எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள் – 1
2.75 பில்லியன் டொலர் E-விசா ஊழல்; GBS, IVS மற்றும் VFS ற்கு முறைகேடாக வழங்கப்பட்ட சலுகை |
2024 ஏப்ரலில், ரணில் அரசாங்கம் புதிய ஒரு விசா முறையைத் தேர்ந்தெடுத்தது. இதற்கு GBS, IVS மற்றும் VFS ற்கு என்கின்ற தனியார் நிறுவனங்களுக்கு, நாட்டிற்கு 2.75 பில்லியன் டொலர் வரையிலான இழப்பு ஏற்ப்படும் விதமாக, இந்த ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இலங்கையின் விசா கட்டணம் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்தது. இது முக்கிய அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நாட்டின் சுற்றுலாத் துறையில் மீது, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய விசா முறைமை மாற்றப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்தது, அதன் பிறகு எண்ணிக்கை குறைந்தது, இதை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது.
ஆகஸ்ட் 2024 வரை 13 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இதன் மூலம் $2 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. விசா கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்றவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
சுமந்திரனின் நடவடிக்கை:
ரணிலின் இந்த விசா ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்றும், 16 வருட காலப்பகுதியில் $2.75 பில்லியன் வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆகஸ்ட் 02 அன்று, உச்ச நீதிமன்றம் சுமந்திரனின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய E-விசா முறைமைக்கு ஒரு இடைக்காலத்தடை உத்தரவை வழங்கியது.
செப்டெம்பர் 13ல், இலத்திரனியல் விசா விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்டெம்பர் 15ல், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி e-விசா முறை இடைநிறுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு எதிராக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அவசரமாக வெளிநாட்டிற்கு பறந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல், செப்டெம்பர் 22ல் நாடு திரும்புவதாக மன்றிற்கு அறிவித்திருந்தார். ரணில் புதிய ஜனாதிபதி ஆனதும் விடயங்களை வேறு முறையில் கையாளுவதே இவர்களின் திட்டத்தின் சூட்சமமாகும்.
விளைவு:
செப்டெம்பர் 25ல், இலத்திரனியல் விசா நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய உயர்நீதிமன்றத்தால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு தினைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரி, பழைய விசா முறைமைக்கு மாற்றுவதற்கான இடைக்காலத்தடை உத்தரவை நடைமுறைப்படுத்தினார்.
இவ்வழக்கு வருகின்ற வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
பயன்:
சுமந்திரனின் இந்த சட்டநடவடிக்கையை தொடர்ந்து செப்டெம்பர் 25 இரவு, பழைய விசா முறைமை மீளக் கொண்டுவரப்பட்டது. 26ஆம் திகதி புதிய ஜனாதிபதி தனது X (டுவீட்டர்) பக்கம் மூலம் இதை நாட்டுமக்களுக்கு அறிவித்தார்.
ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன் இருந்த அளவுகோலின்படி, ஒன்-அரைவல் விசாக்களை வழங்குவதற்கான மின்னணு பயண அங்கீகாரம் (ETA) செயல்முறையை குடிவரவு அதிகாரிகள் இப்போது மீட்டெடுத்துள்ளனர், அதைக் கையாண்ட தனியார் கூட்டமைப்பு IVS-GBS மற்றும் VFS Global ஆகியவற்றைத் தவிர்த்துள்ளனர்.

வயங்கல் – M A Sumanthiran
This artical posted in vayankal.com & shared in FB by Admin #Truthaboutsumanthiran
Mathiaparanan Abraham Sumanthiran
onptSresodh 5ta4ictY1Aelsytdte34:16c30 M8cg u43latrf51a8t045 ·
————————————————————————————————————-
எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள் – 2
தனியார் நிலங்களை ‘புனிதப் பகுதிகள்’ என பிரகடனப்படுத்தும் சட்டமூலம்
நவம்பர் 2011ல் இலங்கை அரசு, தனியார் காணி மீதான கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் மற்றுமொரு முயற்சியாக, மாநகர மற்றும் நகரப் பகுதிகளுக்குள் பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல் மற்றும் மத நோக்கங்களுக்காக காணிகளை சுவீகரிப்பதற்கான நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளைச் சட்டத்தில் புதிய சீர்திருத்தம் என்ற தோரனையில் முயற்சி ஒன்றை எடுத்திருந்தது.
(தனியார்) நிலங்களை சட்டரீதியான எந்த வழிகாட்டுதல்களும் இல்லாமல் ‘புனிதப் பகுதிகள்’ என பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை புத்தசாசன அமைச்சருக்கு வழங்குவதற்கே இந்த சட்டமூல ஏற்பாடு ஆகும்.
சுமந்திரனின் நடவடிக்கை:
இந்த நகர மற்றும் நாடு திட்டமிடல் கட்டளை (2011) திருத்த மசோதாவை சவால் செய்ய உச்ச நீதிமன்றில் சுமந்திரன் ஆஜராகி, அரசியலமைப்பின் பிரிவு 154 (G) (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு முரணாக இந்த மசோதா உள்ளதால், இது சட்டமாக முடியாது என்று வாதிட்டர்.
அதாவது நிலம் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள் என்றும், எனவே, நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளின் (13ம் திருத்ததில் உள்ளபடி) கருத்தை அல்லது முடிவை பெற்றுக்கொள்ளாமல் இம் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்றும் வாதிட்டார்.
விளைவு:
உச்ச நீதிமன்றம் இந்த மசோதா அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்மானித்தது.
பயன்:
அரசாங்கம் மசோதாவை திரும்பப் பெற்றது. மேற்கூறிய மசோதா, நிறைவேற்றப்பட்டிருந்தால், நாட்டில் உள்ள எந்தவொரு தனியார் சொத்துக்கள் மீது புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருக்கு பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

This artical posted in vayankal.com & shared in FB by Admin #Truthaboutsumanthiran
எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள் – 3
மாவை சேனாதிராஜா எதிர். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (SC FR 646/2003)
அரசாங்கம் தமிழ்மக்களின் தனியார் காணிகளை பெருமளவில் உள்ளடக்கியதான உயர் பாதுகாப்பு மண்டலம பிரகடனங்களை செய்வதன் மூலம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவது யாவரும் அறிந்ததே.
இவற்றை அவ்வப்போது தொடர்ச்சியாக சாவாலிற்கு உட்படுத்திவருவது மட்டுமன்றி, இடைக்கால தடையுத்தரவை பெறுவதன் மூலம், இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் நிலப்பரப்பை பாதுகாப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையை இலவசமாக செய்து வருகின்றார்.
சுமந்திரனின் நடவடிக்கை:
2003 இல் அப்போதைய ஜனாதிபதி, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கு எதிராக மாவை சேனாதிராஜா சார்பில் உச்ச நீதிமன்றில் சுமந்திரன் பேசிய வழக்கு இது. இவர் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு 12 வருடங்களுக்கு முன்னராகவே இலவசமாக செய்த வழக்கு அது. (SC FR 646/2003) உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு.
விளைவு:
இதன் பலனாக மக்களை மீளக்குடியமர்த்த அனுமதித்து உச்ச நீதிமன்றம் 2007 ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து நடந்த செயல்பாட்டின் போது, கிட்டத்தட்ட 50,000 பேருக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2012ல் நில உரிமையாளர்களால், வலிகாமத்தில் தங்கள் நிலங்களை பயன்படுத்துவதை தடுத்த வழக்கில் மக்களுக்காக ஆஜரானார் SCFR 609/2012. இன்றும் சுமார் 2,176 மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட சில வழக்குகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2003ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு மண்டலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 6.138 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து 2013ஆம் ஆண்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை மக்களுக்காக இலவசமாக தொடர்ந்து வாதாடிவருவது சுமந்திரன் மட்டுமே.

Leave a Reply
You must be logged in to post a comment.