ஓணம் என்பது ஆரியர்களுக்கு எதிராக தமிழர்களும் கொண்டாடியத் திராவிடத் திருவிழா.

ஓணம் விழாவை இப்போது மலையாளிகள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஓணம் என்பது ஆரியர்களுக்கு எதிராக தமிழர்களும் கொண்டாடியத் திராவிடத் திருவிழா.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் எனும் மன்னனின் ஆட்சியில், அரசவைப் புலவராக இருந்தவர் மாங்குடி மருதனார். அவர் இயற்றிய நூல் மதுரைக்காஞ்சி. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூலாக உள்ள மதுரைக்காஞ்சி தான் மதுரையின் வரலாற்று நூலாக உள்ளது.

மதுரைக்காஞ்சியில் வைகையின் பாண்டியநாட்டில் தமிழர்கள் ஓணம் கொண்டாடியதைப் பதிவு செய்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…” – மதுரைக்காஞ்சி

மகாபலி வருகையை, வாமனன் ஜெயந்தி என்கிறான் அமித்ஷா. இவர்கள் வாக்குத்திருடர்கள் மட்டுமின்றி

பெரும் வரலாற்றுத்திருடர்கள்.

மகாபலி மன்னன் நாட்டை ஆளும் வரை மனிதர்கள் அனைவரும் சமமாய் நடத்தப்பட்டார்கள். அங்கு பொய் இல்லை, களவு இல்லை, சூது இல்லை.சந்தோசமான வாழ்க்கை.

மன்னன் மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு, குள்ளமான தோற்றம் கொண்ட வாமணன் அவதாரம் எடுத்து, மூன்றடி நிலம் கேட்கிறார். மன்னனும் தருகிறார். முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளக்கிறார் விஷ்ணு. மூன்றாம் அடி எடுத்து வைக்க இடமில்லை.ஏனெனில் குள்ள உருவம் மிகப்பெரிய உருவமாக மாறுகிறது.

மன்னன் தன்தலையில் கால்வைக்கச் சொல்லி தலையைக் காட்டுகிறார். தலையில் கால்வைத்து மிதித்து பாதாளத்திற்கு அனுப்புகிறார் விஷ்ணு. மன்னன் தன் மக்களைக்காண சிங்கம் மாதம் திருவோண நட்சத்திர நாளன்று வரவேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். விஷ்ணு கொடுத்த வரத்தின்படி திருவோண நட்சத்திர நாளன்று மக்களைக்காண வருகிறார். அதுவே ஓணம் பண்டிகை.

இப்போது நமது கேள்வி இதுதான்.

எல்லோரும் இன்புற்று வாழ்ந்த ஒரு ஆட்சியைக் கொடுத்த நல்ல மன்னன் மகாபலியை தேவை இல்லாமல் விஷ்ணு ஏன் சோதிக்கவேண்டும்?

குழந்தையாக மூன்றடி நிலம் கேட்டதை மன்னன் கொடுத்த பிறகும்,பெரிய உருவம் எடுத்து வஞ்சனை செய்தது ஏன்?

மூன்று அடி மட்டுமல்ல,300 அடி கூட அவனால் கொடுக்கமுடியும்,ஆனால் மன்னனை மிதித்து பாதாளம் அனுப்பியது ஏன்?

எல்லாமே வஞ்சகச் செயலாக உள்ளதே. அனைவரையும் சிறப்பான வாழ்க்கை வாழவைத்த மன்னனை பாதாளம் அனுப்பிவிட்டு எந்த ஆட்சி நிறுவப்பட்டது?

எல்லாமே புரிகிறது.

எல்லோருக்கும் நல்ல ஆட்சிகொடுத்த மன்னனை அசுரனாக காட்டுவது ஏன்? பார்ப்பனியம் சூத்திரர்களை அழித்து, தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதையே ஓணம்.கேரள மக்களை பாராட்டவேண்டும்.அந்த மன்னனை வரவேற்று விழா நடத்துவதற்கு.

காலம்காலமாக இந்தக் கலப்பு நடைபெற்று வந்துள்ளது.

அவர்கள் புத்தர் சிலைகளை அகற்றிவிட்டு பெருமாள் சிலைகளை வைத்தார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் கருப்பசாமிகளை வடமொழியில் கிருஷ்ணர் (கருப்பு) எனச்சொல்லி அகற்றிவிட்டு ஆரிய விஷ்ணு சிலைகளை வைத்தார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் மகாவீரரை அகற்றிவிட்டு

நரகாசூரன் மகிஷாசூரன் மகாபலி என்றெல்லாம் சொன்னார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் தமிழர்கள் வணங்கிய முருகனை அகற்றிவிட்டு ஆரிய சுப்பிரமணி என்றார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் நமது கிராமத்து பெண் தெய்வங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு

அதை பார்வதி என்று பெரு முடிச்சு போட்டார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் வேட்டுவ வள்ளியை சக்களத்தி எனச்சொல்லிவிட்டு

ஆரிய தெய்வ யானையை முதல் மனைவி ஆக்கினார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் சமணர்களை கழுவேற்றிக் கொன்றுவிட்டு

அன்பு தான் சிவம் என்றார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் இயேசுவை ஈசன் என்றார்கள்.

பார்ப்பனியம் வகுத்த சாதியை

நாமும் கிறிஸ்தவத்தில் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் பார்ப்பனியத் தீவிரவாதத்தை மறைத்து

இஸ்லாமியத் தீவிரவாதம் என்றார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் தலை, தோள், தொடை, பாதம் என பரிணாமக் கோட்பாட்டையே பகடி செய்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம்.

அவர்கள் விவேகானந்தரையும்,வள்ளலாரையும், நாராயணகுருவையும்,அய்யன் காளியையும், அய்யா வைகுண்டரையும் அபகரித்தார்கள்.

நாம் ஏற்றுக் கொண்டோம்.

இப்போது வாக்கு இயந்திரம் மூலம் ஒரு கேடுகெட்ட நடிகனை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் அரச அதிகாரம் ஒன்றின் மூலம் தான் செய்தார்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

மகாபலியே வா.

பார்ப்பனியப் பாதாளத்திலிருந்து பொங்கி எழும் சாக்கடைகளை அகற்றவும்,

மீண்டும் நல்லாட்சி உருவாக்கவும் எங்களுக்கு மகாவலிமையைத் தா.

அனைவருக்கும் மகாபலி வருகையான ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.

About nakkeran 265 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply