·

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 252-3286 என்ற இலக்க வெள்ளைவான் ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது

அதே போன்று மட்டக்களப்பில் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 58-6974 இலக்க வெள்ளைவான் ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது

அம்பாறையில் பொது மக்களை கடத்த பயன்படுத்திய இலக்க தகடற்ற வெள்ளை வான் ஒன்றை திரு உவிந்து குருகுலசூரிய என்கிற பத்திரிகையாளர் படங்களுடன் அடையாளம் காட்டி இருந்தார்

கொழும்பில் கடத்தப்பட்ட 56-5536 இலக்க வாகனம் Navy 2016 என்கிற அடையாளங்களுடன் திருகோணமலையில் கடத்தல்களுக்கு கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டமை அடையாளம் காணப்பட்டிருந்தது

அதே போல மேஜர் பிரபாத் புலத்வத்தே, கேணல் சாமி குணரத்தின உட்பட்ட இராணுவ அதிகாரிகள் தலைமையில் கோத்தபாயா ராஜபக்சே இயக்கிய Triploli Platoon என்கின்ற புலனாய்வு படையணி பலவந்த கடத்தல்களுக்கு தலைமை தாக்கியதும் அடையாளம் காணப்பட்டிருந்தது

விசேடமாக யாழ்ப்பாணத்தில் Triploli Platoon க்கு ஈபிடிபி ஒட்டுக்குழுவின் சாவகச்சேரி பொறுப்பாளர் சார்லஸ் என்பவன் Operation Lead ஆக இருந்ததும் அடையாளம் காணப்பட்டிருந்தது

குறிப்பாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண, மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஆகியோர் டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான் உட்பட்ட தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களை ஒருங்கிணைத்து கடத்தல்களில் ஈடுபட்டமையும் அடையாளம் காணப்பட்டிருந்தது

அதே போல அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அட்மிரல் வசந்த கரன்னகொட உட்பட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஈடுபாட்டுடன் இலங்கை கடற்படை வடக்கு கிழக்கில் மட்டுமின்றி கொழும்பு உட்பட தெற்கிலும் பணத்திற்காக கடத்தல் வலையமைப்பை நடத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளது

கோட்டாபய ராஜபக்சே காலத்திற்கு முன்னரான செம்மணி புதைகுழி விவகாரத்தில் IJPT மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர, பிரிகேடியர் லலித் ஹேவா, மேஜர் ஜெனரல் சசிக பெரேரா, பிரிகேடியர் சச்சிந்திர விஜேசிரிவர்தன உட்பட 7 அதிகாரிகளை அடையாளம் காட்டியுள்ளது

நாவற்குழி பகுதியில் 24 தமிழ் இளைஞர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் உதவியாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்

இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட பலர் படகுகள் மூலம் திருகோணமலை Gun Site வதை முகாம் கொண்டு செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டு இருக்கின்றார்கள்

அதே போல கிழக்கில் கபரண இராணுவ முகாம், இருதயபுரம் இராணுவ முகாம் , தீவு சேனை ஒட்டுக்குழு முகாம் என பல பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்

மிக விசேடமாக இறுதி யுத்த களத்தில் சரணடைந்தவர்களை காணாமலாக்கிய சம்பவங்களின் சூத்திரதாரிகளாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் , ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை தளங்களில் பலவேறு பாதிக்கப்பட்ட மக்கள் தெளிவான ஆதாரங்களுடன் மேற்படி தகவல்களை முன்வைத்து இருக்கின்றார்கள்

இவை தற்செயலாக நடைபெற்ற குற்றங்கள் (isolated incodents/ crimes) அல்ல.

இராணுவமும் ஆட்சியாளர்களும் நிகழ்திய குற்றங்கள் முறைசார் குற்றகள் (systemic crimes) ஆகும்

ஆனால் ஜேவிபி ஆட்சியாளர்கள் தரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என்கின்ற எந்த அரசியல் விருப்பும் (Political Will) இல்லை

மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நீர்த்து போக முயற்சிக்கின்றார்கள்

செம்மணி பு*தைகுழி விவகாரத்தில் பிரதான சாட்சியான சோமரத்ன ராஜபக்சே அனுர குமார திஸநாயக்கவிற்கு கடிதம் எழுதி ஒரு வருடம் கடந்து விட்டது

நாவற்குழி கடத்தல் விவகாரத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான கட்டளைக்கு திகதியிட்டு ஒரு வருடம் கடந்து விட்டது

கிழக்கு பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கில் பிள்ளையான் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட பேராசிரியர் 300 KM க்கு அப்பால் பொலனறுவை தீவுசேனையில் படுகொ*லையி செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் பிள்ளையானுக்கு உதவிய இராணுவ அதிகாரிகள் , புலனாய்வாளர்கள் ஏன் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை என்கின்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை

அதாவது சட்டம் எல்லோருக்கும் சமம் என பேசும் ஜேவிபி ஆட்சியாளர்கள் அதற்கு மாறாக இந்த சம்பவங்களின் சூத்திரதாரிகளான இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கின்றார்கள்

அதாவது சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது குறைந்த பட்ச விசாரணைக்கு உத்தரவு வழங்க கூட ஜேவிபி தயாரில்லை #

சூத்திரதாரிகளை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வராமல் பாதிக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என கண்டறிய முடியுமா?

ஆனால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு என ஜேவிபி இனவாதிகள் நாடகம் நடத்துகின்றார்கள்

About nakkeran 266 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply