ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் பெரியார் மண்ணில் விளைந்த ஒரு நச்சுமரம்.

13/5/26

நண்பர்களே,

விஜய்-மோடி சதி பற்றிய முழு உண்மையை அறிய இந்தப் பதிவை இறுதிவரை கவனமாக வாசியுங்கள்.

“ஓரடி முன்னால், ஈரடி பின்னால்”—என்ற தலைப்பில் முன்பு ஒரு நூல் வெளியிட்டார் தலைவர் லெனின்.

இதன் பொருள் — “ஒரு மடங்கு முன்னேறிவிட்டு இரு மடங்கு பின்னோக்கிச் சென்றால் விளைவு இழப்பு மட்டுமே.”

ஆனால் இன்று விஜய் தனது சோதிடர் நியமனத்தில் செய்திருப்பது அத்தகைய இழப்பை அவருக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இது “ஈரடி முன்னால், ஓரடி பின்னால்,” என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

தனது முழு நம்பிக்கைக்கும் உரியவராகத் தொடர்ந்து இருந்துவரும் சோதிட ஆசானை முதலில் அரசியல் ஆசான் என்று சட்டபூர்வமான நிலைக்கு உயர்த்தினார் விஜய். அதற்குப் பரவலாக எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே அவரது இயக்குனர்கள் இவ்வாறு காய் நகர்த்தியுள்ளனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே உடனிருக்கும் விசிக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது அவரை அரசுப் பதவியிலிருந்து விலக வைத்துள்ளனர்.இதனால் திருமா போன்றவர்கள் திருப்திப் படுத்தப் பட்டுள்ளார்கள்.

ஆனால் இந்தப் பின்வாங்குதல் என்ற உபாய உத்தி (tactic) காரணமாக அந்தச் சோதிடருக்கும் விஜய்க்கும் இடையிலான நீண்ட காலக் கருத்தியல்/அரசியல் பந்தத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. “மதச் சார்பின்மை” என்ற முத்திரை குத்திக் கொண்டு விஜய் இனி தொடர்ந்து நடிக்கலாம்.

இனி, இந்தச் சோதிடர் ராதன் பண்டிட் பற்றிப் பரவலாகப் பலரும் அறியாத உண்மைகளை இப்பதிவில் தர முனைகிறேன்.

இந்தியாவில் உள்ள ஏராளமான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் இத்தகைய சோதிடர்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருந்து வருகிறது.

தமிழகத்திலும் அவ்வாறே.

ஆனால், ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக விஜய் தான் ராதன் பண்டிட் போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த சோதிடருக்கு அளவு கடந்த முக்கியத்துவம் தந்து வருகிறார். இவ்வாறு ராதன் பண்டிட்டை விஜய் தேர்வு செய்து தலை மேல் வைத்துள்ளதைக் குறித்து ஆர்.எஸ்.எஸ்/பாஜக தலைவர்கள் மிகவும் மன நிறைவு கொண்டுள்ளனர்.

ஏனென்றால் இந்த ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் பெரியார் மண்ணில் விளைந்த ஒரு நச்சுமரம்.

இந்த நச்சுமரத்தின் விதைகள் பரவினால் பெரியார் மண் எனப்படும் திராவிடத் தமிழ்மண்ணில் நஞ்சு பரவிவிடும்.

இந்த ராதன் பண்டிட்டின் சோதிட வேர்கள் வெளிப்படையாகவே பார்ப்பனிய வேதத்தில் உள்ளவை.

இதற்கு ஆதாரம் என்ன?

Ndtv 13 May 26 (இன்று) தரும் தகவல்—

Vettrivel was born in Erode, Tamil Nadu, and works as an astrologer. He has over four decades of experience in Vedic astrology, meditation-based guidance and numerology.

அதாவது— “ஈரோட்டில் பிறந்த இந்த வெற்றிவேல் நாற்பதாண்டுகளுக்கு மேலாக சோதிடராக இருந்து வருகிறார். அவரது துறைகள்—-*****வேத சோதிடம்*** தியானம் மற்றும் எண்-சோதிடம் ஆகியவை.”

He …claims that he developed a relationship with senior leader LK Advani, whom he describes as a mentor-like figure,

ராதன் பண்டிட் கூறுகிறார்— *****“பாஜகவின் முதுபெரும் தலைவர் அத்வானியுடன் எனக்கு நெருக்கம் இருந்தது. நான் அவரை ஓர் ஆசானாகவே கருதுகிறேன்.”*****

++++++++++

இதையொட்டி இன்னொரு மிக முக்கிய தகவலையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நீண்டகாலமாக மோடியின் கவனம் தமிழ்நாட்டின் இந்து கோயில்கள் மீதும், சைவ ஆதீனங்கள் மீதும் இருந்து வருகிறது.

ஏஐ தகவல்—

Prime Minister Narendra Modi has actively courted the Adheenams (heads of Tamil Shaivite monasteries) of Tamil Nadu as part of a strategic outreach to connect with Tamil culture and bolster the BJP’s influence in the state.”

ஆதீனங்களை வசியம் செய்வதில் ஓயாமல் ஈடுபட்டு வருகிறார் மோடி. அடுத்து கோயில்கள் பற்றி—

“The BJP in Tamil Nadu strongly advocates for “freeing” Hindu temples from state government control, specifically aiming to abolish or restrict the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department. They accuse the ruling DMK of mismanagement, corruption, and interference in religious traditions, demanding autonomy for temples to be managed by devotees and community leaders.”

அதாவது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் கோயில்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக திராவிட இயக்கத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில்களின் நிர்வாகம் முறைப்படி நடக்கவில்லை என்றும் ஊழல் நிறைந்ததாக உள்ளது என்றும் இந்து சமய மரபுகளில் குறுக்கீடு செய்வதாக உள்ளது என்றும் பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் விஜய் கட்சியின் ராஜகுருவாக உள்ள வேத சோதிடர் ராதன் பண்டிட் இந்த விவகாரத்தில் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன தெரியுமா?

Wionews 12,May, 26 (நேற்று) தந்துள்ள தகவல்—

“He (Radhan Pandit) has also expressed a vision for the state’s religious heritage, stating that Tamil Nadu temples would be elevated to world-class standards under Vijay’s leadership.

அதாவது—

“தமிழ்நாட்டின் (இந்து) சமயப் பாரம்பரியம் குறித்து தனக்குள்ள வருங்கால லட்சியத்தை அவர் வெளியிட்டார்.

அதன்படி—

*****விஜய்யின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் கோயில்கள் யாவும் உலகத் தரம் கொண்டவையாக உயர்த்தப் படும்— என்றார் அவர்.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக அவர் தேர்தல் பரப்புரையின் போது விஜய்க்கு அளித்த அறிவுரை என்ன தெரியுமா?

Radhan Pandit, the astrologer and advisor to Tamil Nadu Chief Minister C. Joseph Vijay, advised the leader to visit major temples for spiritual strength during his political journey. Specifically, Pandit suggested that Vijay visit key temples like Palani or Tiruchendur to bolster his political fortunes.

அதாவது— விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களுக்குச் சென்று வழிபடுமாறு ராதன் பண்டிட் கூறினார்.

குறிப்பாக பழனி அல்லது திருச்செந்தூர் கோயில்களை அவர் பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை (பிற ஆலோசகர்கள் மூலம்) மேலும் மேம்படுத்தி விஜய் தேர்தல் முடிந்தபின் திருச்செந்தூருக்குச் சென்று வழிபட்டார்.

நண்பர்களே,

மேற்படி உண்மைகளை கவனமாகப் பரிசீலியுங்கள்.

அவற்றின் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்./பாஜகவுக்கு ஆதரவாக விஜய் கள்ள மவுனம் சாதித்துள்ளார்.

இறுதியாக,

விஜய்-யின் வேத சோதிட ஆசான் ராதன் பண்டிட்டின்

அதே நிலைப்பாடுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடும் என்பதற்கான ஆதாரம் வருமாறு—

ஏ.ஐ. தகவல் (தி ஹிந்து மேற்கோள்)—

The Rashtriya Swayamsevak Sangh (RSS) strongly supports the teaching, study, and promotion of Vedic astrology (Jyotisha) as an essential component of India’s cultural heritage and Sanatan Dharma.

“வேத சோதிடத்தைக் கற்பிப்பது, கற்பது, மற்றும் பரப்புவது என்பதை ஆர்.எஸ்.எஸ். உறுதியாக ஆதரிக்கிறது.

இந்தியாவின் ****சனாதன தர்மத்தின் சாரமான ஓர் அங்கமாக வேத சோதிடம் உள்ளதாக**** அந்த அமைப்பு கருதுகிறது.”

இத்துடன் கூட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் இந்த வேதசோதிடக் கல்வி பயிற்றுவிக்கப் பட்டு வருவதாக ஏஐ தகவல் கூறுகிறது–

Several Indian universities and specialized institutions offer formal education in Vedic Astrology (Jyotisha), including BA, MA, and PhD programs, often integrated with Sanskrit and Veda studies.

இளங்கலைப் பட்டப் படிப்பு முதலே இந்த வேதசோதிடம் என்பது வேத பாடம் மற்றும் சம்ஸ்கிருத மொழிக் கல்வி ஆகியவற்றோடு இணைத்துக் கற்பிக்க பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் இன்று இந்தியாவில் பெருகி வருகின்றன.

இவையெல்லாம் போதாது என்று 13 May 2023ல் வெளியான இந்து ஏட்டின் செய்தித் தலைப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது—

UGC asks higher education institutions to introduce ‘Vedic’ Maths, Astrology as part of degree courses

அதாவது ஒன்றிய அரசின் யூஜிசி (பல்கலைக்கழக மானியக் கமிஷன்) ஓர் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்ள பட்டப் படிப்புகளில் வேத கணிதம், வேத சோதிடம் முதலியவை இடம் பெற வேண்டும்.’

===========

நண்பர்களே,

மேற்படி உண்மைகளின் வெளிச்சத்தில் கவனித்தால் மட்டுமே விஜய் மேற்கொண்டு வந்துள்ள நகர்வுகளின் உட்பொருள் நமக்கு விளங்கும்.

இந்தத் தமிழ்நாட்டு மோடி ஒருபோதும் மாறப் போவதில்லை.

அதை அவரது பதவியேற்பின் போதே சம்ஸ்கிருத வந்தே மாதரம் பாடலுக்கு முதல் மரியாதை கொடுத்ததன் மூலம் பாஜக அரசு உறுதிப் படுத்திக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ராதன் பண்டிட் நீக்கம் என்பது வெறும் மோசடி நகர்வு மட்டுமே.

இவர் பதவியேற்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்திருந்தாலாவது திராவிடத் தமிழ்நாட்டின் மாபெரும் எதிரி யார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போது விஜய் என்ற உட்பகை மூலம் தமிழ்நாட்டில் மெல்லப் பரவும் நஞ்சு (slow poisoning) ஊட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேராசான் நமக்களிக்கும் எச்சரிக்கை

வருமாறு—-

“வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.”

உணர்வீர்! பகிர்வீர்!!

அன்புடன், மருதமுத்து

About nakkeran 216 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply