத்தட்ட 59 சதவீதமான கிணறுகளின் நீர், பயிர்ப் பாசனத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறியிருந்தமை குறித்து கண்டறிந்தது. தொடர் நீர்ப்பற்றாக்குறைக்காக அறியப்பட்ட வட மாகாணத்தில் இதுவொரு எளிய பிரச்சினை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.காலநிலை சமநிலையின்மையின் அறிகுறிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஏராளமான கரையோரக் கிராமங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையில் நீரினுள் நிற்கும் நாய். காலநிலை சமநிலையின்மையின் அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் இன்னும் பொதுவான கலந்துரையாடல் வடிவம் பெறவோ அல்லது தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கின் அரசியல் சிந்தனைகளாக கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. Photo: ஐசாக் நிக்கோஉப்புப் படிவாக்கம் அதிகளவான நீர் பாவனையின் விளைவு என காலநிலை விஞ்ஞானி தரணி கோபாலகிருஷ்ணன் விளக்குகின்றார். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் புதிது புதிதாக கிணறுகளை தோண்டிய வண்ணம் இருக்கிறார்கள். நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான அதிகளவான நீர் பாவனைய, யாழின் நீர்கொள் படுகைகளாகச் செயற்படும் சுண்ணாம்புப் படுகைப் பாறைகளுக்கிடைப்பட்ட கடல் மற்றும் நன்னீர் சமநிலையை பாதிக்கின்றமை கிணறுகளிலுள்ள நீரை உவர்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. ஆனால், காலநிலை சமநிலையின்மையால் விளைந்த கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நிலமட்டத்தைத் தாண்டிய கடல் நீரின் மிகை ஊடுருவல் போன்றவற்றாலும்கூட உப்புப் படிவாக்கம் நிகழ்கின்றது.உவர்நீர் ஊடுருவலின் விளைவாக யாழில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் பாவனையிலிருந்து கைவிடப்பட்டுள்ளன. கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி பல்வேறு இடங்களில் மண்ணின் உப்புப் படிவாக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. மேலும், பூநகரி அல்லது அரியாலையிலுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்குச் சென்று பார்த்தோமானால், அங்குள்ள மண் கடல் மண்ணின் தன்மையில் காட்சியளிப்பதோடு சிலவேளைகளில் அவற்றில் சிப்பிகளையும் கண்டெடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார்.பெரும்பாலான மக்கள் வாழும் கரையோரத்தின் சமதரையான யாழ். குடாநாட்டில் கடல்நீர்மட்ட உயர்வானது மண்ணரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கும் காரணமாக அமையும். மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதமும் பிராந்தியத்தின் விவசாய நிலங்களில் 52 சதவீதமும் 2100ஆம் ஆண்டளவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்ற நிலைமையில், யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கினரை 2050 அளவில் நெல்லுற்பத்தியில் ஏற்படப்போவதாக கணிக்கப்படும் சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சனத்தொகை பெருக்கத்தோடு கூடிய நெல்லுற்பத்தியின் வீழ்ச்சி குடாநாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு வறுமைக்கும் வழிவகுக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக கிழக்கு அரிப்பு பகுதியில் நீரை அண்மித்த இரண்டடுக்கு செங்கல் மாளிகையொன்று தீவிர வெப்பம் மற்றும் கடலரிப்பின் விளைவாக அழிவடைந்த வண்ணம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் ஒரு காலத்தில் இலங்கையின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான பிரடெரிக் நோர்த் அவர்களின் வசிப்பிடமாக இருந்தது. இன்று இது அழிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சில மீட்டர்கள் தூரத்தில் கடலலைகளின் தொடர் மோதலால் அங்குள்ள உருளைவடிவக் கிணறொன்றின் செங்கல் அடுக்குகள் படிப்படியாக வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. 71 வயதான கிராமவாசியான டீ.எம்.க்ரூஸின் கூற்றுப்படி கரையோர மண்ணரிப்பானது கடந்த மூன்று அல்லது நான்கே வருடங்களில் இக்கிணற்றைச் சுற்றியுள்ள மண்ணை உட்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடலிலிருந்து கரைக்கு மீன் கொண்டுவரும் கரையோர மீனவரான எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். தற்போது இக்கிணற்றில் குடிப்பதற்கு முடியாத நிலையில், நீரில் உப்பு கலந்திருப்பதாக அவர் கூறுகிறார். என்ன காரணத்தினால் கடலரிப்பு மற்றும் உப்பேற்றம் போன்றவை நிகழ்கின்றன என்ற எந்தவித அனுமானமும் அவருக்கு இல்லை.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு கடலரிப்பு வீதத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, கரையோர கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் போன்றவற்றின் விளைவுகள் கூட இவ்வாறான கடலரிப்புக்கு காரணமாக அமையலாம். கடலரிப்பின் விளைவால் பெரும்பாலான வடமேல் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புக்கள் படிப்படியாக கடலினால் உள்வாங்கப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக முத்தரிப்புத்துறை மற்றும் சிலாவத்துறைக்கு இடைப்பட்ட பகுதிகளை குறிப்பிடலாம். “மக்கள் நடந்துசெல்கின்ற இடங்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டன” என்கிறார் க்ரூஸ். “எதிர்காலததில் எது என்ன விதத்தில் நடக்கும் என்பது இறைவனுக்கே தெரியும்.” என்றும் க்ரூஸ் கூறுகிறார்.எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். ஆனால், தற்போது இக்கிணற்று நீரில் குடிப்பதற்கு முடியாத நிலையில் உப்பு கலந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் காலநிலையின் உக்கிரம் உப்புப் படிவாக்கம் மற்றும் கடலரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருந்தும் பெர்னாண்டோ போன்றவர்களிடம் இவ்வுலகளாவிய காலநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. Photo: ஐசாக் நிக்கோதமிழ் தாயகத்தை கடல் உள்வாங்கிக்கொள்ளும் எதிர்வுகூறல் தமிழின் புராண வரலாற்றை எதிரொலிக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரிக் கண்டம் – தமிழர்கள் இன்று வாழ்கின்ற நிலங்களுக்கு எந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்களோ அந்தப் புராதன நிலத் துண்டம் – முற்றாகக் கடல் உள்வாங்கிக்கொள்ள முன்பு அந்நிலம் ஒரு பெரும் பிரளயம் அல்லது பிரளயங்களின் தொடர் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது. இத்தொன்ம வரலாறு எமக்கு வருத்தமளிக்கிறது. புத்தளம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்பிட்டியின் தீவுகள் மற்றும் ஏனைய நிலப்பகுதிகள் இன்று கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. யாழ். குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகளை 2100ஆம் ஆண்டளவில் முற்றாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.அண்மைய வெள்ளப்பெருக்குகளை கருத்தில் கொள்ளும்போது கடந்தகால புராணங்களில் கூறப்பட்டுள்ள பிரளயங்கள் வினோதமான தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது. வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்படும் பொருளிழப்பில் பெரும்பகுதியை வெள்ள அனர்த்தங்களே ஏற்படுத்துகிறன. வருடாந்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்ற இத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 338 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கானது மண்சரிவு, தொற்றுநோய்கள் போன்ற இன்னோரன்ன அபாயங்களை அதிகரிக்கச்செய்து உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் உள்ளது.1964ஆம் ஆண்டு வடக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிட்ட இராமேஸ்வரம் சூறாவளிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெள்ள அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக தனது கவனத்தில் இல்லை என கரையோர நகரமான விடத்தல்தீவின் விவசாயக் குடும்பமொன்றின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை சத்தியசேகரன் தெரிவித்தார். ஆனால், 2020 இல் புரெவி புயல் தாக்கியபோது பல இடங்கள் வெள்ளக்காடானதோடு சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். சத்தியசேகரத்தின் வயல் நிலம் முற்றாக நீரில் மூழ்கியதோடு அவரது மூத்த சகோதரர் அவ்வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்வருடத்துக்கான விவசாயத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாகச் சொன்னார். நிலக்கீழ்நீர் உப்பாகியிருக்கலாம் என ஊகித்து அடுத்த வருடமும் அவர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவில்லை.வெள்ள அனர்த்தங்களால் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகரித்துவரும் வெள்ள அனர்த்தங்களின் நிகழ்தகவுகள் மக்கள் மத்தியில் முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை.நிலத்தின் மதிப்பானது அதன் நிலையமைப்பு, அங்குள்ள இயற்கை பேரழிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தள விபரம் போன்ற அளவுகோல்களில் தங்கியுள்ளது என மன்னார் தீவைச் சேர்ந்த சொத்து மதிப்பீட்டாளர் செபஸ்டியன்பிள்ளை சத்யதீபன் அறிந்திருந்தார். இருப்பினும், கட்டுமானத்தை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு நிலத் துண்டில் குறித்த கட்டுமானத்தை அவர் இன்னும் தொடர்கிறார். “வெள்ளம் வடிந்ததும் நிலம் காய்ந்துவிடும்” என்றும் “அது ஒரு பெரும் பிரச்சினையல்ல” என்றும் அவர் சொல்கிறார்.எனினும், குன்சன் மற்றும் எடிசன் மேரிநாதன் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் மன்னாரில் வாழும் மக்கள் தீவிர காலநிலையின் நெருக்கடி நிலை குறித்து போதிய விழிப்புணர்வின்றி அசிரத்தையாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். கனமழையின்போது மன்னார் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் வீதியின் நீர் மட்டத்தை குன்சன் கண்காணித்து வருகிறார். இந்த வீதி விரைவில் நீரில் மூழ்கும் எனவும், அது மன்னாரை அத்தியாவசியப் பொருள் வழங்கலில் இருந்தும் துண்டித்துவிடுவதோடு, மக்களை அங்கிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்கும் ஆளாக்கும் எனவும் எச்சரிக்கை செய்தார்.வெம்மையும் அறுவடையும்காலநிலை மாற்றம் இலங்கையில் வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு மற்றும் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008 – 2018 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரட்சியால் நாட்டில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2014, 2016 -17 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரட்சியில் வெப்ப வலயமான வட மாகாணம் அசாதாரணமான பாதிப்பை எதிர்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரட்சி போன்ற காலநிலை காரணமாக இலங்கையில் பத்து மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி அவதிக்குள்ளாயினர். குறிப்பாக யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட 150,000 பேரில் 85 சதவீதமானோர் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்வீடன் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கையானது வெப்ப வலயங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் சீரான மழைவீழ்ச்சியை பெறும் ஒரு நாடு எனத் தெரிவிக்கிறார். அழுத்தம் மிக்க காலநிலை கொண்ட சூழலில் மோசமான நிலையில் உள்ள நீர் “மேலாண்மை” மற்றும் வளங்களின் வினைத்திறனான பரிபாலனத்தின் தேவை ஆகியன இன்னும் அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார். மேலும், “அதிக நீரை நுகரும்” சோள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டத்தை விமர்சித்தவண்ணம், உள்ளூர் சாகுபடிகள் பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு விதைத்தலுக்கான பயிர்கள் மறுபரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றும், நிலத்தின் தரைத்தோற்றம், தட்பவெப்பநிலை மற்றும் வளங்களின் கிடைப்பனவுகளுக்கு ஏற்புடைய விதத்தில் விவசாயப் பயிர்களை தேர்வுசெய்வது அவசியம் எனவும் அவர் வாதிடுகிறார்.பசுமைப் புரட்சி காலத்தில், அதிக விளைச்சலைத் தரும் நெல் மற்றும் பிற பயிர்களால் பதிலீடு செய்யப்பட முன்னர் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்துவந்த, மிகக் குறைந்தளவு நீரின் கிடைப்பனவிலும் செழிப்பாக வளரக்கூடிய, தீவிர காலநிலையின் தாங்குதிறன் மிக்க பயிரான ‘தினை’யை தனது பாட்டன் காலத்து மக்கள் உண்டு பிழைத்த கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். புராணங்களில் முருகப் பெருமானின் மனைவி வள்ளி, தினை வயல்களுக்கு காவலரணாக இருந்ததை குறிப்பிட்டு, “கதிர்காமம் முருகன் கோவிலில் பிரசாதமாக தினை வழங்கப்படுவது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றும் ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார்.காலநிலை சமநிலையின்மையால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பானது அதிகரித்த வரட்சி மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தெற்காசியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வட பகுதி இதனால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகும் – சில எதிர்வுகூறல்களுக்கமைய இந்நூற்றாண்டின் முடிவில் 35 பாகை செல்சியஸை அண்மித்த சராசரி வெப்பநிலையை இப்பிராந்தியம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் மட்டும் வெப்ப அலைகள் வட மாகாணத்தில் குறைந்தபட்சம் ஏழு பேரையேனும் கொன்றிருக்கும். தீவிர வெப்பநிலை அதிகரிப்பானது முறையான குளிரூட்டல் வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வேலை செய்யும்இ வடக்கிலுள்ள பல்லாயிரக்கணான விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்.உயர் வெப்பநிலையால் விவசாய விளைச்சல்களும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய சாகுபடியான நெற்பயிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கூடியது. வெப்பநிலை அதிகரிப்பால் விளைச்சலில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, குடும்ப மற்றும் தேசிய உணவு கிடைப்பனவை அச்சுறுத்துவதோடு, குறிப்பிடத்தக்களவு வறுமை வீதத்தையும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. மதிப்பீடொன்றின்படி தீவிர காலநிலை மாற்றம் இல்லாத நிலைமையில் ஏற்படக்கூடிய வறுமை வீத அதிகரிப்பை விட இது 12 இலிருந்து 26 சதவீதம் அதிகமாகும். சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்போடு கூடிய விளைச்சல் வீழ்ச்சி ஏற்கனவே நலிவு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வளைபாடு பிரதேசத்தில் யுத்தத்தில் கணவர்களை இழந்த பெண்கள் மேற்கொள்ளும் கடற்பாசி விவசாயத்தில் 2024ஆம் ஆண்டின் வெப்ப அலைகளின் தாக்கத்தால் 80 சதவீதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன.2024 இல் வெப்ப அலைகளாலும் 2022 இல் குளிராலும் கால்நடைகளை இழந்த இலங்கையின் வடக்கைச் சேர்ந்த கால்நடை விவசாயி. காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், விவசாய வாழ்வாதாரங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கணிக்க முடியாத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. Photo: ஐசாக் நிக்கோஅதிக வெப்பநிலையானது உணவூட்டல் மற்றும் வளர்சிதை மாற்ற (உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து வேதிவினைகளின் தொகுப்பாகும்) விகிதங்களை துரிதப்படுத்தும். ஆகையால், இதன்மூலம் ஒரு சில குறிப்பிட்ட பீடைகளின் குடித்தொகை பரம்பலின் பெருக்கம் அதிகரிப்பதினூடு பயிர்ச்சேத வீதமும் அதிகரிக்கும். அதிகரித்த வெப்பத்துடன் கூடிய மழைப்பொழிவு ஆசியாவின் மிகவும் அழிவுகரமான நெல் பூச்சிகளில் ஒன்றான பழுப்பு நிற தத்தியின் திடீர் பரவலுக்கு வழிவகுக்கும். வெப்பநிலை உயர்வு மந்தைகளையும் பாதிக்கும் – கடுமையான வெயில் காலங்களில் வட பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர் மற்றும் அனுமானிக்க முடியாத அழிவுகரமான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களும்கூட இவ்விழப்புக்கள் ஏற்படக் காரணமாக அமையலாம். டிசம்பர் 2022 இல் மாண்டூஸ் சூறாவளியின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகையான குளிரின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன.சிலவேளைகளில் மிதமான காலநிலை இருந்தாலும்கூட அதன் கணிக்கமுடியாத தன்மை மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். “நாங்கள் காற்றை எதிர்பார்க்கும்போது, அது வீசாது. நாங்கள் மழையை எதிர்பார்க்கும்போது, அது பெய்யாது. நாங்கள் முன்பு பெற்ற விளைச்சலை இனிப் பெற இயலாது” என மன்னார் மாவட்டம், இலுப்பைக் கடவையைச் சேர்ந்த விவசாயியொருவரின் மனைவி மகாதேவி குறைகூறினார். இவ்வாறான எதிர்வுகூறமுடியாத தன்மை கூட மீனவர்களைப் பாதிக்கும். “முன்பெல்லாம் எமது மூதாதையர்கள் ஒரு குறித்த நாளில் மழை பெய்யும் என்று சொன்னால், அது நடக்கும். இன்று நிலைமை அப்படியல்ல” என அந்தோனியார்புரம் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கனகசபை குகசிரி கூறினார். இளைஞர்களின் கைகளிலுள்ள திறன்பேசிகள் வாயிலாக குகசிரிக்கு வானிலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும், வானிலை எதிர்வுகூறல்கள் எல்லா வேளைகளிலும் துல்லியமாக இருக்காது என அவர் அறிந்திருக்கிறார். “அவர்கள் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்று சொன்னார்கள், ஆனால் அப்படி இல்லை” என்று சலித்துக்கொண்டார்.இலங்கை, மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எஸ் மிரன்டா, ஓர் சேற்று நண்டோடு. இலங்கையின் நீர்நிலைகளில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சேற்று நண்டுகளின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான காரணங்களை நிர்ணயிக்கும் வகையில் எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. Photo: ஐசாக் நிக்கோநிச்சயமற்ற வானிலையைத் தவிர, காலநிலை சமனிலையின்மை குறித்து மீனவர்கள் வேறெந்த சந்தர்ப்பத்திலும் விசனம் தெரிவிக்கவில்லை. அது கடல்சார் சுற்றுச் சூழலின் அமைப்பில் ஏற்படுத்தவல்ல தாக்கங்களை அவதானித்தல், அளவிடல் அல்லது விளங்கிக்கொள்ளல் எளிதல்ல. மிதமிஞ்சிய மீன்பிடி, அழிவுகரமான செயன்முறைகளான டைனமைட் மீன்பிடி, இழுவை வலை மீன்பிடிப்பு, அடிவலை மீன்பிடி போன்ற செயற்பாடுகளால் உள்நாட்டு நீரினங்களின் பல்வகைமை வீழ்ச்சி போன்ற காலநிலைச் சமநிலையின்மையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிகரான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. யாழ். நகரின் குருநகரில் உள்ள மீனவர்கள் தங்களது நீர்நிலைகளில் முன்பைவிட மீன்களின் அளவும், அதன் பல்வகைமை குறைந்துள்ளதாகவும், ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தமான ஏற்றுமதி பொருளாக இருந்த சிங்க இறால்கள் போன்ற சில மீனினங்கள் அங்கு முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குறிப்பிட்டனர். காலநிலை சமநிலையின்மையால் அதிகரிக்கும் நிகழ்தகவுடைய நீரின் வெப்பநிலை அல்லது அதன் உப்புத்தன்மையால் நீர்வாழ் விலங்குகளின் இனப்பெருக்க இயல்புகள் பாதிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தும், என்னோடு பேசிய சிலர் இம்மாற்றங்களுக்கு மிகை மீன்பிடி மற்றும் அடிவலை மீன்பிடியையே காரணம் காட்டினர். மற்றுமொரு அதிக இலாபம் தரும் ஏற்றுமதி உயிரினமான சேற்று நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாக மன்னார் மாவட்டத்திற்கான மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.மிராண்டா சுட்டிக்காட்டினார். ஆனால், “அதற்கான காரணங்கள் பற்றி அறிந்துகொள்ள போதிய ஆய்வுகள் எம்மிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.காலநிலை சமநிலையின்மையின் பாதிப்புக்கள் பற்றி உய்த்தறிய மீனவர்கள் சிரமப்படுகின்றனர். “ஆனால் அப்பாதிப்புகள் கடுமையானவை” என பவளப்பாறை சூழலியலாளர், இலாப நோக்கற்ற உள்நாட்டு கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இணை நிறுவனர் நிஷான் பெரேரா வலியுறுத்தினார். குறிப்பாக ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது, பவள வெளுப்பு மற்றும் பவள இறப்புக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோரங்களில் முக்கிய பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அதேசமயம், கிழக்குக் கரையோரமானது 2019 இல் ஒரு சிறிய வெளுப்பு நிகழ்வை எதிர்கொண்டது. பவள வெளுப்பு நிகழ்வுகள் முருகைக் கற்பாறைகளில் வாழும் உயிரினங்களை அழிப்பதோடு, சில மீனினங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கீழ்நிலைகளில் அவற்றை உண்ணும் உயிரினங்களையும் இல்லாதொழிக்கும். 2023 இல் ஏற்பட்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் ஆய்வாளர்கள் பவள வெழுப்பை அவதானித்தனர். அத்தோடு, மன்னாரிலும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என அதிகாரசபைகள் அஞ்சின.25 ஆண்டுகளாக அலங்கார மீன்களைப் பிடித்து வரும் முஹம்மது சதாத், பவளப்பாறை வெளுப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை அவதானித்ததாக கூறினார். திருகோணமலையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து ஏற்றுமதிக்காக கடல்வாழ் உயிரினங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு கரையோரமாக மட்டக்களப்பு, கல்பிட்டி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்கு அவர் பயணிப்பவர். பவளவெழுப்பின்போது ஏற்படும் வெளிறலைப்போல முருகைக்கற் பாறைகள் இறந்து வெண்மையாக மாறும்போது தமது நடத்தைகள் மூலம் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை அளவிட்டுக் காட்டும் கருவியாகவும் மீன் இனங்கள் ஆபத்தில் உள்ளமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை வெளிப்படுத்தும் தன்மையுமுள்ளதாகவும் கருதப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சி மீன்களில் சிலவற்றை அவதானித்ததாக சாதாத் விளக்கிக் கூறினார். தான் அவதானித்த பவள இறப்புக்கு 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தொழில்முறை மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைந்த வெப்பநிலை அதிகரிப்பு போன்றவையே காரணம் என சாதாத் கருதுகிறார். நான் சந்தித்தவர்களில் அலங்கார மீன்பிடி வியாபாரத்தில் ஈடுபடும் சதாத் போன்ற வெகு சிலரே மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு வெப்பநிலை மாற்றத்தை காரணமாகக் கூறினர். “ஏனைய மீனவர்கள் பிரச்சினைக்கான புள்ளிகளை உரிய முறையில் இணைப்பதாகத் தோன்றவில்லை” என பெரேரா அவர்கள் தெரிவித்தார்.அலங்கார மீன்களை பிடித்து வாழ்வாதாரம் செய்யும் முகமது சதாத் ஓர் தாமரைக்காத்தான் மீனுடன். இலங்கையில் உள்ள அலங்கார மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறை வெளுப்பதை முதலில் கவனித்துள்ளனர். Photo: ஐசாக் நிக்கோமோசமான தாக்கம்: தயாரற்ற நிலை2022 இல் உச்சம் தொட்ட, இலங்கை எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டின் காலநிலை நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் திறனை குறைத்துள்ளது. ஒப்பீட்டளவில் வடமேல் மாகாணம் வளமானதாகக் காணப்பட்டாலும் காலநிலை அசாதாரண நிலைமையினால் அதிகளவு பாதிப்படையும் பத்து பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் வளம் குன்றிய வட மாகாணத்தில் உள்ளன. பாதிப்படையும் அபாயம் உள்ள முதல் பத்து மாவட்டங்களில் இடம்பெறும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நாட்டின் வறிய மாவட்டங்களுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உட்பட தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகள், 2009 இல் பாரிய அட்டூழியங்கள் மற்றும் சிலரது வாதத்தின்படி இனப்படுகொலையுடன் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதான கடுமையான சண்டை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இருந்தும், போரினால் சோர்வடைந்த தமிழ் மக்கள் இன்றும் தொடர்ச்சியான வன்முறைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர். உள்ளூர் வளங்களின் பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றோடு சுரண்டல், சந்தர்ப்பவாதம், மற்றும் போருக்குப் பின்னான சுற்றுச் சூழலை அழிவுக்குள்ளாக்கும் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் விளைவால் இன்னும் மோசமான நிலையையே எட்டியுள்ளது.போருக்குப் பின் பவளப் பாறைகள், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எளிய படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை சேதப்படுத்தும் வகையில் இந்தியாவின் இயந்திரமயமாக்கப்பட்ட கீழ்-விசைப்படகுகள் வட கரையோரத்தின் கடற்படுக்கையின் அடிவரை தங்கள் வலைகளை இழுத்துவந்தன. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்பரப்பில் கீழ்-விசைப்படகுகள் தடைசெய்யப்பட்டபோதும், இந்த வழக்கங்களும் டைனமைட் மீன்பிடித்தல் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அதேபோல உள்ளூர் நிலப்பரப்பை மீளமுடியாத அளவில் மாற்றியமைக்கும் அச்சுறுத்தல்மிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை தனியார் மண்ணகழ்வு நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொண்டுவருகின்றன. பல்லுயிர் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தின் நிலைபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்ற நிலையில், இந்திய கூட்டு வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் கடந்த ஆண்டு பூநகரி மற்றும் மன்னாரில் பல மில்லியன் டாலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அரசிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அத்திட்டத்தின் விலை நிர்ணயங்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி பகுப்பாய்ந்த அரச செயற்றிட்ட ஆய்வாளர் ரோஹித் பெதியகொட அதனை “நாட்டை வறுமைக்குத் தள்ளும் வீண் மோசடி” என அழைக்கிறார்.“இது அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது” என விடத்தல்தீவு சூழலியலாளர் எடிசன் மேரிநாதன் கூறுகிறார். இயற்கை பற்றி அறிந்துகொள்வதற்காக மேரிநாதன் தனது இளைய மகன்களை அடிக்கடி கண்டல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான சில உறுப்புரைகளை மாற்றியமைத்து அக்காப்பாகத்தின் வளமான சதுப்புநிலங்கள் தனியார் மீன்வளர்ப்பு வணிகங்களால் சுரண்டப்படக்கூடிய வகையில் மீள் வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இக்காப்பகமானது ஒரு முக்கிய கரிமத் தேக்கம் மட்டுமல்லாது, பல்வேறு நீர்வாழ் இனங்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவான கரையோர பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இலங்கை அரசின் இந்த நகர்வானது இலங்கையின் மூன்றாவது முக்கிய கடலோரப் பாதுகாப்பு வலயத்தை அழிவுக்குள்ளாக்கக் கூடியது என்றும் இதுபோன்ற ஏனைய வலயங்களுக்கு அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஈரநிலங்களையும் கரிமத் தேக்கங்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருக்கின்ற வாக்குறுதியை “காலநிலை பாசாங்கு நடவடிக்கை” என இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘பேர்ல் ப்ரொடெக்டர்ஸ்’ (Pearl Protectors) எனும் கடலோர பாதுகாப்பு அமைப்பு விளிக்கின்றது. “ஒட்டுமொத்த சூழலியல் மற்றும் பாதுகாப்புச் சமூகமும் இந்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது. பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கெடுபிடிகளுக்குள் இப்பிரச்சினை இலகுவாக நழுவிப்போய்விடுகிறது” என லங்கா சுற்றாடல் நிதியத்தின் வினோத் மல்வத்தை அவர்கள் கூறினார்.தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிலவும் சவால்களின் உடனடித் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கப்போகும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றைக் கருத்தில் கொள்கையில், மக்கள் மத்தியில் காலநிலை நெருக்கடி நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவென்றே கணிக்கலாம். மீன்பிடிக் குடில்களும், நடைபாதைகளும் ஏற்கனவே கடலால் விழுங்கப்பட்ட நிலையிலும் அந்தோனியார்புர மீனவர்களுக்கு அது பற்றிக் கருத்தில்கொள்வதற்கான அவகாசமோ உணர்வு ரீதியான புரிதலோ இல்லை. “ஓரிரண்டு அடி நிலம் கடலால் அரித்துச் செல்லப்படுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது எடுக்கும். இதுபற்றி எதிர்கால சந்ததியினரே சிந்திக்க வேண்டும்.” என நாளூதியமே ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் குகசிரி கூறினார்.மன்னாரில் உள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன், இலங்கையின் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்க தேவையான வளங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து முறையிட்டார். Photo: ஐசாக் நிக்கோஊடகவியலாளர்கள்கூட அடிப்படை அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வினைத்திறன்மிக்க வேறெந்த செயற்பாடுகளையும் செய்யத் தலைப்படுவதில்லை. மூன்று தமிழ் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்ற நீர் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றில் 80 சதவீதமான நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை வழங்குகின்றனவே தவிர நிகழ்ச்சி நிரல் அமைத்தல், கலந்துரையாடல்களை உருவாக்குதல் அல்லது சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற விடயங்களை தங்கள் ஊடக செயற்பாட்டில் உள்ளடக்குவதில்லை. போதியளவு ஆய்வுகளின்மை இப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றது. “பல்கலைக்கழக ஆய்வுத் தேவைக்காக மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 25 ஆண்டுகள் வரையான கால நீட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் வெறும் ஆறு மாதகால குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன் குறிப்பிட்டார்.“நிலைபேறான ஏற்பாடுகளுக்கு நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் உள்ளீடு அவசியம்” என்ற கருத்தை பவளப்பாறை சூழலியல் வல்லுனர் நிஷான் பெரேரா முன்வைத்தார். மீன்களின் இடம்பெயர்வு மாற்றங்கள், முட்டையிடும் இயல்பின் தளம்பல்கள் போன்ற காலநிலை மாற்றத்தின் படிப்படியான தாக்கங்களை கண்காணிப்பதற்கு வெறும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் குறுகிய கால திட்ட அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக நீண்டகால தொடர்-நேர தரவுகள் நமக்குத் தேவை. ஆனால் அவசியமான தரவு சேகரிப்பு வளங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் அவ்வாறான ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டுள்ளன.“மழை அளவீட்டுக் கருவிகள் போன்ற உபகரணங்கள் ஓரிரண்டு நகரங்களிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவை எல்லா பகுதிகளிலும் இல்லை” எனவும் உதயன் குறிப்பிட்டார். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் “போதுமான வளங்கள் இல்லாத நிலையில் பெரிய பகுதிகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சில சிற்றலுவலகங்களில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது. மீன்வளத் துறையைச் சேர்ந்த மீன்வள ஆய்வாளர்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருக்கலாம் அல்லது அவர்களிடம் எரிபொருளுக்கான போதிய நிதிவசதிகூட இல்லாமலிருக்கலாம். ஆதலால், அவர்களுடைய கடமையை ஏற்புடைய விதத்தில் நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சிரமம் உண்மையிலேயே ஒரு சவாலான விடயம்தான் என்கிறார் பெரேரா.இத்தரவுப் பற்றாக்குறை, நிறுவனங்களின் திறன்குறைபாடு, ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான பின்னூட்ட வழிமுறைகள் ஆகிய பல்வேறு காரணிகளால் ஒன்றுசேர்ந்தது. உதயனின் குறிப்புப்படி இலங்கை முழுவதுமுள்ள வானிலை ஆய்வு மற்றும் விவசாய திணைக்களங்களுக்கிடையில் ஓர் சிறிய ஒருங்கிணைவு உள்ளது. பெரும்பாலும் நிர்வாக மொழியாக சிங்களத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கும் இடையிலிருக்கின்ற தொடர்பாடல் தடைகள் மற்றும் மோதல் வரலாறுகள் போன்றவை தரவுகளின் பரிமாற்றத்துக்கு இடையூறாக இருக்கின்றது. காலநிலை சமநிலையின்மையைத் தணிக்கும் முயற்சிகளுக்காக மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மத்திய அரசின் நடவடிக்கைகளால் குழப்பப்பட்டிருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றங்கள் குறித்து சிரத்தைக்கொள்ளவேண்டிய மாவட்ட நிலை அதிகாரிகள், மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவற்றுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான தொடர்பாடல்களில் நலிவான கீழிருந்து மேலான பின்னூட்ட வழிமுறைகளில் தங்கியுள்ளனர். அதேவேளை, “உயர் மட்டங்களில் காலந்துரையாடப்படுகின்ற விடயங்கள், உயர் மட்டங்களில் அவ்வாறான கலந்துரையாடல்கள் நிகழுமிடத்து, அவற்றில் சீர்தூக்கப்படும் அம்சங்கள் நிச்சயமாக அடிமட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு அதே முறையில் தொடர்பாடப்படுவதில்லை” என்று ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிடுகிறார்.இலங்கையில் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் வெற்றிடங்களும் வளங்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்துகின்றன. நாங்கள் உலகின் முக்கியமான 36 பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், இங்கே உலக வனவிலங்கு நிதியம் (WWF) இல்லை. கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Conservation International) இல்லை. நேச்சர் கணசர்வென்ஸி (Nature Conservancy) இல்லை என்கிறார் மல்வத்தை. “இங்கே ஓர் கருந்துளை இருப்பதுபோல இருக்கிறது.” போர், இலங்கையில் சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், சர்வதேசத்தின் இலங்கை மீதான கவனத்தில் அரசுக்குள்ள நீண்டநாள் வெறுப்புணர்வு போன்றவற்றையே கருந்துளை என மல்வத்தை அவர்கள் விபரிக்கிறார்.இயற்கையும் தேசமும்“என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் தம்முடைய நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு” என யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான மகேந்திரன் திருவரங்கம் கூறுகிறார். தமிழ் கவி புதுவை ரத்னதுரை அவர்களின் புகழ்பெற்ற தேசியவாத கவிதையான ‘மண்’ஐ அவர் மேற்கோளிடுகிறார்.மண்நிலமிழந்து போனால்,பலமிழந்து போகும்.பலமிழந்து போனால்,இனம் அழிந்து போகும்.ஆதலால் மானுடனே!தாய்நிலத்தைக் காதலிக்கக்கற்றுக் கொள்!கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு “தமிழீழ தாயகமே புலிகளின் வேட்கை” போன்ற விடுதலைப் புலிகளின் பிரபல கோஷங்களினூடாகவும் “இந்த நிலம் எங்கள் நிலம்’ மற்றும் வடகிழக்கின் மரங்கள், பூக்கள், மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள் மற்றும் பனை மரங்கள் அணிவகுத்த கடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘பசுமை வெளிகள்’ போன்ற தேசியவாத பாடல்கள் போன்றவற்றால் பகிரங்கமாக கொண்டாடப்பட்டது.“எங்கள் தாயகமானது எங்கள் உயிர், எங்கள் உதிரம், எங்கள் உடலுடன் ஒன்றியது” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் என்னிடம் கூறினார். ஆனால், தமிழர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையில் இவ்வாறான பிணைப்பு இருந்தபோதிலும், காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய இடத்தைப் பெறவில்லை.“நாங்கள் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் நிறைய மரங்கள் நட வேண்டும். சூழல் மாசை குறைக்க நாங்கள் வழிமுறைகளை கண்டடைய வேண்டும் போன்ற சொற்றொடர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் மக்கள் ஈடுபடுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் திருவரங்கன். வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு போன்றவை குறித்து அவரது கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருந்தாலும், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் குறித்து அவரால் நினைவுகூர முடியவில்லை என இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் நிலத்தை மையப்படுத்தியதாகவும் விவசாயமும் மீன்பிடியும் அத்தேர்தல் தொகுதியின் மிக முக்கியமான தொழில்துறைகளாகவும் இருக்கின்ற வேளையில், சமீபமான எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் குறித்த விடயங்கள் தமிழ் தேசியத்தின் மேலாதிக்க சிந்தனைகளில் எந்தவித செல்வாக்கும் செலுத்தப்போவதாக தான் காணவில்லை எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டார்.தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பி.ஐங்கரநேசன் பேசுகையில், இலங்கையில் சுற்றுச்சூழல் தமிழ் தேசியவாதத்தின் முக்கியமான பகுதி எனவும் அது தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். Photo: ஐசாக் நிக்கோஇலங்கையின் முதல் பசுமைக் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரின் பார்வை வேறாக இருந்தது. தமிழ் தேசியவாதத்தில் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் எப்போதும் பொதிந்துள்ளன என்று தான் நம்புவதாக பீ. ஐங்கரநேசன் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஓர் சுற்றுச் சூழல் அலகு இருந்ததாகவும், அதன் தலைவர் பிரபாகரன் இயற்கையை தன் நண்பன் என மேற்கோளிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “மொழி, கலாசாரம், சுற்றுச் சூழல் – தமிழ் தேசியம் இம்மூன்றாலும் ஒருசேரக் கட்டமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் கோதுமையை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும்வேளை தமிழர்கள் அரிசியையே தங்கள் பிரதான உணவாகப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அது எமது காலநிலையில் இயல்பாகவே வளரக்கூடியது” என்கிறார் ஐங்கரநேசன். உணவைப்போலவே மொழியும் சூழலின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சங்க கால தமிழ் இலக்கியம் ஐந்து வெவ்வேறு திணைகளை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது – குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)இ பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்)இ மற்றும் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்). ஒவ்வொரு திணையும் தனித்துவமான தரைத்தோற்றத்தையும் புணர்தல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஐங்கரநேசனைப் பொறுத்தவரை, தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டில் சுற்றுச்சூழல் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதற்கு இவ்வாறான குறியீடுகள் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.ஆனால், யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் உடற்கூற்றியல் முதுகலை பட்டம் பெற்ற ஐங்கரநேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் அரசியலில் மிக அரிதானவர்கள். தற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்ற பசுமைக் கட்சிகளை தான் இனங்கண்டுகொண்டாலும், தனது வாக்காளர்கள் மத்தியில் பசுமை அரசியல் பிரசித்தம் பெறவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் ஒப்புக்கொள்கிறார். ஏனையவர்கள் மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீஸ்கந்தராஜாவின் கூற்றின் பிரகாரம், அரசியல் மட்டத்தில் காலநிலை நெருக்கடி என்று வரும்போது, “அவர்கள் அது தொடர்பாக ஆனந்தமான அறியாமையில் இருக்கிறார்கள்.”“எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரைகாலமும் இப்பிரச்சினை பற்றி இங்கு வந்து பேசிய வரலாறு இல்லை” என இலுப்பைக்கடவை விவசாயி ஒருவரின் மனைவியான மகாதேவி கூறினார். உயரடுக்கு மக்களின் குடியகல்வின் பின்னர் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றத்தின் பிறகும், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் உயர்மட்ட தொழில்சார் வர்க்கங்கள் ஆகியவை ஆதிக்க-சாதி சமூகத்தினரால் நிறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் வட மாகாணத்தில் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன்சுமை ஆகியவற்றை தமிழ் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என அவர் மேற்கோளிடுகிறார். “புத்திஜீவிகளும் கல்வியியலாளர்களும் கூட மீனவர்களினதும் விவசாயிகளினதும் இடர்களை நிவர்த்தி செய்ய மிகக் குறைந்தளவு பங்களிப்புக்களையே வழங்கியுள்ளனர்” என்கிறார் அவர்.இலங்கையின் வடக்கு கரையோரத்தில் உள்ள இலுப்பைகடவையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி மகாதேவி, வெப்ப அலைகள் மற்றும் கொந்தளிப்பான வானிலை குறித்து புகார் கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களை தான் கேட்டதில்லை என்றும் கூறினார். Photo: ஐசாக் நிக்கோகட்டமைக்கப்பட்ட இனவாதம், வன்முறை மற்றும் நீதிவழங்கலில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தமிழர் நிலையை பறைசாற்றும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மாகாண ஆளுகைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தம் போன்ற நீண்டகால தமிழ் அரசியல் கோரிக்கைகள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாமலே இருக்கின்றன. “மன்னாரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருக்கோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில எமது நிலங்கள் தினமும் பறிக்கப்பட்டுவருகின்றன” என அரசியலின் தற்போதைய உடனடி சவால்களைப் பற்றி விவரிக்கும்போது ஸ்ரீதரன் கூறினார். இந்தப் பின்னணியில் வளம் குறைந்த மற்றும் நிறுவன ரீதியில் வலுவிழந்த தமிழ்த் தலைமைகளுக்கு பருவநிலை மாற்றத்தில் ஒரு புதிய, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத மற்றும் அருவமான ஓர் ‘எதிரியை’ எதிர்த்துப் போராடுவதற்காக, தமது அரசியல் மூலதனத்தைச் செலவிடுவது கடினமாக இருக்கலாம்.ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் கூட்டாளிகளாக கருதப்பட்ட மேற்கத்தேய, முன்னேறிய, தொழில்மயமான நாடுகளின் நடவடிக்கைகளாலேயே எப்படி காலநிலை நெருக்கடியின் பின்னணியில் உள்ள இடப்பெயர்வு, வன்முறை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவை தூண்டப்பட்டது என்பது மற்றொரு சிக்கல். பாதை சார்ந்திருத்தலும் பாரம்பரிய அரசியல் கூட்டாளிகளை எதிரிகளாக மறுகற்பனை செய்வதில் உள்ள சிரமமும்கூட தமிழ் பொது உரையாடல்களில் காலநிலை நெருக்கடி தொடர்பான விடயங்கள் வெளித்தெரியாமை பற்றிய விளக்கத்தை வழங்கலாம்.பாரம்பரிய அரசியலில் ஒரு சிறு அளவு புத்தாக்கத்தை உட்புகுத்துவதன் வாயிலாக புதிய நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை அவற்றில் உள்ளடக்கத்தகுந்த அவகாசங்களை உருவாக்கலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள், அரசிறை வரும்படியின் மையப்படுத்தல் ஆகியவை தமிழ் பேசும் மக்கள் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் செயன்முறைக்கு தடையாக இருக்கும். அத்தோடு, தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கான மேம்பட்ட சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி ஆகிய வழிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தமிழர்களின் வரலாற்றுக் கோரிக்கைகளோடு இணங்கிப்போகும்.விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான நிலைபேறான கொள்கை வகுத்தல்களுக்கான முன்மொழிவு மற்றும் செயல்படுத்தல்களை மேற்கொள்ள, உள்ளூர் நிலப்பரப்பு, காலநிலை, வளங்கள் கிடைக்கும் தன்மை, உணவுக் கலாச்சாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் போன்ற அப்பிராந்தியம் பற்றிய பரிச்சியமும் அது தொடர்பான நெருக்கமான புரிதலும் இருப்பது அவசியம் என பருவநிலை விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். மேலும், தாம் வாழும் பிராந்தியம் பற்றிய பரிச்சியமே வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஆள்வதற்கும் தமிழர்களை பொருத்தமானவர்களாக ஆக்கும் என ஐங்கரநேசன் வலியுறுத்துகிறார். “நீங்கள் தென்பகுதியில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் தலகொயா (Asian water monitor) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த விலங்கு இங்கு எங்களிடம் இல்லை. தென் பகுதியில் கித்துள் மரங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு பனை மரங்கள்தான் பரிச்சியமானவை. அவர்களிடம் சிங்கராஜ வனம் உள்ளது. ஆனால் எங்களிடம் வரண்ட காடுகளே உள்ளன.”இலங்கையில் பிரபலமான தமிழ் அரசியலில் பசுமை அரசியல் ஒரு பகுதி அல்ல என்பதை தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஒப்புக்கொண்டார். ஆனால் “எதுவும் தொடக்கத்தில் சிறியது” என்று அவர் கூறினார்.இறுதியாக அது நிலத்துடனான தமிழின் தொடர்பாகும் – தமிழ்க் கவிதை, பாடல், அரசியல் சொல்லாட்சி, எழுத்து மற்றும் கலை ஆகியவை அத்தொடர்புக்கு ஆதாரமாக விளங்குகிறது – தமிழர்கள் தங்கள் பருவநிலைமாற்றம் குறித்த இசைவாக்க முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் வெற்றிபெறுவதற்கான ஒரு பெரும் ஊக்கத்தை அது வழங்கும். உண்மையில் தமிழர் அடையாளம் அவர்களது மண்ணில் வேரூன்றியிருந்தால், அதுபோலவே முக்கியமாக தமிழரின் நிலத்துடனான உறவாக தமிழ் தேசியம் இருந்தால், அந்நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளை காலநிலை அவசரநிலை குறித்து அதிகம் குரல்கொடுப்பதற்குத் தூண்டவேண்டும்.தமிழ் தேசியவாதிகளோ அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிநிலையின் முக்கிய பங்குதாரர்களான தமிழால் அறியப்படும் சமூகத்தினர் மட்டுமல்ல – தமிழர் தாயகமாக அறியப்பட்ட பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்துவருகின்ற இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்களும்கூட அதில் அடக்கம் என திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் தேசியவாதத்தின் சில புறக்கணிப்புப் போக்குகளை விவரிக்கும்போது, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலை ஏனைய சமூகங்களைப் புறந்தள்ளி குறித்த ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை முன்நிறுத்திய கதையாடலின் பகுதியாக ஆக்கப்படுவதை தவிர்ப்பது மிக அவசியம் எனவும் வகுப்பு, சாதி, இனம் மற்றும் யுத்தம் போன்றவற்றின் வழியில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார்.காலப்போக்கில், காலநிலை நெருக்கடிநிலையைப் புறக்கணிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுக்களின் வீச்சு இன்னும் பிரதான அரசியல் உரையாடல்களில் உள்வாங்கிக்கொள்ளப்படாவிடினும், கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. தமிழ் தாயகத்தில் பசுமை அரசியலின் வளர்ச்சி பற்றி மேற்கோளிட்டு பேசும்போது, “தொடக்கத்தில் எதுவுமே சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சிந்தனை தோன்றும். காலப்போக்கில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஸ்ரீதரன் நம்பிக்கையூட்டினார்.அமித்தா அருட்பிரகாசம்இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர்.இக்கட்டுரைக்கான அனுசரணை புலிட்சர் மைய மானியத்தால் வழங்கப்பட்டதோடு இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. தமிழாக்கம்: ருக்ஷானா ஷரிபுதீன்.https://maatram.org/articles/12249
- 3 replies
- செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலையில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையிலான இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பகுதியில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது படுகொலை செய்யப்பட்ட மூன்று சகோதரிகளின் தாயொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/162336
- 5 replies
- எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!Vhg ஆகஸ்ட் 13, 2025(-பசீர் காக்கா -)”ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது.” இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன்.பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள்.அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள்.பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர்.1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்.சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம்.1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது.2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு.மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார்.இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம்தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டதுசிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார்.இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர்.மட்டக்களப்பு – அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் .பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு.https://www.battinatham.com/2025/08/blog-post_76.html
- 0 replies
- வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!கிருஷ்ணகுமார்ஆகஸ்ட் 13, 2025வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன். 1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம்.வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது. அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம். குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார். இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது.1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது.அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர். வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர்.முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும். இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும். அச்சம் நிறைந்த சூழலே காணப்படும். எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும். இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர். அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது.குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது. வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள்.இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது. அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும். வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள். இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும். வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். தொடரும்………………….https://www.battinatham.com/2025/08/blog-post_167.html
- 1 reply
- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் – தி. செல்வமனோகரன்ஈழத்து நாட்டார் தெய்வங்கள் – தி. செல்வமனோகரன்பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின. மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள் அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன். வல்லியக்கன் இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது. ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர். வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. “கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர் நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம் மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு வல்வினைநோய் தொலைந்து போகும்” இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள் வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும். பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார். இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின் படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர். இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது. சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது. நிறைவுரை பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும். தொடரும். ஒலிவடிவில் கேட்க 14352 பார்வைகள் About the Author யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். ‘சொற்களால் அமையுலகு’ என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும். https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/
- 16 replies
Leave a Reply
You must be logged in to post a comment.