
தமிழின அழிப்பின் தமிழகக் கண்ணியாகச் செயற்பட்ட கருணாநிதியின் நினைவு நாள் இன்று. பெரும்பாலும் இந்த நாளில் தமிழக உறவுகள் – குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் கருணாநிதியை அடித்துத் துவைத்துக் காயப் போடுவார்கள். ஆனால் இன்று இணையத்தில் ஒரு பெருத்த மவுனம் நிலவுகிறது.
எனவே வரலாற்றை நினைவூட்ட இந்த மீள் பதிவு.
கருணாநிதி துரோகியா?
கருணாநிதி மீதான இந்த வரலாற்று குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் அவர் நினைத்திருந்தாலும் – பதவியை துறந்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது என்ற குதர்க்கத்திற்கான பதில் விளக்கம் இது.
‘புலிகளை அழிக்கிறோம்’ என்ற போர்வையில் தமிழர்களை அழிக்கிற நிகழ்ச்சி நிரல் இலங்கை, இந்திய மற்றும் மேற்குலகத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எனவே கருணாநிதியால் அதை மாற்றியிருக்க முடியும் என்பது ஏற்புடைய ஒன்றில்லைத்தான். ஆனால் நடந்த விளைவுகளை திசைமாற்றியிருக்க முடியும்.
ஒரு தமிழர் தலைவராக – தமிழக முதலமைச்சராக – மத்திய அரசில் அங்கம் வகித்தவராக ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் அவரிடம் ஒரு தோழமை உணர்வை எதிர்பார்த்தார்கள்.
மாறாக அவர் நிறைய தகிடுதத்தங்களை செய்தார். மக்கள், மாணவர் எழுச்சியை அடக்கியதுடன் போலி உண்ணாவிரத நாடகங்களை நடத்தி போர் நிறுத்தப்பட்டதாக போலிப்பரப்புரை செய்து இனஅழிப்புக்கு துணைநின்றார்.
கருணாநிதியின் உண்ணாவிரத நாடக இடைவெளியான நான்கு மணிநேரத்தில் குழந்தைகளும் பெண்களுமாக சேர்த்து பல தமிழர்கள் கனரக ஆயுதங்களின் துணையுடன் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
கருணாநிதி பதவி விலகினாலும் போர் நிற்காது என்று எங்களுக்குத் தெரியும்.
ஆனால் மத்திய அரசிலிருந்து இவர் வெளியேறும் நிகழ்வு எமக்குத் தோழமைரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழீழத்தின் திறவுகோல்
தமிழகம் என்ற அடிப்படையில் பிராந்திய பூகோள அரசுகளின் பகைடையாட்டத்திற்கு – தமிழின அழிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட “செக்” ஆக அது இருந்திருக்கும். அது நிச்சயம் எமக்கு சாதகமான அரசியல் விளைவுகளை தந்திருக்கும்.
ஆனால் கருணாநிதி தனதும் தனது குடும்பத்தினதும் நலன் கருதி காய் நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார். விளைவாக எந்தவித தடயமுமின்றி
1,466,79 தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். கருணாநிதி நேர்மையாகவும் அறவுணர்வுடனும் செயற்பட்டிருந்தால்
இந்த இழப்பில் பாதியையாவது குறைத்திருக்கலாம் என்பதே எம்முடைய ஆதங்கமாக இருக்கிறது.
அவரைத் தமிழின துரோகி என்று உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்கள் தூற்றுவதன் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.
(படம் நன்றி : பழ நெடுமாறன்)

Leave a Reply
You must be logged in to post a comment.